என் தாய்மீது சத்தியம் தமிழ்நாட்டில் சாராயக்கடையை திறக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு
1981ல் சாராயக்கடைகளை திறந்துவிட்ட சத்தியவான்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...07&oe=5EDC1A02
Printable View
என் தாய்மீது சத்தியம் தமிழ்நாட்டில் சாராயக்கடையை திறக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு
1981ல் சாராயக்கடைகளை திறந்துவிட்ட சத்தியவான்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...07&oe=5EDC1A02
ஒரே முடி அலங்காரம், முகத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது, மீசையிலும் வித்தியாசம் கிடையாது, குரலிலும் வித்தியாசம் கிடையாது, உடல் அசைவுகளை வைத்தே நம்மால் யார் பார்த்திபன்? யார் விக்ரமன்? என்று நெத்தியில் அடிச்ச மாதிரி சொல்லிவிடலாம், அதுதான் இந்த உலக மகா நாயகன் சிவாஜி...
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...e2&oe=5EDC0D38
Thanks Trichy Srinivasan
09-05-2020
சனிக்கிழமை,
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
படித்தால் மட்டும் போதுமா- காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்,
என் மகன் - காலை 11 மணிக்கும்& இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்
தங்கச் சுரங்கம் - நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
கலாட்டா கல்யாணம் - பிற்பகல் 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்
1979 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 4.3 கோடியாகும், அந்த ஆண்டு வெளிவந்த நடிகர் திலகத்தின் 200 வது காவியமான "திரிசூலம்" படத்தினை கண்டு மகிழ்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியாகும், இது ஏறக்குறைய 75% த்தை பெறுகிறது,
ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 75% அளவிற்கு ஒரு திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்கள் என்றால் உலகிலேயே நடிகர் திலகத்தின் படத்தை மட்டுமே
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...85&oe=5EDB6DC4
Thanks Sekar Parasuram
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி தொடர்கிறது..
இவ்உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கட்டிடத்தொழிலாளர்கள் மற்றும் பீடி தொழிலாளர்கள் 15 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கர்ணன் சிவாஜி நற்பணிமன்றத்தலைவர் திரு டி .புகழேந்தி Ex Mc பொருளாளர் பி எழமலை மன்ற உறுப்பினர்கள் வி எஸ் சுந்தர் எ எஸ் சக்திதாசன் அகியோர் கலந்துகொண்டனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...65&oe=5EDD4DC4https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ef&oe=5EDA5A82
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...4f&oe=5EDBF183
Thanks Whatsapp Friends...
மேலும் பல இடங்களில்
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி மென்மேலும் தொடர்கிறது
எங்கள் உள்ளத்திலும் சிவாஜி ..எங்கள் உயிரிலும் சிவாஜி ..வேலுர் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் 5கிலோ அரிசி..1/2 கிலோ பருப்பு .. உப்பு குளியல் சோப்..1..புளி..1/4 கிலோ..சமையல் எண்ணை 1/2 .கிலோ..மிளகு,.சீரகம் .100..கிராம்.. கோதுமை மாவு 1/2.கிலோ..சேமியா..1/2..கிலோ..ருத் பேஸ்ட்.. 100 ..ஆகிய பொருட்கள் 15 நபர்களுக்கு வேலுர் கர்ணன் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது, வாழ்க சிவாஜி புகழ்.
அறம் செய்யவிரும்பு என்றாள் ஔவை தர்மம் செய்யங்கள் அன்பே தெய்வம் என்றார் பெரியோர் அன்புடன் வாழுங்கள்
அடுத்து 50 குடும்பங்களுக்கு உதவிட முயற்ச்சி மேற்கொள்கின்றோம் என்பதையம் தெரிவித்துக்கொள்கின்றோம் ...வேலுர் கர்ணன் சிவாஜி நறபணிமன்றம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bf&oe=5EDD1462
ன்
மேலும் பல இடங்களில்
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி மென்மேலும் தொடர்கிறது
மதரை சிவாஜி சமூகநலபேரவை சார்பில் நிவாரண https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c6&oe=5EDBC52C
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...c7&oe=5EDCE0E7
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c0&oe=5EDCE89A
நன்றி ...தொடரும்,.................
'நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது...இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது...
தென் நாட்டிலே தண்ணீரும் பொன் மீனும் விளையாடுது...மூன்று தமிழ் தோன்றும் இடம்எங்கள் நாடு....'
இன்று 09/05/2020 மதியம் 12.00 p.m. மணிக்கு மெகா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" தங்க சுரங்கம் " மெகா ஹிட் படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்...ராகம் தாளம் மோகனம் மங்களம்...செந்தூர மை வண்ணம் சிந்தாமல் சிதறாமல்...சந்தோசம் கொண்டாடும் கைகள் இங்கே...'
இன்று - 09.05.2020 காலை 09.30 a.m. மணிக்கு வசந்த் டிவி யில் - நடிகர் திலகம் நடித்த படம். !!!
" இமயம்" படத்தை கண்டு களியுங்கள். !!!
நடிகர்திலகம், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.
'நல்லவன் எனக்கு நானே நல்லவன்...சொல்லிலும், செயலிலும் நல்லவன்..சொல்லிலும், செயலிலும் நல்லவன்...சிட்டு போல வானில் துள்ளி செல்ல வேண்டும்....'
இன்று 09/05/2020 ராஜ் டிஜிட்டல் பிளஸ் டி.வி. யில் காலை 09.30 a.m. (அல்லது) 10.00 a.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த குடும்ப படம் " படித்தால் மட்டும் போதுமா"
கண்டு களியுங்கள்.
இந்த படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'காலம் மாறலாம் நம் காதல் மாறுமா..காலம் மாறலாம் நம் காதல் மாறுமா....தடைகள் தோன்றும் போதும் தலைவி பார்வை போதும்.....'
இன்று 09/05/2020 மெகா 24 டிவி யில் மாலை 06.00 மணிக்கு நடிகர் திலகம் நடித்த மெகா ஹிட் படம்.
" வாழ்க்கை " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to change.
விஸ்வரூபம் ரிலீஸ்
6 நவம்பர் 1980
பொள்ளாச்சி சாந்தி
சாந்தி தியேட்டரின் பேரில் சிவாஜி ரசிகர்களுக்கு அலாதி பிரியம் உண்டு.
இந்த சாந்தி தியேட்டர் 2 மே 1980 ல் துவக்கப்பட்டது.இந்த அரங்கு கட்ட ஆரம்பிக்கும் போதே மற்றவர்களைக் காட்டிலும் சிவாஜி ரசிகர்களிடம் ஆனந்தம் அதிகம் தான்.
ஒன்று சாந்தி என்ற பெயருக்காக.
இரண்டாவதாக அதை நடிகர்திலகம் தான் கட்டிக் கொண்டிருப்பதாக வெளியான செய்தி.பின்னர் அது பொய்த்தகவல் என்பது தெரிந்தது.ஆனாலும் சாந்தி என்ற பெயர் நிச்சயம் என்றதால் மகிழ்ச்சியையே கொடுத்தது.
தியேட்டர் அன்றைய நவீன பாணி முறையில் சிறப்பாக கட்டப்பட்டு வருவதாகவும், ஒலி அமைப்புகள் மிகப் பிரமாதமாக அமைக்கப் போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.இவையெல்லாம் மக்களுக்கு பெரும் ஆவலைத் தூண்டி இருந்தன.
அழகு படுத்தும் வேலைகள் முடிந்து அரங்கமும் திறக்கப்பட்டாயிற்று.
இவ்வளவு ஆவலை தூண்டிய தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாத காலம் ஆகியும் நடிகர்திலகம் திரைப்படம் வெளியாகவில்லையே என்ற ஆதங்கம் நாளுக்கு நாள் அதிகமானது.இந்நிலையில் தான் விஸ்வரூபம் பட ரீலீஸ் அறிவிக்கப்பட்டது.சாந்தியில் நடிகர்திலகத்தின் முதல் படம்.அந்த காலகட்டத்தில் தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாத காலம் நடிகர்திலகத்தின் படங்கள் திரையிடாமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றுதான். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.1979 ல் ரிலிசான திரிசூலத்தின் தாக்கமே அப்போதும் இருந்தது.அதனால் திரையரங்குளில் நடிகர்திலகத்தின் படங்களை வெளியிடுவதில் பெரும் போட்டி இருந்தன.அந்த நேரத்தில் தனிக்காட்டு ராஜாவாய் தர்பாரை நடத்திக் கொண்டு இருந்த நேரம் வேறு.இப்படிப்பட்ட
நேரத்தில் தான் பொள்ளாச்சி சாந்தியில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது.
நான் அப்போது பத்துவயது சிறுவனானதால் பெற்றோருடன்தான் படம் பார்க்க செல்வது வழக்கம்.நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை எங்கள் குடும்பம் பார்க்காது.இப்படத்தினை முதல்நாளிலேயே பார்க்க சென்றிருந்தோம்.
அன்று வியாழக்கிழமை.
சிறப்புக்காட்சிகளாக நான்கு நாட்களுக்கு 5 காட்சிகள்.
நாங்கள் 4 மணிக்காட்சிக்கு 3 மணிக்கு சென்று இருந்தோம்.தியேட்டருக்குச் சென்றால் பெருங் கும்பல் கும்பலாய் கூட்டம்.
எங்கள் நேரம் முந்தைய காட்சி இடைவேளையின் போதே அடுத்த காட்சிக்கான டிக்கட்டுகள் விற்கப்பட்டு விட்டன.படம் முடிந்து வெளி வரும் கூட்டமும், டிக்கட் வாங்க நிற்கும் கூட்டமும் சேர்ந்தால் சமாளிப்பது பெரும்பாடு என்பதால் தியேட்டர்களில் இந்த நடைமுறை இருந்தது.நடிகர்திலகத்தின் எந்த படமும் பார்க்காமல் திரும்பியதில்லை நாங்கள்.சரி 7 மணி காட்சி பார்க்கலாம் என முடிவு செய்து காத்திருந்தோம்.இந்த நேரத்தில் ஓட்டலுக்கு சென்று வந்து விடலாம் என்று ஒரு மணி நேரத்தை அதில் கழித்தோம்.
தியேட்டருக்குச் சென்றோம்.இப்போது டிக்கட் வாங்க முடியுமா என்ற கலக்கம்.ஏனென்றால் கூட்டம் அப்படி.நேரம் ஆக ஆக கூட்டம் கூட்டமாய் மக்கள் சேர்ந்தனர்.நம்பிக்கை தளர ஆரம்பித்தது.
இந்த நேரத்தில்தான் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வந்தார்.எங்களின் உணர்வு தெரிந்து தான் டிக்கட் எடுத்து கொடுப்பதாக கூறினார்.இந்நிலையில்
ஓடிக்கொண்டிருக்கும் காட்சியின் இடை வேளை வந்தது.இடைவேளை முடிந்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது.டிக்கட் கவுண்ட்டர்களில் பெரிய பரபரப்பு, தள்ளுமுள்ளு.நண்பரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்களுடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.டிக்கட் கொடுக்க ஆரம்பித்தாயிற்று.நண்பர் மெல்ல அடி எடுத்து வைக்கிறார்.கம்பிவலை ஜன்னலை நோக்கி ஒரு தாவல்.மேலே அந்த கம்பிகளை பிடித்து படிப்படியாக டிக்கட் கூண்டு அருகே நெருங்கி விட்டார்.கூட்ட நெரிசலால் பின் அவரை காணவில்லை.ஒரே பதைபதைப்பு.ஐந்து நிமிடங்கள் கழிந்தது .தோளை தொட்டு திருப்புகிறார் என்னை.கையில் வேண்டிய டிக்கட்டுகள்.அப்பாடா.!இப்போதுதான் நிம்மதி.தியேட்டரைப் பார்த்தால் இப்போது நான்கு தியேட்டர் கொள்ளவு கூட்டம். பார்க்கவே பெரும் மாநாடு போல் காட்சி அளித்தது.
படம் முடிந்து கூட்டம் வருகிறது.அந்தக் கூட்டத்தில் பாதி பேர் வருவதற்கு முன்னரே பெருங்கூட்டம் உள்ளே நுழைகிறது.நான் பார்த்த தலைவரின் சில படங்களுக்கு டிக்கட்கூட கிழிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.அதில் இப்படமும் ஒன்று.தியேட்டருக்குள்ளே 100 பேர் கூட அமர்ந்திருக்க மாட்டார்கள். அதற்குள்ளாகவே டைட்டில் ஓட ஆரம்பித்துவிட்டது.என்ன நடக்கின்றது ஏது நடக்கிறது என்று புரியாமல் கலவர பூமியாகவே அந்த நிமிடங்கள் இருந்தன. ஒரே மக்கள் இரைச்சல், கூட்டம் கூட்டமான நகர்வுகள் என்று நகர்ந்து இருக்கைகள் நிரம்பிய பின்......
ஒலி சத்தங்கள் எங்கிருந்து தான் வருகிறதோ என்று தியேட்டருக்குள் தலையை திருப்பி திருப்பி தேட வேண்டியதாய் இருந்தது.அப்போதைய அறிமுகம் நவீன சவுண்ட் ட்ரெண்ட் சிஷ்டம்
" சைட் ஸ்பீக்கர்ஸ் ".முக்கிய காட்சிகளுக்கு பாடல்களின் பிண்ணனி இசைக்கு சண்டை காட்சிகளுக்கு இதை
பயன்படுத்துவர்.ரசிகர்களின் உணர்ச்சிகளை பல மடங்கு தூண்டிவிடும் இது.
அதற்கு முன் அந்த சிஷ்டம் பொள்ளாச்சி தியேட்டர் தியேட்டர்களில் இல்லை.எனவே எங்களுக்கு புது வித அனுபவத்தையும், பிரமிப்பையும் தந்தது.
"என்னை யாருன்னு நினச்சே "பாடல் ஆரம்பித்தது.
அப்பொழுது நடந்த ஆர்ப்பாட்டங்கள்...
வணக்கம் ..
திரையில் மின்ன,
ஸ்கிரீன் இறங்க இறங்க
நடந்து கொண்டே இருந்தன.
நன்றி
செந்தில்வேல் சிவராஜ்
Thanks Senthilvel
நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை மற்றும் நண்பர்கள் குழு சார்பாக ஏழை எளியோருக்கு அரிசி பருப்பு மளிகை சாமான்கள் 20க்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது 9:5:2020 காலை 10 மணி அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவில் மாநிலத் தலைவர், சிவாஜி சமூக நலப்பேரவை மாநில தலைவர் திரு K.சந்திரசேகரன் காங்கிரஸ் வடசென்னை மாவட்ட தலைவர் திரு M.S.திரவியம் அவர்களின் அனணக்கினங்க 20க்கும் மேற்பட்டோருக்கு திரு E.சங்குராஜன் M.ஹரிராஜ் அவர்களின் ஏற்ப்பாட்டில் வழங்கப்பட்டது உடன் இருந்தோர் B.குபேரன் M.ரிஷிகரன் P.நாகரத்தினம் S.விஜயகுமார்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...9b&oe=5EDCB4EB
வாத்தியார் ரசிகர்களின் அலங்காரப் பொய்கள்.
தமிழ் திரைப்பட துறையில் பெரிய சிறிய நிறுவனங்களென பல படதயாரிப்ப நிறுவனங்கள் இருந்தன இருக்கின்றன. இவற்றில் முக்கியமான பெரிய நிறவுனங்கள் என சொல்லப்படுபவை இவைகள் .
மாடர்ன் தியேட்டர்ஸ்
ஜெமினி ஸ்ருடீயோ
எ வி எம் நிறுவனம்
தேவர் பிலிம்ஸ்
சரவணா பிலிம்ஸ்
சத்யாபிலிம்ஸ்
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
பத்மினி பிக்சர்ஸ்
சித்திராலயா
மற்றம் சில
மேற்கண்ட நிறுவனங்களில் ஒரு சில தவிர்ந்த ஏனைய நிறவனங்கள் அனைத்து நடிகர்களையும் வைத்து படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளன.
இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் பெரிய பட நிறவனங்களில் ஒரு படம் நடித்து கொடுத்ததுடன் நிறுத்திக்கொண்டது ஏன் என எம் ஜி ஆரை சுத்தமான தங்கம் என காட்டுவதற்காக ஏம் ஜி அர் ரசிகர்களால் அவிழ்த்து விடப்படும்
அலங்காரப் பொய்கள் இதற்குமட்டுமல்ல எம் ஜி ஆரைப்பற்றி சொல்லப்படும் அனைத்திலுமே அலங்கரிக்கப'பட்ட பொய்களே.
மாடர்ன்ஸ் தியேட்டர் நிறவுனத்தின் அலிபாபாவும் 40 திருடர்களும்
திரைப்படத்தில் எம் ஜி ஆர் நடித்திருந்தார் .முக்கால்வாசி படப்பிடிப்ப நிறைவடைந்தவிட்டது பாக்கி படப்பிடிப்பு எம் ஜி ஆர் நடிக்கவேண்டியவை வழமையான தன் திருவிளையாடலை எம் ஜி அர் அங்கும் காட்டினார் கால்சிட் கொடுக்காமல் இழுத்தடிப்பு கொதித்துப்போன மாடர்ன் தியேட்ர் அதிபர் சுந்தரம் அவர்கள் எம் ஜி அர் நடிக்கவேண்டிய மிகுதிக்காட்சிகளை வேறு நடிகரை வைத்து டுப் போட்டு படப்பிடிப்பை முடித்துக்கொண்டார். அதன் பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ நிறுவனம் எம் ஜி அரை திரும்பியும் பார்க்கவில்லை ஆனால் இது விடயத்தில் சீடர்களின் பரப்புரை பாருங்கள் எம் ஜீ அர் சிறிய பட நிறுவனங்கள் வளரவேண்டும் என்பதனால் அவர்களுக்கு உதவும்முகமாக சிறிய பட நிறவனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி நடித்துக்கொடுத்தார்.பெரிய நிறவனங்களான மாடர்ன் தியேட்டர் எ வி எம் போன்ற பெரிய நிறவனங்களில் ஒரு படம் நடித்துக்கொடுத்ததுடன் நிறுத்திக்கொண்டார்.இது வாத்திசிடர்களின் அலங்காரப் பொய்கள்.அலிபாபாவுடன் மாடர்ன் தியேட்டர்ஸ் ஏம் ஜி ஆரை திரும்பிப்பார்க்கவில்லை. எ வீ எம்முடன் நடந்தவிடயம் எ வி எம் நிறவுனம் சிவாஜி கணேசனை வைத்த அன்பே வா திரைப்படத்தை தயாரிப்பதற்காக திட்டமிட்டிருந்தார்கள் ஏதோ ஒரு வகையில் பெற்றால்தான் பிள்ளையா கை மாறியதபோல் அன்பே வா படத்தையம் தன் பக்கம் இழுத்தக்கொண்டார் பத்திரமாத்துத்தங்கம்
கதையில் சிறு மாற்றம் காட்சிமாற்றங்களுடன் அன்பே வா எம் ஜி ஆர் நடிப்பில் தயாரானது, !966 பொங்கலுக்கு வெளியிட எ வி எம் நிறவுனம் திர்மானித்து தயார்படத்தலை செய்தவேளை எம் ஜி ஆரின் கால்சிட் தாமதமாவதனால் படதயாரிப்பாளர் எம் ஜி அருடன் பேசிய பொழுது எம் ஜி ஆர் ஒத்துழைப்பைகொடுத்து படத்தை முடீத்துக் கொடுத்தார் மேலதிக பணப்பேரம்பேசலுடன் அவர்களும் பேசியபடியே மேலதிகமாக 25000.00 துர்க்கிக்கொடுத்தார்கள்.இங்கே கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம் எம் ஜி ஆருக்கு பணத்தின்மிது உள்ள அதீீத காதலை.
படமும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டபடி 1966 ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்டு வெற்றிபெற்றது. படம் சென்னையில் மட்டும் ஒரு தியேட்டரில் 20வது வாரம் ஒடீக்கொண்டிருந்தபொழுது கலக்சன் குறைவால் 20வது கடைசிவாரமாக்கப்பட்டு படத்தை எடுப்பதாக விளம்பரம் வந்ததும் வெள்ளிவிழா கனவில் மிதந்த வாத்தியாருக்கும் வாத்தியார் ரசிகர்களுக்கும் பேரிடி.
தங்களது படங்கள் நாட்கணக்கிற்கு ஒட்டினால்தான் சாதனை என்ற நிலமையிலுள்ளவர்ளுக்கு எப்படியாவது அன்பே வா படத்தை வெள்ளிவிழாவரை ஓட்டவேண்டுமென முடிவெடுத்து எ வி எம் நிறுவனத்தை நாடியபொழுது அவர்கள் தற்போதைய கலைக்சன் போதுமானதாக இல்லை என கூறி கை விரித்துவிட்டார்கள் . இது வாத்திக்கு பெருத்த அவமானமாகிவிட்டது.அதன்பின் வாத்தியார் அந்தப்பக்கம் ஏறேடுத்தம் பார்க்கவில்லை அவர்களும் இவரை கண்டுகொள்ளவில்லை .மான அவமானத்தை மறைப்பதற்கு சிடர்கள் விட்ட அலங்காரப்பொய்தான் இதற்கும் சிறிய திரைப்பட நிறுவனங்கள் முன்னேற உதவுவதற்காக பெரிய பட நிறுவனங்களை தவிர்த்தார் வாத்தியார் என்ற மக்களை கவரும் அழகிய பொய்.
ஆனால் தேவர் பிலிம்ஸ் ,சரவணா பிலிம்ஸ், சத்தியா முவிஸ் , பத்மினி பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறவுனங்களின் பேனர்களில் தொடர்ந்துநடித்திருப்பார் யாரும் கண்டுகொள்ளக்கூடாது,
வாத்தியார் ரசிகர்களின் அலங்காரப் பொய்கள் தொடரும்.....
10-05-2020
ஞாயிற்றுக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
ரத்தத் திலகம் - காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
தாய்க்கு ஒரு தாலாட்டு - பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
நான் பெற்ற செல்வம் - பிற்பகல் 2 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்,
அன்பே ஆருயிரே - பிற்பகல் 3:30 க்கு கேப்டன் டிவியில்,
வானி ராணி - இரவு 10:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்,
நடிகர்திலகத்தின் காவியங்கள் இன்று மாலை 6 மணிக்கு மெகா24சேனலில் வாழ்க்கையும் ...7 மணிக்கு முரசுவில் என் மகனும் இதே படம் இரவு 10.30க்கு ராஜ் டிவியுலும் ஒளிபரப்பாகிறது...ராஜ் டிவியில் வரும் வாரம் பகல் 1.30க்கு சிங்கத்தமிழன் வாரம் ...திங்கள்----ராஜ ராஜ சோழன்...செவ்வாய்----எங்க மாமா...புதன்-----சாதனை...வியாழன்----என்னைப் போல் ஒருவன்...வெள்ளி----
நடிகர் திலகத்தின் 38 வது திரைக்காவியம் புதையல் வெளியான நாள் 10-05-1957
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...80&oe=5EDE872F
காந்தி பொட்டலில் 9.5.20 திரு ஜெயக்குமார். ( தென் சென்னை மாவட்ட சிவாஜி சமூக நல பேரவை) திரு நாராயணன் .( மதுரை மாவட்ட சிவாஜி சமூக நல பேரவை .) இவர்கள் பங்களிப்பில் .. கல்வி புரவலர் தேனூர் சாமிக்காளை அவர்கள் எளிய மக்களுக்கு அரிசி (25 நபர்களுக்கு) வழங்கப்பட்டது. நிகழ்வில் சிவாஜிசெல்வம். போஸ்டர் புயல் பச்சைமணி. ராஜூ. ஜவஹர்லால். தங்கவேல். வியட்நாம் பாண்டி. குப்புசாமி. ராஜன். ஸ்ரீதர். கண்ணன். சிவாஜிஏக்நாத் .வண்டியூர் சிவகுமார். என்றும் சிவாஜியின் புகழ் காப்போம்.ஒழியட்டும் கொரோன வைரஸ் ஒளிரட்டும் மக்கள் நல.ம்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ed&oe=5EDB554Dhttps://scontent.fyto1-2.fna.fbcdn.n...e9&oe=5EDDDD8F
நீங்காத நினைவுகள்
(பத்திரிக்கையாளர் தேவிமணி எழுதிய பதிவு )
நடிகர் திலகம் வரச்சொல்லி இருந்தார். போனேன்.
வீட்டு நலன்களை வழக்கம் போல விசாரித்து விட்டு “ஒழுங்கா இருக்கியா?”
இந்த கேள்வியின் அர்த்தம் நம்மைப் பற்றி யாரோ வத்தி வைத்திருக்கிறார்கள் என்பதுதான்!
சற்று பதட்டமுடன் “இருக்கேண்ணே!”
“மதுரையில இருந்தபோது ஒழுங்காத்தானே இருந்தே மெட்ராஸ் வந்தபிறகுதான் இப்படி ஆகிட்டியா?கண்டபடி எழுதுறியாமே…அதுக்கு பேரு என்னமோ சொல்றாய்ங்களே ..அதாண்டா கிசு கிசு.”
“அண்ணே…எல்லாருமே எழுதுறாய்ங்கண்ணே.பத்திரிக்கை சேல்ஸ் இங்கிரீஸ் ஆகும்.”
“மண்ணாங்கட்டி!.அதுக்காக மத்தவன் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கிவியா.?நாலு பேரு வாயில ஏண்டா விழணும்?நம்ம புள்ள குட்டி நல்லாருக்கும்னுடா! சொல்றது புரியிதா?”
தலையாட்டினேன்.
இப்படி என்னிடம் உரிமை எடுத்துக் கொண்டு கண்டித்து திருத்தியவர்களில் நடிகர் திலகம்,உலகநாயகன்,திரையுலக மார்க்கண்டேயன் ஆகிய மூவருக்கும் பங்கு உண்டு,
இப்படியாக அண்ணன் சிவாஜி என்னை கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே எங்களை கடந்த இளைய திலகம் பிரபு “அப்பா ,ஹார்ஸ் ரைடிங் போறேன்பா!”என்று தகவல் சொல்லிவிட்டு சென்றார்.
அவர் சென்றதும் அண்ணனின் மூடு மாறி விட்டது.
“இவனும் உடம்பு இளைக்கனும்னு அடிக்கடி குதிரை சவாரி பண்றான். குதிரைதான் இளைச்சது,இவன் இளைச்சமாதிரி தெரியல “என்று சொன்னதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நைசாக அப்படியே விடை பெற்று கிளம்பிவிட்டேன்.
சிவாஜி சொன்னதின் எதிரொலியோ என்னவோ பிரபுவுக்காக “கத்திரிக்கா…குண்டு கத்திரிக்கா” என்று பாடலும் எழுதி விட்டார்கள். உடல் பருமன் என்பது அவர்களது வம்சாவளி சொத்து.
நடிகர் திலகத்தைப் பற்றி பலர் கஞ்சன் என்பார்கள். ராமநாதபுரம் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது நேரிலும் அவரது மன்றங்கள் வழியாகவும் அந்த காலத்து மதிப்புப்படி பல லட்சங்கள் செலவு செய்து குடிதண்ணீர் குழாய்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.கண்மாய்களை சீரமைத்துக் கொடுத்திருக்கிறார்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b1&oe=5EDEFCEA
Thanks Raja lakshmi
நடிகர் திலகமும் அவரின் திரைக் கதாநாயகிகளும்...
நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனை ஆரம்ப நாட்களில் சினிமாவுக்குப் பொருத்தமில்லாத நடிகராக பார்த்தார்கள். அவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கும், இயக்குவதற்கும் தயங்கினார்கள். அவருடன் இணைந்து நடிப்பதற்கும் யோசித்தார்கள்.
இந்தச் சூழ்நிலையில்தான் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் 'பராசக்தி' (1952) படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கதாநயாகனாக நடிக்க வைத்து ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படத்தைத் தயாரித்தார். கலைஞர் மு.கருணாநிதி பரபரப்பூட்டும் வகையில் வசனத்தை எழுதியிருந்தார். படம் சூப்பர் ஹிட்டாகி தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. தமிழக அரசியலிலும் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. நடிகர் திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பு, அவர் ஏற்ற இறக்கத்துடன் வசனத்தை உச்சசரித்த அழகு படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது. படத்தின் இறுதி காட்சியில் அமைககப்பட்டருந்த கோர்ட் சீன், அதில் சிவாஜியால் பரபரப்புடன் பேசப்பட்ட வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதன்பிறகு சிவாஜியை நடிக்க வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் முன் வந்தார்கள். பராசக்திக்குப் பிறகு அவருடன் இணைந்து ஜோடியாக நடிப்பதற்கு பல கதாநாயகிகள் ஆசைப்பட்டார்கள். அப்படி சிவாஜியுடன் இணைந்து நடித்த அத்தனை நடிகையர்களும் சிவாஜியின் திரையுலக வரலாற்றில் இடம் பெற்றவர்களாகவும், தமிழ் சினிமா வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் நாயகி பண்டரிபாய் நடிகர் திலகம் நடித்து அறிமுகமான முதல் படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் சிவாஜிக்கு முதல் ஜோடியாக இணைந்து நடித்தவர் பண்டரிபாய். இவர் ஏற்கனவே எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியவர். ஏவிஎம் நிறுவனம் அடுத்து தயாரித்த 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகம் செய்யும் தனது கணவன் சிவாஜியை சுட்டுத் தள்ளும் துணிச்சலான வேடத்தில் நடித்தார். 'அன்னையின் ஆணை', 'ராஜபக்தி'யிலும் ஜோடியாக நடித்தார். 'தெய்வமகன்' படத்தில் தாரமாகவும், தாயாகவும் நடித்தார். 'கௌரவம்' படத்தில் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாகவும், அவரது மகன் இளம் வழக்கறிஞராகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் பாரிஸ்டர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பண்டரிபாய் நடித்தார். இளம் வழக்கறிஞருக்கு ஜோடியாக உஷா நந்தினி நடித்தார். பத்மினி அடுத்து நாட்டியப் பேரொளி பத்மினி இவர் முதன் முதலாக கலைவாணர் என்.எஸ்.கே. தயாரித்து இயக்கிய 'பணம்' படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து 'அன்பு', 'இல்லறஜோதி' யில் இணைந்து நடித்தார். 'கல்யாண பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் காமெடி கலந்த வேடம். 'எதிர்பாராதது' படத்தில் காதலியாகவும், சித்தியாகவும் இருமாறுபட்ட தோற்றங்கள். 'தூக்குதூக்கி', 'காவேரி', ' கோட்டீஸ்வரன்', 'ராஜாராணி' படங்களில் ஜோடியாக நடித்தவர் 'தானே உனக்காக' படத்தில் கௌரவ வேடத்தில் வந்தார். ஆனால் சிவாஜி ஜோடியாக. 'அமரதீபம்', 'புதையல்', 'பாக்கியவதி', 'உத்தபுத்திரன்', 'தங்கப்பதுமை' படங்களிலும் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். 'மரகதம்', 'தெய்வப் பிறவி', 'புனர் ஜென்மம்', 'ஸ்ரீவள்ளி', 'செந்தாமரை', 'நான் வணங்கும் தெய்வம்', 'பேசும் தெய்வம்', 'பாலாடை' போன்ற படங்களிலும் இணைந்து நடித்து தனது, நடிப்பாற்றைலை வெளிப்படுத்தினார். 'திருவருட்செல்வர், 'இருமலர்கள்', 'திருமால்பெருமை', 'விளையாட்டுப்பிள்ளை', 'இருதுருவம்', 'தேனும் பாலும்' போன்ற படங்களிலும் சிறப்பாக நடித்தார். 'தில்லானா மோகனாம்பாள்', 'வியட்நாம்வீடு', 'தாய்க்கு ஒரு தாலாட்டு', 'லட்சுமி வந்தாச்சு' போன்ற படங்களில் நடித்து சிவாஜிகணேசனுக்கு சிறப்பான ஜோடி எனப் பெயர் பெற்றார். இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் தாய்க்கு ஒரு தாலாட்டு.
அடுத்து நடிகர் திலகத்தின் ஜோடியாக வந்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. 'அமரதீபம்', 'வணங்காமூடி', 'அன்னையின் ஆணை', 'காத்தவராயன்', 'குறவஞ்சி', 'எல்லாம் உனக்காக', 'வடிவுக்கு வளைகாப்பு', 'இரத்தத் திலகம்', 'திருவிளையாடல்' போன்ற படங்களோடு 'பிராப்தம்' படத்தை இயக்கி நடித்து தயாரித்தார். அவர் நடித்த அத்தனை படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் பாராட்டுக்களைப் பெற்ற நடிகையர் திலகம் சாவித்ரி. 'கை கொடுத்த தெய்வம்' படத்தில் வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் வெளுத்து வாங்கினார். 'நவராத்திரி'யில் ஒன்பது விதமான வேடத்தில் நடித்த சிவாஜிக்கே சவால் விடுகின்ற அளவிற்கு அவரது நடிப்பாற்றல் சிறந்து விளங்கிறது. 'நவராத்திரி' சிவாஜி நடித்த 100வது படம் என்றாலும் 'சாவித்திரியின் நடிப்பாற்றலை நன்கு வெளிப்படுத்திய முதன்மையான படமாகும். சிவாஜி - சாவித்திரிக்கு மகுடம் சூட்டிய படம் பாசமலர். இருவரும் இதில் ஜோடியல்ல. அண்ணன் - தங்கையாக வாழ்ந்திருந்தார்கள்.
அஞ்சலிதேவி - அஞ்சலிதேவி 'முதல் தேதி', 'நான் சொல்லும் ரகசியம்' என்ற இரண்டே படங்களில் மட்டும் ஜோடியாகக நடித்தார். இவரது அஞ்சலி பிக்சர்ஸ் தயாரித்த 'பூங்கோதை' படத்தில் நடிகர் திலகம் நாயகனாக நடித்தார். எம்.என். ராஜம் சிவாஜியின் ஆரம்பகால படங்களான 'மங்கையர் திலகம்', 'நல்லவீடு', 'நானே ராஜா', 'பெண்ணின் பெருமை' 'ரங்கோன் ராதா', 'பதிபக்தி', 'பாசமலர்' போன்ற படங்களில் சிறப்பாக நடித்தவர் எம்என் ராஜம். 'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளர் சிவாஜியை காதலிக்கும் ரசிகையாக அழுத்தமாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றார்.
பி பானுமதி - நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவினால் போற்றப்பட்ட பி.பானுமதி நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தார். கல்கியின் நாவலான கள்வனின் காதலி பேரறிஞர் அண்ணாவின் நாவலான 'ரங்கோன் ராதா', வட்டார மொழியில் எடுக்கப்பட்ட 'மக்களைப் பெற்ற மகராசி', 'மணமகன் தேவை', 'அம்பிகாபதி', 'அறிவாளி' போன்ற அனைத்துப் படங்களிலும் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு இணையாகவே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்பதை அனைவருக்கும் உணர வைத்தார்.
கிரிஜா 'திரும்பிப்பார்', 'மனோகரா' இரண்டே படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை கிரிஜா. அதன் பிறகு அவர் சிவாஜியுடன் எந்தப் படத்தில் காணமுடியவில்லை.
சௌகார் ஜானகி நடிகர் திலகத்துடன் ஜோடியாக மட்டுமல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் சௌகார் ஜானகி. இவர் நடிகர் திலகத்துடன் 'படிக்காத மேதை', 'பாவை விளக்கு', 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'பச்சை விளக்கு', 'புதிய பறவை', 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'மகாகவி காளிதாஸ்', 'திருமால் பெருமை', 'எங்க ஊர் ராஜா', 'உயர்ந்த மனிதன்', 'மனிதனும் தெய்வமாகலாம்', 'பட்டாக்கத்தி பைரவன்' போன்ற பல படங்களிலும் காதலியாக மட்டும் வந்து போகாமல் சிவாஜியின் மனைவியாகவே நேரிடையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சிவாஜியை மட்டுமல்லாமல் படம் பார்த்தவர்களையே வியக்க வைத்தவர் நடிகை சௌகார் ஜானகி. குறிப்பாக புதிய பறவை படத்தில் கலக்கினார்.
சரோஜா தேவி எம்ஜிஆருக்கு மட்டுமல்ல, சிவாஜிக்கும் பொருத்தமான ஜோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் அபிநய சரஸ்வதி எனப் புகழப்பட்ட சரோஜா தேவி. அஞ்சல் பெட்டி 520, அன்பளிப்பு, பாலும் பழமும், பாகப்பிரிவினை, இருவர் உள்ளம், புதிய பறவை, கடைசியாக ஒன்ஸ்மோர் என பல படங்களில் இந்த ஜோடி ரசிகர்களைக் கவர்ந்தது.
இவர்களைத் தவிர 'கண்கள்', 'குறவஞ்சி போன்ற படங்களில் மைனாவதி, 'பூங்கோதை' படத்தில் புதுமுகம் வசந்தா, 'மனிதனும் மிருகமும்' படத்தில் மாதுரி தேவி, 'திரும்பிபார்', 'துளிவிஷம்' படத்தில் கிருஷ்ணகுமாரி, 'இல்லற ஜோதி'யில் ஸ்ரீ ரஞ்சனி நடித்தார், 'காவேரி', உலகம் பலவிதம்', 'தூக்கு துூக்கி' படங்களில் லலிதா, 'கூண்டுக்கிளி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மனைவியாகவும், சிவாஜி காதலித்த பெண்ணாகவும் பி.எஸ். சரோஜா, 'நான்பெற்ற செல்வம்', 'ஹரிச்சந்திரா', 'வாழ்விலே ஒருநாள்' போன்ற படங்களில் ஜி.வரலட்சுமி, 'தெனாலிராமன்', 'தங்கமலை ரகசியம்', 'பொம்மைக் கல்யாணம்', 'நிச்சயத்தாம்பூலம்', 'மருதநாட்டுவீரன்' போன்ற படங்களில் ஜமுனா, 'ராஜாராணி', 'ராணி லலிதாங்கி', 'சாரங்கதாரா', 'படித்தால் மட்டும் போதுமா' போன்ற படங்களில் ராஜ சுலோச்சனா, 'சபாஷ்மீனா' படத்தில் மாலினி போன்றோர் நடித்தனர்.
கலையுலகின் கனவுக் கன்னியாக விளங்கிய டி.ஆர். ராஜகுமாரி 'தங்கப்பதுமை' படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார். 'வீரப்பாண்டிய கட்டபொம்மன்' படத்தில் எஸ்.வரலட்சுமியும், 'இரும்புத்திரை', 'சித்தூர் ராணிபத்மினி' படங்களில் நடிகை வைஜயந்திமாலாவும், 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் குமாரி ருக்மணியும், 'பாவைவிளக்கு' படத்தில் இன்னொரு நாயகியாக குமாரி கமலா, 'பலே பாண்டியா', ஆண்டவன் கட்டளை படங்களில் தேவிகா ஜோடியாக நடித்தனர். 'பந்தபாசம்' படத்தில் சந்திரகாந்த்தா நடித்தார். 'குங்குமம்' படத்தில் சாரதா, விஜயகுமாரி நடித்தார்கள். 'சாந்தி' படத்தில் தேவிகா, விஜயகுமாரி நடித்தார்கள். 'நீலவானம்' படத்தில் தேவிகா, ராஜஸ்ரீ நடித்தார்கள். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் மற்றொரு ஜோடியாக மணிமாலா நடித்தார். 'பாபு' படத்தில் விஜயஸ்ரீயும், 'ஞானஒளி' படத்தில் விஜய நிர்மலாவும் நடித்தனர். 'சிவந்தமண்', 'தங்கை' படங்களில் ஜோடியாக நடித்தவர் காஞ்சனா. சிவாஜியின் ஸ்பெஷல் ஜோடி உஷா நந்தினி. 'பெண்ணுஞ்சல்', 'கௌரவம்', ராஜபார்ட் ரங்கதுரை','மனிதனும் தெய்வமகலாம்', 'என்னைப்போல் ஒருவன்' போன்ற படங்களில் இவர் நடித்தார். 'உனக்காக நான்', 'தியாகம்', ராஜரிஷி', 'ராஜராஜசோழன்', 'ஆனந்தகண்ணீர்', 'நெஞ்சங்கள்', 'குடும்பம் ஒரு கோயில்', 'படையப்பா' போன்ற படங்களில் லட்சுமி ஜோடியாக நடித்தார்.
வாணிஸ்ரீ - வாணிஸ்ரீ - சிவாஜி ஜோடி எழுபதுகளில் பெரிதும் பேசப்பட்ட ஜோடி. வசந்த மாளிகையில் இருவரின் கெமிஸ்ட்ரியும் இப்போது நரை திரை கண்ட மூத்த இளைஞர்களாலும் மறக்க முடியாதது. 'சிவகாமியின் செல்வன்', 'வாணி ராணி', 'ரோஜாவின் ராஜா', ' இளைய தலைமுறை', 'புண்ணிய பூமி', 'நல்லதொரு குடும்பம்', 'நிறைகுடம்', 'உயர்ந்த மனிதன்' என அத்தனைப் படங்களில் முத்திரைப் பதித்த ஜோடி இது.
புன்னகை அரசி கே ஆர் விஜயா, நடிகர் திலகத்துடன் முதன்முதலாக ஜோடியாக இணைந்து நடித்த படம் 'செல்வம்'. தொடர்ந்து 'நெஞ்சிருக்கும் வரை', 'தங்கை', 'பாலாடை', ' திருவருட்செல்வர்', 'இருமலர்கள்', 'ஊட்டிவரை உறவு', ' திருடன்', ' எதிரொலி', ' ராமன் எத்தனைராமனடி', ' சொர்க்கம்', ' தவப்புதல்வன்', 'பாரதவிலாஸ்' 'கிரகப்பிரவேசம்', 'நாம்பிறந்த மண்', 'ஜெனரல் சக்கரவர்த்தி', 'ஜஸ்டிஸ் கோபிநாத்', 'நான்வாழவைப்பேன்', ' ரிஷிமூலம்', 'தர்மராஜா', 'சத்தியசுந்தரம்', 'கல்தூண்', 'ஹிட்லர் உமாநாத்', ' ஊருக்கு ஒரு பிள்ளை', 'ஊரும் உறவும்', 'நீதிபதி', 'மிருதங்க சக்கரவர்த்தி', 'தராசு', 'சிம்ம சொப்பனம்', ' சாதனை', 'கிருஷ்ணன் வந்தான்', 'திரிசூலம்' போன்ற அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்து பத்மினிக்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பொருத்தமான ஜோடி என்று அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றவர் கே.ஆர். விஜயா.
ஜெயலலிதா, எம்ஜிஆரால் தமிழ் சினிமாவில் பெரிய இடம் பெற்ற ஜெயலலிதாவும் சிவாஜி கணேசனின் பிரபல நாயகிகளுள் ஒருவர். கலாட்டா கல்யாணம் படத்தில்தான் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்தனர். தொடர்ந்து, குருதட்சணை, தெய்வமகன், ராஜா, தர்மம் எங்கே, நீதி, தாய், அன்பைத் தேடி, சித்ரா பௌர்ணமி, சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டிணமா, எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் சிவாஜின் ராசியான ஜோடியாக பேசப்பட்டார்.
மஞ்சுளா - எம்ஜிஆரால் அறிமுகம் செய்யப்பட்ட மஞ்சுளா, சிவாஜிக்கும் ஏழெட்டு படங்களில் ஜோடி போட்டு சிறந்த நடிகையாகத் திகழ்ந்தார். 'எங்கள் தங்க ராஜா', 'என்மகன்', ' அவன்தான் மனிதன்', 'அன்பே ஆருயிரே', 'டாக்டர்சிவா', 'உத்தமன்', 'சத்தியம்' ஆகிய படங்களில் மஞ்சுளாவும் சிவாஜியும் ஜோடி சேர்ந்தனர். 'சிவகாமியின் செல்வன்' படத்தில் இரண்டாவது சிவாஜிக்கு ஜோடியாக நடிகை லதா நடித்தார்.
கேஆர் விஜயாவுக்குப் பிறகு சிவாஜிக்கு பாந்தமான ஜோடியாகப் பேசப்பட்டவர் சுஜாதா. 'அண்ணன் ஒரு கோயில்', 'அந்தமான் காதலி', 'வா கண்ணா வா', 'கருடா சௌக்கியமா', 'தீர்ப்பு', பரீட்சைக்கு நேரமாச்சு', 'சந்திப்பு', 'சுமங்கலி', ' திருப்பம்', 'நேர்மை', ' மண்ணுக்குள் வைரம்' போன்ற படங்களில் ஜோடியாக நடித்து சிறப்புச் சேர்த்தார். 'கவரிமான்' படத்தில் துரோகம் செய்யும் மனைவியாக நடிகை பிரமிளா துணிச்சலாக நடித்தார். 'மோகனப் புன்னகை' படத்தில் ஜெயபாரதி, அனுராதா, பத்மப்பிரியா இணைந்து நடித்தார்கள்.
'வைரநெஞ்சம்' படத்தில் பத்மப்பிரியா ஜோடியாக நடித்தார். ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா அன்றைய நாட்களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி 'விஸ்வரூபம்', 'சந்திப்பு' படங்களிலும், ஸ்ரீப்ரியா த்ரிசூலம், வசந்தத்தில் ஓர் நாள், 'வெற்றிக்கு ஒருவன்', 'எமனுக்கு எமன்', 'ரத்தபாசம்', 'அமரகாவியம்', 'லாரி டிரைவர்', ராஜாக்கண்ணு', 'மாடிவீட்டு ஏழை', ஊருக்கு ஒரு பிள்ளை', 'சங்கிலி', நட்சத்திரம் போன்ற படங்களில் சிவாஜியின் ஜோடியாக நடித்தனர். அம்பிகா - ராதா எண்பதுகளில் வெற்றி நாயகிகளாகத் திகழ்ந்த அம்பிகாவும் ராதாவும் கூட சிவாஜியுடன் ஜோடி சேர்ந்து அவருக்கு இணையாக நடித்தனர். அம்பிகா வாழ்க்கை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். முதல் மரியாதை படத்தில் ராதாவின் நடிப்பைச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. தாம்பத்தியம்' படத்தில் அம்பிகா, ராதா இருவருமே சிவாஜியுடன் இணைந்து நடித்தார்கள். ராதிகா 'என் ஆசை ராசாவே' படத்தில் ராதிகாவும், 'இருமேதைகள்' படத்தில் சரிதாவும் ஜோடியாக நடித்தனர். 'பைலட் பிரேம்நாத்' படத்தில் இலங்கை நடிகை மாலினி பொன்சேகா ஜோடியாக நடித்தார்.
வீரபாண்டியன்' படத்தில் சுமித்ராவும், 'முதல் மரியாதை,' சின்னமருமகள்', 'படிக்காதவன்', 'என்தமிழ் என்மக்கள்' போன்ற படங்களில் வடிவுக்கரசியும் சிவாஜியின் மனைவி பாத்திரத்தில் நடித்தனர். எத்தனையோ சிவாஜி படங்களில் காமெடி வேடத்தில் நடித்த மனோரமா, 'ஞானப் பறவை' என்ற ஒரே படத்தில் சிவாஜியின் ஜோடியாக நடித்தார். 'இமயம்', 'நாங்கள்' படத்தில் ஸ்ரீவித்யா ஜோடியாக நடித்தார். சிவாஜி கடைசியாக நடித்த படம் படையப்பா. அதில் அவரது ஜோடி லட்சுமி. நூற்றாண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில், சிவாஜி களத்திலிருந்தபோது உச்சம் தொட்ட நடிகைகள் அனைவருமே அவருக்கு ஜோடியாக நடித்தவர்களே. அந்தளவிற்கு அனைவருடனும் இணைந்து நடித்து சாதனைப் படைத்தவர் நடிகர் திலகம்!
(படித்ததில் ரசித்த ஒரு பதிவு...இதில் விடுபட்ட கதாநாயகிகளும் இருக்கலாம்...குறிப்பிடுங்களேன்..)
Thanks Singaravelu Balasubramanian
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி தொடர்கிறது...
இராமேஸ்வரம் சிவாஜி மன்றம் சார்பாக அனாதை இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மலிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...cf&oe=5EDEFB0C
Thanks John John
திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை சிவாஜி மன்றத்தின் சார்பில் 10 குடும்பங்கள் ளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள் அனுப்பர்பாளையம் புதூர் சந்தை கடை வீதியில் எங்கள் அகில இந்திய சிவாஜி மன்ற மாநில தலைவர் தளபதி G.ராம்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 10.த்துஏண்டி கேப் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது இதில் அகில இந்திய சிவாஜி மன்றம் மாநில செயற்குழு உறுப்பினர் சன் G.ராமலிங்கம் கணேசன் திருப்பூர் வடக்கு மாவட்டம் தலைமை சிவாஜி பொதுச் பாசமலர் R.பாண்டியன் ஆகியோர் வழங்கினர் வாழ்க சிவாஜியின் புகழ்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...32&oe=5EDEFB54https://scontent.fyto1-2.fna.fbcdn.n...57&oe=5EDD6B02https://scontent.fyto1-2.fna.fbcdn.n...44&oe=5EDD5BC8
Thanks Sun Ramalingam