பாளையத்து வீரரைப்
பாசத்துடன் வரவேற்போம்
கனல் தெறிக்கும் உரை வீச்சு
காலமெல்லாம் இதே பேச்சு.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b6&oe=5DCFD230
நன்றி குப்புசாமி கிருஷ்ணமூர்த்தி -நடிகர்திலகம் சிவாஜி விசிறிகள்
Printable View
பாளையத்து வீரரைப்
பாசத்துடன் வரவேற்போம்
கனல் தெறிக்கும் உரை வீச்சு
காலமெல்லாம் இதே பேச்சு.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b6&oe=5DCFD230
நன்றி குப்புசாமி கிருஷ்ணமூர்த்தி -நடிகர்திலகம் சிவாஜி விசிறிகள்
இன்று கூண்டுக்கிளி வெளியான நாள்,
26-08-1954,
நடிகர் திலகம் சிவாஜியும் எம்ஜிஆர் ம் இணைந்த ஒரே படம்,
... இருவரும் தனித்தனியான இரு பெரும் ரசிகர் பட்டாளங்களை உருவாக்கிக் கொண்டிருந்த கால கட்டம்,
எம்ஜிஆர் 1937 ல் சதிலீலாவதி பட.த்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி சிறு குறு வேடங்களில் நடித்து பின் 1947 ல் ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக வளர்ந்தார்,
நடிகர் திலகம் 1952 ல் வெளியான பராசக்தி மூலம் நேரிடையாக கதாநாயகனாக அறிமுகம் ஆகி திரைப்படத் துறையில் பெரும் புரட்சியை உருவாக்கினார்,
கூண்டுக்கிளி படத்தில் இருபெரும் நடிகர்களையும் இணைத்து நடிக்க வைக்க இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா பெரும் முயற்சிகள் எடுத்தாராம், அப்போது நடிகர் திலகம் கையில் இரண்டு டசன் படங்களுக்கும் மேலாக காலிஷீட் கொடுத்து விட்டு மிகவும் பிஸியானவராக இருந்து வந்தார்,
நடிகர் திலகம் அந்த நாள், திரும்பிப்பார் ஆகிய மிகப்பெரிய வெற்றி படங்களில் எதிர்மறை நாயகன் வேடமேற்று சிறப்பாக நடித்து நடிப்பில் பெரும் பெயர் எடுத்து இருந்தார், அதன் காரணமாக கூண்டுக்கிளி படத்தில் எதிர்மறை நாயகன் வேடமேற்று நடிக்க சம்மதித்து விடுவார் என்ற நோக்கத்துடன் சென்ற இயக்குனர் நடிகர் திலகத்தின் கால்ஷீட்டை எளிதாகவே பெற்று விட்டாராம்,
ஏற்கனவே எம்ஜிஆர் இன் கால்ஷீட் பெற்ற வைத்து இருந்ததால் படத்தை எடுத்து முடித்தார்,
இரண்டு ஹீரோக்களுக்குமே தயாரிப்பாளர் டி.ஆர்.ராஜகுமாரி அவர்களது யோசனைப்படி சம்பளமாக ரூ 25000 ஐ சமமாக கொடுக்கப்பட்டதாம்,
படம் அப்போது வெளியான போது பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் பிற்காலத்தில் 60 களின் துவக்கத்தில் மீண்டும் திரையிடப்பட்ட போது பல ஊர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடை போட்டதாம், நடிகர் திலகம் ரசிகர்களும் எம்ஜிஆர் ரசிகர்களும் அமைதியாகவே படம் பார்த்த வந்த வேளையில்
வாழப்பாடி என்ற ஊரில் ராஜா தியேட்டரில் முதல் தகராறு எற்பட்டதாம் பின் படிப்படியாக தமிழகம் முழுவதும் பரவி சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் மோதல் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி பின்னர் வேறு வழியில்லாமல் படத்தை தியேட்டர்களில் இருந்து எடுத்து அமைதியை ஏற்படுத்தினார்களாம்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0c&oe=5DDA0C3Ehttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...aa&oe=5E0C9478https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b8&oe=5DD7222Fhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8e&oe=5DD0908A
நன்றி சேகர் பரசுராம் முகநூல்
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த கூண்டுக்கிளியை வெற்றிக் கொண்ட மெகா ஹிட் திரைப்படம்,
சிவாஜி திரைப்படம் VS சிவாஜி திரைப்படம்,
தூக்கு தூக்கி வெளியான நாள், ...
26-08-1954
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2a&oe=5E0BE3E1
நன்றி சேகர் பரசுராம் முகநூல்
இன்றைய தினமலர் -சினிமா செய்திகள்
பொன்விழா படங்கள்: தங்க சுரங்கம் - சிவாஜி ஸ்டைல் மன்னனாக நடித்த படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த கேரக்டரில் நடித்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார். ஆனாலும் சில படங்களில் அவர் படு ஸ்டைலாக நடித்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது தங்க சுரங்கம்....
இது ஒரு பக்கா கமர்சியல் படம். இதில் சிவாஜியுடன் பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா, வரலட்சுமி, ஓ ஏ கே தேவர், மேஜர் சுந்தர்ராஜன், ஆர்எஸ் மனோகர், நாகேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள் டி .ஆர் ராமண்ணா இயக்கியிருந்தார். டி. கே.ராமமூர்த்தி இசை அமைத்திருந்தார்.ஜி. துரை, அமிர்தம் ஒளிப்பதிவு செய்திருந்தனர்
இதில் சிவாஜி தங்க கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கும் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார்.ஓ. ஏ. கே. தேவர் கடத்தல் கும்பல் தலைவனாக நடித்து இருந்தார் மேஜர் சுந்தரராஜன் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். வெண்ணிற ஆடை நிர்மலா கடத்தல் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்தார்.
திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே சிகரெட் ஸ்டைல் காட்டியதாக பலர் நினைப்பார்கள். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல படங்களில் சிகரெட் ஸ்டைல் ஸ்டைல் செய்வார். அதில் இந்த படம் முக்கியமானது. குறிப்பாக எதிராளியின் சட்டையில் இருந்து தீக்குச்சியை உரசி சிகரெட் பற்ற வைப்பது. ஸ்டைலாக நடப்பது, பெரிய கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வது, பெரிய தொப்பி வைத்துக்கொள்வது என்று பல ஸ்டைல்களை இந்த படத்தில் சிவாஜி செய்வார். பெரும்பாலான காட்சிகளில் டீ சர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து காணப்படுவார். ஜேம்ஸ்பாண்ட் பாணியில் துப்பாக்கிச் சண்டை போடுவார் சிவாஜி நடித்த சூப்பர் ஹிட் கமர்சியல் படங்களில் தங்கச்சுரங்கமும் ஒன்று.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...14&oe=5DD0F5C3https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d2&oe=5DCCF5CF
Thanks Vasthu Ravi Chandhran
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...55&oe=5E0EC5B2
Thanks Lakshmi Kasi (facebook)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...1e&oe=5E143A51
Thanks Lakshmi Kasi (facebook)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d3&oe=5E0A4639
Thanks Lakshmi Kasi (facebook)
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ec&oe=5E0699A0
THANKS Vasu Devan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a7&oe=5DCB8BC7
நன்றி Palaniappan Subbu
100 தியேட்டர்களில் 100 நாட்கள் மனோகரா
தமிழ், இந்தி ,தெலுங்கு மும்மொழிகளிலும்
மனோகரா வெளிவந்து ஓடியபொழுது கொடுக்கப்பட்ட விளம்பரம்
நண்பர் ஒருவரின் கைவசம் கிடைத்துள்ளது மிகவிரைவில்
அனைவரது பார்வைக்கும் வெளியிடப்படும்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...8b&oe=5DD14D73https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...9b&oe=5E0F5A2Chttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ee&oe=5E0869D3
ஸ்டில்ஸ் உதவி
நன்றி வான்நிலா விஜயகுமார்
தொடரத்தான் வேணும் என்று அடம்பிடிக்கிறார்கள்
*நாம் இப்படி அவர்கள் அப்படி*
இன்று மாலை எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது ...
அவர் சிவாஜி படங்களை மாதாமாதம் ஒரு ஊரில் அமைப்பு வைத்து நடத்தி ஒளிபரப்புகிறார் (பெயரும் .. ஊரும் வேண்டாம்)
இவர் சொல்வது உண்மையெனில் ஊர் பெயர் வெளியிட்டிருந்தால் ஏன் இப்படி
செய்தீர்கள் என விசாரித்திருக்கலாம்
நம் தலைவரின் தம்பி என்பதாலும் நம் தலைவரும் சிவாஜி அவர்களை நேசித்தார் என்பதாலும் எனக்கு சிவாஜி அவர்களை வெறும் நடிகராகப் பிடிக்கும் ...
அவர் சிறந்த நடிகர் என்பதிலும் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை ...
நான் சொல்லப்போவதெல்லாம் உண்மை உண்மையைத்தவர வேறில்லை என காட்ட பீடிகை
ஒரு திரைப்படப் பாடலாசிரியர் என்ற முறையில் என்னை அவர் ஊருக்கும்... அமைப்புக்கும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் ... சென்றேன்.. அமைப்பின் பொருளாதார சூழ்நிலை காரணமாக என் பயணமும் .. தங்கலும் சற்று வசதி குறைவு தான்..
மற்றவர்களைப்பற்றி இவர் குறை கூறவில்லை
நான் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டேன்..
பெருந்தன்மைக்கு நன்றி
நம் தலைவர் காணாத கடினங்களா என்று எந்த சூழ்நிலையையும் அப்படியே முகம் கோணாமல் ஏற்றுக் கொள்வது தலைவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது ...
தலைவர் கற்றுத்தந்திருந்தால் முகம் கோணி ஏன் வசதி குறைவென்றார்
தலைவர் தினசரி உடற்பயிற்சியோடு தியானமும் செய்வார்...
அந்த தியானத்தை தினசரி நானும் கடைபிடிக்கிறேன்..
ஆக.. சிவாஜி அவர்களின் நடிப்பைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அங்கே வாசித்தேன்...
அனைவருக்கும் பிடித்திருந்தது ...
இதுவல்ல விஷயம்...
நம் தலைவரின் அழியாப் புகழைத் தாங்க முடியாத சில சிவாஜி ரசிகர்கள் தலைவரை சம்மந்தமே இல்லாமல் குறை சொல்லினர்..
அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என் தாயின் தந்தை திரு.எஸ்.வி.எஸ் மணி தலைவரின் நண்பர் மற்றும் Production Manager for FR Pictures... உரிமைக்குரல் திரைப்பட விநியோகஸ்தர்... இதை எல்லாம் அறிந்தும் இங்கிதமில்லாமல் பேசினர்...
தர்ம சங்கடமாக இருந்தது ...
ஏன்டா நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம் என்று...
சொல்லவேண்டியதை சொல்லிவிட்டார்
இது நிற்க ..
அந்த நண்பர் அடிக்கடி பேசுவார்...
நம் தலைவரின் பக்தர்கள் ஆற்றும் தொண்டுகள் பற்றியும் திரைப்படம் காட்டுதல் பற்றியும் உச்சியில் ஏற்றிப் பேசுவேன்...
இவரது உண்மை முகம்இங்கு தெரிகிறது
நான் இது வரை சிவாஜி அவர்களைப் பற்றி குறை சொன்னதில்லை..
என் தலைவர் என்னை அப்படி வளர்க்கவில்லை...
இதை ஞாபகத்தில் இருத்துங்கள்
இன்று பேசிய அதே நண்பர் அரசகட்டளைக்கான என் முகநூல் பதிவைப் படித்து குசலம் விசாரித்தார்...
நான் ஏற்கனவே பெரிய திரையில் தலைவரின் ராஜ வசீகரத்தைப் பார்த்து சொக்கிப் போயிருந்ததால் நிகழ்வை மனதாரப் பாராட்டிக் கொண்டிருந்தேன்...
சிற்றுண்டி தருகிறார்கள் .. நீங்கள் தண்ணீராவது தர வேண்டும் .. என்று சொன்னேன்...
சம்மந்தமில்லாத கிறுக்கல்
என் கெட்ட பழக்கமே இதயத்திலிருந்து பேசுவது தான்..
உள்ளதை உள்ளபடி உள்ளத்திலிருந்து உரைப்பது நம் தலைவருக்கு மிகவும் பிடித்த குணம் ...
அதற்கு அவர் அரசியல் அமைச்சர்கள் உதவியிருப்பார்கள் என்றார்..
நான் இல்லை என மறுத்தேன்...
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பொய் சொல்வார்கள் அவரின் நிறைய படங்கள் ஓடவே இல்லை என்றார்...
நான் அதற்கும் மறுத்து என்னிடம் அவர்கள் உண்மையாகத் தான் நடந்து கொள்கிறார்கள் ...
உண்மைக்கு ஒரு உதாரணம்
நாடோடி மன்னன் 100 நாட்கள் ஓடியதுபற்றியது
இவை அவர்களது இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை
http://oi67.tinypic.com/2reihxf.jpghttp://oi64.tinypic.com/vcufip.jpg
முதல் விளம்பரம் 13 தியேட்டர் காட்டுகிறது இரண்டாவது விளம்பரம் 21 தியேட்டர்என காட்டுகிறது
சேலம் தியேட்டர் விபரம் இரண்டிலும் வெவ்வேறு பெயர்கள்
இரண்டாவது விளம்பரத்தில்உள்ள எழுத்துக்களை கவனியுங்கள் புதிய எழுத்துக்கள்
அதாவது சீடர்களின் கைவண்ணம்
இதுதான் அவர்கள்
தங்கள் படத்தின 100 நாள் கணக்கை அதிகரித்து காட்டுபவர்கள்
நடிகர் திலகத்தின் படங்களின் ஓடிய விபரங்களை சரிவரகாட்டுவார்களா?கிடையாது
ஏனையவை பின்னர் தொடரும்..
ஏனையவை பின்னர் தொடரும்.. 10 தியேட்டர்களில் 100 நாட்கள் விபரம் எழுதும் சீடர்கள்
எத்தனை வெள்ளிவிழா படங்கள் என்பதை ஒப்பிடமாட்டார்கள்
காரணம் எம்மவரது வெள்ளி விழா படங்கள் ஸ்டண்ட் நடிகரது படங்களைவிட அதிகம்.
அப்படி ஒப்பிட்டாலும் ஸ்டண்ட் நடிகரின் ஓடாத படங்களை ஓடியதாக கணக்கு காட்டுவார்கள்.
எம்மவரது வெள்ளிவிழா படங்களை தவர்த்து விடுவார்கள்
10 தியேட்டர்களுக்குமேல் 100 நாட்கள் ஓடிய நடிகர்திலகத்தின் கட்டபொம்மன் பாகப்பிரிவினை
திரிசூலம் மறைத்துவிட்டார்கள்
நாடோடி மன்னன் வெளிவந்த ஆண்டு வெளியிடப்பட்ட 100 நாள் கொண்டாட்ட விளம்பரம் 13 தியேட்டர்
சீடர்கள் தயாரித்த 100 நாள் கொண்டாட்ட விளம்பரம் 21 தியேட்டர்கள் .
சேலத்தில் நாடோடி மன்னன் திரையிடப்பட்டது நியூ சினிமாவில் அது முதல் விளப்பரத்தில்
இருக்கிறது .சீடர்கள் தயாரிப்பில சேலம் சித்தேஸ்வரா காட்டுகிறது காரணம்
நாடோடி மன்னன் படம் வெள்ளிவிழா ஓடியது என காட்டுவதற்கான முயற்ச்சி
இப்படியும் ஒரு பிழைப்பு தேவையா?
வருங்கால சந்ததியை ஏமாற்றுவதற்கான முயற்ச்சி இது .
இனி ஒரிஜினல் விளம்ரத்தை ஒழித்துவிடுவார்கள்
சீடர்கள் தயாரித்த டுப்பிளிகேற் ஒரிஜினல் ஆகிவிடும்
30 வருடங்களின் பின பார்ப்பவர்ளுக்கு பழைய கதை தெரியாது
பிறகென்ன நாடோடி மன்னன் அந்தக்காலத்திலேயே 21 தியேட்டரில் 100 நாட்கள்
உங்களால முடியுமா? என வினோதமாக ஒருவர் கேள்வி எழுப்புவார்.
அந்தக்காலத்தில் ஸ்டண்ட் நடிகர் அது செய்தார் இது செய்தார் என்றெல்லாம்
இப்பொழுது அளந்து விடுகிறார்களே அவை எல்லாம் இப்படித்தான் அளந்து விட்டவையாக இருக்கும்.
எது உண்மை ? எது பொய்? யார் அறிவார்.
அரசகட்டளையை ஒரு மூத்த தலைவரின் பக்தரோடு பார்த்துக் கொண்டிருந்தேன்...
படம் நிகழும் போதே ...
அந்த மூத்த பக்தரிடம் படம் உங்கள் காலத்தில் எத்தனை நாட்கள் ஓடியது எனக் கேட்டேன்..
அவர் சற்றும் யோசிக்காமல் 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..
ஆதாரதத்தை கேட்டுப்பாருங்கள்
அய்யோ.. எவ்வளவு அருமையாக இருக்கிறது 80 ×2 =160 நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வேண்டிய படமல்லவா எனக் கூறினேன்..
ஆமாம் இரட்டிப்பாக்கி கூறுவதுதான் எம் ஜீ ஆர் ரசிகர்களின் வாடிக்கை
சில அரசியல் காரணமாக 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..
அந்த நேர்மை தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...
அந்த சத்தியம் தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...
50 நாட்களே ஓடாத படம்
எம்.ஜி.ஆர் ரசிகர்களின் சத்தியத்தான் நாடோடி மன்னன்
விளம்பர கைவண்ணத்தில் பார்க்கலாமே
ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கூட சிவாஜியை குறை சொல்லி நான் கேட்டதே இல்லை...
இந்தக்கட்டுரையில் இவர் சொல்லியிருப்பது முழுக்க குறை
குறை சொல்லிக்கொண்டே குறை சொல்வதில்லை என்கிறார்
இதுதான் எம் ஜீ ஆர் ரசிகர்கள்
ஒரு சிவாஜி ரசிகர் கூட எம்.ஜி.ஆரை குறை சொல்லாமல் இருந்ததை நான் கேட்டதே இல்லை...
எம்.ஜி.ஆருக்கு எதுவித துரோகமும் செய்யாத சிவாஜி கணேசன்அவர்களைப்பற்றி எம் ஜீ ஆர் ரசிகர்கள்
குறை கூறி எழுதும்பொழுது ஏன் இந்தகட்டுரையானரே குறை கூறி எழுதியிருக்கிறார் எனும்பொழுது
நாங்கள் பதில் எழுதமாட்டோமா?
தாழ்வு மனப்பான்மை தான் குறை சொல்லும் ...
தனக்கு தாழ்வு மனப்பான்மை என ஏற்றுக்கொண்ட கட்டுரையாளருக்கு நன்றி
நாம் நிறைவானவர்கள்..
பொய் சொல்லி
வான் புகழை அந்த வயிறுகளால் ஜிரணிக்க முடிவதில்லை...
வான்புகழ் இருந்தால் இந்த வயிற்றெரிச்சல் கட்டுரை ஏன்?
சிவாஜி கணேசனின் புகழை உங்கள் வயிறுகளால் ஜீரணிக்கமுடியவில்லையா?
தொடர்ந்து பேசிய அவர் இருவரும் கடினப்பட்டுத் தான் வந்தார்கள் என்றார்...
ஆம்.. சிவாஜி நுழைந்த உடனே பிரபலமாகி விட்டார்...
எம்.ஜி.ஆர் கடந்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்றேன்..
சிவாஜியும் சினிமாவில் கஷ்டப்பட்டார் என்றார்...
நாடகத்தோடு அவர் கடின காலங்கள் முடிந்துவிட்டது பராசக்தியில் இருந்து அவருக்கு ஏறுமுகம் என்று சொல்லி..
பராசக்தியில் கதை தான் ஹீரோ... சப்ஜெக்ட் தான் கதாநாயகன் என்ற ஒரு உண்மையை சொல்லி.. அவரின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டதால் அடுத்த படத்திலிருந்து ஹீரோவானார் என்றேன்...
எல்லா படத்துக்கும் இதுதான் நிலை ஆனால் எம் ஜீ ஆர் ரசிகர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்களே
அங்குதான் தர்க்கம் தொடங்குகிறது
சிவாஜி நடித்திருக்காவிட்டால் ஓடியிருக்குமா? எனக் கேட்டார்.. அவர் மனதை புண்படுத்தக்கூடாது என்ற வகையில் மெளனம் காத்தேன்...
நான் 1984 என்றபடியால் எம்.ஜி.ஆர் படங்கள் எப்படி ஓடியது என்பதை எல்லாம் என் தலைமுறைக்கு முன் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும்
இவர்களைபோன்றவர்களுக்கு பொய்யான தகவல்களை மூத்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சொல்லி
வளர்த்ததனால்தான் இவரைபோன்றவர்கள் விபரம் தெரியாமல்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
என் தாயின் தந்தை திரு எஸ்.வி.எஸ் மணி அவர்கள் எம்.ஜி.ஆர் மட்டும் தான் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தாதவர் என முன்பே சொல்லி இருந்ததையும் பதிவு செய்தேன்...
எம் ஜீ ஆரை வைத்து நவரத்தினம் படத்தை தயாரித்தபொழுது இதுகாலம் வரை படம் எடுத்தேன்
இனிமேல்தான் பணம் எடுக்கப்போகின்றேன்
என A P நாகராஜன் அவர்களை உருட்டி மிரட்டி சொல்லவைத்து படம் தோல்வியை தழுவியதால்
நஷ்ட்டப்பட்டு உயிரைப்பறித்த கதை கேற்விப்படவில்லையா?
உரிமைக்குரல் படமே அதற்கு சிறந்த உதாரணம் என்றிருக்கிறார்...
தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அந்த சிவாஜி ரசிகர் பிறகு பேசுகிறேன் எனத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார் ...
சத்தியத்தின் முன் நிற்க... சத்தியத்தாயின் திருமகன் புகழ் முன் நிற்க இந்த உலகத்தில் எவருக்குமே தகுதியோ அருகதையோ இருந்ததில்லை... இருக்கவும் போவது இல்லை...
இதை எந்த சபையிலும் துணிவோடு சொல்வேன்...
சத்தியத்தின் திருமகன் என்பது சத்தியத்திற்கு அவமானம்
நம் தலைவரைப் பற்றி ஒன்றல்ல.. அவரின் ஒவ்வொரு படங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை.. அவரின் மிகையில்லா மேன்மை திரை நடிப்பைப் பற்றி அனைத்துப் படங்கள் பற்றியுமே எழுதிப் பேச நான் பேனா வாளோடு தயாராகவே இருக்கிறேன்...
அமைப்பினர் மேடை தந்தால் ... வாய்ப்பு தந்தால் அரங்கேற்றிடலாம்..
ஏற்கனவே தோட்டத்து விஜயகுமார் (எம்.ஜி.ஆர் விஜயன்) அவர்களின் பேராதரவோடு அவரின் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் ரசிகன் மாத இதழில் என் பல கட்டுரை வெளியாகி இருக்கிறது .. என் கல்லூரி கால அனுபவங்கள் அவை..
அவரே என் தலைவர் கவிதைக்கு முன் பக்கம் தந்து என் எழுத்துக்கு மகுட மரியாதை தந்தவர்.. நான் அப்போதெல்லாம் சின்னப் பையன்..
அவர் நல்ல பண்பாளர்..
நேர்மையாளர்..
என் தலைவிதி அவரை இழந்தேன் ..
அவர் உயிர் இழப்பதற்கு பத்து நாட்கள் முன்பு என்னோடு நான் குறுஞ்செய்தியில் அனுப்பிய பொங்கல் வாழ்த்திற்குப் பதில் வாழ்த்துப் பேசினார்...
அன்றே நான் அவர் குரலை கடைசியாகக் கேட்டது...
இன்னமும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது...
அவரை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன்...
அவரே தோட்டத்தில் தலைவரின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று தலைவரின் டைரியை காண்பித்தவர்..
இந்த நேரத்தில் அவருக்கென் இதய அஞ்சலி...
தோட்டத்திற்கு எதிர்ப்புறம் இருக்கும் தலைவரின் பள்ளியில் ஒரு விழா .. என் கவிதைக்கு விசில் சப்தம் கேட்டது அன்றே முதன் முறை..
எம்.ஜி.ஆர் சிவா படகோட்டி கெட்டப் அப் பில் மேடையில் வலம் வந்தது .. மக்கள் அவரின் கால்களில் விழுந்தது.. நான் பிரம்மித்த தருணங்கள் அவை ...
எம்.ஜி.ஆர் சிவாவும் இப்போது உயிரோடு இல்லை...
விஜயகுமார் அண்ணா அவரோடு என்னையும் ஒரு புகைப்படம் எடுத்தார்.. அதுவும் என்னிடம் இல்லை..
நான் விஜயகுமார் அண்ணாவின் இதழில் வெளிவந்த தலைவர் கவிதைகள் .. கட்டுரைகள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்..
இதை எல்லாம் நான் சொல்ல காரணம்..
எனதருமை தலைவரின் ரசிகர்களே .. பக்தர்களே ... சரியான பாதையில் தான் நாம் பயணம் செய்கின்றோம்..
உங்களின் கொடை உள்ளம் தொடரட்டும்..
தலைவரைப் பற்றிய என் எழுத்துக்களும் தொடரும்...
சிறு மதி படைத்த அந்த நடிகரின் ரசிகர்கள் சிலர் வயிறு எரிகிறார்கள் என்றால்...
நாம் இன்னமும் சரியான பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்...
சிறு மதி படைத்த எம் ஜீ ஆரின் ரசிகர் இவர் வயிறு எரிந்து எழுதுகிறார் என்றால்
நாங்கள் சரியான பாதையில் பயணிக்கின்றோம் என்பது புரிகிறது
நடிகர்கள் எல்லாம் மக்கள் தலைவர் ஆகிவிட முடியாது...
திரையில் மட்டுமல்ல நம் உயிர் வரையில் ஆள்கிறார் நம் தலைவர்...
அவரின் கொள்கைக் கொடி பிடித்து வீறுநடை போடுவோம்...
குறை சொல்வதல்ல என் உள்நோக்கம்..
இங்கிதமும் இதயமும் பெருந்தன்மையும் நமக்கு அதிகம்...
குறை சொல்லி எழுதிவிட்டு குறை சொல்வதல்ல நோக்கம்
என எழுதுவது நல்ல ராஜதந்திரம் எம் ஜீ ஆரிடம் படித்தவரல்லவா?
உங்களைப்பபோல எங்களுக்கு வராதப்பா.
நன்கொடை கேட்க வந்தவர்களிடம்
காசுக்கு பாட்டெழுதிய கண்ணதாசனுக்கு எதற்கு சிலை? என்று ஆரம்ப சிலை அமைப்பாளர்களிடம் கேட்டவர் உயிர் திரு சிவாஜி அவர்கள்..
(அவர்களே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டது)
அது போகட்டும்...
மேலே உள்ள விடயத்திலுள்ள உண்மை பொய் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்
தேவை அறிந்து கொடுப்பதில் சிவாஜி கணேசனை யாருமே மிஞ்சமுடியாது
கொடைகளில் சில
கோயில் நிதி என்றால் இரண்டாயிரம் வெள்ள நிவாரணம் என்றால் 75ஆயிரம் பாரதி விழாவுக்கு 50 ஆயிரம் பள்ளி கட்டிடம் கட்டவா 25ஆயிரம் மருத்துவமனை காட்டவா 50ஆயிரம் தேச பக்தர்களுக்கு சிலை அமைக்கவா இதோ 5ஆயிரம் அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்கவா இதோ பத்தாயிரம் கலைத்துறையில் யாருக்கேனும் திருமணமா இரண்டாயிரம் என்று வாரிக்கொடுத்த வள்ளல் கணேசன் நேருஜி காமராஜர் அண்ணா கருணாநிதி ஆகியோர் மூலம் நாட்டுக்கு நடிகர்திலகம் கொடுத்த பகிரங்க நன்கொடையே பல லட்சம் தேறும் ஆதாரம் தமிழ் வாணன் எழுதிய நடிகர்திலகம் புத்தகத்தில் இருந்து
http://oi66.tinypic.com/jrbrjn.jpg http://oi63.tinypic.com/23jmvr9.jpg
அவர்கள் அப்படி
நாம் இப்படி
மேலே சில புள்ளிவிபரம் உள்ளது
நாங்கள் எப்படி என்பதை தெரிந்து கொண்டு
எழுதுவது நல்லது
அரசன் எவ்வழி
மக்கள் அவ்வழி
எங்கள் வள்ளல் வள்ளலுக்கெல்லாம் வள்ளல் பெயருக்கு கொடுத்தில்லை
நம் அரசன்
கொடை சக்கரவர்த்தி...
வள்ளலாரின் அவதாரம்...
இதயம் திறந்து வைத்தே ஒரு நயவஞ்சக கழகத்தால் ஏமாற்றப்பட்ட இறைவன் அவன்...
நெடுஞ்செழியனுக்கு செய்த துரோகம்
அந்த இறைவனே என் வழிபாட்டு தெய்வம்
இப்படிக்கு
தலைவரின் கடைக்கோடி பக்தன்
*வைரபாரதி*............ Thanks...
நன்றி : முகம்மது தமீம்
இந்தி நடிகர் மெஹ்மூத் கூறினார்: "நான் ரஷ்யா சுற்றுப்பயணம் சென்ற போது அங்குள்ள திரைப் பட படக் கல்லூரிக்கு சென்றேன் !!!
அங்குள்ள பிரதான ஆட...ிட்டோரியத்தில் இரண்டு நடிகர்களின் பெரிய படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதன் கீழே 'முகத்தில் 14 பாவங்களையும் காட்டக் கூடிய உலகின் இரு நடிகர்கள்' என்று ரஷ்ய மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது !!!
ஒருவர் ரஷ்ய நடிகர். இன்னொருவர் யார் என்று பார்த்த போது சந்தோஷ அதிர்ச்சியில் உறைந்து போனேன். அது நம் தென்னிந்திய நடிகர் திரு சிவாஜி கணேசன் !!!
அதைப் பார்த்தது முதல் அங்கிருந்தவர்களிடம் "நான் இவருடைய நாட்டிலிருந்துதான் வந்திருக்கிறேன்" என்று பெருமையுடன் கூறிக்கொண்டேன்".
தமிழுலகமே பெருமை கொள்ளும் விஷயம் !!!
நன்றி Jeyavelu Kandaswami ( nadigarthilagam sivaji visirikal)
Thanks to The Hindu தமிழ்திசை ‘திருவிளையாடல்’ ஏற்படுத்தியது சரித்திரச் சாதனை.
இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானது அல்ல. படம் ரிலீசானது. குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தார்கள். திரும்பத் திரும்ப வந்து பார்த்தார்கள். கோயிலுக்குச் செல்வது போல் வந்து பார்த்தார்கள். அதுமட்டுமா? அடுத்தடுத்த வருடங்களில், ஊருக்கு ஊர், கோயிலுக்கு கோயில், தெருவுக்குத் தெரு, கோயில் விழாக்களிலும் கல்யாண வீடுகளிலும் ‘திருவிளையாடல்’ ஒலிச்சித்திரம் போடுவார்கள். குழாய் ஸ்பீக்கருக்கு அருகே பத்துப்பத...ினைந்து பேர் உட்கார்ந்துகொண்டும் வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டும் கதையைக் கேட்டார்கள். கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ‘திருவிளையாடல்’ படத்துக்கு வசனம் எழுதியவருக்கும் வசனம் பேசியவருக்கும் கூட மறந்து போயிருக்கலாம். ஆனால் தமிழகத்து மக்களுக்கு மறக்கவே மறக்காது, அந்த வசனங்கள்!
படம் வெளியாகி, 54 வருடங்களாகியும், இன்னும் ‘புத்தம் புதிய காப்பி’யாக மனசுக்குள் அப்படியே விளையாடிக்கொண்டிருக்கிறது, ‘திருவிளையாடல்’.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ce&oe=5DCCB7AE
Thanks Vasudevan Srirangarajan
பொக்கிஷங்கள்
(முன்னர் கிடைக்காதவை)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...32&oe=5DCCE8DF
நன்றி சிவாஜி ஶ்ரீதர்/ நிலா
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...62&oe=5E151860
நன்றி சிவாஜி ஶ்ரீதர்/ நிலா
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6c&oe=5E0B9AE7
நன்றி சிவாஜி ஶ்ரீதர்/ நிலா