டியர் முரளி,
'தங்கை' படத்தை உங்கள் எழுத்தில் இன்னொருமுறை பார்த்தேன். அற்புதம், அட்டகாசம் என்றெல்லாம் சொல்லி சொல்லி ஓய்ந்துவிட்டோம். புதிதாக வேறு வார்த்தைகள் கண்டுபிடிக்கவேண்டும். நிச்சயதாம்பூலம்' படத்துக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் சண்டைக்காட்சி இடம்பெற்ற படமான தங்கை, நடிகர்திலகத்துக்கு ஒரு திருப்புமுனைதான். தங்கச்சுரங்கம், ராஜா, திருடன் போன்ற படங்கள் வர பிள்ளையார் சுழியிட்ட படம் என்றும் சொல்லலாம்.
மகளின் திருமணத்துக்காக பேங்க் பணத்தை வைத்து சூதாடி தோற்றுவிட்டு ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் செஞ்சிகிருஷ்ணனின் பாத்திரம் நம் நெஞ்சைப்பிசையும். கதாநாயகனாக நடிக்கும்போதும் கூட, இமேஜ் பார்க்காமல் வில்லத்தனமும் செய்த நாயகன் நடிகர்திலகம் மட்டுமே என நினைக்கிறேன். அவர் எந்தப்படத்திலும், தன்னை 'உலகையே காக்க வந்த உத்தமனாக' காண்பித்துக்கொண்டதில்லை.
தங்கையாக நடித்த ஜெயகௌசல்யா, பின்னாளில் நல்ல நடிகையாக வந்திருக்க வேண்டியவர். 'நீதி' வரையில் நன்றாக நடித்துக்கொண்டிருந்த அவரை (தோரகா படம் தயாரித்த) ராம்தயாள் குரூப், தங்களின் 'பிரபாத்' இந்திப்படத்துக்காக பம்பாய்க்கு அழைத்துச்சென்று 'வேறுவழியில்' இழுத்துச்சென்று சீரழித்து விட்டனர், பாவம்.
'கேட்டவரெல்லாம் பாடலாம்' பாடல் உருவான கதையை நான் முன்பு எழுதியதை நினைவில் வைத்து, விமர்சனத்தில் குறிப்பிட்டதற்கு நன்றி. (உங்களின் அபார நினைவாற்றல் உலகறிந்த ஒன்று).
'கலாட்டா கல்யாணம்' விமர்சனக்கட்டுரை முழுதும் டைப் பண்ணி, முடிக்கும் தறுவாயில் கரண்ட் கட் ஆக, அனைத்தும் அழிந்துவிட்டது. (என் கணவரின் டிப்ஸ்: 'நாலு, நாலு வரிகள் டைப் பண்ணியதும் SAVE பண்ணிக்கிட்டே வா'). விரைவில் மீண்டும் டைப் செய்து போஸ்ட பண்ணுகிறேன். (அதற்காக ஒதுக்கிய இடம் பல பக்கங்கள் பின்தங்கி விட்டதால், இனி புதிய பக்கத்தில்தான் போஸ்ட் பண்ணனும்).
படத்தின் பெயர்தான் 'தங்கை'யே தவிர, விடிவெள்ளி, பாசமலர், தங்கைக்காக, எதிரொலி, அண்ணன் ஒரு கோயில் இவற்றோடு ஒப்பிடுகையில் தங்கைப்பாசம் கொஞ்சம் குறைவுதான்.