http://i68.tinypic.com/a9tpgm.jpg
Printable View
நாளை இரவு 7 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.( புகழ் ) பல்லாண்டு வாழ்க
திரைப்படம் சன் லைப் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகிறது .
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
http://i65.tinypic.com/w2k0n6.jpg
1988ஆம் ஆண்டு தன்னந்தனியனாக எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் ராமாவரம் தோட்டத்தை அடைந்தேன். அந்தத் தருணத்தில் காவலர்கள் விரட்டிய போது தற்செயலாக அங்கு வந்த அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் (அப்போது தான் பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து திரும்பி இருந்தார்கள்) என்னை அன்புடன் விசாரித்து ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று (படுக்கை அறை உட்பட ) ஒவ்வொரு அறையிலும் எம்.ஜி.ஆருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். வரவேற்பு அறையில் இங்கு தான் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட சம்பவம் நடந்தது. இங்கு தான் தன் தாய் தந்தையர் மற்றும் அண்ணா அவர்களின் படங்களை வணங்குவார்கள். தனது படுக்கையைக் கூட அடுத்தவர்கள் விரித்துக் கொடுத்தால் அவருக்குப் பிடிக்காது. உடல் மிகவும் நலிவுற்ற காலங்களில் கூட அவரே தான் அந்த வேலைகளைச் செய்வார். அவர் லிப்ட்டை பயன்படுத்தியதே இல்லை. அவர் இறந்த பின்னர் அவரது உடலை கீழே கொண்டு வரத்தான் அந்த லிப்ட் பயன்படுத்தப்பட்டது. கால்நடைகள் மீது அவர் அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்று சுமார் 1 மணி நேரம் ராமாவரம் தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார். எளிமையான அதே சமயத்தில் அழகான அந்த இல்லம் இன்னமும் என் கண் முன்னர் காட்சியளிக்கிறது. அந்தக் காலத்தில் என்னிடம் புகைப்படக் கருவிகள் எதுவும் இல்லாத சூழலில் அவற்றை என்னால் படம் பிடிக்க இயலவில்லை. இன்றைய வெள்ளம் பாதித்த ராமாவரம் தோட்டத்தின் வீடியோ தொகுப்பினைப் பார்க்கும் போது தாங்க இயலவில்லை. மன்னாதி மன்னன் இதழின் ஆசிரியர் விஜயகுமார் அவர்கள் இருந்திருந்தால் அந்த மாத இதழ் மூலம் பல அபூர்வமான புகைப்படங்கள், எம்.ஜி.ஆர் கைப்பட எழுதிய டைரிக் குறிப்புகள் போன்ற பல அபூர்வமான தகவல்கள் அனைவருக்கும் பயன்தரும் வகையில் பதிவேற்றப்பட்டிருக்கும். இன்று யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டதை நினைக்கும் போது துக்கம் தாங்க இயலவில்லை. மக்கள் திலகத்தின் அரிய ஆவணங்கள் வைத்திருப்போர் யாராக இருந்தாலும் சரி அவற்றை டிஜிட்டல் முறையில் பதிவேற்றி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பாதுகாக்க வேண்டுகிறேன். மன்னாதி மன்னன் விஜய் டிவியில் நடிகன் குரல் இதழ்களை பாதுகாத்து வைத்திருப்பதாகவும், கோடி கொடுப்பினும் அவற்றைக் கொடேன் என்றும் கூறிய நண்பர் (அவரது முகவரி தெரியாததால் திரியின் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.)தனது பொக்கிஷங்களைப் பதிவேற்றி தனக்கு மட்டுமல்லாமல் எல்லோரும் எம்ஜி.ஆரின் பெருமைகளை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அருமை நண்பர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களும், அருமை நண்பர் சி.எஸ்.குமார் அவர்களும் ஏராளமான எம்.ஜி.ஆர் தொடர்பான பொக்கிஷங்களை வைத்திருக்கும் மியூசியமாக உள்ளார்கள். அவர்களிடமிருந்து அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.
MAALAI MURASU
http://i160.photobucket.com/albums/t...psb3pcj3va.jpg