http://i1065.photobucket.com/albums/...pslf0vx5hp.jpg
Printable View
http://i1065.photobucket.com/albums/...psn0z0moej.png
Ilaya Thilagam Actor PRABHU talks about his fathe…: http://youtu.be/jET42x9OQAc
பிறந்தநாள் காணும் நெய்வேலி வாசுதேவன்அவர்களுக்கு
என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் http://i1065.photobucket.com/albums/...psbdjmy0yj.gif
http://i501.photobucket.com/albums/e...ps4ef812e7.png
வாசு அண்ணன் நீடூழி வாழ்ந்து நடிகர் திலகம் புகழ் மாலை சூடி ... எம்மை என்றும் மகிழ்விக்க வேண்டுறேன்...
https://www.youtube.com/watch?v=gZLrOhpwbnA
நமது அன்பிற்கு இனிய அண்ணன் நெய்வேலி வாசு அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க, மேலும் மேலும் நமது தலைவர் படங்களை அனுபவித்து ரசித்து ருசித்து எழுதி எங்கள் எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வேண்டுகிறேன்...
http://www.thehindu.com/multimedia/d...E_2566382g.jpg
http://t0.gstatic.com/images?q=tbn:A...UYR1WQ_dxhs7gA
https://i.ytimg.com/vi/boba-nwr_uo/hqdefault.jpg
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
----------------
சுந்தருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
அன்று-
அக்டோபர்-10.
உமாவிடமிருந்து அவனுக்குக்
கடிதம் வரப் போகிறது.
அவனது வாழ்வையே திசை
மாற்றப் போகும் வார்த்தைகள்
தாங்கிய கடிதம்தான் வரப்
போகிறது என்பது தெரியாமல்
தவிப்பு நடை நடந்து கொண்டிருக்கிறான் சுந்தர்.
சாந்தியை அழைக்கிறான்.
"சாந்தி...இன்னிக்கு என்ன
தேதி?"
"அக்டோபர்' 10."
"இன்னிக்கு என்ன விசேஷம்?"
"உங்களுக்கு லெட்டர் வரப்
போகுது?"
"பரவாயில்லையே.. கரெக்டா
ஞாபகம் வச்சிக்கியே..!?"
"என்னால எப்படி அத்தான்
மறக்க முடியும்?"
"சாந்தி.. என் மேலே உனக்கு
எவ்வளவு அக்கறை?"
"அது கூட உங்களுக்குத் தெரியுதா அத்தான்?"
"என்ன சாந்தி இப்படில்லாம்
பேசுறே?"
- நடிகர் திலகம் தன் ரசிகர்களை மிகுந்த தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதில்
கில்லாடி.
தர்மசங்கடம்..?
ஏற்கிற கதாபாத்திரமாகவே
மாறுவது அவர் படத்தில்
அவர் தோன்றுகிற நிமிஷத்திலேயே நடக்கும்.
அவர், அவர் பாட்டுக்கு அந்தப்
பாத்திரமாகவே பயணப்பட்டுக்
கொண்டேயிருப்பார்.
நாம், அந்தப் பாத்திரத்திற்குள்
நடிகர் திலகத்தை தேடித் தேடி
ரசித்துக் கொண்டிருப்போம்.
திடீரென்று அந்த தர்மசங்கடம்
நமக்கு வந்து விடும்.
அவர் சிரித்தால் சிரித்து, அழுதால் அழுது, மெய்மறந்து
நாம் ரசித்துக் கொண்டிருப்பது,
அந்தக் கதாபாத்திரத்தைப்
பெருமை செய்த நடிகர் திலகத்தையா...?
இல்லை... நடிகர் திலகம்
ஏற்றதாலேயே பெருமை
பெற்ற அந்தக் கதாபாத்திரத்தையா..?
இந்தக் குழப்பத்தை நொடிக்கு
நொடி தந்து தர்மசங்கடத்தில்
ஆழ்த்திய படங்களில்..
'இரு மலர்களும்' ஒன்று.
புன்னகை அரசி, சுருக்கென்று
உரைக்கிற மாதிரி "அது கூட
உங்களுக்குத் தெரியுதா அத்தான்?" என்று கேட்டவுடன்
உதடுகள் புன்னகைத்தாலும்,
உள்ளிருந்து பொங்கித் திரண்டு
வரும் குற்ற உணர்வினை
சட்டென்று மேலெழுப்பி, அதை
தெளிவாய் முகத்தில் தேக்கிக்
கொண்டு, "என்ன சாந்தி..இப்படியெல்லாம் பேசுறே?"
என்று கேட்கும் போது,
நான் சொன்ன அந்த தர்மசங்கடத்தில்
ஆழ்ந்தவர்கள்..
என்னைப் போல் எத்தனை
பேரோ?
---------------
வரப்போகிற கடிதத்தை அப்பாவுக்குத் தெரியாமல்
கொண்டு வரச் சொல்லும்
கூச்சம்...
என்றைக்குமில்லாத அதிசயமாய் அன்று தபால்காரருக்காகக் காத்திருக்கும் புதுமை...
"எப்போ வரும்.. எப்போ வரும்"
என்று கே.ஆர்.விஜயாவை
சைகைகளால் துளைக்கிற
துடிப்பு...
வாசல் கதவு தட்டப்படும் ஓசை
கேட்டதும் முகம் மலர தவிக்கும் தவிப்பு...
தபால்காரர் தரும் கடிதம் தந்தைக்கு என்றதும் காட்டும்
ஏமாற்றம்...
போன தபால்காரர் திரும்பி வந்து, "இன்னொரு லெட்டர்"
என்றதும் மலரும் மலர்ச்சி...
கடிதத்தை புன்னகை அரசி
வாங்கியதும் "வா..வா! சீக்கிரம்
கொண்டு வா." -என்பதாய்
சைகையால் காட்டும்
அவசரம்...
கடிதம் கைக்கு வந்ததும், அதை
விரல் நடுங்கப் பிரிக்கிற
வேகம்...
கடிதத்தின் வாசகங்களில்
கண்களின் பார்வை காட்டும்
லயிப்பு...
படித்ததை நம்பமுடியாத தன்மையை வெளிப்படுத்தும்
கண் பார்வையின் கூர்மை...
சற்றும் எதிர்பாராத வாசகங்களைப் படிப்பதை
உணர்த்தும் புன்னகையிழப்பு...
சட்டென்று பரவும் இறுக்கம்...
"சாந்தி.. இந்த லெட்டரைப் படி"
என்று காட்டுகிற அதீத
வியப்பு...
எழுத, எழுதவே களைத்துப் போகச் செய்கிற இத்தனை உணர்வுகளையும் ஒரு சில நிமிடங்களில் வெளிப்படுத்த வேண்டும்.
நடிகர் திலகம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொழில் சார்ந்த ஒரு ஈடுபாடு,
சம்பாத்தியம், புகழ் குறித்த
கனவு, பிரபல்யம்.. இத்யாதிகளைத் தாண்டி,
நடிப்பு என்கிற மிகப் புனிதமான
விஷயத்திற்கும், தனக்கும்
இடைவெளியே இல்லாதபடி
பார்த்துக் கொண்ட ஒரே ஒரு
நடிகர் திலகமன்றி வேறு
யாரும் இப்படியெல்லாம்
அற்புதம் செய்யும் வாய்ப்பே
இல்லை.
(...தொடரும்...)