-
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 1
நடிகர் திலகத்தின் 104வது காவியம்
திருவிளையாடல் [முதல் வெளியீட்டுத் தேதி : 31.7.1965]
முதல் வெளியீட்டில் வெள்ளிவிழாக் கொண்டாடிய திரைக்காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(கோவை) : 7.7.1988
http://i1110.photobucket.com/albums/...GEDC6134-1.jpg
முதல் வெளியீட்டில், கோவை 'ராஜா' திரையரங்கில், 132 நாட்கள் ஓடி மெகா வெற்றி..!
பக்தியுடன்,
பம்மலார்.
-
சிவாஜி சினிமா : பத்திரிகை விமர்சனம் : 2
பொக்கிஷாதி பொக்கிஷம்
தெனாலிராமன்
கல்கி : 1956
இந்த மிகமிக அரிய ஆவணப்பதிவை ரசிக சாதனையாளர்
ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு Dedicate செய்கிறேன்..!
http://i1110.photobucket.com/albums/...GEDC6135-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6136-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
அன்பு பம்மலார் சார்,
அமர தீபம் நூறாவது நாள் விளம்பரம் இதுவரை எவரும் இணையத்தில் கண்டதில்லை. (இணையத்தில் என்ன? வேறு எங்கும் பெரும்பாலும் பார்த்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு) இப்போது தங்கள் புண்ணியத்தில் அது சாத்தியமாயிற்று. நூறு நாட்களைத் தாண்டி 125- நாட்கள். மிகப் பெரிய வெற்றி. குடத்திலிட்ட விளக்காய் இருந்த அமரதீபம் வெற்றி திருவண்ணாமலை தீபமாய் பிரகாசித்து வெற்றி வெளிச்சத்தை தங்கள் பதிவின் மூலம் அள்ளித் தந்து விட்டது. கோடானு கோடி நன்றிகள் தங்களுக்கு அதற்காக. இதிலிருந்து தெரிவது என்ன? எவருடைய திறமைகளையும் எவராலும் மறைத்து விட முடியாது. குடத்து விளக்கு குன்றின் மேலிட்ட விளக்காய் பிரகாசிப்பதை தடுக்க வல்லவர் உண்டோ?
அடியேனின் குங்குமம் பத்திரிக்கையின் பதிவிற்கு தாங்கள் எனக்களித்த குங்குமம் டைட்டில் வீடியோ சாங் நச்சென்ற 'கும் கும்'பரிசு. அதற்காக என் மனமுவந்த நன்றிகள்.
'ஆண்டவன் கட்டளை' இந்தியன் மூவி நியூஸ் விமர்சனம் நடுநிலை பிறழாத நல்ல விமர்சனம். அபூர்வ பத்திரிக்கையின் அருமையான விமர்சனத்தை தந்தமைக்கு தங்க நன்றிகள்.
Digital கர்ணனின் அசுர வெற்றியை கொண்டாடிய பக்தகோடிகளின் வெற்றி முழக்கங்கள் பஞ்சாமிர்தம் போங்கள்.
அமெரிக்காவில் "கர்ணன்" மாலை மலர் செய்தி குதூகலிக்கச் செய்கிறது.
கார்த்திக் சாருக்கான தங்களின் நன்றிப் பதிவில் அழகை அருகே வரவழைத்ததற்கு நன்றிகள்.
திருவிளையாடல் மறு வெளியீட்டு விளம்பரம் மறு வெளியீட்டு விளம்பரம் மாதிரியே தெரியவில்லை முதல் வெளியீட்டு விளம்பரம் போல ஜொலிக்கிறது. சமீபத்திய தங்கள் பதிவுகளில் என்னை உச்ச உற்சாகத்திற்கு கொண்டு சென்றது தெனாலி ராமன் பதிவு. அதுவும் எனக்காக எனும் போது இன்னும் பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். என் உள்ளத்தை மிகவும் கொள்ளை கொண்ட படமல்லவா! பாத்திரம் அறிந்து பாயாசம் அளித்திருக்கிறீர்களோ!
கல்கியின் விமர்சனத்தைப் படித்து களிப்புற்றேன். நடிகர் திலகத்தின் மேல் சந்தேகமா? படலாமா? சந்தேகம் கொண்டோரை ஸ்தம்பிக்க வைக்க வல்லவர் அவர் ஒருவர் தானே! விமர்சனம் மிக்க அருமை. மிகப் பெரிய வெற்றியை ஈட்டியிருக்க வேண்டிய காவியம். அத்துணை சிரமமான பாத்திரத்தை ப்பூ... என்று ஊதித் தள்ளுவார் பாருங்கள். விகடமும் செய்ய வேண்டும்... விவேகமாகவும் காட்ட வேண்டும்... வேறு எவர் இருக்கிறார்கள்? அதுவும் அத்துணை சிறு வயதில். குருவி தலையில் பனங்காயை வைத்தார்கள். அது பரங்கி மலையையே சர்வ சாதரணமாக சுமந்தது.
இப்படி ஒரு அற்புத விமர்சனத்தை பதிப்பித்து அதகளப் படுத்தியிருக்கிறீர்கள். ம்... நமக்கு இப்படிப்பட்ட பதிவின் அருமை பெருமையெல்லாம் தெரிகிறது... இதற்கெல்லாம் நன்றி கூறாமல் இருந்தால் செய்நன்றி கொன்றவனாகி விட மாட்டேனா? அருமைப் பதிவுகளுக்காக ஆழ்ந்த நன்றிகளை மனதின் அடித்தளத்திலிருந்து தெரிவித்துக் கொள்கிறேன்.
-
-
டியர் சந்திரசேகரன் சார்,
நெல்லை சீமையிலே சும்மா நெத்தியடி அடித்திருக்கிறீர்கள். நற்பணிகளின் நாயகராய் நல்ல விஷயங்களை அற்புதமாய் பேரவையினர் துணை கொண்டு செய்து வருவது நமது தெய்வத்திற்கு செய்யும் அற்புதத் தொண்டு. பணி சிறக்கட்டும்...புகழ் பரவட்டும். நன்றி! வாழ்த்துக்கள்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
புதுவை அரசாங்கம் அனுசரித்த தலைவர் நினைவு நாளின் நிழற்படங்கள் அளித்து அசத்தியுள்ளீர்கள்.
திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பாக வெளியிடப் பட்டுள்ள சுவரொட்டி படு பாந்தம்.
'
கர்ணன்'விழாக்கள் காட்சிகளின் ஒளித்தகடு விவரம் அளித்தமைக்கு மிக்க நன்றி!
தகவல் களஞ்சியமாக updates நியூஸ் ஐ சுடச் சுட அள்ளி வழங்கி திரியைத் தித்திப்பாக்குகிறீர்கள். அனைத்துப் பதிவுகளுக்கும் ஆனந்த நன்றிகள்.
-
என்னதான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் ஒரு ஆவணம் தரும் உணர்வே தனி. இதன் பின் உள்ள உழைப்பு ,மேனகெடேல் இவை அசாத்திய ஒரு தனி மனித அர்பணிப்பு. பம்மலார், வாசு, வேந்தர் ஆகியோருக்கு என் வணக்கங்கள்.
ஒரு பழைய ஆவணம் ரசிப்பது ஒரு மோனலிசா,தாஜ் மஹால் அழகை பருகி கால யந்திரத்தில் பின்நோக்கி சென்று nastalgic உணர்வை அடையும் பரவசம். அதற்கு regress ஆகும் மனநிலை வேண்டும். அது சிவாஜி பக்தர்களின் சொத்து. ஏனென்றால் NT எல்லா காலங்களிலும் நடிப்பால் பயணித்தவர். நாம் அவர் கூட பயணித்தவர்கள்.
அதனால்தானோ என்னவோ, இந்த புதிய திரி ,என் பரவச நிலையை மேன்மையாக்கும் ஒன்றாகும்.
-
டியர் கார்த்திக் சார்,
தங்கள் உளமார்ந்த பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி! எதிரிகளை தாங்கள் 'கைமா' பண்ணுவதற்கு நாங்கள் தான் தங்களுக்கு கைம்மாறு செய்ய வேண்டும். நல்லதை எங்கிருந்தாலும் வந்து போற்றும் தங்கள் விசால மனமும், குணமும் தங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும்.
-
புதிய திரியைப் பாராட்டும் எங்கள் அன்பு பழைய எ(திரி)யே! பார்த்து... பார்த்து... பரவச நிலையில் மயக்கம் போட்டு விழுந்து விடப் போகிறீர்கள். எஸ்.ஏ. நடராஜன் ஆகாமல் இருந்தால் சரி!
-
வாராய் நீ வாராய் என்று தள்ளிக் கொண்டு நாம் போக அழைக்க வில்லை... வந்தவர்கள் வாழ்க, மற்றவர்கள் வருக... என்பதே நம் கொள்கை... என்று பழைய [எ]திரியிடம் சொல்லாமல் சொன்ன வாசு சார், சூப்பர் ....