Dear murali sir,
I have sent a mail to your yahoo ID.please check it out and reply
Printable View
Dear murali sir,
I have sent a mail to your yahoo ID.please check it out and reply
சிவாஜி வாரம் இனிதே துவங்கியது என செய்தி வந்திருக்கிறது. மன்னவன் வந்தானடி படத்தின் இன்றைய மதியக் காட்சிக்கே கணிசமான மக்கள் வந்திருந்ததாக சொன்னார்கள். இதை பற்றிய மேலும் பல செய்திகளுடனும், தியேட்டர் புகைப்படங்களுடனும் சுவாமி சற்று நேரத்தில் இங்கு வந்து அவற்றை வெளியிடுவார்.
மாலை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற மெல்லிசை கச்சேரியும் ரசிக்கும்படியாக இருந்தது என்ற தகவலும் வந்திருக்கிறது.
கரிகாலன்,
அப்படி ஒரு காலகட்டமே இல்லை. தொடர்ந்து 2, 3 படங்கள் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து 13 படங்கள் எந்தக் காலத்திலும் இல்லை. சில படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் மீண்டும் வெற்றி பெறக் கூடிய திறமை படைத்தவர் என்பதை குறிப்பிடுவதாகவே அப்படி ஒரு உதாரணம் காட்டப்பட்டிருக்கிறது என்பது என் எண்ணம்.
அன்புடன்
Harish, replied.
சிவாஜி நியூஸ்
சென்னையில் நாளை சனிக்கிழமை (27.3.2010) நடைபெற இருக்கும் நடிகர் திலகத்தின் நிகழ்ச்சிகள்:
1. திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனிப் பெருவிழாவில் அறுபத்துமூவர் திருவிழா - நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் சார்பில் மோர்ப்பந்தல் - கோவில் தெப்பக்குளத்துக்கு அருகாமையில் - நண்பகல் 1:00
2. தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (இரண்டாம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - கௌரவம் திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45
அன்புடன்,
பம்மலார்.
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம்
26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)
பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ.3,800/- (ரூபாய் மூவாயிரத்து எண்ணூறு)
மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு)
அன்புடன்,
பம்மலார்.
Please click the following link to have a Visual Treat of the Sivaji Week at Chennai Mahalakshmi.
(All the outdoor photos were shot at the Hot Spot [Mahalakshmi Theatre Entrance])
http://pammalar.webs.com/apps/photos...lbumid=8540602
Happy Viewing,
Pammalar.
டியர் பம்மலார்....Quote:
Originally Posted by pammalar
சென்னை புரசை மகாலட்சுமி திருக்கோயில் கும்பாபிஷேக புகைப்படத்தொகுப்பு அருமை. பல்வேறு மன்றங்களின் உழைப்பை நன்கு பறைசாற்றும் வண்ணம் அரங்க முகப்பு களைகட்டியுள்ளது. மன்றங்களெல்லாம் இப்படி ஒரு சந்தர்ப்பம் எப்போ, எப்போ என்று காத்திருந்த தவிப்பு தெரிகிறது. அட்டகாசம். .
இதனை அனைத்துலக ரசிகர்களின் பார்வைக்கு அளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
பம்மலார் அவர்களே சகோதரி சாரதா அவர்கள் சொன்னது போல் மகாலட்சுமி திரை அரங்கம் கோலாகலம் கொண்டிறிருக்கும் என்று சந்தேகம் இல்லை
:clap: :DQuote:
Originally Posted by pammalar
சிவாஜி நியூஸ்
சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (28.3.2010) நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் நிகழ்ச்சிகள்:
1. தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (மூன்றாம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - எங்கள் தங்க ராஜா திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45
2. ஞாயிறு மாலை ரசிகர் காட்சியை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள்:
4:00 மணிக்கு அண்ணலின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்
4:29 மணிக்கு புஷ்ப அலங்காரம்
5:15 மணிக்கு வாண வேடிக்கை
6:00 மணிக்கு தீபாராதனை
3. ஞாயிறு மாலைக் காட்சிக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள்:
* தளபதி திரு. ஜி. ராம்குமார், நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர், திரைப்பட அதிபர்
* திரு.ஹெச். வசந்தகுமார், எம்.எல்.ஏ, வசந்த் & கோ அதிபர்
அன்புடன்,
பம்மலார்.
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம்
26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)
இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)
27.3.2010 - சனி - கௌரவம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)
பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)
மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 3,100/- (ரூபாய் மூவாயிரத்து ஒரு நூறு)
# நடிகர் திலகத்தின் பக்தர், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் கௌரவம் திரைக்காவியத்தை மேட்னி ஷோவில் கண்டு களித்தார்.
அன்புடன்,
பம்மலார்.
Chevaaliye Sivaji Week at Chennai Mahalakshmi (Latest Update):
http://pammalar.webs.com/apps/photos...lbumid=8540602
Happy Viewing,
Pammalar.
Thanks Murali Saar for the update.
It's feel like we are back to 70s
பம்மலார் அவர்களே தங்களின் சிவாஜி இயல் கேள்வித்தாள் நன்றாக இருந்தது. அதை பார்க்கும் போது நடிகர்திலகத்தின் சகோதரர் மறைந்த திரு சண்முகம் அவர்கள் பற்றி தகவல்கள் எதுவும் தங்களிடம் உள்ளதா?
1973 திரும்பியது...
இதைத்தான் மனது சொல்ல நினைக்கிறது
28.03.2010 மாலை சென்னை பட்டாளம் மஹாலக்ஷ்மி திரையரங்கில் எங்கள் தங்க ராஜா படத்துக்கு வருகை புரிந்த என்னைப் போன்ற பழைய ரசிகர்கள் மனதில் ஒரு மனதாக உருவாகிய கருத்து இதுவாகத்தான் இருக்க முடியும்.
ஒரு பத்து நிமிடம் முன்னதாக சென்றிருந்தால் தளபதி ராம்குமார் அவர்கள் பேச்சைக் கேட்டிருக்க முடியும். தாமதமாகி விட்டது. அது ஒரு குறை.
மற்றபடி சுமார் 5.30 மணியளவில் அரங்கிற்குச் சென்றபோது அங்கே கூடியிருந்த ரசிகர்களைக் கண்டவுடன் உள்ளத்தில் பொங்கிய உவகைக்கு அளவேது.
வெடிச்சத்தம் ஒரு பக்கம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒலிபெருக்கியில் கேட்டுக்கோடி, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், மயக்கமெனன என்று தலைவர் பாடல்கள் ....
மற்றொரு பக்கம் தலையை நிமிர்த்தினால்...
ஆஹா ...
கண் கொள்ளாக் காட்சி ...
தலைவரின் கட் அவுட்டுகள் ...
ஆளுயரத்திற்கும் அதிக நீளத்தில் மலர் மாலைகள் ...
ரசிகர்களின் பாலாபிஷேகம்....
வேறு சில ரசிகர்கள் சூடம் காட்ட...
இங்கே இன்னொரு பக்கம் ஆட்டம் பாட்டம்...
இன்னொரு பக்கம் தொலைக்காட்சியினரின் படப்பிடிப்பு
இவையனைத்தையும் பார்த்தவாறு பழைய நினைவுகளில் மூழ்கிய பழைய ரசிகர்கள்..
குழந்தைகுட்டிகளுடனும், தாய்மார்களுடனும், குடும்பத்துடனும் படத்தைப் பார்க்க அரங்கினுள் நுழையும் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்...
வேறொரு பக்கம் பார்த்தால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் நின்று நிதானித்து பார்வையிட்டுப் பின் கடந்து செல்லும் காட்சி...
பேருந்துகளில் செல்பவர்கள் வைத்த் கண் வாங்காது பார்த்த காட்சி...
இவ்வளோ வருஷமானாலும் சிவாசிக்கு கூட்டம் பார்த்தியா ... இது ஒரு மூதாட்டி இன்னொரு மூதாட்டியிடம் பகிர்ந்து கொள்ளும் நெகிழ்ச்சி...
...
இத்தருணத்தில் வசந்தகுமார் எம்.எல்.ஏ.அவர்கள் வருகிறார்..
தன்னுடைய வழக்கமான நினைவுகளினூடே அவர் சொன்ன இரு கருத்துக்ககள் பெருத்த கரவொலி...
தலைவரிடம் எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றிய தொண்டன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ...
அவரிடம் எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றும் தொண்டர்க்ள் சிவாஜி ரசிகர்கள்...
இந்த வரிகள் பலத்த் கரகோஷத்தைப் பெற்றன எனச் சொல்ல்வும் வேண்டுமோ..
இவையனைத்தும் அரங்கிற்கு வெளியே ...
இனி உள்ளே...
பெரும்பாலானோர் தாமதமாக உள்ளே வந்தாலும் ... ஒன்றும் நஷ்டமில்லை...
அனைவரும் நடிகர் திலகத்தின் முதல் தோற்றத்தைக் காண ஆவலோடு காத்திருந்தனர்...
அவர் வந்தார்...
கரகோஷம்...
மீண்டும் மற்றொரு முறை..
இம்முறை பட்டாக்கத்தி பைரவன் வருகை...
அரங்கம் அதிர்ந்து குலுங்கியது...
இவை யெல்லாம் சாதாரண வர்ணனைகள்...
ஆனால் இன்றைய அளப்பறையோ...
வர்ணிப்பில் அடங்காது...
1973 ஜூலை 14 அன்று சாநதி திரையரங்கில் கண்ட காட்சிகள் மீண்டும் கண்ணெதிரே மலரும் என
நாங்கள் ஆசைப்பட்டது நடந்தேறியது...
இப்படிக் கூட்டம் வரும் போது எதற்கு புதிய படங்களைப் போட்டு ரிஸ்க் எடுக்க்ணும்...
இது தான் திரையரங்கு உரிமையாளர்க்ளின் மனதில் தோன்றியிருக்கக் கூடிய எண்ணம்...
மொத்தத்தில்...
1973 திரும்பியது...
ராகவேந்திரன்
இங்கே சங்கரா தற்செயலாக சொன்னாரா இல்லை சுவாமி இங்கே கொண்டு வந்து குவித்திருக்கும் புகைப் படங்களைப் பார்த்து விட்டு சொன்னாரா என்று தெரியவில்லை, 1973 ஜூலை 14 சனிக்கிழமை காலை 10.30 மணி மதுரை நியூசினிமாவில் நடந்த ஓபனிங் ஷோ மீண்டும் ஒரு முறை கால இயந்திரத்தின் மூலமாக 2010 ஆண்டில் மகாலட்சுமி திரையரங்கில் மீண்டு வந்ததோ என்று வலுவான ஒரு எண்ணம்.
அண்மைக் காலத்தில் அந்த அரங்கிற்கு வெளியே இவ்வளவு கோலாகல கொண்டாட்டங்கள் நடந்திருக்காது என்பது உறுதி. இங்கே சுவாமி அவர்கள் எடுத்த புகைப்படத்தில் அவன்தான் மனிதன் அதன் அருகில் திருவிளையாடல் படங்களின் ஸ்டில்-கள் அடங்கிய நீண்ட வடிவிலான போஸ்டர்களை அனைவரும் பார்த்திருக்க கூடும். இன்று அந்த போஸ்டர்களே தெரியாத அளவிற்கு ஏராளமான மாலைகள். எத்தனை விதங்கள் உண்டோ அத்தனை மாலைகளும் அங்கே அணிவிக்கப்பட்டன. பூசணிக்காய் சூட, தீப ஆராதனைகள் நடக்க மலர் மாரி பொழிய வாழ்த்தொலிகள் விண்ணை பிளக்க அந்த சாலையில் பேருந்துகள், வான்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் தியேட்டர் வாசலில் நின்று வியப்போடும்
ஆச்சர்யத்துடனும் நகர்ந்தன. எதிர்வரிசையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் [முன்பு அங்குதான் சரஸ்வதி திரையரங்கம் அமைந்திருந்ததாக சொன்னார்கள்] இருப்பவர்கள் இப்படிப்பட்ட காட்சியை இதற்கு முன் இங்கே பார்த்ததில்லையே என்ற நினைப்போடு பார்க்க, பட்டாசுகள் முழங்கின. இன்னும் சொல்லப் போனால் இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னணி நடிகர்கள் கூட இந்த காட்களை கண்டிருந்தால் இது போன்ற ஒரு ரசிகர் கூட்டம் நமக்கு இல்லையே என்று நிச்சயமாக ஏங்கியிருப்பார். அந்த இடத்தில் வந்த ஒரு கமண்ட் " ஆஃக்ஷன் ஹீரோக்களுக்கு மாஸ் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் ஒரு ஆக்டருக்கு இவ்வளவு பெரிய மாஸ் இருப்பது உலகில் இவரை விட்டால் யாருக்கும் இல்லை".
வசந்தகுமார் அவர்கள் வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு. அவர் பேசும் போது நடிகர் திலகத்தின் பல்வேறு பாத்திரப் படைப்புக்களை குறிப்பிட்டார். நடிகர் திலகம், பெருந்தலைவர், காங்கிரஸ் பேரியக்கம் தொடர்புகளை சுட்டிக் காட்டி பேசி விட்டு விரைவில் நடிகர் திலகத்திற்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றார். அந்த மணி மண்டப திறப்பு விழா நாளன்று சென்னையே சிவாஜி ரசிகர்களால் நிறைய வேண்டும், நிறையும் என்று சொன்ன வசந்தகுமார் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உழைத்தவர் நடிகர் திலகம் அதே போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகர் திலகத்தின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே இன்றும் இருப்பவர் உழைப்பவர் அவரது ரசிகர்கள் என்ற போது ரசிகர்களின் பெரும் ஆரவாரம். பேசி முடித்து விட்டு அவர் கிளம்பினார்.
தியேட்டருக்கு வெளியே நண்பர் மோகனரங்கனை சந்தித்தோம். அவர் மாலையில் ஒரு வேலை இருந்ததால் மதியக் காட்சியே பார்த்து விட்டு வெளியே நின்றிருந்தார். நண்பர் சுவாமி மற்றும் ராகவேந்தர் சாரையும் சந்தித்தோம். படம் போட்டு விட்டார்கள் என்ற செய்தி அறிவிக்கப்பட உள்ளே நுழைந்தோம்.
தியேட்டர் நிகழ்வுகள் நாளை. அதற்கு முன் தியேட்டர் உள்ளே வெளியே நடந்த கொண்டாட்டங்களின் புகைப்பட குவியலோடு சுவாமி இங்கே போஸ்ட் செய்வார். அவர் சொல்வது போல் Happy Viewing.
அன்புடன்
தியேட்டருக்கு வெளியே நடந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்தினரால் படமாக்கப்பட்டன. எனவே வசந்த் டி.வியில் இது ஒளிப்பரப்பாகும் என தோன்றுகிறது.
ஆகா ! சென்னையில் இல்லாமல் போனோமே என மனம் ஏங்குகிறது .
:( The things I have been missing and still missing.Quote:
Originally Posted by joe
Rakesh, we need to do something in Malaysia :sigh2:
Don't know how, man. You are in the business, if you can pull some string. All I can is pull my muscle :(Quote:
Originally Posted by NOV
Now, Joe is thinking about doing the same in Singapore. 8-)
நண்பர் பம்மலார் அவர்கள் பிம்பங்களைப் பிரதியேற்றும் வரைக்கும் நாம் கண்டு மகிழ சில, கீழே காணும் இணைப்பில் -
http://sivajiweek.blogspot.com/
அன்புடன்
ராகவேந்திரன்
பம்மலரின் புகைபட பதிவுகலை பார்த போது மனதில் தோன்ரியது-னம் இருபது சிவாஜி உகதில்-பாக் டு 1970
டியர் முரளி & ராகவேந்தர்....
உங்கள் இருவரின் பதிவுகள் மூலம் நேற்றைய அலப்பரைகள் எந்த அளவுக்கு நடந்துள்ளன என்று தெரிகிறது. இப்படி ஒருநாளைக்குத்தானே ஏங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் நேற்றிரவே எனக்கு நேரடி ரிப்போர்ட் வந்து விட்டது. என் கணவரும் மகனும் மகாலட்சுமி திரையரங்கில் எங்கள் தங்க ராஜா அதிரடிக்காட்சியைப் பார்த்துவிட்டு வந்து நள்ளிரவு வரை அதைப்பற்றி என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். (இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரியும் அவருக்கு நேற்று லீவு, அவனுக்கும் பள்ளி விடுமுறை. சென்ற ஆண்டு இருதய ஆபரேஷன் செய்துகொண்டதிலிருந்து நான் பொது நிகழ்ச்சிகள் எதற்கும் செல்வதில்லை). ஆனால் அவர்கள் சொல்லச்சொல்ல 'ஐயோ நானும் சிரமத்தைப்பார்க்காமல் மகாலட்சுமிக்குப் போயிருக்கலாமே' என்று தோன்றியது. படம் பலமுறை பார்த்ததுதான். முக்கியமாக கொண்டாட்டத்தைக் காணத்தான் சென்றிருந்தார். சமீபகாலத்தில் இப்படி ஒரு கூட்டத்தை அந்த திரையரங்கம் பார்த்ததில்லை என்று அருகில் கடை வைத்திருக்கும் ஒருவர் சொன்னாராம். புதிய படம் வெளியீடு போலவே இருந்தது என்றார். இன்னும் அங்கு நின்ற ஒருசிலர் ஏழுநாட்களும் ஏழு படங்களையும் மாலைக்காட்சி பார்க்கவிருப்பதாகச் சொன்னார்களாம்.
முரளியண்ணா....
"எதிரில் அடுக்குமாடிக்குடியிருப்பு இருக்கும் இடத்தில்தான் முன்பு சரஸ்வதி தியேட்டர் இருந்ததாகச் சொன்னார்கள்" என்ற உங்கள் வரிகளைப்படித்ததும் அதிர்ச்சியடைந்தேன். அப்படீன்னா சரஸ்வதியும் போச்சா?. உள்ளே நுழையும்போதே 'கைகொடுத்த தெய்வம்' படத்தின் 100-வது நாள் ஷீல்டு சிரித்துக்கொண்டே வரவேற்கும் சரஸ்வதி தியேட்டர் இப்போது இல்லையென்ற செய்தி மனதைப் பிசைகிறது.
சிவாஜி நியூஸ்
சென்னையில் இன்று திங்கட்கிழமை (29.3.2010 - பங்குனி உத்திரம்) நடைபெறுகின்ற நடிகர் திலகத்தின் நிகழ்ச்சி:
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (நான்காம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு திருவருட்செல்வர் திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45
அன்புடன்,
பம்மலார்.
இன்றைய மாலை மலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி-
http://www.maalaimalar.com/2010/03/29133510/MGR.html
http://www.maalaimalar.com/2010/03/29133510/MGR.htmlQuote:
ஹவுஸ்புல்” காட்சிகளாக கலக்கும் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்; கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் திங்கட்கிழமை, மார்ச் 29, 1:35 PM IST
சென்னை, மார்ச். 29-
சென்னையில் புதுப்படங்களுக்கு இணையாக பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் வசூலில் கலக்குகின்றன.
நாடோடி மன்னன் ஆல்பர்ட் தியேட்டரிலும், அடிமைப்பெண் பிருந்தா தியேட்டரிலும் பல வாரங்கள் ஓடின. ஓட்டேரி சரவணா தியேட்டரில் வாரத்துக்கு ஒரு படம் என தொடர்ந்து 15 வாரங்கள் எம்.ஜி.ஆர். படம் திரையிட்டனர். கோபி கிருஷ்ணா தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் படங்கள் திரையிடப்பட்டன. மோட்சம் தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன் படங்கள் டிஜிட்டல் முறையில் திரையிடப்பட்டன.
தற்போது நடராஜா தியேட்டரில் தனிப்பிறவி படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அத்தியேட்டரில் ரசிகர்கள் ஆளுயர எம்.ஜி.ஆர். கட்-அவுட் வைத்து மாலை அணிவித்துள்ளனர். கொடி தோரணங்களும் கட்டி உள்ளனர்.
இதற்கு போட்டியாக சிவாஜி ரசிகர்கள் சிவாஜி வாரம் என்ற பெயரில் பட்டாளம் மகாலட்சுமி தியேட்டரில் தினம் ஒரு சிவாஜி படம் திரையிட்டு விழா கொண்டாடி வருகின்றனர். கடந்த வெள்ளியில் இருந்து நேற்று வரை மன்னவன் வந்தானடி, கௌரவம், எங்க தங்கராஜா போன்ற படங்கள் திரையிடப்பட்டன. இன்று திருவருட் செல்வர் படம் காட்டப்பட்டது. நாளை பாரத விலாஸ் படமும் நாளை மறுநாள் (புதன் கிழமை) ராஜபார்ட் ரங்கதுரை படமும், 1-ந்தேதி சொர்க்கம் படமும் தினமும் 3 காட்சிகள் திரையிடப்படுகின்றன.
இந்த தியேட்டருக்கு நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் நேரில் வந்து கௌரவம் படம் பார்த்தார். நேற்று சிவாஜி மகன் ராம்குமார், வசந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்து எங்க தங்கராஜா படம் பார்த்தார்கள். சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன், நிர்வாகிகள் எம்.ஏ. மஸ்தான், எம்.எல்.கான், சி.எஸ். குமார், மணவா ளன், நவீன், சூளை ராஜேந் திரன், ஏ. நாராயணன், எம். ஆதிமூலம், தணிகாசலம், பாப்பையா பாஸ்கரன், சில்க் இளங்கோ உள்பட ஏராளமான ரசிகர்கள் தினமும் படம் பார்க்கிறார்கள்.
தியேட்டரில் 25 அடி உயர சிவாஜி கட்-அவுட் அமைத்து தினமும் பால் அபிஷேகம் நடக்கிறது. வாணவேடிக்கை, தீபாராதனையும் நடத்துகின்றனர்.
தற்போது ரிலீசாகும் பல படங்கள் கூட்டம் இன்றி ஓரிரு நாளிலேயே தியேட்டரை விட்டு போய் விடுகின்றன. ஆனால் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் இப்போதும் லாபம் ஈட்டி தருகின்றன என்று தியேட்டர் அதிபர் ஒருவர் கூறினார்.
முதல் முறையாக ஒரு முன்னணிப் பத்திரிகை மனமுவந்து பெரிய மனது பண்ணி இருவர் படங்கள் என்று எழுதியதன் மூலம் நடிகர் திலகத்தின் சக்தியை உணர்ந்துள்ளது என்பதையே இச்செய்தி காட்டுகிறது. ஒரு தலைப் பட்சமாக எழுதுவது இனி குறைவதற்கான அறிகுறியே இச்செய்தி. இதற்கு முழுமுதற் காரணமான அனைத்து சிவாஜி ரசிகர்களும் தனிப்ப்ட்டமுறையிலும் மன்ற அமைப்பின் மூலமும் பாராட்ட்ப் படவேண்டியவர்களாவர். எந்த அரசியல் பின்புலம் இல்லை, எந்த விதமான பதவி பலமும் இல்லை, முழுக்க முழுக்க நடிகர் திலகம் என்கின்ற அப்பழுக்கற்ற அமரருக்கும் அவர்தம் ரசிகருக்கும் இடையே பின்னப் பட்டுள்ள பாசப் பிணைப்பின் வெளிப்பாடே இந்தச் செய்தி வெளிக்காட்டும் உண்மை, அது மட்டுமல்ல, எந்த அளவிற்கு இன்னும் நடிகர் திலகம் தமிழர் நெஞ்சில் கோலோச்சுகிறார் என்பதற்கு 28.03.10 மாலை மகாலட்சுமி திரையரங்கம் கண்ட காட்சியே சான்று.
ராகவேந்திரன்
என்ன முரளி,
இந்த சென்னை ரசிகர்கள் மதுரை ரசிகர்களை முந்தி விடுவார்கள் போல் இருக்கே? என்ன எங்க ஊர்லே போட்டிருந்த மதுரை மாநகரம் கலைகட்டிருக்கும்.
Any way, lucky chennai NT rasigargal!!
எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள்
நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்து மாடிக்கு சென்று இடம் தேடி இடம் கிடைத்து உட்காரும் போது கிட்டத்தட்ட நடிகர் திலகத்தின் intro வந்து விட்டது. எங்களின் பின் வரிசையில் அமர்ந்திருந்தவரை ராகவேந்தர் சார் அறிமுகப்படுத்தினார். நமது நண்பர் மோகனரங்கனின் பாதர் -இன்-லா என்று. அவரிடம் ஒரு ஹலோ சொல்லி விட்டு திரும்பினால் மேஜர், சிறுவன் ராஜாவிற்கு முயல் சிங்கத்தை ஜெயித்த கதையை சொல்லும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் வெளியே ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து மக்கள் கூட்டம் உள்ளே சாரி சாரியாக வந்து கொண்டிருந்தது. மேஜர் அடுப்பில் வைத்த கல்லில் சின்ன சப்பாத்தியை பெரிய சப்பாத்தியாக மாற்ற ஒயிட் அண்ட் ஒயிட்டில் கூப்பிய கரங்களுடன் தெய்வதை வணங்கும் நடிகர் திலகம். பேப்பர் பறக்க காதை அடைக்கும் கைதட்டல்கள். கிழே திரைக்கு அருகில் மீண்டும் சூடம் ஏற்றப்பட அரங்கு உரிமையாளர்களுக்கு ஒரே கிலி. மன்ற நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி உணர்ச்சி வசப்பட்டவர்களை அமைதிப்படுத்தினர்.
இட்லி சுட்டு விற்கும் ஆயா நடிகர் திலகத்திடம் " உன் ராசியான கையாலே போனி பண்ணிடேலே வியாபாரம் அமோகமாக நடக்கும்" என்று சொல்லும் போது எழுந்தது வாழ்த்தொலி. மஞ்சுளா அண்ட் கோ கிண்டல் காட்சிகள், சாதாரண ஆளாக இருந்த மனோகர் பெரிய தொழிலதிபர் ஆக இருப்பதைக் காட்டுவது என சில காட்சிகள் போனது. பிறகு வந்தது "சாமியிலும் சாமியிது" பாடல். அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி என்ற வரிகளுக்கு பலமான வரவேற்பு.
பிரின்சிபால் ராஜாவை கூப்பிடுகிறார் [நாகேஷ் - பிரின்சிபாலுக்கு பாடத்திலே ஏதோ சந்தேகமாம்,அதான் ராஜாவை கூப்பிடுறார்] ராஜாவிற்கு ஸ்காலர்ஷிப் இனிமேல் இல்லை என்று சொல்லி விட அடுத்த காட்சியில் நடிகர்திலகம் வேதனையோடு மேஜரிடம் சொல்லுவார் குல்லா வைக்கப் பிறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக் கூடாது. உடனே மேஜர் நீ கிரீடத்திற்கே பிறந்தவன் ராஜா என்ற போது மறுமுறையும் அதிர்ந்தது தியேட்டர்.
குப்பத்து மக்கள் எல்லோரும் சேர்ந்து பரிட்சைக்கு பணம் கட்ட பரீட்சை நடக்கிறது என்று காட்சிகள் வெகு வேகமாக நகர்ந்தன.[பின்னால் இருப்பவன் நாகேஷிடம் என்ன எழுதறே அதற்கு நாகேஷ் ஸ்ரீராமஜெயம் எழுதறேன். உடனே நண்பன் அதைக் கூட ஸ்ரீராமானுஜன்-னு தப்பா எழுதறே].
அடுத்து நடிகர் திலகம் நடந்து வர காரிலிருந்து இறங்கும் மஞ்சுளா. தியேட்டரில் ஆரவாரம் அதிகமாகி மீண்டும் சிலர் திரை இருக்கும் மேடை நோக்கி போக, மஞ்சுளாவிடம் என்னை மறந்து விடு என்று சொல்லி நடிகர் திலகம் ஒரு நடை நடப்பார் - கிழே, மேலே திரைக்கு அருகே என எல்லா இடங்களிலும் கைதட்டல் ஒலி காதை கிழிக்க அமர்க்களமாக இருந்தது.
அதன்பின் நடிகர் திலகம் ஆஸ்பத்திரி ஆரம்பித்து நடத்தும் காட்சிகள். மஞ்சுளா அங்கே வலிய வந்து பணி செய்வது என காட்சிகள் விரைந்தன. நாகேஷ் நடிகர் திலகத்தை வந்து பார்த்து, டா போட்டு பேசி விட ஆப்பக் கடை ஆயா நாகேஷை திட்டி விட "என்னப்பா உன் பேட்டையிலே உன்னைப் பற்றி பேசினா பென்டை கழட்டிடுவாங்க போலிருக்கு" என்று சொல்ல பேசித்தான் பாரேன் என்று நடிகர் திலகம் சொல்ல பேட்டையை வளைக்கிறியா என்று நாகேஷ் கேட்க முதலிலே பேட்டையை வளைப்போம் அப்புறம் என்று நடிகர் திலகம் இடைவெளி விட்டு நிறுத்த பின்னால் பெருந்தலைவர் படம் இருக்க எழுந்த ஆரவாரம் மீண்டும் 1973 -ஐ நினைவுக்கு கொண்டு வந்தது.
அடுத்து மஞ்சுளா மனோகரின் மகள் என்பதை நடிகர் திலகம் தெரிந்துக் கொள்ளும் காட்சி. வசனங்கள் இல்லாமல் கண் சிவக்க உதடு துடிக்க நடிகர் திலகம் வெளிப்படுத்தும் காட்சி தன்னை அவமானப்படுத்தும் மனோகரிடம் ஒன்றும் சொல்லாமல் உங்க அப்பா நல்லவர்-னு சொன்னியே என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேறும் நடிகர் திலகம் - பெரும் ஆரவாரம். அது அந்த காட்சிக்கு மட்டுமல்ல அடுத்து வரும் காட்சிக்கும் சேர்த்துதான் என்பது புரிந்தது. மஞ்சுளாவிற்கு போன். சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் மஞ்சுளா. அங்கே அதை விட அதிக சந்தோஷத்தில் ரசிகர்கள். இப்போது மேடையில் கிட்டத்தட்ட 20 நபர்கள். அதில் நாலைந்து நபர்களின் கையில் தீபம். அது போதாதென்று உள்ளே மேளத்தை கொண்டு வந்து சிலர் அடித்து ஆட ஆரம்பிக்க அட்டகாசம் ஆரம்பமானது.
நடிகர் திலகம் இந்த பாடலில் சில ஸ்டைல் சில நடை நடப்பார். கர்சீப்பை கையில் வைத்துக் கொண்டு ஒரு கால் மாற்றி ஒரு கால் வைத்து ஆடி வருவார், சரணத்தின் போது நேர் போஸிலும் சைடு போஸிலும் ராஜ நடை நடப்பார். காது கிழியும் டெசிபல் லெவல். கிழே தீபம் என்றால் மேலே பால்கனி கைப்பிடியில் சூடம் ஏற்றப்பட்டு அது அணையாமல் எரிந்துக் கொண்டிருப்பதற்காக சூடங்கள் நெருப்பில் சேர்த்துக் கொண்டே சிலர் நிற்க பார்வையாளர்கள் எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.
ஒரு சில காட்சிகளுக்கு பின் தியேட்டரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த காட்சி. மோட்டார் பைக் காட்டப்பட்டு பட்டாக்கத்தி பைரவன் வாயில் சூயிங்கத்தை மென்றுக் கொண்டே திரையில் தோன்ற உள்ளேயே வெடித்தது பட்டாஸ். கிட்டத்தட்ட அனைவரும் எழுந்து நின்று பார்க்க வேண்டிய நிலைமை. காரணம் முன்னால் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று விட்டனர்.
பைரவ அமர்க்களம் நாளை.
அன்புடன்
ராகவேந்தர் சார்,
நீங்கள் சொன்னது போல் இப்போதாவது நமது படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறதே. அப்போதும் கூட சில அள்ளி விட்ட செய்திகளை உள்படுத்தாமல் அவர்களுக்கு எழுத முடியவில்லை. சரி விடுங்கள்.
tac,
என்ன இருந்தாலும் நம்ம மதுரைக்கு ஈடாகுமா? நம்ம ரேஞ்சே தனி. இருந்தாலும் நேற்று சென்னை வாழ் ரசிகர்கள் தூள் கிளப்பி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அன்புடன்
என்ன சார் இது........... படத்தோட ஆர்ப்பாட்டமே பட்டாகத்தி பைரவர் தானே? எத்தனை நடிகர்கள் வந்தாலும் என்றும் நான் தான் ஸ்டைல் சக்ரவர்த்தி என்று நிருபித்த INTRODUCTION ஆயிற்றேQuote:
Originally Posted by Murali Srinivas
Waiting for aththiradi!!
The Sunday (28.3.2010) Evening Gala at Chennai Mahalakshmi - A Connoisseur's Delight
Everyone's eyes should see the following link to have a real feel of the divine power of THE GOD OF ACTING:
http://pammalar.webs.com/apps/photos...lbumid=8588985
A Very Very Happy Viewing,
Pammalar.
பட்டாசு, கூட்டம், கட்அவுட் என பம்மலாரின் புகைப்பட காட்சிகள் நம்மை அரங்கிற்கே அழைத்துச் சென்று விட்டன என்றால் மிகையில்லை.
தங்கள் பார்வைக்காக மேலும் சில படங்கள்
http://sivajiweek.blogspot.com/
ராகவேந்திரன்
murali/pammalar/raghavendra,
video இருந்தால் போஸ்ட் செய்யுங்க ப்ளீஸ். கலை உலக சக்கரவர்த்தி, சிம்ம குரலோன், நடிகர் திலகம், எங்கள் தங்க ராஜாவின் புகழ் வாழ்க!
Next time, you guys have good luck with NT's one and only Raaja!!
regards
ஆகா ! கலக்கிபுட்டீங்க மக்கா ..கலக்கிபுட்டீங்க :D
சிவாஜி நியூஸ்
சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை (30.3.2010) நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் நிகழ்ச்சி:
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (ஐந்தாம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - பாரத விலாஸ் திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45
அன்புடன்,
பம்மலார்.
முரளி சார் , நான் இரு நண்பர்களுடன் மதிய காட்சி பார்த்துவிட்டேன். பிறகு வெளியே வந்து 5 மனிக்கு மேல் நடந்த ஆரவாரங்ளை வேடிக்கை பார்த்தோம். திரையரங்கம் இருந்தது போக்குவரத்து அதிகமுள்ள சாலை என்பதால் ட்ராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு ஓரே பரபரப்பு. பேருந்துகளிலும் வாகனங்களிலும் செல்பவர்கள் வேடிக்கை பார்த்ததால். இதுவே நமக்கு நல்ல விளம்பரம். படத்தை பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறேன் - DVD யில் வராததால். சிறு வயதில் நான் மிக விரும்பிப் பார்த்த படம் - சூப்பர் ஹிட் பாடல்கள் -.ஆப்பக்கார பாட்டி பேசும் வசனம், மேஜரின் கிரீடம் டயலாக், அபிமான தலைவரின் படம் மாட்டப்பட்ட மருத்துவமனை, வல்லவரை எதிர்ப்பேன் - ஜெயிப்பேன் பாடல் போன்ற பல பாடல் வரிகள், இவற்றை பார்க்கும்போது நடிகர் திலகம் நடித்த எம்.ஜி.ஆர் படம் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். எங்கள் பகுதியில் நெல்லை - பார்வதி, நாகர்கோவில் - ராஜேஷ் என இரண்டு சென்டர்களில் நூறு நாட்கள் ஓடியது குறிப்பிடத் தக்கது . அதனால் வசந்த மாளிகை, ப்ட்டிக்காடா பட்டணமா போன்றவற்றை விடவும் அங்கே பெரு வெற்றிப் படம் என்றே சொல்ல வேண்டும்.Quote:
Originally Posted by Murali Srinivas
The Sunday (28.3.2010) Evening Gala at Chennai Mahalakshmi - A Connoisseur's Delight - More Pictures
Everyone's eyes should view the following link to have a real feel of the divine power of THE GOD OF THE CELLULOID WORLD:
http://pammalar.webs.com/apps/photos...lbumid=8588985
A Very Very Happy Viewing,
Pammalar.
நடிகர் திலகத்தின் நல்லிதயம், எமது நண்பர் திரு.கே.மகேஷ் அவர்களை நமது நடிகர் திலகத்தின் திரிக்கு "வருக! வருக!" என மிகுந்த அன்புடன் வரவேற்கிறேன். பார்வையாளராக இருந்த தாங்கள் பதிவாளராக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தங்களது அடுத்தடுத்த பதிவுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். தங்களுக்கு இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்!
"வந்தவர் (திரு.கே.மகேஷ்) வாழ்க! மற்றவர்கள் வருக!"
அன்புடன்,
பம்மலார்.
"நான் தன்னந்தனிக்காட்டு ராஜா (எங்க மாமா)"வைத்தழுவி அமைந்த ஜேஸன் ம்ரோஸின் பாடல் :
http://www.youtube.com/watch?v=EkHTsc9PU2A
("I'm yours", very popular in the west for the last couple of years)
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் (சற்றேறக்குறைய)
27.3.2010 - சனி - கௌரவம்
இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)
28.3.2010 - ஞாயிறு - எங்கள் தங்க ராஜா
பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 6,000/- (ரூபாய் ஆறாயிரம்)
மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 13,000/- (ரூபாய் பதிமூன்றாயிரம்) (ஹவுஸ்ஃபுல்)
இரவு 9:45 மணிக் காட்சி = ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம்)
அன்புடன்,
பம்மலார்.
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் (சற்றேறக்குறைய)
29.3.2010 - திங்கள் (பங்குனி உத்திரத் திருநாள்) - திருவருட்செல்வர்
பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)
மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 5,100/- (ரூபாய் ஐந்தாயிரத்து ஒருநூறு)
இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,100/- (ரூபாய் இரண்டாயிரத்து ஒருநூறு)
அன்புடன்,
பம்மலார்.