http://oi65.tinypic.com/2yv6grd.jpg
Printable View
99 th Movie " முரடன் முத்து "
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...02&oe=597397D0
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ad&oe=59728730
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b0&oe=593204BF
(from f b)
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 165– சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...amagan%201.jpg
சரவணன் சிரித்தபடியே உட்கார்ந்திருந்தார். சுப்பையாவுக்கே பொறுக்க முடியாமல் 'நான் உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு கோபம் வரலியே?’ என்றார்.
`வரலே! ஏன்னா எனக்குத் தெரியும். நீங்க உங்க மகனைத் திட்டிக்கொண்டிருக்கிறீர்கள். என்னை நேருக்கு நேர் பார்த்து திட்ட உங்களுக்கு துணிவு இல்லை என்பது எனக்குத் தெரியாதா?’ என்றார் சரவணன்.
`கரெக்டா பிடிச்சுட்டிங்களே' என்றபடி சுப்பையா சிரித்தார். சரவணன் மேல் இருந்த அன்பினால், தன் மகனுக்கு சரவணன் என்று பெயர் வைத்திருந்தார் சுப்பையா. அவரை வீட்டுக்கு வரவழைத்து, திட்டுவது போல் ஒரு பிராக்டிகல் ஜோக் விளையாடினார் சுப்பையா.
`உயர்ந்த மனிதன்’ வெற்றி விழாவில் அறிஞர் அண்ணா கலந்து கொண்டு சிவாஜி கணேசனை வாழ்த்திப் பேசினார். திருப்பதி சென்றதைத் தொடர்ந்து திராவிட இயக்கத் தொடர்புகளில் இருந்து சிவாஜி கணேசன் விடுபட்டு வெளியே வந்தபோதிலும், பெரியாரிடமும், அண்ணாவிடமும் தொடர்ந்து மதிப்பும், மரியாதையும், நட்புறவும் வைத்திருந்தார் சிவாஜி. இதைப் பற்றி சிவாஜியே சொல்லியிருக்கிறார்.
`நான் ஒரு லட்சியத்துக்காக அண்ணாவை விட்டு வெளியே வந்தேனே தவிர, அண்ணா எப்போதும் என் அண்ணாதான். நான் இருந்த இடத்தை விட்டு வெளியே வந்தனே தவிர, அண்ணாவை விட்டுப் பிரியவில்லை. அண்ணா கட்சியை அரசியலால் நடத்தவில்லை. அன்பால் நடத்தினார். அதை ஒரு மாபெரும் கட்சியாக வளர்த்தார்.
1967 தேர்தலில் அண்ணா வெற்றி பெற்று முதல்வர் ஆனார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சில காலத்திற்குப்பின் அண்ணாவுக்கு உடல் நலம் குன்றி லண்டனுக்கு பரிசோதனைக்குப் போனார். அப்போது என் மகள் சாந்திக்கு திருமணம். என் நண்பர் வேலுச்சாமி என்ற டாக்டருக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்து, லண்டனுக்கு அனுப்பி, அண்ணாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் செய்தேன்.
`திருமணம் நன்றாக நடக்கட்டும். இன்னும் பத்து நாட்களில் நான் சென்னை திரும்பி வந்துவிடுவேன்’ என்று அண்ணா செய்தி அனுப்பினார்.என் மகள் சாந்தியின் திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. அதற்கு அடுத்த வாரம் அண்ணா சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் வைத்தே `மகளையும், மருமகனையும் வீட்டுக்கு அழைத்து வருமாறு கணேசனிடம் சொல்லுங்கள்’ என்றார்.
நான் என்னுடைய மகளையும், மருமகனையும் அழைத்துக் கொண்டு அண்ணா வீட்டுக்குச் சென்றேன். அண்ணாவை வணங்கியவுடன் அவர் ஒரு வேட்டியையும், புடவையையும் அன்பளிப்பாக வழங்கினார். ஏவி.எம்மின் `உயர்ந்த மனிதன்’ என்னுடைய 125 படமாக வெளியாகியிருந்தது. அதையொட்டி ஏவி.மெய்யப்பனும், என்னுடைய நண்பர் கோபாலும் ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு விழா நடத்தினார்கள்.
வடநாட்டில் இருந்து பெரிய தலைவர்களெல்லாம் வந்திருந்தார்கள். ஒய்.பி. சவான் வந்திருந்தார். இந்த விழாவில் அண்ணா கலந்து கொண்டு என்னை வாழ்த்தி பேச வேண்டும். என்னை விரும்பாத சிலர் அண்ணாவிடம் சென்று `விழாவுக்கு போகாதீர்கள். சிவாஜியை வாழ்த்திப் பேசாதீர்கள்’ என்று சொன்னார்கள்.
`ஆயிரம்தான் இருந்தாலும் சிவாஜி, சிவாஜிதான். அவன் எனக்கு எப்போதுமே வேண்டியவன்தான். அவனைப் போல் அன்புள்ளவன் எவனும் கிடையாது’ என்று சொல்லிவிட்டு அண்ணா விழாவுக்கு வந்தார். உடம்பு முடியாமல் இருந்த நேரத்திலும் அண்ணா அந்த கூட்டத்தில் முக்கால் மணி நேரம் பேசினார். `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்றார்.
மேலும், `இந்த மலர் மலர்ந்த பிறகுதான் நீங்கள் பார்க்கிறீர்கள். இது மொட்டு விடும்போதே, இது நன்றாக அரும்பி வாசனை கொடுக்கும் என்று எனக்குத் தெரியும்' என்றும் கூறினார். அதன்பின் `கணேசா! என் அருமைத் தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க’ என்று மனம் திறந்து வாழ்த்தினார்.
`பெருமாள் முதலியார் கூட்டி வந்ததனால், கணேசன் திரை உலகுக்கு சீக்கிரம் வந்துவிட்டான். இல்லையென்றாலும், இரண்டு ஆண்டுகள் கழித்து சிவாஜி கணேசன் சினிமாவுக்கு வந்திருப்பான். அவனுடைய வரவை யாராலும் தடுத்திருக்க முடியாது’ என்றும் கூறினார் அண்ணா.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் அண்ணா, தி.நகரில் என்.எஸ்.கே. சிலையை திறந்து வைத்தார்கள். அதன்பின் சில நாட்கள் கழித்து அண்ணா மறைந்துவிட்டார்கள். நான் `சிவாஜி’ ஆவதற்கு வழிவகுத்துத்தந்த அந்த மாமேதையின் மறைவு என்னை எப்படி பாதித்தது என்பதை வேறு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் நாடகங்களிலும், படங்களிலும் தமிழைப் பேசும்போதெல்லாம் அந்த தமிழ்ச் செல்வரின் நினைவு வரும். அவர் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்’ என்றார் சிவாஜி. சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் தனது 72வது வயதில் காலமானார். சிவாஜியின் வெற்றிப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த காலகட்டமது!
1969ல் 'அன்பளிப்பு', 'தங்கச் சுரங்கம்', 'காவல்தெய்வம்', 'குருதட்சணை', 'அஞ்சல் பெட்டி 520', 'நிறைகுடம்', 'தெய்வ மகன்', 'திருடன்', 'சிவந்த மண்' என்று 9 படங்கள் வெளியாகின. சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த `தெய்வ மகன்‘ படத்தை ஏ.சி. திருலோகசந்தர் இயக்கினார். அந்தப் படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். அந்த படத்திற்கு இசை, எம்.எஸ். விஸ்வநாதன். அப்பாவாகவும், இரண்டு மகன்களாகவும் சிவாஜி சிறப்பாக நடித்தார். ஆஸ்கார் பரிசுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்ட படம் இது.
`காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார்,’
`கேட்டதும் கொடுப்பவனே கீதை நாயகனே,’ `தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே’ என்று இந்த படத்தின் எல்லா பாடல்களுமே மிகப் பிரபலம். ஒரு காட்சியில் தந்தை சிவாஜி, மூத்த மகன் சிவாஜி, இளைய மகன் சிவாஜி, என்று மூன்று சிவாஜிக்கள் அந்தக் காட்சியில் இருப்பார்கள்.
இளைய மகன் சிவாஜி தந்தையிடம் பீரோவுக்கு பின்னால் ஒளிந்தபடி பணம் கேட்பார். தந்தை சிவாஜி மறுப்பார். எதிரில் இருக்கும் மூத்த மகன் சிவாஜி `பாவம் கொடுங்கள்’ என்று சைகை காட்டுவார். இன்று நினைவில் நிற்கிறது. சாந்தி தியேட்டரில் இந்த படம் வெளியானபோது இந்த காட்சிக்கு ரசிகர்களின் விசில் பறந்தது.
`தெய்வ மகன்’ சிவாஜியின் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். எத்தனை பாவங்கள், எத்தனை உணர்ச்சிகள், தந்தைக்கு ஒரு நடிப்பு! மூத்த மகனுக்கு ஒரு மானரிஸம்! இளைய மகனுக்கு ஒரு ஸ்டைல்! சிவாஜி சிவாஜிதான்!
(தொடரும்)
சிவாஜியின் சிறப்பு.
சிவாஜியின் சிறப்பே, இந்தியாவிலேயே சிறந்த தலைவர்கள்,கலைஞர்கள்,மத தலைவர்கள் ,இலக்கியவாதிகள் அத்தனை பெரும் அவர் ரசிகர்கள் . நண்பர்கள்.
இதற்கு உதாரணம் சொல்ல, இன்னும் 50 திரிகள் முழுக்க வேண்டும்.
இன்றைக்கு அரசியலில் தலைமையில் இருக்கும் ராமதாஸ்,வை.கோ.,கலைஞர்,அனைவருமே அவரின் தீவிர ரசிகர்கள்.
அன்றைக்கு நேரு,காமராஜ்,அண்ணா,என்று ரசிகர் பட்டாளம். சிவாஜி எதிர் முகாமில் இருந்த போதும் அவர் படங்களை முதல் ஷோ பார்த்து மலைத்தவர் அண்ணா.
கலைஞர்களில் லதா மங்கேஷ்கர்,பிரித்விராஜ் கபூர்,ராஜ்கபூர்,தேவ் ஆனந்த்,திலிப் குமார்,சுனில்தத்,சஞ்சீவ்குமார்,முதலியோர் மிக மிக தீவிர சிவாஜி ரசிகர்கள் ,நண்பர்கள்.
அது மட்டுமல்ல ,சிவாஜிக்கு அடுத்த நிலையில் 60 வரை திகழ்ந்த ஜெமினி, 60க்கு பிறகு அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஒரு நடிகர் இவர்களிடம் காட்டிய பெருந்தன்மை , உண்மையான பாசம் இவற்றை சொல்லி மாளாது இத்தனைக்கும் ,மேற்குறிப்பிட்ட இருவருமே நம்பகத்தன்மையோ,விசுவாசமோ இல்லாதவர்கள். ஆனாலும் சிவாஜி குழந்தையும்,தெய்வமும் குடியிருந்த மனம் கொண்ட உலக கலைஞன்.இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் துரோகம் செய்தவரை மன்னித்து ,அவருக்கே உதவியும் செய்தார் .
இதை போல உலகமே ரசித்து கொண்டாடிய மேதையை ,இப்பூவுலகம் கண்டதில்லை,காண போவதும் இல்லை.
https://uploads.tapatalk-cdn.com/201...088189bf96.jpg
https://uploads.tapatalk-cdn.com/201...dc8cca1a78.jpg
விவசாயிகள் பிரச்சினை...
அன்றும் இன்றும்..
இன்றுவரை உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படவில்லைதான்.அன்றைய காலத்திலேயே விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் போராடவும் இறங்கிய கூட்டம் சிவாஜி ரசிகர் கூட்டமே.
இன்றும் பிரச்சினைகள். உங்கள் போராட்டமும் தொடர்கிறது.
ஆனால் உங்களுக்கு குரல் கொடுக்க எந்த நடிகனின் ரசிகர் கூட்டமாவது வருகிறதா?
நடிகர்திலகத்தை இத் தமிழ்நாடு மதித்திருந்தால் இப் பிரச்சினைகள் இன்றுவரை தொடர்ந்திருக்குமா?
கூட்டத்தோடு கூட்டமாய் கூப்பாடு போடும் நடிகர்களின் கவர்ச்சிகளிலேதானே இத் தமிழ்நாடு மயங்கிக் கிடக்கிறது.உண்மை நாட்டுப்பற்றை போதிக்கும் நடிகர் எவராவது உண்டோ இத் தமிழ்நாட்டினில்?
https://uploads.tapatalk-cdn.com/201...612aae3331.jpg
இவர் பழனி.
கோவை சுந்தரா புரத்தை சேர்ந்தவர்.
வயது 70க்கு மேல்.
இவர் நடிகர்திலகத்தின் மேல் அளவற்ற பற்று கொண்டிருப்பவர்..
நடிகர்திலகத்தின் படங்கள் இப்போது எங்கே திரையிட்டாலும்
(மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி etc.,) அங்கு சென்று பார்த்து விடுவார் .சமீபத்தில்
சென்ற வாரம் சென்னை சென்று வசந்தமாளிகை பார்த்துவிட்டு வந்தார்.அந்த காலங்களில் பெரும்பான்மையான ரசிகர்கள் இவ்வாறு இருந்துள்ளனர்.ஆனால் இந்தகாலகட்டத்தில் 70 வயதுக்கு மேல் ஆன பெரியவர் ஒருவர் இவ்வளவு தூரம் சென்று நடிகர்திலகத்தின் படங்களை பார்த்து வருகிறார் என்றால் அதை என்னவென்று சொல்ல?
நடிகர்திலகத்தின் நடிப்பாளுமை எந்தளவு ஒருவரை ஈர்த்துள்ளது என்பதற்கான அத்தாட்சிகளில் இதுவும் ஒன்றாக கொள்ளலாம்.
-ராஜபார்ட் ரங்கதுரையை நாகர்கோவில் சென்று பார்ப்பதாக உத்தேசமாம்.
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 166– சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...nga%20mama.jpg
`தெய்வ மகன்’ படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் நினைவுக் கூர்ந்தார். `நடிகர் திலகம் `தெய்வ மகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். மூன்று வேடங்கள் என்பதால் ஒப்பனையை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு ராப்பகலாக நடித்தார். அப்போது சென்னை ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த சில பெரிய மனிதர்கள் சிவாஜியை காண வந்தார்கள். ஏழைப்புற்று நோயாளிகளுக்கு உதவுவதற்கு நன்கொடை திரட்டும் முயற்சியில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த முடிவு செய்திருந்தனர். அதில் ஓர் அங்கமாக 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சிவாஜி கணேசன் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர்.
'கட்டபொம்மன்' நாடகம் நடந்து பல வருடங்கள் ஆயிற்று. படமாக வந்தும் சில வருடங்கள் ஆயிற்று. இப்போது திடீரென்று அதில் நடிக்க வேண்டுமென்றால்……! ஆனால், சிவாஜி அந்த சவாலை ஏற்றுக்கொண்டார். `தெய்வ மகன்’ படப்பிடிப்பு நடக்கும்போதே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் கட்டபொம்மன் வசனத்தை மறுபடியும் படித்து ஒத்திகை பார்த்துக்கொண்டார். கலை நிகழ்ச்சி நடக்கும் நாளும் வந்தது. சங்கிலியால் பிணைக்கப்பட்ட சிவாஜியை ஆறு வீரர்கள் இழுத்து வந்தார்கள். பானர்மேனுடனான வாக்குவாதம் ஆரம்பமானது. இடியும் மின்னலுமாக வசனமழை பொழிந்தார். வீரம், அந்த சபையில் மீண்டும் உயிர்த்தது. சிவாஜியின் ஒவ்வொரு பாகமும் துடித்தெழுந்து ஆர்ப்பரித்தது. சிம்மத்தின் கர்ஜனை முடிந்த சில விநாடிகள் அரங்கத்தில் அமைதி நிலவியது. அதன்பிறகு சுயநினைவு வந்த மக்கள் கரகோஷம் செய்தனர்.
இந்த அற்புதம் நடந்தபோது நானும் அங்கிருந்தேன். ஒப்பனை அறைக்கு வந்த சிவாஜி வாயே திறக்கவில்லை. அவசர அவசரமாக உடை அலங்காரத்தை கலைத்தவர் வெண் கதருக்குள் புகுந்தார். பெரிய மனிதர்கள் ஒப்பனை அறைக்கு வந்து பாராட்டினார்கள். மேடைக்கு வரும்படி அழைத்தனர். சிவாஜி யாரிடமும் எதுவும் பேசாமல், வெறுமனே இரு கைகூப்பி வணங்கிவிட்டு, துண்டால் வாயைப் பொத்தியபடி விடுவிடுவென்று என்னை அழைத்துக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தார். எனக்கு அவர் நடந்து கொண்ட விதம் லேசான உறுத்தலை ஏற்படுத்தியது. `பாராட்ட வந்தவர்களிடம் இரண்டு வார்த்தை பேசியிருந்தால் என்ன?’ என்று கேட்டேன். அதுவரை தும்பைப்பூ போன்ற வெள்ளைக் கதர் துண்டால் வாயைப் போர்த்தி கொண்டு இருந்தவர் துண்டை வாயிலிருந்து எடுத்து எனக்குப் பிரித்துக் காட்டினார். உதடு வழியே ரத்த வழிந்து கொண்டிருந்தது. நான் அதிர்ந்து போனேன். அவர் நிதானமாகச் சொன்னார்– `யாராவது என்னை இந்த நிலையில் பார்த்தால் காசநோய்க்காரன் என்று சொல்லி ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு போயிருப்பார்கள். அதனால்தான் அவசர அவசரமாக புறப்பட்டு விட்டேன். 'கட்டபொம்மன்' நாடகத்தை முழு நாடகமாக நடிக்கும்போது மக்கள் உணர்ச்சிப்படிகளில் படிப்படியாக ஏறி உச்சத்துக்கு வருவார்கள். பானர்மேனோடு நடக்கும் உச்சபட்ச காட்சியை நல்ல முறையில் உள்வாங்கும் நிலைக்குத் தயாராகியிருப்பார்கள். ஆனால், இன்று நடந்தது கிளைமாக்ஸ் காட்சி மட்டும்தான். எந்தவித உந்துதலும் அஸ்திவாரமும் இல்லாத நிலை. அந்த ஒரு காட்சியில் முழு நாடகத்தையும் அவர்கள்முன் கொண்டு வந்த நிறுத்த வேண்டும், உணர வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என் லிமிட்டை தாண்டிவிட்டேன். இதற்கு முன் சில சமயங்களிலும் இப்படி ஆகியிருக்கிறது. அதனால்தான் நடித்து முடித்ததும் யாரும் பார்க்கும் முன் அறைக்கு ஓடிவந்துவிட்டேன்.’ எவ்வளவு சிரத்தை பாருங்கள். நன்கொடைக்காக நடத்தப்பட்டும் கலை இரவு நிகழ்ச்சிதானே என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. எந்த மேடையாக இருந்தாலும் நடிப்பு என்றால் நூறு சதவீத ஈடுபாட்டுடன் நடிப்பார். அதனால்தானே அவரை நடிகர் திலகம் என்று அழைக்கிறோம்' என்றார் திருலோகசந்தர்.
(தொடரும்).
All
Nice to see U all again.
Mr.Essvee guided me how to login and access long time back. But due to network and and also some computer configuration problem all these days unable to login. Thanks to Essvee Sir.
கோவை ராயல் தியேட்டரில் 10.03.2017 முதல் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த உத்தமன் தினசரி 4 காட்சிகளாக..... கோவையில் உள்ள நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களே, பழைய படங்களில் நடிகர்திலகத்தின் படங்கள் தான் வசூலில் முதலிடம் வகிக்கும் என்பதை நிரூபிப்போம்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b8&oe=592EC1BA
(from f book_
abkhlabhi,
Better stay at one place without contamination.
ஞான ஒளி-1972(11th March 2017 -45 Years Completion)
நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.
ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.
ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.
Typical Behaviours of an orphan-
1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.
மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .
அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.
தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.
poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.
obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?
துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?
இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.
இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.
நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.
நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.
அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.
நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.
பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.
இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....
மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.
இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.
1954 ஆம் ஆண்டில் வெளியான மொத்த தமிழ் படங்களின் எண்ணிக்கை 32
அந்த 32 படங்களில் நடிகர்திலகத்தின் படங்கள் 8,
அதில் மனோகரா,இல்லற ஜோதி,அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது ஆகிய 6 படங்கள் வெற்றிப் படங்கள், மீதம் இரண்டு படங்கள் என கூண்டுக்கிளி, துலி விஷம் ஆகும் இவற்றோடு மனோகரா தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இதே ஆண்டில் வெளியானது,
அந்த ஆண்டின் மொத்த வெற்றி படங்களின் எண்ணிக்கை 9
எம்ஜிஆர் நடிப்பில் மலைக்கள்ளன்...
எம்.ஆர்.ராதா நடிப்பில் ரத்தக் கண்ணீர்
இன்னொரு வெற்றிப் படம் வைர மாலை ஆகும்,
இப்போதெல்லாம் வருடத்திற்கு 250 படங்களுக்கு மேல் திரைக்கு வருகிறது அந்த 250 ல் ஒரு படத்தில் நடித்திருந்தால் போதும் இப்போதைய முக்கிய ஹீரோக்களுக்கு,
காரணம் ஒரு படத்தை வெற்றி பெற செய்வதே பெரிய சவால் நிறைந்த வேலை ஆகிவிடுகிறது,
அதனால் தான் நடிகர்திலகத்தை யாரோடும் ஒப்பிடாதீர்கள் என்று நமது நட்பு வட்டாரத்தில் பதிவுகள் வருவதற்கான காரணம்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...2c&oe=592C503B
(from f b)
http://oi63.tinypic.com/33lyw4k.jpghttp://oi68.tinypic.com/1z4zamr.jpg
சேலம் ஒரியண்டல் தியேட்டர்
நீண்ட இடை வெளிக்குப் பின்
ஒரு படக் காட்சிகள்..
https://uploads.tapatalk-cdn.com/201...7140fae1ce.jpg