super stills. Thanks Jai sir
Printable View
Makkalthilagam- Emperor of Cine World presents "Rahasiya Police 115" Digital version now screening @ Thanjai--- Thiruvalluvar DTS Daily 4 Shows...
மக்கள் திலகத்தின் ''ஒளிவிளக்கு '' 10.12.2016 முதல் 16.12..2016
கடந்த வாரம் சென்னை கிருஷ்ணவேணி திரை அரங்கில் 6 நாட்கள் ஓடியது .
மொத்த வசூல் ரூ 93,000. விநியோகஸ்தரின் பங்கு ரூ 40, 000.
இன்று முதல் அகஸ்தியா அரங்கில் தினசரி 2 காட்சிகள் . மதியம் காட்சிக்கு 450 பேர்கள் கண்டு களித்தார் கள் .
மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடர்கிறது .
நன்றி . இனிய நண்பர் திரு லோகநாதன் - சென்னை அனுப்பிய தகவல் .
தமிழக முன்னாள் அமைச்சர், காளிமுத்து எழுதிய, 'வாழும் தெய்வம்' என்ற நூலிலிருந்து:
ஒருமுறை, எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும் போது, வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள், ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார்
எம்.ஜி.ஆர்.,
'எல்லாரும் நல்லா இருக்கீங்களா...' என்று, எம்.ஜி.ஆர்., விசாரித்த போது, அவர்கள், 'மகராசா நீங்க நல்லா இருந்தாலே போதும்; நாங்க நல்லா இருப்போம்...' என்று சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டனர். அவர்களின் கைகளை பற்றி நெகிழ்ந்து போனார், எம்.ஜி.ஆர்.,
அவர்களிடம் விடைபெற்று காரில் பயணித்த போது, நெகிழ்ந்த குரலில், 'நான் நல்லா இருந்தாலே, தாங்களும் நல்லா இருப்போம்ன்னு சொல்ற இந்த மக்களுக்கு, நான் என்ன கைமாறு செய்யப் போறேன்...' என்றார்.
மக்கள், தன் மீது காட்டிய பாசத்தை போலவே, அவரும் மக்கள் மீது காட்டிய அன்பையும், அக்கறையையும் அன்று நேரில் பார்த்தேன்.
அவரது ஆட்சியின் போது, ஒருமுறை, ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை; குடியிருப்பு பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும், உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர்., அவருடன் நானும் சென்றேன்.
சேறும், சகதியுமான வீதிகளில் கண்ணீரும், கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களை பார்த்ததுமே, காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., சிறிதும் யோசிக்காமல், வேட்டியை மடித்துக் கட்டி, முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க, பதறிப் போன மக்கள், 'அய்யா... எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல; உங்கள பாத்ததே போதும்; சகதியில் நடக்காதீங்க...' என்று தடுத்தும் கேளாமல், அவர்கள் அருகில் சென்று, ஆறுதல் கூறினார்.
பின், மின்னல் வேகத்தில், நிவாரணப் பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல; தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர், எம்.ஜி.ஆர்.,
முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அமரராகும் வரையிலான, 11 ஆண்டுகளில், ஒரு சென்ட் நிலமோ, வீடோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம், திரையுலகில் தான் சம்பாதித்த சொத்துகளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என, தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்தார். அவர் போல் மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர், வேறு யாரும் இல்லை. ஏனெனில், தான் சம்பாதித்த மாபெரும் சொத்து, மக்களின் செல்வாக்கு என நினைத்தார்; அதை மதித்ததுடன், கடைசி வரை கட்டிக்காக்கவும் செய்தார்.
இதற்கு உதாரணமாக, இன்னொரு சம்பவத்தையும் கூறலாம்.
ஒருமுறை எம்.ஜி.ஆருடன் காரில் சென்றேன். அவரது காரைப் பார்த்ததும், சாலையின், இருபுறமும் திரண்ட மக்கள், 'தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர்., வாழ்க...' என்று கோஷமிட்டனர். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., என்னிடம், 'இவங்க எல்லாருமே எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு வாழ்த்தறாங்களே தவிர, ஒருத்தர் கூட, முதலமைச்சர் வாழ்கன்னு ஏன் சொல்லலன்னு தெரியுமா?' என்று கேட்டார்.
'உங்க மூன்றெழுத்து பெயர்; அவங்களுக்கு மந்திரம் மாதிரி; அதனால் தான்...' என்றேன்.
'அதுமட்டுமல்ல; முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா, அது பதவியை வாழ்த்துற மாதிரி.
எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு சொன்னா தான், என்னை வாழ்த்துற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதை நான் பத்திரமா காப்பாத்தியாகணும்...' என்றார்.
இறுதி வரை, அவர் சொன்னது போலவே நின்றார்.
to day dinamalar.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு ஜெயா குழும தொலைக்காட்சிகளில் கடந்த 14 நாட்களாக மக்கள் திலகத்தின்
ஆயிரத்தில் ஒருவன்
குமரிக்கோட்டம்
அரசகட்டளை
பட்டிக்காட்டு பொன்னையா
அன்னமிட்ட கை
ராமன் தேடிய சீதை
ஒரு தாய் மக்கள்
புதிய பூமி
தேர்த்திருவிழா
கணவன்
தனிப்பிறவி
11 படங்களை சுழற்சி முறையில் பல முறை ஒளிபரப்பினார்கள் .ஜெயா மியூசிக்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்களின் பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பினார்கள் .இன்னமும் தொடர்கிறது .
மற்ற ஊடகங்களிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த பல படங்களை ஒளி பரப்பினார்கள் .
24.12.2016 அன்று மக்கள் திலகத்தின் நினைவு நாள் முன்னிட்டு மேலும் பல ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்களையும் , சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார்கள் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் .
மறைந்த தமிழக முதல்வருக்கு அஞ்சலி செய்ய வரும் பல்லாயிரக்கணக்கான
மக்கள் அனைவரும் புரட்சித்தலைவரின் சமாதியில் அஞ்சலி செய்து வருகிறார்கள் .
என்ன பொருத்தம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல் வரிகள்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்ஆஹா..
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
நான் உனக்காகப் பிறந்தவள்
உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
உன்னை ஒருபோது தழுவி
மறுபோது உருகிதனியாகத் துடிப்பவள்
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
இனியாருக்கு இங்கே கிடைக்கும்
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
யாருக்கு யார் என் எழுதியவன் -
என்னைஅவனுக்குத்தான் என எழுதிவிட்டான்
நேருக்கு நேரே பார்க்க வைத்தான் -
நானேதான் உனக்கு விழிகாட்டி -
உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
விடிய விடிய வீசு -
உன் விழியை எடுத்து வீசு
உன் கைகளில் நான் குடியிருந்தால்
உலகம் எனக்கு தூசு
நீங்க நெனச்சா நடக்காதா
நான் நெனச்சது கெடைக்காதா
உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கருத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது
கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற
மேனியை பாரு
நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு
கூறடி கூறு
எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் -
ஒருகொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
மதுரை - ஷா -1 அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''நீரும் நெருப்பும்'' திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது .
Makkalthilagam Thread followers didn't postings, anyone matters not seen. Kindly register several news about Our Makkalthilagam...
After Makkalthilagam demise, Puratchithalaivi Amma got a huge respect by All. This level happened Our beloved Makkalthilagam's blessings too...
மக்கள் திலகத்தின் 29 வது நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களுர் - நடராஜ் திரை அரங்கில் ''ஒளிவிளக்கு '' இன்று முதல் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது .
வேலூர் - ராஜா அரங்கில் மக்கள் திலகத்தின் ரிக் ஷாக்காரன் இன்று முதல் திரையிடப்பட்டுள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நினைவு தினம் நாளை 30 வது ஆண்டு துவக்கம் . 29 வருடங்கள் ........உருண்டோடி விட்டது . மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் மற்றும் செல்வாக்கு இரண்டும் மக்கள் மனதில் பசுமையாக நிலைத்து விட்டது .
1991, 2001, 2011 ,2016 நான்கு முறை தமிழகத்தில் அதிமுக ஆட்சி யில் அமர்ந்தது என்றால் புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னமும் இயக்கமும் முக்கிய காரணம் என்பது உலகறிந்த உண்மை .
மக்கள் திலகத்தின் படங்கள் இடை வெளி இல்லாமல் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது .
மக்கள் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு நாளை சன் லைப் தொலைக்காட்சியில்
என் அண்ணன்
நம்நாடு
எங்க வீட்டு பிள்ளை
மூன்று படங்கள் ஒளி பரப்புகிறார்கள்
கோவை மாநகரில்
தற்பொழுது
மக்கள் திலகத்தின்
திரைக்காவியங்கள்
ராயல் - உரிமைக்குரல்
டிலைட் - தேடி வந்த மாப்பிள்ளை
http://s29.postimg.org/5pcmr9son/IMG_2730.jpg
Coimbatore - ondipudur
மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவு நாள் .
http://i68.tinypic.com/1he1y1.jpg
மக்கள் திலகத்தின் 29 வது நினைவு நாள் உலகமெங்கும் வாழும் அவருடைய ரசிகர்கள் , இயக்கத்தின் தொண்டர்கள் சிறப்பாக நினைவு நாளை அனுசரித்தார்கள் .
சென்னை நகரில் தமிழக அரசின் சார்பாகவும் , மக்கள் திலகத்தின் ரசிக மன்றங்களின் சார்பாக பல் வேறு அமைப்புகளும் நினைவு நாளை அனுசரித்தார்கள் .
பெங்களுர் தமிழ் சங்கத்தில் மக்கள் திலகத்தின் பல் வேறு அமைப்புகளை சார்ந்த எம்ஜிஆர் மன்றங்களின் அன்பர்கள் நினைவு நாளை அனுசரித்தார்கள் .
மக்கள் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு பெங்களுர் , சென்னை , வேலூர் , கோவை , நகரங்களில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் நடைபெற்று கொண்டு வருகிறது .
சன் லைப்
சன் மியூசிக்
ஜெயா டிவி
ஜெயா மூவிஸ்
தந்தி டிவி
பாலிமர் டிவி
பொதிகை
முரசு டிவி
தீரன் டிவி
புதிய தலைமுறை டிவி
7 நியூஸ் டிவி
7 எஸ் மியூசிக்
வேந்தர் டிவி
தமிழன் டிவி
zee தமிழ்
கேப்டன் டிவி
மேற்கண்ட ஊடகங்களில் நேற்று முழுவதும் மக்கள் திலகத்தின் படங்கள் , பாடல்கள் , பட காட்சிகள் , அரசியல் கோப்பு காட்சிகள் , எம்ஜிஆர் பற்றிய நினைவலைகள் , விவாதங்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது .
மக்கள் திலகத்தின் புகழ் மற்றும் செல்வாக்கு இரண்டும் மக்கள் மனதில் அழியாத என்றென்றும் நிரந்தரமாக நிலைத்து விட்டது .
மக்கள் திலகத்தின் 29 வது நினைவு ஆண்டை முன்னிட்டு பெங்களுர் -நடராஜ் அரங்கில் ''ஒளிவிளக்கு '' தினசரி 4 காட்சிகள் நடை பெறுகிறது .
http://i66.tinypic.com/23h6qlu.jpg
http://s27.postimg.org/myfa3l8wz/IMG_2765.jpg
Courtesy- facebook
காலத்தை வென்றவர்
டிசம்பர் 24 -- மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் 29 ம் நினைவு நாள் ..
தமிழக அரசியலில் இன்னும் எம் ஜி ஆர் --
ஒரு புதிர்
ஒரு ஆச்சர்யம்
ஒரு phenomenon
எப்படி இவ்வளவு வருடங்கள் கடந்தாலும் அவர் புகழ் குறையாமல் இருக்கிறது ?
அவர் மறைந்த பின்னர் பிறந்து எழுத்தாளர் ஆனவர்கள் கூட அவர் பற்றி புத்தகங்கள் எழுதுகிறார்கள் ..
இன்னும் அவர் படங்கள் திரை அரங்குகளிலும் , தொலைக்காட்சியிலும் சக்கை போடு போடுகின்றன
எம் ஜி ஆர் ஆதரவு வாக்குகளுக்கு எல்லா கட்சிகளும் போட்டி போடுகின்றன
அவர் காலத்தில் அவரை எதிர்த்த கட்சிகளும் இன்று அவர் புகழை சொல்லும் நிலை.. இத்தனைக்கும் அவர் இனி வந்து யாருக்கும் பதவி தரப்போவதில்லை.
திராவிடர் கழகமே அவர் மனித நேயத்தை பாராட்டி சமீபத்தில் விழா எடுத்து விட்டதே ?
அரசியல், திரை உலகில் இருந்தவர்கள் வேறு யாருக்கும் இப்படி ஒரு செல்வாக்கு ஏன் கிடைக்கவில்லை ?
காரணம் எதுவாக இருக்கும் ??
முள்ளும் மலரும் போன்ற திரை காவியங்களை படைத்தவர் இயக்குனர் திரு. மகேந்திரன் அவர்கள் . 1958 ல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் அவர் மாணவர். கல்லூரி விழாவுக்கு அன்றைய நடிகர் எம்.ஜி ஆர் சிறப்பு விருந்தினர். அவரை வைத்து கொண்டே மகேந்திரன் எம் ஜி ஆர் படங்களை பிரித்து மேய்ந்து விட்டாராம்.
ஆனால் எம் ஜி ஆர் அதற்காக கோபப்படவில்லை. சென்னை சென்றதும் தனது கைப்பட அவரை பாராட்டி திரை உலகில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.. சென்னை வந்தால் என்னை வந்து சந்தியுங்கள் என்று ஒரு கடிதம் மகேந்திரனுக்கு அனுப்பினார் எம் ஜி ஆர்.!!
பிறகு மகேந்திரன் சென்னை சென்றபோது எம் ஜி ஆர் அவர் அலுவலக மாடியிலேயே மகேந்திரனை தங்க வைத்து பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதை வசனம் எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.
எம் ஜி ஆரை பார்க்க பல திரை உலக பிரபலங்கள் வர அவர்களிடம் மகேந்திரன் அறிமுகம் ஆனார்... அவர் திறமை பலருக்கு தெரிய வந்தது...
எம் ஜி ஆரோ பல அரசியல் வேலைகளில் பிசி.
பல ஊர்களுக்கு சென்றதால் மகேந்திரனை மறந்தே போனார்.
ஒரு நாள் --
மகேந்திரனை பார்த்ததும்தான் அவருக்கு நினைவு வந்தது.
கதை வசனம் எழுதியவரை மகேந்திரன் அவரிடம் கொடுக்க --
எம் ஜி ஆர் அவரிடம் " நீங்க வேளா வேளைக்கு சாப்பிடுறீங்களா ? ஊருக்கு பணம் அனுப்புறீங்களா ?" என்றெல்லாம் கேட்டிருக்கிறார். தனது உதவியாளர்கள் மூலம் மகேந்திரனுக்கு உதவி கிடைத்திருக்கும் என்று எம் ஜி ஆர் நினைத்து அவரை மறந்தே விட்டிருக்கிறார்.
மகேந்திரன் மூன்று வேளையும் முழுமையாக சாப்பிட முடியாத தன் நிலையை வேறு வழியின்றி தயங்கி தயங்கி சொல்லி விட்டார்..
அவ்வளவுதான் !!!
எம் ஜி ஆர் அப்படியே கண் கலங்கி தன் தலையில் படார் படாரென்று அடித்து கொண்டு " நான் பாவி , நான் பாவி உங்களை பட்டினி போட்டு மறந்தே போனேனே " என்று கலங்கி போனாராம் .
பிறகு மகேந்திரனுக்கு அவர் தேவைக்கும் அதிகமாக பண உதவி செய்து விட்டு அவர் தேவைகளை கவனிக்கவும் உத்தரவு போட்டதும்தான் எம் ஜி ஆருக்கு நிம்மதி வந்தது .
துரதிர்ஷ்டவசமாக பொன்னியின் செல்வன் படமாக்கும் திட்டம் எம் ஜி ஆரின் கனவு திட்டமாகவே போனது...
ஆனால் மகேந்திரன் பிறகு சிறந்த கதாசிரியராகவும் , இயக்குனராகவும் திரை உலகில் உயர்ந்தார். எல்லாம் எம் ஜி ஆர் அருகில் இருந்ததால் கிடைத்த அறிமுகத்தால் ஏற்பட்டது.
பின்னாளில் மகேந்திரன் துக்ளக் பத்திரிகையில் திரை விமர்சனம் எழுதினர்.
'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை பீஸ் பீஸாக கிழித்து விட்டார். படத்தின் இயக்குனரிடம் அந்த விமர்சனத்தை கொண்டு கொடுத்து துக்ளக் பத்திரிகையில் அது பற்றிய கருத்தை கேட்டார்கள்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இயக்குனர் எம் ஜி ஆர் !!!
படித்து பார்த்த எம் ஜி ஆர் ஒன்றும் பேசவில்லை.
"இது மகேந்திரன் எழுதினதுதானே ? இதுதான் என் பதில் " என்று ஒன்றும் சொல்லாமல் அந்த விமர்சனத்தை கொண்டு வந்தவரிடம் திருப்பி கொடுத்து விட்டார்.
மகேந்திரன் மேல் அவருக்கு துளியும் கோபம் வரவில்லை.
மகேந்திரன்தான் பாவம் நம்மை அறிமுகம் செய்தவருக்கு இப்படி செய்திருக்க வேண்டாமோ என்று மனம் நொந்து போனார்.
(எம் ஜி ஆர் மறைந்து பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மகேந்திரன் எழுதிய தனது வாழ்க்கை வரலாற்று நூலில் இவற்றை எல்லாம் எழுதி அந்த நூலை எம் ஜி ஆருக்கு சமர்ப்பணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.)
இந்த மனதின் ஈரமும்
மனித நேயமும்தான்
எம் ஜி ஆரின் நிலைத்த புகழுக்கு காரணம் என்று தோன்றுகிறது !!!
சத்துணவு திட்டமும் ,ராமாவரம் காது கேளாதோர் பள்ளியும் அதற்கு சான்றாக நிற்கிறது !!!
Courtesy - Facebook
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கடுமையான உழைப்பாலும் . பலருடைய தியாகங்களாலும், பல் வேறு போராட்டங்களுக்கு மத்தியில் உருவான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 45 வது ஆண்டில் இன்று மிகப்பெரிய சோதனைக்கு உட்பட்டுள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பாக நடை பெற வேண்டிய நேரத்தில் கட்சியும் ஆட்சியும் தடம் மாறி உள்ளது . சுயநலம் ஒன்றே எங்கள் குறிக்கோள் என்று 135 சட்ட மன்ற உறுப்பினர்களும் , 50 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , 60 மாவட்ட செயலாளர்களும் , 2000 பொதுக்குழு உறுப்பினர்களும் தங்கள் மனசாட்சியை அடகு வைத்து எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்த இவர்களை மக்கள் மன்றம் விரைவில் நல்ல தீர்ப்பை வழங்குவதை பொறுத்திருந்து பார்ப்போம் .
தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இணைந்த பிறகு திரை உலகில் கொடி கட்டி பரந்த தேசிய கட்சி தயாரிப்பாளர்களின் படங்களில் மக்கள் திலகம் சிறந்த கதாநாயகனாக நடித்து வெற்றி கொடி நாட்டினார் .
திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே தேசிய விருதுகளை பெற்ற பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கே என்பது சாதனையின் சிகரம் .
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…
தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.
நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.
அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்.ஜி.ஆர்.
அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..
காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..
courtesy - vallamai
பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.
courtesy - vallamai
பொருளாதாரமும் எம்.ஜி.ஆரும்:
1977ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சித் தலைவர்கள்… “எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரம் தெரியுமா?” பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “அடுத்த வேலை பசியைப் போக்கத் தெரியும். உழைப்பும் எளிமையும் சேமிப்பும் நேர்மையும் இருந்தால் போதும், யாரும் பிரகாசமான வாழ்வு பெறலாம். இதுதான் எனக்குத் தெரிந்த பொருளாதாரம்” என்று பதிலளித்தார். பசியோடு இருந்தவன் நான். பசியை வென்றேன். திரைத்துறையில் ஈடுபட்டு திருப்தியாக வளர்ந்தேன். அதேபோல் என் ஆட்சியிலும் மக்கள் திருப்தியை அடையச் செய்வேன் என்றார்.
courtesy - vallamai