கையிரண்டும் காலிரண்டும்
கதைக்க நேரம்
பார்த்ததாம்
கையிரண்டின் ஓய்வின்போது
காலிரண்டும் நடந்ததாம்
காலிரண்டும் இருக்கையிலே
கையிரண்டும் உழைத்ததாம்
இரவு வருமென
எதிர்பார்த்து இருந்ததாம்
உடல் முழுதும்
ஓய்ந்த போதும்
இவ்விரண்டும் விழித்ததாம்
கையிரண்டும் காலைப்பார்த்து
நானே பெரியவன்
என்றதாம்
காலிரண்டும் சிரித்துவிட்டு
சிறித்திருக்கும்
நீயா பெரியவன்
உன்னையும் சேர்த்து
தூக்கும் நானே
பெரியவன் என்றதாம்
சளைக்காத கைகள்
நீ என் சேவகன்
ஆகவே சுமக்கிறாய்
என்றதாம்
சீரிய கால்கள்
நானாவது சுமக்கிறேன்
நீயென்னை சுத்தமல்லவோ
செய்கிறாய்
சத்தம் இடாமல்
கேட்ட உடல்
குறுக்கே வந்து
நீங்களும் பெரியவரில்லை
நானும் பெரியவனில்லை
நம்மை இயக்கும்
உயிரே பெரியவன்
அவனில்லை யெனில்
எதுவும் அசையாது
அமைதியாய் தூங்குங்கள்
என்றதாம்....
(ஆட்டுபவன் எங்கோயிருக்க ஆடுபவன் ஏன் அடித்து கொள்(ல்)கிறான்....)
-
கிறுக்கன்