Originally Posted by rajasaranam
முன்பு ராஜா ஒரு காட்டாறு! வழியில் இருந்தது எல்லாம் ஒதுங்கி கொள்ள 'ஜோ'ன்னு கொட்ற இசையருவி கீழ நின்னு அதை ரசித்தோம். இப்ப நிச்சலனமாய் கடந்து போகும் நதி! மூழ்கிதான் ரசிக்கனும். வேண்டாம் என்பவர்கள் கொஞ்சம் பின்னோக்கி போய் அருவியில் நனைய தடை இல்லை. நதியின் ஆழத்தையும் அமைதியையும் ரசிக்க நினைப்பவர்கள் இங்கு வரவும் தடை இல்லை.
இதில் உயர்வென்ன தாழ்வென்ன? என் அவா சிக்கிரம் அவர் கடலாய் சமுத்திரமாய் மாற வேண்டும் என்பதே. ஒரு பத்து பதினைந்து 'சிம்பொனி'களாவது அமைக்க வேண்டும், என் வாழ்வு தீர்வதற்க்குள் கடலாட வேண்டும்.