-
RAJINI : I WILL GO IF SHANKAR CALLS ME AGAIN
Rajinikanth, during the special interview telecast by a private satellite channel on Diwali, revealed that Shankar approached him with three stories – Robot/Endhiran, Sivaji and another film which is based on mystery of India and is about a hunchback.
Shankar was keen on casting Rajini in Robot but the Superstar declined the offer thinking that he is being offered the villain role as there was a talk at that time that Shah Rukh Khan is being considered to play the lead role.
Rajini was also skeptical if would suit the scientist role and declined the offer. Then it was decided he would star in Sivaji as it was a mass film that Rajini is used to.
After working with Shankar in Sivaji, the Superstar was so confident about the director’s capabilities that he agreed to star in Robot/Endhiran. He also divulged that he took up the offer only because Shankar was wielding the megaphone.
So, do we get to see Shankar and Rajini joining hands for the third time as two of their ventures together have turned out to be blockbusters? Will the Superstar play the hunchback?
-
ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான்! - அபிஷேக் பச்சன்
http://thatstamil.oneindia.in/movies...-rai-pair.html
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினி தான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த படம் எந்திரன். சன் பிக்சர்ஸின் முதல் படம்.
படையப்பாவிலிருந்து தனது படங்களுக்கு ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தார் ரஜினி. பல்வேறு காரணங்களால் அமையாமல் போய்விட, இறுதியாக எந்திரனில் ஜோடி சேர்ந்தனர்.
சமீபத்தில் ஸ்டார் டிவியில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் - ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றனர்.
அபிஷேக் பச்சனிடம், ஐஸ்வர்யாவுக்கு பர்பெக்ட்டான சினிமா ஜோடி யார்? என்று ஒரு கேள்வியை முன்வைத்தார் கரண் ஜோஹர்.
அதற்கு, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என்றார் அபிஷேக்!
தொடர்ந்து அவர் கூறுகையில், "ஐஸ்வர்யா ராயும் ஹ்ரித்திக்கும் திரையில் அழகான ஜோடிகளாகத் தெரிகின்றனர். ஷாரூக்குடன் ஐஸ்வர்யா நடித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து ஷாரூக்கின் படங்களில் ஐஸ் நடிப்பார். ஆனால் ரஜினி சார்... இவர்களின் ஜோடிப் பொருத்தம் கச்சிதம். நான் எந்திரன் / ரோபோ பார்த்தேன். ரஜினி - ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடியாக ஜொலித்தனர்" என்றார்.
-
சித்து ப்ளஸ்டூ தாமதம் ஏன்? - பாக்யராஜ் தந்த விளக்கம்
http://thatstamil.oneindia.in/movies...o-release.html
நேரம் சரியில்லாவிட்டால் என்ன செய்தாலும் சரியாக வராது. எனது புதிய படமான சித்து ப்ளஸ் டூவும் அதனால்தான் தாமதமாகிவிட்டது போலிருக்கிறது, என்றார் இயக்குநர் கே பாக்யராஜ்.
மகன் சாந்தனுவை வைத்து பாக்யராஜ் இயக்கியுள்ள புதிய படம் சித்து பிளஸ்-2. நாயகியாக சாந்தினி நடித்துள்ளார். இந்த படம் குறித்து பாக்யராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியது:
பொதுவாக நான் படம் ஆரம்பிப்பதை பெரிதாக விளம்பரப்படுத்தியதில்லை. முடித்த பிறகுதான் வெளியில் தெரியும். இத்தனை வருடமும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இந்தப் படம் அதற்கு விதிவிலக்காகிவிட்டது.
சித்து பட வேலைகள் திட்டமிட்டபடி நடந்தன. ஆனாலும் தாமதமாகி விட்டது. இதை சொல்லும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன.
16 வயதினிலே படப்பிடிப்பின் போது பட வேலைகள் முடிந்து எங்கள் இயக்குனரும் இதர தொழில் நுட்ப கலைஞர்களும் சென்னை க்கு திரும்பினோம். வழியில் வேன் ரோட்டை விட்டு இறங்கி விபத்துக்குள்ளாகிவிட்டது. யாருக்கும் காயம் இல்லை. அதிலிருந்து மீண்டு சென்னை வந்து சேர்ந்த போது டயர் கழன்று ஓடியது. எல்லோரும் தப்பினோம். எங்கள் வண்டியில் இருந்து இறங்கி போன அப்துல்லா என்பவர் மட்டும் இன்னொரு விபத்தில் சிக்கி காயம் பட்டார். அவரை துரத்திய விதிதான் எங்களை பாடாய் படுத்தியது போலிருக்கிறது.
அது போலத்தான் இந்த படத்துக்கும் சில தாமதங்கள் எற்பட்டது. 16 வயதினிலே தடைகளை மீறி ஜெயித்தது போல் இப்படமும் பெரும் வெற்றி பெறும்.
முதல் படம் செய்த போது கூட நான் பயந்ததில்லை. இந்த படம் தாமதம் ஆனதால் லேசாக பயம் வருகிறது.
பொதுவாக என் படங்களில் தமிழ் பேச தெரிந்தவர்களைத்தான் கதாநாயகியாக்குவேன். என்னுடன் நடித்த ஊர்வசி, சரிதா, ஷோபனா போன்றோருக்கு தமிழ் தெரிந்ததால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. அது போல் சித்து படத்தில் நடிக்கும் நாயகி சாந்தினிக்கும் தமிழில் பேசத் தெரியும் சிறப்பாக நடித்துள்ளார். ராஜேஷ், கஞ்சா கருப்பு, போன்றோரும் நடித்துள்ளனர். மகன், தந்தை சென்டி மெண்ட், காதல், போன்ற அம்சங்கள் இதில் இருக்கும்.
இது இளைஞர்களுக்கான படம் மட்டுமல்ல, இளைஞர்களுடன் குடும்பத்தினரும் தைரியமாக பார்க்கக்கூடிய நல்ல படம்,
-
அடுத்த படம் தலைவன் இருக்கின்றான்! - கமல் அறிவிப்பு
http://thatstamil.oneindia.in/movies...ukkindran.html
தனது அடுத்த படம் தலைவன் இருக்கிறான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல்ஹாஸன்.
கமல் இப்போது மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் தனது அடுத்த படம் 'தலைவன் இருக்கின்றான்' என அறிவித்துள்ளார் கமல்ஹாஸன். இந்தப் படத்தை தானே இயக்கலாம் அல்லது தனக்கு நெருக்கமான இயக்குநர் இயக்கவும் வாய்ப்புள்ளது என அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல மலையாள நாளிதழுக்கு கமல் அளித்துள்ள பேட்டியில், "இப்போது எனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப் படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதலில் தலைவன் இருக்கிறான் என்றுதான் வைத்தேன். இலக்கணப்படி தலைவன் இருக்கின்றான் என்பதுதான் சரியானது.
இது ஒரு பெரிய பட்ஜெட் படம். சர்வதேச சமூகத்தைப் பற்றியதான இந்தப் படம்தான் இப்போது என் மனதை ஆக்கிரமித்துள்ளது.
ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாலிவுட் ஸ்டுடியோ ஒன்றும் இணைந்து தயாரிக்கிறது," என்று கூறியுள்ளார்.
அநேகமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உதவும் எனத் தெரிகிறது.
-
'இது ஒரு மெண்டல் படம்!'-ஒரு ஹீரோயின் அடித்த கமெண்ட்!!
வ குவார்ட்டர் கட்டிங் படம் குறித்து அந்தப் படத்தின் நாயகி லேகா வாஷிங்டன் தனது ட்விட்டர் தளத்தில் அடித்துள்ள கமெண்ட்தான், நீங்கள் மேலே படித்தது!
ஏன் இப்படி?
இந்தப் படத்தைத்தான் பெரிதாக நம்பிக் கொண்டிருந்தார் லேகா வாஷிங்டன். படத்துக்கு செய்யப்பட்ட விளம்பரம் , ரிலீஸ் செய்யப்பட்ட விதம் எல்லாமே அவரது எதிர்ப்பார்ப்பை ஏகத்துக்கும் கிளறிவிட்டிருந்தது.
ஆனால் படத்தில் அவரது காட்சிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டதாம். இடைவேளைக்கு முன் ஒரு காட்சியில் வரும் லேகா, அதன்பிறகு சில காட்சிகளில் வருவதோடு சரி.
தனது ட்விட்டரில் படம் குறித்து இப்படி எழுதியுள்ளார் லேகா:
"வ குவார்ட்டர் கட்டிங் ஒரு மெண்டல் படம். பைத்தியக்கார ஜனங்களைப் பற்றி, ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இது..." என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தயாரிப்பாளர்களைக் கடுப்பேற்றியுள்ளது. ஆனால் படத்தை வாங்கியவர்களோ, "யாரைக் குறை சொல்லி என்ன பயன்...? படத்தை ஒழுங்கா எடுங்கய்யா" என்கிறார்கள் கடுப்புடன்!
-
20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை.
-- தனது 80-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கவிஞர் வாலியின் பேச்சு.
-
-
BREAKING NEWS!!!!!!!!!!!!!!!!!!!
Vijay has changed his style for the tamil Audience. From now on he will please not just his fans but the whole of Tamil Cinema. The first step happens with this change from semi curly hair to straight hair for a song. Check out his striking new hairstyle from his upcoming film Kaavalan at the bottom link.
http://s1182.photobucket.com/albums/...0new%20images/
-
-
Yuvan, Na Muthukumar and Lingusami are now in Malaysia, to write songs for Vettai. :roll: