ஆதவன் ரவி அவர்களே!
நடிகர்திலகம் புகழ் பரப்பலே உயிர்மூச்சான இத்திரியில் தங்களின் பங்களிப்புக்கள் நிறைந்து அவர் காலடியில் காணிக்கைகளாகிட வாழ்த்தி வரவேற்கிறேன்!
செந்தில்
Printable View
ஆதவன் ரவி அவர்களே!
நடிகர்திலகம் புகழ் பரப்பலே உயிர்மூச்சான இத்திரியில் தங்களின் பங்களிப்புக்கள் நிறைந்து அவர் காலடியில் காணிக்கைகளாகிட வாழ்த்தி வரவேற்கிறேன்!
செந்தில்
என் ஆண்டவன் புகழ் பாட வரும்
ஆதவனே வருக! வருக!
எல்லாத் திசைகளிலும் கட்டபொம்மன் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. வெற்றிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆதவன் ரவி அவர்களே
வருக வருக...
ஹரிபாபு மேக்கப்மேன் மகன்...ஷன்முகம் (நடிகர் திலகம் தம்பி) உடன் சிவாஜி பிலிம்ஸ் ஆபிஸ அப்ப அப்ப வருவார்.
அவர் Bengali .Dr Nihar guptha எழுதிய நாடகமோ writer நாவலோ...
சிவாஜி uncle இடம் சொல்ல...
பெரியண்ணண் தயாரிப்பில் எடுக்கபட்டது..
நல்ல கதையோ அல்லது படமோ யார் சொன்னாலும் அதை ஏற்று கொள்ளும் குணம் நடிகர் திலகத்திடம் இருந்தது,
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...8b&oe=567B7BD1
https://www.facebook.com/photo.php?f...3722207&type=1
காத்திருப்பு
சுகமானது.
முற்றிய இரவுகளில்,
நம்பிக்கையோடு
கண்ணுறங்காது
காத்திருக்கும் மனிதர்களுக்கு
நல்ல விடியல்கள்
கிடைக்கின்றன.
விருப்பத்திற்குரியவள்
சொன்ன இடத்தில்
வெகுநேரம் காத்திருக்கும்
ஆடவனுக்கு
காதலியின் கரிசனம்
கிடைக்கிறது.
நல்லவிதமாய் தேர்வெழுதிக்
காத்திருக்கும் மாணவனுக்கு
மகிழ்வளிக்கும் தேர்ச்சி முடிவு
கிடைக்கிறது.
உண்மை பக்தியுடன்
உருகி அழுது
காத்திருக்கும் பக்தனுக்கு
கடவுளின் கருணை
கிடைக்கிறது.
அலுப்பு,சலிப்பின்றி
அல்லும் பகலும்
உழைத்துக் காத்திருப்பவனுக்கு
அமோகமாய்
வெற்றி கிடைக்கிறது.
காத்திருப்பு சுகமானது.
-------------------------------
நெஞ்சத் திரையில்
எப்போதும் ஓடும்
வீரபாண்டிய கட்டபொம்மனை
வெள்ளித்திரையில் காண
நாங்கள் ஆவலோடு
காத்துக் கொண்டிருந்தோம்.
இத்தனை நாட்கள்
நாங்கள் செய்த
காத்திருப்பு தவத்திற்கு..
இதோ..
மூன்று மணி நேரத்தில்
எங்களுக்கு
மோட்சமே
கிடைக்கிறது.
காத்திருப்பு சுகமானது.
-ஆதவன் ரவி-
மாவீரன் சிவாஜியின் வசனம் கேளுங்கள்!!.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...f8&oe=56818EE7
சிவாஜி தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்!
யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு
தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா?
மன்னர் குலத்தில் பிறக்காதவன்,
பரம்பரை உரிமை இல்லாதவன்,
மானம் காக்கும் குடியானவன்,
மகுடம் தாங்க முடியாதா?
தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து
ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு
நாட்டுக்குடைய நல்லவனென்றும்
போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும்
ஆரத்தியெடுத்த மக்களேங்கே?
ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும்
அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று
காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே?
உறையிருந்த வாளெடுத்து
ஒவ்வொரு முறையும், மராட்டியம்
என்றே முழங்கி இரையெடுக்கத்
துடித்த வேங்கை போல்
எங்கே பகைவர் எங்கே பகைவர்
என்று தேடி கறை படியாத என்
அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்!
என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு
. இந்த மக்கள் என் சொந்த மக்கள்,
உயிரினும் இனிய என் மக்களுக்காக
ஓடினேன். பகைவரைத் தேடினேன்.
வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன்
. பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம்
. முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்.
அரசியலை நான் அறியாதவனா? ஹ…
அரசு வித்தைகள் புரியாதவனா? ஹ… ஹ…
எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்புரை கேட்டு
நொந்து போக நான் நோயாளி அல்ல!
என்னை விட்டொருவன் இந்த தரணியாளும் தகுதியை அடைந்துவிட்டானா?
ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு
நாமேதான் நாடொன்று தலைதூக்கித்
திரியும் அந்த புல்லுருவிகள் எனது
முடியைத் தடுக்கிறார்களா அல்லது
தங்கள் முடிவைத் தேடுகிறார்களா?
thanks: https://www.facebook.com/photo.php?f...6316014&type=1
இந்த புகைப்படம் பற்றி ஏதாவது தகவல்கள் :
http://i39.photobucket.com/albums/e1...psnrvsrh3u.jpg
மீண்டும் சிவாஜி தாசன்!
கடந்த சில மாதங்களாக இந்த திரியில் பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் பார்வையாளனாக இருந்த என்னிடம் இப்போது ஏன் நீங்கள் எதுவும் எழுதுவதில்லை என்று திரு. ராகவேந்தர் சார், திரு. முரளி சார், திரு. நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் இந்த திரியின் 16ம் பாகத்தின் துவக்கத்தில் வாழ்த்து சொல்ல வந்தபோது திரு. சிவாஜி செந்தில் சார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் மீண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியிருக்கிறது. மேலும் கடந்த ஞாயிறு அன்று சாந்தி திரையரங்கில் மாலைக் காட்சி திரு. முரளி சார், திரு.நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் அவரது மகன் ஆகியோரோடு அமர்ந்து ரசித்தது ஒரு புது உத்வேகத்தை தந்துள்ளது. இனிவரும் காலங்களில் என்னுடைய பங்களிப்பு சிறப்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.
நட்புடன்
சிவாஜிதாசன்