Originally Posted by
sakalakalakalaa vallavar
ஷங்கர், ஒரு மனிதன், 900 படங்கள் முடித்துவிட்டு, 5000 பாடல்களை இசையமைத்துவிட்டு, புதிதாக வரும் ஒரு படத்திற்கு, புதிதாகவும் ட்ரெண்ட்-புதுமையாகவும், இதுவரை இசையமைத்த தன்னுடைய, அல்லது மற்ற இசையின் சாயல்கள் இல்லாது, முற்ரிலும் புதிதாக ஒரு மெட்டு போடவெஏன்டுமெனில், அதே இடத்தில் இருக்கும் மற்ற இசையமைப்பாளர்கள் ஓட்டமெடுத்து ஓடி விடுவார்கள்! ஆனால் ராஜா சும்மா சஸ்டைன் பண்ணாமல், எவ்வளவோ மடங்கு பரவாயில்லை என்கிற அளவுக்கு புதிய ட்யூஙள் தருகிறார். ராஜாவின் சமீப இசை பிடிக்கும் பிடிக்கலை என்பதெல்லாம் வேரு விஷயம், ஆனால், அழகர்சாமியின் குதிரை எல்லாம் அவருடைய தொள்ளாயிரத்துச் சொச்ச படம் என்பதை நாம் எண்ணிப்பார்க்காமல் இன்றும் அவர் சூப்பர்ஹிட் பாடல்களை தரவேண்டுமென, ரிடையராகிர வயசிலும், எதிர்பார்க்கிரோமென்ரால், நம்முடைய இசை அறிவு, அல்லது ராஜாவின் திறமை அளவு பற்றின நம்முடைய புரிதல் அளாவு, எவ்வளவு கீழே உள்ளதென புரிந்துகொள்ளவும்.
அதாவது, இதுவரை(சென்ற நூற்றாண்டில்) ராஜா செய்த சாதனையின் மேக்னிட்யூட் நமக்குப்புரிந்துவிட்டால், அழகர்சாமியின் இசை கேட்டுவிட்டு, இப்பெல்லாம் ராஜா இசை முன்புபோல இல்லல்ல?!? என்ற அடிமுட்டாள்தனமான கேள்வியை கேட்கமாட்டோம்தானே? நான் வெரைட்டி,கற்பனைத்திறன் பற்றி மட்டுமே பேசுகிறேன்
அதே சமயம் வருடத்திற்கு ரெண்டே படம் தந்துவிட்டு பெயரை ரீடெயின் செய்யும் தற்கால இசையமைப்பாளர்களை தூக்கி நிறுத்துகிரோம்.
தொழில் தர்மம் பற்றியெல்லாம் கம்பேர் செய்கிரீர்கள், நான் இன்றும் யார் ஹிட்ஸ் தருகிரார்கள், யாருக்கு சம்பளம் அதிகம், யாருக்கு மார்கெட் இன்றும் இருக்கிறது, இதுவரை யார் அதிக வெற்றி தந்திருக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் பேசவே இல்லை. செய்யும் தொழிலில் தன்னளவிலான திறமை யாருக்கு அதிகம் என்றுதான் கேட்டேன். தனிமனித மூளைத்திறமை என்று வந்தால், கற்பனைத்திறன், செயல்வேகம், வெற்றிகளின் எண்ணிக்கை, வெளியிட்ட படைப்புகளிலுள்ள விஷயஞானத்தின் அளவு இவையெல்லாம் வைத்துப்பார்த்தால் நிச்சயம் ராஜா தான் முதலிடம், கமலுக்கு இரண்டாமிடம் தான், அதே சமயம், மூன்றிலிருந்து பத்தாம் இடம் வரை காலி தான்.