-
http://i1170.photobucket.com/albums/...ps80087c3c.jpg
பல வருடங்களாக இலங்கைத்திரு நாட்டில் புரட்சித்தலைவர் மக்கள் திலகத்தின் கொள்கையின் அடிப்படையில் மக்கள் சேவையை முன்னெடுத்தவர் மர்ஹ{ம் ஏ. நெய்னார்.
இவரது தொண்டுள்ளத்தைப் புரிந்து கொண்ட முதலமைச்சரான எம். ஜி. ஆர். ஜனாப் நெய்னாரை அ. தி. மு. கவின் இலங்கை மாநில செயலாளராக நியமித்தார்.
அ. தி. மு. கவின் இலட்சிய நோக்கோடு செயற்பட்ட நெய்னாரோடு பல புரட்சித்தலைவரின் அபிமானிகளும் விசு வாசிகளும் இணைந்து தொண்டாற்றினார்கள்.
நெய்னார் அமரத்துவம் அடைந்தவுடன் அவரது வழியில் செயல்பட ஆரம்பித்தார் அவரின் புதல்வரான இம்ரான் நெய்னார். இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் என்ற அமைப்பை நிறுவி சமூக சேவையை தொடர்ந்தார்.
எதிர் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இலங்கை நெய்னாரோடு எம். ஜி. ஆர். கொள்கைகளோடு மக்கள் பணியாற்றிய ஏழு பேருக்கு பாராட்டும் கௌரவமும் வழங்குவதோடு ‘பொன்மனச்செம்மல்’ எனும் பட்டத்தையும் வழங்க உள்ளார். இவ்விழாவில் இன்றைய இலங்கை அ.தி.மு.க செயலர் எஸ். எச். எம். இத்ரீஸ், புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். மன்றத்தலைவர் எம். எம். நவாஸ்டீன், புத்தளம் செல்வராஜ், கவுஸ் ஹ{சைன் ஆகியோரும் அடங்குவர்.
-
-
8001 பதிவுகள் முடித்து வீர நடை போடும் இனிய நண்பர் திரு.வினோத்
அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்.
ஆர்.லோகநாதன்.
-
இன்று சன்லைப் தொலைகாட்சியில் எனக்கு பிடித்த பாடல் நிகழ்ச்சியில்
சின்னத்திரை நடிகர் திரு. ராமச்சந்திரன் அவர்கள் அடிமை பெண் படத்தின்
தாயில்லாமல் நானில்லை பாடலை ஒளிபரப்பும் முன்பு பின்வருமாறு
குறிப்பிட்டார்.:
தமிழ் திரையுலகில் தாய் பற்று, தாய் பாசம், தாயை போற்றுதல், தாயை
வணங்குதல், தாயுடன் எப்படி நேசமாக பழகுவது இப்படி பல நல்ல
கருத்துக்கள் /விஷயங்கள் புரட்சி தலைவரை போல் போதித்தவர் எவருமில்லை .
ஆர். லோகநாதன்.
-
http://i62.tinypic.com/2q99nhd.jpg
வரும் ஞாயிரு மாலை (11/05/2014) 4.30 மணிக்கு ஜெயா தொலைகாட்சியில்
ஆல்பட் அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் 50 வது நாள் விழா தொகுப்பு ஒளிபரப்பப்படும்.
அனைவரும் கண்டு மகிழ்க!.
தினசரி மாலை 5.30 மணிக்கு மெகா ஹிட் என்கிற சானலில் ஆயிரத்தில்
ஒருவன் பற்றிய விளம்பரம் ஒளிபரப்பாகிறது.
ஆர். லோகநாதன்.
-
http://i58.tinypic.com/25qu2w0.jpg
நாளை முதல் நங்கநல்லூர் வெற்றி வேலனில் மக்கள் திலகம் .எம்.ஜி.ஆர்.
அவர்களின் "ஆயிரத்தில் ஒருவன் " திரையிடப்படுகிறது.
-
பெரிய இடத்து பெண் 52 வது ஆண்டு தொடக்கம்.-சிறப்பு பார்வை.
------------------------------------------------------------------------------------
வெளியான தேதி. 10/05/1963.
1963-ல் மக்கள் திலகம் நடித்து 9 படங்கள் வெளியாயின.
அந்த ஆண்டின் ஈடு இணையற்ற காவியம்.வசூலில் முதலிடம்.
மக்கள் திலகம் பட்டிக்காட்டு வாலிபனாகவும் , பின்னர் நாகரீக வாலிபனாகவும் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்த படம்.
பல ஆண்டுகள் கழித்து வந்த கமலஹாசனின் சகலகலா வல்லவன்
மற்றும் அதே பாணியில் வெளிவந்த மற்ற படங்களுக்கும் பெரிய
இடத்து பெண்தான் முன்னோடி.
இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அசோகனுடன் செய்யும் சிலம்பு
சண்டை காட்சிகள் அப்போது திரையுலகில் பிரசித்தம்.
டைட்டில் இசை பிரமாதம்.
மக்கள் திலகத்துடன் நாகேஷ் நெருங்கி நடித்த முதல் படம் .
சமூகத்தில் உள்ள சீர்கேடுகள்/பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்ச்சிகளை
வசனங்கள் மூலம் வெளிக்கொணர்ந்த படம்.
இயக்குனர் ராமண்ணாவின் பாடல்கள் பதிவாக்கம் மிகவும் அருமை.
பல இடங்களில் பின்னணி இசையில் விஸ்வநாதன்- ராமமூர்த்தி
கைவண்ணம் பளிச்சிடும்.
முதல் வெளியீட்டில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
1974-ல் குரோம்பேட்டை வெற்றியில் முதன் முதலாக நேற்று இன்று நாளை வெளியீட்டின்போது பார்த்தேன்.
அதன்பின் பல அரங்குகளில் பார்த்து மகிழ்ந்த அனுபவமும் உண்டு.
திருவனந்தபுரத்தில் பணிபுரியும்போது இருமுறை (1981) ரயில் நிலையம்
அருகில் உள்ள அரங்கில் பார்த்திருக்கிறேன் .
சென்னை சித்ரா, கிரௌன் அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடிய படம்.
ஆர். லோகநாதன்.
-
சென்னை பாரத் அரங்கில் இன்று முதல் (09/05/2014) ஆயிரத்தில் ஒருவன்
தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i60.tinypic.com/24l6il2.jpg
-
-