Nice Vinod Sir
Printable View
மக்கள் திலகம் அவர்களின் ''ராஜராஜன் '' இன்று [26.4.1957- 26-4-2013] 57வது ஆண்டு உதயம் .
மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுவேட காட்சிகள் - சண்டை காட்சிகள் - இனிய பாடல்கள் என்று பிரமாதமாக பேசப்பட்ட படம் .
எம்.ஜி.ஆர் மக்கள் திலகம் என்றும் புரட்சி நடிகர் என்றும் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்த காலங்களில் வெளிவந்த திரைப்படம் ராஜராஜன். அக்கால வழக்கை ஒட்டி, அரச பரம்பரையர் கதையாக அமைந்திருந்த இத்திரைப்படத்தில் அவருடன் பத்மினி, லலிதா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் ஆகியோரும் நடித்திருந்தனர்.
சிறந்த சண்டைக் காட்சிகளும், பத்மினியின் அற்புத நடனமும் கொண்ட இது வெற்றிப் படமாக அமைந்தது.
http://i42.tinypic.com/2d8qteh.jpg
தேஜஸ் விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக் குறிப்பிட முடியுமா? ஜனவஸ்யம், ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரைக் சொல்ல முடியுமா? ஐம்பது, அறுபது-களில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகரிடமும் எந்தக் காலத்திலும் காணவே முடியாதது.
நன்றி..காட்சிப்பிழை என்ற தளத்திலிருந்து ஒரு சிறு கட்டுரை..
http://i43.tinypic.com/2lsi736.jpg
உங்கள் பார்வை ஒன்றே போதும்..பணிக்காக கோடி பேருண்டு..
குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள் ..எங்கள் குரு பார்வை பட்டால் கோடான கோடி புண்ணியம்..உலகத்தமிழ் மக்களுக்கு
"any other films in 1969" means including Adimaippen?.. ok. (because it was also in 1969, one among the just 2 released)
"aadhaaram", "aadaharam" are just in words, but not published here.
But Sivandha Mann 100th Day Dinathandhi ad (with 9 theatres in TN), and 50th Day ad (with theatre list) available in Nadigarthilagam Shivaji thread (Part 9).
But I never seen Namnaadu 100th days ad in anywhere here. Even if you dont have, the hubber who become "ungal veetu pillai" now will definitely have them, I strongly hope he will publish. Otherwise thsese statistics are just in words without proof.
http://i41.tinypic.com/15wf9c5.jpg
இயற்கை நடிகர் எங்கள் இறைவன் எம்ஜிஆர் ..மாட்டுக்கார வேலன் என்றால் அவர் அதன் அசலாகிவிடுவார்...வக்கீல் ரகு என்றால் வாதாடும் வழக்கறிஞர் ஆகிவிடுவார்.அதுவே அவர் சிறப்பு..மிகையில்லாத நடிப்பால் அனைவரையும் மிஞ்சிய எங்கள் தலைவன் புகழ் இந்தா வானும் மண்ணும் உள்ளவரையும் மங்காது.
http://i43.tinypic.com/nv2g5.jpg
[SIZE=2]எங்கள் அடிமைப்பெண் இந்த காலம் வரை நிகழ்த்திய சாதனையை இதுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை..மேலே பதியப்பட்ட ஸ்டில்கள் ஸ்டில் ஞானத்திடம் இருந்து பெறப்பட்டது..பெங்களூருவில் அவர் எடுத்து வந்த ஸ்டில்களை பெறுவதில் எம்ஜிஆர் ரசிகர்களுக்கிடையில் போட்டி...இதுவரை தமிழ்நாட்டில் அதிக புகைப்படங்களும்..ஸ்டில்களும் விற்கப்பட்ட ஒரே நடிகர் எங்கள் தலைவர்தான்....தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிக ரசிகர்களைக்கொண்ட ஒரே நடிகர் புரட்சிநடிகர்தான். அந்த ரசிகர்கள்தான் பின்னாளில் அவருடைய தொண்டரானார்கள்..அந்த தொண்டர்கள் தங்கள் தலைவனை ஆட்சிகட்டிலில் அமர்த்தி மகிழ்ந்தார்கள்..அந்த தொண்டர்கள் இந்நாளில் நமது தெய்வத்தின் பக்தர்களானார்கள்..[/SIZE]
கோவை -டிலைட் அரங்கில் மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை
தகவலுக்கு நன்றி திரு ரவி சார் .
மக்கள் திலகத்தின் அசத்தலான படங்கள் பதிவிட்ட திரு கலியபெருமாள் சார் அவர்களுக்கு நன்றி .
எம்ஜியார் என்ற தனி மனிதனின் புகழும் , செல்வாக்கும் ,ஓர் இரவில் வந்தது அல்ல . 11 ஆண்டுகள் கடுமையான உழைப்பில் 1947ல் துவங்கி 1977 வரை
அவரது படங்கள்
அவரது கட்சி பணிகள்
அவரது மனித நேயம்
அவரது கொடை தன்மை
அவரது கொள்கை
மக்களிடையே நேரிடை தொடர்பு
கோடிக்கணக்கான உலக ரசிகர்கள்
இதுதான் அவரது சொத்து .
1977- உலக அரசியல் அரங்கில் மகத்தான சக்தியாக 1987 வரை
ஆட்சியில் ஆளுமை .
சொந்த வாழ்க்கையில் மூன்று முறை மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு திரும்பியவர் .
நம்மைவிட்டு திரை உலகில் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்தாலும்
நம்மை விட்டு பூவுலகில் பிரிந்து 25 ஆண்டுகள் ஆனாலும்
அவரது நினைவுகள் என்றென்றும் நம்மோடுதான் வாழும்.
அவரது படங்கள் - நமக்கு ஒரு பாடம் .
அவரது நடிப்பு - நம்முடைய விழிகளுக்கும் ,செவிக்கும் ,இதயத்திற்கும் தித்திக்கும் விருந்து .
மக்கள் திலகம்
சாதனை படைத்தார்
சரித்திரம் ஆனார் .
அறிவு கண்களுக்கு நிச்சயம் தெரியும் .
ஆத்திரம் - கோபம் - இயலாமை - வருத்தம் -பொறாமை
சகிப்புத்தன்மை இல்லாமை - நிராசை -எரிச்சல் -ஆணவம்
படித்திருந்தும் படியாமை - அறியாமை - கல்லாமை
இந்த எதிர்மறை சிந்தனைகள் - ஒருவர் புகழை உயர்த்த உதவாது .
எத்திக்கும் புகழ் பரப்பி எக்காலமும் நிகரிலை என முழங்கி,
என் படம் இதுவாக இருக்க கூடாதா என
எல்லா நடிகரையும் ஏங்க வைத்த
எங்கள் தெய்வம் எம்ஜிஆர் நடித்த வெள்ளிவிழா காவியம்
எங்க வீட்டுப்பிள்ளை கோவையில் வெளியாகுதென
எம்செவிக்கு தித்திக்கும் செய்தி தந்த திருவாளர்
எங்கள் திருப்பூர் ரவிச்சந்திரன் வாழ்க...வாழ்க..
Dear Mr. Adhiram,
First of all, I pity on you. My message is not furnished fully while replying with quote, by you. You yourself edit my message and ask for details.
I had very evidently stated that In Trichy District, our beloved God MGR Starred movie ‘ NAM NAADU ’ had created a new record in running 50 days, even in 11 small towns. We do not have any documentation for the film “Adimaippen” in terms of similar Record, in Tiruchy District. That is why it was mentioned very clearly “no other film in the year 1969 set such new record” in Tiruchy District.
When any News is published in one magazine, in the year 1969, there should have been counter statement against such information, if it is false. Perhaps you may not be aware of existence of Magazines, at that time. For your kind information, there were magazines / fortnightly issues, (in the year 1969) in support of late Respectable Sivaji Ganesan, viz. “Mathi Oli” (with Editor as Shanmugam), “Cinema Star (with Editor as Rajan) and “Tamil Cinema” (with Editor as A. Kareem). In the absence of any dispute over such full proof news, it can be construed that the message published, is Right.
I did not mention that the film “Sivantha Mann” is a flop movie and seek details of its running.
This Makkal Thilagam Thread is going on, in a smooth manner with excellent understanding between the Hubbers and with the strength of viewers. It is you to create confusion amongst the Hubbers, Viewers and instigating other Sivaji Fans unnecessarily.
Whoever turns to be ‘OUR VEETTU PILLAI’ will always have warm welcome and with good reception in the Platform of MGR Devotees and Fans.
All the Hubbers in Makkal Thilagam MGR Thread knows very well that you post in different names such as “Sharadha” ‘’Karthick”, “Kalnayak”, “Vankv alias Vanaja”. It is most unfortunate to note, today, that the post made in the name of “Vankv alias Vanaja” was deleted because of usage of Unparliamantary words in the Posting.
You always seek Proof for every thing but you do not want to show your separate identity and try to make others as ‘FOOLS’ to believe the different names.
An Appeal to all the Hubbers of MGR Devotees / Fans / Supporters / Sympathizers: Let us, henceforth, ignore such malevolent postings and not wasting our time in replying.
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
"நம் நாடு" பட சாதனைகள், தொடர்கிறது :
1. மறு வெளியீட்டில், 01-03-1985 அன்று "ஸ்டார் " மற்றும் "நடராஜ்" ஆகிய திரை அரங்குகளில் திரையிடப்பட்ட "நம் நாடு" சுமார் 3 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.
2. அந்த 1985ம் வருடத்திலேயே தமிழகமெங்கும் சுமார் 300 திரை அரங்குகளுக்கும் மேலாக, "நம் நாடு" திரைப்படம் வெற்றி உலா வந்து, ஒரு வசூல் புரட்சியை ஏற்படுத்தியது.
3. 1988ல்; மீண்டும் சினிமாஸ்கோப் முறையில், சென்னை நாகேஷ், முரளி கிருஷ்ணா உட்பட பல குளிர் சாதன வசதி கொண்ட திரை அரங்குகளில் வெளியிடப்பட்டு மகத்தான சாதனை புரிந்தது.
4. மீண்டும் 1991ல் திவ்யா பிலிம்ஸ் (கர்ணன் பட வெளியீட்டாளர்) சார்பில், "நம் நாடு" திரைப்படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் ஏரியாக்களில் 150 அரங்குகளுக்கும் மேல் வெளியிடப்பட்டது. சென்னை மற்றும் புறநகரில் மட்டும் - அலங்கார் (பழைய குளோப் தியேட்டர்),
ஸ்ரீ பிருந்தா, சங்கம், கமலா, முரளிகிருஷ்ணா, நாகேஷ், புவனேஸ்வரி, பாரத், மஹாராணி, கபாலி, காமதேனு உட்பட 40 திரை அரங்குகளில் ஷிப்டிங் முறையில் வாரம் தோறும் ஓடியது.
5. சென்னை அலங்கார் மற்றும் மகாராணி அரங்குகளில், "நம் நாடு" திரைப்படம் வெளியிடப்பட்ட போது, அதற்கு முன் திரையிடப்பட்ட "வசந்த மாளிகை" பட ஒரு வார வசூலை முறையே மூன்று மற்றும் நான்கு நாட்களில் முறியடித்தது.
குறிப்பு : 1969ம் வருடம், சென்னை வானொலி நிலைய விவிதபாரதியின் வர்த்தக ஒலி பரப்பில், பெரும்பாலான நேயர்கள், அஞ்சல் அட்டையின் மூலம், அளித்த வாக்குகள் மூலம், "நம் நாடு" திரைப்படத்தில் இடம் பெற்ற " நினைத்ததை நடத்தியே முடிப்பவன் " என்ற பாடல்தான், முதல் இடத்தை பல முறை தக்க வைத்தது. இரண்டாவதாக, "சிவந்த மண் " திரைப்படத்தில் இடம் பெற்ற " ஒரு ராஜா ராணியிடம்" பாடல் இடம் பெற்றது. இதிலும் சாதனை படைத்து விட்டார் நமது பொன்மனச்செம்மல்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
My Dear Vinoth Sir,
Thanks for your excellent message of posting on our beloved God M.G.R.
I understand that - Your message is meant for those who spread Spurious information.
I fervently hope that atleast in future, people fall in the said category will not indulge in such activities.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G,R.
Engal Iraivan
அருமையான விளக்கம் வினோத் சார்.. தங்களின் கட்டுரை அனைவரின் கண்களையும் திறப்பது உண்மை..சில விவரங்களை சொல்லும்போது அது கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மைகளை அலசி ஆராய்ந்து பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதே சால சிறந்தது என்பதை விளக்கி விட்டீர்கள்..
எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றை மட்டும் சொல்கிறேன்..
தமிழ் திரைப்பட வரலாற்றில்..ஏன் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகர் புரட்சி நடிகர்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை..மேலும் திரைப்பட துறையில் வசூல் சக்ரவர்த்தி என்ற பட்டத்தை பெற்றவரும் எம்ஜிஆர்தான்..திரைப்படம் புதிய வெளியீட்டில் மட்டுமல்லாது அடுத்தடுத்து வெளியீடுகளில் தலைவர் படங்கள் சாதனை செய்ததை யாரும் செய்யவில்லை..அதுமட்டுமல்லாது அவர் திரைப்பட வாழ்க்கையில் முதலிடத்தில் இருந்தநேரத்தில், இரண்டு முறை (ஒரு முறை காலில் அடிபட்டு ஒரு வருட இடைவெளி...1967ல் குண்டடிபட்டது) மிகப்பெரிய விபத்து ஏற்பட்ட போது, இதோடு இவர் சரி என்று அனைவரும் நினைத்தபோது, அவர் மீண்டும் வந்து தன்னுடைய முதல் இடத்திலேதான் இருந்தார்..தான் திரைப்பட துறையில் இருந்த வரை அவர்தான் நம்பர் ஒன்...எதிலும் நம்பர் ஒன்தானே சிறந்தவர்..இந்த சிறிய விஷயம் கூட தெரியவில்லை என்றால் பேசி பயன் என்ன..
நான் புதுச்சேரியை சேர்ந்தவன்..புதுச்சேரியிலும் புதிய வெளியீட்டிலும் மறு வெளியீட்டிலும் தலைவர் படங்கள்தான் சாதனை படைத்துள்ளது.. புதுச்சேரி கந்தன் மற்றும் அஜந்தா திரையரங்குகளில் பழைய திரைப்படங்கள் வெளியிடப்படும்..இப்போது அந்த திரையரங்குகள் இல்லை..அப்போது கூட எம்ஜிஆர் படங்கள் தான் இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள் என் ஒரு மாதம் கூட ஓடியிருக்கிறது..குறிப்பாக பெரிய இடத்து பெண், தாய்க்குப்பின் தாரம், நாடோடி மன்னன், பறக்கும் பாவை, பாசம், உரிமைக்குரல், எங்க வீட்டுபிள்ளை, அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன் மேலும் பட படங்கள் சாதனை படைத்தன...இவற்றில் 1987ம் ஆண்டு அஜந்தா திரையரங்கில் வெளி வந்த தாய்க்குப்பின் தாரம் படைத்த சாதனையை எந்த படமும் இதற்கு முன்னரும் பின்பும் செய்யவில்லை..தொடர்ந்து மூன்று வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக அப்போதே 3 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்து..இணைந்த நான்காவது வாரமாக நவீனாவில் ஓடி மொத்தம் ஒரு மாதம் ஓடிய சாதனையே சாதனைதான்..இதில் என்ன விசேஷம் என்றால் எல்லாமே தினசரி நான்கு காட்சிகள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அல்ல..தானாகவே நிகழ்ந்த சாதனைகள்....சாதனைகள் தொடரும்..
Dear Friends.
Am not sure if this has come already to your notice in Makkal Thilagam Thread....If it has not, then MAYYAM THIRIYIL MUDHAL MURAYAAGA...ENGA VEETU PILLAI THIRAIPADATHIN MALAYAALA VADIVAM - AJAYANUM VIJAYANUM in the year 1976.
Aduthaal Adipaniyum.......! means...anbukku adipanivaen....
This song is our "Naan Aanayittal Adhu Nadandhuvittal" - There is a huge difference between the electrifying performance of MGR & that of a PremNazir...However, we can see many actions ( lifting of hands..etc.,) Mr.Nazir, trying to bring out Makkal Thilagam.
http://www.youtube.com/watch?v=13aOot-X4KA
Another song Neelakarimbin Thoattam maylae Neela Meha kootam - This song is our Naan Maanthoappil Nindrirundhaen Avan Maampazham Vaendum http://www.youtube.com/watch?v=Wzt5CPbFY6Y
அற்புதமான திறனாய்வு வினோத் சார். வாழ்க்கை முழுவதும் போராடி போராடி வெற்றி பெற்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும், உந்துசக்தியாகவும் விளங்கியவர் விளங்குபவர் மக்கள் திலகம் அவர்கள். மனிதன் எவ்விதம் தெய்வமாகலாம் என்பதற்கு நல்லதோர் உதாரணம் எம்.ஜி.ஆர் அவர்களே. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்குப் பெருமை. அவர் வழி நடந்து வாழ்வில் அழியாப் புகழ் பெறுவதே ஒவ்வொரு மனிதனின் உயர்ந்த பட்ச இலக்காக இருக்க முடியும்.
கலியபெருமாள் சார்,
அசத்தலான , அழகான தங்களது பதிவுகளுக்கு நன்றி.
பம்மலார் சார்,
பார்க்கப் பார்க்க பரவசம் அளிக்கும் அற்புதமான தொகுப்பு தங்களது தமிழ்த்திரைக்களஞ்சியம் மக்கக் திலகம் மலர் மாலை-1 . மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல். இதுவரை பார்க்காத பல அரிய படங்கள். எத்தனையோ புத்தகங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட படங்கள் கூட தரமான டிஜிட்டல் பிரிண்ட்டிங்கில் பார்க்கும் போது புதியதாகப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு புகைப்படத்தினைப் பற்றியும் விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் இந்தக் காலதாமதம். மன்னிக்கவும்.
முதல் படம் சதிலீலாவதி தொடங்கி கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அனைத்து திரைப்படங்களிலிருந்தும் (இரண்டு படங்கள் தவிர) தலைவரின் தனி புகைப்படங்களைத் தொகுத்து நேர்த்தியாக வழங்கியுள்ள தங்களது கடின உழைப்புக்கும் கலைத்திறனுக்கும் சபாஷ் . அனைத்து புகைப்படங்களிலும் எனது மனதினை மிகவும் கவர்ந்தது பெற்றால் தான் பிள்ளையா படத்தின் புகைப்படம் தான். அந்தப் புகைப்படம் ஒன்றே ஆயிரம் கதைகளைச் சொல்கிறது. அடுத்த பக்கத்தைப் புரட்ட மனமே வரவில்லை. அவ்வளவு அழகு. குழந்தையின் அழகோடு போட்டி போடும் மக்கள் திலகத்தின் அழகு. கள்ளமில்லாச் சிரிப்பு . மனதைவிட்டு என்றும் அகலாது. அடுத்து கலங்கரை விளக்கம் படத்தில் அழகோவியத்தின் அருகில் உயிரோவியமாய் மக்கள் திலகம் அமர்ந்திருக்கும் காட்சி. இதுவரை பார்க்காதது. பார்க்கப் பார்க்க பரவசமளிப்பது. அடுத்து அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் அழகுக் கோலம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புகைப்படத்தினைப் பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுத்த தங்களுக்கு பல்லாயிரம் வணக்கங்கள். மலைக்கள்ளனின் மாறுவேடக்காட்சியை புதுப்படத்தின் புகைப்படம் போல பளபளக்கும் மெருகுடன் பதிவிட்டமைக்குப் பாராட்டுகள். நாடோடி மன்னன் திரைப்படம் என்றாலே நமக்கு ஞாபகம் வரும் வழக்கமான புகைப்படங்களுக்கு மாறாக வித்தியாசமான புகைப்படம் தந்தமைக்குப் பாராட்டுக்கள். நாடோடி படத்தில் நவரசம் ததும்பும் முகபாவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள். நவரத்தினம் படத்தில் தலைவர் பிலியட்ஸ் விளையாடும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தாழம் நிறைந்த தங்களது தலையங்கம். இப்படி எத்தனை பாராட்டுக்கள் சொன்னாலும் தகும். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
இப்படி ஓர் அருமையான புத்தகத்தை வெளியிட்ட தங்களுக்கும் அற்புதமான புகைப்படங்களை அளித்த திரு.ஞானம் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த வினோத் சார் அவர்களுக்கும், இந்நூல் நல்ல முறையில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற தோன்றாத் துணையாக இருந்த அத்துணை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் நன்றி.
http://i39.tinypic.com/5a3z29.jpg
பாரத் பட்டம் பெற்ற விழாவின் போது தெலுங்கு நடிகர் சலம் மற்றும் இசைக்குயில் சுசிலா ஆகியோருடன்
http://i43.tinypic.com/14uxuhe.jpg
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பிற்காக டோக்கியோ சென்றபோது அளிக்கப்பட்ட வரவேற்பு
Yes, Ajayanum Vijayanum was released in Ega Theater. I saw this film in Ega. It was a hit in Kerala and had one weeks' run in Chennai. Generally only Av and images about MT are being upload in this Thread so that is why we were not bothered about the malayalam version of "Enga Veetu Pillai". Further, MT devotees never want to respond/compare, unless provoked, his films with others. Because everyone have their own way of approach. Prem Nazir was popularly known are "Kerala MGR" like Rajkumar "Kannada MGR" NTR "Telugu MGR" Foenseka "Ceylon MGR". Prem Nazir was very kind person and helped many.
Nevertheless, thanks for the Video.
இன்றைய தலைமுறை மக்களும் தங்கள் அலுவலகத்தில் சோர்வு இன்றி தெம்புடன் பணியாற்ற மக்கள் திலகத்தின் பாடல்களை பாடி மகிழும் அருமையான வீடியோ தொகுப்பு .
http://youtu.be/QTD9C5q1AvY
நம் மக்கள் திலகத்தின் பாடல்கள் அலுவலகம் மட்டுமல்லாமல் அந்நிய மண்ணில் வசிக்கும் இந்தியர்களின் உள்ளங்களில் அவரின் பாடலை ஆடிப்பாடி அனுபவிக்கும் காட்சியினை காணீர் .
http://youtu.be/vId3RjkSBKQ
மிகவும் அருமையான படம் ஜெய்சங்கர் சார்
1979.....திரு k.a. கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக மந்திரியாக பதவி ஏற்றவுடன் அவரை இருக்கையில் அமரசெய்த காட்சி .
உடன் இருப்போர் திரு சோமசுந்தரம் மற்றும் திரு நாஞ்சில் மனோகரன் .
1976ல் புரட்சிதலைவர் அவர்கள் அண்ணா திமுக கொடியினை தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கையில் பச்சை குத்திக்கொள்ள சொல்லியபோது திரு நாஞ்சிலாரும்அண்ணா திமுக கொடியினை தந்து கையில் பச்சை குத்தி .
கொண்டார் .நாஞ்சிலார் கையில் அதை காணலாம் .
டியர் வினோத் சார்..எப்படி சார் இப்படியெல்லாம் வீடியோ பதிவு பண்றீங்க..உங்களுக்கு எங்கே கிடைக்குது..நம் தெய்வத்தின் கீதங்கள் அயல் நாட்டினரையும் எப்படி ஈர்க்கிறது என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி..அவர்களின் முகத்தில் தெரியும் பூரிப்பு எத்தனை கோடி பணத்தினாலும் கிடைக்காது..மரணத்தின் விளிம்பிற்கு செல்லும் மனிதனையும், விரக்தியின் எல்லைக்கு செல்லும் மனிதர்களையும் மீட்டு வரும் ஒரே கீதம் தலைவரின் கீதம்..அந்த பாடலுக்குதான் அந்த சக்தி உள்ளது..ஏன் என்றால் தலைவரின் பாடல்கள் அவராலே பார்த்து ஒவ்வொரு வரிகளாக செதுக்கப்பட்டது..எந்த காலத்திற்கும் ஏற்றாற்போல் அமைக்கப்பட்ட அமரத்துவம் பெற்ற பாடல்கள் அவை..எதிர்கால சந்ததியினரின் ரசனையையும் வாழ்க்கையையும் அறிந்த தீர்க்கதரிசி அவர்..அதனால்தான் அவரது பாடல் கட்சி பாகுபாடின்றி அனைவரின் மொபைல் ரிங் டோனாக உள்ளது..தமிழகத்தில் ஏன் உலகத்தமிழர்களின் அதிக ரிங் டோனாக உள்ள பாடல் நமது தெய்வத்தின் பாடல்கள்தான் என்று சொல்வதில் நாம் பெருமை கொள்வோம்..
Courtesy- madam vijayalakshmi - from net
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது
மக்களால் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லை யென்று சொல்லாமல் வழங்கியது சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து மக்களின் மனங்களில் இடம்பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு அதனாலேயே மறக்க முடியாத மாமனிதராக திகழ்கிறார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்! என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?
அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் வேதனைகள் எத்தனை!அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் நீந்திய நெருப்பு ஆறுகள் எத்தனை!அவர் ஏறி இறங்கிய இமயக் கொடுமுடிகள் எத்தனை! அவர் தாண்டி வந்த சஹாராப் பாலைவனங்கள் தாம் எத்தனை! எத்தனை!
அண்ணா திரா விட முன்னேற்றக்கழகம் ஒருமாபெரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி மிக்க அரசியல் கட்சி என்பதை அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள, அண்ணா தி.மு.க. அடைந்துள்ள முன்னேற்றம், கண்டுள்ள விரைவான வளர்ச்சி, அது ஈட்டியுள்ள வெற்றிகள் ஆகியனவெல்லாம் ஏதோ திடீரென்று கிட்டியவை என்று இனியும் கருத முடியாது. அதன் நிலையான தன்மையைப் புறக்கணித்து விடவும் முடியாது! என்பதை உணர்த்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
எல்லோரும் உலகில் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், சாகிறார்கள், அது போல எத்தனையோ தலைவர்கள் உருவாகிறார்கள். ஆனால் வாழும் போது அவர்களை வாழ்த்தும் சமுதாயம், அவர்கள் இறந்த பிறகு அவர்களை முற்றிலுமாக மறந்து விடுகிறது. காரணம் அவர்கள் ஆற்றிய சேவை போற்றப்படும் வகையில் இல்லாமல் அவர்கள் இறந்தவுடன் மறக்கப்படுகிறது.
வெகு சிலர் மட்டும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் மறக்கப் ;படுவதில்லை, என்றென்றும் போற்றப்படுகிறார்கள். புகழப்படுகிறார்கள். அந்த வகையில ;காலத்தால் அழிக்க முடியாத மாமனிதராக திகழ்பவர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர் மறையவில்லை, மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகம் உள்ளவும் நிச்சயமாக மக்கள் மனிதில் வாழ்வார். இன்றும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஆனந்தப் பெருக்கோடு கொண்டாடும் அளவிற்கு அவருடைய பெயர் எல்லோருடைய நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவி ரத்த நாளங்களில் இரண்டற கலந்து விட்டது.
அவரின் பொன்மொழிகள் பலருக்கு வேதவாக்காக இருக்கத் செய்தன. அவை நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்! அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாத வர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும். சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம் என்பது தான்.
தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந் தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக் கலையை முழுமையாக பிரயோகித்தார். படத்தின் திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில், காமிரா கோணங்கள், எடிட்டிங், டைரக்ஷன் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். எம்.ஜி.ஆர். ஃபார்முலா என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.
அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார் எம்ஜிஆர். உலகிலேயே, ஒரு சினிமா நடிகர் தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.
பொதுவாக எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும். அவர் கைப்பட்டது விளங்கும் என்பர்கள். அது நூற்றுக்கு நூறு சரியானது. அவர் திரைப்படங்களில் நடித்த நேரத்தில் அவருடைய படங்களில் இடம்பெற்ற எந்த பாடலும் மறக்கப்படவில்லை, மறக்கப்படாது என்றே சொல்லலாம். பாடல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு, இலக்கணம் வகுத்துக் கொடுத்த பாடல்கள் அவை. அவர் சினிமாவில் நடித்தது, அரசியலில் நுழைந்தது.அரசினைப் பிடித்தது அதிலும் முத்திரை பதித்தது எல்லாமே எல்லோருக்கும் படமாகும் சரித்திரம் தான்.
அவர் பசி என்றால் என்னவென்று அனுபவப்பூர்வமாக மழலைப் பருவத்தில் அறிந்து இருந்ததால், தன்னைப் போல குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற உயரிய எண்ணத்தில் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தை அப்போழுது பலரும் கேலி பேசினார்கள், அவர் தன் முயற்சியில் உறுதியாக இருந்தார். அதில் வெற்றியும் பெற்றார் இன்று அவர் வழியை எல்லா மாநிலங்களும் பின்பற்றுகின்றன.
மக்கள் திலகம் எந்த விழாவுக்குச் சென்றாலும், அந்த விழாவில் எதைப் பேசிக் கைத்தட்டல் வாங்கலாம் என்பதைவிட, எந்த மாதிரி இடத்தற்குச் செல்கிறோம், எந்த மாதிரி மக்கள் தன்னைச் சந்திக்க வருவார்கள். அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும். எவ்வளவு பணம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கணக்குப் போட்டுக் கிளம்புவார்.
இப்படி பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, கேட்டவர்க்கு கேட்டதைக்கொடுத்து, கேட்காத வர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த வள்ளலிடம், அன்புத் தாயின் தாயுள்ளத்தைப் போலத்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஏழைகள் மீது தூசு பட்டால் கூட மனம் பொறுக்காதவர். அவரைத் தேடி வந்தவர்களின் துயர் துடைத்ததைவிட, அவர் தேடிப்போய் துயர் துடைத்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 25ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.எத்தனை பேருக்கு தெரியும், அவர் படம் லட்சகணக்கான வீடுகளின் பூஜை அறையில் இருப்பது. உலகிலேயே எம். ஜி. ஆர் ஒருவருக்குதான்.
இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.எம்.ஜி.ஆர் மனித புனிதராக அன்றும் இன்றும் என்றும் முதலிடம் பெற்று மக்கள் மனதில் வாழ்கிறார்.எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்.
இதற்கு சான்றாக அவர் நடித்த படங்கள் எல்லாம் மறு வெளியீட்டில் ரசிகர்கள் அமோகமான பேராதரவு பெற்று வருகிறது. இதனால் அவர் நடித்த படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் நவீன டெக்னிக்கல் மூலம் மெருகூட்டப்பட்டு வெளியிடப் ஆயுத்த பணிகள் தொடங்கிவிட்டது.
கடல் அலைகளின் தாலட்டில் வங்க கடலோரம் துயில் கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தமிழக மக்களின் மகோன்னத பாசத்தையும், ரசிகர்களின் இதயங்களில் கோயில் கொண்டிருக்கும் அவரது புகழையும், பெருமைகளையும் சட்டபேரவையில் பேசிய அத்தனை உறுப்பினர்களும் அவர் ஒரு கோயில் என்று பாராட்டி யுள்ளார்கள். இதுவே மேலும் அவரது புகழ் ஏணியின் உச்சி உலகளவில் பாராட்டப்படுகிறது என்பதை காட்டுகிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு பொதுத்தலைவர் அதனால் எம்.ஜி.ஆர் கோவிலைப் போன்றவர். அவரை யாரும் பின்பற்றி வணங்கலாம்.
. புரட்சித்தலைவரின் வாழ்க்கை ஒரு புரட்சிகர உலக வரலாறாக கருதப்படவேண்டும். எம்ஜிஆரின் வாழ்க்கையை பாடத்திட்டமாகவும், சுயசரிதை நூலாகவும், திரைப்படமாகவும் வெளியீட்டு எம்ஜிஆரின் புகழை மேலும் உயர்ந்திட , எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
-விஜயலட்சுமி
அருமையான பதிவுகள் செய்த திரு ஜெய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..திரு. கங்கை அமரன் அவர்கள் பேட்டி மிக அருமை..எத்தனை பேருக்கு இந்த மனம் வரும்..கையை பார்த்தவுடன் தான் கட்டியிருக்கும் கடிகாரத்தை கொடுப்பதற்கும்..14 பவுன் சங்கிலி போடுவதற்கும்.அதனால்தான் அவர் எட்டாவது வள்ளலாக வாழ்கிறார்..எவரும் எட்ட முடியாத புகழையும் பெற்றார்..இந்த பேரு எவர்க்கும் கிடைக்க வில்லையே..அத்தகைய பேரு பெற்ற பெருமகனாரின் பக்தராய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம்..
courtesy- net
எம்.ஜி.ஆர். என்ற மாமனிதருக்கு தமிழக மக்கள் அளித்த அங்கீகாரம் போல உலகில் வேறு எந்த மக்களும் எந்த ஒரு கலைஞருக்கும் அளித்ததில்லை அளிக்க போவதில்லை என்பது தான் வரலாற்று உண்மை. பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக இருந்து திமுகவின் வளர்ச்சிக்கு உரமாக வேராக இருந்து உழைத்து 1967ல் திமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதில் எம்.ஜி.ஆரின் பங்கு மிக பெரியது
. திரை உலகிலும் அரசியல் உலகிலும் ஒரு சேர பயணித்து அந்த இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் வெற்றி கொடியினை நாட்டிய ஒரு மனிதர் இந்தியாவிலேயே ஏன் இந்த உலகிலேயே எம்.ஜி.ஆர். ஒருவராக தான் இருப்பார். மேலும் அரசியலில் கிடைக்கும் பதவியினை ஒரு பொருட்டாகவே அவர் என்றைக்கும் கருதியதில்லை. 1969ல் அண்ணா மறைந்த பிறகு அவர் நினைத்திருந்தால் அவரே கூட தலைமை பதவிக்கு போட்டியிட்டு இருக்க முடியும் வென்று இருக்க முடியும். ஆனால் அப்பொழுது தான் ஒரு கிங் மேக்கராக இருந்து தன் நண்பருக்கு அந்த பதவியினை பெற்று தந்தார்.
1972ல் அவர் ஒன்றும் அதிமுகவை தானாக தொடங்கவில்லை. அவர் தூக்கி பிடித்த ஏணி படியில் ஏறி உயர சென்ற அதிபுத்திசாலிகளின் நிர்பந்தத்தால் வேறு வழியில்லாமல் அந்த நிலையினை எடுத்தார். அந்த சம்பவத்தை நினைத்து இன்றளவிலும் அந்த அதிபுத்திசாலி நிச்சயமாக வருந்தி கொண்டிருப்பார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் தோல்வி என்ற வார்த்தையினை உச்சரிக்க கூட அவரை தமிழக மக்கள் விட வில்லை. 1980 நாடாளுமன்ற தேர்தல் முடிவு கூட இந்திராவை பிரதமராக்க தானே ஒழிய எம்.ஜி.ஆரை தோற்கடிப்பதற்கு இல்லை என்பதனை அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் உணர்த்தினர்.
அன்பு உள்ளம் கொண்ட எனது அருமை மக்கள்திலகத்தின் பக்தர்களுக்கு எனது முதற்கண் வணக்கம் வேலை பளுவின் காரணமாக திரியில் வர முடியவில்லை அதற்கு முதலில் மன்னிக்கவும்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
திரியில் மிகவும் அருமையான ஐநூறு பதிவுகள் வழங்கிய எனது அருமை நண்பர் திரு புதுச்சேரி கலியபெருமாள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
சென்னையில் மூன்று வாரங்களுக்கு முன்பு கலக்கிய மக்கள்திலகத்தின் திரைப்படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு
http://i44.tinypic.com/n1xbg9.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்