ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !
Quote:
ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !
Part 4
இந்த ஓரிஎண்டெஷன்டே வரும் வரை ஒவ்வொரு இரவும் சுடுகாட்டில் விட்டலாச்சாரியாரின் வெள்ளை லெக்கிங்க்ஸ் போட்ட அடுப்புக்குள் கால் வைத்து விறகாக எரிக்கும் ஜெகன்மோகினி பேய்களுக்கு நடுவில் கும்மியடிப்பது போலத்தான்!
ராகிங் கடமையில் கொஞ்சம் கண்ணியமும் கட்டுப்பாடும் உண்டு!! எப்படி என்றால் இரண்டாமாண்டு மாணவர்கள் உச்ச கட்ட வெறியில் எங்களைப் பந்தாடும்போது மூன்றாமாண்டு சீனியர் அந்த வழியே வந்தால் இரண்டாமாண்டு மாணவர் எழுந்து நின்று தனது மரியாதையை தெரிவிப்பார். அது கட்டுப்பாடாம்! மூன்றாமாண்டு பெருசு உடனே எங்களைப் பரிதாபமாக ஒரு லுக் விட்டுவிட்டு 'ம்ம் நடத்துடா மாப்பிள்ளே'என்று விடை பெற்றுக் கொள்வார். அதுதான் கண்ணியமாம் !! இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்ப் போல இப்போதைய பாலா படங்களின் கேரக்டர்களின் மேக்கப்பில்தான் மீசையில்லாமல் அறை குறைக் கரண்டல் கிராப்புடன் ஷர்ட் இன் பண்ணாமல் ஷூ போடாமல் வெறும் பாத்ரூம் செப்பலுடன் ஒரு மார்க்கமான அடையாளத்துடன் திரிந்து கொண்டிருந்தோம்! விடியல் வந்தது!! எங்கள் வாழ்விலும் விடிவெள்ளி முளைத்தது ஒரிஎண்டேஷன்டே வடிவில்!!
பெண்வாசமே இல்லாத கேம்பஸ் ! அதனால் நிகழ்ச்சிகளின் மங்களம் கருதி ஒல்லிப்பிச்சான் வெண்ணை தேக முதலாமாண்டு மாணவர்களுக்கு டிராமாவுக்கு ஆளேடுக்கிறோம் என்ற சாக்கில் பெண்ணாக அரிதாரம் பூசி விடுவார்கள்!! இந்தநாள் எங்கள் கல்லூரி வளாக வாழ்க்கையில் மறக்க முடியாத 'நாங்கள் வயசுக்கு வந்த' டே ! ஆடிடோரியத்தில் விழா ஆரம்பிக்கும் முன்னர் கெட் டுகெதர் Buffet பீஸ்ட் புல்வெளியில்!!
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் ஆசிரியப் பெருந்தகைகளும் எனக்கு ஜெமினி முத்திரை குத்தி அடுத்த நான்கு வருடங்களிலும் முக்கியமான கலை நிகழ்ச்சிகளில் ஏ எம் ராஜா / பிபி ஸ்ரீனிவாஸ் பாடல்களை பாடச்சொல்லி .........ஒரே அன்புத் தொல்லைதான் போங்கள்!!
இன்னொரு நிகழ்ச்சியில் எனது சக நண்பர் ராமசாமி டிஎமெஸ் வாய்சில் என்னுடன் அவள் பறந்து போனாளே பாடும்போது ...ஒரே பேப்பர் அம்பாகப் பறந்து வந்து விழுந்து மேடை நிறைந்தது குப்பையால் .தனிக்கதை! எப்படியோ இந்தக் குட்டித் தீவு வாழ்க்கையில் நான் ஜெமினி வாய்ஸாக செட்டாகி விட்டேன் !!
Quote:
1977ல் எங்கள் பல்கலைக்கழகத்தில் முத்தமிழ் விழாவில் காதல் மன்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விவசாயம் பற்றி அசத்தியடித்த
கதை ..அவருக்கே நான் பாட்டுப்பாடவா பாடிக் காண்பித்தது....வரும் பகுதிகளில்...