கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் - 01
காதல், சோகம், கொள்கை, தத்துவம் போன்ற நிலைகளில் மட்டுமல்லாமல் கதைக்களத்திற்கேற்ற சூழ்நிலைக்கேற்றவாறு இடம் பெற்ற பாடல்களிலும் நடிகர் திலகத்தின் தனித்துவம் காணப்படும். அப்படிப்பட்ட பாடல்களை இங்கே காண்போம். தொடக்கமாக பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இடம் பெற்ற யாரோ நீயும் நானும் யாரோ என்ற அருமையான பாடல். கதைப்படி நடிகர் திலகம் ஏற்ற பாத்திரம் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப் பட்டு வளர்க்கப்பட்டதாகும். வளர்ந்து பெரியவனாகிய பின் தாய்க்கும் மகனுக்கும் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்து விடுகிறது என்றாலும் சூழ்நிலை இருவரையும் சேர முடியாமல் தடுக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் கதாபாத்திரம் ஒரு பிறந்த நாள் விழாவில் தாயிடம் தன் நிலைமையை உணர்த்துவதாக கதைக்களம். இப்பாடலில் இளையாராஜாவின் சிறந்த மெட்டமைப்பில் கண்ணதாசனின் வரிகள் மிகவும் உள்ளார்ந்த பொருளடக்கியவை. நடிகர் திலகம் தன் நடிப்பால் அந்த சூழ்நிலையை அப்படியே நம் கண்முன் நிறுத்தும் இப்பாடல், துரதிர்ஷ்டவசமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுவதில்லை.
இதோ அப்பாடல்
http://www.youtube.com/watch?v=g_-lZNLOa5Q
அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்