http://i1028.photobucket.com/albums/...ps1gensg52.jpg
Printable View
மூன்றாம் வெற்றிக்கனியைச் சுவைத்திருக்கிறது...
திருச்சி சிவாஜி பிலிம் கிளப்.
"சிவாஜி ஃபிலிம் கிளப்" என்கிற
அமைப்பை சிறப்பாக உருவாக்கி,மிகக் குறுகிய கால இடைவெளியில் கௌரவம்,
புதிய பறவை காவியங்களைத்
தொடர்ந்து 06.03.2016 அன்று
"தியாகம்" திரைக்காவியத்தை
ரசிகர்களின் கண்களுக்குக்
காணிக்கையாக்கியிருக்கிறார்..
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர் திருச்சி
திரு.அண்ணாதுரை அவர்கள்.
அரங்கு நிறைத்த அறுபது
ரசிக உள்ளங்களின் வருகை,
(அதில் எட்டுப் பேர் பெண்கள்)
ரசிகர்களின் புதல்வியர் இருவரின் கவிதை, அத்தனை
உள்ளங்களிலும் சிவாஜி படம்
பார்க்கிற பெருமை என்று
"தியாகம்" திரையிடல், திருச்சியில் வென்றிருக்கிறது.
அந்த சந்தோஷக் காட்சிகளை
இப்போது நிழற்படங்களாய்ப்
பார்ப்போம்.
"சிவாஜி ஃபிலிம் கிளப்"பிற்கு
நம் வாழ்த்துகளைச் சேர்ப்போம்.
http://i1028.photobucket.com/albums/...ps5cxa9uri.jpg
http://i1028.photobucket.com/albums/...psquvvw59f.jpg
http://i1028.photobucket.com/albums/...pstvmxpgxo.jpg
http://i1028.photobucket.com/albums/...pshnzeigs2.jpg
http://i1028.photobucket.com/albums/...pslx6z9gjm.jpg
http://i1028.photobucket.com/albums/...psrjhtlwap.jpg
http://i1028.photobucket.com/albums/...psbsryk7hn.jpg
http://i1028.photobucket.com/albums/...psvzpbyl2l.jpg
http://i1028.photobucket.com/albums/...ps6zl2hypw.jpg
http://i1028.photobucket.com/albums/...psrpsv77ja.jpg
நிழற்படங்கள்:
திரு.அண்ணாதுரை.
"நல்லவர்க்கெல்லாம் .சாட்சிகள் ரெண்டு..."
தத்துவம் பாடும்
சத்தியக் கலைஞன்.
http://i1028.photobucket.com/albums/...pslvxwjtkq.jpg
http://i1028.photobucket.com/albums/...pse1svnc3p.jpg
http://i1028.photobucket.com/albums/...psqqdvsgkh.jpg
http://i1028.photobucket.com/albums/...psbtwziyfj.jpg
http://i1028.photobucket.com/albums/...ps626tktdb.jpg
நிழற்படங்கள்:
திரு.அண்ணாதுரை.
கரவொலி கேட்கிறதா..?
சீழ்க்கையொலி செவி துளைக்கிறதா..?
http://i1028.photobucket.com/albums/...psnceh4ewy.jpg
நிழற்படம்:
திரு.அண்ணாதுரை.
மூன்று தோற்றங்கள்
முந்நூறுபாவனைகள்
தெய்வமகனின் சில பாவனைகள்
http://i1039.photobucket.com/albums/...pspmkixn1y.jpg
From Mr. Sudhangan FB,
செலுலாய்ட் சோழன் – 116
சிவாஜிக்கு யார் இந்த கதாபாத்திரத்திற்கு இன்ஸ்பிரேஷன்?
அவரிடமே கேட்டேன்!
சிரித்துக்கொண்டே சொன்னார், ` அந்த மகாபெரியவர்! காஞ்சி முனிவர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்! அவர் தரிசனத்திற்காக ஒரு முறை போயிருந்தேன்! அவர் உட்கார்றது! நிக்கறது! கையசைக்கிறது! கண் ஜாடை காட்டறது! இதெல்லாம் கவனிச்சு வெச்சிருந்தேன்! திருநாவுக்கரசர் கதாபாத்திரம் கிடைச்சதும், அதை அப்படியே பின்பற்றினேன்’ என்றார்!
இது ஒரு புறமிருக்க!
இந்த ` திருவருட் செல்வர்’ படத்திற்கு முதல் பாராட்டு ஏ.பி.நாகராஜனுக்குத்தான்!
அடியார்கள் 64 பேர்!
அதிலிருந்து சில அடியார்களை மட்டும் தேர்ந்தெடுப்பது அத்தனை எளிதானதல்ல!
அதற்கு சைவ புராணங்கள் அத்துப்படியாக இருக்க வேண்டும்!
அப்படி இருந்தால்தான் முதலில் அடியார்கள் கதையைத் தேர்ந்தெடுக்க ஒரு தெளிவு வரும்!
இந்தத் தெளிவைப் பற்றி தெரிந்து கொள்ள கொஞ்சம் இதிகாச அடிப்படைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்!
அப்போதுதான் இந்த படத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும்!
கந்த புராணம் சிவநூல்!
ராமாயணம் அன்பு நூல்!
மகாபாரதம் அறநூல்!
சிலப்பதிகாரம் விதி நூல்!
சிந்தாமணி இன்ப நூல்!
பெரிய புராணம் அருள் நூல்!
திருவருள் என்ற தங்கக் கம்பியில் எழுபத்திரண்டு நாயன்மார்கள் என்ற இரத்தினமணிகளைக் கோத்த மணிமாலை பெரிய புராணம்.
திருவருள் மயமானது இந்த பெரிய புராணம்!
நாயன்மார்கள் ` வேண்டாமை’ எம்ற செல்வத்தை படைத்தவர்கள்;
ஈரமும், வீரமும் வாரமும் ஒருங்கேயுடையவர்கள்.
செருத்துணை நாயனாருடைய வீரச்செயல் இலக்குவனுடைய வீரத்தையும் விஞ்சிவிட்டது.
மனு நீதிச் சோழருஎஐய அறம் உலக வரலாறுகளில் யாண்டும் கண்டதற்கரியது; நினைக்குந்தொறும் நெஞ்சை நெகிழ வைப்பது!
அப்பர் பெருமானுடைய உறுதி மேருமலையின் மேல்பட்டது!
புகழ்ச் சோழருடைய பண்பு புல்லரிக்கச் செய்யும் புனிதமானது!
பெரிய புராணம் பனிரெண்டு திருமறையாகத் திகழ்வது!
பன்னிரெண்டு என்ற எண்ணிக்கை உயர்ந்தது!
முருகனுடைய தோள்கள் 12!
சிவஞான போதச் சூத்திரங்கள் 12 !
ஆதித்தர்கள் 12!
மாதங்கள் 12!
இராசிகள் 12!
திருமாலின் மந்திர எழுத்துக்கள் 12!
திருமண் இடும் இடங்கள் 12 !
சைவ அனுஷ்டானத்தில் தொடும் இடங்கள் 12 !
சுரஸ்தானங்கள் 12 !
அகத்தியருடைய மாணவர்கள் 12
ஏசுநாதருடைய சீடர்கள் 12
அந்தணரின் அறம் 12
அரம்பையர்கள் 12
தமிழ் உயிர் எழுத்துக்கள் 12
திணை 12
திருக்குறளின் பெயர்கள் 12
திருமுறையில் பெரிய புராணம் 12
இந்த பெரிய புராணத்தை தில்லை அம்பலத்திலே அருளிச்செய்தவர் சேக்கிழார்!
அதனால் பெரிய புராணத்தில் முக்கியமான கதாபாத்திரம் சேக்கிழார்!
அதனால் முதலில் அந்த கதாபாத்திரத்தை ஏ.பி.என். உறுதி செய்திருக்க வேண்டும்!
அந்த வேடத்தில் சிவாஜி!
சிவாஜி நடிப்பு திறனுக்கு உச்சகட்டமாக விளங்கவும் மேருமலையைப் போல உறுதி கொண்ட அப்பராக சிவாஜி!
சேக்கிழாருக்க்கு ` உலகெலாம் உணர்ந்த ஒதற்கு உரியவன்’ என்று அடியெடுத்து கொடுத்தவர் சுந்தரர் என்கிற சுந்தரமூர்த்தி நாயனார்!
அதனால் அந்தப் பாத்திரத்தையும் தேர்ந்தெடுத்தார் சிவாஜிக்காக!
இந்த மூவரையும் சொல்லும் போது உமையவளிடம் ஞானப்பால் குடித்த ஞான சம்பந்தரை விட முடியுமா!
அந்த பாத்திரத்திற்கு ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்து, அப்பரையும், ஞானசம்பந்தரையும் இணைத்தார் ஏ.பி.என்!
இந்த் நால்வரை மட்டும் எடுத்துக்கொண்டால் எப்படி/
அதனால் சிவனடியார்களின் தொண்டனான சிறுக்குறிப்புத் தொண்டரையும் சேர்ந்து கொண்டார்!
அவரும் சிவாஜி!
இப்படி தேர்ந்தெடுத்த நான்கு சிவனடியார்களையும் சிவாஜியாக்கினார்!
பிறகு தான் அதற்கேற்ப திரைக்கதையாக்கினார் ஏ.பி.என்!
இந்தப் படம் பக்தர்களுக்கு ஒரு பக்திப்படம்!
தமிழிப்பிரியர்களுக்கு ஒரு தமிழ் விருந்து!
பகுத்தறிவாளர்களையும் மயங்க வைக்கும் தொண்டர்கள் தம் தமிழ் உண்டு!
இத்தனை பெருமைகளையும் கொண்ட பெரிய புராணத்தை எடுத்து சுருக்குவதே மிகப்பெரிய காரியம்!
அந்த பெரிய புராணத்தை கரைத்துக் குடித்திருந்தால் மட்டுமே ஒரு கதாசிரிய இயக்குனர் அந்த கதையை கையாள முடியும்!
ஏ.பி.நாகராஜனைப் பொருத்தவரையில் சிவாஜி என்னும் அற்புத கலைஞன் அவர் கையில் கிடைத்தார்!
அதை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் அழகு செய்யலாம் என்று பார்க்கிற வெறி அவருக்கு இருந்தது!
மேலும், தான் படித்த நல்லவைகளை சரியாக ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கிற தணியாத பொறுப்பும் அவரிடம் இருந்தது!
திருவருட்செல்வர் என்பது ஒரு சாதாரண படமல்ல!
பெரிய புராணம் படிக்க நினைப்பவர்களுக்கு ஒரு ஆரம்ப கையேடு என்றே சொல்லலாம்!
ஏ,பி.என். பெரிய புராணத்தை கரைத்துக் குடித்திருந்தார்!
அவர் வாரியாரின் பெரியார் புராணத்தையே இந்த படத்திற்கான ஆதார நூலாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்!
`திருவருட் செல்வர்’ படம் என்பது `மன்னவன் வந்தானடி’ என்கிற அருமையான பாடல், இனிமையான் சுசீலாவின் குரல், பத்மினியின் சொக்க வைக்க நாட்டியத்தோடு துவங்கும்.
இந்தக் காட்சியில் தான் ஏ.பி.என். என்கிற ஒரு இயக்குனனின் திரைக்கதை மேதைத்தனம் பளிச்சிடுகிறது!
படத்தை பார்ப்பவர்களுக்கு அந்த ஆரம்ப காட்சி நினைவிருக்கலாம்!
இப்போது கொஞ்சம் பெரிய புராணத்தின் ஆரம்பத்தை பார்த்தால் தான் இந்த காட்சியின் ஆழமும், தீவிரமும் தெரியும்.
பெரிய புராண ஆரம்பம் என்ன /
ஒரு நாட்டில் அரசர் ஒருவர் புதிதாக பட்டத்துக்கு வந்தார்!
அமைச்சர் பதவியிலிருந்த பலரையும் அறிமுகப்படுத்திய போது அங்கே ஒரு ஆஸ்தான வித்துவான் அமர்ந்திருந்தார்.
அவருக்கு வயதோ எழுபத்தெட்டு!
`அரசே! மன்னருடைய எல்லா சந்தேகங்களையும் இந்த வித்துவான் தீர்த்து வைப்பார் ‘ என்றார்.
`ஐயா! ஆஸ்தான வித்துவான் அவர்கள்! மூன்று சந்தேகங்களைக் கூறுகிறேன். அவற்றை அகற்றி விளக்கம் கூறுங்கள். விளக்கங்கள் தெளிவாகவும், திருப்திகரமாகவும் இல்லை என்றால் உங்கள் சிரத்தை துண்டித்து விடுவேன்’ என்றான்!
அரசன் தன் சந்தேகங்களைக் கூறினான்!
`கடவுள் எங்கே இருக்கிறார்?’
`அவர் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்?’
` அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?’
இதற்கு வேதம் சொல்கிறது! புராணம் சொல்கிறது! நம்மாழ்வார் சொன்னார்! நாயன்மார்கள் சொன்னார்கள்! என்றெல்லாம் சொல்லக்கூடாது! எனக்கு நேரடி பதில் தேவை! அதுவும் நாளைக் காலைக்குள் தரவேண்டும்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டான் அரசன்!
வித்வானின் மூளை குழம்பியது!
அரசரின் முதல் கேள்விக்கு பதில் சொல்ல பல நூல்களையெல்லாம் புரட்டினார்!.
`கடவுள் சூரிய மண்டலத்தில் இருக்கிறார்!’ என்றது ஒரு நூல்!
கடவுள் கைலாயத்தில் இருக்கிறார்!’ என்றது ஒரு நூல்!
`கடவுள் வைகுண்டத்தில் இருக்கிறார்! என்றது வைணவ நூல்!
குழம்பினார் வித்துவான்!
From Mr. Sudhangan FB,
சாக்ரடிஸ் என்று சொன்னதும் நான் ஏன் சிவாஜியா என்று சொன்னேன்?
காரணம் உண்டு!
எனக்கு சினிமா நினைவு தெரிவதற்கு முன் வந்தது சிவாஜி நடித்த ராஜா ராணி படம்!
அதில் சிவாஜி சேரன் செங்குட்டுவனாகவும், சாக்ரடிஸாகவும் வந்து கலக்கியிருப்பார்!
அப்போதெல்லாம் சினிமா நட்சத்திர கலை விழா நடக்கும் போது சிவாஜி ஏற்று வசனம் பேசிய இந்தக் காட்சியை நடிகர் எஸ். ஏ. அசோகன் மேடையில் அதே வேடம் போட்டு நடிப்பார்!
ஒரு முறை 1965 இந்திய பாகிஸ்தான் யுத்தம் முடிந்த பிறகு இந்திய வீரர்களுக்கு நிதி திரட்ட நேரு விளையாட்டரங்கத்தில் ஒரு நட்சத்திர கலைவிழா நடந்தது!
அந்த கலைவிழாவிற்கு சிவாஜி தான் தலைமை தாங்கினார்!
அந்த கலை விழாவில் அசோகன் சிவாஜி முன்னிலையில் அசோகன் சாக்ரடிஸாக நடித்தார்!
அந்த வசனத்தை சிலோன் வானொலியில் அடிக்கடி போடுவார்கள்!
நம்மூர் ரேடியோவில் வராது!
காரணம் அந்தப் படத்திற்கு வசனம் எழுதியது மு. கருணாநிதி1
அந்தப் படம் வந்தபோது காங்கிரஸ் ஆட்சி!
அதனால் திமுகவினர் வசனம் எழுதியதை அவ்வளவாக ரேடியோவில் போட மாட்டார்கள்.
எனக்கு இந்த ராஜா ராணி படத்தின் வசனம் அப்போதே மனப்பாடம்!
கையில் கம்பை ஊன்றியபடி தாடி வைத்துக் கொண்டு சிவாஜி சாக்ரடிஸாக வருவார்~!
`உன்னையே நீ அறிவான்! உன்னையே நீ அறிவாய்!
கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாதது அல்ல !
அதற்காக இங்கே வீழ்ந்திருக்கும் வீரர்களை மறைத்திட முயல்வது புண்ணுக்கு புனுகு தடவிடும் வேலையைப் போன்றது’
அதனால்தான் கிரேக்கத்து இளைஞர்களே சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று சிரந்தாழ்த்தி உங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்’
அறிவு! அறிவு! அகிலத்தில் அது எந்த மூலையிலிருந்தாலும் அதை தேடி அடைய உங்களை அழைக்கிறேன்!
`உன்னையே நீ அறிவாய்! இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதற்குத்தான் என் உயிரினும் மேலான் உங்களை அழைக்கிறேன்!
ஏற்றமிகு ஏதன்ஸ் நகரத்து எழில் மிகு வாலிபர்களே!
நாற்றமடிக்கும் சமுதாயத்தின் நறுமணம் வீசச்செய்ய இதோ சாக்ரடீஸ் வந்திருக்கிறேன்! ஒடி வாருங்கள் ஒடி வாருங்கள்!
வீரம் விலை போகாது! விவேகம் துணைக்கு வராவிட்டால்!
நீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மட்டும் போதாது!
இளைஞர்களே! நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்’
அறிவாயுதம் அகிலத்தில் அணையாத ஜோதி!
என்று சிவாஜி நீண்ட வசனம் பேசுவார்!
இதெல்லாம் அப்போதைய சிவாஜி ரசிகர்களுக்கு மனப்பாடம்!
இதனால் தான் சாக்ரடீஸ் என்றதும் நான் சிவாஜி என்றேன்!
நன்றாக யோசித்துப் பார்த்தால், சிவாஜியின் படங்கள் மூலமாக எத்தனை பாடங்கள்!
ஆனால் இந்தப் பாடங்கள் எல்லாம் பள்ளியில் போதிக்கப்படவேயில்லை!