தாங்கள் கூறுவது உண்மைதான் சுகராம் சார். கோவை ராயலில் உரிமைக்குரல் திரைக்காவியத்தைத் தொடர்ந்து நினைத்ததை முடிப்பவன். நினைத்ததை முடிப்பவனைத் தொடர்ந்து நம்நாடு. நம்நாடு திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது தாய் சொல்லைத்தட்டாதே. அதற்குப் பக்கத்து திரையரங்கிலே இந்த வாரம் குமரிக்கோட்டம் திரைக்காவியம். அதனால் நீங்கள் சொல்வதுபோல் நிகழ வாய்ப்பிருக்கிறது. அதேபோல் கடந்த 18.09.2013 அன்று சேலம் அலங்கார் திரையரங்கில் நாடோடி மன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. அதே நேரம் அதன் அருகே உள்ள திரையரங்கில் ரிக்ஷாக்காரன் திரைப்படம் திரையிட்டார்கள். அப்படியிருந்தும் வருகின்ற 08.09.2013 அன்று 25வது நாள் வெற்றிவிழா காண்கிறார் வீராங்கன். இந்நிலையில், இக்குறையைத் தீர்க்க திரைப்பட விநியோகஸ்தர்கள் தங்களுக்குள் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் அல்லது அந்தந்த ஊர்களில் இருக்கும் எம்ஜிஆர் ரசிகர்கள் இது பற்றி விநியோகஸ்தர்களிடம் பேசலாம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

