http://i1273.photobucket.com/albums/...pstj0qfz6d.jpg
Printable View
Dear raghavendra sir,
congratulations for reaching another milestone of 7000 posts,keep going
7000 -முத்தான பதிவுகளை அளித்த அருமை ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்புப் பதிவுப் பரிசு.
http://i61.tinypic.com/4zx7yb.jpg
'நடிப்பின் கல்தூண்' வேல் கதை சொல்லி 'கல்தூண்' படத்தில் பாடும் பாடல்.
வேல் பூஜை.
வேல் நட்ட கதையை வேங்கை வெளிப்படுத்தும் பாடல்.
ஊரே வணங்கும் பரமேஸ்வர கவுண்டரின் மூத்த மகன் திக்குவாய் கணபதி, கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்ருக்கும் திமிர் பிடித்த இளைய மகன் பழனிச்சாமி, கவுண்டரின் மனைவி, அந்த ஊரின் எக்ஸ்.எம்.எல்.ஏ இன்னும் பிறரும் வேல் பூஜைக்காக தங்கள் கிராமத்தின் கோவிலுக்கு வருகின்றனர்.
பரிவட்டம் கட்டி பூஜை செய்ய பூசாரி தயாராகிறார். முறைப்படி மூத்த மகனுக்கு பரிவட்டம் கட்டி பூஜை ஆரம்பிப்பது மரபு. வில்லன் எம்.எல்.ஏ இளைய மகனை தூண்டி விட்டு பரிவட்ட ஆசையை அவனிடம் வளர்க்கிறான். பூசாரியிடம் தனக்கே பரிவட்டம் கட்ட வேண்டும் என்கிறான் இளையவன். 'அது முறையல்ல... குல வழக்கப்படி மூத்த பிள்ளைக்குத்தான் பரிவட்டம் கட்ட வேண்டும்' என்று பூசாரி எடுத்துச் சொல்லியும் இளையவன் கேட்காமல் யாரும் தொடக் கூடாத, பெரிய சரித்திரத்தை பின்னால் தன்னகத்தே கொண்டிருக்கும், கோவிலின் முன்னால் கம்பீரமாக நிற்கும் அந்த வேலைத் தொடப் போகிறான் தொடரப் போகும் விளைவுகளைப் பற்றி ஒன்றும் தெரியாமல்.
தொடப் போனவனுக்கு தொடை நடுங்கும்படி ஓர் அடி விழுகிறது. சுருண்டு விழுந்தவன் எழுந்து பார்த்தால் நிற்பவன் தந்தை பரமேஸ்வர கவுண்டர்.
ஒருமுறை நட்ட வேல் மறுமுறை மண்ணிலிருந்து எடுக்கப்பட்டால் ரத்தம் குடிக்காமல் மீண்டும் மண்ணில் பதியாது... புதையாது. அப்படிப்பட்ட பாரம்பரிய சக்தி மிகுந்த வேல். சாமானியர் எவரும் கை வைக்க முடியாத வேல்.
வேலின் பின்னணிக் கதையை தந்தையிடம் கேட்கிறான் மகன்.
"சொல்றேண்டா! நீ மாத்திரமில்ல....இங்க இருக்கிற எல்லாரும் தெரிஞ்சுக்கணும்...இந்த வேலைப் பத்தின கதையை சொல்றேன் கேளுடா''
என்று கையில் ஆவேசமாக உடுக்கை எடுக்கிறான் தந்தை. எடுத்து அதை அடிக்க ஆரம்பிக்கிறான். வேலின் கதையை அனைவரும் உணரும்படி பாட்டாகப் பாடுகிறான். கதையின் பின்னணி உணர்ச்சியால் துடிக்கிறான். வேலின் பெருமையை வேதனையோடு கூறுகிறான். அந்தத் தந்தை சொல்லும் கதை தான் என்ன?
ஏழுதலைமுறைக்கு முன்பு இருந்த, கவுண்டரின் வம்சத்தில் வந்த வீர மகன் ஒருவன் நட்ட வேல் அது. குற்றவாளிகளை கொன்று தீர்க்கும் ஒரு வேலையைத் தவிர வேறு வேலை ஒன்றும் அறியாத புனித வேல்.
பகைவரையும் அஞ்ச வைத்து அவர்கள் குருதியையும் பொங்க வைக்கும் பொன்னான வேல். பாவம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் பக்தி தேவதையின் சக்தி வேல். பந்த பாசங்களுக்கு இடம் கொடாமல் பூமி விட்டு வெளி வந்தால் உயிர் வாங்கித்தான் மீண்டும் மண்ணில் பதியும் அந்த வேல்.
நாச்சிமுத்து கவுண்டன் என்ற நயவஞ்சகனுக்கு நல்ல பெண்டாட்டியாய் ஒருத்தி. குலமகளாய் குணமகளாய் குணவதி அவள் தாரமாய் வாய்த்தும் நாச்சிமுத்துக் கவுண்டன் நாடியது தராதரம் கெட்ட நங்கைகளை. வைப்பாட்டி என்னும் வழி தவறிய பெண்களை.
அவன் பத்தினித் தெய்வமோ அழகான ஒரு ஆண் பிள்ளை பெற்று இருந்தாள். இன்னொருத்தியுடன் கொஞ்சிக் குலாவிய கணவனை தடுக்கும் மனைவியை தன் மகன் சிறுவன் கண்முன்னே போட்டு உதைத்தான் நாச்சியப்பன். பையன் மனதில் வஞ்சம் முளைத்தது. தகப்பன் மேல் தாளமுடியாக் கோபம் பொங்கியது. நித்தம் அடி வாங்கும் தாயின் நிலை கண்டு சிறுவனுக்கு வாய் பேச்சு நின்று போனது. வாய் இழந்தாலும் வஞ்சம் வளர்ந்தது அந்த பிஞ்சு நெஞ்சில். தாயின் மேல் தொடரும் தந்தையின் தொடர் தாக்குதல்களில் வாய்விட்டு கதற முடியாமல் பதிலுக்குக் கண்ணீர் விட்டுக் கதறி, காவிரியின் வெள்ளத்தைத் தோற்கடித்தான் கற்புக்கரசி பெற்ற மைந்தன்.
ஊர் பெயரைக் கெடுத்த ஊதாரிச் சிறுக்கி ஒருத்தியின் கைப்பாவை ஆனான் காமுகக் கணவன். அந்த ஊர் கெடுப்பவளோ 'மனைவியைக் கொன்று போடு' என்று மண்டியிட்டுக் கிடப்பவனிடம் கண்டிப்புடன் கட்டளை பிறப்பிக்கிறாள். "பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி வைத்தால்தான் படுக்கைத் துணைக்கு என்னை பாங்காகப் பயன்படுத்த முடியும்" எனவும் நிபந்தனை விதிக்கிறாள்.
வேசியின் பேரழகில் சொக்கிக் கிடந்தவன் வேதமாக அவள் சொல்லை மதித்தான். மனைவியை மகன் கண்முன்னே கழுத்தை நெரித்து மரண வாசலில் தள்ளினான் அந்த மதி கெட்டவன்.
அப்பாவின் அக்கிரமத்தைப் பார்த்தான் மகன்.
அம்மா கொலையுண்டதைக் கண்டான் மகன்
அதிர்ச்சியில் அன்று நின்று போன வாய் இன்று
அதே அதிர்ச்சியில் 'அம்மா' என்று அலறியது....கதறியது...ஓலமிட்டது.
அம்மாவைச் சாய்த்த அப்பனைச் சாய்க்க ஆங்காரத்துடன் புறப்பட்டான் ஆண்மகன்.
ஆனால்
கண்மூடுமுன் கற்புக்கரசி கனலாய் நிற்கும் மகனைப் பார்த்து பாசத்தால் அவனைக் கட்டி, பாதகக் கணவனை பாடை போகும் போதும் கூட மகனிடமிருந்து பாதுகாத்துவிட்டுத்தான் பயணம் மேற்கொள்ளுகிறாள்.
நீறு பூத்த நெருப்பாய் மகன் மனதில் பழி கனன்று கொண்டிருந்தது. அப்பனின் அக்கிரமமோ அதிகமாகிப் போய்க் கொண்டே இருந்தது. சிறுவன் வாலிபனாய் வளர்ந்து போனான். உடன் சினமும் சிதறாமல் உள்ளே வளர்ந்து கொண்டிருந்தது.
உச்சமாய் அப்பன் கொடுந்தவறு ஒன்றை செய்ய தலைப்பட்டான். ஊர் பித்தமாக ஊரை எதிர்த்து கள்ளுக்கடை திறக்க சித்தமானான். அதுவரை பொறுத்த மகன் பொங்கினான். தாய் கடைசியில் வாங்கிய வாக்கு நினைவில் இருந்தது.
தாய் தவித்து இறக்கும் போது தனயனிடம் உறுதி வாங்கிக் கொண்டது.
"என்னைக்கு உங்க அப்பனின் அக்கிரமம் எல்லை மீறி ஊர் அழிக்குமோ அன்றைக்கு நீ அவனை அழித்து விடு... அதுவரை பொறுத்து விடு"
வம்ச மகன் நட்ட வேல் வஞ்சம் தீர்க்க இந்த மகனால் இப்போது மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டது. பிதாவின் உயிர் பிள்ளையினால் பரிதாபமாய் பறி போனது.
ஆமாம்! ஆறுபடை வேலனாக புதைந்த வேலெடுத்து, தந்தை பிள்ளை பாசம் அறுத்து, சூரபத்மன் மேனிதனில் வேல் பாய்ச்சி, ரத்தம் தந்த ரத்த உறவின் ரத்தம் பதிந்த வேலை மீண்டும் மண்ணில் புதைத்தான் மகன்.
வேலின் மானம் காத்தான் வேங்கை.
மகனிடம் இந்தக் கதை சொல்லி, வேலின் பெருமை சொல்லி, அங்கிருப்பவர்களுக்கு அதன் மகத்துவத்தைப் புரிய வைத்தார் பரமேஸ்வர கவுண்டர்.
http://i60.tinypic.com/v82z3o.jpg
வேங்கை பாய்ந்து பார்த்திருப்பீர்கள். சிங்கம் சீறி பார்த்திருப்பீர்கள். இதையெல்லாம் தாண்டிய சீற்றத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இதோ பாருங்கள்..இங்கு பாருங்கள்... இப்போது பாருங்கள்.
பரமேஸ்வரக் கவுண்டராய் பரம்பரை வேலின் கதையை உடுக்கை அடித்து உறுமியபடி, ஊரார் முன் பாடலாய் உரைத்தபடி உலவும் நடிப்புச் சிங்கத்தின் சீற்றம் பாருங்கள். அங்கங்கள் துடிக்க அலைபாய்ந்த நடையுடன் அத்தனை பேர் மத்தியில் கம்பீரக் களிநடம் புரியும் நடிப்புக் கடவுளின் நடிப்பைக் காணுங்கள்.
பரமேஸ்வரக் கவுண்டராய் பரமேஸ்வர வேடம் பூண்டவர். நடிப்பில் நம்மை ஆண்டவர்...நடிப்பின் ஆண்டவர்... நடிகர் திலகம் உடுக்கை அடித்து இந்தப் பாடலைப் பாடும் போது நம் சகல அங்கங்களும் ஒடுங்கிப் போகின்றன. சப்த நாடிகளும் அடங்கிப் போகின்றன.
உடுக்கை வாங்கி, அம்மனை வணங்கி, அடிக்க அராம்பிப்பாரே! நடிப்பை வடிக்க ஆரம்பிப்பாரே!
கைவைத்த பனியனும் வேட்டியும் அணிந்து, இடுப்பில் கட்டிய பட்டுத் துண்டுடன், உச்சந்தலையில் உன்னதம் காட்டும் கம்பீரக் குடுமியுடன், கையில் கட்டிய காப்புடன், கழுத்தில் செயினுடன் ருத்திராட்சக் கொட்டை மாலையுடன், நெற்றியில் நீறு குங்குமம் இட்டு காதில் கடுக்கணுடன், முறுக்கிய அடர் மீசையுடன் எனது கடவுள், நடிப்பைக் காத்த கடவுள் கையில் உடுக்கையுடன் உறுமியபடி களம் இறங்குமே!
அந்த அழகுக் கம்பீரத்தை உங்களுக்கு நான் எப்படிச் சொல்ல?!
'ஏழு தலைமுறையில் முன்பிருந்ததொரு
எங்கள் வம்சமகன் நட்ட வேல்'
என்று உடுக்கை அடியில் அதிசயங்கள் தொடங்க ஆரம்பித்து இதே வரிகள் உடுக்கை ஒலி இல்லாமல் ஒலிக்க, வரி முடிந்ததும் குளோஸ் -அப்பில் தலையை சற்றே சாய்த்து, படுகம்பீரத்துடன் பாடலைத் துவங்குவார் பார் புகழும் நடிக மன்னர். (கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை மெய்மறந்து பார்ப்பார்)
'எங்கள் வம்சமகன்' என்னும் போது புருவங்களுடன் நெற்றி ஏறி இறங்கி குலத்தின் பெருமையை அருமையாக பேசும். 'முன்பிருந்ததொரு' எனும் போது கண்களை கம்பீரமாக மூடித் திறப்பார்.
உடன் உடுக்கை அடிக்கும் அழகைப் பாருங்கள். காதருகே உடுக்கை வைத்து அந்த சப்தத்தைக் கேட்டவாறே தலையாட்டும் தன்னிகரில்லா அழகு.
எந்த நாளினிலும் குற்றவாளிகளைக்
கொன்று தீர்த்துவிடக் கற்ற வேல்
வலதுகால் முன்வைத்து, வீராவேசமாக நடந்து வந்து, அதே நேரம் வலது கையை முன் நீட்டி, ரௌத்திரம் காட்டி,
பகைவர் அஞ்சவரும் குருதி பொங்க வரும்
பழியை வாங்க வரும் வீர வேல்
பாவம் செய்தவர்க்கு பாடமாக வரும்
பக்தி தேவதையின் சக்தி வேல்
என்று அம்மன் கடவுள் பக்கம் ஆக்ரோஷமாகத் திரும்பும் திகைப்பூட்டும் திரைக் கடவுள்.
பந்த பாசங்களை எந்த நாளினிலும்
பார்ப்பதில்லை இந்த வெற்றி வேல்
என்று பாடி திரும்ப சற்றே வசன நடையில் மீண்டும் உச்சரிக்கும் உறுமல்.
இந்த பூமி விட்டு வந்த போதும்
உயிர் வாங்கித்தான் பதியும் இந்த வேல்
என்று பலி வாங்கும் வேலின் பழிதீர்த்தலை பட்டவர்த்தனமாக பார்ப்போருக்கு உரைக்கும் தீர்க்கம்.
இது முடிந்தவுடன் மிக மிக அருமையான உடுக்கை சப்தத்துடன் மிகவும் ஒன்றி லயித்து அங்கிருப்பவர்களை வட்டமிடுவார்.
இளைய மகனிடம் வந்து நின்று உடுக்கை தட்டியபடி, அதற்குத் தக்கவாறு தலையை ஆட்டியபடி,
மாரியாத்தா சந்நிதியில் வேலெடுத்து நட்டு வச்ச
காரணத்தை சொல்றேன் கேளடா
அட மானமுள்ள நாச்சியப்பன் ஆனபழி தீர்த்துவிட்டு
தானெடுத்து நட்ட வேலடா
அடடடா! இந்த வரிகளை முடித்தவுடன் வெறும் உடுக்கை சப்தம் மட்டுமே. உடுக்கை அடிப்பார் பாருங்கள் எம் மன்னவர்! காணக் கோடிக் கண்கள் பத்தாதய்யா பத்தாது. பார்க்கும் நமக்கு உடல் சில்லிட்டுப் போகும். உதடுகளை ஒன்று குவித்து தலையை வலதும் இடதுமாய் ஆட்டி, தன்னையறியாமல் மனம் லயித்து, இவர் உடுக்கை அடிக்கும் அதிசய அற்புதம் எழுத்துக்களால் வர்ணிக்க முடியாதது. இந்த ஒரு இடத்தை மட்டும் எத்தனை முறை பார்த்து ரசிக்கலாம் தெரியுமா!
இந்தக் காட்சியை பார்க்கும் போது என் கண்களில் என்னையுமறியாமல் ஏதோ இனம் புரியாத சோகக் கண்ணீர். மனம் பாரப்பட்டது. இந்த தெய்வம் பிறந்த மண்ணில்தானே நானும் பிறந்தேன் என்ற மார் தட்டும் பெருமையும் என்னை குடி கொண்டது.
நாச்சிமுத்து கவுண்டரு கட்டி வந்த பெண்டாட்டி
நல்லவள் ஒருத்தி இருந்தா
அவ உள்ளபடி தானிருக்க ஒன்பது பேர் வைப்பாட்டி
ஊருக்குள்ளே கூட இருந்தா
உத்தமமாம் பத்தினியாய் சத்தியம் தவறாமல்
ஒத்த பிள்ள பெத்து இருந்தா
அந்த பச்ச புள்ள முன்னிலையில்
பத்தினியை நாச்சிமுத்து நித்தமுமே போட்டு உதைச்சான்
நித்தமுமே போட்டு உதைச்சான்
மேற் சொன்ன வரிகளில் பிளாஷ்பேக் காட்சிகள் மிக அருமையாக தொகுக்கப்பட்டு காண்பிக்கப்படும். வரிகளில் கதை அற்புதமாய் புரியும். பதிவில் நான் கொடுத்திருக்கும் கதையைப் படித்தால் ஆழமாகப் புரிந்து கொள்ளளலாம்.
இது முடிந்ததும் நடிகர் திலகம் அந்த பிளாஷ் பேக் காட்சிகளை அப்படியே உள்வாங்கி, தாய் படும் கஷ்டத்தை காணச் சகியாத அந்த பிள்ளையின் மனநிலையை அப்படியே உடுக்கை அடித்தவாறு நமக்குக் காட்டி, அந்த சோகத்தைக் கூட கம்பீரமாக மாற்றி, நம் மனதில்தான் எத்துணை ஆழமாக நடந்த சம்பவங்களைப் பதிய வைக்கிறார்!
குளோஸ்-அப் காட்சியில் இவரின் முகபாவம் எப்படியெல்லாம் விந்தை புரிகிறது! அந்த பாவங்களில் நம் சிந்தையும் குளிர்கிறது.
திரும்பவும் பிளாஷ் பேக் காட்சிகள்.
தாய் வடித்த கண்ணீரை தான் பார்த்த பிள்ளைக்கு
வாய்ப்பேச்சு நின்னதேயடா
பிள்ளை வாயிழந்து போனாலும் பால் குடித்த நெஞ்சுக்குள்ளே
வஞ்சம் ஒன்னு வந்ததேயடா
சைடு ஆங்கிளில் உடுக்கை அமர்க்களம்.
வெள்ளாட்டி முன்னிலையில் வெள்ளாடு போல
அவள் வேதனையும் கொஞ்சமல்லடா
அந்த வேதனையைப் பார்த்த பிள்ள தானழுத்த கண்ணீரு
காவிரியை மிஞ்சுமேயடா
'காவிரி' எனும் போது காவிய மகன் மீண்டும் காட்டப்படுவார். உலகில் உள்ள அத்தனை நடிப்பு நுட்பங்களும் இந்த மனிதருக்குள் புகுந்து புயலாய் வெளிப்படும் இந்த நேரத்தில்.
'காவிரியை மிஞ்சுமேயடா' என்று தோள் பட்டைகளையும் உடலையும் வெளிப்பக்கம் வாங்கியவாறு, வாயைப் பிளந்து அழுதபடி, அனுபவித்த வேதனையை எண்ணி உருகும் இடம் ஒன்று போதும் இவர் நடிகரல்ல நடிக தெய்வம்...நடிகர்களுக்கெல்லாம் தெய்வம் என்று காட்ட.
இருநூறுக்குப் பிறகு ஒன்றுமில்லை என்று சொல்வோர் இந்தப் பாடலில் இந்த மந்திரஜால நடிப்பு மன்னனின் அசைவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? பதில் சொல்ல இயலுமா உங்களால்?
வண்ணமுள்ள பெண்ணொருத்தி வஞ்சகனுக்கு
வாய்த்து விட்டாள்
பின்னும் அவள் போன கதை பெருசாச்சு
அந்த பேரழகி சொன்னதுதான் செயலாச்சு
பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி விட்டால்
பக்கத்தில் நானிருப்பேன் என்றாளே
அந்த பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே
பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே
ப்ளாஷ்-பேக் காட்சி முடியும். மீண்டும் காமெரா நடிகர் திலகத்திடம் வரும்.
அப்பாவின் செயல் பார்த்தான்
அம்மாவின் கொலை பார்த்தான்
அப்போது சீறி வந்தான் ஊமையடா
அம்மா அம்மா அம்மா
பேசி அம்மா அம்மா வென்றே துடித்தான் பிள்ளையடா...
மீண்டும் குளோஸ்-அப். 'அம்மா அம்மா' வென்று கூறும்போது சாதனை நிகழ்த்தும் வாயசைப்புக்கள். உள்ளே நடித்துக் கொண்டிருக்கும் நாக்கு. உணர்ச்சிகளின் பிழம்பாய் அந்த முகம். தாயை இழந்த பிள்ளையின் முகத்தை இங்கே காணலாம். அந்த சோகத்தை இங்கே உணரலாம்.
திரும்பவும் காட்சி கதைக்குத் திரும்பும்.
கண்ணிலே நெருப்பெடுத்த வண்ணமகன் தான் பார்த்து
பெண்ணரசிதான் அழைத்தாள் அன்பினிலே
தன் பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே
பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே
இப்போது மீண்டும் சிங்கத்தின் ஆக்ரோஷமான ஆக்டிங்.
பாடலுடன் நடிப்பும் வேகம் எடுக்கும்.
கட்டுப்பட்ட அந்த மகன் காத்திருந்தாண்டா
அந்தக் காலம் வரும் வேளை வரை காத்திருந்தாண்டா
தட்டுக்கெட்ட அந்த எமன் பங்காளியானான்
மகன் தாயுரைத்த வாக்கின்படி பகையாளியானான்
ஆறுபடை வேலனென ஆடி வருகின்றான்
சூரபதன் மேனிதனில் பாய வருகின்றான்
தந்தையென பிள்ளையென பாசம் இனி இல்லை
சந்ததியில் இந்த வடி வேல் உரைக்கும் எல்லை
பாடல் முடிந்ததும் மீண்டும் உத்தமரின் உடுக்கை முழக்கம்.
பின் வசன மழை.
'அந்த நாச்சியப்பன் நட்ட வேல்தாண்டா இது...
இந்த வேல் என் பரம்பரையின் வரலாறு...
கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் செய்தவனுக்கு இது ஒரு சிம்ம சொப்பனம்...
ஊரைப் பகைச்சுக்குற அயோக்கியனுக்கு இது ஒரு பாடம்...
என் பரம்பரையில பொறக்குற தலைச்சன் புள்ளதான் இந்த வேலைத் தொட்டு பூஜை பண்ணனும்...'
என்று ஆணித்தரமாகத் தொடருவார்.
அப்பாடி! என்ன ஒரு காட்சி! எப்படிப்பட்ட பாடல்! கதைக்குப் பொருத்தமான வரிகளை கண்ணதாசன் மிக அற்புதமாக வடித்துத் தந்திருப்பார். பாடலுக்கேற்ற அருமையான கதை சொல்லும் மேஜரின் இயக்கம். பொருத்தமான நடிகர்கள் தேர்வு. உடுக்கையின் இடி மழை, 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசை, அச்சு வார்த்து எடுத்த மாதிரி நடிகர் திலகத்திற்காக உணர்ச்சி ததும்பப் பாடும் 'பாடகர் திலகம்',
இவை எல்லாவற்றையும் தூக்கி 'டபக்'கென்று வாயில் போட்டு விழுங்கி ஏப்பம் விட்டுக் கொள்ளும் நடிகர் திலகத்தின் ஈடுஇணையில்லா நடிப்பு. நடிப்பின் அரிச்சுவடி அறியாதவன் கூட இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் நடிப்பை உணர்வதில் பண்டிதனாவான்.
வி.கே.ஆர், மனோரமா, கே.ஆர்.விஜயா, கல்தூண் திலக்ஜி, சதீஷ், நாகேஷ், கோகுல்நாத், வாணி இன்னும் பலர் சுற்றியிருக்க அத்தனை பேர் மத்தியில் ஒற்றை ஆளாய் ஒப்பற்ற நடிப்பை வாரி வழங்கி, 'என்றுமே நான் நடிப்பில் எவரும் முந்த முடியாத தனிக் காட்டு 'ராஜா' என்று நடிகர் திலகம் நிரூபிப்பதோடு 'என்னுடைய பின்னாளைய படங்களையும் பாருங்கள்...அதில் கொஞ்சமும் என் நடிப்பு சளைத்ததல்ல...குறைந்ததல்ல' என்று சவால் விடுவது போல் தோன்றுகிறது.
நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
https://youtu.be/Oz_lxmyaQSo
இராகவேந்திரன் சார்,
இத்திரியில் தங்களது பதிவுகள் ஏழாயிரத்துக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.
நடிகர்திலகத்தின் ஊடகத் தளபதியாக ஏழாயிரம் கூர்வாள் பதிவுகளைக் கடக்கும் ராகவேந்திரன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !
https://www.youtube.com/watch?v=8r-QoFynCqY
முத்தான 7000 பதிவுகள்
வாழ்த்துக்கள் ராகவேந்திரா சார்
http://i61.tinypic.com/2ex945h.jpg
7000 பதிவுகளை பதிவுசெய்த ராகவேந்தர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..
http://i62.tinypic.com/1zzgp3m.jpg
Raghavendra Sir
There are no words to compliment your contribution towards holding the forte called Nadigar Thilagam.
Am sure, his soul will bless you with more health, wealth and prosperity.
https://www.youtube.com/watch?v=p36pPEucSyo
Regards
RKS
CONGRATS mr raghavendran for the landmark of 7000plus worthwile postings in a record time. May NT'S SOUL bless you with all wealth and health.
BLESSINGS
மகத்தான 7,000 பதிவுகள் கடந்தமைக்கு வாழ்த்தினையும், மக்கள் திலகம் திரியின் அனைத்து பதிவாளர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தமைக்கு நன்றியையும், திரு. ராகவேந்திரா அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் !
http://i59.tinypic.com/2pquhyh.jpg
7000 பதிவுகள் பதிவு செய்த சிவாஜி திரியின் வீரபாகு திரு ராகவேந்திர அவர்களுக்கு வாழ்த்துக்கள்
http://i1170.photobucket.com/albums/...ps309l9ap5.jpg
congrats mr. RAGAVENDRA sir for your 7000 posts
Congratulations for 7000 posts to Mr. Ragavendra sir.
#3560
RAGHAVENDRA
[http://www]
Senior MemberDiamond Hubber[http://www]Join DateJan 2008Posts7,000Post Thanks / Like*[http://www]
Sivaji Ganesan - Definition of Style 28 - நவராத்திரி*
அற்புதராஜை அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...9e&oe=561F2E92
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Dear Raghavender Sir,
Hearty congratulations for 7000th post.
Great writing on "Arpudharaj".
In fact, I posted just when I entered this thread in 2010 about my first viewing experience of "Navarathri" in Murali Krishna theatre, Amaindhakarai, Chennai. I still vividly remember the way theatre erupted as soon as the well was shown to which Savithri was nearing, in anticipation of NT's appearance.
Regards,
R. Parthasarathy
NT Positive / NT Negative / NT Neutral : New series!
Quote:
ரத்தத்தில் எந்த குரூப்பாக இருந்தாலும் மீண்டும் அதையே பாசிடிவ் நெகடிவ் என்றுதான் பிரிக்கிறோம் அதுபோலவே நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய எண்ணற்ற வகையான பாத்திரப் படைப்புக்களையும் பாசிடிவ் நெகடிவ் ஆகப் பிரிக்கும் அலசல் கண்ணோட்டத்தின் முன்னோட்டம்
Quote:
Part 1 :NT Positively Negative! PARAASAKTHI
பகுதி 1 : நடிகர்திலகம் நேர்மறையாகவே எதிர்மறை குணாதிசயம் கையாளுதல் : பராசக்தி
யாரும் தனக்குத் தீங்கிழைக்காதவரை தனி மனிதன் நல்லவனே தொடர் பாதிப்புக்கு உள்ளாகும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்னும் வாழ்வியல் தத்துவத்தை முதல் படம் என்ற பிரக்ஞையே இல்லாது தேர்ந்த நடிப்பிமையமாக பராசக்தியிலேயே சாதித்துக் காட்டினர் நடிகர்திலகம் !
Positive NT surrounded by Negative elements!
https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog
தங்கை கல்யாணியைப் பார்க்கும் பாசத் தூண்டுதலில் வெள்ளந்தியாக தாய் மண்ணை மிதித்தவுடனேயே பணம் பொருள் இழந்து உலகவியல் அனுபவத்தின் கசப்பான முதல் படியில் கால் வைக்கிறார் நடிப்பின் பரம்பொருள் குனியக் குனியக் குட்டு வாங்குபவர் நிமிர்ந்தால் ..உலகம் எப்படி சிதறி ஓடுகிறது!
பரிதாபத்துக்குரிய பைத்தியக்கார வேஷதாரியாக மாறி உன்மத்தரின் தோலுரிக்கும் வைத்தியத்தை முதல் காவியத்திலேயே அரங்கேற்றிவிட்டாரே நடிக மன்னர் !!
NT positively becomes Negative!!
உளவியல் ரீதியாக வேறு எந்த வேஷத்தையும் விட மன நலம் தறிகெட்ட பைத்தியக்காரன் வேஷமே தன்னை வஞ்சித்த சமுதாயத்தை பயப்படுத்தி சிதறி ஓட வைக்கும் என்னும் தத்துவம் எவ்வளவு அழகாக அருமையாக சீராக நெத்தியடியாக நடிகர்திலகம் வாயிலாக உணர்த்தப் பட்டிருக்கிறது ?!
https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14
NT negatively communicates positive!
நேர்மறையாளரால் தன்னை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை சகிக்க இயலாதே!
நெஞ்சு பொறுக்குதில்லையே......!
https://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo
NT Positive finally!!
எதிர்ம(ரை)றையாக போயிருக்க வேண்டியவரை நேர்மறையாளர் ஆக்கியது காதலே! காதல் சீருடையான பைஜாமா ஜிப்பா காஸ்ட்யூமை ஜெமினிக்கும் அறிமுகம் செய்தது நடிகர்திலகமே!?
https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ
7000 -முத்தான பதிவுகளை அளித்த அருமை ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்புப் பதிவுப் பரிசு.
http://i61.tinypic.com/4zx7yb.jpg
வாசு - மிகவும் அருமையான பதிவு மட்டும் அல்ல - திரு ராகவேந்திரா அவர்களுக்கு மிகவும் பொருத்தமான பரிசும் கூட . இந்த பதிவின் பின்னால் தெரியும் உங்கள் உழைப்பின் அருமை எங்கள் எல்லோரையும் அசர வைக்கிறது . திரு ராகவேந்திரா அவர்களுக்கு பரிசு தருவதன் மூலம் , இந்த திரியின் நாயகனுக்கு பெரிய அஞ்சலி செய்துவிட்டீர்கள் . 200 படங்களுக்கு அப்பால் அவர் நடிப்பு ரசிக்கும் படி இல்லை என்று சொல்லும் அறிவிழந்த கூட்டத்திற்கு உங்கள் பதிவு ஒரு சாட்டையடி - நடிகர் திலகத்தை பூஜை செய்யும் ஒவ்வொரு ரசிகனும் படித்து , பாதுக்காகவேண்டிய பதிவு இது என்றால் அது மிகை அல்ல . தொடருங்கள் - இன்னும் மயங்க காத்திருக்கிறோம்
7000 பதிவுகளுக்கு வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர்கள்,
யார் Landmark No. of Postings பதிவுகளிட்டாலும் முதல் நண்பராய் வாழ்த்துத் தெரிவிக்கும் அன்பு நண்பர் விநோத் அவர்கள்,
பெங்களூரு செந்தில் (Harish),
வரதகுமார் சுந்தர்ராமன்,
கே.சந்திரசேகர்,
ஷைலேஸ் பாஸு,
நடிகர் திலகம் திரியின் இரு கல்தூண்களாய் விளங்கும் பம்மலார் (தொலைபேசி வாயிலாக) மற்றும் நெய்வேலி வாசு அவர்கள்,
கோவை செந்தில்வேல்,
நெல்லை கோபு,
டாக்டர் கோவை செந்தில்,
ரவிச்சந்திரன்,
கனடா சிவா,
கலைவேந்தன்,
முத்தையன் அம்மு,
ரவிகிரண் சூர்யா,
சுப்ரமண்.ம் ராமஜெயம்,
லோகநாதன்,
செல்வகுமார்,
யுகேஷ் பாபு,
மதுரை சந்திரசேகர்,
பரணி,
சுந்தர்ராஜன்,
பார்த்தசாரதி,
ஹைதராபாத் ரவி,
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் சிரந்தாழ்ந்த பணிவான நன்றி. நடிகர் திலகத்தின் சிறப்பைப் பார் முழுதும் பரப்பும் பணியில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவை தங்களின் அன்பான வாழ்த்துக்களே. தங்களின் தொடர்ந்த ஆதரவின் மூலம் மேலும் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவரவர் தலைவரின் புகழ் பாடுவதில் ஈடுபடுவதில் எந்தவித மனக்கசப்பிற்கும் இடம் தராமல் கருத்துக்களைக் கூறி நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதே என் அவா.
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த நன்றியை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.
ராகவேந்தர் சார்,
உங்களின் நவராத்திரி அலசல் பற்றி என்ன சொல்வது? அந்த பாத்திரத்தின் பெயருக்கேற்ப அற்புதம் என்று சொல்லி விடலாம். But that will not do justice to your efforts.
நவராத்திரி திரைப்படத்தில் நவரசத்திற்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அதை நடிகர் திலகம் உருவகப்படுதியிருப்பார். அதில் அற்புதராஜ் பாத்திரம் stylised acting என்று வார்ப்பில் அமைக்கப்பட்ட ஒன்று. [கோபால் இந்த கருத்தில் மாறுபடலாம்]. எனக்கு தெரிந்தவரை புராண இதிகாச வரலாற்று பாத்திரங்களுக்கு இந்த பாணி நடிப்பு பயன்படுத்துவார். அதாவது ஒரு செயலை gestures எனப்படும் அங்க அசைவுகளை prominent-ஆக அதாவது சற்றே அழுத்தமாக செய்வதன் மூலம் பார்வையாளன் மனதில் பதிய வைப்பது. இந்த பாணியை சில சமூக பாத்திரங்களிலும் கொண்டு வந்திருப்பார். அதில் அற்புதராஜும் ஒன்று.
இந்த பாத்திரம் ஒரு high end என்று சொல்லப்படுகின்ற அல்லது high society people வர்க்கத்தில் வரும். ஒரு sophisticated வாழ்க்கை நடத்தும் ஒரு மேல்தட்டு வர்கத்தினன். பாத்திர வார்ப்பு அப்படி என்பதனால் அதிகமாக ஆங்கிலம் கலந்த உரையாடல்கள், அந்த வார்த்தைகளையும் உச்சரிக்கும் விதம் [ நீங்களே எடுத்துக் காட்டியபடி gently மற்றும் nonsense போன்ற வார்த்தைகள்] மிக நேர்த்தியான லைப் ஸ்டைலை கடைப்பிடிப்பவர் என்பதற்கு அணிந்திருக்கும் விலை உயர்ந்த ஆடை [ சொல்லவா கதை சொல்லவா பாடலின்போது நடிகர் திலகம் அணிந்திருக்கும் நைட் கௌன் கூட ரிச்சாக இருக்கும்] கையிலே கையுறை என மொத்தம் உடல்மொழியுமே அந்த பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டு செய்திருப்பார்.
முதல் நாள் இரவு அறிமுக காட்சியிலிருந்து மறுநாள் காலை குட்டி பத்மினி வந்து எழுப்பி அத்தையை காணோம்பா என்றவுடன் அந்த தூக்கக கலகத்திலேயே ஒரு வித அவசரத்தோடு காலை செருப்புக்குள் நுழைத்துக் கொண்டு சாவித்திரி படுத்திருந்த அறையைப் போய் பார்த்து விட்டு அங்கே மாட்டியிருக்கும் அந்த பறவை ஓவியத்தை பார்த்துவிட்டு இனி ஒன்றும் செய்ய முடியாது எனபதை உணர்த்தும் வகையில் shrugging off the shoulders என்று சொல்வார்களே அதை physical லாகவே செய்வார். அந்த நிமிடம் வரை அற்புதராஜ் அற்புதம்தான்.
சின்ன வயதில் பார்த்தபோது நடிகர் திலகம் செம ஸ்டைல் காட்டுவார் என்பதாகவே அதை அர்த்தம் புரிந்துக் கொண்டேன். காலங்கள் செல்லும்தோறும் அந்த பாத்திரத்தின் பரிமாணம் புரிபட ஆரமபித்து அதை நடிகர் திலகம் எப்படி shape செய்திருக்கிறார் என்பதை கூர்ந்து கவனிக்கும் ஆர்வம் வந்து பார்க்க ஆரம்பித்தேன். ஒரு நடிகனாக தான் ஏற்றுக் கொண்டிருக்ககூடிய பாத்திரத்தின் தன்மையை celluloid-ல் கொண்டு வர அவர் செய்யும் பிரயத்தனம் பிரமிப்பை கொடுத்தது.
அந்த அற்புதத்தை நீங்கள் அற்புதமாக உங்கள் வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் இணைத்திருக்கும் வீடியோ பார்க்காமலே (என்னைப் போல்) வாசிப்பவர்களுக்கு அந்த காட்சி மனக்கண் முன் ஓட வைத்து விட்டீர்கள்.
மிக்க நன்றி சார்!
அன்புடன் .
வாசு,
பரமேஸ்வர கவுண்டரின் உடுக்கை ஆட்டத்தை வழக்கம் போல் பிரம்மாண்டப்படுத்தி ராகவேந்தர் சாருக்கு dedicate செய்து விட்டீர்கள். யாரும் யோசிக்காத யாரும் அவ்வளவாக கவனம் செலுத்தாத படங்கள், பாடல்கள் (குறிப்பாக 80-களில் வந்த நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து காட்சிகள்] எடுத்து அவற்றை சீவி சிங்காரித்து அழகான மணப்பெண்ணாக மேடையில் நிறுத்துவதில் உங்கள் திறமை நிகரற்றது. வாழ்த்துகள்! தொடருங்கள்!
கல்தூண் என்றவுடன் எனக்கு பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட மூன்று விஷயங்கள் நினைவிற்கு வரும்.
எஸ்.விஜயன் [சிகரங்களை கடந்த சிவாஜி தொடரில்தான் என்று நினைக்கிறேன்] கல்தூண் பற்றி எழுதும்போது அதில் வரும் சிலம்பு ச்னடையைப் பற்றி குறிப்பிட்டிருப்பார். நான்கு ஐந்து பேருடன் போடும் சிலம்பம் சண்டை அது. சிலம்பம் சுற்றும் கலையில் அதுவும் இது போல் நான்கு ஐந்து பேருடன் சிலம்பம் சுற்றும்போது ஒரு முக்கிய பாடமென்னவென்றால் சிலம்பம் எந்த சூழலிலும் தரையில் தட்டக் கூடாது என்பதாகும். டூப் இல்லாமல் நடிகர் திலகமே அந்த சண்டைக் காட்சியில் செய்திருப்பார். மேற்சொன்ன பாடத்தையும் மனதில் வைத்து ஒரு இடத்தில கூட சிலம்பம் தரை தட்டாமல் செய்திருப்பார் என எழுதியிருப்பார் விஜயன். 53 வயதில் இதை செய்வது ஒரு பெரிய விஷயம் [சிலம்பத்தை முறையாக பயிலாதவர்களுக்கு] என்றும் சொல்லியிருப்பார்.
இரண்டாவது விஷயம் ஆனந்த விகடன் விமர்சனத்தில் வந்த இரண்டு வரிகள். இது மேஜர் இயக்கிய முதல் படம். அதை குறிக்கும் வகையில் இப்படி எழுதியிருப்பார்கள்.
"ஏற்கனவே வெற்றி பெற்ற நாடகத்தின் கதை என்பது பலமான அஸ்திவாரமாக விளங்க, கல்தூணாய் நின்று சிவாஜி படத்தை தாங்க டைரக்டர் கோட் அணிந்து மேஜர் செய்திருப்பது ஒரு மைனர் ஆபரேஷன்தான்."
.
மூன்றாவது இதயம் பேசுகிறது இதழில் வந்த விமர்சனம். அன்றைய நாட்களில் [1981] சென்னையை தவிர்த்து தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் அமைந்திருக்கும் தியேட்டர்களில் பொது மக்களோடு சேர்ந்து படத்தை பார்த்து அவர்கள் கருத்தையும் பதிவு செய்து அவர்கள் வார இதழில் வெளியிடுவார்கள். கல்தூண் படத்திற்கு அவர்கள் மதுரை வந்து படம் வெளியாகி இருந்த சிந்தாமணி திரையரங்கில் படம் பார்த்துவிட்டு எழுதியிருந்தார்கள். அதில் ஒரு முத்தாய்பாக ஒன்றை பதிவு செய்திருந்தார்கள். அதில் சற்றே விஷமத்தையும் கலந்திருந்தார்கள்.
"மதுரையில் இன்னமும் சிவாஜிக்கு ஒரு பலமான ரசிகர் மன்றம் இயங்கி வருவது நிதர்சனமாக கண்ணுக்கு தெரிகிறது. அவர்கள் சிவாஜிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்"
1981-ல் நடிகர் திலகத்திற்கு பலமான ரசிகர் மன்றம் இருப்பது ஆச்சரியம் என்பது போல் விஷம் கக்கியிருந்தாலும் நடிகர் திலகத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு இதழ் உண்மையை ஓரளவிற்கேனும் ஒப்புக் கொண்டு எழுதியது ஓரளவிற்கு மகிழ்ச்சியை தந்தது.
1981-ல் இதயம் பேசுகிறது எழுதியதை நான் இப்போது அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். காரணம் 1981-ல் அப்படி எழுதியவர்கள் இப்போதும் 2015-ல் கூட மதுரையில் நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடு காணும்போது ரசிகர்கள் செய்யும் அலப்பரையை பார்த்தால் அவர்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள் என நினைப்பேன்.
இந்த விஷயங்களை முன்பே ஒரு முறை எழுதியிருந்தாலும் கூட மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்க்கவும் மீள் பதிவு செய்யவும் உங்களால் வாய்ப்பு கிடைத்தது!
மீண்டும் நன்றி!
அன்புடன்
7,000 பதிவுகளைக் கடந்து இன்னும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும், அற்புதராஜ் பற்றி அற்புதமாக எழுதிய அற்புத மனிதர் எங்கள் ராகவேந்தர் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்து நடிகர்திலகத்துக்கு சிறப்பு சேர்க்க இறைவனை வேண்டுகிறேன்.
முரளி சார்,
தங்கள் அன்பான பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றி. எல்லாப் புகழும் நம் இதயதெய்வத்திற்கே சாரும். தாங்கள் கூறியவாறு அந்த பிரத்யேகமான உடல் மொழியை சமூகப் படத்திலும் கதைக்கும் அந்த பாத்திரத்திற்கேற்றவாறும் நுழைக்கக் கூடிய வல்லமை நடிகர் திலகத்திற்கே உண்டு.
கந்தன் கருணை வீரபாகுவின் நடையும், திருவிளையாடல் மீனவன் நடையும் இதில் சேர்க்கலாம் என எண்ணுகிறேன்.
மிக்க நன்றி
வாசு சார்
https://lh4.googleusercontent.com/-l...titled1234.png
தங்களுக்கு நன்றியைத் தெரிவிக்க சரியான வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறேன். என்றாலும் நம் இதயதெய்வத்தின் ஆசி தங்களுக்கு என்றென்றும் உண்டு எனக் கூறி என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பராசக்தி தொடக்கம் பூப்பறிக்க வருகிறோம் வரை தான் ஏற்று நடித்த அத்தனை பாத்திரங்களுக்கும் நூறு சதவீதம் தன் ஈடுபாட்டுடன் கலந்த உழைப்பைத் தந்த அந்த உத்தமனை ஒரு வட்டத்திற்குள் அடைக்கும் போக்கினைக் கண்டிப்பதில் நாம் அனைவரும் Sailing in the same boat.
கல்தூண் ... கிருஷ்ணா என்ற கதாசிரியரை உலக அளவில் அறிமுகப்படுத்தியது.. சங்கராபரணம் மூலம் விநியோகஸ்தராக இருந்த மேஜரை ஓர் இயக்குநராக முத்திரை பதித்தது. திலக் என்ற நாடக நடிகரை இன்று வரை கல்தூண் திலக்ஜி என அடைமொழியோடு அடையாளம் காணும் வகையில் அவரை உயர்த்தியது. எத்தனை ஆண்டுகளானாலும் தன் இசை என்றைக்குமே வற்றாத ஜீவநதி என மெல்லிசை மன்னர் மீண்டும் நிரூபிக்க வாய்ப்பளித்தது. பாடகர் திலகமும் இசையரசியும் தங்கள் கொடியை வெற்றி கரமாக மீண்டும் பறக்க விடுவதற்கு வழி ஏற்படுத்தியது.
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழ் சினிமாவை தூக்கித் தாங்கிப் பிடிக்கும் கல்தூண் நடிகர் திலகம் என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொன்னது.
எல்லாவற்றிற்கும் மேலாக, எனக்குப் பிறகும் என் ரசிகர்கள் என் புகழ் பாடுவார்கள் என்ற நம்பிககையை ஆழமாக அவர்கள் மனதில் விதைத்து அதை எந்தெந்த விதத்தில் மக்களிடம் யார் யார் கொண்டு செல்வார்கள் என்று தீர்மானமும் செய்து அந்த படையின் வீரர்களில் ஒருவராக நம் நெய்வேலி வாசுதேவன் இருக்கிறார் என்பதை மக்களிடம் நடிகர் திலகம் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்கு இன்று வாய்ப்புக் கொடுத்தது..
இவையனைத்தும் தங்களுடைய பதிவின் உள்ளடங்கியுள்ள விஷயங்கள்..
இவ்வளவையும் சேர்த்து எனக்களித்த தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
பாய்ஃப்ரெண்ட் ராஜசேகர், கேர்ள் ஃப்ரெண்ட் லக்ஷ்மி ....
https://goodtamilfilms.files.wordpre...12/1_laxmi.jpg
ராஜேஸ்வரி மிகவும் கண்டிப்பாக குடும்பத்தை நடத்துகிறாள். அவள் கணவன் ராஜசேகரோ வாழ்க்கையை மிகவும் லேசாக எடுத்துக் கொள்பவர். இவர்கள் வாழ்க்கையில் நுழையும் சுட்டிப்பெண் லக்ஷ்மி... இவர்கள் மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் அருமையான கோர்வை லக்ஷ்மி வந்தாச்சு..
இவ்வளவு கேஷுவலாக நடிகர் திலகம் வேறெந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் ரேவதியும் நடிகர் திலகமும் சந்திக்கும் காட்சிகளெல்லாம் நம்முள் நம்மையும் அறியாமல் ஈர்ப்பை உண்டாக்கி விடுகின்றன.
அதுவும் கடைசிக் காட்சியில் படம் முடியும் போது கூட அவளை மகிழ்ச்சியோடு வரவேற்பதும், அவள் கருவுற்றிருப்பதைப் பார்த்து ஆனந்தப் படுவதும் அதிலும் ஓர் குறும்பை வெளிப்படுத்துவதும்..
மிகவும் விஸ்தாரமாக எழுதவேண்டிய படம் லக்ஷ்மி வந்தாச்சு...
வாசு சார்..
தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த உன்னதமான திரைக்காவியத்தை மக்களுக்கு தங்களுடைய எழுத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். அதை நாங்கள் படித்துப் படித்து இன்புற வேண்டும்.
ஆதிராம் சார்
தங்களுடைய பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றி.
எல்லாப்புகழும் நம் இதயதெய்வத்திற்கே.
-deleted spam-
7000 பதிவுகளை கண்டு நடிகர் திலகத்தின் பெருமையை திறம்பட பறைசாற்றிகொண்டிருக்கும் அனைத்து திரி நண்பர்களிடமும் உயர் மதிப்பை கொண்டிருக்கும் இத்திரியின் பெருமையையும் நடிப்பு வேந்தரின் பெருமையையும் உலகரியச்செய்யும் வித்தகர் திரு ராகவேந்திரன் அவர்கள் இன்னும் பல லட்சம் பதிவுகளை வழங்கி என்னைபோன்ற ரசிகர்களின் இதயம் குளிர்விக்க வேண்டுகிறேன்.
Dear Raghavendar Sir,
congratulations for your 7000 post.
வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி ராமச்சந்திரன் மற்றும் ராதாகிருஷ்ணன்
https://upload.wikimedia.org/wikiped...(Mostra)_4.jpg
Omar Sharif: Lawrence of Arabia star dies aged 83
BBC NEWS @ : http://www.bbc.com/news/entertainment-arts-33483877
It's a greatloss more for Sivaji fans. Omar Sheriff was the comperer at the Afro-Asian Film Festival and was fortunate to announce the name of V.C. Ganesan @ Nadigar Thilagam to receive the best actor award...It's really a great loss for the Film Industry globally. May his soul Rest in Peace.
மதுரை மாநகரில் வெளியாகும் வெளியாகப் போகும் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்கள் நமக்கு முன்கூட்டியே தெரிய வருவதும் அதைப் பற்றிய தகவல்களை நாம் இங்கே பகிர்ந்துக் கொள்வதும் வாடிக்கை. இந்தப் படம் வெளியாக போகிறது என்று தெரியும். ஆனால் எப்போது என்று தெரியாமல் இருந்தது. அடுத்த வாரம் நடிகர் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு வெளியாகும் என்று நினைத்திருக்க முன்கூட்டியே இன்றே மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்திருக்கிறார் ராவ்பகதூர் சிங்காரம்.
நடிகர் திலகம் சும்மா பூ என்று ஊதி தள்ளிய விளையாட்டுப் பிள்ளை இன்று முதல் மதுரை சென்ட்ரலில் வெளியாகியிருக்கிறது. எந்த விளம்பரமுமில்லை. போஸ்டர்கள் ஓட்டபப்டவில்லை, வெளியாகியிருக்கிறது. மதுரை மக்கள் எப்போதும் நடிகர் திலகத்தை தங்கள் உள்ளங்களிலே வைத்து அழகு பார்ப்பவர்கள். விளையாட்டு பிள்ளையையும் அன்போடு வரவேற்றிருக்கிறார்கள். இன்றைய தினம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்று உலா வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் திலகம். வரும் நாட்களில் வரவேற்பு கூடும் என்று தெரிகிறது.
அன்புடன்
In line with Raghavendhar Sir I too fall in line to offer my prayers and condolences on the sudden demise of the Hollywood star Omar Shariff who attained fame and hailed for his roles as Chengiskhan, the suave villain in McKenna's Gold,the coveted roles in Lawrence of Arabia and Dr Zhivago.May his soul rest in peace alongside our NT who received his global continental award for VPKB from Mr Shariff.
In MacKenna's Gold!
https://www.youtube.com/watch?v=VxJesXhxMrI
நன்றி ரவி சார்!
நிச்சயமாக நடிகர் திலகத்தின் பல பின்னாளைய படங்களை எடுப்போம். மாயையை தகர்ப்போம். நிறைய இருக்கிறது. தங்களைப் போன்றவர்களின் உறுதுணையினால் கண்டிப்பாக சாதிக்க முடியும்.
முரளி சார்,
நன்றி!
'கல்தூண்' பற்றி நான் இன்னும் என்னென்ன எழுத நினைத்தேனோ அதை அப்படியே தாங்கள் அளித்து விட்டீர்கள்.
குறிப்பாக அந்த அமர்க்கள சிலம்ப சண்டை. நன்றாக ஞாபகம் இருக்கிறது. 1981 மே மாதம் ஒன்னாம் தேதி கடலூர் பாடலியில் காலைக் காட்சி அந்த சண்டைக் காட்சியில் ஆர்ப்பரித்தது. நிறைய சேர்கள் உடைந்து நொறுங்கின. ஒரு இடம் கூட டூப் இல்லாமல் முறையாக சிலம்ப சண்டையிடுவார் சிங்கத் தமிழர்.
http://i.ytimg.com/vi/RwJFO9ine_M/0.jpg
இதற்கு முன் 'என் மகனி'ல் ராமையாத் தேவர் காக்கி உடுப்பில் சவுக்குத் தோப்பில் சிறிது நேரமே மனோகர் கோஷ்டியுடன் சிலம்பம் சுழற்றினாலும் சிந்தை கவர்வார். கைகளை சுழற்றும் விதம் எப்பேர்ப்பட்டவரையும் கை தட்ட செய்துவிடும்.
அதற்கு பிறகு 'கல்தூணி'ல் கழி சண்டை (கடலூர் பாஷை) மூலம் கதி கலங்க வைத்தார்.
நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகள் தொடரில் நிச்சயம் இந்த சண்டைக் காட்சி இடம் பெறும்.
'கல்தூண்' பற்றிய தங்களின் மேல் விவரங்களுக்கும் நன்றி!
வாசு சார்
சரியான சமயத்தில் தங்களுடைய பதிவு இங்கே நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பற்றிய தேவையற்ற விமர்சனங்களையும் மாயையையும் உடைத்தெறியப் புறப்பட்டிருக்கிறது. இதற்கு நாம் அனைவரும் இங்கே ஒருங்கிணைய வேண்டும்.
சொல்லப்போனால் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் நடிகர் திலகத்தின் 250வது திரைப்படமான நாம் இருவர் நெடுந்தகடாக வெளிவந்திருக்கிறது. இதுவரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் திரையரங்குகளில், போட்டேன் ஜிஞ்சரடி பாடலுக்காகவே வசூலை அள்ளும். கட்டபொம்மன், கர்ணன் என நடிகர் திலகத்தின் படங்களில் இருந்து ஒரு சில விநாடிகள் இடம் பெறும் காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சைக் கொள்ளை கொண்டு போகும். அதிலும் தான் ஏற்று நடித்த அந்த படிக்காத முரடன், எப்போதும் குடியும் கும்மாளமுமாய் கையில் மதுவுடன் அலையும் கதாபாத்திரத்திற்குள் இருக்கும் அந்த சோகம், அதன் காரணம் வெளிப்படும் காட்சியில் என்ன ஒரு அற்புதமான Subtle Acting செய்திருப்பார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஏவி.எம்.பேனரில் 250வது படமாக வெளிவந்த போது இது போன்ற விமர்சனங்களாலும் ஒரு சில தொய்வான காட்சியமைப்பினாலும் படத்தின் விறுவிறுப்பு குறைந்ததாலும் படம் தோல்வியடைந்தது. இப்படத்தில் இன்னோர் குறிப்பிடவேண்டிய விஷயம், இளைய திலகம் பிரபு நடித்திருந்தாலும் தந்தை மகன் உறவு முறையில்லாமல் ஒரு ஆசிரியராக பாத்திரமேற்று அருமையாக நடித்திருப்பார்.
இன்னோர் வாய்ப்பில் இப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பை விவரணையாகப் பார்ப்போம்.
http://i1146.photobucket.com/albums/...psmorxrrnm.jpg