:shock: :shock: :cry3:Quote:
Originally Posted by Shakthiprabha
I'll watch it akka. I 'll try to post tomorrow's episode. Will try ka. unga alavukku ezhudha varAdhu :ashamed:
Printable View
:shock: :shock: :cry3:Quote:
Originally Posted by Shakthiprabha
I'll watch it akka. I 'll try to post tomorrow's episode. Will try ka. unga alavukku ezhudha varAdhu :ashamed:
Quote:
Originally Posted by Shakthiprabha
waiting
SP, did you find the BHARATHI song here ??//Quote:
Originally Posted by aanaa
Hehe.. thanks :). I think I am rather hypocritical. Although a thousand thoughts can run in my mind, ultimately what really moves me are Krishna, Muruga, the true Bhaktas, and the most compassionate Gurus. Indha psycho-philosophy stuff ellaam illaina paravaillai,.. aana ivargaLum, ivargaLai saarndha ennangaLum unarchigaLum illai endraal................Quote:
Originally Posted by viraajan
Sure. I got nowhere else to pour my feelings about all these things :D.Quote:
Originally Posted by Shaktiprabha
Love and Light.
I look at it this way prasad. Everything ofcourse is a matter of faith, along with it comes SHRADHA and real bhakthi. Even mentally thinking of the personfied not non-personified force with bhakthi is sufficient. What one seeks and completely believes, is what matters.Quote:
Originally Posted by anbu_kathir
In today's world most of these religious formalities comes in as a package wihtout complete convincing beliefs. Many are unaware of WHYS and WHY-NOTS for the prescribed rules n duties. Therre are still few who want to be religious. There are few who feel religous formalities are necessary for bhakthi....and they DONT know why certain things are imposed.
These logical explanations are for ppl who TRY to follow the religious way prescribed as their priority karma. Lot of people still do believe FORMALITY matters quite a lot in doing religious karma. They also do it without questiioning why or why-not? These explanations are for them.
I just remember a gita verse.
"Offer me a flower or leaf or a single petal with utmost devotion" thats all it (the supreme beign) needs!
God is a matter of devotion
God is a matter of feeling of one-ness
God is a matter of just being
It all depends on which stream of line convinces a single person. It differs from person to person.
Well nothing is looked down or looked up upon. When everything is just the same what is there to look down or look up.Quote:
Originally Posted by anbu_kathir
This body or infact the whole universe sheath I believe is made up of pancha kosas. Generally the deeper we delve we are supposed to experience a LONGER or permanent bliss. Or...shall I say, we are NEARER to the undisturbed peace.
Those desires or satisfaction of desires which are relatively longer and gives undisturbed peace for longer time is PRAISED by many compared to less longer ones.
Both are ofcouse same and one and only thing from absolute point of view.
Personal wealth may give one happiness for lesser duration.
But ofcourse if someone desires MATERIAL WEALTH, he should by all means pursue and seek that. Without seeking and getting what we want, our minds and heart wont rest (unless we can conquer it, and we have the will to desire to conquer it)
Absoltely thats what one should do. When we need or seek or desire something so earnestly and the urge is rising, the soluition is to SEEK IT AND HAVE IT. TAste it, then another desire ofcourse may rise.Quote:
and just follow our own bliss, be it material or spiritual.
These advises were given assumed a brahmaN (a man who SEEKS brahman not who is born in particular caste) would seek greater bliss and hence such rules are generally laid.
Despite all these, if ur heart seeks something, I am sure, you would agree our religion never reins anybody. we have the maximum freedom. So, if ur heart seeks, JUST GO FOR IT.
These are for people who are supposedly seeking spiritual goals. (not by imposition)
Infact the supreme state is where there is no seeking, or nothing to seek not even seeking for one-ness or salvation. Its all steps, we chose our own theory based on what we want and where we are.
hmm may be. I dont know much about any religion, so, I do not want to compare this religion with anythign else.Quote:
Originally Posted by anbu_kathir
religionQuote:
Originally Posted by anbu_kathir
The founder of the religion believed his own practice is the best way to see(k) the GOD/ achieve the highest level. So its their own beliefs.
you seek yourself. you will get an answer.
Hmm....Quote:
Originally Posted by Shakthiprabha
Love and Light.
Hmmm..........Quote:
Originally Posted by Shakthiprabha
Love and Light.
idhu yedhukku seiyanum, idha ippadi thAn seiyanumA, idhunAla enna payan?
Manidhanin "kArana arivu" paduthum pAdu idhellam.
IMHO :)
SP akka,
Excerpt from Friday's episode:
Ashok was reading a book in the garden. He was explaining the stories of Sidhars to maid maami.
சித்தர்கள் தவம் செய்யும்போது புலி, சிங்கம் போன்ற விலங்குகள் அவர்களை தீண்டுவதில்லை. காரணம், அவர்கள் அசைவற்று இருப்பதால், அவர்களை உயிரற்ற பொருள் என்று நினைத்து விடுகின்றன.
(finding it hard to type in tamil in this browser. pls adjust. lemme continue in thanglish :oops: )
idhai avan solli mudithu, meendum puthagathai padikka thuvangugiren. sila vinAdigaLil, puthagathil aazhundhu vidugirAn. siridhu nErathil, avvazhiyE vandha oru pAmbu, avan meedhu oorath thodangugiradhu. avan kazhuthai sutri padam edukkiradhu. idhakk kaNdu padhatram adaindha maami, udanE Odippoi nathan, vasu iruvaridamum idhai patri vivarikkiraL. iruvarum padharippOi thOtathukku varuvadharkkuL, pAmbu maraindhu vidugiradhu.
padharippOna avargaL, ivanidam idhu patri viSarikka, Ashok'o appadi ondru nadandhadhE thanakku theriyavillai endru koorugiran. pAmbu than meedhu oorndhadhai avan unaravillai endru koorugiran. :shock:
udanE, nathan, indha sambavathai vivarithu Bagawathar'ku oru kaditham ezhuthugirrar.
//akka pls kantinue :)
Thanks vr :ty: :)
I sure missed such a great episode, I shall try to watch the episode online :(
SandhEgamE illa.... you missed it really.... that scene was really good... :bow:Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:Quote:
Originally Posted by viraajan
its Ok
good job
Friday EpisodeQuote:
Originally Posted by Shakthiprabha
http://www.cinechipz.com/tv/2009/04/...nge-brahmanan/
:bow:Quote:
Originally Posted by aanaa
nalla ezhithirukeenga vr :clap: and thankyou.
விட்டுப்போன ஓரிரு விஷயங்கள்.
'மனம் எவ்விதம் லயிக்கிறது என்பதே நம் கர்மாக்களையும் கர்ம பலன்களையும் தீர்மானிக்கிறது. தாசி வீட்டிற்கு போன ஒரு நண்பனும், கீதை காலேக்ஷபம் கேட்ட இன்னொருவனின் மனநிலையும் குறிப்பிட்டு சொல்லும் பிரபல கதை நமக்குத் தெரியும். அதைப் போல் இன்னொரு கதையை சோ பகிர்ந்து கொண்டார்.
"நிச்சனமாய் வாழும் இந்த சன்யாசியைப் போல் நான் பகவான் நாமத்தை உச்சரிக்க முடியவில்லையே" என்று வருந்து தாசிக்கு உயர்கதியும், "அட என்ன பிறப்பு இவள், அழகை வைத்துக்கொண்டு தாசி பிழைப்பை நடத்துகிறாளே", என்று அவளைப் பற்றியும், அவள் வாழ்கையைப் பற்றியும் சிந்தித்த துறவி ஒருவன் உயர்கதி அடையாமல் போகிறான்.
ஒரு முறை விவேகானந்தருக்கு பிரியா விடை அளிக்கும் விழாவில் தாசியின் நடனம் ஏற்பாடாகியிருந்தது. அதை அறிந்த அவர், விழாவிற்கு செல்லாமல் இருந்து விட்டார். இதையறிந்து மனம் வெம்பிய தாசி, தன் மனையில் இருந்த படியே "உயர்வென்றும் தாழ்வென்றும் கொள்ளாது எம் போன்றவர்களையும் நீங்களல்லவா உயர்த்த வேண்டும்" என்று மனமுருக பாடிப் பிரார்த்திக்கிறாள். இதையறிந்த விவேகானந்தர், உடனே அவளிடம் சென்று அவளை ஆசீர்வதிக்கிறார்.
"இன்று தான் நான் உண்மையான சன்யாசம் பெற்றேன்" என்று அவர் சொன்னதாக கூறப்படுகிறது.
(வளரும்)
நண்பர்களே,
வியாழன் அன்று ஒளிபரப்பாகிய தொடரில் "மாயாவாதம்" பற்றிய பேச்சு இருந்தது. I thought I would write about it during this wee4kend, but failed to do so. please gimme few hours time.
Good Job VR :-) :clap:
Shakthi ... looking forward for the same !
:ty: SP and BG :bow:
ellAm SP akka kittErndhu thAn kathukutten :bow: :D
oh please... ennathukku ithelaam...Quote:
Originally Posted by viraajan
Vr,
A request.
I am out to chenna for 10 days (counting from this thursday) and would try to update ATLEAST THIS THREAD regularly. In my absense, please do update the thread If I fail to do :)
:confused2: "Chenna" saapida 10 days ah :shock: :lol:Quote:
Originally Posted by Shakthiprabha
jk.
Sure akka, i'll try my best and do. :D
thangaL sitham en bhAkyam :bow: :lol:
[quote="Shakthiprabha"]
Everything ofcourse is a matter of faith, along with it comes SHRADHA and real bhakthi. Even mentally thinking of the personfied not non-personified force with bhakthi is sufficient. What one seeks and completely believes, is what matters.
These logical explanations are for ppl who TRY to follow the religious way prescribed as their priority karma. Lot of people still do believe FORMALITY matters quite a lot in doing religious karma. They also do it without questiioning why or why-not? These explanations are for them.
well put. i had something in mind but you have expressed it eloquently. :clap:
I have something to say or share related to this which i will do later.
yes. SP. I feel that the freedom given to anyone to embark on the path he choses/feels right is something unique to our religion and also so many thoughts/questions keep on evolving.Quote:
Originally Posted by Shakthiprabha
I am waiting for ur post too shankar :)
nice work VR. :clap:
thanks and sure SP. i will do that. :)
Thanks Shankar :D :ty:
<digr> appadiyA :shock: apram eppadi ivlO nalla ;-)Quote:
Originally Posted by viraajan
April 9th
_______
அஷோக்கிடம் உமா மன்னிப்பு கேட்கிறாள். அவன், 'நடப்பதெல்லாம் நன்மைக்கே, பாசம் பந்தம் என்பதெல்லாம் மாயை என்றும் நாம் உணர முற்படவேண்டும்' என்கிறான்.
இதனின் அடிப்படையில் துவங்குகிறது மாயாவாதம். ஆதிஷங்கரர் "மாயாவாதத்தை" முன் வைத்து பிரசாரம் செய்தவர். இவ்வுலகம் மாயை. உலகமே மாயை, பிரபஞ்சமே மாயை என்றால், அங்கிருக்கும் தோன்றல்களும் மாயை. "மாயை" என்னும் வார்த்தைக்கும் "பொய்" அல்லது "அசத்தியம்" என்னும் வார்த்தைக்கும்
வித்தியாசத்தை உணர வேண்டும். பிரபஞ்சம் பொய் என்று சொல்லவில்லை, பிரபஞ்சமும், அதன் தோற்றமும், நடப்பவை, நடந்தவைகளும் மித்யை என்கிறார்கள் மாயாவாதிகள்.
சத்தியம் என்று ஒரு பொருளை குறிப்பிட வேண்டுமென்றால் அது நிரந்தரமான அழவற்ற நிலையில் இருக்க வேண்டும். சத்தியத்தை மூன்று வகையாக பிரிக்கின்றனர். பிரம்மம் அழிவற்றது அதுவே சத்தியம். நித்தியமானது.
அதை பரமார்த்திக சத்தியம் என்பர்.
வியாவஹாரிக சத்தியம்(உலக நிகழ்வுகள், படைக்கப்பட்டவை, அதன் தோற்றங்கள் அனைத்தும்)
பிராதிபாசிக சத்தியம் என்பது இல்லாத ஒன்று இருப்பது போல் தோற்றுவிப்பது. இது மாயையின் காரணம்.
இந்த மாயா தத்துவத்தை குறிப்பிட பெரும்பாலும் பலர் கையாள்வது "பாம்பு-பழுது" மேற்கோள்.
பழுதைப் பார்த்து பாம்பென பயப்படுபவனுக்கு எது சத்தியம்? அங்கே எதோவொன்று இருப்பது சத்தியம். அதை பாம்பாக பார்க்கும் வரை நம் கண்ணுக்கும் மனத்துக்கும் புலனுக்கும் பாம்பு தென்படுவதும் மித்யை. ஆனால் அங்கிருப்பது பழுது அது தான் சத்தியம். அது தெளிந்தவுடன் அங்கு பழுது மட்டுமே தென்படும் அங்கு பாம்பு மறைந்து விடுகிறது.
உறங்கும் மனிதனின் சொப்பனங்கள். உறங்கும் வரை அது மிகவும் உண்மை போன்ற தோற்றத்தை கொடுத்து, பின் மறைந்ததும் தெளிவு பிறக்கிறது.
ஞானிகள் பாம்பைத் தாண்டிய பழுது நிலையில் இவ்வுலகை பார்க்கின்றனர். நம் கண்களுக்கு பிராதிபாசிக சத்தியம் விலகி வியாவஹாரிக சத்தியம் தோன்றுவது போல், அவர்களுக்கு இவ்வுலகமே பிராதிபாசிக சத்தியம் என்பதாக உணர்கின்றனர். மீண்டும் ஒடுங்கும் போது நித்தியமான 'ப்ரம்மம்' ஒன்றே சத்தியம் என்ற தெளிவுடன் இருக்கிறது அவர்கள் நோக்கு.
மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
இவையும் கூட இதே தத்துவத்தை சுட்டிக்காட்டும்.
(வளரும்)
Finally I have seen my first episode of this serial. Very less content.
Cho talked about Moksha, Ancient Atheism, and Divisions within the Brahmanical caste. SP will do the honours :).
Branching off from Moksha and associated spiritual ideals, I have been reading about this guy called U.G. Krishnamurthy, a freelance no holds barred philosopher (he would probably deny this too :D ).
A rather shocking approach (non-approach) to the whole thing.
http://www.well.com/user/jct/
Love and Light.
ah how did u get the access prasad? :)
and UGK :) Ive read very little of him.
Missed today's episode :( :cry3:
I am at home in Chennai.Quote:
Originally Posted by Shakthiprabha
:) cool :)
enjoy in Chennai
Hehe thanks aanaa :D.Quote:
Originally Posted by aanaa
still - 4C here ;now
April 13th
_______
வேம்பு தம் மகளுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கத் துவங்குகிறார்.
விவாகம் என்றாலே இன்றைய காலத்தில் பிராமண வகுப்பில் பிறந்தோரைக் குறிப்பிடும் போது, பொதுவான பிரிவான 'சைவர்கள், வைணவர்கள்' என்ற இரண்டைத் தவிர சில உட்பிரிவுகளும் உண்டு. முற்காலத்தில் (சில இடங்களில் தற்காலங்களிலும்) வரன் தேடும் போது, உட்பிரிவுகளுக்கும் பொருந்தி வருமாறு தேடுவது வழக்கம். நான்கு உட்பிரிவுகள் கூறப்படுகின்றன. வடமர்கள், வாத்திமர்கள். அஷ்டசஹஸ்ரத்தை சேர்ந்தோர்கள், பிரஹசரணம் எனபன அவை. இப்பிரிவுகள் பூகோளப் பிரிவுகளால் உண்டாக்கப்பட்டவை எனவே, இவற்றில், கருத்து வேறுபாடுகளோ, வேறு வகையான சாஸ்திர சம்பிரதாய வேறுபாடுகளோ இல்லை. வடக்கிலிருந்தோர்கள் வடமர்கள் என்றும், காவிரியாற்றங்கரையில் வாழ்ந்தோர்கள் பிரஹசரணம் என்ற பிரிவிலும் இருந்தனர். இவர்களுக்கு மத்தியத்தில் இருந்த பிரதேச மக்கள் மத்தியமர்கள்(மருவி வாத்திமா) என அழைக்கபட்டனர். இராமனாதபுரம் பகுதியில் குறைந்தது எண்ணாயிரத்தி சொச்சம் மக்கள் இருந்தவர்கள் அஷ்ட-சஹஸ்ரம் (8000) எனப்பெயர் கொண்டனர்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் :D பொதுவாகவே ஆன்மவிஷயங்களப் பேசும் போதோ அல்லது அறிவுக்கு சட்டென்று வச்ப்படாத புலப்படாத விஷயங்கள் பேசப்படும் போது, பொது ஜனத்திற்கு புரிந்த விஷயத்தை எடுத்துக்காட்டாக கூறி விளக்குவது பெரியவர் வழக்கம். 'இதே உதாரணங்களா? இதே பாம்பு-பழுது கதைகளா, இதே பாலினுள் உள்ள தயிர் போல் விளங்கும் இறைவன் என்ற கதைகள் தானா' என பல நேரம் நாம் சலித்துக்கொள்ள நேரிடுகிறது. உட்கார்ந்து யோசித்தால் நமக்கே புரியக்கூடும். நமக்குப் புரியும் விஷயங்களை சுட்டிக்காட்டித் தான் புரியாத ஒன்றை உணரவைக்க முடியும். ஆக வழிவழியாய் இதே உதாரணங்கள் நம் நிலையில் உள்ளவர்கள் உணர்வதற்கு. பல நேரம் பக்தர்களும், ஆன்மீக நாட்டம் உள்ளவர்களும், அல்லது சார்வாகம் செய்பவர்களும் உதாரணத்தை மட்டுமே பிடித்துக்கொண்டு அதற்கு மேல் தம் புத்தியை செலுத்த மறுத்துவிடுவது பரிதாபம்.
சார்வாகம் என்றால் என்ன? சார்வாகம் என்றால் நாஸ்திக எண்ணங்களின் ஆதிக்கம். நாஸ்திகம் என்பது இன்றைக்கு விஞ்ஞான அறிவு கொண்டு, நாம் புதிதாக ஆராய்ந்து அதனால் வந்த எழுச்சியா? என்றால்...இல்லை என்கிறது புராணங்களும் வரலாறுகளும். படைப்பு படைக்கபட்ட போதே, சந்தேகங்களும், மாயையும், இறையை அறியாத மனமும், அதோடு சேர்ந்த நாத்திக எண்ணமும் பின்னிப்பிணைக்கப்பட்டிருக்கிறது.
நாஸ்திகம் எனப்ப்படும் சார்வாகம் இராமாயண காலத்திலும் இருந்திருக்கிறது. (அதற்கும் முன்பும் இருந்தது, இன்றக்கும் உண்டு. பின்பும் இருக்கும்)
ஜாபாலி என்ற ரிஷி இராமனை காட்டைவிட்டு நாட்டை ஆள புறப்படுவதற்கு வேண்டி சார்வாதம் செய்ததாக சான்று உண்டாம்.
சார்வாகம் என்றால், பரிகசிக்கத் தக்கது, இல்லை என்ற புறக்கணிக்கபட்டது. Something which has been discussed and later dismissed என்ற அர்த்தம் தொனிக்கும் சொல். அதனால் நாத்திகப் பேச்சு இன்றைக்கு வந்த புதிய விஷயம் அல்ல.
பி.கு: பாகவதரை மீண்டும் அழைத்து வருகிறார் நாதன். இரமண மஹரிஷியின் ஆசிரமத்திற்கு எப்படி சிறுத்தைகளின் வடிவில் சித்தர்கள் வந்ததாக கூறப்படுகிறதோ, அதே போல் இவனுடன் தொடர்பு கொள்ள வந்த பாம்பும் கூட எதேனும் சித்தராக இருக்கலாம் என அபிப்ராய படுகிறார் பாகவதர்.
எதோ ஒரு பெரிய மஹான் தனக்கு மகனின் பிறப்பாக பிறந்திருக்கிறான் என மெல்ல மெல்ல புரிந்து கொள்கிறார் நாதன்.
(வளரும்)