இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகத்தின் ஆவணங்கள் , நிழற்படங்களின் பதிவுகள் அருமை .
Printable View
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகத்தின் ஆவணங்கள் , நிழற்படங்களின் பதிவுகள் அருமை .
Courtesy; denmark ramesh
எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் சலிப்பே வராது பொன்மனச்செம்மலை பூவிழிக் கண்ணனை நிருத்திய நாயகர் அமரர் எம்ஜிஆர் தன்னை.
ஏற்கனவே பலதடவைகள் அவரைப்பற்றி எழுதியிருந்தாலும் அவரின் பெருமைகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபி போன்றது அள்ளி அள்ளி அவரின் புகழை பருகி மயங்குவது எம் ஜி ஆர் இரசிகர்களுக்கு என்றும் திகட்டாத தேன் போன்றதே, அவரின் உள்ளத்து இனிமை நற்செயல்களே மக்களை அவர்பால் மயங்க வைத்தது. அதன் பிறகே அழகு ஆட்டம் பாட்டு எல்லாம் ,http://i46.tinypic.com/20it9h3.png
அவரைப்போலவே அவர் காலத்தில் அழகிய நாயகர்கள் இருந்தார்கள் ஆடினார்கள் பாடினார்கள் யாராலும் அமரர் எம் ஜி ஆர் போல் ஆக முடியவில்லை அது தர்மத்தின் தீர்ப்பு காரணம் இயல்பாகவே உள்ளத்தில் நல்ல உள்ளம் அவருக்கு அமைந்துவிட்டதே.
வீராதி வீரர்களை கலை விற்பன்னர்களை அறிவுச்சுடர்களை ஆற்றல் மிகு மறவர்களை தமிழுலகம் சந்தித்திருக்கின்றது. வாடிய பயிர்களைக்கண்டு வாடினேன் என்ற வள்ளலாரின் மனிதாபிமானத்தை ஒத்து தனது உழைப்பில் ஈட்டிய செல்வங்கள் அத்தனையையும் வாடியவர்களுக்கு வழங்கி வள்ளல் என்று மக்களால் போற்றப்பட்டவர், மனிதாபிமானத்துக்கு மகத்தானவர் என்று எம்ஜிஆர் மூலமே
தமிழுலகம் கண்டு கொண்டது என்றால் மறுப்பவர்களுண்டோ மேதினியில்.
இலங்கையில் 1983 ம் ஆண்டு தமிழர்கள் அரசியல் இன்னல்களை சந்தித்து உயிர்களை உடமைகளை இழந்து வாடி வருந்தியபோது பெருந் தொகைப்பணத்தை ஈழத்தமிழர் துயர் துடைக்க வழங்கிய வள்ளல் மேலும் பல சந்தர்ப்பங்களில் தனது பாரிய பொருளாதார உதவிகளை மக்களுக்காக பாதுகாப்புக்காக நல்கினார்.
அந்த நல்ல உள்ளம் கொண்ட செம்மல் நம்மைவிட்டு நெடுந்தூரம் சென்றது தமிழர்களின் பெருவாழ்வுக்கு வந்து விழுந்த தடைக்கல்லே . வெறுமனே திரையில் பணத்துக்காக ஒரு கொள்கையின்றி நெறி முறையின்றி நடித்து விட்டு வண்டி நகர்த்தியவரல்ல அமரர் எம் ஜி ஆர்,
ஆடும் கூத்தும் பாடும் பாட்டும் நாட்டு மக்களுக்கு நல்ல படிப்பினையை தரவேண்டும் என்று அதற்காகவே வல்லுனர்களை வைத்து வாழ்க்கையின் நெறிமுறைகளை பண்பாடுகளை கலாச்சார பழக்க வழக்கங்களை மக்கள் இறுகப்பற்றும்படியாக தனது படங்களில் அதிகமாக இருக்கச்செய்தார் மட்டுமின்றி தானும் நீதி நேர்மை தவறாமல் இரக்கம் அன்பு பாசம் கொண்ட உத்தமத் தலைவனாய் வாழ்ந்து காட்டினார்.
எம் ஜிஆரை அவர் வாழுங்காலத்தில் அவமரியாதையாக பேசியவர்களே இன்று அவரை போற்றி மகிழ்கின்றார்கள் என்பதிலிருந்தே அந்த மாமனிதரின் தரம் நிரந்தரமான உயர்ந்த இரகம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
காட்சிகளில் விறுவிறுப்பு ,சவால்களை எதிர்கொண்டு வெல்லும் பாங்கு, சூழ்ச்சி
களை முறியடிக்கும் புத்திசாலித்தனம் , கருத்தாழம் கொண்ட நல்லியல்பை வளர்க்கும் பாடல்கள் , ஆபத்துக்களில் பிறரை காக்கும் வண்ணம் வீரமாய் போராடுங்குணம் போன்ற விடயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் எம் ஜி ஆர் படத்தை கலாரசிகர்கள் பார்க்காமல் இருப்பார்களா. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அவரின் புகழ் குன்றாத ஒளிவிளக்காய் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் வாழ்க அவர் புகழ்.
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி…
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்சென்று சேர்வதில்லை …..
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டமாகாது தம்பி…
பட்டோடு பருத்தியை பின்னியெடுத்து உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தார்…
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நம் நாடே இருக்குது தம்பி….
எழுத்தாக்கம்
ம.இரமேசு
Movie:-Aananda Jothi
Cast:-M.G.R, Devika, M.R.Radha, Asokan, Manorama, P.S.Veerappa, Javar Seetharaman And Many Other’s…
Music:-M.S.Visvanathan & Raamamoorththy
Produced:-P.S.Veerappa
Directed:-V.N.Reddy & A.S.A.Samy
ஆனந்த ஜோதி
http://i50.tinypic.com/3478iv6.jpg
தேனினும் இனிய கானங்கள்...
1.ஒருதாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம்..
2.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே...
3.நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா....
4.கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா???
5.காலமகள் கண்திறப்பான் சின்னைய்யா-நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா...
6.பலப் பல பல ரகமா இருக்கு பூட்டு-அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கல கலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு நான் கச்சிதமாத் திறந்து திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு....
7.பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா....
நடிக+நடிகைகள்:-
மக்கள்திலகம்.
எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம் எம்.ஜி.ஆர்தேவிகா, "உலகநாயகன்"கமல்ஹாசன், "நடிகவேள்"எம்.ஆர்.ராதா, "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி புகழ்"பி.எஸ்.வீரப்பா, "பத்மஸ்ரீ"மனோரமா, எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.ஏ.அசோகன், எஸ்.வி.ராமதாஸ், "ஜாவர்"சீதாராமன், எஸ்.எம்.திருப்பதிசாமி, "ஜெமினி"பாலு, "கரிக்கோல்"ராஜ், ஜெய சக்திவேல், அழகிரிசாமி, தர்மலிங்கம், நடராஜன், கோலப்பன், ஆர்.எம்.சேதுபதி, வி.பி.எஸ்.மணி, கிட்டான், கஜகர்ணம், ராமசாமி, சங்கர்-ராஜா, சந்திரன், கேசவன், ஆர்.விஸ்வநாதன் மற்றும் பலர்.
இசையமைப்பு:-"மெல்லிசை மன்னர்கள்"எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்கள்.
பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன் அவர்கள்.
தயாரிப்பு:-பி.எஸ்.வீரப்பா அவர்கள்.
கதை+வசனம்:-"ஜாவர்"சீதாராமன் அவர்கள்.
இயக்கம்:-வி.என்.ரெட்டி & ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோர்.
THANKS JAI SIR
http://i47.tinypic.com/jj8sxj.jpg
ARTICLE FROM -KANNADA MAGAZINE . OCT 2012
ஒரு நடிகனுக்கு நல்ல குரல் வளமும் , முகவெட்டும் எடுத்து கொண்ட வேடத்தில் சிறப்பாக நடித்து ,அந்த கதா பாத்திரமாக மாறி ரசிகர்களை திருப்தி பட ,பொது மக்கள் மற்றும் பத்திரிக்கை விமர்சனங்கள் பாராட்ட ,தன்னை நிலை நிறுத்தி கொள்ள ஒரு நடிகன் எவ்வளவு போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது .
இந்திய திரை படத்தில் பல மொழிகளில் பல்வேறு நடிகர்கள் தோன்றி சாதனை புரிந்துள்ளார்கள் .
குறிப்பாக தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் எனப்படும்
MGR -சிவாஜி
NTR - நாகேஸ்வரராவ்
ராஜ்குமார் - உதயகுமார்
சத்யன் - பிரேம்நசீர் .
தமிழ் ,தெலுங்கு .கன்னடம் , மலையாளம் 4 மொழி நாயகர்கள் உருவாக்கிய சாதனை -இமாலய சாதனை .
சிவாஜி - கோல்டன் வாய்ஸ் - நடிப்பு பல்கலைகழகம் .
NTR - இன்றளவும் கிருஷ்ணனாக மக்கள் மனதில் வாழ்பவர் .
நாகேஸ்வரராவ் - ஆந்திரா சிவாஜி .
ராஜ்குமார் - மென்மையான ,அமைதியான ,நடிகர்
உதயகுமார் - கன்னட சிவாஜி
சத்யன் - பிரேம் - இருவரும் யதார்த்தமான நடிகர்கள் .
MGR -
புரியாத புதிர் -கத்தி சண்டை - ராஜா வேடம் - மன்னர் ஆட்சி -
என்று பல மன்னர்கள் வேடம் பூண்டாலும் இறுதியில் உண்மையான மன்னனாக தமிழ் நாட்டு மக்களின் உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இன்றும் வாழ்ந்து வருவது அவரது புகழ் உச்சத்தை எட்டியது ஒரு உலக சாதனை .
நன்றி
பிரபல கன்னட இதழின் மொழி மாற்றம்
esvee
rare still from 'raja desingu' shooting sopt.
M.T, Kannadhasan, SSR.
http://i1087.photobucket.com/albums/...-2/ra_0003.jpg
KAMAL IN ANANDHA JOTHI -1963
http://i47.tinypic.com/qq3ja1.png
நடிகை சரோஜா தேவி - about kamal
அழகான என் மகன் கமல். மிடுக்கான தோற்றம் கொண்ட ஒரு ஹீரோ. அவர் நடித்த குணா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
எங்களை போன்ற நடிகைகள் எல்லாம் மேக்கப் போட்டுக்கொண்டு முகத்தை அழகாக்கி கொள்வோம். ஆனால் அழகான கமல் மேக்கப் போட்டு, இருக்கிற அழகையும் கெடுத்துக் கொண்டு நடித்த படம் குணா. அதேபோல் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த அப்பு கேரக்டரும் ரொம்ப பிடிக்கும்.
பார்த்தால் பசி தீரும் படத்தில் நான் சிறுவனாக பார்த்த கமல் இப்போது தன் நடிப்பால் எங்கேயோ போய்விட்டார். ஆனால் இன்றும் அதே குணத்துடன் இருக்கிறார். அவருக்கு நடிப்பு புதிது அல்ல. அது அவரின் உடல் மற்றும் மனசோடு கலந்துவிட்டது.
கமல் சிறுவனாக இருக்கும் போது நடிகர் திலகத்துடன் நடித்த போது, அவரது நடிப்பு கமலுக்கும் வந்தது. என் அன்பு தெய்வம் எம்ஜிஆருடன் நடித்தபோது அவருடைய நல்லா குணம் வந்தது.
அவர் எப்போதும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஒரு தாய் ஸ்தானத்தில் ஆண்டவனை வேண்டுகிறேன். அவரது வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து நல்லா பார்த்துக்கணும் என கேட்டு கொள்கிறேன் என்றார்.
7-11-2012
நம்நாடு http://i49.tinypic.com/29wledd.jpg 43 ஆண்டு நிறைவு நாள்
உரிமைக்குரல் 38 ஆண்டு நிறைவு நாள் http://i49.tinypic.com/ra89kl.jpg.
புகழ் பெற்ற நிறுவனங்கள் தயாரித்த நம்நாடு மற்றும் உரிமைக்குரல் இரண்டு படங்களும் மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படைப்புகளாகும் .
நம்நாடு 21 வரங்களும் , உரிமைக்குரல் 200 நாட்கள் ஓடி வசூலில் மிக பெரிய சாதனை புரிந்தது .
மறு வெளியீட்டில் இந்த இரண்டு படங்களும் பல ஊர்களில் பல வருடங்களில் தொடர்ந்து ஓடி நல்ல வசூல் பெற்று சாதனை புரிந்தது .
Urimaikural(1974)
http://padamhosting.com/out.php/i74917_ukural1.pnghttp://padamhosting.com/out.php/i74916_ukural2.png
http://padamhosting.com/out.php/i74914_ukural4.pnghttp://padamhosting.com/out.php/i74913_ukural5.png
http://padamhosting.com/out.php/i74911_ukural7.pnghttp://padamhosting.com/out.php/i74910_ukural8.png
http://padamhosting.com/out.php/i74909_ukural9.pnghttp://padamhosting.com/out.php/i74912_ukural6.png
Nadikar thilagaththirku pidiththa adimaip pen.
http://hillpost.in/wp-content/upload...n-1024x764.jpg
One of my most favorite MGR song from "Urimai Kural". MGR facial expression is excellent and one of rare MGR songs not covering his face in the wall or some where else. Most elegant music and of course TMS voice, I can keep hearing this song many times. My most favorite song
http://www.youtube.com/watch?v=vcLDgzp6qKI.
Cheers,
Sathish
வினோத் சார்,
எம்.ஜி.ஆர் - கமல் இணைந்த புகைப்படங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
Ooruku Uzhaipavan has been released in Coimbatore Royal Theatre on 6.11.2012
Waiting for Diwali release of any MGR movie in Kovai
Hello TFML,
the interview pages of Kumari Kamala and Muktha Srinivasan are very nice.
we need this kind of informative posts more.
thanks for sharing.
MGR + Nambiar -K P Ramakrishnan
http://i871.photobucket.com/albums/a...RNAMBIYAR1.jpghttp://i871.photobucket.com/albums/a...RNAMBIYAR2.jpg
http://i871.photobucket.com/albums/a...AMBIYAR4-1.gif
http://i871.photobucket.com/albums/a...RNAMBIYAR3.jpg
http://i871.photobucket.com/albums/a...RNAMBIYAR5.jpg
Regards
MAKKAL THILAGAM MGR IN THAI SOLLAI THATTADHE -
TO DAY - 7-11-1961 - 51 YEARS TODAY .
http://i46.tinypic.com/2w3t35x.jpg