http://i68.tinypic.com/ftfp6q.jpg
Printable View
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் அதிகமாய் உச்சரித்த ஆங்கிலச்சொல் எம்.ஜி .ஆர். ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் 26 அதில் எந்த எழுத்தை வேண்டுமானாலும் மறந்து விடலாம் ஆனால் அந்த மூன்று எழுத்தை மட்டும் மறக்கவே மாட்டார்கள் தமிழ் மக்கள் அதுதான் M G R - CHANDRU-PARIS - PARIS,பிரான்ஸ்
இப்போதும் அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு மிக முக்கிய காரணம் அவர் சிறு கதா பாத்திரங்கள் ஏற்று நடிக்கும் காலத்திலே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தது தான் . தனக்கு சிறு வயதில் சாப்பாட்டிற்கு ஏற்பட்ட கஷ்டம் படிக்கும் வயதில் உள்ள மாணவ சமுதாயத்திற்கு நேர கூடாது என்பதால் பெருந்தலைவரின் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கூடங்கள் விரிவாக்கம் செய்தார். அவர் நடிக்கும் காலத்திலும் அவர் முதல்வராக இருந்த காலத்திலும் ஏழை எளிய மக்களின் துயரை தம்மால் இயன்ற அளவிற்கு துடைக்க முயற்சி மேற்கொண்டார் என்பதை நிச்சயம் தமிழக வரலாறு மறுக்காது . இன்னும் 100 ஆண்டுகாலம் அவர் பெயர் தமிழக திரையுலக மற்றும் அரசியல் உலகில் நீங்காது இருக்கும் . Venkataraman Subramanian - Chennai,இந்தியா
M G R ஒரு சஹாப்தம். யாராலும் வெல்ல முடியாது. இந்த உலகம் உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும். nara simhan - Johannesburg,தென் ஆப்ரிக்கா
மக்கள் திலகம் எம் ஜி ஆர் புகழ் வாழ்க. என்றும் போற்றுதற்குரிய புரட்சி தலைவர் மக்களோடு மக்களாய் ரத்தத்தின் ரத்தமாய் வாழ்ந்து தமிழக முதலவார்கவே மறைந்த ஒரு சகாப்தம். இவரை உருவாக்கிய தமிழ் திரை கலைஞர்களும் என்றும் வாழ்க. சொல்லி கொண்டே போகலாம் . Swamikal PPA - West Coast, CA,யூ.எஸ்.ஏ
தமிழ் சினிமா வரலாற்றில், மக்கள் திலகத்தின் பங்களிப்பு , ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், தனி முத்திரையுடன், ஒளிரும். Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
courtesy - dinamalar.
மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். அவரது மறைவு தினம் டிசம்பர் 24. பல்வேறு பட்ட எதிர்ப்புகளையெல்லாம் துணிந்து எதிர்த்து நின்று வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். அவரது வாழ்க்கை நம்பிக்கையிழந்து, சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கெல்லாம் உற்சாகத்தை, நம்பிக்கையினைக் கொடுக்குமொரு நூல்.
அவரது திரைப்படப் பாடல்களும், படங்களும் மீண்டும் மீண்டும் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தத்துவங்களையே வலியுறுத்தின. அதனால்தான் அவை இன்றும் கேட்கும்பொழுது சோர்ந்து துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஒருவித உத்வேகத்தினை, உற்சாகத்தினைக் கொடுக்கின்றன.
வாழ்வில் அனைத்துச் சவால்களையும் உறுதியாக எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். இருந்தவரையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே தனிக்காட்டு இராஜாவாக இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். இறந்து 28 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது ஆளுமை தமிழ் சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைப் பாதிப்பது ஆச்சரியமானதொன்றல்ல.
courtesy - net
வாத்தியார் பாடசாலையில் கல்வி மூன்றாம் வகுப்புவரையில் படித்திருந்தாலும், வாழ்க்கைப் பள்ளியில் நிறையவே படித்தவர். ஒருவரால் அவரைப் போல் உயர்ந்த நிலைக்கு வர முடியுமென்றால், இறந்த இத்தனை வருடங்களின்பின்னரும் மக்களின் மனதில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க முடியுமென்றால் அது ஒன்றும் சாதாரண விடயமல்ல. மக்களை குண்டடிபட்டுச் சீரழிந்த குரலுடன் வாத்தியார் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற இரண்டு வார்த்தைகள் அசைத்துவிடுவதொன்றும் சாதாரணவிடயமல்ல. நியூயார்க் மருத்துவ நிலையத்தில் இருந்துகொண்டு தேர்தலில் வெல்வதென்பதொன்றும் சாதாரண விடயமல்ல. அவரது சத்துணவுத்திட்டம், இறந்தபின் தன் சொத்துக்களை குருடர், செவிடர் நல்வாழ்வுக்காக ஒதுக்கிய பண்பு, ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் காட்டிய கரிசனை.. இது போன்ற பல விடயங்கள் முக்கியமானவை. அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வாழ்வின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவையெல்லாம் முக்கியமானவை.
courtesy - net
என்ன சொன்னார் எம்ஜிஆர்? புதிய படைப்பாளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், அடுத்த கட்டப் படங்களை உருவாக்குவதில் நாம் கவனமெடுக்க வேண்டும் என்பதே. ஒரு முறை எம்ஜிஆர் அவர்களிடம், உங்களை மாதிரி மக்களுக்கான படங்களை உருவாக்கவே நான் முயற்சித்து வருகிறேன் என்றேன். அதற்கு அவர், அந்தமாதிரி செய்துவிடாதே... நான் உருவாக்கியதைப் போன்ற படங்களை நீயும் ஏன் முயற்சிக்கிறாய்?. ஒரு படிக்கட்டுக்குப் பக்கத்தின் இன்னொரு படிக்கட்டு எதற்கு?. முடிந்தால் அதைவிட உயரத்தில் ஒரு படிக்கட்டை கட்டு என்றார்.
நடிகர் கமல்
நிகழ்வு தொடங்கியதும் முதலாவதாக எனது பெயரை அறிவித்தார்கள்.எல்லோருக்கும் சிறிய அதிர்ச்சி.காரணம் நான் பாடப்போகும் செய்தி பெரியளவில் மற்றவர்களுக்கு போய்ச்சேரவில்லை.நானும் கைகால்கள் பதற மேடையில் ஏறிநின்று பாடினேன்.பாடிக்கொண்டு இருக்கும்போதும், பாடிமுடிந்ததும் ஒரே கைதட்டல்,ஆரவாரம் என மண்டபமே அதிர்ந்தது.இத்தனையும் எனக்கல்ல அந்தப்பாடலுக்கே.ஏனெனில் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியாகி எட்டுத்திக்கிலும்,எல்லோரினதும் வாயிலும் ஒலித்துக்கொண்டிருந்த பாடலிது.இதைவிட சிலவாரங்களுக்கு முன்புதான் இப்பாடல் இடம்பெற்ற படம் வெளியாகி இருந்தது.அந்தப்படத்தை பார்கப்போவோரை விட படம் திரையிடப்பட்ட யாழ்ப்பாணம் ராணி திரைஅரங்கில் காணப்பட்டஉருவப்படங்கள் (கட்அவுட்) பார்க்கவே அதிக கூட்டம் நின்றது. மிக உயரமும்,அழகும் நிறைந்த இது நகருக்குள் நுழைய முன்பே கம்பீரமாக காட்சி அளித்தது.இவ்வளவு முக்கியத்துவம் கொண்டதென்றால் இது யாருடைய படமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.வெற்றியின் அதிபதி கலையுலகில் மக்களை நேசித்த மனித நேயன் இவன் போல் இனி யாருமில்லை என்று தனது செயற்பாடுகளால் உலகுக்கு உணர்த்திய பொன்மனச் செம்மல்,புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அடிமைப்பெண் என்ற படம்தான்.1969ம் ஆண்டில் மிகவும் பரபரப்பாக ஓடிய இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதி திரையிசைத்திலகம் கே வி மகாதேவன் இசையமைக்க கம்பீரக்குரலோன் சௌந்தரராஜன் பாடியுள்ளார்.
courtesy - malarum ninaivugal -நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம் C
ஒருநாள் அன்பே வா செட்டில் mgr இருந்தபோது
யாரோ ஒரு பெரியவர் தரையில் வார்னிஷ் போட்டுக் கொண்டிருந்ததார்
அடிக்கடி அவரையே உற்று பார்த்த mgr நேராக அவரிடம் போய் நீங்க இன்னார்தானே என்று கேட்டதும் அந்த பெரியவர் நெகிழ்ந்து போனார்
ரொம்ப காலத்திற்கு முன்பு ராஜபார்ட் வேடங்கள் போட்டு நடித்தவராம் காலத்தின் கோளாறு காரணமாக செட்டின் கீழே அமர்ந்து வார்னிஷ் போட்டுக்
கொண்டிருந்தார் அவரை எழுப்பி அப்படியே கட்டி அணைத்துகொண்டு தனது பிரத்யேக மேக்கப் அறைக்கு அழைத்து போனார் தனக்கு வந்திருந்த மத்திய உணவை பகிர்ந்து கொண்டார் மறுநாள் முதல் அந்த பெரியவர் வேலைக்கு வரவில்லை mgr ன் பார்வை பட்டுவிட்டதால் அவரது வாழ்கை இனி வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற நிலையை கடந்து விட்டதை நாங்கள் புரிந்து கொண்டோம்
தன்னுடன் எந்த காலத்தில் பணியாற்றியவர்களையும் mgr மறந்ததில்லை
புரட்சி தலைவரை, ஜனவரி 12, 1967 அன்று பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று துப்பாக்கி எடுத்து எடுத்து சுட்டு விட்டார் m.r. ராதா, இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார் மக்கள் திலகம்.
சிகிச்சை முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பியவுடன் முதலில் கலந்து கொண்ட படபிடிப்பு, காவல்காரன் படத்தில் வரும் நினைத்தேன் வந்தாய். .....நூறு வயது டூயட் படக்காட்சி, புரட்சித் தலைவியுடன் இணைந்து பாடிய பாடல்.
இயக்குனர் :ப.நீலகண்டன்
கதை வசனம் :வே. லட்சுமணன்
தயாரிப்பு :r.m.வீரப்பன்
தொண்டையில் குண்டடிப்பட்ட தால் , தலைவரின் குரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் டப்பிங் பேச வைக்கலாம் என எண்ணி , வீரப்பன் தயக்கத்துடன் தலைவரிடம் கேட்டார் ஆனால் பிடிவாதமாக மறுத்து விட்டார். நான் நடிக்கும் எல்லா படங்களிலும் சொந்த குரலிலேயே பேசி நடிக்க விரும்புகிறேன். இப்போது உள்ள குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான்சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன் அதற்கு மேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றார் தன் திரைப்பட வாழ்க்கையில் மக்கள் திலகம் நடித்த மொத்த படங்கள் 136 குண்டடிப்பட்ட பிறகு 10 ஆண்டுகளில் 42 படங்களில் நடித்துள்ளார்.
தலைவர் மருத்துவமனையில் இருந்த நேரம், பொது தேர்தல் வந்தது. திமுக வின் பலமே தலைவர் தான், அண்ணா சொன்னார் ராமச்சந்திரன் குண்டடிப்பட்ட படத்தையும் , உதயசூரியன் சின்னத்தை மட்டுமே போஸ்டராக அடித்து தமிழ்நாடு முழுக்க ஒட்ட சொன்னார்.
அந்த போஸ்டரின் விளைவாக, தீயசக்தி உட்பட அனைவரும் ஜெயித்தார்கள். அண்ணா முதல்வரானார்.
இப்படி கட்சிக்காக உயிரை கொடுத்து உழைத்த தலைவரை, தீயசக்தி கட்சியை விட்டே வெளியேற்றியது. அதன் பலனை நம் இதயதெய்வம் அம்மாவின் மூலமாக தீயசக்தி அனுபவித்து கொண்டிருக்கிறது.
1981ல் எம்.ஜி.அர் முதல்வராக இருந்த போது சட்டசபையில் நடந்த சம்பவம் :-
அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த கலைஞரை பார்த்து அதிமுக அமைச்சர்கள் 'கருணாநிதி' என்று பெயர் சொல்லி அழைத்தனர். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர் தன் அமைச்சர்களை கண்டித்தார்.
"எனக்கும் அவருக்கம் (கருணாநிதி) ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர் எனது 32 ஆண்டு கால நண்பர். நான் திமுகவில் இருந்த போது எனக்கு 3 ஆண்டுகள் தலைவராக இருந்தார். அதனால் அவரை யாரும் பெயர் சொல்லி அழைத்து அவமதிப்பதை நான் விரும்ப மாட்டேன்" என்று கூறினார்
இது தான் எங்கள் புரட்சித்தலைவரின் பொன்னான குணம்
கிருஷ்ணா நதியை தமிழகம் கொண்டுவந்த சாதனை இந்தியாவில் எந்த தலைவராலும் சாதிக்க முடியாத சாதனையை எம் ஜி ஆர் சாதித்தார்
தமிழ் எழுத்துபெரியார் சீர்திருத்தம் கொண்டுவந்து தமிழை கணணியிலும் சிறக்கஂசெய்தார் எம் ஜி ஆர்
ப்ளஸ் டு அறிமுகப்படுத்து பள்ளியிலே மேல் படிப்பை எளிமைபடுத்தினார் எம் ஜி ஆர்
பலகோடி இஞ்சியர்களை உருவாக்கி
தர அண்ணா பல்கலைகழகம் கல்லூரி பலஉருவாகஂ வழி செய்தார் எம் ஜி ஆர்
தன்னிறையு திட்டம் மூலம் கிராமங்களை நகர் ஆக்கினார் எம் ஜி ஆர்
சத்துணவு தந்து தலைமுறை ஆரோக்கிய உடல் கல்வி பெறச்செய்தார் எம் ஜி ஆர்
தொழிலில் தமிழகம் தன்னிறைவு அடையச்செய்தார் எம் ஜி ஆர்
கிராமத்தை அட்டிவதைத்த கிராமஅதிகாரி பதவியை ரத்து செய்தை பாமரர்களும் சமம் ஆகவாழவழி செய்தார் எம் ஜி ஆர்
விலைவாசி பாமரர்களை பாதிக்காமல் நிலையாக இருக்கஂசெய்தார் எம் ஜி ஆர்
எப்பொழுது ஆய்வு நடத்தினாலும் தமிழகத்தை ஆண்டஂமுதல்வர் களில் முதல் இடம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் க்கே
எம் ஜி ஆர் ஆட்சி ஒரு பொற்க்காலஂஆட்சி
1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம். திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் முதல்வர் எம்ஜிஆர்.
அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.
அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.
“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர், அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?
ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார்.
அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
தி நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து. “தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார். ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!
கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை. ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த
பின்னர் 1974 ஆம் ஆண்டு , தேர்தல் பிரச்சாரத்திற்காக பாண்டிச்சேரி மாநிலம் மாஹிக்கு எம்.ஜி.ஆர். சென்றார்.
அங்கு பெரும்பான்மையான மக்கள் மலையாளம்
பேசுபவர்கள். அவர்கள் எம்.ஜி.ஆரிடத்தில்
மலையாளத்தில் பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.
அதற்கு எம்.ஜி.ஆர். "நான் வளர்ந்தது புகழ்பெற்றது என அனைத்துக்குமே காரணம் தமிழ்நாடுதான் எனக்கு தெரிந்தது தமிழ் மட்டுமே. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் பேசும் தமிழில் என் பேச்சைக் கேளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கலைந்து செல்லலாம்". என்றார்.கூட்டதினர் வாயடைத்துப் போய்எம்.ஜி.ஆரின் தமிழ்ப்பேச்சை ரசித்தனர்
courtesy chandran veerasamy
சென்னை கலைவாணர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-6-1970 ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல். ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே. ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ் விழாவில் கலந்து கொண்டார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர். பேசியதாவது :
" இந்த மணவிழா அய்யா முன்னிலையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார்கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது. ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடையாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் ! "
( விடுதலை , 9 - 7 - 2011 )
Chandran Veerasamy's photo.
8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது.முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார்.
இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார். இதை நான் ஜாடையாகக் கவனித்தேன்.
தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது.
ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது.
எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் ‘‘வேட்டைக்காரன்’’ படம் 1964 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ். இந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.
1965 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடித்த வாகினியின் ‘‘எங்க வீட்டுப்பிள்ளை’’ ரிலீஸ். 100 நாட்கள் ஓடியது. அவற்றைத்தொடர்ந்து வரும் 1966 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடிக்கும் தங்கள் ‘‘அன்பே வா’’ படத்தை வெளியிட சகோதரர்கள் விரும்பினர்.
சரவணன் இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘‘நான் ஆணையிட்டால்’’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். அதனால் அவர்கிட்டே இதைப்பத்திப் பேசுங்க என்றார்.அதன்படி சரவணன் ஆர்.எம்.வீ.யிடம் பேசினார். அவர் சம்மதித்து தன் படத்தை தள்ளி வைத்துக்கொண்டார்.
14.1.1966 பொங்கல் நன்னாள். சென்னை மவுண்ட் ரோடில் புகழ் பெற்ற பிரபல ‘காசினோ’ தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஏவி.எம்.மின் ‘‘அன்பே வா’’ ரிலீஸ்.காசினோவில் காலைக்காட்சிக்கே கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு வாரத்திற்கான எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனாலும் தியேட்டரின் முன்னால் கூட்டம் அலைமோதியது.
வழக்கம்போல நான் காலைக்காட்சிக்கே சென்று தியேட்டரின் மேல் மாடி வாயிலுக்கு அருகில் நின்றபடி மக்களோடு சேர்ந்து மக்கள் திலகத்தின் ‘‘அன்பே வா’’வைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது மானேஜர் சங்கர் மேலே ஓடிவந்து என்னிடம், ‘‘எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலிருந்து உங்களுக்கு போன் வந்திருக்கு. சீக்கிரம் வாங்க’’ என்றார். நான் விரைந்து கீழே வந்து சங்கரின் அலுவலக அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த போன் ரிசீவரை எடுத்து ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருந்து எம்.ஜி.ஆரின் அன்றாட உணவுக் கவனிப்பாளரான அண்ணன் ரத்தினம் பேசினார்.
‘‘அண்ணன் (எம்.ஜி.ஆர்.) ஒங்ககிட்டே பேசணுன்னாரு. ஒரு நிமிஷம் இருங்க.’’ இப்போது எம்.ஜி.ஆரின் குரல்:–
எம்.ஜி.ஆர்:– வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். வீட்டுக்குப் போன் பண்ணுனேன். நீங்க காசினோவுக்கு படம் பார்க்கப் போயிருக்கிறதா தங்கச்சி சொன்னுது. அங்கே எப்படி இருக்கு?
நான்:– கைத்தட்டல் ஒலி அதிர்ச்சியிலேயும் விசில் சத்தத்திலேயும் காசினோவே இடிஞ்சி விழுந்திடும் போலருக்கு.
எம்.ஜி.ஆர்:– (சிரித்தபடி) சரி. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்கே வரணும். இன்னிக்கு என்னோட பொங்கல் சாப்பிடுங்க. அதோட ஒரு சந்தோஷமான செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். ஒங்க கார் அங்கே இருக்கா? இல்லே நான் அனுப்பட்டுமா?
நான்:– வேண்டாண்ணே. என் காருலதான் வந்திருக்கேன். இதோ – இப்பவே புறப்படுகிறேன்.
ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லம். என்னை எதிர்பார்த்து வாசல் வராந்தாவில் அண்ணன் உலவிக்கொண்டிருந்தார். பாதம் பணிந்தேன். பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். உள்ளே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சுவையும் சூடுமான சர்க்கரைப்பொங்கல். வெண் பொங்கல். அவியல். மெதுவடை. வகையறாக்களை அம்மா பரிமாறினார்கள். கொண்ட மட்டும் உண்டு மகிழ்ந்தேன்.
வழக்கம்போல பொங்கல் அன்பளிப்பாக நூற்றி ஒரு ரூபாய் வழங்கினார். வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஹாலில் வந்து அமர்ந்தோம்.
(சிவாஜி தீபாவளி, பொங்கல் இரண்டையுமே கொண்டாடுவார். ஆனால் எம்.ஜி.ஆர். பெரியார் – அண்ணா கொள்கையைப் பின்பற்றி பொங்கல் விழாவை மட்டும்தான் கொண்டாடுவார்.)
- நன்றி : ஆரூர்தாஸ் , தினத்தந்தியில்