Originally Posted by
ravichandrran
பாசத்துக்குரிய நண்பர்களே
நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின் புகழ் பாடும்
களமே இந்த மையம் நிறுவனத்தாரின் சீரிய முயற்சியில்
உருவான நமது மக்கள் திலகம் திரி.
இந்த திரி நம்மை இணைத்து நமது தலைவரின் பண்பை -
அவரின் மனிதநேயத்தை - அவரின் கலை மற்றும் அரசியல்
சாதனைகளை தினமும் நினைவு கூற பயன்பட்டு வருகின்றது.
இதன் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து
நமது பதிவுகளை பார்த்து மகிழ்கின்றனர்.
மையம் நிறுவனத்தாரின் பிறிதொரு திரியில் நமது
இதய தெய்வத்தைப்பற்றி ஒரு நடிகர் எழுதிய (அவர் இன்று
உயிரோடு இல்லை) செய்தியை ஒருவர் பதிவிட கடந்த இரு
நாட்கள் நமது நண்பர்களும் மாற்று திரி நண்பர்களும்
தத்தமது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தனர்.
இனிமேலாவது நமது தலைவரைப்போல் நாம் அமைதி
காப்போம்.
நிச்சயம் அந்தப்பதிவு நம் அனைவரையும் மிகவும்
காயப்படுத்தி உள்ளது. அந்த திரி நண்பர்கள்
அந்த திரியின் நெறியாளர் அவர்களுக்கு அந்தப்பதிவை
நீக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நிச்சயம் அவர்கள் திரியில் இருந்து அந்தப்பதிவை
அதன் நெறியாளர் அல்லது மையம் நிர்வாகத்தினர்
நீக்குவார்கள் என்று நம்புகிறேன்.
மாற்று திரி நண்பர்களே எங்கள் இதயதெய்வத்தைப்பற்றி
தவறான செய்திகளை பதிவிடாதீர்கள்.
அன்புடன்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------