-
#வாத்தியாரின் #உயரம்
தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயரமாகத் தெரியும் பலர், அருகில் செல்லும்போது உயரம் குறைந்துவிடுவார்கள்...
#அருகில் #சென்று #பழகியபோது #ஒருவரின் #உயரம் #என் #மனதில் #அதிகரித்தது #என்றால் #அது #எம்ஜிஆர் #தான்.
அதற்குக் காரணம், கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே அவருக்கு இருந்தது. அவரோடு பழகியபோது இதை என்னால் உணரமுடிந்தது.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒருநாள் மாலை 7.30 மணிக்கு பத்திரிகையாளர்களை ராமாவரம் தோட்டத்தில் சந்திக்கிறார் என திடீரென்று அழைப்பு வந்தது. அவசரம் அவசரமாக் போனோம்.
ஹாலில் சோஃபாவில் எங்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். 8 மணி ஆனது. ’எல்லா பத்திரிகையில் இருந்தும் நிருபர்கள் வந்தாச்சு. பேட்டியை ஆரம்பிக்கலாமே’ என்றோம்.
எம்ஜிஆர் உடனே ’பேட்டியெல்லாம் ஒண்ணுமில்லை. வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்றார்.
’பேட்டி இல்லையா?’ என்று கேட்டோம்.
‘செய்தி சொல்ல அழைக்கவில்லை. சும்மா சாப்பிடத்தான் உங்களையெல்லாம் அழைத்தேன்’ என்றார் எம்ஜிஆர்.
ஆங்கிலப்பத்திரிகை நிருபர் ஒருவர் கொஞ்சம் கோபமாக, ‘சாப்பிடுறதுக்கா வந்தோம்?’ என்று கேட்டார்.
எம்ஜிஆர் உடனே அருகில் சென்று, அவர் தோளில் கை போட்டு, ‘#ஒருநாள் #உங்களோடு #சாப்பிடணும்ன்னு #ஆசைப்பட்டு #வரச்சொன்னேன். #தப்பா? #வாங்க..#உங்களுக்கு #தனி #டேபிளில் #வெஜிடெரியன் #ஏற்பாடு #பண்ணியிருக்கேன்” எனறார். அவ்வளவுதான். நிருபர் கூல் ஆகிவிட்டார்.
பெரிய டைனிங் டேபிள். சிக்கன், மட்டன், மீன் என ஒவ்வொன்றிலும் பல ஐட்டங்கள். 20 பேர் உட்கார்ந்து சாப்பிட்டோம். எம்ஜிஆரும் சாப்பிட்டுக் கொண்டே, யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று கவனித்து ’அவருக்கு சிக்கன் வை, இவருக்கு மீன் வை’ என்று சொல்லி உபசரித்தார். வியப்பாக இருந்தது. என்னா ஷார்ப். அவருடைய வெற்றியின் ரகசியம் புரிந்தது.
---இரா.குமார் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து............
-
ஈழ விடுதலைக்கு என் தலைவன் mgr எவ்வாறெல்லாம் உதவினார் என்பதைப்பற்றிய கட்டுரை இது. கட்டுமர கைக்கூலிகளே உங்களுக்கும் தெரியவேன்டும் என்பதலால்தான் இந்த பதிவு.
ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு
• விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை - அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.
• சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.
• ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.
• இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயே, “ஈழத் தமிழர்களோ, விடுதலைப் புலிகளோ, தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.
• ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும், பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்து, ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் - எம்.ஜி.ஆர். தான்!
• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர்., தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹாட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தியே, ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது; பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டு, பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.
• உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர்., ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டு, ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் - இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும், திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.
• “திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு அய்ந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி, 12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட குடிக்காமல் 26.9.87 இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் - தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்” என்று தமிழக அரசின் ‘அஞ்சலி’யை திலீபனுக்கு காணிக்கையாக்கியவர் எம்.ஜி.ஆர்.
• அது மட்டுமல்ல; புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 விடுதலைப் புலிகளை போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு ஒப்பந்தங்களுக்கு எதிராக, அவர்களைக் கைது செய்து, அவர்களை சிங்கள ராணுவம் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்துப் போனது; நியாயமாக, ஒப்பந்தத்துக்கு எதிரான இந்த செயலை ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்; வேண்டுமென்றே அதை செய்யவில்லை. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 புலிகள் இயக்கத்தின் மரபுக்கேற்ப, ராணுவத்திடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்று ‘சைனைடு’ அருந்தி பலியானார்கள். அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இந்த செய்தி அறிந்து துடித்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து - உயிரிழந்த மாவீரர்களுக்கு இரங்கல் செய்தியையும், இந்தியாவின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டியும் செய்தி அனுப்பினார். “தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும், இலங்கை கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்திருக்குமானால், அவர்களுள் 12 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்திருக்காது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில், வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது. இந்தக் கடினமான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகளைத் தொடர்ந்து முயற்சிப்பேன். தமிழக அரசு இது பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” (11.10.1987 நாளேடுகள்) - என்று அறிக்கை விட்டு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்மூடித்தனமான ஆதரவைக் காட்ட மாட்டேன் என்று வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.
• புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 போராளிகள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து பிரபாகரனைக் கைது செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டது. ‘பிரபாகரன் கைது’ என்று ஊடகங்கள் வழியாக செய்திகளைப் பரப்பினார்கள். இத்தகவல் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது. விடுதலைப்புலிகளுடன் இந்திய ராணுவம் மோதலுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் இந்திய ராணுவம் அப்படி ஒரு போரை நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில் அ.தி.மு.க. சார்பில், பிரதிநிதியைப் பங்கேற்கச் செய்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து செய்தி அனுப்பினார்.
• விடுதலைப் புலிகளும் இந்திய ராணுவமும் மோதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்என்று தமிழ்நாட்டில் 17.10.1987 அன்று கடையடைப்பு, முழு வேலை நிறுத்தம் நடத்துவது என பழ.நெடுமாறன அவர்கள் முயற்சியால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் முடிவு செய்தது. அப்போது அமெரிக்காவிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். “சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது. இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்” (16.10.1987 நாளேடு செய்திகள்) என்று இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
• 31.10.1987 இல் தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். அடுத்த நான்கு நாட்களிலேயே விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்திய ராணுவம் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கினார். பதறிப் போன இந்திய ஆட்சி, உடனே அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வராமல் தடுப்பதற்கு வெளிநாட்டுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி, எம்.ஜி.ஆரை சந்திக்க வைத்தது. எம்.ஜி.ஆர். தமது எதிர்ப்பு உணர்வுகளை நட்வர்சிங்கிடம் வெளிப்படுத்தினார்.
• உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் - அவரை தழுவிக் கொண்டது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன்தனது இரங்கல் செய்தியில் கூறினார்:
“ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே! தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும், ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” - என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
ஒரு முதல்வராக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை - வெளிப்படுத்திய கொள்கை உறுதியை - அவர் கலைஞரைப் பட்டியல் போட்டுக் காட்டியதில்லை. ஆனால் நன்றியுள்ள தமிழினம் இதை வெளிப்படுத்த வேண்டும்.
ஈழத் தமிழினம் கடும் நெருக்கடியை சந்தித்த காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் செயல்பட்டதையும், இழைத்த துரோகத்தையும் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆம்; அப்போதுதான் எம்.ஜி.ஆர். பெருமை - அருமை புரிகிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு பிரிக்க முடியாத பக்கங்களாகவே இருக்கும்.........
-
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!’ - எம்ஜிஆர் எனும் முதல் ஆக்*ஷன் ஹீரோ, முதல் ஆக்*ஷன் படம்; - ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள்.........
தமிழில் முதல் ஆக்*ஷன் ஹீரோ யார் என்பது தெரியும்தானே? முதல் மாஸ் ஹீரோ யார் என்று அறிவீர்கள்தானே. தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஹீரோ யாராக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டிருக்கிறீர்களே..! இந்த மூன்றுக்குமான பதில் மூன்றெழுத்துதான். எம்.ஜி.ஆர்.
பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்கும் ஹீரோவின் கதை என்றால் ‘அட ராபின்ஹூட் கதை’ என்று இன்றைக்குச் சொல்லுவோம். அப்படியொரு கதையில் எம்ஜிஆர் நடித்துத்தான் மாஸ் அந்தஸ்தைப் பெற்றார். பட்டிதொட்டியெங்கும், எம்ஜிஆரைக் கொண்டு சென்றது அந்தத் திரைப்படம். அதுதான் ‘மலைக்கள்ளன்’. திரையுலகிலும் ரசிகர்களிடமும் ‘மலைக்கள்ளன்’ ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணம். அதற்கு முன்பு ஆக்*ஷன் படங்கள் வந்திருந்தாலும் ‘மலைக்கள்ளன்’ மலைப்பை ஏற்படுத்திய அளவுக்கு அதுவரை எந்தப் படமும் ஏற்படுத்தவில்லை.
Amp
நாமக்கல் ராமலிங்கம் எழுதிய கதை. திரைக்கதை, வசனம் எழுதியவர் மு.கருணாநிதி. படத்தைத் தயாரித்தது பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் எனும் பிரமாண்டமான நிறுவனம். இந்தப் படத்தை இயக்கியவர் ஸ்ரீராமுலு நாயுடு. இவர்தான் படத்தைத் தயாரித்து இயக்கினார். இந்தப் படம் வருவதற்கு முன்பு ‘சந்திரலேகா’ பிரமாண்டப் படம் என்று பேரெடுத்தது. பின்னர், அந்தப் பட்டியலில் பிரமாண்டமாக இணைந்துகொண்டான் ‘மலைக்கள்ளன்’.
இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உண்டு. முதல் பெருமை... தமிழில் முதன்முதலாக ஜனாதிபதி விருது பெற்ற முதல் படம் எனும் கெளரவத்தை ‘மலைக்கள்ளன்’ அடைந்தது. அந்த வருடத்தில், தமிழக அரசும் சிறந்த படமாக அங்கீகரித்து, விருது கொடுத்தது.
மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். ஊர் செட் போட்டிருப்பார்கள். காடு செட் போட்டிருப்பார்கள். காட்டில் மலை செட் போட்டிருப்பார்கள். ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்குச் செல்ல ‘விஞ்ச்’ இருக்கும். அதில் சண்டையும் இருக்கும். ரசிகர்கள், வாய்பிளந்து சண்டைக்காட்சிகளை அதிர்ந்து பார்த்து வியந்தான். மலைத்துப்போனான். திரும்பத் திரும்பப் பார்த்தான்.
எம்ஜிஆருக்கு இது மிக மிக மிக முக்கியமான படம். அதுவரை அரச கதைகளில் நடித்துக் கொண்டிருந்தவர், இந்தப் படத்தில் சமூகக் கதையில் முதன் முதலாக நடித்தார். அதேபோல், கருணாநிதி, அரசியல் அதிகமில்லாமல், சமூக அவலங்களையும் ஏற்றதாழ்வுகளையும் தோலுரிக்கிற வசனங்களை பொளேர் சுளீரென எழுதியிருந்தார். இவையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
இந்தப் படத்தின் வெற்றியையும் தாக்கத்தையும் தொடர்ந்து, இதில் இருந்து ஒவ்வொன்றாக உருவி, ஏராளமான கதைகள் இன்று வரைக்கும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. படம் தொடங்கும் போது ஹீரோ குடும்பத்தைவிட்டுப் பிரிந்து, பிறகு படம் முடியும்போது சேருவான் என்பது மாதிரியான முடிச்சுகள், ‘மலைக்கள்ளன்’ படத்திலிருந்துதான் ஆரம்பித்தன. ’ராபின்ஹூட்’ கதையைச் சொல்லவே வேண்டாம்.
படத்தின் ஒளிப்பதிவு சைலன் போஸ். அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர். அதேபோல், எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இவருக்கு அடுத்து ஜி.ஆர்.ராமநாதன். பிறகு கே.வி.மகாதேவன். அடுத்து மெல்லிசை மன்னர்கள்... என்று பட்டியல் வரும். இதன் ஆரம்பகர்த்தாக்களில் முக்கியமானவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். எல்லாமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
நாயகன் எம்ஜிஆர். நாயகி பானுமதி. எம்ஜிஆருக்கு இணையான கேரக்டர். நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார். பல பாடல்களை இவரே பாடியிருப்பார். அஷ்டாவதானி பானுமதியின் நடிப்பும் மிகப்பெரிய பலம். அதேபோல், எம்ஜி.சக்ரபாணி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இவரும் தன் பங்குக்கு சிறப்பாகவே நடித்திருந்தார். ரஞ்சன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
எம்ஜிஆர், அதற்கு முன்பு வரை இப்படியும் அப்படியுமாக நடித்துக்கொண்டிருந்தார். இந்தப் படம் வந்த பிறகும் கூட சென்டிமெண்ட், குடும்பக் கதைகளில் நடித்திருந்தார். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக, மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் எனும் பாதைக்குள் நுழைந்தார். அப்படிப் புதியபாதை வகுத்துக் கொடுத்தது ’மலைக்கள்ளன்’ என்றுதான் சொல்லவேண்டும்.
இதைக் கொண்டுதான், எம்ஜிஆர் ஃபார்முலா எனும் விஷயத்தை உருவாக்கினார் எம்ஜிஆர். சமூகக் கதைதான் என்றாலும் எம்ஜிஆர் மட்டும் ராஜா காலத்து ஆடைகளை அணிந்திருந்தார் என்பது ஆச்சரியம்தான். அதேபோல, படத்தின் வசனங்களுக்காக தியேட்டர்களில் கைதட்டல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. ’மலைக்கள்ளன்’ குறித்து சொல்லும்போது ஒரு தகவல் சொல்லுவார்கள். ஒன்று... இந்தப் படத்தில் முதலில் சிவாஜிதான் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது இரண்டு படங்களில் நடிக்க ஒத்துக்கொண்டிருந்ததால், அவரால் நடிக்க முடியவில்லை. பிறகு எம்ஜிஆர்தான் நடித்தார். அப்படி ’எம்ஜிஆரைப் போடுங்களேன். நல்லாருக்கும்’ என்று சொன்னவர்... சிவாஜி கணேசன்.
அதேபோல், கருணாநிதி, இந்தப் படத்துக்கு வசனம் எழுத சம்மதிக்கவில்லையாம். காரணம்... எம்ஜிஆர்தான். அப்போது அவர் காங்கிரஸ் அபிமானியாக இருந்தாராம். பிறகுதான் சம்மதித்தார் என்றொரு தகவல் சொல்லுவார்கள்.
முதல் ஜனாதிபதி விருது பெற்ற இந்த ‘மலைக்கள்ளன்’ திரைப்படம், 1954ம் ஆண்டு வெளியானது. இதே ஆண்டில் வேறொரு வகையில், சிறந்த படங்கள் என்று இரண்டு விருதுகள் இரண்டு படங்களுக்குக் கிடைத்தன. ஒன்று... ‘எதிர்பாராதது’. இன்னொன்று... ‘அந்தநாள்’. இரண்டுமே சிவாஜி நடித்த படங்கள்.
‘மலைக்கள்ளன்’ திரைப்படம் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் வெளியான கையுடன், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் தயாரித்து இயக்கினார் ஸ்ரீராமுலு நாயுடு. ஆக, ஐந்து மொழிகளிலுமே வெற்றியைத் திருடிக் கொடுத்தான் ‘மலைக்கள்ளன்’.
’தமிழன் என்றொரு இனமுண்டு’ என்பது உள்ளிட்ட பல பாடல்கள் உள்ளன. முக்கியமாக, இத்தனை காலங்கள் கடந்தும் கூட, இன்றைக்கும் பொருந்துகிற பாடல்... மிகப்பெரிய ஹிட்டடித்த பாடல்... ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...’ பாடல்! படம் திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் 100 நாள், 140 நாள் என ஓடியது.
1954ம் ஆண்டு, ஜூலை மாதம் 22ம் தேதி வெளியானது ‘மலைக்கள்ளன்’. வெளியாகி 66 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், இன்றைக்கும் மலைக்க வைத்துக் கொண்டிருக்கிறான் ‘மலைக்கள்ளன்’.
முதல் ஆக்*ஷன் படம், முதல் ஆக்*ஷன் ஹீரோ, முதல் ஜனாதிபதி விருது... எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஜிஆர் எனும் முதல் ஆக்*ஷன் ஹீரோவின் முதல் ஆக்*ஷன் படமான ‘மலைக்கள்ளன்’ படத்தை, தமிழ் சினிமா என்றைக்குமே மறக்காது!...
-
*
ஈ.வெ.ரா. சிலை எதிர்த்த எம்ஜிஆர்
*
காஞ்சியில் சங்கரர் மடத்துக்கு அருகே ஈ.வெ.ரா. சிலையை வைக்க திராவிடர் கழகத்தினர் முயற்சித்தனர்.
முதல்வராக இருந்த எம்ஜிஆர், அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.
‘அரசின் அனுமதியின்றி சிலையை வைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று சட்டப்பேரவையில் வினா எழுந்தபோது, ‘அந்த சிலை, அங்கிருந்து அகற்றப்படும்’ என்று உறுதி தோய்ந்த குரலில் பதிலளித்தார் எம்ஜிஆர். அவரது எதிர்ப்பு காரணமாக, காஞ்சி மடத்தருகே ஈ.வெ.ரா. சிலை வைப்பது தவிர்க்கப்பட்டது.
- இது, ‘எம்ஜிஆரும் நானும்’ கட்டுரையில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. குறிப்பிட்டுள்ள தகவல்.
(கட்டுரை இடம்பெற்றுள்ள நூல் : வரலாற்றில் எம்ஜிஆர்; தொகுப்பாசிரியர் வே.குமரவேல்; முல்லை பதிப்பகம் வெளியீடு: பக்கம் 442-443)....
-
#என் #கடமை
முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தலைமைச்செயலகம் செல்லும் வழியில் 'சென்னை பல்கலைக்கழக கட்டிடத்தில் உள்ள மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் தவறான நேரத்தைக் காட்டுவதைக் கண்டார். தொடர்ந்து இரு நாட்கள் அதைக் கவனித்தார். நேரம் சரிப்படுத்தப்படாமல் தவறான நேரத்தையே காண்பித்துக் கொண்டிருந்தது.
மூன்றாம் நாள் முதல்வர் நேராக பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து காரருகே ஓடி வந்தனர்...
அப்போது புரட்சித்தலைவர், 'மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் கடந்த சில நாட்களாக தவறான நேரம் காட்டுவதை சுட்டிக்காண்பித்தார்.
மேலும், "வருங்கால சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் பல்கலைக்கழகத்திலேயே இப்படி தவறு நடந்தால் எப்படி? உடனே நேரத்தை சரிசெய்யுங்கள்..."
தான் செல்லும் வழியில் காணும் சிறுதவறைக்கூட கண்டுபிடித்து கண்ணியமாகத் திருத்தும் கடமை உணர்வு எம்ஜிஆர் அவர்களுக்கு இருந்தது.
இந்த விஷயத்தை தனது உதவியாளர் மூலம் போனில் சொல்லியிருக்கலாம்...!!!
ஏன் செய்யவில்லை...???
தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதையும் மறந்து தன்னை ஒரு சராசரி பிரஜையாகவும், காணும் தவறை சுட்டுவது ஒரு பிரஜையின் தலையாய கடமை என்றும் கருதியதன் நிகழ்வு தான் இச்சம்பவம்......
-
"ஆசைமுகம்" புரட்சி நடிகரின் வெற்றிப் படங்களில் ஒன்று. 1965
டிச 10 ம்தேதி வெளியான ஆசைமுகம் மிகவும் வித்தியாசமான புதுமைப்படைப்பு. அருமையான பாடல்களும்,புதுமையான கதையமைப்பும் கொண்ட படம். எம்ஜிஆர் படத்துக்கு கதை tn பாலு இந்தப்படம் மட்டும் தான் என்று நினைக்கிறேன். படம் வெளியான நாள்தான் சரியில்லை.
டிசம்பர் மாதம் வெளியான படங்கள் முழு வெற்றியை பெறுவது மிகவும் கடினம். ஏனென்றால் அடுத்து வரக்கூடிய பொங்கல் பண்டிகையில்
வெளியாகக் கூடிய படங்களை எதிர்த்து 100 நாட்கள் ஓடுவது சற்று கடினமான காரியம்தான்.. மேலும் பொங்கலன்று
வெளியான "அன்பேவா" ஒரு பிளாக் பஸ்டர் படம். சென்னை காஸினோவில் கூட்டத்தை கட்டுப்படுத்த குதிரை போலீஸ் வரவழைக்கப்பட்ட படம்
"அன்பேவா".
அதையும் தாண்டி "ஆசைமுகம்" வெற்றிநடை போட்டது.
அதற்கடுத்து வந்த "நான் ஆணையிட்டால்" பிப் 4 ந் தேதி வெளியான போது நிறைய இடங்களில் படத்தை தூக்கி விட்டார்கள். சென்னை பாரகனில் 50 நாட்களும் பிரபாத்தில் 56 நாட்களும் சரஸ்வதி நூர்ஜகானில் 49 நாட்களும்.ஓடியது "ஆசைமுகம்". சேலம் சாந்தியில் 63 நாட்கள் வரை ஓடியது.
மதுரை தங்கத்தில் வெளியாகி 56 நாட்கள் ஓடியது.
56 நாட்களில் பெற்ற வசூல் சுமார்
1,81,000 ரூபாய். பிரமாண்ட படமான கலர் "கர்ணன்" தங்கத்தில் 100 நாளில் பெற்ற வசூல் 1,86,000 ரூபாய். கர்ணன் 56 நாளில் பெற்ற வசூல் 160000 தான்.இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பிரமாண்ட கலர் கர்ணனை கால்பந்தாடிய "ஆசைமுக"த்தின் வெற்றியை கண்டு சிவாஜி ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இவ்வளவுக்கும் "ஆசைமுகம்" சாதாரண வெள்ளிக்கிழமை வெளியீடு. கலர் "கர்ணனோ" பொங்கல் பண்டிகை வெளியீடு. சாதாரண நாட்களில் வெளியாகி இருந்தால் முதல் வார வசூலில். 20000 ரூ காணாமல் போயிருக்கும். ஏகப்பட்ட செலவு செய்து எடுத்த "கர்ணனை" எந்த செலவும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவான "ஆசைமுகம்" எளிதில் வென்றதால் தயாரிப்பாளர்கள் மத்தியில் எம்ஜிஆருக்கு பெரும்பெயரை பெற்று தந்தது.
இரட்டை வேடத்தை எந்த கத்தல், கரைச்சல் இல்லாமல் அமைதியாக வெளிப்படுத்தியிருந்த லாவகம் வெகுஜன மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. படத்தில் டாக்டராக வருபவர் "துணிவே துணை"யில் மாட்டு வண்டிக்காரராக வந்து மிரட்டுவார். படத்தை முதல் தடவை சிறுவனாக இருந்த போது பார்த்தேன். அதில் எம்ஜிஆர் வாசிக்கும் மவுத் ஆர்கன் எனக்கு மிகவும் பிடித்து. போயிற்று. பொருட்காட்சியில் மவுத் ஆர்கனையும் எம்ஜிஆர் அணிந்திருந்த அந்த பெரிய, என் கைவிரல்களுக்கு பொருந்தாத மோதிரத்தையும் அடம் பிடித்து கேட்டு வாங்கி விட்டேன்.
அப்புறம் என்ன சும்மா இருப்பேனா? தலைவர் வாசிப்பதை போல் வாசிப்பதாக நினைத்து கொண்டு பலருடைய தூக்கத்தை கெடுத்ததோடு சரி. சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது என்று தெரிந்தும். பலரை தூங்க விடவில்லை. அந்த மோதிரத்தை வைத்துக் கொண்டு சகோதரர்களிடம் சண்டை வேறு. நீயா? இல்லை நானா? பாடலுக்கு எம்ஜிஆர் பயன்படுத்தும் அந்த கை பிரம்பையும் அதே போல் செய்து வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் வம்பு வளர்த்து பின் கம்பு சண்டையாகி மகிழ்ந்த காலம்!.
ஆகா அற்புதமான நினைவுகள்..........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம் நிகழ்ச்சியில்*வின்*டிவியில்*திரு.துரை பாரதி*2/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழுக்கு காரணம் ,அவர் ஒரு சினிமா நடிகர் என்பதாலா, கொடை தன்மை கொண்டவர் என்பதாலா, பத்தாண்டு காலம் முதல்வர்* என்பதாலா,ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதாலா ,என்று ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன .பலர் பலவாறு கருத்துக்கள் கூறிய வண்ணம் உள்ளனர் .ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மனிதநேயம் மிக்க மனிதாபிமானியாக இருந்தார் என்பதே தலையாய சிறப்பு எனலாம் .
மனிதநேயம், மனிதாபிமானம் என்பதெல்லாம் இன்றைக்கு இருக்கிறதா என்றால் குறைந்து, மங்கி போய் கொண்டே இருக்கிறது .ஏனெனில் ,இன்றைக்கு ஏதாவது விபத்து நேர்ந்தால், அடிபட்டவரின் அல்லது இறந்தவரின் கைபேசி, கைக்கடிகாரம், மணிபர்ஸ் ஆகியன திருடப்படுகின்றன . இந்த கால கட்டத்தில்தான் நாம் மனிதாபிமானம், மனிதநேயம் ஆகியவை பற்றி அதிகம் பேச வேண்டி இருக்கிறது*
பொதுவாக ஓடோடி சென்று உதவி செய்வது போல் நடித்தவர்கள்*, ஓடோடி சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் ,.வீடு வீடாக சென்று தேர்தல் காலத்தில் வாக்குகள் கேட்டு , பொய் வாக்குறுதிகள் அளித்தவர்கள்,பொது காரியங்களில் ஈடுபடுபவர்கள்* இவர்களுடைய மனிதாபிமானம் எல்லாம் சீசனுக்கு தகுந்தாற்போல் மாறும் ஒரு நாடகம் .இந்த நாடகங்களைத்தான் சினிமாவில் எம்.ஜி.ஆர். சாடி* இருக்கிறார் ,பாடல்களாக பாடியும் இருக்கிறார் .
எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில், மனிதநேயம், மனிதாபிமானம் என்பது அவர்*உடன்பிறந்த ஒரு நற்குணம் .* உள்மனதில் ஆழமாக பதிந்த விஷயம் . அதுதான் அவரை ஒளிவிளக்காக இந்த காலம்வரையில்* ஒளிர செய்கிறது .அப்படி ஒளிரச்*செய்வதற்கான பல்வேறு விஷயங்களை இன்று நாம் அறிந்து கொள்வோம் .
நான் ஏன் பிறந்தேன் படப்பிடிப்பின் உணவு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் அன்று மேஜர் சுந்தரராஜன் உணவருந்துகிறார் . 16 வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன . மேஜர், எம்.ஜி.ஆரை ,சாப்பிடும்போது கேட்கிறார். தாங்கள் தினசரி இப்படித்தான்* வழக்கமாக**சாப்பிடுவீர்களா என்று .பதிலுக்கு எம்.ஜி.ஆர்., எனக்கு இப்படியும் சாப்பிட தெரியும் . இரண்டு நாட்கள் சாப்பிடாமல் வயிற்றில் ஈரத்துணி போட்டுக் கொண்டு* பட்டினியாக**இருக்கவும் முடியும் என்றார் .நான் சினிமா வாய்ப்புக்காக ஒவ்வொரு ஸ்டுடியோவிற்கும் கால் கடக்க நடந்தே சென்றிருக்கிறேன் .அப்போதெல்லாம் இரண்டு அல்லது ஐந்து ருபாய் தான் கைவசம் இருக்கும் . அந்த நிலையிலும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்த சமயத்திலும் ,மனிதநேயத்துடன், மனிதாபிமானத்துடன் பலருக்கு உதவிகள் செய்துள்ளேன் .அந்த உதவிகளும்**என்னுடைய முன்னேற்றத்திற்கும், இந்த நிலையை அடைவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது .ஆனால் நான் எதையும், எதற்காகவும் திட்டமிட்டு செய்யவில்லை .பிறருக்கு உதவுதல் என்பது என் ஆழ்மனதில் உதித்த விஷயம்*
ஒருமுறை ஸ்டூடியோ, ஸ்டுடியோவாக அலையும்போது மதிய நேரம், வயிற்றுப்பசி ஒருபக்கம் . கையில் இருப்பதோ பத்து ருபாய். அந்த சமயத்தில் ஒரு நாடக நடிகர் எதிரே வந்து, அண்ணே, மிகவும் பசியாக இருக்கிறது . ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க, தன்னிடம் இருந்த சாப்பாடை கொடுத்து,*அவரது செலவிற்கு மூன்று ருபாய் அளித்து அவரை பசியாற்றினார் . நாளைக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில்,போதுமான வருமானம் இல்லையென்றாலும் அடுத்தவருக்கு உதவுகின்ற மனப்பான்மை அவருக்கு இருந்தது .இந்த மனிதநேயமும், மனிதாபிமானமும்தான் அவரை இன்றும் மக்கள் மனதில் மறைந்தும் மறையாதவராக ஒளிர செய்துள்ளது .
நடிகர் சங்கத்திற்கு ,தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்குவதில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பெரும் பங்குண்டு .நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்று மேஜர் சுந்தர்ராஜனும், சிவாஜி கணேசனும்* முற்பட்டபோது, தமிழக அரசு மூலம் ரூ.25 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்து, வங்கி கடன் உருவாக்கி உதவிகள் செய்தவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.* *இந்த நடிகர்*சங்கத்தால் ஒருபோதும்*ஒரு ரூபாய் அளவிற்கு கூட*தான் பிரயோஜனம் அடைந்ததில்லை . ஆனால் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார் .* ஆனால் ,இப்படி நடிகர் சங்கம் என்பதனால்தான் அள்ளி அள்ளி கொடுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டக்*கூடாது*என்பதற்காக , அதற்கான பிரச்னைகள் ஏற்பட்டால் சந்திக்கும் பொருட்டு , அரசு அதிகாரிகளை வைத்து,காரண*காரியங்களை ஆராய்ந்து , முறையாக ஆலோசனைகள் செய்து திட்டமிட்டு* உதவிகள் செய்தார் .இதுபற்றி*பின்னாளில்*நடிகர் சங்க நிர்வாகிகளாக* இருந்தவர்கள் விவரமாக தகவல்கள் அளித்துள்ளனர்
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவில்* இருந்தபோது இறந்ததும்,அவர் உடலை*அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு*கொண்டு வர ஏற்பாடுகளை செய்தார் . அவரது உடல் நடிகர்*சங்கத்தில் வைத்து அனைத்து நடிகர் நடிகைகள்*இறுதி மரியாதை செய்வதற்கு வழி வகுத்தார் .* அவரது*உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இறுதி ஊர்வலமாக*எடுத்து செல்ல தயாராக இருந்த நிலையில்*முதல்வர் எம்.ஜி.ஆர். வருவாரா*மாட்டாரா*என்று தகவல் தெரியாதநிலை . கடைசி நிமிடத்தில் எம்.ஜி.ஆர். வந்துவிடுகிறார் . ஆனால் கவிஞரின் உடல் வைக்கப்பட்டிருந்த விதம் சரியில்லை என்று சொல்லி ,அதில்**சிறிய மாற்றங்கள் செய்ய உத்தரவிட்டார் ..நாம் வாழும் காலத்தில் கவிஞர் வாழ்வாங்கு வாழ்ந்தவர் .அவரின் முகம் அனைவருக்கும் எளிதில்*தெரியும்படி வைக்க வேண்டும் என்று சொல்லி* .அலங்காரங்கள் முற்றிலும் மாற்ற செய்து* பொதுமக்கள் அனைவருக்கும் அவர் முகம் தெரியும்படி வைக்க செய்தார். மேஜர்*சுந்தர்ராஜனை அழைத்து , தம்பி சிவாஜி கணேசன் எங்கே , அவரை*வர சொல்லுங்கள் என்றார் . ஆனால் மேஜர்*,சிவாஜி கணேசனுக்கு உடல்நலம் சரியில்லை என்கிறார் .உடனே எம்.ஜி.ஆர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு*கவிஞருக்கு இறுதி மரியாதை செய்ய அவசியம் வர வேண்டும் என்று வற்புறுத்தி சொல்லி ,வரவழைத்தார் . பின்னர் இருவரும் மயானத்திற்கு ஊர்வலமாக நடந்து சென்றனர் . பின்னர் வீடு திரும்பிய எம்.ஜி.ஆர். மேஜர் சுந்தர்ராஜனுக்கு போனில் தொடர்பு கொண்டு இறுதி ஊர்வலத்திற்கு என்ன செலவாயிற்று .என்று கேட்கிறார் .அப்போதெல்லாம் இந்த மாதிரி செலவுகளுக்கு நடிகர் சங்கத்தில் இருந்து செலவு செய்ய முடியாத நிலை என்பதை அறிந்திருந்த எம்.ஜி.ஆர். தன்*சொந்த பணத்தில் இருந்து ரூ.10,000/- காசோலையாக அனுப்பி வைத்தார் .*
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.குமரி பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டு பிள்ளை*
2.எம்.ஜி.ஆர். -எம்.என்.ராஜத்திடம் பேசும் காட்சி -நாடோடி மன்னன்*
3.எம்.ஜி.ஆர். -நிர்மலா உரையாடல் - ஊருக்கு உழைப்பவன்*
4.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து -நேற்று இன்று நாளை*
5.எம்.ஜி.ஆர். சாப்பிடும் காட்சி - மாட்டுக்கார வேலன்*
6.நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு - ஆசைமுகம்*
7.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -ரிக்ஷாக்காரன்*
8.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
9.மானல்லவோ கண்கள் தந்தது - நீதிக்கு பின் பாசம்*
10.எம்.ஜி.ஆர்.-மேஜர் சுந்தரராஜன் உரையாடல் -நான் ஏன் பிறந்தேன்*
.*
-
"தலைவன்" பொன்விழா ஆண்டு.........
(24.07.1970-----24.07.2020)
இதே தேதி இதே மாதம் 50ஆண்டுகளுக்கு முன் தலைவரின் "தலைவன்" படம் வெளியானது.இன்று தலைவனுக்கு பொன்விழா ஆண்டு.
எம்.ஜி.ஆர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த படம் தலைவன்.
எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் துப்பறியும் கலையை படித்து விட்டு இந்தியா வரும் ஒரு டிடெக்டிவ் ஏஜண்ட். அவரிடம் அபாரமான யோகா சக்தி இருக்கும். அதாவது தரையில் இருந்து பல அடி உயரத்தில் அந்தரத்தில் யோகா செய்வார். பெரும் பணக்காரர்களை பெண்களை வைத்து மயக்கி பின்பு அவர்களை கடத்தி பணம் பறிக்கும் வில்லன் நம்பியாருக்கு எம்.ஜி.ஆரிடம் இருக்கும் இந்த சக்தியை வைத்து பணம் சம்பாதிக்க ஆசை. ஆனால் எம்.ஜி.ஆரோ நம்பியாரை உரிய ஆதாரத்துடன் கைது செய்ய வந்திருக்கிறவர். இந்த இருவருக்கும் இடையிலான பரபரப்பான மோதல்தான் படம்.
எம்.ஜி.ஆர் ஜேம்ஸ்பாண்ட் போன்றே படம் முழுக்க கோட்சூட், கருப்பு கண்ணாடி, கையில் ஒரு சூட்கேசுடன் வருவர். இந்த படத்தில் எம்.ஜி.ஆருடன் நம்பியார், அசோகன், நாகேஷ், வாணிஸ்ரீ, ஜோதிலட்சுமி, மனோரமா, சகுந்தலா நடித்திருந்தார்கள். பிரபல மலையாள இயக்குனர் பி.ஏ.தோமஸ் தயாரித்து இயக்கி இருந்தார். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார்
.இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தற்சமயம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் சித்த மருத்துவம் மூலம் நோயாளிகள் குணமாகும் நேரத்தில் தலைவர்50 ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவம் பற்றியும் யோகா பற்றியும் புகழ்ந்து கூறியிருப்பது ஆச்சரியம் தருகிறது. சித்த மருத்துவம் பற்றி பேசும் இதே காலத்தில் இந்த படத்தின் பொன்விழா ஆண்டு வருவதும் தலைவர் ஒரு தீர்க்கதரிசி மட்டும் அல்ல, சைதையார் அடிக்கடி சொல்லி வருவது போல தலைவரே ஒரு சித்தர் தான் என்பது புலப்படுகிறது..........
-
லண்டனில் நாடோடி மன்னன்!
1966 ஆம் ஆண்டு நாவலர் நெடுஞ்செழியன் லண்டன் சென்றார். அப்போது லண்டன் தமிழ் சங்கத்தினர் புரட்சி நடிகரிடம் ஒப்படைக்க இரண்டு போர் வீரர்கள் சில்ககளை கொடுத்து அனுப்பினார். இதை ஒப்படைக்கும் லண்டன் தமிழர்கள் சொன்னது:
தமிழ்ச் சங்கத்திற்கு என்று ஒரு கட்டிடம் இருந்தால் லண்டன் வரும் லாகின் பேராசிரியர்கள் தலைவர்கள் எல்லாம் தமிழனின் பெருமையை பற்றி அறிந்துகொள்வார்கள் என்ற நோக்கத்துடன் நிதி திரட்டினார்கள். அப்போது அங்கே உள்ள பெரிய நடிகர்களுக்கெல்லாம், "அகில இந்திய புகழ், அகில உலக புகழ்பெற்ற நடிகர்க்கெல்லாம் கடிதம் எழுதினோம். ஏதும் பதில் இல்லை!!!
ஆனால் புரட்சித் நடிகர் எம்.ஜி.ஆர் மட்டும் தான் கடிதம் கிடைத்தவுண்டன் "நாடோடி மன்னன்" படத்தை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். அதன் மூலம் வந்த தொகையை கட்டிட நிதிக்கு கொடுத்தார் [ நீங்கள் நினைப்பது போல தினமும் காட்சி என்று அந்த காலத்தில் கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும், சொசைட்டி போன்ற இடங்களில் காண்பிக்க படும்].
தனக்குப் பதிலாக " நாடோடி மன்னனை" அனுப்பி தமிழர்கள் மட்டுமின்றி ஆங்கிலேயர்களும் கண்டு மஃகிழும்படி செய்தார். அதன் மூலம் வசூலான பவுண்ட் [ இன்றைய மதிப்பு ரூ.1,536,660/=] அந்த சங்கத்துக்கு அளிக்கப்பட்டது.
அந்த கொடைக்கு அவர்கள் செலுத்தும் அன்பின் காணிக்கையாக ஆவர் எப்படி திரையில் வாள் தூக்கிப் போராடுகிறாரோ ....எப்படி ஒரு படத்திலாவது அவர் நம்மை செய்யாமல் முடிவதில்லையோ..... அதைப்போல நாட்டில் அநியாயக்கார்கள், அக்கிரமக்காரர்களை வீழ்த்தி நேர்மையும் , நிதியையும் நிலைநாட்ட பாடுபடும் புரட்சி நடிகருக்கு எங்கள் அனுப்பின காணிக்கையாக 13ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வீரர்களின் சிலைகளை ஏற்க ஏற்றவர் புரட்சி நடிகர் தான் என்று கருதி அனுப்புகிறோம்.
இந்த செய்தியை ஜூலை 1966 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த "தங்கவாள் கொடையளிப்பு விழாவில்" நாவலர் தங்கள்வாள் தெரிவித்தார்...
-
மக்கள் திலகத்தின் அசுர சாதனை பட்டியல்
1970 ம் ஆண்டு வரை...
அகில இந்தியாவில்
வசூலில்...
முதல் இடம் ...
இந்தி படமான
சங்கம்
2 வது..
பூலர் அவுர் பத்தர்
3 வது
எங்கவீட்டுப்பிள்ளை
அடுத்து...
இந்தியாவில்
2 வார வசூலில்
கோவையில் மட்டும்
ரகசியபோலிஸ் 115
சாதனை.
டைமண்ட்
கர்னாடிக்
இரண்டு வார வசூவ்
ரூ. 1,73,071,43
பார்த்தவர்கள் : 1,61,234
அரங்கில் 5 காட்சி
4 காட்சி ஒடியுள்ளது.
அடுத்து...
மலேசியாவில்
அதிக நாள் ஒடிய
இந்திய படங்களில்...
சங்கம் 58 நாள்
நாடோடி மன்னன் 52
எங்கவீட்டுப்பிள்ளை 48
ஆங்கில படம்
சவுண்ட் ஆப் மீயூசிக்
40 நாள்.
அடுத்து
தஞ்சாவூரில்
முதன் முதலில் 2 மிகப்பெரிய அரங்கில்
வெளியிடப்பட்ட
அடிமைப்பெண்
யாகப்பா 12 நாள்
ஞானம் 12 நாள்
பார்த்த மக்கள் : 88,865
வசூல் : 56,844.15
அடுத்து
கடலூர்
அடிமைப்பெண்
2 மிகப்பெரிய அரங்கில்
வெளிவந்து...
நீயுசினிமா 10 நாள்
கமர் 10 நாள்
கண்டு களித்தவர்கள்
1,23,472 பேர்.
4,5 காட்சிகள் ஒடியது.
கேரளா
பாலக்காடு
கவுடர் அரங்கில்
குடியிருந்த கோயில் 42
அடிமப்பெண் 36
ஒளிவிளக்கு 33
நம்நாடு 32
சி.மண் 21
கேரளா
திருவனந்தபுரம்
நீயூ தியேட்டர்
அடிமைப்பெண்
50 நாள் ஒடியது.
அடுத்து...
பெங்களுரில்
3 அரங்கில் 11 வாரம்
நடைபெற்ற முதல் தமிழ்படம் அடிமைப்பெண்
அபேரா 77. நாள்
மெஜஸ்டிக் 77 நாள்
சாரதா 77 நாள்
முதன் முதலில்
தமிழகத்தில்
46 தியேட்டரில் மட்டும்
ஒடி முடிய வசூலை அதிகம் கொடுத்த முதல் படம் : அடிமைப்பெண்
ரூ. 66, 01,191.68. ஆகும்.
(66 லட்சம்)
தகவல் தொடரும்
உரிமைக்குரல் ராஜு...........
-
"ஒளி விளக்கு" மக்கள் திலகத்தின் 100 வது படம். வானவில்லின் ஏழு வர்ணங்களை இணைத்து. வரும் வர்ண ஜாலங்களை திரையில் ஜொலிக்க செய்த ஜெமினியின் வண்ணக்காவியம்தான் "ஒளிவிளக்கு". ரசிகர்களின் கனவுப்படம் என்று சொன்னால் அது மிகையாகாது.
1968 செப் 20 ந்தேதி தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் வெளியான ஒரு அற்புதமான ரசனை மிகுந்த காவியம். எம்ஜிஆரின் ஸ்டைலுக்கும் அழகுக்கும் வண்ணமிகு நேர்த்தியான ஆடை வடிவமைப்புக்கும், அலங்காரத்துக்கும்
எத்தனை முறை பார்த்தாலும் இன்னெரு சொர்க்கம் போல கண்ணுக்குள் நிழலாடிக் கொண்டிருக்கும் எழில்மிகு ஓவியம்.
எம்ஜிஆரின். ஸ்டைலோடு கலந்த சுறுசுறுப்பை படத்தில் காணலாம். தீபாவளி ஒரு மாதத்திற்கு முன்பே வந்தது போல தமிழ் நாட்டில் "ஒளிவிளக்கு" திரையிடப்பட்ட திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது. கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் முந்தைய நாளே திரையரங்கின் முன் குவிந்ததால்
ஊரில் ஜனநடமாட்டம் அதிகம் காணப்பட்டது.
தூத்துக்குடியில்
தியேட்டர் வாசலில் டெலிவிஷன் மாடலில் செய்யப்பட்ட பெட்டியில் எம்ஜிஆரின் திரு உருவத்துடன் "ஒளிவிளக்கு" எம்ஜிஆரின் 100 வது
படம் என்ற வாசகத்துடன் கலர் விளக்குகளை சுழல விட்டு எம்ஜிஆர் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர் எம்ஜிஆர் மன்றத்தினர். அதை பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்து தியேட்டர் வாசலை நிரப்பி விடுவார்கள்.
"ஒளிவிளக்கு" படத்தின் வால் போஸ்டர் புதுமையான முறையில் கறுப்பு பார்டர் வைத்து மிக உயர்ந்த பேப்பரில் அடித்திருப்பார்கள். அதை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுப்பு தெரியாது. அதை பார்க்க எத்தனை கூட்டம் டிராபிக் ஜாம் ஆகிவிடும் அளவுக்கு. முதல் மூன்று நாள் தியேட்டர் முன்பு டிராபிக் தடை செய்யப்பட்டது.
சிலர் புலம்பிக் கொண்டே செல்வதை பார்த்திருக்கிறேன் சே! இந்த எம்ஜிஆர் படம் போட்டால் இந்த வழியில் வரவே முடியவில்லை.சிவாஜி படம் போட்டா எந்த பிரச்னையும் கிடையாது. இனிமேல் இந்த மாதிரி தியேட்டரில் எம்ஜிஆர் படம் போட அனுமதிக்க கூடாது என்று "பாலகிருஷ்ணா" தியேட்டரை வசை பாடிச் சென்ற அந்த பகுதி மக்களின் கஷ்டம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஏனென்றால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மக்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் கொடுத்ததில்லை என்பதை நினைக்கும் போது அவர்களின் சமூக சேவை வெகுஜன பாராட்டுதலுக்கு உரியது.
சென்னையில் 5 தியேட்டரில் வெளியாகி 100 நாட்கள் ஓடாமலேயே 9,28,171.28. ரூ வசூலாக பெற்று சாதனை செய்தது. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் மொத்தம் 64 தியேட்டரில் வெளியாகி 63 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய ஒரே தமிழ் படம் "ஒளிவிளக்கு"தான். இதை நாங்கள் ஒரு நாளும் சொல்லி தம்பட்டம் அடித்ததில்லை. ஆனால் சிவாஜி ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்
"சிவந்த மண்" 37 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதாக விளம்பர பேப்பரை காட்டி இணையத்தில் சவால் விட்டதை பார்த்துதான் இந்த பதிவை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சிவாஜி ரசிகர்களை கேட்கிறேன், உங்களின் எந்த படமாவது 50 தியேட்டரிலாவது வெளியாகி இருக்கிறதா? இருந்தால் வெளியிடுங்கள். அதன் பிறகு 50 நாளை பற்றி பார்க்கலாம்.
அந்த மாதிரி பிரமாண்ட செயல்களை செய்யக்கூடிய "ஜெமினி" நிறுவனத்தையே
"விளையாட்டு பிள்ளை"யால் மூட வைத்த பெருமை பெற்றவர்களே
இனி ஒரு சாதனை இதைப்போல் கிட்டுமோ?. அரிச்சந்திரா வில் ஒரு வசனம் சிவாஜி பேசுவார் முடி சூடிய மன்னனும் முடிவில் பிடி சாம்பலாவார் என்று. அது அவரை வைத்து படம் எடுத்துதான் என்பதை உணர்ந்தோம்.
நம்ம வடிவேலு பாணியில் சொல்வதானால் அய்யா! அய்யா! "எமனுக்கு எமன்" படம் நடிச்சீங்களே அய்யா! அந்த எமன் யாருன்னு தெரியாம உங்களை வைச்சு படமெடுத்து அழிஞ்சுட்டாங்களே அய்யா! இன்னும் உங்க கண்ணுல படாம நிறைய பேர் தப்பிச்சு இப்ப எங்க கழுத்தை அறுக்கிறானுவளே அய்யா!. நீங்கதான்யா நம்ம ரசிகனுவளை காப்பாத்தணுமய்யா. அவனுவளை அன்றே நீங்க கவனித்திருந்தால் இன்றைக்கு எங்களுக்கு இந்த நிலை வருமா அய்யா? சரி விஷயத்துக்கு வருவோம். இன்று வரை அதிக தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய சாதனை "மதுரை வீரனு"க்கே. அதேபோல் அதிக தியேட்டரில் 50 நாட்கள் ஓடிய சாதனை "ஒளி விளக்கு" படத்துக்குக்குதான் என்பதை உணருங்கள்.
எல்லா சாதனையும் தன்னலம் கருதாத எங்கள் தலைவனுக்கே எனும்போது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கையில் முதல் வெளியீட்டில் மட்டும் 8 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதை நாங்கள் கணக்கில் சேர்க்கவில்லை. அடுத்தடுத்து பலமுறை 50 நாட்களும் 100 நாட்களும் ஓடியதை கணக்கில் சேர்க்கவில்லை. "ஒளிவிளக்கு" Houseful போர்டை பார்த்தே மிரண்டு நம்ப மறுக்கும் நீங்கள் உண்மை என்பது கபசுர குடிநீர் போல மிகவும் கசப்பானது என்பதை உணர்ந்து அதை குடித்து உங்கள் எதிர்ப்பு நோயை தீர்த்துக் கொள்ளுங்கள்.
"ஒளிவிளக்கி"ன் மறு வெளியீட்டு சாதனையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது என்பதால் உங்கள் நோய் தீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்க விழைகிறேன்..........
-
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உருவம்பொறித்த ரூ100, ரூ 5 நாணயங்களை தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு வழங்கல்!!!
by thoothukudileaks on 01:21 in News, thoothukudinews
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் சார்பாக
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உருவம்பொறித்த
ரூ100, ரூ 5 நாணயங்களை தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு வழங்கல்!!!
தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
2020 July 24 இன்று அந்த நாணயங்களைதூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ 100, ரூ 5 நாணயங்களை தீவிர ரசிகர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.thoothukudileaks
தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் அவரது உருவம் பொறித்த நாணயம் வழங்க மத்திய அரசை வற்புறுத்திவந்தது. அது போல் எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாளில் அவரது உருவம் பொறித்த தபால் தலை வெளியிடவும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். மத்திய அரசு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட நிதி அமைச்சகம்தான் முடிவு எடுக்க முடியும் என்று அறிவித்தது. தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் தொடர்ந்து நிதி அமைச்சகத்தை வற்புறுத்தி கோரிக்கை மனு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் கோரிக்கையை இந்திய ரிசர்வ வங்கி ஏற்றுக்கொண்டு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ 100, ரூ5 நாணயங்கள் பெற ரூ 3055 கட்டணம் நிர்ணயம் செய்தது.
தமிழக முழுவதும் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் ரிசர்வ் வங்கிக்கு கட்டணம் அனுப்பிவைத்தனர்.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றத்தினர் பணம் செலுத்தினர்
இதற்காக முதற்கட்டமாக 25 பேருக்கு இந்திய ரிசர்வ் வங்கி எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் அனுப்பிவைத்தது.
நாணயத்தில் வெள்ளி, காப்பர், நிக்கல், சினிக் போன்ற உலோகங்கள் கலந்து உள்ளது.
எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயங்கள் வழங்கும் விழா
தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி எம்.ஜி.ஆர் சிலை க்கு மன்றத்தினர்
மாலை அணிவித்து அதன்அருகே நடத்தினர். முன்னாள் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மு.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ100, ரூ 5 உருவநாணயங்களை தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.மோகன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகராட்சி முன்னாள் துணை தலைவர் ரத்னம், தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் எஸ்.சாமுவேல், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் வக்கீல் செங்குட்டுபவன், மின்சார வாரிய முன்னாள் அலுவலர் பால்ராஜ், முன்னாள் கோஆப்டெக்ஸ் அலுவலர் அய்யம்பெருமாள், கருங்குளம் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் சேரந்தையன், ஆசைத்தம்பி, உட்பட பலர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை எஸ்.மோகன், எஸ்.சாமுவேல் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
thoothukudileaks
thoothukudileaks
Date 24.07 - 2020
time 1.30 pm
Tags # News # thoothukudinews
Author Image
About thoothukudileaks
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
YOU MAY ALSO LIKE:.........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*03/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி பல்வேறு திசைகளில் தகவல்களை பரவச்செய்து ,நம்மை பரவசம் அடைய செய்வதில் பெருமகிழ்ச்சி . பல அரிய தகவல்களோடு, பல*நண்பர்கள்* மற்றும் தொலைகாட்சி தொழில்நுட்பம் மூலமாகவும், பல்வேறு குறுஞ்செய்திகள் மூலமாகவும்* தகவல்கள் தந்த வண்ணம் இருக்கிறார்கள் .இந்த மாற்றத்திற்கு* உரியவர்**நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் மக்கள் திலகமாக* நிறைந்து இருப்பதே.அந்த விளைவுக்கு பெரும் காரணம் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீதுள்ள நேசம் , இன்னும் தீராத பாசமாக , பாச பெருவெள்ளமாக ஓடிக் கொண்டே இருக்கிறது*என்பதற்கு சகாப்தம் நிகழ்ச்சி நாம் வாழும் காலத்தில் சரித்திர* சாதனையாக விளங்கி வருகிறது .
விவசாயி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் கூழ் குடிக்கும் காட்சி படமாக்கப்பட இருந்தது .அன்று ,ராமாவரம் தோட்டத்தில் இருந்து கல்கண்டு பாத் எனும் இனிப்பு நிறைந்த கூழ் தயாரிக்கப்பட்டு,அதில் ஐஸ் கலந்து* சுமார் 20 பிளாஸ்க்குகளில் நிரப்பப்பட்டு , படப்பிடிப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள், தொழிலாளர்கள் உள்பட* 100க்கு மேற்பட்டவர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார் . மற்றவர்களை உண்ணவைத்து, அதை ரசித்து பார்க்கும் மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது என்று வியந்து எழுதி இருக்கிறார் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் .
ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் நடித்த நாடகம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடக்கிறது . நாடகம் முடிந்த பிறகு டாக்சி ஒன்றும் கிடைக்காததால் அவதிப்பட்ட*மேஜர் சுந்தர்ராஜனை ,எம்.ஜி.ஆர். தனது காரில் ஏற்றிக்* கொண்டு* திருவல்லிக்கேணியில் உள்ள மேஜரின் வீட்டில் இறக்கி விடுகிறார் . அப்போது மேஜர் ,நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் வசிப்பது ஒரு சிறிய வீட்டில் .உங்களுக்கு போதுமான அளவு வசதியாக இருக்காது . அதனால்தான் நான் வீட்டிற்கு அழைக்கவில்லை . நீங்கள் இப்படியே உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்றார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். இதைவிட சிறிய வீட்டில் , காற்று வசதி , மின்விசிறி கூட இல்லாமல் , வாடகை வீட்டில் நான் வசித்துள்ளேன்,பரவாயில்லை ஒன்றும் பிரச்னை இல்லை என்றார் .* எம்.ஜி.ஆர். மேஜரின் வீட்டில் நுழைந்த பின்னர் , உங்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கு என்னிடம் நோட்டு புத்தகம் ஒன்றுமில்லை என்ன செய்வது என்று கேட்டபோது ,சற்றும் தாமதிக்காமல் ,எம்.ஜி.ஆர். தன் சட்டை பாக்கெட்டில் இருந்த பேட்ஜை*கழற்றி , அதன் பின் பக்கத்தில் உழைப்பே உயர்வை தரும், வாழ்க வளமுடன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தார் என்று மேஜர் சுந்தரராஜன் ஒரு*பேட்டியில்* கூறியிருக்கிறார் .
நல்ல நேரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆரை ,மேஜர் சுந்தரராஜன் துப்பாக்கியை திருப்பி ,எம்.ஜி.ஆர். வயிற்றில் குத்துவது போல நூலிழையில் நிறுத்த வேண்டும் . மேஜர் சுந்தரராஜன் சற்று தயங்கினார் . உடனே எம்ஜி.ஆர்.*இது நடிப்புதான் .என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்க கூடாது . நான் கதாநாயகன், நீங்கள் வில்லன் என்ற நினைப்போடு நடியுங்கள் என்று கூறி , அவருக்கு போதுமான அளவு பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்த* பின்னர் அந்த காட்சி படமாக்கப்பட்டது . .
காதல் வாகனம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்படுகிறார் .அப்போது தந்தையாக உள்ள மேஜர் சுந்தரராஜன் காலில் எம்.ஜி.ஆர் கைகளில் விலங்குடன்*. திடீரென விழுந்து வணங்கி* எழும் காட்சியில் மேஜர் பதறிப்போய்* சற்று பின்வாங்கி விடுகிறார் . அந்த காட்சி சரியாக அமையவில்லை என்று இயக்குனர் சொல்கிறார் . உடனே எம்.ஜி.ஆர். மேஜரை அழைத்து ஒரு நடிகன் காமிராவுக்கு முன்பு நடிக்கும்போது நடிகன்தான் .நீங்கள் ஏன் என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்கிறீர்கள் .படத்தில் நான் உங்களுக்கு மகன் .எந்த காட்சிக்கும், எப்போதும் தயாராக இருக்க வேண்டும் . இப்படித்தான் நாங்கள் நாடகத்திலும், சினிமாவிலும்* *பழகி இருக்கிறோம்* என்று சொல்லி ,மீண்டும் ஒத்திகை பார்த்து ,அந்த காட்சியை ஓ.கே. செய்தார்கள் .
எம்.ஜி.ஆர். தன்னுடைய படப்பிடிப்பில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யாருக்காவது அன்றைக்கு மாலையில் நாடகம் இருந்தால் முன்கூட்டியே அவர்களது காட்சிகளை எடுத்து முடிக்க சொல்லி ,உரிய நேரத்தில் அனுப்புவது வழக்கம் .ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் படப்பிடிப்பில் இருக்கும்போது , இயக்குனர் திருமுகத்திடம் எனக்கு மாலையில் நாடகம் இருக்கிறது .அதனால் என்னுடைய*காட்சிகளை கொஞ்சம் சீக்கிரம் முடி த்துவிடுங்கள் என்று கூறி இருக்கிறார் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு இந்த விஷயம் தெரியாது .ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மேஜர் சுந்தரராஜன் ,நேரடியாக எம்.ஜி.ஆரிடம் எனக்கு இன்று மாலை 6 மணிக்கு நாடகம் இருக்கிறது . நான் இயக்குனரிடம் பலமுறை* சொல்லியும்* உரிய நேரத்தில் காட்சிகளை எடுத்து முடிக்காமல் தாமதம் செய்கிறார்கள் என்று சொன்னார் . உடனே எம்.ஜி.ஆர். இயக்குனர் திருமுகத்தை அழைத்து,உனக்கு நாடகம் நடத்துவது பற்றி அவ்வளவாக விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை.*நாடகம் என்பது மேடையில் நடிக்கும்போது பொதுமக்களின் நேரடி பார்வை, ரசிப்பு தன்மை, பாராட்டு, விமர்சனம் ஆகியவை அடங்கியது .ஆகவே,இனியும் தாமதிக்காமல் மேஜரின் காட்சிகளை சீக்கிரம் முடித்து உடனே அனுப்புங்கள் .தாமதாவதாக இருந்தால் இன்னொரு நாள் கூட காட்சிகளை வைத்துக் கொள்ளலாம் .என்னுடைய காட்சிகள் ஏதேனும் இருந்தால் நான் எவ்வளவு நேரமானாலும் நடித்து விட்டு போகிறேன் .இனிமேல் இந்தமாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னார் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு நாடகங்கள் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு .*
பொதுவாக, நாடகங்களுக்கு தலைமை தாங்க எம்.ஜி.ஆர். அவர்களை அழைக்கும்போது , நாடகங்களை அரை குறையாக பார்ப்பது, பாதியில் எழுந்து போவது , அல்லது தலைமை தாங்கியவுடன் புறப்பட்டுவிடுவது போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடு இல்லை . தலைமை தாங்கியபின்*நாடகங்களை முழுமையாக பார்த்தபின் , மேடையில் ஒவ்வொரு நாடக கலைஞரின் பெயரை சொல்லி , நடிப்பை ரசித்து,விமர்சித்து பாராட்டுவார் .சில நேரங்களில் தன் சொந்த செலவில் பரிசுகளும் வழங்கியதுண்டு .சினிமாவில் நடித்து வரும்போது ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடிப்பது, நடத்துவது என்பது எம்.ஜி.ஆருக்கு* மிகவும்**பிடித்தமான விஷயம் .
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அன்னை தெரசா முன்னிலையில், எம்.ஜி.ஆர். தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது . பல முக்கிய விருந்தினர்கள்* பல்வேறு தலைவர்கள்*கலந்து கொண்டனர் சுமார் 3 மணி நேரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது .. நிகழ்ச்சி நடக்கும்போது* இடையே சிலர் எழுந்து செல்வது ,வருவது என்று இருந்தார்கள் . ஆனால் அந்த 3 மணி நேரமும் எம்.ஜி.ஆர். மட்டும் தான் உட்கார்ந்த இடத்தில இருந்து நகரவே இல்லை .நிகழ்ச்சி முடிந்ததும் ,அன்னை தெரசா, எம்.ஜி.ஆரின் கைகளை பற்றிக் கொண்டு, எப்படி நீங்கள் மட்டும் இருக்கையை விட்டு நகராமல் எல்லோருடைய பேச்சையும் கேட்டீர்கள்,எல்லோருக்கும் பதில் சொன்னீர்கள் ,எப்படி நீங்கள் ஒருவர் மட்டும்* பொறுமை காத்தீர்கள் என்று கேட்டார் . பதிலுக்கு எம்.ஜி.ஆர். எல்லாமே,உங்களை போன்ற சேவை மனப்பான்மை உடைய தலைவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான் . நான் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறேன் , நானே தவறு செய்தால், விழாவிற்கு வந்துள்ள பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் , நீங்கள் என்ன நினைப்பீர்கள், விழா குழுவினரோ , கூட்டத்தில் கலந்து கொண்டவர்களோ* இனிவரும் நிகழ்ச்சிகளிலாவது இப்படி*ஒழுங்கீனமாக நடக்க கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக த்தான்* ஒழுக்கத்தை கடைபிடித்து இருக்கையில் அமர்ந்து எல்லாவற்றையும் கவனித்தேன் என்று சொன்னார் .*
எம்.ஜி.ஆர். என்கிற அரிய மாமனிதரின் ,வரலாற்றை, அரிய* வாழ்க்கையை ,ஏழை எளியவரின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவரின் பல்வேறு வகையான வாழ்க்கை எடுத்துக் காட்டுக்களை தொடர்ந்து மக்களுடன்* அடுத்த*அத்தியாயத்தில் பகிர்ந்து கொள்வோம் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
-------------------------------------------------------------------------------
1.தாய் மேல் ஆணை* - நான் ஆணையிட்டால்*
2.பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே - நான் ஆணையிட்டால்*
3.புத்தன் இயேசு, காந்தி பிறந்தது - சந்திரோதயம்*
4.பார்க்க பார்க்க சிரிப்பு வருது - நீதிக்கு தலைவணங்கு*
5.மேடையில் எம்.ஜி.ஆர் .- தேர்த்திருவிழா*
6. நான் யார் நான் யார் நீ யார் -குடியிருந்த கோயில்*
7.கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆர்.-நல்ல நேரம்*
8.எம்.ஜி.ஆர். -மஞ்சுளா -லதா உரையாடல் - நேற்று இன்று நாளை*
9.இன்னொரு வானம் , இன்னொரு நிலவு - நேற்று இன்று நாளை*
10.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல் - இதயவீணை*
11.நாடு அதை நாடு - நாடோடி*
*
-
#கடைக்கோடி #ரசிகனுக்கும் #மதிப்பளித்த #வாத்தியார்
மக்கள்திலகம் தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!
சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகே ஏழு மைல் தொலைவில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.
அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர்.
வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.
பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப்படுத்தினர்.
படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.
படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.
ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர்.
அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.!
உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!.................
-
விவசாயி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் கூழ் குடிக்கும் காட்சி படமாக்கப்பட இருந்தது .அன்று ,ராமாவரம் தோட்டத்தில் இருந்து கல்கண்டு பாத் எனும் இனிப்பு நிறைந்த கூழ் தயாரிக்கப்பட்டு,அதில் ஐஸ் கலந்து சுமார் 20 பிளாஸ்க்குகளில் நிரப்பப்பட்டு , படப்பிடிப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள், தொழிலாளர்கள் உள்பட 100க்கு மேற்பட்டவர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார் . மற்றவர்களை உண்ணவைத்து, அதை ரசித்து பார்க்கும் மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது என்று வியந்து எழுதி இருக்கிறார் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் .
ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் நடித்த நாடகம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடக்கிறது . நாடகம் முடிந்த பிறகு டாக்சி ஒன்றும் கிடைக்காததால் அவதிப்பட்ட மேஜர் சுந்தர்ராஜனை ,எம்.ஜி.ஆர். தனது காரில் ஏற்றிக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள மேஜரின் வீட்டில் இறக்கி விடுகிறார் . அப்போது மேஜர் ,நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் வசிப்பது ஒரு சிறிய வீட்டில் .உங்களுக்கு போதுமான அளவு வசதியாக இருக்காது . அதனால்தான் நான் வீட்டிற்கு அழைக்கவில்லை . நீங்கள் இப்படியே உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்றார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். இதைவிட சிறிய வீட்டில் , காற்று வசதி , மின்விசிறி கூட இல்லாமல் , வாடகை வீட்டில் நான் வசித்துள்ளேன்,பரவாயில்லை ஒன்றும் பிரச்னை இல்லை என்றார் . எம்.ஜி.ஆர். மேஜரின் வீட்டில் நுழைந்த பின்னர் , உங்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கு என்னிடம் நோட்டு புத்தகம் ஒன்றுமில்லை என்ன செய்வது என்று கேட்டபோது ,சற்றும் தாமதிக்காமல் ,எம்.ஜி.ஆர். தன் சட்டை பாக்கெட்டில் இருந்த பேட்ஜை கழற்றி , அதன் பின் பக்கத்தில் உழைப்பே உயர்வை தரும், வாழ்க வளமுடன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தார் என்று மேஜர் சுந்தரராஜன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .
நல்ல நேரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆரை ,மேஜர் சுந்தரராஜன் துப்பாக்கியை திருப்பி ,எம்.ஜி.ஆர். வயிற்றில் குத்துவது போல நூலிழையில் நிறுத்த வேண்டும் . மேஜர் சுந்தரராஜன் சற்று தயங்கினார் . உடனே எம்ஜி.ஆர். இது நடிப்புதான் .என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்க கூடாது . நான் கதாநாயகன், நீங்கள் வில்லன் என்ற நினைப்போடு நடியுங்கள் என்று கூறி , அவருக்கு போதுமான அளவு பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்த பின்னர் அந்த காட்சி படமாக்கப்பட்டது . .
காதல் வாகனம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்படுகிறார் .அப்போது தந்தையாக உள்ள மேஜர் சுந்தரராஜன் காலில் எம்.ஜி.ஆர் கைகளில் விலங்குடன் . திடீரென விழுந்து வணங்கி எழும் காட்சியில் மேஜர் பதறிப்போய் சற்று பின்வாங்கி விடுகிறார் . அந்த காட்சி சரியாக அமையவில்லை என்று இயக்குனர் சொல்கிறார் . உடனே எம்.ஜி.ஆர். மேஜரை அழைத்து ஒரு நடிகன் காமிராவுக்கு முன்பு நடிக்கும்போது நடிகன்தான் .நீங்கள் ஏன் என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்கிறீர்கள் .படத்தில் நான் உங்களுக்கு மகன் .எந்த காட்சிக்கும், எப்போதும் தயாராக இருக்க வேண்டும் . இப்படித்தான் நாங்கள் நாடகத்திலும், சினிமாவிலும் பழகி இருக்கிறோம் என்று சொல்லி ,மீண்டும் ஒத்திகை பார்த்து ,அந்த காட்சியை ஓ.கே. செய்தார்கள் .
எம்.ஜி.ஆர். தன்னுடைய படப்பிடிப்பில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யாருக்காவது அன்றைக்கு மாலையில் நாடகம் இருந்தால் முன்கூட்டியே அவர்களது காட்சிகளை எடுத்து முடிக்க சொல்லி ,உரிய நேரத்தில் அனுப்புவது வழக்கம் .ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் படப்பிடிப்பில் இருக்கும்போது , இயக்குனர் திருமுகத்திடம் எனக்கு மாலையில் நாடகம் இருக்கிறது .அதனால் என்னுடைய காட்சிகளை கொஞ்சம் சீக்கிரம் முடி த்துவிடுங்கள் என்று கூறி இருக்கிறார் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு இந்த விஷயம் தெரியாது .ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மேஜர் சுந்தரராஜன் ,நேரடியாக எம்.ஜி.ஆரிடம் எனக்கு இன்று மாலை 6 மணிக்கு நாடகம் இருக்கிறது . நான் இயக்குனரிடம் பலமுறை சொல்லியும் உரிய நேரத்தில் காட்சிகளை எடுத்து முடிக்காமல் தாமதம் செய்கிறார்கள் என்று சொன்னார் . உடனே எம்.ஜி.ஆர். இயக்குனர் திருமுகத்தை அழைத்து,உனக்கு நாடகம் நடத்துவது பற்றி அவ்வளவாக விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை. நாடகம் என்பது மேடையில் நடிக்கும்போது பொதுமக்களின் நேரடி பார்வை, ரசிப்பு தன்மை, பாராட்டு, விமர்சனம் ஆகியவை அடங்கியது .ஆகவே,இனியும் தாமதிக்காமல் மேஜரின் காட்சிகளை சீக்கிரம் முடித்து உடனே அனுப்புங்கள் .தாமதாவதாக இருந்தால் இன்னொரு நாள் கூட காட்சிகளை வைத்துக் கொள்ளலாம் .என்னுடைய காட்சிகள் ஏதேனும் இருந்தால் நான் எவ்வளவு நேரமானாலும் நடித்து விட்டு போகிறேன் .இனிமேல் இந்தமாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னார் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு நாடகங்கள் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு .
பொதுவாக, நாடகங்களுக்கு தலைமை தாங்க எம்.ஜி.ஆர். அவர்களை அழைக்கும்போது , நாடகங்களை அரை குறையாக பார்ப்பது, பாதியில் எழுந்து போவது , அல்லது தலைமை தாங்கியவுடன் புறப்பட்டுவிடுவது போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடு இல்லை . தலைமை தாங்கியபின் நாடகங்களை முழுமையாக பார்த்தபின் , மேடையில் ஒவ்வொரு நாடக கலைஞரின் பெயரை சொல்லி , நடிப்பை ரசித்து,விமர்சித்து பாராட்டுவார் .சில நேரங்களில் தன் சொந்த செலவில் பரிசுகளும் வழங்கியதுண்டு .சினிமாவில் நடித்து வரும்போது ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடிப்பது, நடத்துவது என்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் ..........
-
#எம்ஜிஆர்_ரசிகர்களுக்கு_மதிப்பளித்து_மகிழ்ச்சிப்பட ுத்தியவர்!
M.g.r. தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!
சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்ப கோணம் அருகே ஏழு மைல் தொலை வில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.
அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர். வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார். பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப் படுத்தினர்.
படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.
ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர். அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத் தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.! உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!
எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படம் 1969-ம் ஆண்டின் பிரம்மாண்டமான வெற்றிப் படம். மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. அந்த திரையரங்கில் நடந்த வெற்றி விழாவில் எம்.ஜி.ஆரும் சக கலைஞர்களும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த எம்.ஜி.ஆர்., பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்தார். காலையில் இருந்தே ஓட்டல் முன் மக்கள் திரள ஆரம்பித்தனர்.
விழாவுக்கு எம்.ஜி.ஆர். புறப்பட்ட போது, பாண்டியன் ஓட்டலில் இருந்து சிந்தாமணி டாக்கீஸ் வரை இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினர். அதற்குமுன் தியேட்டர்களில் நடந்த நூறாவது நாள் விழாக்களில் நடிகர், நடிகைகள் கருப்பு கண்ணாடி ஏற்றிய காரில் செல்வார்கள். தியேட்டரில் இருப்பவர்கள் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.
ஆனால், ‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவின்போது, பொதுமக்களும் பார்க்க வசதியாக எம்.ஜி.ஆர். திறந்த வேனில் வந்தார். தேர்தல் பிரசாரத் துக்கு தான் பயன்படுத்தும் வேனில் ஜெயலலிதா, பண்டரிபாய் ஆகியோரு டன் நின்று கொண்டே வந்தார். வழிநெடுக மக்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்பை கையசைத்தும், கும்பிட்டபடியும் ஏற்றுக் கொண்டார். ‘அடிமைப் பெண்’ படப்பிடிப் புக்காக ராஜஸ்தானுக்கு எம்.ஜி.ஆர். சென்றபோதுதான் அவருக்குத் தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது. திரை யரங்குக்கு தொப்பி, கண்ணாடியுடன் வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த ரசிகர்கள் எழுப்பிய கரவொலியிலும் உற்சாக ஆரவாரத்திலும் மதுரையே குலுங்கியது!
திரையரங்கில் மதியக் காட்சியிலும் பின்னர் மாலைக் காட்சியிலும் இடை வேளையின்போது மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி நன்றி தெரிவித்துப் பேசினார். அவருடன் கைகுலுக்க போட்டியிட்ட ரசிகர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நடுவே, திரையரங்கு அலு வலகத்தில் அமர்ந்து ஊழியர்கள், பார்வையாளர்களை சந்தித்துப் பேசினார்.
தமிழ் திரையுலகின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆரிடம் தூக்கலாக இருந்த குணம் மனிதாபிமானம்.
ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எப்போதும் உறுதியாக இருப்பார். சிந்தாமணி திரையரங்கிலும் அவரது மனிதநேயம் வெளிப்பட்டது. தியேட்டர் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருந்த போது, கடமையே கண்ணாக பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போலீஸாரை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களுடைய பணி மற்றும் குடும்ப விவரங்களை அன்போடு கேட்டறிந்து கைகுலுக்கி வாழ்த்தினார். போலீஸாரின் முகங்கள் ஆயிரம் வாட்ஸ் விளக்காய் பிரகாசித்தது!
எம்.ஜி.ஆருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஆனால், பல தளங்களிலும் உள்ள விதவிதமான தனது ரசிகர்களை நேசித்து ரசித்தவர் எம்.ஜி.ஆர்.!
‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடங்கள். ஓட்டலில் நடனமாடி பாடும் கலைஞராக ஒரு பாத்திரம். அறிமுகக் காட்சியில் ‘என்னைத் தெரியுமா?...’ பாடலில் திரையரங்கில் இருக்கும் ரசிகர்களைப் பார்த்தபடி திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் வரிகள்...
‘ஆஹா ரசிகன்... ஆஹா ரசிகன்,
நல்ல ரசிகன்... நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன்... உங்கள் ரசிகன்...!’......
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-சகாப்தம் நிகழ்ச்சியில் வின்*டிவியில்* 04/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் உள்ளங்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை இதய தெய்வமாக கொண்டாடுகிற கோடிக்கணக்கானவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ , அங்கெல்லாம்அவர்களது மரியாதைக்குரிய தலைவராக அவர்களது நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர்.* நிறைந்து இருக்கிறார் . அவர்களது இதயங்களில் வைத்து பூஜிக்கப்படுகிறார் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் கூறலாம் .குறிப்பாக எம்.ஜி.ஆருக்கும் ,முருகனுக்குமான** முருக பக்தி எப்படி தமிழர்களிடம் இருந்து பிரிக்க முடியாதோ ,அதே போல எம்.ஜி.ஆருக்கும் முருக கடவுள் மீது பக்தி எப்படி இருந்தது என்று இன்றைக்கு பார்க்கலாம் .மோசமான காட்சிகளாக இருந்தாலும் , துயரமான காட்சிகளாக இருந்தாலும் எம்.ஜி.ஆர். தன்* வாயில் இருந்து* தன்னிலை அறியாமல் முருகா என்று சொல்வது வழக்கம் . குறிப்பாக தேவர் பிலிம்ஸ் படங்களில் பணியாற்றும்போது எம்.ஜி.ஆர். தேவரை முருகா என்று அழைப்பது, தேவர் எம்.ஜி.ஆரை முருகா என்றும் அழைப்பது வழக்கம் .
எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி இருந்தபோது, அவர் மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு* எம்.என்.நம்பியாரை அழைத்து , முருக பக்தர் கிருபானந்த வாரியாரை அழைத்து வர சொல்லி, அவரை கந்த சஷ்டி கவசம் பாடும்படி கேட்டுக் கொண்டார் கிருபானந்த வாரியார் வரி வரியாக கந்த* சஷ்டி கவசத்தை ,நம்பியார், எம்.ஜி.ஆர். மனைவி வி.என்.ஜானகி முன்னிலையில் மனம் உருக பாடும்போது கண்களில் கண்ணீர் மல்க எம்.ஜி.ஆர். நெகிழ்ச்சியுடன் கேட்டார் .
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் விஞ்ஞானி வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆரின் பெயர் முருகன் . , தமிழக, இந்திய , உலக வரலாற்றிலேயே*விஞ்ஞானிக்கு தமிழ் கடவுள் முருகன் பெயர் முதன் முதலாக வைக்கப்பட்டது .அதற்கு பின்னால் பல்வேறு விதமான நுண் அரசியல் இருக்கிறது .இந்த அரசியல்களை எல்லாம் தெரிந்து கொண்டேதான் அந்த விஞ்ஞானி பாத்திரத்திற்கு முருகன் என்று பெயர் வைத்தார் .தாலி பாக்கியம் என்ற படத்தில்*முருகன் என்ற பெயர் கொண்ட வேடத்தில் நடித்தார் .மாட்டுக்கார வேலன் படத்தில் வேலன் என்கிற கதாபாத்திரத்திலும், மீனவ நண்பனில் குமரன் என்ற*பெயரிலும் நடித்தார் சங்கே முழங்கு ,. இன்று போல் என்றும் வாழ்க படங்களில்* முருகன் என்ற பெயர் கொண்ட வேடம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் பைந்தமிழ் குமரன் என்ற முருகனின் அழகு சொல்லின் பெயரில் நடித்தார் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு முருக கடவுள் மீது ஈர்ப்பு உண்டு .
விவசாயி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போத கோவையில் படப்பிடிப்பு நடந்தது .அப்போது முருக பக்தரான , பட தயாரிப்பாளர் தேவர் மருதமலை கோவில் செல்லும் பாதையில் மின் விளக்குகள் அமைத்து , அதை எம்.ஜி.ஆரை வைத்து திறந்து வைக்க முடிவு செய்தார் .தேவரின் வேண்டுகோளை ஏற்கும்* பொருட்டு, எம்.ஜி.ஆர். ,தி.மு.க. வில் இருந்ததால், அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவிடம்* விஷயத்தை சொல்லி ,முன் அனுமதி கேட்டார் .கோயிலுக்கு செல்லும் பாதையில் மின்விளக்கு திறந்து வைக்கும் வைபவம்*நல்ல காரியம்தான் . இது கட்சிக்கு எதிரான கொள்கை அல்ல .ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பாதைக்கு வெளிச்சம் தருவது நல்ல விஷயம் . தாங்கள்*தாராளமாக சென்று அந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்று பேரறிஞர் அண்ணா* வாழ்த்தி அருளினார் . அதன்படி அந்த விளக்கேற்றும் வைபவத்தை**எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்து தேவரின் வேண்டுகோளை நிறைவேற்றி வரலாறு படைத்தார் .
பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான கே.பி.சுந்தராம்பாள் அவர்களை எம்.ஜி.ஆர். தன் தாய்க்கு அடுத்த இடத்தில வைத்து மரியாதை கொடுத்து வந்தார் .திருமதி கே.பி.எஸ். அவர்கள் தன் சொந்த ஊரான கொடுமுடியில் ஒரு திரை அரங்கை கட்டி, திறப்பு விழாவிற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்கள் மூவரையும் அழைத்து இருந்தார் . எம்.ஜி.ஆருக்கு உடல்நலம் சரியில்லாதபோது தொலைபேசியில் நலம் விசாரித்த திருமதி கே.பி.எஸ். அவர்கள் இல்லத்திற்கு சென்று வணக்கம் சொல்லி மரியாதை செலுத்தியவர் எம்.ஜி.ஆர். திருமதி கே பி.எஸ். அவர்களின் முருகபக்தி மீது பலத்த ஈடுபாடு உண்டு .
தேவரின் வேண்டுகோளுக்கு இணங்க, தனிப்பிறவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்.*முருக கடவுளாக* தோன்றினார் .* இன்றைக்கும் அந்த முருகன் வேடத்தில் உள்ள எம்.ஜி.ஆர். படம் ஒரு வழிபாட்டு தலமாக சென்னையில் இருந்து தென்கோடி குமரிமுனை வரையில் உள்ள பல்வேறு ரிக்ஷாக்களிலும் ,பலரது இல்லங்களிலும் பார்க்க கூடிய நிலை உள்ளது .சந்திரோதயம் படத்தில் ஓவர் கோட்டுடன் மலர் மாலையணிந்து,கையில் பூச்செண்டுடன் காட்சியளிக்கும் எம்.ஜி.ஆர். படம் வீட்டில் வைத்திருந்தால் பண தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கை உதவி இயக்குனர்கள், திரைப்பட கலைஞர்கள்,தொழிலாளர்கள், நண்பர்கள் வீட்டிலும் இருக்கிறது .
முருகன் கோயில்களுக்கு புனரமைப்பு செய்வது, நிதி உதவி அளிப்பது* முருகன் வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்து பூஜைகளில் கலந்து கொள்வது ,சொற்பொழிவுகளில் கலந்து கொள்வது என்று முருகனுக்கென்றே தன்*வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்த திரு.கிருபானந்த வாரியார் ,முருகன் கோயில்களுக்காக ,எப்போது கேட்டாலும் அள்ளி அள்ளி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். என்பதனால்* அவருக்கு பொன்மன செம்மல் என்கிற பட்டம் வழங்கினார் .*
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.நான் ஆணையிட்டால்* - எங்க வீட்டு பிள்ளை*
2.நம் நாடு* படத்தில் எம்.ஜி.ஆர்.*
3.ஆண்டவனே உன் பாதங்களை- ஒளி விளக்கு*
4.பாரப்பா , பழனியப்பா பட்டணமாம் - பெரிய இடத்து பெண்*
5.விஞ்ஞானிகள் கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.-உலகம் சுற்றும் வாலிபன்*
6.முருகன் வேடத்தில் எம்.ஜி.ஆர். - தனிப்பிறவி*
7.உள்ளம் ஒரு கோயில் - தாலி பாக்கியம்*
8.எதிர்பாராமல் நடந்ததடி - தனிப்பிறவி*
9.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*
10.பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ -சிரித்து வாழ வேண்டும்*
..**
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின்*டிவியில்* 05/07/20 அன்று திரு.துரை பாரதி*அவர்கள் அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
திரைப்பட விழாக்கள் பலவற்றில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன .யார் யாரை முன்வரிசையில் உட்கார வைப்பது, யார் யாரை பின்வரிசையில் உட்கார வைப்பது மற்ற இடங்களில் யார் யாரை அமர வைப்பது, கூட்டத்தின் கடைசி பகுதியில் யார் யாரை அமர வைப்பது என்று சில திட்டங்கள் அமைத்து அதை கடைபிடிப்பார்கள் .சிலரை அழைத்து இருப்பார்கள் ,ஆனால் விழாவுக்கு வந்த பின்னர் கண்டுகொள்ளவே மாட்டார்கள் .இப்படியெல்லாம் நடக்கும் . ஒரு நிறுவனம் நடத்தும் விழா என்றால் ,அந்த நிறுவன ஊழியர்களுக்கே சமயத்தில் நல்ல வரவேற்பு இருக்காது ,அந்த விழா மண்டப காவலாளியை விட கேவலமாக நடத்துவார்கள் .இப்படியெல்லாம் காட்சிகள் அரங்கேறி உள்ளன. ஆனால் எம்.ஜி.ஆர். தன் பட விழாக்களில், தன்னுடன் பணிபுரிந்த ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆகியோரை அவர்களது குடும்பத்துடன்* முன்வரிசையில் அமரவைப்பார் .விழாவுக்கு வருகைதரும் முக்கிய விருந்தினர்களுக்கு பின்வரிசைதான் .அப்படி தன் படத்திற்காக உழைத்த தொழிலாளர்களை எம்.ஜி.ஆர். ஒருபோதும் விட்டு கொடுக்கவில்லை விழாவின் முடிவில்*.அந்த தொழிலாளர்களுக்கு ,அவர்களது குடும்பத்தினருக்கு*மதிய உணவு,அல்லது மாலை சிற்றுண்டி தேனீர் என்று வேளைக்கு தகுந்தாற்போல தகுந்த நபர்களை வைத்து உபசரிப்பார்* இப்படி .உழைக்கும் தொழிலாளர்களை மதிக்கும் பண்பாளராக திகழ்ந்தார்* எம்.ஜி.ஆர். .
திரைப்படத்தில் கதாநாயகன் அறிமுக காட்சிக்கு முன்னுரிமையும், அதிக முக்கியத்துவமும்* எம்.ஜி.ஆர். அளித்திருந்தார் . அந்த காட்சியில் ரசிகர்கள் /பக்தர்கள் ஆரவாரம் ,அலப்பரை* அதிகமாக இருக்கும் .அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்டாயத்தில், தயாரிப்பாளரும், இயக்குனரும் நெருக்கடிக்கு தள்ளப்படுவார்கள் .ஏ.வி.எம்.தயாரித்த அன்பே வா படத்திற்காக விமான நிலையத்தில் முன் அனுமதி வாங்கி, விமானத்தை வாடகைக்கு எடுத்து ,அதற்கான செலவினங்களை செய்து , வெளிநாட்டில் இருந்து எம்.ஜி.ஆர். சென்னைக்கு வந்து இறங்கும் அறிமுக காட்சி ரசிகர்களை திக்கு முக்காட செய்தது .ரசிகர்கள் /பக்தர்கள் கைதட்டல்கள்,ஆரவாரங்கள் நெடுநேரம் நீடித்தது .கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் எம்.ஜி.ஆருடையது என்று அந்த காலத்தில் சொல்வதுண்டு .அந்த மாலைகளை தாங்கிய வண்ணம் பேட்டி அளித்துக் கொண்டே இருப்பார் . ,அதே சமயத்தில் மாலைகளை ஒவ்வொன்றாக கழற்றும்போது , மாலைகள் மீண்டும், மீண்டும் விழுந்த வண்ணம் இருக்கும் . அப்போது அரங்கத்தில் ஒரே பரபரப்பாக* கூச்சல், கும்மாளம் கூட்டமுமாக இருக்கும் .இந்த மாதிரியான அறிமுக காட்சிகளுக்கு , ரசிகர்களும், பொதுமக்களும் நல்ல வரவேற்பை தருகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர். பின்வரும் படங்களில் தயாரிப்பாளர் ,இயக்குனர்களுடன் கலந்து ஆலோசித்து* காட்சிகளை அமைப்பதில் கவனம் செலுத்தினார் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு பேசும்போது ,தன்னுடைய ஆட்சியில் நீதி, நேர்மை, நியாயம் இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளித்தார் .அதை செய்தும் காட்டினார் .* ஒரு நாள் கோட்டைக்கு செல்வதற்காக எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து புறப்பட தயாராகிறார் . அப்போது முதியவர் ஒருவர் ,ஐயா ,என்று எம்.ஜி.ஆர். காலில் விழுந்த வண்ணம் உங்கள் உதவியாளர் ஒருவர் கல்லூரியில் பொறியாளர் சீட் வாங்கி தருகிறேன் என்று சொல்லி ரூ.45,000/- வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார் என்று அழுதுகொண்டே சொன்னார் . எம்.ஜி.ஆர். உடனே அவரிடம் அந்த நபர் இங்கு இருக்கிறாரா ,யார் சொல்லுங்கள் என்று கேட்க, ஒருவர் அங்கே கூடியிருந்த கூட்டத்தில் இருந்து நழுவ பார்த்தார் .உடனே அந்த முதியவர் அவரை சுட்டிக்காட்டியதும் , எம்.ஜி.ஆர். அவரை அழைத்து* கன்னத்தில் ஒரு அறைவிட்டார் .அந்த முதியவரின் ,முகவரி,எந்த கல்லூரியில்*இடம் வேண்டும் என்கிற விவரங்களை* தன் உதவியாளரை வைத்து குறிப்பு எடுத்துக் கொண்டு ,நீங்கள் வீடு போய் சேருங்கள், உங்கள் பணம் வந்து சேரும்* .உங்களுக்கு தகுந்த தகவல்கள் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என்று முதியவரை ஆசுவாசப்படுத்தி அனுப்பினார் .பின்பு கோட்டைக்கு தன்* உதவியாளர் செய்த செயலை எண்ணி வருத்தத்துடன்* செல்கிறார் .*
மறுநாள் சட்டப்பேரவையில் ,எதிர்கட்சி தலைவர் கருணாநிதி ,முதல்வர் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருவர் ஒரு முதியவர் மகனுக்கு கல்லூரியில் பொறியாளர்* சீட் வாங்கி தருவதாக உறுதியளித்து பணம் வாங்கி ஏமாற்றிவிட்டாராமே என்று பேசினார் .* பதிலுக்கு எம்.ஜி.ஆர். உண்மைதான்,எனக்கு கிடைத்த தகவலின்படி, அந்த உதவியாளரை பணி நீக்கம் செய்துவிட்டேன் .பணம் கொடுத்தவருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்துவிட்டேன் .என்றார் .* மாலையில் எம்.ஜி.ஆரை சந்தித்த மற்ற உதவியாளர்கள் இது எப்படி கருணாநிதிக்கு தெரிந்தது என்று கேட்டனர் .ஏன்,எப்படி,எதற்காக,யார் மூலமாக* அவருக்கு தெரிந்தது என்று கேட்பதைவிட , அந்த விஷயத்தின் உண்மை தன்மையை அறிந்து அதற்கான பரிகாரம் செய்வதோ,நீதி, நியாயம் வழங்குவதுதான் முறை. தவறு நடந்திருந்தால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் . அவர் கேட்ட கேள்வியில் தவறு ஒன்றுமில்லை .அதற்கான பதிலையும் நான் அளித்துவிட்டேன் .அது என் கடமையும் கூட. ஆனால் மற்ற அரசியல்வாதிகளாக இருந்தால் எப்படி நினைப்பார்கள் என்றால் நம் வீட்டில் நடந்த விஷயம் எப்படி கருணாநிதிக்கு தெரிந்தது என்றுதான் யோசிப்பார்கள் தன் உதவியாளர்கள், உடன் இருந்தவர்களை சந்தேகப்பட்டு ,அந்த விஷயத்தில் உள்ள நியாயத்தை விட்டு விடுவார்கள் .எனவே, நியாயத்திற்கு உட்பட்டு எந்த விஷயமாக இருந்தாலும்*தீர்க்கமான முடிவு எடுத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்றார் எம்.ஜி.ஆர். இங்கேதான் உயர்ந்து நிற்கிறார் எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர்.தன்* வீட்டில்* விசேஷமாகவும்,சிறப்பாகவும் பொங்கல் விழாவை கொண்டாடுவார் . பொங்கல் திருநாளன்று நடிகர், நடிகைகள், பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள்* ,பல முக்கிய விருந்தினர்கள் பலரும் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு விஜயம் செய்வது வழக்கம் . அத்துடன் ,ஏராளமான ரசிகர்கள், பக்தர்கள், கட்சி தொண்டர்கள், தாய்மார்கள் பெருந்திரளாக வந்திருந்து எம்.ஜி.ஆரை சந்தித்து, வாழ்த்துக்கள் பெறுவது ,வழக்கமாக இருந்தது அனைவருக்கும் பொங்கல் விருந்தாக காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படுவதும் வழக்கம் ..ஒரு முறை பொங்கல் விழாவிற்கு அரசு அதிகாரிகள் அதிகம் பேர் வந்திருந்தனர் . அப்போது காவல்துறை ஆணையராக இருந்த திரு.ஸ்ரீபால் வருவதாக இருந்தது .அவர் வந்ததும் காலை 9.30க்கு அனைவரும் சிற்றுண்டி சாப்பிடலாம் என்று சொன்னார் எம்.ஜி.ஆர். ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஸ்ரீபால் வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது .இருந்தாலும் ,அவர் வருகைக்காக காத்திருந்து ,பின்னர் அவர் வந்ததும் தன்னுடன் உட்கார வைத்து ,அதிகாரிகள்,அமைச்சர்கள் ஆகியோருடன் காலை சிற்றுண்டி அருந்தினார் . இப்படி உயர் அதிகாரிகளுக்கு*உகந்த மரியாதை அளித்து மதிக்கும் பண்பாளர் எம்.ஜி.ஆர். .
மேலும் விஷயங்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.தொட்டு விட தொட்டு விட தொடரும் -தர்மம் தலை காக்கும்*
2.உழைக்கும் கைகளே ,உருவாக்கும் கைகளே -தனிப்பிறவி*
3.என்னம்மா ராணி, பொன்னான மேனி - குமரிக்கோட்டம்*
4.இது நாட்டை காக்கும் காய் - இன்றுபோல் என்றும் வாழ்க*
5.அறிமுக காட்சியில் எம்.ஜி.ஆர். - அன்பே வா*
6.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் - ரிக்ஷாக்காரன்*
7.எம்.ஜி.ஆர்.-எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*
8.கட்டோடு குழலாட ஆட* ,கண்ணென்ற மீனாட ஆட -பெரிய இடத்து பெண்*
9.அன்னமிட்டகை பாடல் காட்சி - அன்னமிட்டகை*
*.*
-
தனியார் டிவிக்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான விவரம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
19/07/20* *-சன் லைப் -* மாலை 4 மணி -* தாழம்பூ*
20/07/20* -மெகா 24 -* காலை 8.30 மணி* - குடும்ப தலைவன்*
* * * * * * * * * சன் லைஃப் - காலை 11 மணி* - அன்பே வா*
* * * * * * * *முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி -தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * * ஜெயா டிவி -* இரவு 9 மணி* - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * * சன் டிவி* - இரவு 9.30 மணி - குடியிருந்த கோயில்*
21/07/20 -மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி -* விவசாயி*
* * * * * * * *சன்* லைஃப் - மாலை 4 மணி* - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * *ஜெயா டிவி* - இரவு 9 மணி - இதய வீணை*
22/07/20 -வேந்தர் டிவி - காலை 10.30 மணி - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * *சன் லைஃப்* - காலை 11 மணி* - உரிமைக்குரல்*
* * * * * * *புதுயுகம்* *-* இரவு* 7 மணி* - தனிப்பிறவி*
* * * * * * * ஜெயா டிவி* - இரவு 9 மணி* - குமரிக்கோட்டம்*
* * * * * * * மெகா 24* - இரவு 9 மணி* - தர்மம் தலை காக்கும்*
* * * * * * * சன் டிவி* - இரவு 9.30 மணி* - ராமன் தேடிய சீதை*
* * * * * * * பாலிமர் டிவி - இரவு 11* மணி - நவரத்தினம்*
23/07/20 =சன் லைஃப் - மாலை 4 மணி - மகாதேவி*
* * * * * * * *ஜெயா டிவி - இரவு 9 மணி - ஊருக்கு உழைப்பவன்*
24/07/20* - வசந்த் டிவி* -பிற்பகல் 1.30 மணி - பரிசு*
* * * * * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * ஜெயா டிவி* - இரவு 9 மணி* - மீனவ நண்பன்*
* * * * * * * *சன் டிவி* * - இரவு* 9.45 மணி* - ரிக்ஷாக்காரன்*
25/07/20 - தமிழ் மீடியா டிவி - காலை 10 மணி - மந்திரி குமாரி*
* * * * * * * * மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி -* முகராசி*
* * * * * * * *சன் லைஃப்* - மாலை 4 மணி - மந்திரி குமாரி*
** * **
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-சகாப்தம் நிகழ்ச்சியில் வின்*டிவியில்* 06/07/20 அன்று திரு.துரை பாரதி அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் செய்திகள் நிறைந்த தொடருக்கு எட்டு திக்கிலும் நல்ல வரவேற்பை தந்து வருகிறது .எம்.ஜி.ஆர். அவர்கள் காலை சிற்றுண்டிக்கு பின்னர்* மதிய உணவிற்கு முன்பாக காரட், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வார் .இரவு படுக்கைக்கு முன்பு ஒரு டம்ளர் ஓவல் குடித்துவிட்டு, வாழைப்பழங்கள் 2 சாப்பிடுவது வழக்கம் .அவ்வப்போது வெளியே ஒரு கனம்* சென்றால் மதியம் வடித்த சோறை , அந்த பழையதை ,வத்த குழம்புடன் கலந்து சாப்பிடுவார் .காரணம் கேட்டால் ,கடுமையான உடற்பயிற்சி, வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் சூட்டை தணிக்க இது உதவுகிறது என்பார் .எம்.ஜி.ஆர். காரில் பயணிக்கும்போது ஒரு மூட்டை அளவு சாத்துக்குடி பழங்கள் எப்போதும் இருப்பு இருக்கும் .சாத்துக்குடி ஜூஸ் அருந்தினால் உடல் சூட்டை தணிக்கும், ரத்தம் சுத்திகரிக்க உதவும் என்பது அவரின் கணிப்பு. எனவே தானும், தன்னுடைய உதவியாளர்கள்* அருந்தும் வகையில்**பழங்கள் காரில் வைத்திருப்பார் .எம்.ஜி.ஆர். தன் உடலை வருத்தி, எல்லாவிதமான உடற்பயிற்சி கருவிகள் கொண்டு கடுமையான பயிற்சி எடுத்து , அதற்கான உணவுகளை வேண்டியபோதெல்லாம், தேவைக்கேற்றார் போல அருந்தி உடலை பாதுகாத்தார் ஒரு நடிகனுக்கு உடல்நலம், உடல் அமைப்பு, தோற்றம், பொலிவு* ஆகியன இன்றியமையாதது என்பதை உணர்ந்திருந்ததால்* உடல்நலம், உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் .
சென்னை தி.நகர் , ஆற்காடு சாலையில்* மதிய நேரத்தில் வந்து இளைப்பாறுவது வழக்கம் . அந்த இடைவேளை நேரத்தில் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், முக்கிய விருந்தினர்கள் சிலரை சந்திப்பது வழக்கம். அது மட்டுமின்றி பல பேர் உதவிகள் கேட்டு அவரை பார்க்க வருவதுண்டு .ஒருமுறை நடிகை சாவித்திரி எம்.ஜி.ஆரை பார்க்க அங்குள்ள உதவியாளரை அணுகி அனுமதி கேட்கிறார் .எம்.ஜி.ஆர். சாவித்திரியின் அலங்கோல நிலையை கண்டதும் அதிர்ச்சி அடைந்து ,உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்கிறார் .அதை கேட்டதும் சாவித்திரி கண் கலங்குகிறார் .மீண்டும் எம்.ஜி.ஆர். நான் என்ன செய்ய வேண்டும் என்ன உங்கள் பிரச்னை என்று கேட்கிறார் . நான் தங்குவதற்கு ஒரு வீடு கூட இல்லை..சொத்து, பணம், சுகம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் . தாங்கள்தான் ஏதாவது உதவி செய்ய வேண்*டும் என்கிறார் சாவித்திரி .அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., வீட்டு வசதி வாரிய தலைவர் மணிமாறனுடன் தொடர்பு* கொண்டு நேரில் வரவழைத்த பின்னர்***நடிகை சாவித்திரிக்கு அண்ணா நகரில் வீடு ஒன்று ஒதுக்கி தரும்படி உத்தரவிடுகிறார் .பின்னர் ஒரு அறைக்கு சென்று ஒரு பையில் ஒரு லட்சம் பணம் வைத்து , சாவித்திரிக்கு அளித்து ,**இதை உங்கள் மருத்துவ செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்புகிறார் . எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை*பலரிடம் சொல்லி மகிழ்ந்துள்ளார் நடிகை சாவித்திரி . நடிகை சாவித்திரி எம்.ஜி.ஆருடன் மகாதேவி, பரிசு, வேட்டைக்காரன் ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார் .
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவில் வாய்ப்புகள் தேடி வரும் காலத்தில் வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஒற்றைவாடை தியேட்டர் அருகில் மாதம்*15 ருபாய் வாடகைக்கு குடியிருந்தார் . அப்போது அந்த பகுதியில் குடியிருந்த*ஒரு ஜப்பானிய குடும்பத்தினருக்கு சமையல்காரராக ராமன் நாயர் என்பவர் இருந்தார் . போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்த எம்.ஜி.ஆருக்கு ராமன் நாயர் அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களை**அவ்வப்போது உதவி வந்தார் .ஒருமுறை ஸ்டுடியோவிற்கு அவரசமாக புறப்பட வேண்டிய நேரத்தில்*பேருந்தில் செல்வதற்கு பணம் இல்லாததால், உதவி வேண்டி ராமன் நாயரை அணுகியபோது, ராமன் நாயர் 5 ருபாய் கொடுத்து உதவியுள்ளார் .அப்போது அது மிக பெரிய தொகை .
1970ல் ஜப்பானில் நடைபெற்ற உலக பொருட்காட்சியான எக்ஸ்போ 70யை படமாக்க உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக தன் குழுவினருடன் ஜப்பான் சென்றார் .டோக்கியோவில் ஒரு இடத்தில ஜப்பானிய மொழியிலும், ஆங்கில மொழியிலும் நாயர் டீ ஸ்டால் என்று ஒரு கடையை பார்த்து அதன் உரிமையாளர்* முகவரியை வாங்கி கொண்டு காரில் சென்று பார்த்தார் .தன்னை தேடி வந்து உதவியவர்களை ,தானே தேடி போய் உதவுவது எம்.ஜி.ஆரின் வழக்கம் .
ஒரு நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் .டி.எம்.எக்ஸ் 4777 என்கிற காரில், கோட்டைக்கு செல்லும் வழியில்* அண்ணா சாலையில் செல்கிறார் .* அப்போது இப்போது இருப்பது போல போக்குவரத்து நெருக்கடி அவ்வளவாக இல்லாத நேரம் .காவலர்கள் ஆங்காங்கே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி முதல்வர் காருக்கு வழி விடுகிறார்கள் .அதையும் மீறி ஒரு ஆட்டோக்காரர் ,தேனாம்பேட்டை சிக்னல் அருகில்* முதல்வர் காரின்மீது மோதிவிடுகிறார் . உடனே அருகில் இருந்த காவலர்கள் ஓடிவந்து ,அந்த ஆட்டோவை ஓரமாக நிறுத்தி, ஆட்டோ டிரைவரை திட்டி தீர்க்கிறார்கள் . எம்.ஜி.ஆர். உடனே காரை நிறுத்த சொல்லி , ஆட்டோ டிரைவரை தன்னருகில் அழைத்து*, ஏன் வேகமாக வண்டி ஒட்டுகிறீர்கள், ஏன் மோதிவிட்டீர்கள் , என்ன ஆயிற்று என்று கேட்கிறார் . பதட்டத்தில் இருந்த ஆட்டோ டிரைவர் ,மன்னிக்க வேண்டும் ஐயா, வண்டியில் பிரேக் சரியாக பிடிக்கவில்லை .பிரேக் பழுதுபார்க்க என்னிடம் தற்சமயம் பணமில்லை என்றார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். வண்டியில் எப்போதும் பிரேக் சரியாக இருக்க வேண்டும் . இல்லையென்றால் இப்படித்தான் விபத்துக்களை சந்திக்க நேரிடும் . உயிருக்கு ஆபத்து ஏற்படும் . மேலும் பல பிரச்னைகள் வரும் .என்று சொல்லி , 1500 ருபாய் கொடுத்து உதவினார் .**
மேலும் பல செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.விழியே. விழியே உனக்கென்ன வேலை - புதிய பூமி*
2.எம்.ஜி.ஆர். உணவருந்தும் காட்சி - எங்க வீட்டு பிள்ளை*
3.எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உரையாடல் - நம் நாடு*
4.பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி -உலகம் சுற்றும் வாலிபன்*
5.எண்ண* எண்ண* இனிக்குது ,ஏதேதோ நினைக்குது - பரிசு*
6.வேட்டையாடு விளையாடு, விருப்பம் போல உறவாடு -அரச கட்டளை*
7.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் - உலகம் சுற்றும் வாலிபன்*
8.எம்.ஜி.ஆர். உணவருந்தும் காட்சி -உலகம் சுற்றும் வாலிபன்*
9.ஓடி ஓடி உழைக்கணும் ,ஊருக்கெல்லாம் கொடுக்கணும் -நல்ல நேரம்*
10. எம்.ஜி.ஆர். லதா -தேங்காய் ஸ்ரீனிவாசன்* - நினைத்ததை முடிப்பவன்*
-
"எங்கள் தங்கம்" மக்கள் திலகத்தின் வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்று.. 1970 அக் 9 ல் வெளிவந்து
மகத்தான வெற்றி பெற்று 100 நாட்கள் 4 திரையரங்குகளில் ஓடிய படம். படத்தை வேறொரு நல்ல கம்பெனி தயாரித்திருந்தால் இதைவிட மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும்.
மேகலா பிக்சர்ஸ்
என்ற கடனில் மூழ்கிக் கொண்டிருந்த கம்பெனியின் தயாரிப்பாகும். இதன் முக்கியமான பங்குதாரர் முரசொலி மாறனின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு சில படங்களின் கதையை கேட்டால் தெரியும் ஏன் இத்தனை தோல்வியென்று. அந்த படங்கள் தான் "மறக்க முடியுமா"? "வாலிப விருந்து" போன்றவை. . அவர்கள் மாமாவின் மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் கதை. மாமாவின் கற்பனையை விற்பனை செய்ய முடியாததால் கடன் பெருகியது.
முரசொலி மாறனின் படிப்பு செலவோடு, அவர்களது முட்டாள்தனமான வியாபாரத்தால் பெருத்த நஷ்டமடைந்திருந்த அவரை கை தூக்கி விடுவதற்காக மக்கள் திலகம் சிரத்தை எடுத்து இலவசமாக நடித்து கொடுத்த படம் தான் "எங்கள் தங்கம்". அதன்பிறகு மந்திரி பதவி கிடைத்தவுடன் அவர்கள் ஊரை அடித்து உலையில் போட்டதுடன் பெரிய 100 ,200 கோடி பட்ஜெட் படங்கள் எடுக்கும் அளவுக்கு வளர்ந்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
எல்லா கலைஞர்களிடமும் தங்களது வறுமை நிலையை சொல்லி மிக குறைந்த சம்பளத்துடன் நடிக்க வைத்து படத்தயாரிப்பிலும் பணத்தை செலவு செய்யாமல் கஞ்சத்தனமாக எடுத்த படம். அதனாலே படம் பலமுறை தேதி தள்ளி வைக்கப்பட்டு வெளியான படம். படத்தின் ஆரம்ப காட்சியில் தலைவர் சிறு சேமிப்பு திட்ட துணை தலைவராக உண்மையான முகப் பொலிவுடன் வந்து ரசிகர்களை மகிழ்ச்சிக். கடலில் ஆழ்த்தினார்.
எம்ஜிஆர் படத்தின் வெற்றிக்கு க்ளைமாக்ஸில் இடம் பெறும் சண்டை காட்சி முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் அதைக்கூட சிறப்பாக எடுக்காமல் ஒரு கிணத்துக்குள்ளே கலர் புகையை விட்டு, AVM ராஜனை தோளில் சுமந்தபடி வெளியேறுவது போன்ற காட்சியை வைத்து படத்தை சுலபத்தில் முடித்து விட்டார்கள். எப்போதுமே கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டை காட்சிக்கு மிகவும் செலவு செய்து செட்டிங்ஸ் போட்டு ஸ்டண்ட் மாஸ்டர் அருமையான புதுபுது
யோசனைகளை
அரங்கேற்றுவார்கள்.
தலைவரின் பெரிய வெற்றிப்படங்களான "நாடோடி மன்னன்" "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" "ரிக்ஷாக்காரன்" "உரிமைக்குரல்" "எங்க வீட்டு பிள்ளை" "உலகம் சுற்றும் வாலிபன்" போன்ற படங்களில் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை புதுப்புது முறைகளில் மக்கள் வியக்கும் வண்ணம் உருவாக்கி தந்ததால் படம் முடிந்தவுடன் மக்கள் பெரு மகிழ்ச்சியில் வெற்றி சேதியை வெளியில் சொல்வார்கள்.
ஆனால் "எங்கள் தங்கத்தி"ல் கடைசி ஸ்டண்ட் நடக்கும் போது மக்களுக்கு அவ்வளவாக திருப்தி ஏற்படவில்லை. அதனால் படத்தின் வெற்றியின் அளவு சற்று குறைந்தது என்றே சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு தலைவரின் கதாகாலேட்சபம் ஒரு முக்கியமான காரணம் "எங்கள் தங்கம்" படத்துக்கு ஒரு பத்திரிகை எழுதிய விமர்சனம்
இது.
அடேயப்பா! அந்த சிறிய உருவத்துக்குள் இத்தனை சுறுசுறுப்பு, கண்களில் கொப்பளிக்கும் குறும்பு கதாகாலேட்சபம் செய்யும் பாங்கு அசத்திட்டார் போங்க!. இந்த ஒரு காட்சிக்காக படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று மனம் திறந்து பாராட்டியிருந்தார்கள். தான்தான் "நடிகப்பேரரசர்" என்பதை மிகை நடிப்பில்லாமல் அருமையாக நிரூபித்து விட்டார் அந்த காட்சியின் மூலம்.
தலைவர் படம் வெளியாகி 20 நாட்களில் வந்த தீபாவளிக்கு வெளியான மாற்று நடிகரின் இரண்டு படங்களை 100 நாள் ஓட்டி
.அதையும் ஆளில்லாமல் இருந்த தியேட்டரை நிரப்ப அழகான கலரில் எடுத்த அவரின் பிறந்தநாள் காட்சிகளை 2 ரீலுக்கு காண்பித்த பரிதாபநிலையை வேறு என்னவென்று சொல்வது.
தூத்துக்குடியில் அப்படி. சைடு ரீல் ஓட்டியும் 6 வாரங்களை தாண்ட முடியவில்லை. உடன் வந்த பொன்மகள் படமோ 3 வாரம் கூட ஓட முடியவில்லை. ஆனால் திருநெல்வேலி பாப்புலரில் 100 நாள் ஓட்டியதற்காக தியேட்டருக்கு தான் ஷீல்டு கொடுக்க வேண்டும்.
படம் வெளியான நேரம் மழை காலமாக இருந்ததால் பாலகிருஷ்ணா தியேட்டருக்குள் தண்ணீர் புகுந்து கொண்டது. மோட்டார் போட்டு அடித்தாலும் ஷோ ஆரம்பிக்கும் போது தண்ணீர் கரண்டைக்கு பெருகி விடும். படம் பார்ப்பவர்கள் கால்களை தொங்கவிட முடியாது.மேலும் கொசுக்கடி காரணமாக 2nd ஷோ கூட்டம் பாதிக்கப் பட்டதால் 50 நாட்கள் ஓட வேண்டிய படத்தை 40 நாட்களில் தூக்கி விட்டார்கள்.
சென்னையில் ஏசி தியேட்டரில் வெளியாகாமல் சாதா தியேட்டரில் வெளியான தலைவர் படங்களில் "நம்நாட்டு"க்கு பிறகு 10 லட்சம்
தாண்டிய படம் "எங்கள் தங்கம்" தான். ஓடி முடிய 10,01,765.96 ரூ வசூலாக பெற்று சாதனை படைத்தது. திருநெல்வேலியிலும் 66
நாட்களில் 1,01,802.77 ரூ வசூலாக பெற்றது. மதுரையில் 100 நாட்களில்
2, 75,920.91 ரூ வசூலாக
பெற்று அசத்தியது. "குமரிக்கோட்டம்" (ஜன 26) வரும்வரை 109 நாட்கள் ஓடியது.
மீண்டும் அடுத்த பதிவில்.
-
1972 ம் வருடம் சிவாஜி ரசிகர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்தது
போல பிதற்றுவது, மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. அப்படி என்ன பெரிய சாதனை என்று கேட்டால் வெளியான 7 படங்களில் தங்களது 5 படங்களை வெற்றி கோட்டுக்கு இழுத்து சென்று விட்ட பெருமிதத்தில் புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆனால் அங்கேதான் தர்மம் வீழ்ந்து எங்கே என்று தேடினாலும் கிடைக்கவில்லை.
இரண்டு கார்கள் இஞ்சின் சக்தியை தெரியவேண்டி மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. ஒருகார் திருச்சி வருவதற்குள் அதன் சக்தியை இழந்து நின்று விட்டது. இன்னெரு கார் விழுப்புரம் தாண்டி செங்கல்பட்டு வரை வந்து இன்ஜின் சக்தியை இழந்து நின்று விட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் திருச்சியில் நின்ற காரில் வந்தவர்கள் அந்த காரை தள்ளியே சென்னை வரை கொண்டு சேர்த்து விட்டார்கள்.
சென்னை வந்து சேர்ந்த அந்த மாவீரர்கள் தங்கள் கார் ஜெயித்ததாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். இன்னெரு காரில் வந்தவர்கள் காரை செங்கல்பட்டில் விட்டு விட்டு வேறோரு காரிலே சென்னை வந்து சேர்ந்தார்கள். இதில் வெற்றி பெற்றது யார? என்றால் என்ன பதில் சொல்வீர்கள். அது போலதான் 1972 லும் நடந்தது.
5 படங்களில் மூன்று படங்களை 100 நாட்களும் 2 படங்களை வெள்ளிவிழாவுக்கும் இழுத்து சென்ற பெருமிதத்தோடு சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர்.உழைத்தவனுக்கு அல்லவா தெரியும் வருத்தம், என்பதை உணர்ந்து பெருமை கொள்வதில் அர்த்தம் இருக்கிறது.
ஆனால் அவர்கள் அடித்த தம்பட்டத்தில் உண்மையான வெற்றி பெற்ற "நல்ல நேரம்" படத்தின் வெற்றி நமக்கு பெரிதாக தெரியவில்லை.
அந்த வெற்றியின் வீரியத்தை உணர்த்ததான் இந்த பதிவு.
1972 எம்ஜிஆருக்கு ஒரு மறக்கமுடியாத ஆண்டு. புரட்சி நடிகராக இருந்த வள்ளல் புரட்சி தலைவராக சிறப்பு அந்தஸ்து பெற்று உயர்ந்த ஆண்டு. ஆனால் சினிமாவில் மட்டும் அவரது இடத்தை வேறு யாராவது பிடிக்க முடியுமா? என்றால் முடியாது. இந்த கருணாநிதியும் கணேசனும் சென்னை சிட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு தாங்கள் தான் வெற்றி பெற்றதாக பெருமிதம் கொள்வதை பார்க்கிறோம்.
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி இருக்கிறது.
மொத்தம் பாதிக்கு மேல் ஜெயித்தால் தான் ஆட்சியை பிடிக்க முடியும். ஆனாலும் தாங்கள் முயற்சி செய்து பெற்ற ஒன்றிரண்டு வெற்றியை வைத்துக் கொண்டு தாம்தூம் என்று குதிப்பதை பார்த்தால் உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயை பார்த்த மாதிரி அவர்கள் குதிப்பது நமக்கு வேடிக்கையாக இருக்கிறது.
சரி, இனி விஷயத்துக்கு வருவோம்."தர்மம் எங்கே?" பெற்ற தோல்வி அளவுக்கு நம்முடைய எந்த படமும் தோல்வியை அடையவில்லை. "சங்கே முழங்கு" "ராமன் தேடிய சீதை" "நான் ஏன் பிறந்தேன்" "அன்னமிட்ட கை" உட்பட அனைத்து படங்களும் 50 நாட்களை கடந்து75 நாட்கள் வரை ஓடியது.. "நான் ஏன் பிறந்தேன்" 80 நாட்களை கடந்தும் சராசரிக்கும் மேலான வெற்றியை பதிவு செய்தன. எல்லா படங்களுமே முதல் சுற்றில் 50 லட்சத்தை வசூல் செய்து வெற்றி பெற்றது.
ஆனால் "பட்டிக்காடா பட்டணமா" "வசந்த மாளிகை" தவிர வேறெந்த படங்களும் 35 லட்சத்தை
தாண்டவில்லை. "தர்மம் எங்கே" 20
லட்சம் கூட தாண்டவில்லை."இதய வீணை" 100 நாட்களை கடந்தும் "நல்ல நேரம் 100 நாட்கள் சென்னையில் 4 தியேட்டர்களிலும் மேலும் பல ஊர்களில் 100 நாட்களை
கடந்தும் இலங்கையில் 2 திரையரங்கில் 100நாட்களை கடந்தும் 1972 ல் "பிளாக்பஸ்டர்" தான்தான் என்பதை நிரூபித்த படம்.
ஒரு படத்தின் வசூல் என்பது அதிக பட்சம் 50 நாட்களுக்குள் தெரிந்து விடும். அதன் பிறகு ஓடும் படங்கள் ஒரு சில ஊர்களில் 100 நாட்களும்
175 நாட்களும் நடைபெற்றாலும் வசூலில் பெரிய மாற்றங்கள் செய்வதில்லை. "நல்ல நேரம்" திரையிடப்பட்ட 40 சென்டரில் 39 சென்டர்களில் 50
நாட்களை கடந்து பிரமாண்ட வெற்றி முத்திரையை பதித்தது.
ஆனால் "வசந்த மாளிகை" 26 சென்டரில்தான்
50 நாட்களை கடந்து 12 தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டிய களைப்புடன் 175 நாட்கள் சாந்தியில் ஓட்டிய இரைப்புடன் மூச்சு நின்றது.
"நல்ல நேரம்" 17 தியேட்டர்களில் 10 வாரங்களை அனாயசமாக கடந்து100நாட்களை 9 திரையரங்கில் கடந்தது. முதல் 6 மாதத்திலேயே 1 கோடியை தாண்டி வசூல் பெற்றது தேவரின் படம் இந்தி படங்களுக்கு இணையான வசூலை பெற்றது ஒரு மிகப் பெரும் ஆச்சர்யம்.
ஆனால் "பட்டிக்காடா பட்டணமா" படத்தை 18 தியேட்டரில் தான் 50 நாட்கள் ஓட்ட முடிந்தது.
சென்னையை பொருத்தவரை 4 ஏசி
இல்லாத சாதாரண திரையரங்கில் "நல்ல நேரம்" வெளியாகி 100 நாட்களை கடந்து
12 லட்சத்து 67000 க்கும் அதிகமான வசூலை பெற்று அந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் இடத்தை பிடித்தது. எப்படி என்கிறீர்களா?
சாந்தியில் "வசந்த மாளிகை" மற்றும் "பட்டிக்காடா பட்டணமா" பெற்ற வசூலை 3 ல் வகுத்து வரும் வசூல் தான் சித்ராவின் வசூலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஏனென்றால் சாந்தியில் ஒரு டிக்கெட்டின் விலை சராசரி ரூ 3 என்றால் சித்ராவில் அது ரூ1 தான். அதை வைத்து சமன் செய்து பார்த்த ரசிகர்களின் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப் படுவதுதான் நியாயம் என்று உணர வேண்டும்.
சாந்தியில் மட்டுமே d c r சிவாஜி ரசிகர்களின் கையில். வசூலை எப்படி வேண்டுமானாலும் காட்ட முடியும். அதனால்தான் "திருவிளையாடல்" "தங்கப்பதக்கம்". வசூல் விளையாட்டு நடந்தது. 2004 சந்திரமுகி வரை (ஆளே இல்லாமல் 800 நாட்கள்) ஓட்டிய இந்த கூத்தும் நடந்தது. தர்மத்தை மறைத்து அவர்கள் நடத்திய "திருவிளையாடல்" இன்று(மன) சாந்தியை இல்லாமல் செய்து விட்டது.
ஆனால் தர்மத்தை எங்கோ தொலைத்து விட்டு "தர்மம் எங்கே"? என்று தேடுபவர்களுக்கு எங்கே தெரியும் தர்மம். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து தர்மத்துக்கு எதிரான யுத்தத்தில் இறங்கி தோற்றதை போல் தலைவருக்கு செய்ய வேண்டிய செஞ்சோற்று கடனை மீறி எங்கோ சேர்ந்து படுதோல்வி அடைந்த கணேசனின் நிலை? பரிதாபம்தான்.
"நல்ல நேரம்" மதுரை மாவட்டத்தில் மதுரையை தவிர 8 ஊர்களில் 50 நாட்கள் ஓடியது.மதுரையில் அலங்கார் மற்றும் மூவிலேண்டில் வெளியாகி அலங்காரில் 112 நாட்களும் மூவியில் 5 வாரமும் ஓடி 4 லட்சம் வசூலை கடந்தது. சென்னை சித்ராவில் தொடர்ந்து 116 காட்சிகளும் மகாராணியில் தொடர்ந்து 121 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை செய்தது.
நெல்லையில் 84 நாட்களில் 161000 வசூலாக பெற்று "வசந்த மாளிகை"யை வெற்றி பெற்றது. நெல்லையில் "வசந்த மாளிகை" ஓடியதே 69 நாட்கள்தான். உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது. இன்னும் பல்வேறு சாதனைகளை இன்று வரை செய்து கொண்டிருக்கும் "நல்ல நேரம்" தலைவர் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நேரம்தான் என்று இதைவிட தெளிவாக சொல்ல முடியாது.
-
#ஆச்சரியம் #ஆனால் #உண்மை...
படித்ததைப் பகிர்கிறேன்.
தீவிர திமுக அனுதாபியான முத்துக்குமார் என்பவரின் எம்ஜிஆரைப் பற்றிய வெளிப்படையான கருத்து.
எம்ஜிஆர் ஒரு விசித்திர மனிதர். நாகப்பட்டினத்தில் என் வீட்டுச் சுவரில் யாரோ ஒட்டிவிட்டுப் போயிருந்த எம்ஜிஆர் போஸ்டர்களை நான் கிழித்து எறிய, அதனால் கடும் ஆவேசம் கொண்ட சில ரசிகர்களின் கெட்ட பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.
ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில் கருணாநிதி, கலியமூர்த்தி என்று இரு தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் என் வகுப்பில் இருந்தனர். தினம் தினம் கலைஞர் கருணாநிதியையும் நடிகர் சிவாஜி கணேசனையும் திட்டித் தீர்ப்பதுதான் அவர்கள் வேலை. அவர்கள் இன்றும் எம்ஜிஆரை வழிபடும் பக்தர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தமிழ்சினிமாக்களில் எம்ஜிஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்ஜிஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.
தனிப்பட்ட முறையில் எந்த எம்ஜிஆர் படத்தையும் முழுதாக உட்கார்ந்து என்னால் பார்க்க முடிந்ததில்லை. அவர் படங்கள் வேறு யாருக்காகவோ எடுக்கப்பட்டுள்ளன என்று விட்டுவிடுவேன். அதேநேரத்தில் முழுவதும் பிடிக்காது என்று சொல்வதற்குமில்லை.
அரசியல் தளத்தில் எம்ஜிஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார்.
ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்ஜிஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்ஜிஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது மாபெரும் வரலாற்று ஆச்சரியம்தான்.
எம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்ஜிஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்ஜிஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.
என்றாவது, யாராவது ஒருவர் எம்ஜிஆரின் நிர்வாகத்திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்ஜிஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது உண்மையா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு "மக்கள் தலைவர்" என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.
அவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் அவர் நிர்வாகத்துக்குச் சற்றும் செயல்படமுடியாதவர் என்பதைச் சிறிதும் உணராமல் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
"சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது..."
அவரது மறைவின்போது சென்னையில் நடந்த கலாட்டாக்களை நான் நேரில் பார்த்தேன். (அப்போது நான் சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருந்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் முட்டாள்தனமாக சுற்றினேன். ரசிகர்கள் யாராவது என்னை நையப் புடைத்திருக்கக்கூடும்! நல்லவேளையாக எந்தச் சேதாரமும் இன்றி ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டேன்!)
அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது...!!!
எப்பேர்ப்பட்ட மக்கள் தலைவராக எம்ஜிஆர் வாழ்ந்திருக்கிறார்...!.........
-
#கடைக்கோடி #ரசிகனுக்கும் #மதிப்பளித்த #வாத்தியார்
மக்கள்திலகம் தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!
சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகே ஏழு மைல் தொலைவில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.
அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர்.
வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.
பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப்படுத்தினர்.
படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.
படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.
ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர்.
அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.!
உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!...
-
படத்துறையில் மட்டுமல்ல கொடை துறையிலும் புரட்சி செய்தவர் புரட்சித் தலைவர்.
மக்கள் சேவைக்கு "டிரஸ்ட்" அமைத்து ரூபாய் மூன்று லட்சம் ஒப்படைத்த வள்ளலுக்கும் வள்ளல் ஏழை பங்காளன் புரட்சித் தலைவர். இது நடந்தது ஏப்ரல் 1959 ஆம் வருடம். இந்த மூன்று லட்சம் இன்றைய முன்னூறு கோடி ரூபாய்க்கு சமம்
இதற்கு அய்யனின் "பொய்யன்கள்" என்ன சொல்லப்போகிறார்கள். இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..........
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய படத்துக்கு பெயர் வைக்கும் போது நம்பர் ஜோதிடம் பார்ப்பதில்லை.
அந்தக்காலத்தில் படத்துக்கு பெயர் வைக்கும் போது கூட்டுத்தொகை 8
வராமல் பார்த்துக் கொள்வது வழக்கம். அதையும் மீறி வைத்த
ஒன்றிரண்டு படங்களும் ஓடாமல் படுதோல்வி அடைந்ததால் எல்லோரும் படத்தின் பெயருக்கு 8 என்கிற கூட்டுத்தொகை வராமல் பார்த்துக் கொண்டனர்.
புதுமை இயக்குநர் ஸ்ரீதர் தன்னுடைய கனவுப்படம் "மீண்ட சொர்க்கம்" படுதோல்வி அடைந்த பிறகு அவரும் அதை
தவிர்த்து வந்தார். ஆனால் எம்ஜிஆர் இந்த சென்டிமென்ட் பார்க்க மாட்டார்.
சில கட்சி தலைவர்கள் வேட்பாளர்களின் ஜாதகங்களை அலசி ஆராய்ந்து தேர்தல் சமயத்தில் கிரகநிலைமை, ஜாதி இத்தனையும் அலசிப்பார்த்துதான் சீட் கொடுப்பார்கள்.
ஆனால் தலைவரோ எல்லா இடத்திலேயும் நான்தான் நிற்கிறேன் என்று நினைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் நிறுத்துவார். அவரும் வெற்றி பெறுவார். அதேபோல் சினிமாவிலும் 8 எழுத்து சென்டிமென்ட் பார்க்க மாட்டார். 8 எழுத்தில் வைத்த அநேக படங்கள் தலைவருக்கு வெற்றியை பெற்று தந்திருக்கின்றன.
உதாரணமாக "பல்லாண்டு வாழ்க" "எங்கள் தங்கம்" "குமரிக்கோட்டம்"
"நேற்று இன்று நாளை" போன்ற படங்கள் பெரு வெற்றியை பெற்றன. "நான் ஆணையிட்டால்" "நீரும் நெருப்பும்" "ராமன் தேடிய சீதை" "ஒரு தாய் மக்கள்"
"பாக்தாத் திருடன்" "மன்னாதி மன்னன்" போன்ற படங்கள் சுமாரான வெற்றியையும் பெற்றன.
இருந்தாலும் எம்ஜிஆருக்கு எப்போதுமே 7 அதிர்ஷ்ட எண் என்று எல்லோரும் அறிவார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர் முதல்வராக பொறுப்பேற்றபின் முதல் சட்டமன்றம் கூடியது 4-7-77 அன்றுதான்..அந்த நாள் தலைவரின் ராசிநாளாக பார்க்கப்பட்டது. அதை நினைவு படுத்தும் வகையில் அவரது கார் நம்பராக 4777 என்ற எண்ணை எம்ஜிஆர் தேர்ந்தெடுத்தார்.
அதன்பிறகு 7 என்ற எண் எம்ஜிஆர் வாழ்க்கையில் பலமுறை பல முக்கியமான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஏழு எழுத்துக்களில் வெளியான அநேக படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை
பதிவு செய்தது என்றே சொல்லலாம்.
"மலைக்கள்ளன்" "நாடோடி மன்னன்" "வேட்டைக்காரன்"
"ரிக் ஷாக்காரன்" "உரிமைக்குரல்" "மீனவ நண்பன்" போன்ற 7 எழுத்தில் முடியும் படங்களை சொல்லலாம்.
அதேபோல் mgr என்ற எழுத்துக்கு நம்பர் ஜோதிடம் பார்த்தால் 4+3+2=9
வருகிறது. அதனால் 9ம் எம்ஜிஆருக்கு ராசியான ஒரு நம்பராக எடுத்துக் கொள்ளலாம்.
9 எழுத்துக்களில் வெளியான படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை
பதிவு செய்திருக்கின்றன. அவைகள் என்னவென்று பார்க்கலாம். "எங்க வீட்டு பிள்ளை" "குடியிருந்த கோயில்"
"மாட்டுக்கார வேலன்" போன்ற பெரிய வெற்றி பெற்ற படங்களை சொல்லலாம்.
இருப்பினும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தே வெற்றிக்கு காரணம் என்பதால் தலைவரின் ரசிகர்கள் எதையும் கருத்தில் கொள்வதில்லை.
இதையே "பல்லாண்டு வாழ்க" திரைப்படத்தில் தலைவர் சொல்லுவார், 'நீங்களெல்லாம் வெறும் நம்பர்கள் அல்ல, என் நெருங்கிய நண்பர்கள்' என்று. அதுவே என்றும் எப்போதும் தலைவரின் நம்பிக்கையாக இருந்தது எனலாம்.
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில்* 07/07/2 0* *அன்று**திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் சிலை வைக்கப்பட்டுள்ளது . இந்தியத்தலைவர்களில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே அங்கு சிலை உள்ளது . இலங்கையில் கொழும்பிலும் எம்.ஜி.ஆருக்கு சிலை இருக்கிறது*மொரீஷியஸ் நாட்டில் ஒருமுறை அவர்களது சுதந்திர தினத்தன்று ,அந்நாட்டின் பிரதமரின் அழைப்பின் பேரில் எம்.ஜி.ஆர். அங்கு சென்று அந்த நாட்டின் தேசிய கொடி* ஏற்றி வைத்து உரையாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ரசிகர் மன்றங்கள் உண்டு .அந்தமானில் போர்ட் பிளேயரில்* பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி* 1965ல் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தை திறந்து வைத்துள்ளார் . ஒரு தென்னிந்திய நடிகருக்கு இந்திய பிரதமர் ஒருவர் ரசிகர் மன்றம் திறந்து வைத்திருப்பது முதலும் கடைசியுமாகும் என்பது சிறப்பு அம்சம் .
அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வந்த எம்.ஜி.ஆருக்கு பிரத்யேகமாக பழங்கள், ஹார்லிக்ஸ் போன்ற இதர பானங்கள் ,ஏராளமான ரசிகர்கள் , முக்கிய விருந்தினர்கள், நடிகர் நடிகைகள், பட தயாரிப்பாளர்கள் , அமைச்சர்கள் , கட்சி பிரமுகர்கள் பலர் அனுப்பிய வண்ணம் இருந்தனர் . பக்தர்கள்* மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் பலவேறு வகையான**கோயில் பிரசாதங்கள்* நேரில் வந்து வழங்கினர் . பலர் வெளிநாடுகளில் இருந்து பார்சலில் அனுப்பி இருந்தனர் . இவையெல்லாம் வைப்பதற்கு ப்ரூக்ளின் நகரில் பிரத்யேகமாக ஒரு கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு பாதுக்காப்பாக வைக்கப்பட்டிருந்தது என்பது சிறப்பான செய்தி*இந்த அதிசயங்கள் வேறு எந்த நடிகருக்கோ, தலைவருக்கோ நடந்ததாக சரித்திரம் இல்லை .அந்த வகையில் சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர்..
மலேசியா நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற எம்.ஜி.ஆர். கோயில் ஒன்று உள்ளது .அந்த கோயில் உள்ள இடத்தை மலேசியா நாடு சுற்றுலா தலமாக அமைத்துள்ளது .பிரான்ஸ், கனடா, மலேசியா ஆகிய நாடுகள் எம்.ஜி.ஆருக்காக*பிரத்யேக தபால் தலைகள் வெளியிட்டுள்ளன . எம்.ஜி.ஆரின் மறைவிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அவையில்* இரங்கல் கூட்டம் நடத்தி, அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டது .
எம்.ஜி.ஆர். சமூக படங்களில் வேரூன்றி நடித்து பல வெற்றிப்படங்கள் அளித்து வந்தபோது , ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு கால கட்டத்திலும் எந்தெந்த*படங்களுக்கு எப்படி பெயர் வைப்பது, எந்தெந்த கதாபாத்திரங்களுக்கு எந்த பெயர் சூட்டுவது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார் . உதாரணமாக பெரிய இடத்துப் பெண் படத்தில் கவிஞர் கண்ணதாசன் கட்டோடு குழலாட ஆட ,கண்ணென்ற மீனாட ஆட என்ற குற்றால குறவஞ்சி பாடலை புகுத்தி இருப்பார் .அந்த பாடலில் எம்.ஜி.ஆருக்கு இணையாக தில்லை, வள்ளியம்மை என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் மணிமாலா, ஜோதிலட்சுமி .*சுதந்திர*போராட்ட தியாகியான தில்லையாடி வள்ளியம்மையின் பெயர் அந்த கதாபாத்திரங்களுக்கு சூட்டி தன்னுடைய தேசப்பற்றை* முடிந்த அளவிற்கு திரைப்படங்களில் வெளிப்படுத்தி ,போதித்தவர்*எம்.ஜி.ஆர்.*
பெரிய இடத்து பெண் படத்தில் , பொதுஜன சேவகராக பல இடங்களில் பரிமளித்திருப்பார் . கோயிலில் பண்ணையார்கள், முக்கியஸ்தர்கள்* சுயநலமாக தங்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து கொண்டிருப்பார்கள் . பொதுமக்கள்*அவர்கள் வெளிவரும்வரை வாயிலில் காத்திருப்பார்கள் . அதை கண்ட எம்.ஜி.ஆர். கோயில் எல்லோருக்கும் பொதுவானது . ஒரு சிலருக்காக பொதுமக்கள் வாயிலில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி எல்லோரையும் உள்ளே அழைத்து சென்று பண்ணையாரிடம், சம தர்மம் ,*பொது தரிசனம் ,பற்றி விவரமாக எடுத்துரைத்து பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் கோயிலில் நுழையலாம் . அதற்கு கால நிர்ணயம் கிடையாது*,பொதுஜன சேவையை அனைவரும் மதிக்க வேண்டும் , கோயில் தனிப்பட்ட மனிதருக்கு என்றுமே, எப்போதுமே சொந்தம் கிடையாது என்று வலியுறுத்தி பேசுவார் .*இது காலத்தின் கட்டாயம் என்பது போல திரைப்படங்களில் காட்சிகளை அமைத்தார் .
தி .மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஒருமுறை திரை அரங்குகளில் கேளிக்கை வரியை உயர்த்தினார் . அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது திரை அரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர் .திரை அரங்குகள் சில நாட்கள் மூடப்பட்டன . சில நாட்கள் கழித்து நடிகர் சிவாஜி கணேசன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று உடன்பாடு ஏற்பட்டது .அப்போது தி.மு.க. வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டிருந்த நேரம் .எம்.ஜி.ஆர். தன்னுடைய*ஆதிக்கம் திரை உலகில்தான் பிரதானம் என்று முடிசூடா*மன்னனாக*, வசூல் சக்கரவர்த்தியாக ,இதயக்கனி, பல்லாண்டு வாழ்க, நாளை நமதே,நீதிக்கு*தலைவணங்கு* ஊருக்கு உழைப்பவன் , உழைக்கும் கரங்கள் என்று பல படங்களில்தொடர்ந்து முழுமூச்சாக திரைத்துறையை தன் வசப்படுத்தி* , நடித்து கொண்டிருந்த பிஸியான*நேரம் .அந்த படங்களில் தனது*கட்சியின்*கொடி*, கொள்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தையும்*பல காட்சிகளில் வெளிப்படுத்தி ரசிகர்கள் , தொண்டர்கள் கவனத்தை கவர்ந்தார் .வெற்றியும் பெற்றார் .
எம்.ஜி.ஆர். ஒருமுறை பரங்கிமலை*தொகுதியில்*தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது ஒரு வயதான*மூதாட்டி எம்.ஜி.ஆரை*நெருங்கி காபி*கொண்டு வருகிறார் . எம்.ஜி.ஆர். நான் காப்பி*குடிப்பதில்லை என்றதும் ஓடிப்*போய் கடையில் சோடா வாங்கி வந்து தருகிறார்*.எம்.ஜி.ஆர். அதை வாங்கி கொஞ்சம் குடிக்கிறார் . பின்னர் அந்த மூதாட்டி எம்.ஜி.ஆரிடம் ,நான் ஒரு விஷயம் உங்களுக்கு சொல்லலாமா*என்று கேட்கிறார் .பரவாயில்லை சொல்லுங்கள் என்கிறார் . அந்த மூதாட்டி, நீங்கள் எப்போதும்*திரைப்படங்களில் நடிக்கும்போது நம்பியாரிடம் மட்டும் கொஞ்சம்*ஜாக்கிரதையாக இருங்கள்*.அவர் ஏதாவது தொல்லைகள் கொடுப்பார் .உங்களை*அடிக்க வருவார் . உங்கள்* உடம்பை*நன்றாக* வைத்துக் கொள்ளுங்கள் .இது எனது வேண்டுகோள் என்றதும் ,அந்த மூதாட்டியை எம்.ஜி.ஆர். கட்டிப்பிடித்து ,அவருடைய முகத்துடன்* தன்*கன்னத்தை*ஒட்டினாற்போல் பாசத்தை, அன்பை*வெளிப்படுத்தினார் .அதை புகைப்படமாக எடுத்தவர் சுபாஷ் சுந்தரம் என்கிற புகைப்படக்காரர்,.இந்த புகைப்படம் பின்னாளில் வந்த பொது தேர்தல்களில் ,பேனர்கள், சுவரொட்டிகளாக, தினசரிகளில் புகைப்படங்களாக வெளிவந்தன .* பிறகு தன்* உதவியாளர்களிடம் , திரைப்படங்களில் நடிப்பதை*நிஜம் என்று கருதி என்னிடம் அன்பை, பாசத்தை*இந்த முதியவர்கள் பொழிகிறார்களே, இவர்களுக்கு* நான் என்ன கைம்மாறு, எப்படி செய்ய போகிறேன்*என்று தெரியவில்லை என்றுசொல்லி நெகிழ்ந்து போனாராம் .
உரிமைக்குரல் படத்தில்*எம்.ஜி.ஆர். புதுமையான வடிவில்*கீழ்ப்பாசை வேட்டி* கட்டி நடித்தார் .இந்த படத்தின் வெற்றியை*தொடர்ந்து பல படங்களில் இந்த மாதிரி வேட்டி அணிந்து நடித்தார் .எம்.ஜி.ஆரின்*உடை தயாரிப்பு நிபுணராக*திரு.எம்.ஏ.முத்துவும் அவருக்கு*உதவியாளராக*காதர் என்பவரும் இருந்தனர்*.எம்.ஜி.ஆர். எப்போதும் வயிற்று பகுதியில்தெரிவது போல்**கரை* வரக்கூடாது*அதற்கு*கீழே*சிவப்பு, மேலே கருப்பு வருவது*போலவும் , இடையில் வெள்ளை வருவது போல* .தனது கட்சி கொடி, ,கொள்கைகள் விளக்குவது போல் அந்த வடிவம் அமைய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார் .அதன்படி*அந்த வேட்டியின் வடிவத்தை*அமைத்து தந்தஎம்.ஏ.முத்துவையும், உதவியாளர் காதரையும்*எம்.ஜி.ஆர். வெகுவாக பாராட்டினார் .*அந்த வடிவம்தான்*எம்.ஜி.ஆரின் இரு கால்கள்* பகுதியில்*பார்டராக அ .தி.மு.க. கட்சி வேட்டியாக ,கருப்பு,வெள்ளை, சிவப்பு*நிறங்கள்*கொண்ட வண்ணத்தில் உருவானது .
எம்.ஜி.ஆர். சினிமா, அரசியல் இரண்டிலும் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும்*தன் தாயை வணங்கி, வழிபட்டு ,தாயே துணை என்று சுழி போட்டு தான் ,தாயின் கட்டளையை ஏற்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்*ஆரம்பிப்பது வழக்கம் . அதன்படி நடந்தார் .நடந்து கொண்டிருந்தார் இறுதி வரை. அதற்கு பல்வேறு உதாரணங்கள் குறிப்பிடலாம் எம்.ஜி.ஆர். 1977 சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராகிறார் .* ஆனால் அவர் உடனடியாக பதவி ஏற்க முயலவில்லை . காலையில் வெற்றி செய்தி வந்ததும் கோட்டை வாயிலில் அவரை வரவேற்க லட்சக்கணக்கான மக்கள் குவியும் சூழ்நிலையில்*எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றுவிட்டார் .அவர்தான் முதல்வர் என்று தீர்மானம் ஆகிவிட்டது உடனே பதவி ஏற்க கோட்டைக்கு செல்லாமல் ,தனக்காக காத்திருந்த பட தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் எஞ்சி இருந்த மீனவ நண்பன் படப்பிடிப்பு வேலைகள், படத்தொகுப்பு, டப்பிங் ,பின்னணி இசை வேலைகளுக்காகவும், தொடர்ந்து மறைந்த இயக்குனர் பந்துலுவின் படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தின் வேலைகள்*முடிக்க ஆயத்தமாகவும் செயல்பட்டார் .இடைப்பட்ட நேரத்தில் ஆளுநர் மாளிகையில் இருந்து எம்.ஜி.ஆர். எப்போது பதவி ஏற்க உள்ளார் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த நேரம் .ஆனால் அவர் பதவி ஏற்பதில் அவசரம் காட்டாமல் பட தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றினார் .முதல்வர் பதவிக்காக சண்டை, சச்சரவு, அடித்துக் கொள்ளும் இந்த காலத்தில் எம்.ஜி.ஆர். பொறுமை காத்து ,தான் அபரிமிதமான வெற்றியை பெற்றுவிட்டாலும், பதவிக்காக ஓடோடி சென்று கோட்டையில் சென்று முதல்வர் இருக்கையில் அமருவதில்* முனைப்பு காட்டாமல் தன்னுடைய திரை துறை வேலைகளை முழுமையாக முடித்துவிட்டு , நிதானமாக மக்கள் முன்னிலையில் பதவியேற்று , பத்தாண்டுகள் மேலாக* தொடர்ந்து மூன்று முறை* முதல்வராக நீடித்தார் .
இந்த சகாப்தம் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள், பொதுமக்கள் தந்து கொண்டிருக்கிற ஆதரவு மிக பெரிய உற்சாகத்தை தருகிறது .* எங்கு எப்போது யார் பார்த்தாலும், நேரிலோ, தொலைபேசியிலோ, கைபேசியிலோ இந்த நிகழ்ச்சியை பற்றி பேசுவது நெகிழ்ச்சியாக உள்ளது .இந்த கொரோனா கொடிய நோய்* பரவல் காலத்தில், மிகவும், நம்பிக்கையாகவும், மாமருந்தாகவும் , ஆறுதலாகவும் இருக்கிறது மனிதநேயம், மனிதாபிமானம் கொண்ட எம்.ஜி.ஆரின் திருமுகத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தாலும் சலிப்பு தோன்றுவதில்லைஎன்று பலரும் வியந்து எம்.ஜி.ஆரை ,அவரின் செயல்பாடுகளை போற்றுகிறார்கள் .இந்த போற்றுதல் தொடர்ந்து கொண்டே இருக்க, இந்த கொரோனா நோய் பரவும் காலத்தில் ஆறுதலாக**இருக்க, சகாப்தம் நிகழ்ச்சியை*எம்.ஜி.ஆர் .என்கிற அரிய மனிதரின் அரிய வாழ்க்கையை, ஏழை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய பல்வேறு வாழ்க்கை எடுத்து காட்டுக்களை தொடர்ந்து அறிந்து கொள்வோம் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்*
2.நீல நிறம் , வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - என் அண்ணன்*
3.பன்சாயி, காதல் பறவைகள்* *- உலகம் சுற்றும் வாலிபன்*
4.ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்ப்பேன் - தனிப்பிறவி*
5.கண் போன போக்கிலே கால் போகலாமா - பணம் படைத்தவன்*
6.பெரிய இடத்து பெண் படத்தில் எம்.ஜி.ஆர்.*
7.எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா உரையாடல் -பெரிய இடத்து பெண்*
8.இது நாட்டை காக்கும் கை - இன்று போல் என்றும் வாழ்க*
9.எம்.ஜி.ஆர். -நம்பியார் மோதல் - எங்க வீட்டு பிள்ளை*
10.நேத்து பூத்தாலே* ரோஜா மொட்டு -* உரிமைக்குரல்*
11.எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*
-
பெங்களுரில் நட்ராஜ் திரையரங்கில்
மக்கள் திலகம் எம்ஜிஆர் படம்
ஒளி விளக்கு படத்தின் கோலகலமாகன
மலைபோல் மாலைகள்.23-12-2016..அன்று...
மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - 1968 முதல் 2013 இன்று வரை 45 ஆண்டுகளாக தொடர்ந்து
தமிழ் நாடு - கேரளா - ஆந்திரா - கர்நாடகம் - இலங்கை போன்ற இடங்களில் பல முறை
திரையிடப்பட்டு சாதனை புரிந்துள்ளது .
1984 - நவம்பர் மாதம் பெங்களுர் நகரில் 7 அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .
தேவி - 21 நாட்கள்
சிவாஜி - 14 நாட்கள்
நாகா - 14 நாட்கள்
ஜெயஸ்ரீ - 7 நாட்கள்
பாலாஜி - 7 நாட்கள்
கோபால் -7 நாட்கள்
மாருதி - 7 நாட்கள் - ஓடி வசூலில் சாதனை புரிந்தது
அசத்தலான படத்தின் தலைப்பு
ஆரம்பத்தில் மக்கள் திலகம் ஓடி வரும் அற்புத காட்சி.
தேன்சொட்டும் பாடல்கள்
வண்ண வண்ண உடைகளில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகள். அவரின் நவரச நடிப்பு.
சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகள்.
சிறந்த கதை
உன்னத உரையாடல்கள்.
பொன்மனச்செம்மலின் 100-வது படமான ஒளி விளக்கு அவரின் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படம்.....
நான் கெட்டவன்தான் - அனால் கேவலமானவன் இல்லை - இது போன்ற ஆழ்ந்த பொருள் பொதிந்த வசனங்கள் படம் பூராவும் விரவியிருக்கும்... பட்டன் கத்தியை எவ்வளவோ பெயர் கையாண்டிருக்கிறார்கள் !!! அனால் இந்த படத்தில் mgr அவர்கள் பட்டனை முடிக்கி நீட்டி பின் திரும்பவும் மடக்கும் லாவகம் இருக்கிறதே! அப்பப்பா !!! அதற்கு எவ்வளவு முறையான பயிற்சி எடுத்திருந்தால் காட்சியில் சிறப்புற பரிணமளிக்கும் என்பதை அச்செயலை செய்து பார்த்தவர்களுக்கே விளங்கும்...
1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது “ஒளிவிளக்கு” படத்தில் வாலி எழுதியிருந்த “இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்கிறார் கவிஞர் வாலி. திருமதி ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, ஆறுதல் சொன்னார் கவிஞர்.
“உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை” என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க வாலியிடம் கூறினாராம்.
“என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும், அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்” என்று சமயோசிதமாக பதில் கூறினாராம் நம் கவிஞர்....
✌✌✌✌✌✌✌✌
வாழ்க தலைவரின் புகழ் என்றுமே.........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 08/07/20* அன்று திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை ஒரு ஆராய்ச்சியாளனாக, வரலாற்று ஆசிரியராக இருந்து இந்த தொடரில் பல்வேறு விதமான தகவல்களை அளித்து வருகிறேன் .*
புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர். அவர்கள் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வந்த காலத்தில், சென்னையில், வால்டாக்ஸ் சாலை அருகில், ஒற்றைவாடை அரங்கு அருகாமையில் தன் தாயார், அண்ணன் , அண்ணியுடன் மாதம் ரூ.15/- வாடகைக்கு வசதியற்ற வீட்டில் குடி இருந்தவர் ,*இந்த தமிழ்நாட்டை , ஆளும் வல்லமையை எப்படி பெற்றார் என்பதற்கு நீண்ட வரலாறு உண்டு . ஒரு சாமான்ய மனிதர், மிக பெரிய ஆட்கள் பலமில்லை, பெரிய படிப்பு அறிவு இல்லை . பெரும் பணக்காரர் இல்லை ,ஆனாலும் இத்தனை கோடி தமிழர்களின் நெஞ்சங்களில், இதயங்களில் இடம் பிடித்து , பல எதிர்ப்புகளை வென்று, எப்படி ஆட்சியை பிடித்தார் ,அதற்கான வழிகளை எவ்வாறு கண்டறிந்தார் எங்ஙனம் வாழ்ந்து காட்டினார் என்ற தகவல்களை தான் நாம் ஆராய்ந்து வருகிறோம் .
பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளை, வழிகளை, பல்வேறு வகைகளில் எம்.ஜி.ஆர். பின்பற்றி நடந்து வந்தார் .* திரைப்படங்களில், நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து, சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா .சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா, எல்லோருக்கும் வழி காட்ட நானிருக்கிறேன் , வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன் , அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் நேருவின் புகழ் சொல்லும் பூமி இது, விழிபோல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும், தவறான பேர்க்கு நேர்வழி காட்ட வேண்டும் , ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் , தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் என்று பாடி நடித்தார் ..இன்னும் எவ்வளவோ பாடல்கள் உள்ளன .
கடவுள் நம்பிக்கையை பற்றி அண்ணா , ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னார் . எம்.ஜி.ஆர். அடிமைப்பெண் படத்தில்*இறைவன் ஒருவன் இருக்கின்றான் ,அவன் கருப்பா, சிவப்பா தெரியாது ,*ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் .ஆனந்த ஜோதி படத்தில் கடவுள் இருக்கின்றான் ,அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா என்று பாடி நடித்துள்ளார் .அண்ணாவின் கனவுகளை, பொன்மொழிகளை,நினைவுகளை* தனது திரைப்படங்களின் மூலம் நகரங்கள், கிராமங்கள், பட்டி, தொட்டியெல்லாம் கொண்டு சென்று பேரறிஞர் அண்ணாவுக்கு பெரும் புகழ் சேர்த்த பெருமை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு .*
ஒருமுறை பேரறிஞர் அண்ணா சக தலைவர்களுடன் வெளியூரில் காரில் பயணம் செய்யும்போது கார் டயர் பஞ்சர் ஆகி பழுது பார்க்கும் நேரம் . காரில் உள்ள தி.மு.க. கொடியை பார்த்து அண்ணாவிடம் அந்த ஊர் கிராமத்தினர்*நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியை சார்ந்தவரா என்று கேட்கிறார்கள். அப்போது அண்ணா பெருந்தன்மையுடன் ஆமாம் என்று சொன்னாராம் . எம்.ஜி.ஆர். கட்சி என்றாலே தி.மு.,க. தான் என்று புற நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் கருதி வந்த காலம் அது .தன்னுடைய உழைப்பு, அறிவு, ஆற்றல் ,அழகு , அனைத்தையும் தி.மு.க.வுக்கு அர்ப்பணித்து கட்சியை வளர்த்த எம்.ஜி.ஆரை*1972ல் தி.மு.க.வில் இருந்து தூக்கி எறிந்தனர் .**
மதுரையில் நடந்த தி.மு.க. மாநில மாநாட்டை முரசொலி மாறன் தலைமையில் கருணாநிதியின் மகன் மு.க முத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . 1972ல் பிள்ளையோ பிள்ளை மு.க.முத்து நடிப்பில் வெளியானது .அந்த நேரத்தில் பிள்ளை இல்லை என்று ஏங்குவோர் பலரிருக்க , இங்கு வந்திருக்கிறார் பிள்ளையோ பிள்ளை என்று எம்.ஜி.ஆரை ஏளனம் செய்து பேசினார்கள் .* இந்த பேச்சுக்களை கேட்டு கொதிப்படைந்த எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் கருப்பு சிவப்பு* நிறம் கொண்ட தி.மு.க. கொடியில் தாமரை சின்னத்தை வரைந்து உருவாக்கினார்கள் . அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் திரு. தாமரைக்கனி (முன்னாள் எம்.எல்.ஏ.)தலைமையிலும் மாவட்டத்தில் திரு. எஸ்.டி.எம்.சந்திரன் என்பவர் தலைமையிலும் கொடி ஏற்றி வைக்கப்பட்டது .அங்கு நடந்த முதல் கூட்டத்தில் தேரடி அருகில் திரு.சைதை துரைசாமி அவர்கள் பேசினார்கள் .நீங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் அவர்களின் கொள்கை காக்கும் பொறுமையாளர்கள்*என்றபோது , கூட்டத்தினர் நீங்கள் பொறுமை காக்க சொல்கிறீர்கள். ஆனால் எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்படுகின்றன . மு.க. முத்து*மன்றங்கள்* ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள் எம்.ஜி.ஆர். மன்றங்களை எல்லாம் கலைத்தால் நாங்கள் எங்கு செல்வது என்று வருத்தப்பட்டார்கள்*அவர்களது வருத்தத்தில் நியாயம் இருந்தது .ஏனென்றால் , ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், தன்னை எதிர்ப்பவர்களை, முறியடிப்பதில், அடிப்பதில் வல்லவர்* என்கிற கருணாநிதியின் வல்லமையை அறிந்து இருந்தவர் எம்.ஜி.ஆர்.*
ஆரம்பத்தில் கட்சி ஆரம்பிப்பதில் எம்.ஜி.ஆர். மிகவும் தயக்கம் காட்டினார் .அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.கல்யாணசுந்தரத்துடன் தொடர்பு கொள்ள விரும்பினார் . எந்த இடத்தில, எந்த நேரத்தில் சந்திப்பது ,யாருடைய காரில் செல்வது எப்படி பார்ப்பது என்று சில தயக்கங்கள்* இருந்தன* காரணம்*கருணாநிதியின் உளவாளிகள் ஆங்காங்கு உளவு பார்த்து தகவல்கள் சொல்வதற்கு நியமிக்கப்பட்டார்கள் .* எனவே மிகவும் ரகசியமாக வேறு ஒருவர் காரில் எம்.ஜி.ஆர். சென்று கல்யாணசுந்தரம் அவர்களுடன் பேசினார் .இருவரும் கலந்து பேசியபின் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்த எம்.ஜி.ஆர். ,நான் தனி மனிதன்**,என்னை யார் தாக்கினாலும் தாங்கி கொள்ளும் தைரியமும், எதிர்க்கும் மனோபாவமும் உள்ளது .***ஆனால் ,என்னால் என் அப்பாவி, ரசிகர்கள், தொண்டர்கள் அடிபடுவதை, காயப்படுவதை, உயிர் இழப்பதை எப்படி தாங்க முடியும் . எத்தனை குடும்பங்களை என்னால் காப்பாற்ற முடியும் . இதற்கு ஒரு முடிவு வேண்டும் அதனால்தான் கட்சி ஆரம்பிக்க முடிவு எடுத்துள்ளேன் என்று வெளிப்படையாக பேசினார் . எம்.ஜி.ஆர். மற்றவர்களை போல ஆட்சி, அதிகாரம், பதவி என்ற நோக்கத்தில் முடிவு எடுக்கவில்லை, தன்னை நம்பி இருப்பவர்கள் யாரும் காயப்பட்டு விடக் கூடாது , உயிர் இழந்து விடக்கூடாது , அதனால் அவர்களுடைய குடும்பங்கள் நிர்க்கதியாக தெருவில் நிற்க கூடாது என்று மனதார விரும்பினார் . அதனால் ஆரம்பத்தில் இருந்த தயக்கங்கள், இந்த பேச்சு வார்த்தைகளின் மூலம் நீங்கி கட்சி ஆரம்பிக்க தீர்க்கமான முடிவு எடுத்தார் எம்.ஜி.ஆர்.*
மேலும் பல தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.புதிய வானம், புதிய பூமி,* - அன்பே வா*
2.உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் - வேட்டைக்காரன்*
3.உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் -நவரத்தினம்*
4.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது - அடிமைப்பெண்*
5.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
6.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்* - தெய்வத்தாய்*
7.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் - உரிமைக்குரல்*
8.எத்தனை* பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு -ஆசைமுகம்*
9.ஏமாற்றாதே, ஏமாற்றாதே - அடிமைப்பெண்*
10.மக்களாட்சிக்காக போராடும் எம்.ஜி.ஆர். -நாடோடி மன்னன்*
-
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*அவர்கள்* 10/07/20அன்று சொன்ன*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சியை கண்டு களித்து ,ரசித்து வரும் பக்தர்கள் யாராவது சிலர்*ஒவ்வொரு நாளும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் அறிந்து ,நெகிழ்ந்து புகழ்ந்த வண்ணம் உள்ளார்கள் என்பது மனதிற்கு தெம்பை தருகிறது .அவரை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்ளும் பல்வேறு* விஷயங்கள் ஆச்சரியப்படத்தக்க வை . அதிசயிக்கத்தக்கவை* ஆகும்*
வாழ்க்கையில் ஒரு சொல், இசை, ஒரு ,வார்த்தை, ஒரு மனிதனின் சந்திப்பு எவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு எம்.ஜி.ஆர்.என்கிற ஒரு மாமனிதரின் பங்களிப்பு ஒரு உதாரணம் . மனிதநேய மிக்க மாமனிதரான எம்.ஜி.ஆர் என்கிற அற்புத மனிதரின் செய்கைகள், செயல்பாடுகள் ,உதவிகள் ,கொடைத்தன்மைகள், பல லட்சக்கணக்கான மக்களிடையே பல அற்புதங்கள்*நிகழ்த்தியுள்ளது என்று அவரது வாழ்க்கை வரலாற்று செய்திகள் ,சம்பவங்கள்*பல நூல்களில் அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன . இதற்கு பல உதாரணங்கள் கூறலாம் .மும்பையில் தாராவி பகுதியில் புலவர் ராமச்சந்திரன் என்பவர் எம்.ஜி.ஆர். நினைவாக பல நல்ல சமூகநல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார் .பல ஊர்களில், பல நகரங்களில்,ஏன் வெளிநாட்டில் கூட எம்.ஜி.ஆர். நினைவாக இன்றும் பல நல்ல சமூக நல திட்டங்கள் பலரால்* செயல்படுத்தபடுகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன .திலகம் என்றாலே நெற்றியில் இட்டுக் கொள்வது .மறைந்தும் மறையாத மக்கள் திலகமாகிய எம்.ஜி.ஆர். மக்களின் நெஞ்சங்களில் இட்டுக் கொண்ட* திலகமாக திகழ்கிறார் என்பதற்கு* இந்த சகாப்தம் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து பெருகி வரும் ஆதரவு, பாராட்டு, வாழ்த்து செய்தி நம்மை ஊக்குவித்து வருகிறது என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் .
சென்னை தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் சுமார் 15 வயதுள்ள சிறுவன் ஒருவன் பணியாற்றி வந்தான் . அலுவலகத்திற்கு வருபவர்களை கவனிப்பது , இருக்கையில் அமர செய்வது ,நாற்காலிகளை ஒழுங்கு படுத்துவது .போன்ற சிறுசிறு வேலைகள் செய்து வந்தான் .ஒரு நாள் ஏதோ கோபத்தில் எம்.ஜி.ஆர். அந்த சிறுவனை வேலையை விட்டு நீக்கி வெளியே அனுப்பி விடுகிறார் .* பத்திரிகையாளர் கார்த்தி என்பவர் அந்த சிறுவனை ஒரு டீக்கடையில் பார்த்துவிட்டு, ஏன் தலைவர் அலுவலகத்திற்கு வரவில்லை இங்கு என்ன வேலை உனக்கு என்று கேட்க, அந்த சிறுவன் தலைவர் என்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று கூறுகிறான் .அப்படியென்றால் எங்கு சாப்பிடுகிறாய், எங்கே தங்குகிறாய் என்று கேட்க*ஏதோ கிடைத்ததை சாப்பிடுகிறேன் .சில சமயம் ஏதாவது பிளாட்பாரத்தில் தூங்கிவிடுவேன் என்கிறான் . என்ன செய்வது என்று புரியவில்லை, எங்கே போவது என்று தெரியவில்லை என்று புலம்பி அழுதான் .* அதன் பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்த கார்த்தி எங்கே அந்த சிறுவனை காணோம் என்று கேட்க ,அவன் செய்த தவறுகளால் வெளியே அனுப்பிவிட்டேன் . என் பெயரை சொல்லி சிலரிடம் பணம் வாங்கியுள்ளான் செய்யத்தகாத செயல்களை செய்துள்ளான்*என்று கூறினார் .எம்.ஜி.ஆர். பதிலுக்கு கார்த்தி, அவன் எங்கே போவான், அவனுக்கு உற்றார், உறவினர் கிடையாது, சாப்பாட்டுக்கு வழியில்லை . ஏதோ பிளாட்பாரத்தில்தான் தங்குவான் போலிருக்கிறது . நான் ஒரு டீக்கடையில் அவனை பார்த்தேன் .விசாரித்ததில் தலைவர்தான்* என்னை வெளியே அனுப்பி விட்டார் என்று* வருத்தப்பட்டு சொன்னான் என்பதற்கு எம்.ஜி.ஆர். நான் முடிவெடுத்துவிட்டால் அதை மாற்ற முடியாது என்றார் .சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கார்த்தி எம்.ஜி.ஆரிடம் அவனுடைய பிரச்சனைகளான,உணவு, உடைகள் உறைவிடம், உறவினர் எவரும் கிடையாது என்று மீண்டும் சொல்லி*அவன் மிகவும் கஷ்டப்படுகிறான் , மீண்டும் தவறு செய்யமாட்டான் என்று தோன்றுகிறது என்று கூறினார் கார்த்தி. சில நிமிடங்கள் கழித்து, எம்.ஜி.ஆர். கார்த்தியிடம் நான் அவனை கூப்பிடும் நிலையில் இல்லை . வேண்டுமானால் நீங்கள் சென்று அவனிடம் பேசி , வேலையில் வந்து மீண்டும் சேர சொல்லுங்கள்*மீண்டும் தவறுகள் நடக்காத வண்ணம் அவனுக்கு அறிவுரை கூறுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். எந்த பிரச்னையாக இருந்தாலும் , சொல்கிறவர் சின்னவரா, பெரியவரா , முக்கியஸ்தரா என்று பார்க்காமல் பிரச்னையின் சூழ்நிலையை கருதி , மனம் இரங்கி , மீண்டும் அந்த சிறுவனை மன்னித்து* வேலையில் சேர்த்துக் கொண்டாராம் எம்.ஜி.ஆர்.*
கார்த்தி என்பவர் சென்னை டீக்கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவராக* சில காலம்*இருந்தார்.* *டீக்கடை உரிமையாளர் சங்கத்திற்கான வித்து, விதை என்பது*எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதரின் பேராதரவால் உருவானது .என்பது பலரும் அறியாத விஷயம் .ராயப்பேட்டையில் சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்க அலுவலகம் மறைந்த கார்த்தி வைத்திருந்தார் .அவருக்கு சொந்த வீடு கிடையாது . எம்.ஜி.ஆர். முதல்வராக பக்கத்தில்* இருந்தபோது வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு வீடுகூட வாங்கியிருக்கலாம் .ஆனால் வாங்கவில்லை .தான் எந்த வசதியும் பெற்றுக் கொள்ளாதவர் , தனக்கென்று*எதையும் வாங்கி கொள்ளாமல் ஒரு அர்ப்பணிப்போடு பணியாற்றியவர் .பல அமைச்சர்கள் அவரை பார்ப்பதற்காக, அமைச்சராவதற்கு முன்னால்** நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அண்ணா பத்திரிகை அலுவலகத்தில் மணிக்கணக்காக காத்திருந்த காலம் உண்டு .அந்த* காட்சியை நானே பலமுறை*பார்த்திருக்கிறேன் .நான்* கார்த்தியை பார்க்க செல்லும்போது ,ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் அவரை பார்க்க காத்திருந்த காட்சி என் நினைவில் பசுமையாக உள்ளது .தான் மறையும் தருவாயில் கூட எந்தவிதமான அரசு வீடோ, உதவியோ* பெறுவதில் முனைப்பு காட்டாத அப்பழுக்கற்ற பத்திரிக்கையாளர் என்பது* ஊடக துறையில் குறிப்பிடபட* வேண்டிய விஷயம் .
கார்த்தி என்பவர் எதற்காக இந்த சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கத்தை உருவாக்க நேர்ந்தது* என்பது பலரும் அறிந்து கொள்ள வேண்டிய* சுவையான விஷயம்* . தி.மு.க. ஆட்சியில் ,ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு எதிரான போக்கை கருணாநிதி கடைபிடித்தார் . தன் மகன் மு.க. முத்து சினிமாவில் வேரூன்றும் வகையில் எம்.ஜி.ஆர். மன்றங்களை* * முற்றிலும்**கலைப்பது , மு.க. முத்து மன்றங்களை தோற்றுவிக்க ஊக்குவிப்பது , அது குறித்து நிருபர்களுக்கு உரிய தகவல்கள் அளிப்பது* பிள்ளையோ பிள்ளை படத்திற்கு போதிய விளம்பரம் தருவது , திரை அரங்கு உரிமையாளர்களுக்கு*மு.க. முத்து படம் ஓட்டுவதற்கு மிரட்டல் விடுவது ,என்று பல செயல்களில்*அன்றைய முதல்வர் கருணாநிதி மும்முரமாக ஈடுபட்டார் .அதே சமயத்தில் எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி என்ற விவகாரத்தை கையில் எடுத்து ,டீக்கடை வைத்திருந்தவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் ,அரசு மூலமும், மாநகராட்சி மூலமாகவும் நெருக்கடிகள், தொல்லைகள்** அளிக்கப்பட்டது .டீக்கடை பணியாளர்கள் இரவில் நேரம் கழித்து வீடு திரும்பினாலோ, வெளியில் சென்றாலோ,சந்தேக வழக்கு காவல்துறை பதிவு செய்யும் .* கடைக்கு வெளியே விளம்பர பலகை, தட்டிகள் வைத்திருந்தால் மாநகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்வார்கள் .இந்த துன்பங்கள், தொந்தரவுகள் மிக அதிகம் பெருகி வந்த காலத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த திரு.பக்தவச்சலம் என்பவர்*டீக்கடை உரிமையாளர் சங்கம் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி வந்தார் . அவருடன் இருந்த கார்த்தி ,எம்.ஜி.ஆரை சந்தித்து ஆலோசனைகள் கேட்க, எம்.ஜி.ஆர். அதன் அவசியத்தை வலியுறுத்தி கண்டிப்பாக தொடங்க வேண்டி* தன்னுடைய மேலான ஆதரவை தெரிவித்தார்*எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலின்பேரில் கார்த்தி சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கத்தை தோற்றுவித்தார் . இந்த சங்கம் இன்றைக்கும் இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறதென்றால் இதற்கு முதலில் வித்திட்டவர் திரு.பக்தவச்சலம் என்கிற தீவிர கம்யூனிஸ்ட் என்றால் அதை, வற்புறுத்தி, வலியுறுத்தி ஆரம்பிக்க தூண்டியவர் எம்.ஜி.ஆர்.தான் என்று சொன்னால் மிகையாகாது .**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ராஜராஜன் படத்தில் சோழ மன்னனாகவும், மகாதேவியில் சோழ மன்னன் வல்லபனாகவும் , மன்னாதி மன்னனில் சேர மன்னனாகவும், ராணி சம்யுக்தாவில் ராஜபுத்திர மன்னனாகவும் ,காஞ்சி தலைவனில்* பல்லவ மன்னனாகவும் , கலங்கரை விளக்கத்தில் நரசிம்மவர்ம பல்லவனாகவும் , மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் , பாண்டிய மன்னனாகவும் இப்படி எல்லா மன்னர்களாகவும், தன்னை உருவாக்கி மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக இன்றும் நிலைத்து நீடித்து நிற்கிறார்.அதனால்தான் எந்த கால கட்டத்திலும் எந்த ஆட்சியில் இருந்தும்* மக்களை மறவாத மன்னனாக தன்னைக் காட்டிக்கொண்டு படத்தில் நடித்ததால்தான் மக்கள் அவரை ஆட்சி பீடத்தில் தொடர்ந்து பத்தாண்டுகள் அமர வைத்தனர் .
எம்.ஜி.ஆர். அவர்கள் பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் எந்த அளவிற்கு மற்ற தலைவர்களும் மதிக்கத்தக்க பண்பாளர் என்பதற்கு உதாரணம் .ஒருமுறை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தார் .அவர் பிரதமராக இல்லாதபோதும் வருகை தந்துள்ளார் .அவர் பதவியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் ,அவருக்கு மரியாதை தரும் வகையில் அவர் அருகில் எம்.ஜி.ஆர். அமராமல் நின்று கொண்டிருப்பார் .* எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகும் கூட ஒருமுறை இந்த சந்திப்பின்போது இந்திரா* காந்தி மிஸ்டர் எம்.ஜி.ஆர். நீங்கள் அமரவில்லை என்றால் நானும் அமர மாட்டேன் என்று சொல்லி உட்கார வைத்தார் . தன்னைவிட உயர் பதவியில் உள்ளவர்களை என்றும் மதிக்கும் பண்பாளர் எம்.ஜி.ஆர். என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் .
மேலும் தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.என்றும் பதினாறு, வயது பதினாறு - கன்னித்தாய்*
2.எம்.ஜி.ஆர். =டி.கே.பகவதி உரையாடல் - நம் நாடு*
3.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -ரிக்ஷாக்காரன்*
4.எம்.ஜி.ஆர்.-எஸ்.வி.ரெங்கராவ்* உரையாடல் -நம் நாடு*
5.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -நினைத்ததை முடிப்பவன்*
6.இது நாட்டை காக்கும் கை - இன்று போல் என்றும் வாழ்க*
.
-
1966 நவ 11 ல் வெளிவந்த மகத்தான வெற்றிப் படம் "பறக்கும் பாவை" r r பிக்சர்ஸின் முதல் வண்ணப்படம். அதேபோல் r r பிக்சர்ஸுடன் எம்ஜிஆர் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படமும் இதுதான் அழகான வண்ணக்காட்சிகளையும் அருமையான பாடல்களையும் அற்புதமான சண்டை காட்சிகளையும் வியத்தகு சர்க்கஸ் காட்சிகளையும் எதிர்பாராத சஸ்பென்ஸ் காட்சிகளையும் உள்ளடக்கிய "பறக்கும் பாவை" வெளியான காலச்சூழல் சரியில்லை என்று நினைக்கிறேன்.
இப்போது பார்த்தாலும் படம் ஒரு காட்சி கூட தளர்வில்லாமல் விறுவிறுப்பாக செல்லும். சர்க்கஸில் மிருகங்களை தடை செய்தவுடன் மெல்ல மெல்ல சர்க்கஸ் அழிந்து போவதை நாம் கண்கூடாக காண்கிறோம். நல்லவேளை "பறக்கும் பாவை" அதற்கு முன்பே எடுக்கப் பட்டதால் சில அபூர்வமான சர்க்கஸ் காட்சிகளை நாம் காண முடிகிறது. .1966 தீபாவளிக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலர் படம்.
"பறக்கும் பாவை"யோட "செல்வம்," "வல்லவன் ஒருவன்" போன்ற படங்கள் வந்தாலும் வசூலில் தூள் கிளப்பிய படம் "பறக்கும் பாவை"தான்.
எம்ஜிஆர் படங்களை பொறுத்தவரை முதல் 4 வாரங்களுக்கு வசூலில் அதிக வித்தியாசம் இருக்காது. ஏனென்றால் முதல் 4 வாரங்கள் எல்லா எம்ஜிஆர் படங்களுமே ஹவுஸ்புல்லாகத்தான் செல்லும். 4 வாரங்களுக்கு பிறகு படம் சுமாரான வெற்றியடைந்தால் அப்போதுதான் சிறிது ஏற்றம், இறக்கம் காணப்படும்.
"பறக்கும் பாவை"யை அடுத்து டிசம்பர் 9 ல் வெளியான "பெற்றால் தான் பிள்ளையா"? பெரிய வெற்றியை பெற்றதால் பிற்பகுதியில் வசூலில் சற்று தளர்வு ஏற்பட்டது உண்மைதான்.
இருப்பினும் முதல் 4 வாரங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக சொல்லப்படும் கணேசனின் "திருவிளையாடல்" "சரஸ்வதி சபதம்" போன்ற படங்கள் திருவண்ணாமலையில்
"பறக்கும் பாவை"யிடம்
பட்ட பாட்டை பாருங்கள் .
தீபாவளிக்கு "பறக்கும் பாவை"யுடன் வந்த "செல்வம்" முதல் வாரவசூலில் முக்கிய நகரங்களில் மிகவும் பின்தங்கியிருப்பதையும் பார்க்கலாம்.
அங்கு மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இதுதான் கதை.
அதையடுத்து 67 ஜன 13 ல் வெளியான தாய்க்குத் தலைமகன் .வரும் வரை சென்னையில் 63 நாட்கள் ஓடியது.
மற்ற நகரங்களில் அதிகபட்சமாக
77 நாட்கள் வரை ஓடியது. மறு வெளியீட்டிலும் தொடர் ஓட்டம் ஓடி
வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.
"பறக்கும் பாவை" பட வெளியீட்டை ஒட்டி வேலூர் எம்ஜிஆர் மன்றத்தினர் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது கூடுதல் சிறப்பு. அதுவரை வெளியான எம்ஜிஆரின் சாதனை படங்களின்
முழு விபரங்களை பதிவு செய்திருந்தார்கள். அந்த மலரின் முகப்பு தோற்றத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
எம்ஜிஆரின் பழைய படங்களின் லாபத்தை வைத்தே. T r ராமண்ணா வேறு நடிகர்களை வைத்து பல புதிய படங்களை தயாரித்தார். அதில் முக்கியமான "நான்", வெள்ளிவிழா கண்ட படம். "தங்க சுரங்கத்தி"ல் தடுக்கி விழுந்த பின்னும் "மாட்டுக்கார வேலனை" இயக்கும் வாய்ப்பை மக்கள் திலகம்
நட்புக்காக கொடுத்தாலும் அதை மறுத்ததால் ப.நீலகண்டனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அவர் எடுத்த படங்கள் எல்லாமே சறுக்கல்கள்தான்.
-
"அடிமைப்பெண்" பிரமாண்ட படத்தின் செலவு சுமார் 40 லட்சம் என்று படம் வெளியாகும் நேரத்தில் சொல்லப்பட்டது. இதில் எம்ஜிஆர் சம்பளம் சேர்க்கப்படவில்லை. கோடியை தாண்டி வசூல் செய்தாலுமே போட்ட முதலை எடுக்க சுமார் 6 மாத காலம் தேவைப்பட்டது "அடிமைப்பெண்ணு"க்கு. அதன்பின்பு வெளியான "சிவந்த மண்ணி"ன் தயாரிப்பு செலவு தமிழுக்கு மட்டுமே சுமார் 42 லட்சத்தை தாண்டியது.
ஆனால் வசூல் அந்த அளவுக்கு எட்டிப்பிடிக்க முடியவில்லை. இரண்டு மொழிகளிலும் சேர்த்து சுமார் 50 லட்சத்திற்கும் மேல் கடனை பெற்றது ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனம்.
இவ்வளவு நடந்த பின்னும் பெரியண்ணன் என்றொரு தயாரிப்பாளர் சிவாஜியை வைத்து பெரும் பொருட்செலவில் உருவாக்கிய படம்தான் "தர்மம் எங்கே?" சிவாஜியின் அருமை டைரக்டர் A C திருலோகச்சந்தர் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்த படம்தான் தர்மம் எங்கே? தயாரிப்பு செலவு 50 லட்சம் என்றும் பிரமாண்ட படம் என்றும் சொல்லப்பட்டது.
சிவாஜியை பொருத்தவரை பிரமாண்ட படங்கள் எதுவும் ஓடியதாக என் நினைவில் இல்லை.
புதிய பறவை, கர்ணன், சிவந்த மண், ராஜ ராஜ சோழன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் பெரிய ஊர்களில் கூட 5 வாரம் தாண்டவில்லை. படத்தை முதலில் பார்த்தவர்கள் மிகவும் நல்லவர்கள். "யாம் பெற்ற துன்பம் வையகம் பெறாமலிருக்க" தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் அலறியபடியே ஓடினார்கள். எங்கள் ஊரில் முதல் நாள் மாலை 6 மணிக்காட்சிக்கு படம் வாய் பிளந்து நிற்பதை பார்த்தோம்.
இழுத்து பிடித்து ஓட்டினாலும் ஒரு வாரம் கூட ஓட்ட முடியாது என்று நினைத்த படத்தை 11 நாள் ஓட்டி 1972 ல் மிகப் பெரும் சாதனை புரிந்ததை அவர்கள் வாய் திறக்கவே இல்லை. மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம், திறமையான டைரக்டர் இருந்தும் படத்தை சிவாஜியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் அனைவரும் தோல்வியடைந்தனர். சிவாஜியின் மிகை நடிப்பைக்கண்டு. புலியின் பள்ளியறைக்குள் வந்த புள்ளிமானைப்போல் பதறி, சிதறி, பின் கதறி சென்ற மக்களை கண்டு நெஞ்சம் உதறல் எடுத்ததை மறவேன்.
வாணிஸ்ரீயால் வாழ்ந்த வசந்த மண்டபத்தையும் ஜெயாவால் வாழ்க்கை பெற்ற மூக்கையா தேவரையும் மறந்து நீங்க பேசுவதில் தர்மம் எங்கே? என்று தேடினாலும் கிடைக்காது. 1972ல் நடந்த இத்தனை பெரும் தோல்வியை மறைத்து மற்ற நடிகர் நடிகைகளால் வெற்றி பெற்ற வேறு சில படங்களை சொல்லி பெருமை கொள்வதை என்னவென்று நினைப்பது. ஒரு நடிகரின் நட்சத்திர மதிப்பு என்பது அவர் நடித்த படுதோல்வி படங்களின் ஓட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தர்மம் எங்கே? மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன? நீங்களே சொல்லுங்கள்.
போட்ட பணத்தில் 15 லட்சம் கூட திரும்பியிருக்க வாய்ப்பில்லை.
மொத்தம் 35 லட்சத்துக்கு மேல் தயாரிப்பாளருக்கு நஷ்டம்.
தயாரிப்பாளர் 'பெரியண்ணன்' படம் வெளிவந்த பின்பு 'சின்னத்தம்பி' ஆகியிருப்பார் என்றே நினைக்கிறேன். மிகை நடிப்பு என்று நான் சொல்லவில்லை அந்தப்படத்தின் விமர்சனத்தை எழுதிய அறந்தை நாறாயணன் அங்கலாய்ப்பதை பாருங்கள். அதேபோல் ராஜ ராஜ சோழன் மூலம் ஜி.உமாபதி, ஜீரோ உப்புமாபதி ஆனதையும் மறக்க முடியுமா?
எம்ஜிஆரை வைத்து கோடி ரூபாய் செலவில் 70 mm படம் எடுக்க போட்டிருந்த திட்டமும் பணால் ஆகிவிட்டதை நாங்கள் மறவோம். அறந்தை நாறாயணனும் சாதாரணமாக அந்த படத்தை பார்த்துவிடவில்லை. அந்த படத்தை பார்ப்பதென்பது பாலைவனத்தில் தண்ணீரும் ஒட்டகமும் இல்லாமல் அலைவதற்கு ஒப்பானது என்பது
அவர் எழுதிய விமர்சனத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
என்னை பொறுத்தவரை வழக்கமான சிவாஜி படங்களில் காணப்படும் மிகை நடிப்பு நட்சத்திர பட்டாளங்களின் அணிவகுப்பு, சிறந்த டைரக்டர், சிறந்த இசையமைப்பாளர், அருமையான வண்ணம், காஸ்ட்லி படப்பிடிப்பு இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும் படம் தோல்வியடைய காரணம் என்ன? உங்களுக்கு ஏதாவது தோணுகிறதா? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பார்கள். அது எது? சிவாஜியின் அளவு கடந்த அலறல் மற்றும் மிகைக்கும் மிகையான நடிப்பே?
என்றால் அது மிகையாகாது.
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 12/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்திற்கு சமமாக பல மூன்றெழுத்துக்கள் உள்ளன கடமை எனும் மூன்றெழுத்தை உயிர் மூச்சாக கடைபிடித்தார் .கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு எனும் மூன்று கோட்பாடுகள்*அடங்கிய அவர் ஆரம்பத்தில் இருந்த கட்சியான* தி.மு.க. மற்றும் அதன் தலைவர் அண்ணா மூன்றெழுத்து அன்பு, பாசம்,,நேசம் ,, அறம், பண்பு, வீரம் ,, அழகு ,பொறுமை , வாய்மை,தலைமை ,கொடைமை* புதுமை, திறமை ,இளமை ,பணிவு , புகழ் ,**உதவி ,ஆகிய மூன்றெழுத்துக்களையும் வாழ்க்கையில் கடை பிடித்ததால் புகழின் சிகரத்தில் குடிகொண்டார் .* எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்துதான் பலருடைய இதயங்களில் இன்று வீற்றிருப்பதோடு ,பலருக்கு சுவாசக்காற்றாக நிறைந்திருக்கிறது ..*
இதயவீணை படத்தில் வரும் திருநீறை செல்வி மங்கையற்கரசி என்ற பாடலும் ,நினைத்ததை முடிப்பவன் படத்தில் உள்ள பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த எனும் பாடலும்* எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் /பக்தர்கள் இல்ல திருமணங்களில் தவறாமல் இடம் பெறும்* பாடல்களாகும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி பாடுவதாக ரசிகர்களும், பக்தர்களும் கருதுவதே*இதற்கு*காரணம்*
பொதுவாக எம்.ஜி.ஆர். ஒரு நுட்பமான கவனிப்பாளர் என்பதற்கு பல உதாரணங்களை சுட்டிக் காட்டலாம் .**.அவற்றில் ஒன்று . பெங்களூரில் இடை தேர்தல் ஒன்றில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டுராவ் போட்டியிடுகிறார் . குண்டுராவ் எம்.ஜி.ஆரின் பரம ரசிகர் .* எனவே குண்டுராவ்*எம்.ஜி.ஆரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , தாங்கள் அவசியம் எனக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் . அதன்படி எம்.ஜி.ஆர்.* தனது சக* அமைச்சர் எச். வி.ஹண்டேவை உடன் அழைத்து செல்கிறார் . குண்டுராவ்* குறிப்பிட்ட நேரத்தைவிட சுமார் 4 மணி நேரம்**தாமதமாக* எம்.ஜி.ஆர். சென்றடைகிறார் .* ஆனாலும் சுமார்*25000 பேர் அங்கு திரண்டு இருந்தனர் ..அந்த கூட்டத்தை பார்த்ததும் ,கண்டிப்பாக குண்டுராவ் ஜெயித்துவிடுவார் அன்று ஹண்டே*ஆருடம் சொன்னார் . குண்டுராவை எதிர்த்து போட்டியிடுபவர் ராமகிருஷ்ண ஹெக்டே*. எம்.ஜி.ஆர். அதை மறுத்து , இங்கு ஹெக்டேதான் ஜெயிப்பார் என்றவுடன் ஹண்டே*எதை வைத்து சொல்கிறீர்கள் . குண்டுராவுக்கு நல்ல கூட்டம் கூடியிருக்கிறதே என்றார்*எம்.ஜி.ஆர்.சொன்னது என்னவென்றால் அப்படி இல்லை , பொதுவாக நான் எங்கு பொது கூட்டத்திற்கு சென்றாலும் முதலில் ரசிகர்கள், கட்சி*தொண்டர்கள் எனக்கு வணக்கம் சொல்வது வழக்கம் . அதன்பின்தான் அவர்களுக்கு நான் வணக்கம் சொல்வேன்*. இங்கு நேர்மாறாக நடக்கிறது . நான் வணக்கம் சொன்னபிறகு தான் கூட்டத்தினர் எனக்கு*வணக்கம் தெரிவித்தார்கள்*என்று தன்* நுட்பமான ஆய்வை,*விஷயத்தை*வைத்து தேர்தல் முடிவின்*எதிர்பார்ப்பை**தெளிவாக சொன்னார் .*.
எங்க வீட்டு*பிள்ளை திரைப்படத்தில்*எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்கள்*ஏற்று நடித்தார் .இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையேயான வித்தியாசத்தை, நடை, உடை, பாவனை, முகத்தில் உணர்ச்சி , சோகம், வீரம் ,கோழைத்தனம் ,மிரட்டல் ,பணிவு , துணிவு* என்று பலவிதங்களில் நடிப்பில்*மெருகேற்றி*நடித்திருந்தார் .1965ம் ஆண்டின் சிறந்த நடிகராக*சினிமா*ரசிகர்கள் சங்கம்*எம்.ஜி.ஆரை*தேர்ந்தெடுத்தது .குறிப்பாக*கோழை எம்.ஜி.ஆர். ஓட்டலில் இரண்டு இட்லி தட்டில் வைத்து சாப்பிடும்போது* அப்பாவித்தனத்தை காட்டி*ரசிகர்களை நெகிழவைப்பார் .* அதற்குமுன்பு வரும் வீரன் எம்.ஜி.ஆர். இட்லி ,4 மசாலா* தோசை 3, ஊத்தப்பம் 3, பொங்கல் 4 என்று கேட்டு வாங்கி சாப்பிடும்போது அசத்தலாக இருக்கும்*. சப்ளையர்* மீண்டும்**இவர் அளிக்கும்*ஆர்டரை*பார்த்து மலைத்து போய் , வடை கேட்கும்போது இல்லை என்று சொல்லிவிடுவான் .* அதற்கு*எம்.ஜி.ஆர்.திட்டியவாறு சிற்றுண்டியை வாயில் திணிக்கும்*காட்சி, நகைச்சுவையாகவும், ஆர்ப்பாட்டமாகவும் இருக்கும் .அந்த காட்சியில் அரங்கமே*அதிரும் .வீரன் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால்*மாமனார் வீட்டுக்கு சென்று*அங்கு பெரிய விருந்தே*சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ,விவரம் அறிந்து அங்கு வரும் வில்லன் நம்பியார்*எம்.ஜி.ஆர். சாப்பிடும் ,வேகம், லாவகம், வாயில் திணிக்கும்*பாங்கு.உணவை*அசை போடும் விதம் எல்லாவற்றையும் பார்த்து, அரண்டு , மிரண்டு ,மலைத்து போய்விடுவார் இந்த காட்சியிலும் எம்.ஜி.ஆரின்*நடிப்பை வரவேற்று ரசிகர்கள் அலப்பரையும் கைதட்டல்களும் , விசில் சத்தமும் அடங்க வெகுநேரமாகும்*.பொதுவாக எம்.ஜி.ஆர். சாப்பாட்டு**பிரியர்*. அசைவ*உணவுகளை விரும்பி சாப்பிடுவார் . அதிலும்*மற்றவர்களை உண்ணவைத்து ,அவர்களுக்கு வேண்டியதை*,விரும்பியதை தானே*பரிமாறி ,ரசித்து,,சாப்பிட வைத்து**பார்ப்பது*அவரது*குணாதிசயங்களில் ஒன்று . *
கோடிக்கணக்கான மாலைகள்*தாங்கிய*வை* எம்.ஜி.ஆரின் தோள்கள்*என்று சொல்வார்கள் .* அவருக்கு*மாலைகள்*விழாத*நாட்களே*இல்லை எனலாம் .மாலைகள்*எப்போதும்*ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலோ , வீட்டிலோ, அரசு விழாக்களிலோ, கட்சி*கூட்டங்களிலோ* விழுந்தவாறு*இருக்கும் . எங்க வீட்டு*பிள்ளை படத்தில்*நான் ஆணையிட்டால் பாடல் துவங்கும்*முன்பு , எம்.ஜி.ஆரை*,பத்திரத்தை*படித்து கையெழுத்து*இடுவதற்கு அழைக்கும் காட்சி .பத்திரத்தை*படித்து முடித்து கையெழுத்து*போட விருப்பமில்லை என்றதும் சார்பதிவாளர் சென்றபின் நம்பியார்*எம்.ஜி.ஆர். கன்னத்தில் அறைவார்* . பின்பு எம்.ஜி.ஆர். நம்பியார் கன்னத்தில் அறைவார்*. அதை கண்ட*குடும்பத்தினர் ,சுற்றியுள்ள அனைவ்ரும்* வெலவெலத்து போய்விடுவார்கள் . நம்பியார்*சவுக்கால்*எம்.ஜி.ஆரை*அடிக்க முயல , எம்.ஜி.ஆர். அதை பிடுங்கி*சிலம்பத்தில் 5ம் வீடு என்பார்களே அதன்படி*ஸ்டெப்*வைத்து சவுக்கால் அடிக்க ஆரம்பிப்பார் . இந்தியில் திலீப் குமாரும் , தெலுங்கில்*என்.டி.ராமாராவும் நடித்ததைவிட இந்த காட்சியில் எம்.ஜி.ஆருக்கு*ரசிகர்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பும் , பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் குவிந்தன . ரசிகர்கள் இந்த காட்சியில் கொண்டாட்டம், கூத்தும்*கும்மாளமாக இருக்கையை*விட்டு குதித்து*ஆடிய*விதம் கண்கொள்ளாக்காட்சி . இந்த காட்சி மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு காரணம்*எம்.ஜி.ஆருக்கு சிலம்பம் தெரிந்ததுதான் . அதனால்*மிக எளிதாக, ஸ்டைலாக, அழகாக, மிடுக்காக , லாவகமாக சாட்டையை*சுழற்றி*ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டார் . தொடர்ந்து* அடுத்து* வந்த*பாடலான*நான் ஆணையிட்டால் பாடலில்*அசத்தியிருப்பார் . இந்தியிலும், தெலுங்கிலும்*மற்ற ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். அளவிற்கு*இந்த காட்சிகளில் சோபிக்கவில்லை என்பதே*ரசிகர்களின் விமர்சனம் .
கோழை எம்.ஜி.ஆரை வில்லன்நம்பியார்* சவுக்கால் அடித்த*பின்பு ,எம்.ஜி.ஆருடன் பண்டரிபாய், பேபி ஷகீலா* ஆகியோர்* இப்படி துன்பப்படுவதைவிட மூவரும்*இறந்துவிடலாம் என்று முடிவெடுக்க, எங்களை* காப்பாற்ற யாருமே இல்லையா*என்ற கூக்குரலுக்கு வீரன் எம்.ஜி.ஆர். அறிமுக காட்சியில்*. உடனே அடுத்த காட்சியில் நான் இருக்கிறேன் என்று ஸ்டுடியோவில் படப்பிடிப்பில்*அனைவரையும் அடித்து வெளுத்து கட்டுவார்* இந்த காட்சியும் ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பை*பெற்றது .* ஒரு திரைப்படத்தில்*காட்சி*எப்படி அமைய வேண்டும் , எந்த காட்சி, முன்னரும் , எந்த காட்சி*பின்னரும்*இருக்க வேண்டும் , எந்த காட்சிக்கு*அதிக* முக்கியத்துவம் தரவேண்டும்*, வசனங்கள் எப்படி அமைய வேண்டும் , எந்த கோணங்களில் காமிராவை வைக்க வேண்டும் , படத்தொகுப்பில்*எந்தெந்த காட்சிகளை நீக்கவேண்டும்*, பாடல்கள் எப்படி அமையவேண்டும் , நடிகர் நடிகைகளை*தேர்ந்தெடுக்கும்*விதம் என்று தீர்மானிக்கும்* , ஒரு கதாசிரியராக, இயக்குனராக, புகைப்பட வல்லுனராக, தொழில்நுட்ப வல்லுனராக, இசை அமைப்பாளராக, வசனகர்த்தாவாக , பன்முக தன்மை கொண்ட சகலகலா வல்லவனாக*திகழ்ந்ததால்தான்* திரையுலகில் முடிசூடா*மன்னனாகவும், வசூல் சக்கரவர்தியாகவும் பல ஆண்டுகள்*முன்னணியில், முதலிடத்தில் இருந்தார் .*
மேலும் தகவல்கள் அறிய*அடுத்த* அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த* பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------
1.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் - நான் ஏன் பிறந்தேன்*
2.உனது விழியில் எனது*பார்வை* - நான் ஏன் பிறந்தேன்*
3.திருநீறை*செல்வி*மங்கையற்கரசி - இதய வீணை*
4..பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த - நினைத்தை முடிப்பவன்*
5.எம்.ஜி.ஆர். - டி.கே. பகவதி உரையாடல் - நம் நாடு*
6.வீரன் - கோழை எம்.ஜி.ஆர். ஓட்டலில் சாப்பிடும் காட்சி-எங்க வீட்டு பிள்ளை*
7.நகரசபை தலைவராக எம்.ஜி.ஆர். தேர்வு - நம் நாடு*
8.ஆடி வா , ஆடி வா* ஆட பிறந்தவளே ஆடி வா -அரச கட்டளை*
9.கோழை*எம்.ஜி.ஆர். - பண்டரிபாய் -உரையாடல்* - எங்க வீட்டு பிள்ளை*
10.என்னை தெரியுமா*,நான் சிரித்து* பழகி - குடியிருந்த கோயில்*
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 14/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*----------------------------------------------------------------------------------------------------------------------------
இடது சாரி இயக்கத்தில் மிகவும் பற்றுள்ளவர் திரு.கார்த்தி என்னும் பத்திரிகையாளர் .தொழிற்சங்கத்திலும் நல்ல ஈடுபாடு உள்ளவர் ..அவர் பல்வேறு இலக்கியத்துறையில் பணியாற்றியவர் .அவரை பற்றி அறிந்த எம்.ஜி.ஆர். அவருடன் தொடர்பு கொள்கிறார் . ஒரு சமயம் மக்கள் குரல் பத்திரிகையில் கார்த்தி பணியாற்றி வரும்போது அவருக்கும், நிர்வாகத்தினருக்கும்* சரியான புரிந்துணர்வு இல்லை . அதனால் மக்கள் குரல் நிறுவனத்திடம் இருந்து விலக* முடிவு எடுத்து எம்.ஜி.ஆரிடம் சொல்கிறார் . கொஞ்சம் பொறுங்கள் .விரைவில் உங்களுக்கு வேறு வேலை காத்திருக்கிறது .நானே அழைக்கிறேன் என்கிறார் . ஆனால் எம்.ஜி.ஆரிடம் சொல்லாமலேயே சில நாட்களுக்கு பிறகு மக்கள் குரல் பத்திரிகையில்* இருந்து விலகுகிறார் .,அந்த தகவலை எம்.ஜி.ஆர். அறிந்து கொள்கிறார் . அ .தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு பகுதியில் அவர் வீடு அமைந்துள்ளது .அவர்* அருகே உள்ள ஒரு விறகு கடையில் இருந்து எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொள்கிறார் .அப்போது எம்.ஜி.ஆர்.தலைமை அலுவலகத்தில் இல்லாததால் விறகு கடையின் தொலைபேசி எண்ணை குறித்து கொள்ளும்படியும், எம்.ஜி.ஆருக்கு தெரிவித்து விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார் அதன்பின் எம்.ஜி ஆர் 3 முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை . கார்த்தியும் சில நாட்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார் . ஒரு நாள் விறகுக்கடை உரிமையாளர் கார்த்தியிடம் எம்.ஜி.ஆர். மிக முக்கியமான மனிதர் அவர் பலமுறை தொடர்பு கொண்டு உங்களிடம் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . முடிந்தால் நேரில் வர சொல்லுங்கள் என்றார் .அவ்வளவு பெரிய தலைவர் , முக்கிய மனிதர் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ளும்போது எனக்கே மிகவும் கவலையாகவும், சங்கடமாகவும் உள்ளது .இதனால் எனக்கு ஏதாவது சிக்கல் வரலாம் .நான் வேண்டுமென்றே உங்களுக்கு தகவல் தரவில்லை என்று அவர் தவறாக நினைக்கலாம்*. நீங்கள் முதல் வேலையாக அவரை போய் பாருங்கள் என்றவுடன் எம்.ஜி.ஆரை நேரில் சென்று சந்திக்கிறார் . கொஞ்ச நாட்களாக உங்களோடு நான் தொடர்பில் இல்லை .மன்னிக்கவும் என்கிறார் விறகு கடை தொலைபேசி எண்ணில் இருந்து கார்த்தி . .* உடனே எம்.ஜி.ஆர். அதெல்லாம் பரவாயில்லை .இப்போதாவது உங்களுடைய தொடர்பு கிடைத்ததே அதுவரையில் மகிழ்ச்சி.,நீங்கள் ஒன்றும் யோசிக்காதீர்கள் .உடனே நேரில் வந்து பாருங்கள் என்றார் .நேரில் வந்ததும்*..நீங்களும் சோலை அவர்களும் சேர்ந்து நான் தொடங்கும் அண்ணா தினசரி பத்திரிகையை செவ்வனே நடத்த வேண்டும். இது என் அன்புக்கட்டளை .அதற்கான ஆயத்த வேலைகளை உடனே ஆரம்பியுங்கள்* என்று சொல்லி தனக்கு மிகவும் பிடித்தமான நண்பர்களான திரு.சோலை , திரு.கார்த்தி அவர்களுக்காகவே இந்த அண்ணா நாளிதழை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார் .கார்த்தி என்பவர் ஊடகத்துறையில் அப்பழுக்கற்றவர் . ஊடகத்துறை நல்ல* எழுச்சியுடன் வளர்ச்சி பெற முக்கியமான நபர்களில் ஒருவர் என்பதை எம்.ஜி.ஆர். நன்கு அறிந்து இருந்தார் .அண்ணா பத்திரிகையை இளைஞர்கள் அதிகம் படிக்கும் பத்திரிகையாக நிறைய சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் அதற்கு இளைஞர்களான உங்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக நான் இருப்பேன் என்று எம்.ஜி.ஆர். கார்த்தியிடம் சொல்லியிருந்தார் .
பல்வேறு விஷயங்களில் எம்.ஜி.ஆருடன் கலந்து பேசி முடிவு எடுப்பார் கார்த்தி .ஒருமுறை கவிஞர் கண்ணதாசனிடம் இருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது என்று துணை ஆசிரியர் ராமன் என்பவர் தகவல் அளித்தார் . அப்போது கார்த்திக்கு திருமணம் ஆகியிருந்த நேரம் . சில நாட்களுக்கு பிறகு மனைவியை ஊரில் இருக்க சொல்லிவிட்டு ஊடகத்துறையில் பணியாற்றி வந்தார் . அப்போது கண்ணதாசன் அலுவலகத்தில் இரவில் தங்குவார் . அப்போதுதான் அவருக்கு குடிப்பழக்கம்* ,யார் மூலமோ*ஆரம்பம் ஆனது .சில நாட்களுக்கு பிறகு இவருடைய குடி பழக்கத்தை அறிந்து, கண்ணதாசனின் மனைவி ,கார்த்தியிடம்*ஏன் நீங்கள் குடித்துவிட்டு வருகிறீர்கள் . திருமணம் ஆன புதிதில் அவரைவிட்டு பிரிந்து ஏன் இங்கு வந்துள்ளீர்கள்* உங்கள் மனைவியை ஊரில் இருந்து அழைத்து வந்து ,சென்னையில் தயங்கியபடியே மனைவியுடன் சந்தோஷமாக இருக்கலாம் .ஓட்டலில் சாப்பிடாமல் வீட்டில்*சாப்பிட்டு உடல்நலத்தில் அக்கறை காட்டலாம் .மன்னிக்க வேண்டும் . ஊருக்கு போய் வருவதற்கு கையில் பணமில்லை . சென்னையில் மனைவியுடன் தங்குவதற்கு வீடு பார்க்கும் அளவிற்கு பணவசதியும் இல்லை. கவிஞரிடம் கேட்கலாம் .* ஆனால் கேட்பதற்கு கவலையாகவும் சங்கடமாகவும் உள்ளது என்றவுடன் ,கவிஞரின் மனைவி தன்* கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி கார்த்தியிடம் கொடுத்து , நீங்கள் இந்த சங்கிலியை அடகு வைத்து, நல்லபடியாக உங்கள் மனைவியை ஊரில் இருந்து அழைத்து வந்து சென்னையில் வீடு பார்த்து* ஆண்டவன் ஆசியுடன்**குடும்பம் நடத்துங்கள் .எனக்கு இதற்கான பணம் கிடைத்ததும் தரலாம் ஒன்றும் பிரச்னையில்லை ,அவசரமுமில்லை . ஆனால் இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியவும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் .
ஒருமுறை எம்.ஜி.ஆரும், அண்ணா பத்திரிகையில் உதவியாளராகிய கார்த்தியும் கண்ணதாசன் வீட்டு திருமணத்திற்கு செல்கிறார்கள் . திருமணத்தில் மணமக்களை எம்.ஜி.ஆர். வாழ்த்தி பேசிவிட்டு புறப்பட்டு வெளியே வரும்போது*எம்.ஜி.ஆருடன் இருந்த கார்த்தி , திடீரென்று ஓடிப் போய் கண்ணதாசனின் மனைவி காலை தொட்டு கும்பிட்டுவிட்டு வந்துவிடுகிறார் . .இதை எம்.ஜி.ஆர். பார்த்துவிடுகிறார் . காரில் பயணிக்கும்போது எம்.ஜி.ஆர். கார்த்தியிடம் கவிஞரின் குடும்பத்துடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டா என்று கேட்கிறார் .உடனே கார்த்தி , நான் இன்று என் மனைவியுடன் குடும்பம் நடத்திக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் கண்ணதாசனின் மனைவிதான் . அவர்தான் எனக்கு அறிவுரைகள் சொல்லி ,சில உதவிகள் செய்தார் .அந்த நன்றிக்காகத்தான் அவர் காலை தொட்டு கும்பிட்டேன் என்றார் .ஒரு கணம் யோசித்த எம்.ஜி.ஆர். கார்த்தியை திரும்பி பார்த்து, கண் கலங்கி , தன் கண்ணாடியை கழற்றி ,கண்களை துடைத்துக் கொண்டார் .* அப்படி, ஈர மனதுக்கும், இரக்கத்தன்மைக்கும் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். .
சென்னை தி.நகர் , ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் ஒருநாள் மாலை வேளையில் கட்சி பிரமுகர்களுடன் எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருந்த நேரம் .* அப்போது நாஞ்சில் மனோகரனின் குரல் சற்று கனத்தும்*வழக்கத்திற்கு மாறாகவும் இருந்தது .நேற்று நான் குளிர்ந்த நீரை கொஞ்சம் அதிகம் குடித்துவிட்டேன் . அதனால்தான் அவதிப்படுகிறேன் .பரவாயில்லை என்கிறார் மனோகரன் . இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, சுமார் 20 நிமிடங்களில் மூன்று மருத்துவர்கள் ,மயிலை,* கே.கே.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் இருந்து அந்த அறைக்கு வந்துவிடுகிறார்கள் .இதைக் கண்ட மனோகரன் , பதற்றத்துடன்* .*என்ன இது,ஏன் இத்தனை மருத்துவர்கள் .எனக்கு ஒன்றும் அவ்வளவு* பிரச்னை இல்லையே* என்கிறார் . உடனே எம்.ஜி.ஆர். நீங்கள் எனக்கு முக்கியமானவர் .உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும் .என்று கூறி அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க சொன்னார் .* அதாவது ,தன்னுடைய தொடர்பில் உள்ளவர்கள், நெருக்கமானவர்கள் ,நண்பர்கள் யாருக்காவது உடல்நலமில்லை என்றால் முதலுதவி செய்ய வேண்டும் என்பது எம்.ஜி.ஆர். உடம்பில் ஊறி போன விஷயம் .
மியூசிக்* அகாடமி அரங்கில் ஒரு நாட்டிய* நிகழ்ச்சி**நடைபெறுகிறது .அந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கி பேச வேண்டும் .அதுபற்றி கார்த்தியிடம் பேசும்போது ,இந்த நாட்டியத்தை பற்றி நான் பேசுவதற்கு ஒரு உரை தயார் செய்து கொடுங்கள் . இதற்காக கவலை வேண்டாம். நமது வீட்டு நூலகத்தில் 2 வது அறையில் 18 வது சுவடில்* பதஞ்சலி நாட்டிய சாஸ்திரம் என்று இருக்கும் அந்த புத்தகத்தில் 64 வது பக்கத்தில் 2 வது* பாராவில் நாட்டிய சாஸ்திரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது அவ்வளவு ஞாபகமாக ,சரியான குறிப்புகளுடன் குறித்து சொன்னார் . ஏனென்றால் இன்றைக்கும் பலர் தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .அதாவது எம்.ஜி.ஆர். என்றால்,படிக்காத , பாமரர் , சினிமா நடிகர் நடிக்கத்தான் தெரியும் . பல்வேறு விஷயங்கள் அவருக்கு தெரியாது என்று .அவர் எழுத்து பத்திரிகைகளோடு தொடர்பு வைத்திருந்தார் .மணிப்பூரி எழுத்தாளர்கள் பற்றி அறிந்து வைத்திருந்தார் .பதஞ்சலி நாட்டிய சாஸ்திரம் பற்றி தெரிந்து வைத்திருந்தார் .***இன்னும் சொல்லப்போனால் நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம்ஆராய்ந்து* அவர்கள் குறிப்பிட்டு ,சிபாரிசு சொன்ன பல புத்தகங்களை தன்னுடைய நூலகத்தில் இடம் பெற செய்தார் .தமிழகத்திலே பல இடங்களில் தேடி பிடித்து , காண கிடைக்காத புத்தகங்களை எல்லாம் தன்னுடைய நூலகத்தில் இடம் பெற செய்ததோடு அவற்றை அவ்வப்போது படித்து தன் அறிவு பசியை போக்கிக் கொண்டார் இந்த நூலகத்தை எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் உள்ள தன் வீட்டில் கீழ் தளத்தில் பொக்கிஷம் போல தன் இறுதிக்காலம் வரை காத்து வந்தார் ..அதனால்தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் , எந்த துறை குறித்து என்றாலும் ,எந்த விஷயம் பற்றி பேசுவதாக இருந்தாலும் மணிக்கணக்கில் பேசும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு அறிவாற்றல் இருந்தது .பொது கூட்டங்களிலும், இதர நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களில் எம்.ஜி.ஆருக்கு அவ்வளவாக விஷயங்கள் பேச தெரியாது என்று சொல்லி பிதற்றி வந்தவர்கள் ,அவருடைய பேச்சுகளை கேட்டபின் வியந்தும், ஆச்சர்யமும் அடைந்தார்கள் .
சகாப்தம் நிகழ்ச்சி பல இனங்கள், மொழிகள் , மதங்களுக்கான வழிகாட்டியாகவும், ஒளி விளக்காகவும் திகழ்கிறது என்பதனால் நாம் கூடுமான அளவிற்கு கூடுதல் தகவல்கள் அளித்துக் கொண்டிருக்கிறோம் .இந்த தொடரின் அத்தியாயங்கள் நீண்டுகொண்டு போவதற்கு இதுவும் ஒரு காரணம் . ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் பல நண்பர்களாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் தொடர்பில் உள்ளார்கள் . அவர்கள் எல்லாம் பல்வேறு கருத்துக்களை எம்.ஜி.ஆர். பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம் .அந்த வெற்றி பயணம் உங்களோடும் எம்.ஜி.ஆரும், நம்மோடும் மீண்டும் தொடரும் .*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். -பாரதி உரையாடல் - சந்திரோதயம்*
2.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*
3.தூவானம் இது தூவானம் - தாழம்பூ*
4.கடவுள் இருக்கின்றார் அதுவுன் கண்ணுக்கு தெரிகின்றதா -ஆனந்தஜோதி*
5.நீதி மன்ற காட்சியில் எம்.ஜி.ஆர்.- சங்கே முழங்கு*
6.எம்.ஜி.ஆர்.- பாரதி உரையாடல் - சந்திரோதயம் .
7.ஆடாத மனமும் உண்டோ - மன்னாதி மன்னன்*
8.இதுவரை நீங்கள் பார்த்த பார்வை - பணக்கார குடும்பம்*
.
-
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*15/07/20 அன்று சொன்ன*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இஸ்லாமிய வேடத்தில் நடித்த படங்களும், அந்த படங்களில் உள்ள சில பாடல்களும் எதிர்வரும் பக்ரீத் பண்டிகையை கருத்தில் கொண்டு* இன்று பார்ப்போம் .மத நல்லிணக்கம் என்பது பல படங்களில் படமாக்கப்பட்டுள்ளது . குறிப்பாக சொல்ல போனால்* எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ஒவ்வொரு* பாடல்களிழும்* இறைவன் இல்லையென்று மறுத்த பாடல்கள் வரிகளே இல்லை .* இறைவன் இருக்கின்றான் அவன் எப்படி, எந்த உருவில் இருக்கின்றான் .அவனுக்கு உருவம் கிடையாது என்று பல படங்களிலே பாடி நடித்துள்ளார் மலைக்கள்ளன் , அலிபாபாவும் 40 திருடர்களும்**.பாக்தாத் திருடன், ராஜா தேசிங்கு,சங்கே முழங்கு , சிரித்து வாழ வேண்டும்* போன்று அடுத்தடுத்து வந்த படங்களில் அவர் இஸ்லாமியர் வேடம் ஏற்று இஸ்லாமியர்களின் பண்பாடுகள், கலாச்சாரம் ,வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி கருத்துக்கள் சொல்லியிருப்பார் .அரேபிய இரவுக் கதைகளில் பெரும்பாலும் எம்.ஜி.ஆர்.தான் நடித்திருக்கிறார் என்பது* குறிப்பிடத்தக்கது .**
சிரித்து வாழ வேண்டும் படத்தில் உள்ள* மேரா நாம் அப்துல் ரஹ்மான் என்கிற பாடல்* பல இஸ்லாமியர் வீடுகளிலும், இஸ்லாமியர் விழாக்கள், நிகழ்ச்சிகளில்*இடம் பெறக்கூடிய, அழகான , அருமையான* பாடல் .* இந்த படத்தில் எம்.ஜி.ஆர் உஸ்தாத் என்று சில காட்சிகளில் அழைக்கப்படுவார் . உஸ்தாத் என்றால் வாத்தியார் என்று அர்த்தம் .அந்த வாத்தியாராக வருகிற எம்.ஜி.ஆர். நடத்தி வரும் சூதாட்ட கிளப்பை மூடவைத்து, ,அவரை* திருத்தி ஒரு நல்ல வாத்தியாராக மாற்றும் இன்ஸ்பெக்டர் ராமு வேடத்தில் மற்றொரு எம்.ஜி.ஆர்.நடித்திருப்பார் .ராஜா தேசிங்கு படத்தில் வரும் ஆதி கடவுள் ஒன்றேதான் அதில் பேதம் கிடையாது* என்ற பாடலில் இறைவனை பற்றி மிக விளக்கமாக பாடி நடித்திருப்பார் .மலைக்கள்ளன் படத்தில் உருது பேசும் பாங்கு*கையில் பைப் பிடித்து புகைக்கும்* அந்த ஸ்டைலுக்கும் , சிரித்து வாழ வேண்டும் படத்தில் வரும் அப்துல் ரஹ்மான் வேடத்திற்கும் நல்ல வேறுபாடுகள், வித்தியாசங்கள் காட்டி நடித்திருப்பார் . மலைக்கள்ளன் படத்தில் பூங்கோதை பாத்திரத்தில் வரும் பானுமதியை காதலிக்கும் காட்சியிலும் , என்னை மணந்து கொள்ள தயாரா என்று கேட்கும் காட்சியில் நகைச்சுவையாகவும், அவருக்கே உரித்தான ஹீரோ அம்சங்கள் பொருந்திய பாணியில் கெத்தாகவும் நடித்து மிரள செய்வார் .
எம்.ஜி.ஆருக்கு பல படங்களில் வசன ஆசிரியராகவும், உதவியாளராகவும் இருந்த ரவீந்தர் என்பவர் உண்மையில் ஒரு இஸ்லாமியர் . அவர் பெயரை மாற்றி வைத்தவர் எம்.ஜி.ஆர்தான் .. ரவீந்தர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள் பற்றி பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார் .* கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் எம்.ஜி.ஆருடையது என்ற புத்தகத்தையும்* எழுதியுள்ளார்* எம்.ஜி.ஆர். இஸ்லாமியர் வேடம் ஏற்று நடிக்கும் தருவாயில் உள்ள படங்களுக்கு நடிக்கும் முன்பு ரவீந்தரிடம் இஸ்லாமியர் பற்றிய* வாழ்வியல்கள் , பண்பாடுகள், கலாச்சாரம் , நடைமுறை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை படிக்க சொல்லி ,ஏன் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று* தெள்ள தெளிவாக கேட்டு அறிந்து கொள்வார் என்று ரவீந்தரே குறிப்பிட்டுள்ளார் .
ரவீந்தருக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் பத்திரிகை தயார் செய்து எம்.ஜி.ஆரிடம் முறைப்படி வழங்கி ,ஆசி பெறுகிறார் .* எம்.ஜி.ஆரும் அவரை வாழ்த்தியபின் , உனக்கு என்ன வேண்டும் கேள் , நான் என்ன செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக சொல் என்றாராம் .எனக்கு ரூ.16/- மட்டும்* தாலி வாங்குவதற்கு**தந்தால் போதும் .என்றவுடன் எம்.ஜி.ஆர்.,பத்திரிகையை வாங்கி கொண்டு* அறைக்குள் சென்று தன் அண்ணன்* சக்கரபாணியிடம் பணம் கொடுத்து அனுப்புகிறார் .பணம்* வாங்கிய* ரவீந்தர் நான் வரட்டுமா என்று எம்.ஜி.ஆரை எதிர்பார்த்து காத்திருக்கும்போது சில நிமிடங்களில் எம்.ஜி.ஆர். வெளியே வருகிறார் .* ரவீந்தர் தலைவரே நான் புறப்படுகிறேன் .நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் ஒன்றை சொல்கிறேன் .நீங்களே அந்த பணத்தை கொடுத்திருக்கலாம் . உங்கள் அண்ணன் மூலம் கொடுத்தனுப்பியது எனக்கு* அவ்வளவு**திருப்தியாக இல்லை என்றார் .**பதிலுக்கு எம்.ஜி.ஆர். புரியாமல் பேசக்கூடாது . என் அண்ணன் குடும்பஸ்தர் .
குழந்தைகளோடு வாழ்கிறார் .* அவருக்கு வாரிசுகள் உருவாகியுள்ளனர் .நீயும் அவரைப்போல் குடும்பஸ்தனாக ,குழந்தைகளோடு, வாரிசுகள் கண்டு*மகிழ்ச்சியுடன் சீரும் சிறப்பாக வாழவேண்டும் . நான் திருமணம் ஆனவன்தான்*ஆனால் குழந்தை பாக்கியமில்லை . மனைவிகள் பாக்கியமும் சரியாக அமையவில்லை .அதனால்தான் அண்ணன் மூலம் வழங்க சொல்லி , நீ நன்றாக வாழ வேண்டும் என்கிற நினைப்பில் செய்தேன் என்றார் . அது சரி, உனக்கு இந்த ரூ.16/- போதுமா என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு , இது தாலிக்கான செலவுதான் என்று ரவீந்தர் பதிலளிக்க , மேலும் ஆயிரக்கணக்கில் கல்யாண செலவுக்காக*எம்.ஜி.ஆர். பணம் கொடுத்ததாக ரவீந்தர் குறிப்பிட்டு எழுதியுள்ளார் .**
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஒன்றே சொல்வான், நன்றே செய்வான் - சிரித்து வாழ வேண்டும்*
2.ஆதி கடவுள் ஒன்றேதான் ,அதில் பேதம் கிடையாது - ராஜா தேசிங்கு*
3.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது - அடிமைப்பெண்*
4.எம்.ஜி.ஆர்.-சாரங்கபாணி உரையாடல் -அலிபாபாவும் 40 திருடர்களும்*
5.அப்துல் ரஹ்மான் -இன்ஸ்பெக்டர் ராமு மோதல் -சிரித்து வாழ வேண்டும்*
6.நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு*
7.உன்னைவிட மாட்டேன் உண்மையில் நானே -அலிபாபாவும் 40 திருடர்களும்*
8.எம்.ஜி.ஆர். - பானுமதி உரையாடல் - மலைக்கள்ளன்*
9.ஏமாற்றாதே , ஏமாற்றாதே - அடிமைப்பெண்*
10.மாசில்லா உண்மை காதலே - அலிபாபாவும்* 40* *திருடர்களும்*
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
26/07/20* *- சன் லைப்- காலை 11 மணி -* என் அண்ணன்*
* * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - விக்கிரமாதித்தன்*
* * * * * * * தமிழ் மீடியா டிவி - இரவு 8 மணி - என் கடமை*
27/07/20 - சன் லைப் - காலை 11 மணி -* நம் நாடு*
* * * * * * * * *மெகா 24 டிவி - இரவு 9 மணி - குடும்ப தலைவன்*
28/07/20 - சன் லைப் - மாலை 4 மணி - பல்லாண்டு வாழ்க*
* * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*
29/07/20 - மெகா 24 டிவி - காலை 8.30 மணி - தாய்க்கு பின் தாரம்*
* * * * * * * *வேந்தர் டிவி - காலை 10.30 மணி - தனிப்பிறவி*
* * * * * * * சன் லைப் - காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * *மூன் டிவி* - இரவு 8 மணி* -நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * வேந்தர் டிவி - இரவு 10.30 மணி - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - பணம் படைத்தவன்*
30/07/20- சன் லைப்* - மாலை 4 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - நவரத்தினம்*
* * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி -சக்கரவர்த்தி திருமகள்*
31/07/20* சன் லைப் - காலை 11 மணி - நாளை நமதே*
* * * * * * * * வேந்தர் டிவி - இரவு 8 மணி - அவசர போலீஸ் 100**
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 16/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி தொடர்ந்து ஏகோபித்த ரசிகர்கள்,பக்தர்கள் ஆதரவால் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது . குறிப்பாக மும்பையில் தாராவி பகுதியில் இருந்து புலவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி ,தொடர்பில் இருக்கிறார்கள் . அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் .* அதே போல சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி* அவர்களும் அடிக்கடி தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை பற்றி அற்புதமாக பாராட்டி உற்சாகப்படுத்துகிறார் .நிகழ்ச்சியில் உள்ள சிறு குறைகளான .நாள், ஆண்டு ஆகியவற்றில் உள்ள மாறுபாடுகளை* திருத்தம் செய்யும்படி சில யோசனைகள் தெரிவித்தார் .*
பாக்தாத் திருடன் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரே படத்தில் நடித்தார் வைஜயந்திமாலா . இருவரும் நடித்த பாடல் காட்சிகள், காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று அப்போது பேசப்பட்டது .இந்த படத்தில் அரபு கதை தொடர்பான காட்சிகள் , சம்பவங்கள் படமாக்கப்பட்டன . எம்.ஜி.ஆர். புல்புல்தாரா, மற்றும் பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதுபோன்று ஒரு முழு* ,இஸ்லாமியராக இந்த படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைத்தார் .
1956ல் வெளியான அலிபாபாவும்* 40* திருடர்களும் தமிழில் வெளியான முதல் முழு நீள வண்ணப்படம் . கோவா கலரில் எடுக்கப்பட்ட* பிரம்மாண்ட வெற்றிப்படம் .கர்நாடகாவில்* மைசூர் அருகில் ஒரு மலைக்குகை அரங்கம்* அமைக்கப்பட்டது .குகையின் கதவு திறப்பதற்கு அண்டாக்கா கசம், அபுக்கா உஹும் ,திறந்திடு சீசேம் என்று குரல் எழுப்பவேண்டும் . உள்ளே சென்றதும்*அண்டாக்கா கசம், அபுக்கா உஹும் ,மூடிடு* சீசேம் என்றவுடன் கதவு மூடப்படும் .குகையின் உள்ளே, தங்கம் ,வெள்ளி, வைர நகைகள் குவியல் குவியலாக கஜானா போல காட்சியளிக்கும் . எம்.ஜி.ஆரும், சாரங்கபாணியும் இந்த மந்திர சொல்லை அறிந்து கொண்டு , உள்ளே சென்று இந்த நகை குவியல்களை மூட்டை ,மூட்டையாக அள்ளிக்கொண்டு வந்து,பின்னர் அலிபாபா வேடத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு இலவசமாக தானம் செய்வார் . இந்த விஷயங்களை அறிந்து எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி தந்திரமாக எம்.ஜி.ஆரை அழைத்து , விருந்து வைப்பது போல தகவல்களை கேட்டறிந்து*எம்.ஜி.ஆரை கைது செய்துவிடுவார் .* *பானுமதியின் தந்திர மூளையால் எம்.ஜி.ஆர். காப்பாற்றப்படுவார் .* *இடையில் சக்கரபாணி அந்த குகைக்கு உள்ளே சென்று நகை குவியல்களை மூட்டை ,மூட்டையாக கட்டிக்* கொண்டு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் வெளியே வர முற்படும்போது அந்த மந்திர சொல்லை சரியாக சொல்லாமல், மறந்துபோய் பிதற்றி , சொல்ல தெரியாமல், குகையில் அகப்பட்டுக் கொள்வார் . திருடர்கள் வரும் சமயம் ஒளிந்து கொள்வார் .ஆனால் நகைகள் ஆங்காங்கே சிதறியுள்ளதை கண்ட வில்லன் வீரப்பா , சக்கரபாணியை கண்டுபிடித்து கொன்று ,தலைகீழாக தொங்கவிட்டுவிடுவான் .இந்த காட்சியில் சக்கரபாணியின் நடிப்பு, நகைச்சுவையாகவும், திகிலுடன்,*பயங்கரம் நிறைந்ததாக இருக்கும் .
தாங்கள்* திருடிக் கொண்டுவந்த நகைகளை கொண்டு சென்ற திருடனை கண்டுபிடிக்க ஒரு நடன விருந்தில் வில்லன் கலந்து கொண்டு விசாரிக்க ,இதற்கெல்லாம் காரணம் அலிபாபா என்று அறிந்து கொள்கிறான் .அலிபாபாவின் வீட்டில் பெருக்கல் குறி போடப்பட்டிருக்கும் இரவில் சென்றால்* பிரச்னை ஏற்படும் என்று பகலில் வந்து பார்த்தால், அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த குறி இருக்கும் .திருடர்கள் அலிபாபா வீட்டிற்கு முற்றுகையிட வர போவதை முன்னரே* அறிந்த பானுமதி செய்த உபாயம் இது .இப்படி ரசிகர்கள் வரவேற்க தகுந்த பல நுட்பமான காட்சிகள் பலவற்றை இந்த படத்தில் காணலாம் .கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் வீரப்பா , எம்.ஜி.ஆரை சிறை பிடிக்க 40 பீப்பாய்களில் வீரர்களை அடைத்து ,தான் எண்ணெய் வியாபாரி என்றும் ,பீப்பாய்களில் எண்ணெய்கள் உள்ளன என்றும் பொய் சொல்லுவான் .அவன் சொன்னதை பொய் என்று தந்திரமாக அறிந்து கொண்ட பானுமதி ,வில்லன் அபுஹூசேன் என்று தெரிந்து* எம்.ஜி.ஆரின் அனுமதி பெற்று ,ஆனால் அவர் விருப்பத்திற்கு மாறாக**நடனமாடி , சாரங்கபாணி ,எம்.என்.ராஜம் மூலம்*பீப்பாய்களை மாளிகையின் பின்புறம் ஆற்றில் தள்ளி விடுவார் .* இடையிலே பானுமதியின் நடனத்துடன் கூடிய*இந்த விறுவிறுப்பான* பாடல் இந்த காட்சிக்கு மெருகேற்றியது பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சிகளில் பானுமதியை குதிரையில் கடத்தி சென்று மலைக்குகையில் அடைத்து*வைக்க வீரப்பா*முயலுவதும்*தொடர்ந்து குதிரையில் எம்.ஜி.ஆர் விரட்டி பிடித்து வில்லனை வீழ்த்தி பானுமதியை காப்பாற்றுவதும் புதுமையாகவும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றன*...
தேசிய நீரோட்டத்தில் ஈடுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்* மகாத்மா காந்தி மீது மிகவும் பற்று கொண்டவர் .* அதனால்தான் பூஜை அறையில் தன்* தாய் ,தந்தையர் படத்திற்கு அருகில் காந்தியின் படத்தையும் எம்.ஜி.ஆர். வைத்து வணங்கி வந்தார் .தேசியம் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம் சங்கே முழங்கு*இந்த படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு சீக்கியராகவும் ,இஸ்லாமியராகவும் வருவார் .எம்.ஜி.ஆரின் மாமனாராக வரும் டி.கே. பகவதி ஒரு பஞ்சாபியாகவும் ,அவரது வளர்ப்பு மகள் லட்சுமி வேற்று மொழியை சார்ந்தவராகவும் இருப்பார் .இப்படி பல்வேறு மொழிகள், பல்வேறு மாநிலங்களை ஒன்று சேர்க்கும் விதமாக கதை அமைப்பு இருக்கும் இந்த படத்தில் எம்.ஜி.ஆர். இஸ்லாமியராக தோன்றும் காட்சியில் நாலு பேருக்கு நன்றி என்ற விறுவிறுப்பான தத்துவ பாடல் அமைக்கப்பட்டிருக்கும் .
எம்.ஜி.ஆருடைய* வீடு ஜப்தி செய்யப்படுகிற தகவல் அவருக்கு கிடைக்கிறதுஇந்த தகவலை எப்படியோ அறிந்த திண்டிவனத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தாயார் அவரது வீட்டு சொத்து பத்திரத்தை தன் மகனிடம் கொடுத்து ,இதை எம்.ஜி.ஆரிடம்* விரைவாக கொண்டுபோய் சேர்த்துவிடு என்கிறார் .* அனால் நல்லவேளையாக நீதிமன்ற தீர்ப்பு* எம்.ஜி.ஆருக்கு சாதகமாக**.வெளியானதால்*வீடு ஜப்தியாகவில்லை .உடனே எம்.ஜி.ஆர். திண்டிவனம் சென்று அந்த இஸ்லாமிய தாயாரை பார்த்து வணங்கி ,நீதிமன்ற தீர்ப்பு விவரம் சொல்லி வீடு ஜப்தியாகவில்லை . இருப்பினும் என்மீது அன்புகாட்டி உதவ முன்வந்ததற்கு* மிகவும் நன்றி என்றார் அவருக்கு பணம் கொடுக்க எம்.ஜி.ஆர். முன்வந்தபோது அந்த தாய் மறுத்துவிட்டார் . .அந்த இஸ்லாமிய தாய் அளித்த சூடான பாலை குடித்துவிட்டு வணக்கம் சொல்லிவிட்டு வந்தார் .*.இந்த இஸ்லாமியர் தொடர்பு என்பது அந்த இன மக்களின் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கை*உறுதிப்படுத்தியது .**
எங்க வீட்டு பிள்ளை இந்தியில் ராம் அவுர் ஷ்யாம் என்ற பெயரில் எடுத்தபோது ஹீரோவாக நடித்தவர் திலீப்குமார் .* தமிழகத்தில் எங்க வீட்டு பிள்ளை வெளியாகி வரலாறு காணாத வசூல்மழை பொழிந்த விவரங்கள் அறிந்த திலீப்குமார் சென்னைக்கு விஜயம் செய்வதை அறிந்த எம்.ஜி.ஆர். தன்* வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் .* அப்போது திலீப்குமார் ,உங்களை போல வில்லனை சவுக்கால்* அடிக்கும் காட்சியில் அவ்வளவு தத்ரூபமாக* உண்மையில்**என்னால் நடிக்க முடியவில்லை நீங்கள் மிகவும் அபாரமாக சாட்டையை சுழற்றி விளையாடி விட்டீர்கள் . நான் ஆணையிட்டால் பாடல் காட்சியும் மிகவும் பிரமாதம் .உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்றார் .அதற்கு நன்றி சொன்ன எம்.ஜி.ஆர். சிலம்பம் செய்வது கற்றிருந்தால்* சாட்டையை சுழற்றுவது வெகு சுலபம் . அந்த சிலம்பத்தில் சில ஸ்டெப்புகள் உண்டு .அதை முறையாக பயின்றால் எல்லாமே நமக்கு கைவந்த கலையாகிவிடும் என்றார் .சங்கே முழங்கு படத்தில் ஒரு சண்டை காட்சியில் சாட்டையை சுழற்றும்போது ஒவ்வொரு சாட்டையடிக்கும்*,k,s,x,y.z* என்று* அடி**விழுவதுபோல படமாக்கி இருப்பார்கள் .அப்படி சுளிவு, நெளிவுகளை சாட்டை வீசுவதில் கற்றுக் கொண்ட ஜாம்பவான் எம்.ஜி.ஆர்.*
ஒருமுறை ,பாரிமுனை, பூக்கடை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ,தேர்தல் நிதிக்காக வேனில் எம்.ஜி.ஆர். வருகிறார் . காய்கறி விற்பவர்கள், பூ வியாபாரம் செய்பவர்கள் ,என்று பல வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் ,போட்டி போட்டுக் கொண்டு நிதி ,காய்கறிகள் , பொருட்களை குவிக்கிறார்கள் .இவர்களுக்கு மத்தியில்தொப்பி விற்கும்* ஒரு இஸ்லாமியர் ஓடி வந்து ஒரு தொப்பியை எம்.ஜி.ஆருக்கு அணிவிக்கிறார் .இதை எப்போதும் நீங்கள் அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார் . அது போன்ற தொப்பிகளை எம்.ஜி.ஆர்.தன்*வாழ்நாள் முழுவதும் அணிந்து இருந்தார் . அவர் மறைந்தபோதும் அந்த புஷ் குல்லா தொப்பியுடன்தான் நல்லடக்கம் செய்யப்பட்டார் .* தொப்பி அளித்தவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்று ஆராயவில்லை . எம்மதமும் அவருக்கு சம்மதம் .ஜாதி,இன, மொழி, மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டவர் எம்.ஜி.ஆர்.*
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் நாம் அறிந்து கொள்வோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் -குடியிருந்த கோயில்*
2.மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர்.*
3.பாக்தாத் திருடன் படத்தில் எம்.ஜி.ஆர்.*
4.ராஜா தேசிங்கு படத்தில் எம்.ஜி.ஆர்.*
5.எம்.ஜி.ஆர். -பானுமதி உரையாடல் -அலிபாபாவும்* 40 திருடர்களும்*
6.மாசில்லா உண்மை காதலே - அலிபாபாவும்* 40 திருடர்களும்*
7.எம்.ஜி.ஆர். -லட்சுமி -டி.கே.பகவதி உரையாடல் - சங்கே முழங்கு*
8.எம்.ஜி.ஆர்.- பண்டரிபாய் உரையாடல் - எங்க வீட்டு பிள்ளை*
9.முதல்வராக எம்.ஜி.ஆர்.-புகைப்படங்கள்*
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 17/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற மந்திர சொல் பல சாமானியர்களை மாமனிதர்களாக , பல்வேறு உயர் பதவிகளுக்கு உயர தூக்கி விட்ட ஒரு உந்து சக்தியாகும் .அந்த மந்திர சொல்லை அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி இன்றைக்கும் பலரும் அந்த சொல்லை வைத்து கொண்டாடி வருகிறார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் கூறலாம் .சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் கடந்த காலத்தில் *எம்.ஜி.ஆருடன் பழகிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார் .குறிப்பாக அ .தி.மு.க. கட்சி உதயமாவதற்கு முன்பு தாமரைக் கொடி எப்படி, எவ்விதம் உருவானது என்று ஒரு தொகுப்பாக அவர் வெளியிட்டுள்ளார் .எந்த லட்சியத்திற்காக தன்னுடைய எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் லோகோவிற்கு கருப்பு, சிவப்பு வடிவம் கொண்ட கொடி வைத்திருந்தாரோ , காரில் தி.மு.க. கொடியைப்பார்த்து ,அண்ணாவிடம் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டார்களோ ,அந்த தி.மு.க. கட்சியில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி ஏற்படுகிறது .
1972ல் மு.க. முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை படம் வெளியாகிறது . அந்த* சமயத்தில் பெரும்பாலான எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்பட்டு மு.க. முத்து ரசிகர் மன்றங்களாக* தி.மு.க. மேலிடத்தின் உத்தரவால் மாற்றப்படுகின்றன*இதனால் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படுகிறது .01/10/1972ல்* சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யா திருமண மண்டபத்தில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது .கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள்* தலைமை தாங்குகிறார் .மேலும் திரு.*.ஆர்.எம்.வீரப்பன் ,திரு.சைதை துரைசாமி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர் .* திரு.சைதை துரைசாமி அவர்கள் அந்த காலத்திலேயே புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கலைக்குழு என்கிற அமைப்பை நடத்தி வந்தார் .நமக்கு ஒரு விடிவுகாலம் பிறந்துவிட்டது , தலைவர் எம..ஜி.ஆருக்கென்று* ஒரு அமைப்பு ,**தனிக்கட்சி, தனிக்கொடி, தனி சின்னம் உருவாக போகிறது என்ற ஆர்வத்தில் அனைவரும் பூரிப்பு அடைந்து இருந்தனர்*
தலைவர் எம்.ஜி.ஆர். பேசும்போது , தாய் கட்சியில் இருந்து ஒருபோதும் பிரிந்து செல்ல மாட்டேன் . தாயிலிருந்து சேய் உருவாகலாம் . ஆனால் சேயிடம் இருந்து ஒருபோதும் தாய் உருவாக முடியாது என்கிறார் . கூட்டத்தினர் இனி தலைவர் அனுமதியுடன் தாமரைக்கொடி உருவாக்கலாம், ஏற்றலாம் என்று மனக்கோட்டை கட்டியவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது .அதே சமயத்தில் தலைவரின் அனுமதி இல்லாமலேயே, மதுரையில் ஜான்சி பூங்காவில் தாமரைக்கொடி ஏற்றப்பட்டுவிட்டது . ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி தாமரைக் கொடி ஏற்றினார் .* இப்படி*..தி.மு.க.மேலிடத்தின் உத்தரவால் எம்.ஜி.ஆர். மன்றங்களை கலைக்க சொன்னதற்கு நெருக்கடி காரணமாக* பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் தாமரைக்கொடிதான் நமது கொடி என்று தீர்மானித்து* ஆங்காங்கே ஏற்றிய வண்ணம் இருந்தனர் .அந்த நேரத்தில் நமக்கென்று* தனிக்கட்சியோ, தனிக்கொடியோ காண போவதில்லை என்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு ஒன்று வெளியிடுகிறார் .
கூட்டத்தின் முடிவில் திரு.சைதை துரைசாமி, தலைவர் எம்.ஜி.ஆரை பார்த்து ,அண்ணே, ஒருவிதமாக எம்.ஜி.ஆர். மன்றங்களை நீங்களே மூட செய்துவிட்டீர்கள் என்றார் ,உடனே திரும்பி பார்த்து ,.என்ன சொல்கிறாய் என்று எம்.ஜி.ஆர். கேட்க ,நாங்களெல்லாம் ஒரு கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள் போய் கிளை கழக செயலாளர்கள் ,வட்ட செயலாளர்கள்* ஆகியோரை**அணுகி எம்.ஜி.ஆர்.மன்றங்கள் துவக்க வேண்டும் என்று கேட்டால் ,அதற்கு அனுமதியில்லை* அவற்றை கலைத்துவிடுங்கள் . .நீங்கள் மு.க.முத்து ரசிகர் மன்றங்கள் ஆரம்பியுங்கள் என்கிறார்கள் அதற்குத்தான் அனுமதி கிடைக்கும் என்று சொல்கிறார்கள் ,அவர்களின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்ய இயலாத நிலை உள்ளது .* இது யாருடைய உத்தரவு என்று ரசிகர்கள், தொண்டர்கள் கேட்டால் இது மேலிடத்து உத்தரவு என்கிறார்கள். எங்களுக்கு தெரிந்தவரையில் மேலிடம் என்பது நீங்கள்தான் .உங்களுக்கு மேலாக மேலிடம் எங்கு உள்ளது .இதற்கு நீங்கள்தான்* எங்களுக்கு சரியான விளக்கமும் வழிகாட்டுதலும் சொல்ல வேண்டும் என்று திரு.சைதை துரைசாமி கேட்டார் .இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட தலைவர் எம்.ஜி.ஆர். சரி, எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் . நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் . விரைவில் இதற்கெல்லாம் தகுந்த பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் .இந்த கூட்டத்தின் வாயிலாக திரு.சைதை துரைசாமி பற்ற வைத்த கனல் என்பது தலைவர் எம்.ஜி.ஆர். மனதில் நெருப்பாக எரிய ஆரம்பித்தது .
சில நாட்கள் கழித்து ,திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும்போது கிளை கழக செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை* தங்கள் சொத்து என்ன, எப்படி வந்தது ,கட்சியில் சேருவதற்கு முன்பு எவ்வளவு சொத்து , பொறுப்புக்கு வருவதற்கு முன்பு* எவ்வளவு சொத்து உள்ளது . தற்போதைய சொத்தின் நிலவரம் என்ன என்பதைக் கணக்கு காட்ட வேண்டும் .* இந்த ராமச்சந்திரன் நடிப்பதற்கு முன்பு இருந்த சொத்து என்ன , நடித்து வாங்கிய சொத்துக்கள் விவரம் என்ன, என் மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்கள் என்ன என்று எல்லாவற்றையும் கணக்கு காட்ட நான் தயார் .* ஆனால் கட்சியில் உள்ள கிளை கழக செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரையில் பொறுப்பில் உள்ளவர்கள் சொத்து கணக்கு* விவரம் காட்டுவதற்கு தயாராக உள்ளார்களா என்று கேட்டார் . தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரின் கேள்விக்கணைகளை கேட்டறிந்த அன்றைய முதல்வர் கருணாநிதி பதறிப்போய் ,புதுவை மாநில முதல்வர் பரூக் மரைக்காயரிடம் பேசினார் . சொத்து கணக்கு விவரத்தை முதலில் அமைச்சர்கள், என்று ஆரம்பித்து,சட்டமன்ற உறுப்பினர்கள் ,கிளை கழக செயலாளர்கள் வரையில் அனைவரும் காட்ட வேண்டும் என்று சொல்கிறார் .கட்சி பொருளாளராக இருந்து கொண்டு ,இப்படியா வெளிப்படையாக பேசுவது , இவருடைய கேள்விகள் கட்சிக்கு ,பாதகமாகவும், பெரிய குந்தகத்தை விளைவிக்கும் போல் தெரிகிறது என்கிறார் .தயவு செய்து எம்.ஜி.ஆரிடம் நீங்கள் பேசுங்கள். அவர் என்ன சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ள தயார் . எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் கட்சியில் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிறாரோ அதையும் செய்ய தயார் . ஆனால் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்ளுங்கள் என்றார் . தலைவர் எம்.ஜி.ஆரிடம் பேசுவதற்கு பரூக் மரைக்காயர் தூது அனுப்பப்படுகிறார் .சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நீடிக்கிறது .நீங்கள் உருவாக்கிய முதல்வர் கருணாநிதி, நீங்கள் என்ன கட்டுப்பாடுகள் கொண்டுவரலாம் என்று நினைக்கிறீர்களோ அதற்கு அவர் சம்மதிக்க தயார்* நீங்கள் சொன்னபடி கட்சியை நடத்தலாம் என்கிறார் .இந்த சமாதான பேச்சுக்கள் விளைவுதான்* முன்கூட்டியே அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்* தனிக்கட்சி, தனிக்கொடி, தனி சின்னம் இப்போதைக்கு வேண்டாம்*என்ற நிலை*எடுத்திருந்தது பின்னால் தெரியவந்தது .
எம்.ஜி.ஆர்.பிக்ச்சர்ஸ் லோகோவில் தி.மு.க. கட்சி கொடி , திரைப்படங்களில் உதயசூரியன், கதிரவன் என்ற பெயர்களில் கதாபாத்திரங்கள் , நெற்றியில் உதயசூரியன் , சட்டையில் உதயசூரியன் ,உடைகளில் கருப்பு, சிவப்பு வண்ணங்கள்* காட்சி அரங்கங்களில் உதயசூரியன்*வசனங்களில், பாடல்களில் உதயசூரியன் என்று நகரங்கள், கிராமங்கள், பட்டி தொட்டியெல்லாம் தி.மு.க கட்சியை, சின்னத்தை கொடியை* கொண்டு சென்றவர் தலைவர் எம்.ஜி.ஆர். அவரது உழைப்பையும், விளம்பரத்தையும் பயன்படுத்தி* நம்பி வளர்ந்த அதே தி.மு.க. கட்சியில் இருந்து,சொத்து கணக்கு கேட்டார் என்ற காரணத்திற்காக* 10/10/1972ல்* தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கம் செய்தார்கள் .பின்னர்* 17/10/1972அன்று அ.தி.மு.க. கட்சி உதயமானது .*அண்ணாவின் உருவம் பொருந்திய கொடி , இரட்டை இலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது .
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.நாளை நமதே நாளை நமதே* *- நாளை நமதே*
2.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*
3.எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசைமுகம்*
4.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் - உரிமைக்குரல்*
5.சித்திர சோலைகளே* உமை நன்கு திருத்த - நான் ஏன் பிறந்தேன்*
6.நான் யார் நான் யார் நீ யார்* - குடியிருந்த கோயில்*
7.எம்.ஜி.ஆர். எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*
8. நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் -மீனவ நண்பன்*
9. எம்.ஜி.ஆர். மன்னனாக திட்டங்கள் அறிவித்தல் -நாடோடி மன்னன்*
-
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனை குக்கிராமங்களிலும் செல்வாக்கை வளர்த்து மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்ததுதான். 1960-80 காலகட்டத்தில்தான் டூரிங் சினிமா முழு வளர்ச்சியடைந்தது எனலாம். ஆயிரக்கணக்கான டூரிங் தியேட்டர்கள் பெருகி மக்களுக்கு முக்கியமான பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது இந்த காலகட்டத்தில்தான்.
எல்லா குக்கிராமங்களிலும் டூரிங் தியேட்டர்கள் பெருகி ஒரு காலகட்டத்தில் டூரிங் தியேட்டரே இல்லாத ஊரே கிடையாது என்று சொல்லுமளவுக்கு பெருகியது.
திரைப்பட விநியோகம் தழைத்தோங்கியது. அதற்கு முக்கியமான காரணகர்த்தா எம்ஜிஆர் எனலாம். எம்ஜிஆர் படங்களின் விநியோகஸ்தர்கள் தென் மாவட்டங்களில் சேது பிலிம்ஸ், சுப்பு, சுவாமி மற்றும் St அந்தோனி பிக்சர்ஸ் இவர்களே படங்களை அதிகம் விநியோகம் செய்தனர்.
ஆனால் மற்ற படங்களுக்கு வெவ்வேறு விநியோகஸ்தர்கள் வருவார்கள் போவார்கள். 4 படங்களில் முதலீடு கரைந்ததும் விவசாயத்தை பார்க்க
கிளம்பி விடுவார்கள். எம்ஜிஆர் படங்கள் நிலையான வருமானத்தை
கொடுப்பதால் முக்கியமான 4 எம்ஜிஆர் படங்கள் மட்டுமே இருந்தால் போதும் எப்போதுமே வருமானத்தை
கொடுத்து கொண்டேயிருக்கும்.
சாதாரண தலைவன், காதல் வாகனம், தேர்த்திருவிழா போன்ற படங்கள் T K
ஏரியாவுக்கு சுமார் 2 லட்சம் அளவுக்கு போகும்.
அதேநேரம் நிறைகுடம் அஞ்சல் பெட்டி 520
அன்பளிப்பு போன்ற படங்கள் 60-70
ஆயிரம் ரேஞ்சுக்கும் சுமாரான ஜெய்சங்கர் படங்கள் சுமார் 40-50
ஆயிரம் ரேஞ்சுக்கும் விற்பனையாகும். எம்ஜிஆரின் கலர் படங்கள் சுமார் 4 லட்சம் அளவுக்கு போகும். தமிழகத்தில் மொத்தம் 7 விநியோக மையங்கள் உண்டு. அவை சென்னை மதுரை கோவை திருச்சி சேலம் NSC மற்றும் T K . இவற்றில் NSC தான் மிகப்பெரிய ஏரியா. அதற்குத்தான் விலையும் அதிகம். இது போக கேரளா, கர்நாடகா, இந்தி மாநிலம் என்று இத்தனை ஏரியா உண்டு. NSC ஏரியா மட்டும் TK போல மூன்று மடங்குக்கும் அதிகம் போகும்.
ஜெய்சங்கர் படம் தயாரிப்பு செலவு 3-4 லட்சத்தில் முடிந்து 5 லட்சத்தில் விநியோகம் நடக்கும். சிவாஜி படங்கள் 6-7 லட்சத்தில் தயாரிக்கப்பட்டு அதற்கு மேல் லாபம் கிடைத்தால் விற்று விடுவார்கள்.
தயாரிப்பு செலவு கூடும் பட்சத்தில் கையை கடித்து விட வாய்ப்பிருக்கிறது. எம்ஜிஆர் படங்கள். ஏறக்குறைய15 லட்சத்தில் முடிவதால் விற்பனை 20 லட்சத்தில் நடைபெறும்.
எம்ஜிஆரின் கலர் படங்கள் 1965 களில் சுமார் 25 லட்சமும் 70 களில் சுமார் 40 லட்சமும் 75 களில் சுமார் 60 லட்சமும் செலவு பிடிக்கும்.
இதெல்லாம் விநியோகஸ்தர்களிடம் பழகியதால் எனக்கு கிடைத்த தகவல்கள். இதில் தவறு இருந்தால் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாம். எம்ஜிஆர் படத்துக்கு மட்டும் ஏன் இந்த விலை? என்று கேட்கலாம். அதற்கான பதிலைதான் இப்போது சொல்லப் போகிறேன். நகரங்களை ஒட்டி அமைந்திருக்கும் கிராமங்களில் ஒரளவு எல்லா நடிகர்களின் படங்களும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் அடிக்கடி டவுனுக்கு வந்து போவதால் இருக்கலாம்.
ஆனால் குக்கிராமங்களில் தலைவரின் படங்கள்தான் பிரதானமாக இருக்கும். மற்ற நடிகர்களின் படங்கள் 1அல்லது 2 நாட்கள்தான் ஓடும். ஆனால் தலைவர் படமோ குறைந்தது 5 நாட்கள் ஓடும். அதுவும் 6 மாதத்திற்கு ஒருமுறை. 5 ஆண்டுகளில் விநியோகஸ்தர்கள் குறைந்த பட்சம் 10 முறை திரையிட்டு கிட்டத்தட்ட 50 நாட்கள் ஓட்டி விடுவார்கள். அப்படி ஒவ்வொரு கிராமத்திலும் படம் நிற்காமல் ஓடினால் வசூல் வந்து கொண்டே இருக்கும்.
எம்ஜிஆரின்
பழைய படங்கள் செய்கின்ற ஒரு சில சாதனைகளை இங்கு பதிவு செய்திருக்கிறேன். அதில் காதல் வாகனம் 1980 மே 9 ம்தேதி மகாலட்சுமியில் வெளியாகி 7 நாட்கள் நடைபெற்றது. அந்த 7 நாட்களிலும் நடைபெற்ற 21 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை ஏற்படுத்தியது ஒரு ஆச்சர்யமான நிகழ்வே. நாகர்கோவிலில் முதல் தடவை 1969 ல் வெளியான அடிமைப்பெண் 100 நாட்களில் பெற்ற வசூல் சுமார் 1,30,000 ரூ. அதன்பின் பலதடவை வெளியான பின் நாகர்கோவில் கார்த்திகையில் வெளியான போது 18 நாட்களில் சுமார் 1,00,000 ரூ வசூலாக பெற்று 20 நாட்களை கடந்து ஓடியது விந்தையிலும் விந்தை அல்லவா?
இது போல ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற அபரிமிதமான சாதனைகள் தொடர்ந்து நடைபெறுவது உலகத்திலேயே MGR படத்துக்கு மட்டும்தான் என்பது ஒரு அற்புதமான செய்தி. இதெற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்பீர்கள். அதையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அன்று வந்த புது படங்கள் கூட இந்த வெற்றியை பெற்றதில்லை என்பது
கூடுதல் தகவல்.
-
இந்த அகிலமே சொல்லும் நீ "ஆயிரத்தில் ஒருவனெ"ன்று. இது "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் மனேகர் சொல்லும் வசனம். ஆனால் உண்மையில் ஆயிரத்தில் ஒருவரை எம்ஜிஆரைபோல் பார்க்க முடியுமா?
கோடியில் ஒருவரை கூட பார்க்க முடியாது. ஏன் கோடியில்? இந்த அகிலமெல்லாம் தேடினாலும் கிடைக்குமா, இந்த மாசற்ற மாணிக்கம் போல் வேறோருவரை?.
அப்பேர்ப்பட்ட "ஆயிரத்தில் ஒருவனின்" வசூல் விபரங்கள் யாரும் அறியாவண்ணம் இருப்பதால் இந்த பதிவில் அதை பற்றி சற்று காண்போம். சென்னையில் மிட்லண்ட் கிருஷ்ணா மேகலா என்ற மூன்று திரையரங்குகளில் தலா 106
நாட்கள் ஓடி
மொத்தம் 318 நாட்களை
பதிவு செய்து மொத்தம் ரூ8,69,711.15 வசூலானது.
"எங்க வீட்டு பிள்ளை" 100 நாட்களில் காஸினோ பிராட்வே மேகலாவில் மொத்தம் ரூ 9,23,519.40 வசூல் செய்தது குறிப்பிட தக்கது.
நெல்லையில் "ஆயிரத்தில் ஒருவன்" 50 நாட்களில் ரு 77,504.42 வசூலானது.
கோவை கர்னாடிக்கில் 115 நாட்கள் ஓடி ரூ 221,246.37 வசூல் செய்தது. "எங்க வீட்டு பிள்ளை" கோவை ராயலில் ரூ. 2,64,847.83 வசூலானது.
மதுரையில் "ஆயிரத்தில் ஒருவன்" 28 நாளில்
ரூ1,12,232.53 ம் "திருவிளையாடல்" 28 நாளில் ரூ 1,07,452.37, 50 ம் வசூலாக பெற்று தோல்வியடைந்தது. 50 நாளில் "ஆயிரத்தில் ஒருவன்" பெற்ற வசூல் ரூ 174411.66 ம். அதே பந்துலுவின் பிரமாண்ட படமான "கர்ணனின்". 77 நாள். வசூல் ரூ 1,75,026.16 ஐ பெற்று தோல்வியை பரிசாக பெற்றது.
அதுபோல் திருச்சியிலும் 50 நாட்களில் "எங்க வீட்டு பிள்ளை"க்கு அடுத்த படியாக "ஆயிரத்தில் ஒருவன்" தான் அதிக வசூல் பெற்ற படம். 50 நாட்களில்
ரூ 1,35,287.00 வசூலானது.
தூத்துக்குடியில்
"மதுரை வீரனு"க்கு பிறகு அதிக வசூலை தந்த படம்
"ஆயிரத்தில் ஒருவன்" தான்.
10 நாட்கள் தொடர்ந்து 4 காட்சிகள் நடந்த ஒரே படம். நகரில் அதிக வசூல் பெற்ற படமும் "ஆயிரத்தில் ஒருவன்" தான்.
சேலம் ஓரியண்டல் திரையரங்கில் 125 நாட்கள் ஓடி சாதனை செய்தது.
திண்டுக்கல்லில் 4 வாரத்தில் "ஆயிரத்தில் ஒருவன்" பெற்ற வசூல் ரூ 54,699.87.
"திருவிளையாடல்" 4 வாரத்தில் ரூ52,187.16 வசூலாக பெற்று "ஆயிரத்தில் ஒருவனி"ன் வானளாவிய வெற்றிக்கு முன் மண்டியிட்டது குறிப்பிடதக்கது.
வேலுரில் தாஜ் திரையரங்கில் 46
நாட்களில் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,50,000 பேர்.
46 நாட்களில் பெற்ற சாதனை வசூல்
ரூ 74,210.48. இதைப்போல் ஒவ்வொரு ஊரிலும் மகத்தான சாதனை புரிந்த படம்தான் பத்மினி பிக்சர்ஸின் "ஆயிரத்தில் ஒருவன்".
திக்கெட்டும் உரைக்கும் "ஆயிரத்தில் ஒருவனின்" வெற்றி சேதியை,
கண்டு மாற்றலர் மனம் வெந்து நொந்த வேதனை என்ன?
வந்து சேர்ந்த சோதனை மேல் சோதனைதான் என்ன?
போதுமடா சாமி யென்ற போதிலும்
மெய்ப்பொருள் கண்டு மீளாதிருப்பதென்ன?