இளைய திலகம் பிரபு அவர்களின் இனிய ரசிகர்களின் படைப்புகளுக்கு மேலும் ஒரு பங்களிப்பாக வந்திருக்கும் குமரேசன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். தங்கள் வருகையாலும் பதிவுகளாலும் இத்திரி மென்மேலும் மெருகேறட்டும் வளரட்டும்.
ராகவேந்திரன்
Printable View
இளைய திலகம் பிரபு அவர்களின் இனிய ரசிகர்களின் படைப்புகளுக்கு மேலும் ஒரு பங்களிப்பாக வந்திருக்கும் குமரேசன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். தங்கள் வருகையாலும் பதிவுகளாலும் இத்திரி மென்மேலும் மெருகேறட்டும் வளரட்டும்.
ராகவேந்திரன்
திரு கமல்ஹாஸன் அவர்கள் மட்டுமல்ல பலர் இதைப் போன்ற தகவல்களை கூறி வருகிறார்கள். தயவு செய்து அந்த படங்களைத் தேதி வாரியாகவும் எத்தனை நாட்கள் ஓடியது என்றும் அவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். நமக்கும் உதவியாக இருக்கும்.
ராகவேந்திரன்.
raghavendra please help me how to add a image
Kumaresan,
How to add image ..answer is already given to you in Prabhu thread and someone even send Personal Message to you .
Kindly don't digress NT thread ..If any help ,pls send PM to any of us . :)
காலத்தை வென்ற காவியம். உடன் பிறந்தவர்கள் பாசத்திற்கு இலக்கணம் வகுத்த ஓவியம் அன்று முதல் இன்று வரை ஏன் தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை அண்ணன் தங்கை அன்பை அடையாளப்படுத்தவும் அளவுக்கோலாக கொள்ளவும் விளங்கப் போகும் நடிப்பின் நாயகனின் பாசமலர் தனது பொன் விழா ஆண்டில் இன்று [27th May] அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் இந்த திரைக்காவியத்தை நமக்கு வழங்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்வோம்.
அன்புடன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 25
கே: கலைக்குரிசில் கணேசனின் அன்றைய நடிப்பிற்கும், இன்றைய நடிப்பிற்கும் காணப்படும் வித்தியாசம் என்ன? (க.ஏ.தாசன், மா.சூசைநாதன், தங்கவயல்)
ப: அன்றைய நடிப்பு சுவையான பால். இன்றைய நடிப்போ அதோடு தேனும், முக்கனியும் கலந்தது. சுவைக்கு கேட்க வேண்டுமோ!
(ஆதாரம் : சினிமா கதிர், ஜூன் 1964)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 26
கே: சிவாஜிக்குக் கொடுக்கப்படும் வசனத்தை அவர் மனப்பாடம் செய்வாரா? (சிவாஜி சுந்தர், குரோம்பேட்டை)
ப: ஒரு முறை படிக்கச் சொல்லிக் கேட்பார். அப்புறம் மளமளவென்று பேசி விடுவார். புதிதாக நடிக்க வருபவர்கள் தான், அவர் படங்களில் பேசிய வசனங்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு, நான் அவரைப் போலவே வசனம் பேசுவேன் என்று பேசி நடித்துக் காட்டுவதுண்டு.
(ஆதாரம் : பொம்மை, மே 1981)
அன்புடன்,
பம்மலார்.
Som time back I read this
Who is No.1 Great Actor ?
Don't you/we think Actor means variety without any restriction of acting character/pair/duet/image/cooperation and THAN popularity.
One and only IT WAS and IS SivajiGanesan
Not many know that Kannada and Telugu star Saikumar is an avid fan of Tamil legend Sivaji Ganesan. His video library at home has a record collection of Sivaji's films. The collection has video CDs and cassettes of all of Sivaji's films, right from his debut "Parasakti" down to his cinematic swansong, "Poopparikkar Varugiroam". He is also acted in Tamil films as villain.
Recently he is hosting WOW A game show in Eenadu Telugu TV. During the shows, he often mentioned about NT and he always says he a great fan of NT though he acting career very limited in TF.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 27
கே: சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்கள்? (ப.பூலோகநாதன், சென்னை - 1)
ப: நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். எஸ்.வி.சுப்பையாவின் 'காவல் தெய்வத்தில்' இலவசமாகவே நடித்துக் கொடுத்தார். அவர் தன்னடக்கம் நிறைந்தவர்.
(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1969)
அன்புடன்,
பம்மலார்.