Sivaji says,"Hmmm, Kelu Kelu... Unakku evalavu thooram kekka mudiyumo, avalavu kelu"Quote:
Originally Posted by mohanraman
In his typical style... 8-) 8-) 8-)
:ty:
Printable View
Sivaji says,"Hmmm, Kelu Kelu... Unakku evalavu thooram kekka mudiyumo, avalavu kelu"Quote:
Originally Posted by mohanraman
In his typical style... 8-) 8-) 8-)
:ty:
Thanks Mohanraman Sir. Many overseas non - residents would be very happy to view and listen to this. Hope you would be able to upload the entire 4 week programme.
Today was the last part of Marakka Mudiyumaa. YG Mahendra, VC Guhanathan, Aroordas, TMS, PBS, B.Kannan, AVM Saravanan, Muktha Srinivasan, Kalaignanam, P.N.Sundaram, VV Sundaram and Prabhu talked about various facets of NT.
There were clippings from Pennin Perumai, Naan Sollum Ragasiyam, Annaiyin Aanai, Ambigaapathy, Aandavan Kattalai, Thiruvilayaadal, Rajapart Rangadurai, Thunai, Uthhama Puthiran, Kattabomman, Anbai Thedi and Paasa Malar. It was a nice programme.
When it ended, the thought that it would not be there next week made me feel sad.
Regards
Dear Mohanraman Sir,
Thank you very much for the kind provision of link. This will very much benefit who had missed the programme on Kalaignar TV. I have included the links for the blog as well as this video in our website, www.nadigarthilagam.com. Awaiting for more parts.
Dear Murali Sir,
I heard that the programme has received a wide reception and there is a demand for continuation and there may be telecasts for few more weeks, at least for next week it is continuing, that's for sure. So we can expect more next week.
Raghavendran.
Wow :D :D :D :D :D Mohanram sir,
Thanks for the treasure :thumbsup:
Koodanu koodi NanrigaL.
Awaiting for rest of the parts :D
Raghavendar Sir,Quote:
Originally Posted by RAGHAVENDRA
Last 3 weeks, they were putting up the title card "Aduthha Vaaram Thodarum" , but today there was no such card and they ended it just like they would do at the end of the last episode. If it is getting extended, nothing like that. Let us wait and see.
Regards
டியர் மோகன்ராம் சார்,
கலைஞர் தொலைக்காட்சியை எட்டமுடியாத வெளிநாடு வாழ் தமிழருக்கும், எட்டமுடிந்தும் தவற விட்டவர்களுக்கும் நீங்கள் செய்துள்ள பேருதவிக்கு அனைவர் சார்பிலும் நன்றிகள்.
டியர் முரளி,
நேற்று நிகழ்ச்சி முடிந்தபோது நானும் சோகம் அடைந்தேன். எத்தனை அருமையான நிகழ்ச்சி. அதிலும் நடிகர்திலகத்துக்கு அத்திபூத்தாற்போல் பாடிய பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்றவர்களெல்லாம் பேசியது மிக அருமை.
மீண்டும் தொடரப்போவதாக நண்பர் ராகவேந்தர் சொல்லி, நம் நம்பிக்கையை துளிர்விடச்செய்துள்ளார்.
டியர் ராகவேந்தர்,
இந்த இனைப்பையும் நடிகர்திலகத்தின் இணையதளத்தில் சேர்த்தமைக்கு நன்றி, நடிகர்திலகத்தை பற்றிய எந்த ஒரு விஷயம் கிடைத்தாலும் அதை (நீங்கள் உருவாக்கிய) அவரது இணையதளத்தில் இடம்பெறச்செய்வதன்மூலம், அந்த இணையதளத்துக்குச் சென்றால் அவரைப்பற்றிய அனைத்து விவரங்களையும் பெறலாம் என்ற நிலையை உருவாக்கி வருகிறீர்கள். உங்கள் சீரிய சேவைக்கு 'நன்றி' என்பதெல்லாம் ரொம்ப சின்ன வார்த்தை.
டியர் ஜோ,
உங்கள் உற்சாகத்தை என்னால் உணர முடிகிறது.
Hello
I love watching movies acted by NT and any tamil movie which has a reasonable and enchanting story. (which only old movies mainly seem to satisfy nowadays)
I was born in AFRICA and currently reside in Australia hence I really find this forum very informative and enjoyable. So thank you all for that.
A quick question
Is there a place in TAmil nadu which actually houses all the reels of old movies, are they all well preserved or are they fading away.
Any old movie i seem to purchase has a lot of scenes cut and precious songs removed.
For example, i bought Ethirparathathu ,and could not find Thirumuruga by Nagaiah and Jegam Ezhum by Radha Jeyalakshmi
Then i bought lakshmi kalyanam and that too ended 3 quarter way
சகோதரி சாரதா அவர்களுக்கு,Quote:
Originally Posted by saradhaa_sn
தஙளுடைய புகழுரைகளுக்கு உரிய அருகதை எனக்கு இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. தஙளுடைய மனமார்ந்த பாராட்டுக்களுக்கு என்னுடைய பணிவான நன்றிகள். நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு இணைப்புப் பாலமாகவும், எதிர்கால தலைமுறையினருக்கு அவரைப்பற்றிய சிறப்புகள் சென்றடையவேண்டும் என்பதும் நம்முடைய இணைய தளத்தின் முக்கிய காரணஙள். மேலும் இவ்விணைய தளத்தின் சிறப்புகள் எல்லாம் தஙளைப்பொன்றவர்களின் ஊக்கத்தினால் பெற்றவையாகுமேயன்றி, இதில் என் தனிப்பட்ட பங்கு என்று எதுவும் இல்லை. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றிற்கு நான் தான் பொறுப்பெற்கவேண்டும். எனவே இது நம் அனைவருடைய தளம் என்பதே உண்மை.
எனக்கு கிடைத்த தகவலின் படி மேலும் ஓரிரு வாரங்கள் தொடரலாம் என்று அறிகிறேன். இருந்தாலும் அடுத்த சனிக்கிழமை வரை பொறுத்திருப்போம்.
ராகவேந்திரன்.
அண்மையில் திரைப்பட உலகை சேர்ந்த ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு கதையும் அதன் திரைக்கதை வடிவமும் பற்றி அறிய நேர்ந்தது.
ஒரு கிராமம். அங்கே அன்றைய தமிழக சூழ்நிலைப்படி வாழ்கை முறை அமைந்திருக்கிறது. ஒரு நாள் ஒரு வயதான தாயும் அவளது மகனும் (சிறுவன்) அந்த கிராமத்தில் நுழைகிறார்கள். நோய்வாய்ப்பட்டிருக்கும் அந்த தாய் ஒரு அக்ரஹார தெருவில் விழுந்து இறந்து விடுகிறாள். கிராமத்தினர் அனைவரும் செய்வதறியாது திகைக்கின்றனர். சமூக கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த ஊரில் இந்த அனாதைகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லோரும் கூடி அந்த பையனையே தான் தாயின் பிணத்தை தூக்க வைத்து அடக்கம் செய்ய வைக்கிறார்கள். யாருமில்லாத அந்த சிறுவன் அந்த ஊரிலேயே தங்குகிறான். அவனது வேலையே ஊரில் எந்த வீட்டில் இறப்பு நேர்ந்தாலும் சரி, அந்த பிணத்தை தூக்குவது அவன்தான் என்றாகி போகிறது. ஊரில் அவன் பெயரே பொணம்தூக்கி. நிறைய பேருக்கு அவன் பெயரே தெரியாது. அப்படியே வளர்ந்து பெரியவனகிறான்.
அந்த ஊரில் ஒரு பெண் மட்டும் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு கல்லூரிக்கு படிக்க செல்கிறாள். படிப்பை முடித்து பட்டதாரியாக திரும்புகிறாள். அவளுக்கு தந்தை மற்றும் ஒரு தம்பி மட்டுமே. தந்தை திடீரென்று இறந்து விட அவள் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை. கிராமத்தில் இரண்டு பெரிய மனிதர்கள் ஊரில் உள்ள நிலங்களை வளைத்து போட முயற்சிக்கின்றனர். அவர்களின் நிலத்திற்கு நடுவில் அந்த பெண்ணின் தந்தையார் பெயரில் இருக்கும் நிலமும் இருக்கிறது. அதை அபகரிக்கும் சதி வேலையை அவள் எதிர்க்கிறாள்.
ஊரில் எல்லோருக்கும் உதவுவது போல் இந்த பெண்ணிற்கும் பொணம் தூக்கி உதவி செய்கிறான். ஒரு கட்டத்தில் இந்த இருவரையும் இணைத்து பெரிய மனிதர்கள் அவதூறு பரப்ப, அது பெரிய சர்ச்சையாகிறது. அந்நேரம் அந்த பெண் ஒரு துணிவான முடிவெடுக்கிறாள். அந்த பொணம் தூக்கியை திருமணம் செய்து கொள்ள அவள் எடுக்கும் அந்த முடிவை அவன் முதலில் ஏற்க மறுக்கிறான். பின் அவளது வற்புறுத்தலின் பேரில் ஒப்புக்கொள்கிறான்.
முதலிரவன்று திடீரென்று சங்கு ஊதப்பட, ஆமாம் ஒரு இறப்பு நடந்திருக்கிறது. உடனே நாயகன் தான் கடமையை செய்ய அதாவது பொணம் தூக்க கிளம்பி போக வேண்டிய சூழ்நிலை. இதனிடையே அக்கா ஒரு பொணம் தூக்கியை திருமணம் செய்து கொண்டதில் விருப்பமில்லாத தம்பியை இரண்டு பெரிய மனிதர்களும் தங்கள் பக்கம் இழுத்து அவன் மூலமாக சொத்து தகராறு ஏற்படுத்தி நிலத்தை கைப்பற்ற சதி செய்கிறார்கள். எப்படி இந்த சிக்கலெல்லாம் தீர்க்கப்படுகிறது என்பது (இதை தவிரவும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன) மீதி கதை.
இதை கேட்டவுடன், குறிப்பாக இந்த கதாபாத்திரங்களாக திரையில் தோன்றுவதாக இருந்தவர்கள் யார் யார் என்று அறிந்த போது, யார் இயக்கம் என்று தெரிந்த போது ஆஹா! இது நடக்காமல் போய் விட்டதே என்று மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
ஆம் நண்பர்களே! இந்த பொணம் தூக்கியாக நடித்தவர் நமது நடிகர் திலகம். நாயகி நடிகையர் திலகம். புத்தா பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து இயக்கியவர் பீம்சிங். பட்டதாரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த படம் 4000 அடிகள் வரை வளர்ந்தது. பெரிய மனிதர்களாக வேடம் ஏற்றவர்கள் எம்.ஆர்.ராதா மற்றும் டி.எஸ்.பாலையா. நாயகியின் தம்பியாக நடித்தவர் கமல். இசை மெல்லிசை மன்னர்கள். ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது.
காம்பினேஷன் கால்ஷீட் காரணமாக இடையில் படப்பிடிப்பு தடைப்பட்ட இந்த படம் அதே காரணத்தினாலேயே கைவிடப்பட்டது. படம் வெளி வந்திருந்தால் இப்படியும் ஒரு பாத்திரத்தை நடிகர் திலகம் செய்திருக்கிறார் என இருந்திருக்கும்.
இந்த தகவலை பற்றி யோசிக்கும் போது வேறு ஒன்று மனதில் வந்தது. பதி பக்தி முதல் பாதுகாப்பு வரை பீம்சிங் - நடிகர் திலகம் கூட்டணியில், சாவித்திரி எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் திலகம் - நடிகையர் திலகம் ஜோடியாக நடித்ததே இல்லை. இந்த படம் வெளி வந்திருந்தால் அந்த குறையும் நீங்கியிருக்கும். இப்படி ஒரு புதுமையான கதாபாத்திரம் வெளி வராமல் போனது தமிழ் சினிமாவிற்கு இழப்பு.
அன்புடன்
PS: நன்றி லெனின் அவர்களே!
Dear Friends,
I have been promised the actual show as telecast by kalaignar TV, so am putting these interviews on hold...will post the show or the interviews whichever in better after watching the material I have been promised....
Patience please....