-
[#புரட்சித்தலைவர்
திரையுலக வாழ்க்கை :
7 வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார், எம்.ஜி.ஆர். திரையுலகில் 1934 முதல் 1977 வரை சுமார் 44 ஆண்டுகள் முடிசூடா மன்னராக இருந்தார். மனிதராக பிறந்தவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தனது திரைப்பட பாடல்களின் மூலம் மக்களுக்கு உணர்த்தினார்.
தொண்டுகள் :
பள்ளிகளில் பயிலும் ஏழைக்குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, புத்தகம், காலணி போன்றவற்றை இலவசமாக வழங்கினார். தன்னிறைவுத் திட்டம், உழவர்களின் கடன் தள்ளுபடி திட்டம், ஆதரவற்ற மகளிருக்கான நலத்திட்டம் என்று பல நல்ல திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்தினார் அதனால், அவரை மக்கள், 'பொன்மனச் செம்மல்', 'புரட்சித்தலைவர்'என்று அழைத்தனர்.
மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுபட்ட எம்.ஜி.ஆர், 24.12.1987 -ம் தேதியன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பின், 1988-ல், இந்திய அரசு இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசின் சார்பாக, சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆருக்கு என்று தனியாக நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.
சுவையான குறிப்புகள் :
* விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார், பிரபாகரன்.
* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹூக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்.
* முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.
* ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.
* நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா அடுத்தது சரோஜா தேவி
* எம்.ஜி.ஆர்- ன் வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா இது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது. காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.
* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள். சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்.
* எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா.
Cont...]......... Thanks...
-
[மதுரை ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வர் #எம்ஜிஆர் அவர்களுக்கு சென்னையில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டது..
பாராட்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சீர்காழி சிவ சிதம்பரத்தின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.
அப்போது மேடைக்கு வந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள், சிவசிதம்பரத்தின் அருகில் போய் அமர்ந்தபடி ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.
உடனே சிவசிதம்பரம்..
'பண்டு தமிழ் சங்கத்தை உண்டு பண்ணிய மன்னன்'
-என்ற பாரதிதாசன் பாடலை பொன்மனச்செம்மலை சுட்டிக்காட்டி பாடியவுடன் வள்ளுவர் கோட்டத்தில் எழுந்த ஆரவாரத்தில் விண்ணேஅதிர்ந்தது.
இசைக் கச்சேரிகளில் எம்.ஜி,ஆர். தரையில் அமர்ந்து ரசித்து கலைஞர்களைப் பாராட்டினார்.
தலைவரின் எளிமைக்கு இந்த நிகழ்வு ஒர் சான்று.] https://m.helo-app.com/al/mfFQwkSNe...... Thanks...
-
ஆங்கிள் பார்த்த எம்ஜிஆர்!
M.G.R. மீது அன்பு கொண்டு அவரோடு கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்கள் பலர். அவர்களில் சிலர், முதல் சந்திப்பின்போது அவரை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து மாறுபாடும் கசப்பும் கொண்டவர்கள். பின்னர், எம்.ஜி.ஆருடன் பழகி அவரது நல்லெண்ணத்தையும் திறமையையும் புரிந்துகொண்ட பின்,
‘அவர் எம்.ஜி.ஆரின் ஆள்’
என்று பிறர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாயினர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் முக்கியமானவர்.
முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர். வளர்ந்து வந்த நிலையில், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை சந்திப்பதற்காக ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கே ஒரு படப்பிடிப்பில் கே.ஆர்.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடிக்க வேண்டிய காட்சியில் நடித்துவிட்டு வரும் வரை ஸ்டுடியோ வில் ஓர் அறையில் எம்.ஜி.ஆர். காத்திருந்தார்.
அப்போது, அந்த அறையில் தூய கதராடை யில் நெற்றியில் திருநீறுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்து,
‘ஸ்டுடியோவில் நடிகர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் போலிருக்கிறது’
என்று எம்.ஜி.ஆர். நினைத்தார் . ஆனால், அவர் ஓர் இயக்குநர் என்று நண்பர் மூலம் அறிந்ததும் வியப்பில் ஆழ்ந்தார். புதுமுகங்களை டெஸ்ட் செய்யும் பணி அந்த இயக்குநருக்கு.
அந்த சமயத்தில், அங்கு நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த இளைஞர் ஒருவரை நடித்துக் காட்டச் சொன்னார் இயக்குநர். பின்பு, கேலியும் கிண்டலுமாக பேசி,
‘‘தகவல் சொல்லி அனுப்புவாங்க’’
என்று இளைஞரை அனுப்பி விட்டார். கே.ஆர்.ராமசாமிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆர். நடப்பவற்றை கவனித்தபடி அறையில் அமர்ந்திருந்தார்.
அந்த இளைஞர் சென்ற பிறகு,
‘‘கண்ணாடி யிலே மூஞ்சியை பார்க்காமலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். இவங்களை எல்லாம் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது என் தலையெழுத்து’’
என்று அந்த இயக்குநர் தனக்குத் தானே கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் பலமாக சிரிப்பதை பார்த்து,
‘கொஞ்சம் கூட அடக்கமே இல்லையே’
என்று கோபப்பட்டார் அந்த இயக்குநர். எம்.ஜி.ஆர். பதிலளிக்க யோசித்தபோது, அவரை சந்திக்க கே.ஆர்.ராமசாமி வந்து விட்டார். அவருடன் பேசப் போய்விட்டார் எம்.ஜி.ஆர்.
முதல் சந்திப்பிலேயே அந்த இயக்குநருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை. என்றாலும் காலம் அவர்களை ஒருங்கிணைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை இயக்க அந்த இயக்குநரே அமர்த்தப்பட்டார். அந்தப் படம்---
‘சக்கவர்த்தி திருமகள்.’
அந்த இயக்குநர் ப.நீலகண்டன்.
எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக் கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்---
‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சா தீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’
என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பார்.அவருடன், நடன தாரகை E V சரோஜாவும், G சகுந்தலாவும் போட்டி நடனம் ஆடி அசத்தி இருப்பார்கள்--!
அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார்.
‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங் கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’
என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக் குள் சென்றுவிட்டார்.
விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார்.
‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’
என்று உதவியாளரை விரட்டினார்.
அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷ யத்தை சொன்னதும்,
‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’
என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.
எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப் படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி இன்றளவும் வியக்கும்படி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.
அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறி வையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இரு வருக்கும் நட்பு பலப்பட்டது.
"எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர்"
என்று சொல்லும் வகையில், அவர் நடித்த அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற் றார் ப.நீலகண்டன்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று
‘காவல்காரன்’
படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந் தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....
‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.01.1957-ம் ஆண்டு வெளியான
‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி,
18.03.1976-ம் ஆண்டு வெளியான
‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை
எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார்.
எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்............. Thanks...
-
#அபூர்வசக்தி...#
வணக்கம் தோழர்களே... இன்று மக்கள் திலகம் #எம்ஜிஆர் அவர்களிடத்தில் இருக்கும் அபூர்வ சக்தியை கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்!
1972 ஆம் ஆண்டு திமுகவில் உள்ளே இருந்து கொண்டு மேடையில் பகிரங்கமாக கணக்கு கேட்ட ஒரே ஒரு உறுப்பினர் #எம்ஜிஆர் ஒருவரே
கட்சியில் இருந்து நீக்கப் பட்ட நேரம் புதிய கட்சியான அதிமுக வும் அரங்கேறிய வேளை "உலகம் சுற்றும் வாலிபன்" படம் துவக்கத்தில் அதிமுக கொடியுடன் துவங்குகிறது இதற்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றம் வரை தடை வாங்குகிறார்கள்(விளம்பரம் போஸ்டர் இல்லாமல் வெளி வந்து கின்னஸை தொட்டது வேறு கதை) திமுக வினர் அப்போது மதுரையில் நடந்த திமுகவின் பெரிய பொது கூட்ட மேடையில் இரும்பு மனிதன் என்று அழைக்கப்படும் மதுரை முத்து (பல ரவுடிகளை கையில் வைத்திருப்பவர்) பேசுகிறார் அடேய் ராமசந்திரா நீ சினிமாவில் அட்டைக்கத்தி வைத்து மக்களை ஏமாற்றி சண்டை போடுவாய் நான் ஒரிஜினல் கத்தியுடன் மோதும் உண்மையான நிஜ ஹுரோ நீ கலைஞரை பாத்தா கணக்கு கேக்குற உன்னை உண்டு இல்லை என்று ஆக்குகிறேன் உன் படம் ரிலீஸ் ஆனால் சேலைக் கட்டிக்கொள்கிறேன் என்று வீர முழக்கமிடுகிறார்
உன்னை எங்கும் வாழ விட மாட்டேன் என்றார் அன்று தினமணியில் கார்டூன் படம் எம்ஜிஆர் அண்ணா படம் இனி இங்கு இருக்கக் கூடாது என்று எடுத்து செல்வது போல் அதை பார்த்த கலைஞர் எனக்கு இனி அண்ணா எல்லாம் மதுரை முத்து தான் என்று அவரை கட்டி தழுவுகிறார்
அதே மேடையில் நடிகர் எஸ் எஸ் இராஜேந்திரன் என்னை பத்மினியுடன் நெருங்கி நடிக்க விடாமல் சூழ்ச்சி செய்தவர் தான் இந்த இராமசந்திரன் இராஜாதேசிங்கு படத்தில் இதை நாடு மறக்காது என்று அவரும் கரீத்து கொட்டினார் எம்ஜிஆரை
மறுநாள் துக்ளக் பத்திரிக்கையில் சோ நீங்களும் பத்மினியும் நெருங்கி பழகுவதை எம்ஜிஆர் தடுத்தார் இதை நாடு மறந்தால் நாட்டுக்கு என்ன பேராபத்தா வரும்? என்று கிண்டல் கேள்வி எழுப்பினார்?
அடுத்து பேசியவர் திண்டுக்கல் எம் பி இராஜங்கம் பேசும் போது அருமை நண்பர் எஸ்.எஸ் ஆரை தன் வக்கிர புத்தியால் சினிமாவை விட்டே விரட்டியவர் இந்த இராமசந்திரன் தான் இனி உன்னை அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தலை காட்ட விடமாட்டோம் என்று குரலை உயர்த்தி நெஞ்சை உயர்த்தி மார் தட்டி சவால் விட்டார் மேடையில்
பின்பு அவர் பேச்சை முடித்து தன் காரில் போகும் போது திண்டுக்கல் சேரும் முன் மாரடைப்பால் ரோட்டிலே இறந்தார். பின்பு திண்டுக்கல் எம்பி தொகுதிக்கு இடை தேர்தல் வந்தது அதிமுக சார்பில் மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தில் முதன் முதல் அமோக வெற்றி பெற்றார் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அவதூறு பேசிய இராஜாங்கம் ஆவார் எதிர்த்து போட்டியிட்ட பொன்ராமலிங்க தேவரை மதுரை முத்து திமுகா சார்பில் நிறுத்தினார் அவர் டெபாசிட் தொகையை இழந்தார் எம்ஜிஆர் செல்வாக்கை வெளியில் மறைக்க கருணாநிதி தந்திரத்திற்கு மதுரை முத்து மீது பழி போட்டார் உன்னால் தான் திமுக தோற்றது ஆகையால் மேயர் பதவியை பறித்தார் கட்சிக்காக கத்தீ பேசும் போதெல்லாம் கைதட்டியவர்கள் என்னை முதுகில் குத்தி விட்டார்கள் என கூறி எம்ஜிஆர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அதிமுகாவில் சரணாகதி ஆனார் மதுரை முத்து
பின்பு காலபோக்கில் எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தில் புகுந்து ஆட்சி செய்ய தொடங்கினார் கருணாநிதி அப்போதைய நாளேடுகளில் விஜயகுமாரியையும் கருணாநிதியையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருக்க இதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவிக்க வில்லை (ஒரு நாள் உண்ணாவிரத்தின் போதும் அவரது கால்மாட்டில் அமர்ந்திருந்தார் நடிகை விஜயகுமாரி நாடறியும்) காலப்போக்கில் மனம் நொந்து கருணாநிதி செய்த துரோகத்தால் எம்ஜிஆர் அவர்களிடமே எஸ்.எஸ்.ஆர் சரணாகதி அடைந்தார்
இப்படி எம்ஜிஆரை எதிர்த்து பொது மேடையிலே சவால் விட்டு தோற்றவர்கள் நான் இராஜங்கம் எஸ்.எஸ்.ஆர்
இதனை 1977 ல் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நேரம் அதே மதுரை மேடையில் மேயரான பின்பு மதுரை முத்து எடுத்து கூறி எம்ஜிஆரின் அபூர்வ சக்தியை சொல்லி பாராட்டினார்
ஆனால்,கடைசி வரை எம்ஜிஆர் அவர்கள் தன்னை தாக்கி பேசியவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட யாரையும் தரம் தாழ்த்தி பேசியதே இல்லை மாறாக தனது பொன் மனத்தால் அவர்களாக திருந்தி வரும் வரை காத்திருந்து வெற்றி கண்டவர்
#குறிப்பு
அப்போதெல்லாம் சூட்கேஸ் கொடுத்து ஆள் பிடிப்பது கிடையாது
#எல்லாப்புகழும் எம்.ஜி.ஆர்., க்கே....... Thanks...
-
What a Style....!!!
வாத்தியாரின் ஃபைட்டை அணுஅணுவா ரசிப்பதில் ஒரு அலாதியான இன்பம் இருக்கத்தானே செய்யுது....
எனது பள்ளிப்பருவத்தில் எம்ஜிஆர் என்று சொல்வதை விட வாத்தியார்னு சொன்னது தான் அதிகம்...!
மிக நுட்பமாக சண்டைக்கலைகள் தெரிந்தால் மட்டுமே இத்தகைய ஸ்டைல் பண்ணமுடியும்!!!
நான் சொல்றது சரிதானே!!!( "ஆயிரத்தில் ஒருவன்" ஸ்டைல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் - நம்பியார் Fight Scene... அலசல்... சிலாகித்து பதிவுகள்... Thanks...
-
ஆஹா... தலைவரின் ஸ்டைல்.. அழகு யாருக்கும் வராது தம்பி.. கண்கொள்ளாக் காட்சி... Thanks...
-
❤️ ❤️❤️அவருக்கு அதுக்கு தகுந்தாப்படி எதிராளிகளும் இருந்தாங்க.
டி.எஸ்.பாலையாவோ, பி.எஸ்.வீரப்பாவோ, எம்.என்.நம்பியாரோ, எஸ்.ஏ.அசோகனோ, ராமதாஸோ, ஏன் பிற்காலத்தில் வந்த ஜஸ்டின்கூட, தலைவருக்கு சமமான பலத்துடனும், வீரத்துடனும் இருந்தாங்க.
தலைவரென்ன இந்த #...... மாதிரி சோப்ளாங்கியா !!!.... Thanks...
-
Pasupathy Parasaram நான் கதாநாயகனாக நடித்து பாதியில் நின்றுபோன "சித்தாடை கட்டிக்கிட்டு"படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக எனக்கு சினிமா சண்டை போட கற்று கொடுத்தவர் எம் ஜி ஆரின் மனதுக்குப் பிடித்த, அவருடைய பல படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் அவருடன் மோதிய ஜஸ்டின் அவர்கள்தான் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்
Bala Subramanian ரகசிய போலீஸ் 115 படத்தில் ஜஸ்டின் எம்ஜிஆருடன் மோதும் ஒரு சண்டை காட்சி உள்ளது அந்த சமயத்தில் வந்து கொண்டிருந்த பல ஆங்கிலப் படங்களின் சிறந்த சண்டை காட்சிகளுக்கு நிகராக இந்த சண்டைக்காட்சி அமைந்துள்ளதாக நான் இன்றும் நினைக்கிறேன். சண்டைக் காட்சி மிகவும் ஸ்டைலிஷாக அமைந்திருப்பது இதன் சிறப்பு. அந்த சண்டைக்காட்சியை நீங்கள் உங்கள் பக்கத்தில் பதிவிட வேண்டுகிறேன்.... Thanks...
-
Pasupathy Parasaram anna! தனக்கு நிகரான வலிமையையோ அல்லது தன்னைவிட பலம் மிக்கவரோடு தான் வாத்தியார் மோதுவார்... Thanks...
-
மிக உன்னிப்பாக கவனித்து இருக்கிறீர்கள் அருமை சகோ .என்ன ஸ்டைல் என்ன நுட்பம் என்ன அழகு!
சும்மா இல்லை இவருக்கு இணை யாருமே இல்லை என்று சொல்லப்படுவது..... Thanks...
-
அருமையான கத்திச் சண்டை
அட்டகாசமான கையசைவுகள்
ஆதிக்கமே பொங்கும் முகம்
அத்தனையும் அண்ணனின் சாகசங்கள் .....மறக்கலாகுமா.......... Thanks...
-
ரிக் ஷாக் காரன் படத்தில் ரிக் ஷாவில் இருந்தபடியே சிலம்பு சண்டையிடுகையில் ஒரு கட்டத்தில் சிலம்பை தூக்கி எறிந்து விட்டு ரிக் ஷாவை ஓட்டிய படியே இடது கையால் ஸ்டைலாக குத்து விடுவார். அந்த அரை நிமிஷக் காட்சிக்காகவே அந்த காட்சியை எதிர்பார்த்து காத்திருப்போம்....... Thanks...
-
Bala Subramanian சகோ, MGR எம்ஜிஆர் பற்றிய பதிவுகள் நான் எதை போட்டாலும் அதில் அவரை வாத்தியார்.. எங்க வாத்தியார்.. மக்கள் திலகம்.. பொன்மனச்செம்மல்.. பொன்னார் மேனியன்.. ஆகிய அடைமொழிகளை தான் அதிகமாக பயன்படுத்தி பதிவிடுவேன். இவை அனைத்துமே எனக்கு மிக்க மகிழ்ச்சியை தரும் என்ற போதிலும் அந்த "வாத்தியார்" என்ற சொல்லை சொல்லும் பொழுதே என் நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறும் என்பதை நான் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும். ..... Thanks...
-
Always and all places number one is the one and only EVERGREEN HERO MGR...... Thanks...
-
காலத்தை வென்றவர் கொரானா காலத்திலும் மக்களுக்கு மன உறுதியை தன் திரைக்காவியம் மூலம் வந்து மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து விட்டு மக்களை காப்பாற்றுகிறார் எந்த நிலையிலும் மக்களை காப்பாற்றும் சக்தி மக்கள் தெய்வம் மன்னாதி மன்னன் ஒருவர் மட்டுமே..... Thanks...
-
மக்கள் திலகம் அவ*ர்க*ள் கொடுமுடியில் கே.பி.எஸ் அவ*ர்க*ள*து திரைய*ர*ங்கு திற*ப்பு விழாவிற்கு வ*ந்திருந்தார். அப்போது அவ*ர*து இல்லத்தில் உள்ள பூஜைய*றையில் மக்கள் திலகத்திற்கு அன்புட*ன் விபூதி, குங்குமம் நெற்றியில் இடும் காட்சி.
கே.பி.எஸ்., மக்கள் திலகம் இருவ*ருக்குமிடையே மகனுக்கும், தாய்க்குமான பாச*ம் மிகுந்திருந்த*து. கே.பி.எஸ். அவ*ர்க*ள் என்னை பெறாது பெற்ற* அன்னை. நான் சிறுவ*னாக நாட*க*ங்க*ளில் ந*டித்த*போது எனக்கு ஒப்ப*னை செய்து மேடையேற்றிய*வ*ர் கே.பி.எஸ். எனக்கூறியுள்ளார். கே.பி எஸ்.1980ல் மறைந்த* போது அர*சு ம*ரியாதையுட*ன் இறுதிச்ச*ட*ங்கை ந*ட*த்தினார் முத*ல்வ*ர் எம்ஜிஆர்....... Thanks...
-
#உலகம்_சுற்றும்_வாலிபன்
#திரைக்கு_பின்_நடந்தது - #நம்_தலைவர் #கூறியது_உங்களுக்காக
#கம்போடியா, வியட்நாமுக்கு அருகே உள்ள நாடு; விமான நிலையத்தில் சிப்பாய்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
விமான நிலையத்தில் பெரிய, 'பேனர்'கள், சிவப்பு நிற எழுத்துக்களைக் கொண்டு, ஆங்காங்கே காட்சி அளித்தன.
அவற்றில் ஒன்றில் கீழ்க்காணும் வாக்கியங்கள், ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டிருந்தன...
'கம்போடியர்கள் தங்கள் நாட்டை வாடகைக்கு விட மாட்டார்கள்; வியட்காங்குகளோ, வடக்கு வியட்நாமியர்களோ, அதை விழுங்க முடியாது...'
வியட்நாம் சண்டை, கம்போடியாவிலும் பரவி விடுமோ என்பது, அன்றைய நிலைமை. அதனால்தான் கம்போடிய மக்கள், இவ்வாறெல்லாம் எழுதி வைத்திருந்தனர்.
'பானம் பான்' விமான நிலையத்தில், நாங்கள் கூட்டமாக இறங்கிச் சென்றபோது, அங்கே அமர்ந்திருந்த, அமெரிக்கர்கள், எங்களை வியப்புடன் பார்த்தனர்.
'இந்தியர்கள் எல்லாம், ஏன் இந்தியாவிலிருந்து ஓடி வருகின்றனர்; அங்கே என்ன நேர்ந்து விட்டது?' என்று, ஓர் அமெரிக்கர் கேட்க, நாங்கள் திரைப்படக் குழுவினர்
என்பதை, அவர்களிடம் விளக்கினார் நாகேஷ்.
பதினொன்றரை மணிக்கு கம்போடியா விமான நிலையத்தைவிட்டுப் புறப்பட்டோம். இடையில் மேகத்தால், விமானம் சற்று நிலை தடுமாறியவாறு சென்றது.
விமானத்தில் அறிவிப்பாளர், 'ஹாங்காங்குக்கு அருகில் செல்லச் செல்ல மேக மூட்டம், அதிகமிருக்கும்; பெல்ட்டைப் போட்டுக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, 'மேக மூட்டம் அதிகமாக இருப்பினும், உங்கள் கழுத்தையோ, முதுகையோ உடைக்காமல், ஹாங்காங் கொண்டு சேர்க்க முயலுகிறேன்...' என்று, நகைச்சுவையாக சொன்ன போது, 'ஆபத்து' என்று அச்சப்பட்டவர்களும் கூட, வாய்விட்டு சிரித்தனர்.
நாங்கள் பயணம் செய்த விமானம், 1:15 மணிக்கு, ஹாங்காங் விமான நிலையத்தில் இறங்கியது. விமான நிலையத்தின் முன்பும், இரு புறங்களிலும் நீர்ப்பரப்பு. விமான ஓட்டி கொஞ்சம் கவனம் தவறிடினும், சமுத்திரத்தில் இறங்கி விடுவார்.
சமுத்திரத்தைக் தூர்த்து, நிலப்பரப்பை அதிகப்படுத்தி, விமான நிலையத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கிருந்து தமிழ் மக்கள், எங்களைக் கண்டதும், அவர்கள் காட்டிய ஆர்வம் கலந்த அன்பு, வரவேற்பு, மறக்க இயலாதது.
இளைப்பாறுமிடத்தில் புத்தகங்கள், கலைப்பொருள்கள் முதலியவைகளைப் பார்த்து கொண்டிருக்கும் போதே, இயக்குனர் ப. நீலகண்டனிடம், ஹாங்காங் விமான நிலையத்தில், எந்தெந்த காட்சிகளை எடுக்க வேண்டும் என்பதையும், கதையின் ஒரு பகுதியையும் சொன்னேன். அருகில் ஒன்றும் கவனியாதவர் போலிருந்த சொர்ணம் குறித்துக் கொள்வதை, நானும் ஒன்றுமறியாதவன் போலவே கவனித்தேன்.
விமானம் ஜப்பானுக்கு புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டது. எல்லாரும், அவசர அவரசரமாக புறப்பட்டோம். சிறிது நேரம் தங்குவதற்கும், திரும்ப விமானத்திற்குள் செல்வதற்கும், அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த அட்டைக்கு, 'டிரான்சிட் கார்டு' என்று பெயர்.
ஆண்கள் எல்லாரும் அடையாள அட்டைகளைக் கொடுத்து, விமானத்திற்குப் போய் கொண்டிருந்தனர். பெண்களும், தங்களிடம் தரப்பட்டிருந்த அட்டைகளை காவலர்களிடம், கொடுத்தனர்.
ஆனால், லதாவின் அடையாள அட்டை காணவில்லை. எல்லாப் பெண்களும், விமானத்திற்கு போகாமல், லதாவின் அட்டையைத் தேடினர்; நேரம் ஆகிக் கொண்டிருந்தது.
'பயணத்தை நிறுத்தி, லதாவை எங்கள் குழுவைச் சேர்ந்தவர் என்று, உறுதிப்படுத்தி அழைத்து செல்வதா அல்லது மேலதிகாரிகளிடம் ஆதாரங்களை காட்டி, அவர்கள் சம்மதம் பெற்று அழைத்துச் செல்வதா...' என்று, ஒரே குழப்பம்.
அதற்குள், 'கிடைத்து விட்டது கிடைத்து விட்டது...' என்று சந்திரகலாவும், மஞ்சுளாவும் சத்தம் போட்டபடி ஓடி வந்தனர். லதாவும், ஓடி வந்தார்; எல்லாருடைய முகத்திலும் நிம்மதி தெரிந்தது.
முகம் கழுவ, குளியல் அறைக்குள் சென்ற லதா, அங்கு அதை வைத்துவிட்டு வந்திருக்கிறாள்.
'இனிமேல் லதா தன்னுடைய பாஸ்போர்ட் முதற்கொண்டு, அனைத்தையும், வேறு யாரிடமாவது கொடுத்து வைத்துவிட வேண்டும். தன்னிடம் வைத்துக் கொள்ளகூடாது...' என்றாள் என் மனைவி.
மணி, 2.20க்கு விமானம் புறப்பட்டது.
ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம், ஜப்பான் கடலைக் கடந்து, ஒசாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
'மிஸ்டர் நாகேஷ், நாம இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்...' என்று கேட்டார் ஒருவர்.
'கொஞ்சம் இரு; வெளியே எட்டிப் பார்த்து சொல்றேன். மைல் கல் வெளியே தானே, நட்டிருப்பான், பாத்துட்டாப் போறது...' என்றார் நாகேஷ். அவ்வளவுதான்! சொர்ணமும், மற்றவர்களும் வாய்விட்டுச் சிரித்தனர்.
ஒசாகாவை நெருங்க நெருங்க விமானம், மேலும் கீழும் ஆடியது.
அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அசோகன், 'என்ன நாகேஷ்... இப்படி மேலும் கீழும் ஆட்டி பயமுறுத்துறான்...' என்றார்.
'ஒண்ணுமில்லே. ஒசாகா எங்கே இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்...' என்று, பதில் சொன்னார் நாகேஷ்.
இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு, யாரால் தான் சிரிக்காமல் இருக்க முடியும்?
சரியாக, 5.50 மணிக்கு, ஒசாகா விமான நிலையத்தில் இறங்கிய விமானம், மணி, 6:20க்கு அங்கிருந்து புறப்பட்டு, 7.20 மணிக்கு, டோக்கியோ விமான நிலையத்தை அடைந்தது.
இது, இந்திய நேரத்தைக் காட்டுவதாகும். அப்போது டோக்கியோவின் நேரம் இரவு, மணி, 10.30௦; பாஸ்போர்ட், விசா போன்றவைகளை, விமான நிலைய அதிகாரிகளிடம் காண்பித்துக் கொண்டிருந்தோம். வெளியே ஓரிரு தமிழன்பர்கள், குடும்பத்தோடு நிற்பதை கண்டேன்.
பாஸ்போர்ட், விசா போன்றவைகளைக் காண்பித்துவிட்டு, காவலரைத் தாண்டி, இடுப்பளவு உயரமே உள்ள கம்பிக் கதவுகளுக்கு மறுபுறம் நின்று கொண்டிருந்தேன். நாகேசும், தன்னுடைய பாஸ்போர்ட், விசாக்களைக் காண்பித்துவிட்டு வந்தவர், என்னருகில் வந்ததும், அதுவரையில் நான் காணாத ஒரு பெரிய பயங்கர மாற்றம், அவரிடம் தெரிந்தது.
அவருடைய கண்கள் பெரிதாயின. முகம், ஒரு பக்கமாக, விகாரமாக இழுக்கப்பட்டது. சொல்ல முடியாத, ஏதோ ஒரு வார்த்தை வெளியே வந்தது.
பேச இயலாத ஒருவன், தன்னைப் பயங்கரமான ஆயுதங்களால், தாக்க வருபவர்களை பற்றி, மற்றவர்களுக்கு சொல்ல விரும்பினால், என்ன செய்வான்? பயத்தினாலும், தன்னால் ஏதும் செய்ய இயலவில்லை என்கிற கோழைத்தனத்தோடும், எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, சப்தமிட விரும்பி கத்தினால், எப்படி இருக்கும்... உருவில்லாத வார்த்தைகள், அடிவயிற்றிலிருந்து அழுத்தித் தள்ளப்பட்ட காற்றின் உதவியால், வார்த்தைகளுக்குப் பதில், இனம் புரியாத கூச்சல் கரகரத்த குரலில் வெளிவருமே, அதுபோல், இல்லை அதைவிடப் பயங்கரமாக அலறியவாறு, கீழே விழுந்து விட்டார் நாகேஷ்.
அவரது வாயிலிருந்து, நுரை நுரையாக வந்தது. நான் பிடிக்காவிட்டால், அவர் தரையில் அப்படியே விழுந்திருப்பார். மீண்டும் மீண்டும் மிரண்ட பார்வைகளோடு அலறினார். பாஸ்போர்ட் முதலியவைகளைப் பரிசீலித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் கூட, ஏதும் புரியாத நிலையில், தங்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்றனர். நான், அவருடைய நெஞ்சைத் தடவிக் கொடுத்தேன்.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
-- எம்.ஜி.ஆர்.,.... Thanks...
-
வணக்கம் நண்பர்களே!! உலகில் 7என்ற எண்ணுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.
அதிசயங்கள் 7
வாரத்தில் நாட்கள் 7
லோகங்கள் 7
நம்நாட்டில் கூட
கடை 7வள்ளல்கள் என '7'ம் நம்பரை ஒரு தனித்துவமான எண்ணாகவே பார்க்கிறது...
புரட்சித்தலைவரின் வாழ்விலும் 7என்ற எண்ணுக்கு மிக முக்கியமான இடம் உண்டு...
அவர் பிறந்தது. 1917
வீட்டு விட்டு பிழைப்புக்காக நாடக கம்பெனியில் சேர்ந்தது. 1927
முதன் முதலில் சினிமாவில் நடித்தது. 1937
பெயர் பொதுவில் தெரிய தொடங்கியது
முதன் முதலில் கதாநாயகனாக
நடித்தது. 1947
அவர் சார்ந்த திமுக முதல் தேர்தல்.
1957
முதன்முதலில் எம்எல்ஏ ஆனது. 1967
முதல்வராக ஆனது. 1977
இவ்வுலகை விட்டு மறைந்தது. 1987
மொத்தமாக அவர் வாழ்ந்த ஆண்டுகள் '7'0
கடையெழுவள்ளல்களின் குணம் மற்றும் 7அதிசயங்களின் தன்மை இரண்டும் ஒருசேர அமைந்ததால் இந்த அபூர்வ நிகழ்வு நடந்தது போலும்......... Thanks...
-
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமொழிக்கு ஒப்ப எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்கள்....... Thanks...
-
எங்கள் இதய தெய்வம் இருந்தபோதும் கோடிப்பொண் மறைந்தும் (மன்னிக்கவும் சகோதர ர்களே நம்முள் என்றேன்றும் வாழ்ந்தக்கொண்டிருப்பவர்) கோடிப்பொண்!!!..... Thanks...
-
பாலா எம்.ஜி.ஆர் பதிவேற்றம் செய்ததில் எந்தத்தவறும் இல்லை. புரட்சித்தலைவரின் படம் எந்த நேரத்தில் போட்டாலும் மக்களின் ஆராவாரம் குறைவதில்லை என்று எஸ்.வி.சேகர் சொன்னதில் என்ன தவறு அதை அண்ணா பதிவேற்றம் செய்ததில் என்ன தவறை கண்டுபிடித்துள்ளீர்கள் மனசாட்சிப்படி சொல்லுங்கள் பாலா எம்.ஜிஆர் போன்ற ஒரு சிலர்தான் தலைவரின் புகழை மங்காமல் நம்மிடையே வைத்துள்ளனர் அதிலும் பாலா அண்ணா சேவை அளப்பறியது. சும்மா சும்மா பதிவேற்றங்களை குறைசொல்வது அழகல்ல. குறை சொல்லும் யாரும் தலைவரை பற்றி பதிவேற்றம் செய்துள்ளனரா? எந்தக்கட்சிக்கும் சொந்தக்காரர் நம் தலைவர். நன்றி மறந்த சிவாஜி., வாலி இப்படிப்பட்டவர்களே தலைவரை போற்றியதை பதிவேற்றம் செய்ததில் என்ன தவறு. பாலா அண்ணா தங்களின் சேவை தலைவரின் புகழை மங்காதிருக்க மேலும் மேலும் பதிவேற்றம் தொடருங்கள். குறை கூறுவோரை விட்டுத்தள்ளுங்கள். சும்மா சும்மா குறை கூறுவதே வேலை இவர்களுக்கு. ஒரு பதிவை காப்பி அடித்து போட்டேனாம் உடனே அதில் ஆயிரம் குறை கண்டனர். தலைவரின் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.. தலைவரின் பதிவேற்றமும் அப்படியே. புறம் சொல்லுவோர் பற்றி கவலை வேண்டாம் வீணே பதிலுரை தந்து அவர்களை மீண்டும் பெரிய ஆளாக்க வேண்டாம். தோழரே பதிலுரை தந்திருக்க மாட்டேன். உம்மை குறை கூறியதால் சபைக்கு வந்தேன். தொடரட்டும் தங்கள் பணி.... Thanks...
-
தினமலர் -25/04/20- மறக்க முடியுமா*? - உலகம் சுற்றும் வாலிபனை*
---------------------------------------------------------------------------------------------------------
உலகம் சுற்றும் வாலிபன் வெளியான*நாள் -11/05/1973
தயாரிப்பு "எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் .* இயக்கம் : எம்.ஜி.ஆர்.*
நடிப்பு : எம்.ஜி.ஆர். (இரட்டை வேடம் ) மஞ்சுளா, லதா, சந்திரகலா ,மேத்தா*(தாய்லாந்து*நடிகை ) நாகேஷ், தேங்காய் ஸ்ரீநிவாசன் , அசோகன், நம்பியார், மனோகர்*,வி.கோபாலகிருஷ்ணன் , மற்றும் பலர்*
இசை : மெல்லிசை மன்னர்*எம்.எஸ். விஸ்வநாதன் .
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில்*ஏற்பட்ட*, பெரும் திருப்பத்தின்போது வெளியான*படம் .* எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டு , அ.தி.மு.க. துவங்கியபின் , இப்படம், அந்த கட்சி கொடியுடன் வெளியானது*
இப்படத்திற்கு அப்போதைய ஆளுங்கட்சியான* தி.மு.க. பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது .* அதை தகர்த்தெறிந்து எம்.ஜி.ஆர். வெற்றிவாகை சூடினார் .**
இப்படத்தால் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம் .* விஞ்ஞானியான முருகன் மின்னலை*சேமித்து வைத்து, அதை ஆக்கபூர்வ*பணிக்கு*பயன்படுத்த நினைப்பார் .அத்திட்டத்தின் பார்முலாவை*வில்லன் கூட்டம் , அபகரிக்க முயற்சி செய்யும்*.இதை*விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வு துறை அதிகாரியுமான, ராஜு*எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் .என்பது*தான் கதை .
முருகன், ராஜு*என்ற இரு கதாபாத்திரங்களையும் , எம்.ஜி.ஆர். ஏற்று நடித்திருப்பார் .* மஞ்சுளா, லதா, சந்திரகலா, என்று மூன்று கதாநாயகிகள் .நாடு நாடாக பயணிக்கும் சர்வதேச கதை .* அதை வெகு திறமையாக கையாண்டு இருப்பார்*இயக்குனர்* எம்.ஜி.ஆர்.*
விஸ்வநாதன் இசையில்*கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர்*பாடல்களை எழுதினர் .* நமது வெற்றியை*நாளை சரித்திரம் சொல்லும், லில்லி*மலருக்கு கொண்டாட்டம், சிரித்து வாழ வேண்டும்,*நிலவு ஒரு பெண்ணாகி, தங்க தோணியிலே*, பச்சைக்கிளி முத்துச்சரம்,பன்சாயி, உலகம் அழகு கலைகளின் சுரங்கம்*, ஆகிய அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன .*
மசாலா நடிகர்*என*நினைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் , உலகம் சுற்றும்*வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய திறமைசாலி*என்பதை*புரிந்துக் கொள்வர் .
எப்போதும்*இளமையாக இருப்பான், உலகம் சுற்றும் வாலிபன் , மறக்காமல் பார்த்து மகிழுங்கள் .
-
******************************* கண்ணன் என் காதலன் ******************************* மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் வாணிஶ்ரீ இணைந்து நடித்த படம் "கண்ணன் என் காதலன்" (சத்யா மூவிஸ் தயாரிப்பு)நடிகர்கள் "சோ" " தேங்காய் சீனிவாசன்" மற்றும் பலர் நடித்த இப் படம் 1968 ஏப்ரல் மாதம் 25ம் தேதி அதாவது ,
இன்றைய...நாளான 25/04/ ல் வெளியானது.
மக்கள் திலகம் அவர்கள் , மிகவும் அழகாக தோன்றிய படங்களில் இதுவும் ஒன்று.
நடிகை வாணிஶ்ரீ புரட்சித்தலைவருடன் இணைந்து நடித்த முதல் படம் "கண்ணன் என் காதலன்".
(கண்ணன் என் காதலன் பிறகு தலைவன் , ஊருக்கு உழைப்பவன் என மூன்று படங்கள் நடித்தார்)
நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் புரட்சித்தைவருடன் சேர்ந்து நடித்த முதல் படம்.... "கண்ணன் என் காதலன்"
(கண்ணன் என் காதலன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 26 படங்கள் நடித்துள்ளார்)
அதை போன்றே...
நகைச்சுவை நடிகர் "சோ" மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் சேர்ந்து நடித்த முதல் படம் "கண்ணன் என் காதலன்"
(கண்ணன் என் காதலன் முதல் சங்கே முழங்கு வரை 13 படங்கள் நடித்துள்ளார்)
அந்நாளில் இப்படம் சென்னை ஸ்டார் அரங்கில் 50 நாட்கள் , பிரபாத் 56 , மேகலா 56 , நூர்ஜகான் அரங்கில் 50 நாட்களும் , மதுரை சிந்தாமணி அரங்கில் மட்டும் 92 நாட்கள் ஓடியது *
" KANNAN EN KAADHALAN "
(transl. Kannan my lover)
is a 1968 indian tamil language film , starring M.G.Ramachandran , in the lead role and jayalalithaa with Vanisree , S.A. Ashokan and Cho Ramaswamy , among others.
Kannan en kaadalan
Directed by :
pa.Neelakantan
Produced by :
R.M.Veerappan
Written by :
Vidwan Ve. Lakshman &
Na. Pandurangan
Screenplay by :
R.M. Veerappan
Story by :
A.S.Pragasam
Starring :
M.G. Ramachandran
Jayalalitha
Vanisree
Music by :
M.S.Vishvanathan
Cinematography :
V.Ramamoorthy
Edited by :
C.P.Jambulingam
Production company :
Sathya Movies
Distributed by :
Sathya movies
Release date :
25 /04/1968
Running time :
142 minutes
Country :
India
Language :
Tamil
Music composed by
M.S.Vishwanathan (1)(2)The films soundtrack was under label Saregama (3)
No.song singers Lyrics Lenth (m:ss)
a opening tittle music M.S.Vishwanathan no lyrics 01 : 52 (instrumental)
b kannan on the piano Mallika on the floor 01:02 (instrumental)
1 - Gettigaariyin poyyum
T.M.Soundararajan & P.Suseela
Lyric : Alangudi somu
03:27 / 03:37 (film Version)
2 - Paaduvor Paadinaal
T.M.Soundararajan
Lyric : Vaali
03:06 / 04:41 (film Version)
c - Kannan , Malathi & action on music (part 1)
M.S.Vishwanathan No Lyrics 02:42 (instrumental)
d - kannan Malathi & action on music (part 2) 01:32 (instrumental)
3 - kangal irandum
T.M.Soundararajan & P.Suseela
Lyric : Vaali
03:07 / 03:37 (film version)
4 - Sirithaal thangapadumai
T.M.Soundararajan & P.Suseela
Lyric : Aalanvudi somu
03:12 / 04:02 (film version)
5 - Minminiyai kanmaniyai
T.M.Soundararajan & L.R.Eswari
Lyric : Vaali
03:57 / 03:54 (film Version)
6 - Paaduvor Paadinaal
(reprise 1)
T.M.Soundararajan &
Jayalalithaa (dialogues) 02:57 / 02:58 (film version)
7 - Paaduvor Paadinaal
(reprise 2)
T.M.Soundararajan & P.Suseela
0:49 (film version)
All type message created by :
MGR in kaaladi nizhal
Ka. Palani
Admin :
" UZAIKKUM KURAL "
Whatsup group
தகவல் கிரியேட்டிவ் :
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி
அட்மீன் :
" உழைக்கும் குரல் " தளம்
.......... Thanks.........
-
Really, I'm very much amazing that how wonderful Dr.M.G.R is. He's. known for camera, screen play, direction, lighting and everything and sum up, he's multifaceted and his name and fame will remain till the earth exists.
This is a very beautiful post.
He is God in all 7 worlds.
Congratulations.
P.Radhakridhnan, M.A.,
B Ed,
Sub-Inspector of Police (Retd)........ Thanks...
-
Really, I'm very much amazing that how wonderful Dr.M.G.R is. He's. known for camera, screen play, direction, lighting and everything and sum up, he's multifaceted and his name and fame will remain till the earth exists.
This is a very beautiful post.
He is God in all 7 worlds.
Congratulations.
P.Radhakridhnan, M.A.,
B Ed,
Sub-Inspector of Police (Retd)........ Thanks...
-
Radhakrishnan P
Thank you sir.
Tamil people are very cautious to believe a person &will get faith after a very good analysis about him or her.
In that manner, they found MGR as their. Real hero & then they began to worship him.According to their logic,
A leader must be---
-- brave enough to rescue his people
---kind enough on his citizens
---mercy enough among the poor people
---having enough respect among women esp.motherhood
---good enough. to donate his wealth for others
---talented enough to tackle any difficult situation
---moreover his dazzling beauty is the bonus point for him.
They saw all the above qualities in MGR
as well as in the screen and also in the real life.
So the fame of MGR remains glowing now itself....... Thanks...
-
ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.
அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!
தலைவரின் அருமையான பாடல் வரி...
நீங்க நல்லாயிருக்கணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு
முன்னேற
என்றும்
நல்லவங்க எல்லாரும்
உங்க பின்னால
நீங்க
நினைச்சதெல்லாம்
நடக்கும் உங்க
கண்ணு முன்னால....... Thanks...
-
ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.
அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!
தலைவரின் அருமையான பாடல் வரி...
நீங்க நல்லாயிருக்கணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு
முன்னேற
என்றும்
நல்லவங்க எல்லாரும்
உங்க பின்னால
நீங்க
நினைச்சதெல்லாம்
நடக்கும் உங்க
கண்ணு முன்னால....... Thanks...
-
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள் பணம் சேர்ந்ததும் ஒரு வீடு வாங்க நினைத்தார் . அதனை தலைவரிடமும் சொன்னார் . அந்த சந்தர்பத்தில்தான் தனது மைத்துனருக்கு பார்த்த வீட்டை சந்தியா வாங்கும்படி செய்தார் புரட்சிதலைவர் . அப்போது சாதாரண வீடாக இருந்ததை பின்னாளில் ஜெயலலிதா முன்னணி நடிகையாக ஆகிய பின் அதனை புதுப்பித்து கட்டினார் . அவரது துரதிருஷ்டம் அந்த வீட்டில் குடிபுகும் முன்பே அவரது தாயாரை இழந்தார் ...
இவருக்கு மட்டுமல்ல திரையுலகை சார்ந்த பலருக்கும் இதுபோல் வீடு வாங்கி தர உதவி செய்துள்ளார் அவரவர் பணத்தில் .
இது போக பலருக்கு தனது சொந்த பணத்தில் இருந்து முழுமையாகவோ , அல்லது ஒரு பகுதியோ தந்தும் வாங்கி தந்துள்ளார் ....... Thanks...
-
“நான் சதிலீலாவதியில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, கம்பெனி ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கியிருந்த சமயம் அது...
எங்கள் கம்பெனியில் இருந்த மணி என்பவர் பிராமண வகுப்பைச் சேர்நதவர். ஆகவே, சாப்பிடும் போது தனியாக உட்கார்ந்துதான் சாப்பிட விரும்புவார்.
அதாவது வேறு வகுப்பாருடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடமாட்டார்.
இந்தத் தவறான போக்கை நீக்கக் கருதிய என்.எஸ்.கே. கடைசியாக எப்படியும் தடுக்க வேண்டுமென முடிவு செய்து திட்டமும் தீட்டி எங்களுக்கெல்லாம் யார் யார் என்னென்ன செய்யவேண்டுமென்று யோசனையும் கூறினார்.
ஒரு நாள் மணி அவர்களும், மற்றவர்களும் சமையல் அறையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
என்.எஸ்.கே ஏதோ வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தவர்,
“என்னய்யா இது, எவ்வளவு நாழியா ரசம் கேக்கிறது? சேச்சே” என்று சொல்லியபடி எழுந்து, ரசப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டுவந்தார்.
முன்பே திட்டமிட்டபடி நானும் மற்றவர்களும் சமையலறைக்குள் சென்று பொரியல், மோர், சாம்பார், முதலியவைகளைப் பாத்திரத்தோடு தூக்கிக் கொண்டு வந்து, நாங்களே பரிமாறிக் கொண்டோம்.
உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், சாம்பார் சாதத்தோடு அப்படியே உட்காந்திருந்தார்கள்.
ரசம், மோர், கறி முதலியனவெல்லாம் மற்றவர்களால் தீண்டப்பட்டு விட்டதால், தீட்டாகிவிட்டதே என்ன செய்வார்கள்?
மணி அவர்களுக்கு ஒரே ஆத்திரம். அவரோடு உணவருந்திய மற்ற பிராமண நண்பர்களும் கோபத்தோடு எழுந்து வெளியே வந்தார்கள்.
நாங்களோ பெருவாரியானவர்கள். என்ன செய்வார்கள் என்.எஸ்.கே-யைக் கண்டிப்பதற்கோ பயம்.”
- 30-09-1957 ல் வெளிவந்த ‘நடிகன் குரல்’ இதழில் #மக்கள்திலகம் #எம்ஜிஆர்........ Thanks...
-
கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்களே...
நீங்கள் கருப்பாகவும், வெள்ளையாகவும் வாங்கும் சப்பளத்திலிருந்து ஒரு துரும்பை கிள்ளி முதல்வர் நிவாரண நிதி கொடுக்க யோசிக்கிறீர்களே..
அன்று எங்களின் #மக்கள்திலகம் தனது ஒரு படத்தின் சம்பளம் முழுவதையும் நாட்டின் பாதுகாப்பு நிதியாக கொடுத்தாரே..
பாருங்கள்... நன்றாக பாருங்கள்.. அவர் பெயரை சொல்லி ஆட்சிக்கு வர ஆசைப்பட்டால் மட்டும் போதாது..
முதலில் அவரைப்போல செயலில் காட்டுங்கள்...
முடியாது... அது உங்களால் முடியவே முடியாது..
அதற்கெல்லாம் ஒரு குணம் வேண்டும்...
அந்த வள்ளல் குணம் அவரைத் தவிர வேறு யாருக்கும் வராது.. வரவே வராது....... Thanks...
-
வாரிக்கொடுப்பது என்பது இயல்பாய் வரவேண்டும். மக்களை நேசிப்பதற்கு உண்மையான பரிவு வேண்டும். மக்களிடம் பயப்படுவதற்கு உண்மையான.மரியாதை வேண்டும்.இதனையொத்த பல இயல்புகள் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர்.மக்கள்திலகம்...... Thanks...
-
-
-
-
-
தற்போது பல தொலைக்காட்சிகளில் பல புகழ் பெற்ற புது படங்கள் ஒளிபரப்பு ஆகிறபோது தான் அதற்கெல்லாம் counter கொடுக்க புரட்சி நடிகர் படங்கள் தான் தேவைப்படுகிறது... அதுதான் அதிசயம், அற்புதம்... Thanks...
-
நல்ல பதிவு...
ஆனால் தன்னுடைய (AVM) அடுத்த படத்திற்காக வெள்ளிவிழா ஓட வேண்டிய அன்பே வா வை ஓடமால் தூக்கியது அவர்தான்....feedback... Thanks...
-
A good personality,
A very nice gentleman.
A very good director.
I pray those who want to be a good personality, see Dr.M.G.R films and definitely they will never do ant harm like me.
I love and pray M.G.R daily and all the credits would go to Him.(God)..... Thanks...
-
இந்த* " சர்வாதிகாரி" படத்தில்*.எம்*ஜிஆர்*அவர்களின் வாள் வீச்சை பார்க்கவேண்டுமே.எவ்வளவு*நளினம்.அதுவும்*கடைசியில்.ந ம்பியாருடன்*மோதும்போது**ஆஹா...அபாரம்*தியேட்டரில்.அ த*களமாகும்.இப்போதுள்ள*பொரி உருண்டைகளுக்கு தெரியாது... Thanks...