Welcome back to Murali Sir.
Printable View
Welcome back to Murali Sir.
திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
முதலில் நீ..........ண்ட இடைவெளிக்கு பிறகு திரிக்கு திரும்பியிருக்கும் தங்களை வருக வருக என வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த திரியை நடிகர் திலகம் அவர்களின் வசூல் சாதனை மூலமாக எனக்கு அறிமுகம் செய்து வைத்த தாங்கள், இத்தனை நாள் இங்கு இல்லாதது என்னை போன்றோருக்கு பெருங்குறைதான். கண்ணை பறிகொடுத்தவன் மீண்டும் பார்வை பெற்றது போல பொலிவுடன் இருக்கிறது தங்கள் வருகை. வாருங்கள் மேலும் பல பதிவுகளை தாருங்கள் எனக்கூறி விடைப் பெற்றுக் கொள்கிறேன்.
நட்புடன்.
இன்று மாலை 4.30 மணிக்கு நடிகர் திலகத்தின் நீதியின் நிழல் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
முரளி சார்,
நாட்டாமை இல்லாமல் இருபத்தெட்டு பட்டியும் சோர்ந்து கிடந்தது.(இந்த நாட்டாமை கிட்டே தீர்ப்பை மாத்தி சொல்லுன்னு கேக்க முடியாது. சொன்னதே மாத்தி சொன்னதுதாண்டா வெண்ணை என்று பதில் அளிப்பார்.) வருக! வருக!
பம்மலார் சார்,
புண்ணிய பூமி-அபூர்வ பதிவு. nativity , relevence , contemporary appeal , எதுவுமே இல்லாத பழைய cult classic . மற்றது இரு துருவம்.
அன்புள்ள அப்பா- பழகிய வசனகர்த்தா தவிர்த்திருந்தால் ,இன்னொரு அபியும் நானும் வந்திருக்கும்.இளைத்த நடிகர் திலகம் cute ஆக இருப்பார்.
சரித்திர நாயகன்- NTR நமது NT மீது உள்ள மதிப்பினால் எடுத்தது.
எல்லாமே அபூர்வமான பதிவுகள். ராஜா, கோல்ட் மெடல், Surprise பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
Parthasaarathi , கிருஷ்ணா ஆகியோர் பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்.
Joe -சரித்திரத்தில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். சிங்கப்பூர் NT இன்னிசை இரவில் வாணிஸ்ரீ பேசியதை தரவிறக்கம் செய்து உதவுவீர்களா?
A very, very nice suggestion, mr_karthik..!
Accepted Whole-heartedly..!
இன்றைய [17.6.2012 : ஞாயிறு] 'தினத்தந்தி' நாளிதழின் சென்னைப் பதிப்பில்
வெளியாகியுள்ள "சொர்க்கம்" மறுவெளியீடு பற்றிய விளம்பரம்:
http://i1110.photobucket.com/albums/...GEDC5931-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.