-
ஆசிய ஜோதி பற்றி நடிப்புலக ஜோதி:
(பிரதமர் நேருஜி மறைந்த சமயத்தில் வானொலியில் 31.5.1964 அன்று நடிகர் திலகம் விடுத்த இரங்கல் செய்தி)
(சினிமா கதிர் ஜூன் 1964 இதழிலும் வெளியானது)
"உலகத்தில் உள்ள பூசல்களையெல்லாம் ஒழிக்கப் பாடுபட்டார் நேரு. நேருவைப் போன்ற ஒரு மாபெரும் தலைவரைக் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. நான் வெளிநாடு போய் இருந்த போது என்னை வெளிநாட்டார் வரவேற்றார்கள். 'நேரு நாட்டில் இருந்தா வருகிறீர்கள்' என்று கேட்டார்கள். நேருவின் பெருமையை நினைத்து பூரிப்படைந்தேன். நம்மையெல்லாம் தவிக்க விட்டுவிட்டு நேரு மரணமடைந்தார். தாயை இழந்ததைப் போல், தந்தையை இழந்ததைப் போல் நாம் தவிக்கிறோம்; அழுகிறோம்; கண்ணீர் வடிக்கிறோம். நேருவின் கொள்கையைப் பின்பற்றி இந்தியாவைக் காப்பாற்றுவோம்."
இன்று 27.5.2010 அமரர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 46வது நினைவு தினம்.
ஆசிய ஜோதிக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி!
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
பாசத்திலகத்தின் "பாசமலர்" திரைக்காவியத்திற்கு இன்று (27.5.2010) பொன்விழா ஆண்டின் தொடக்கம். அண்ணன் - தங்கைப் பாசம், கூட்டுக்குடும்பத்தின் மகத்துவம், பந்தபாசங்களின் முக்கியத்துவம் போன்ற பாரத புண்ணிய பூமியின் ஆணிவேராக விளங்கும் பாரம்பர்ய பாச உணர்வுகளை உயர்த்திக் காட்டிய உயர்ந்த காவியம் "பாசமலர்". எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், இம்மலர் ஒரு வாசமிகு வாடாமலர்.
"பாசமலர்" பற்றிய தகவல்களுக்கு, புகைப்படங்களுக்கு கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்:
http://www.paasamalar69.webs.com/
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
-
-
hi abkhlabhi i am also from Bangalore, what you said about sai kumar was right, one more information i want to share with all of u in the hub, after NT Passed away he went to chennai to NT house, he was talking with nt family he rquested with kamalamma, that he wanted the CHAPPALS of NT WHICH HE WAS WEARING,
AND HE TOOK THE CHAPPALS AND HE HAS TOLD THEM THAT THIS CHAPPALS ARE IS PRECIOUS THING WHICH HE HAS GOT IN IS LIFE,
WE ARE ALL ARE GREAT TO BE A FANS OF SUCH WONDERFUL HUMAN BEING AND GREATEST ACTOR IN THE WORLD OUR NADIGAR THILGAM
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 27
கே: சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்கள்? (ப.பூலோகநாதன், சென்னை - 1)
ப: நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். எஸ்.வி.சுப்பையாவின் 'காவல் தெய்வத்தில்' இலவசமாகவே நடித்துக் கொடுத்தார். அவர் தன்னடக்கம் நிறைந்தவர்.
(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1969)
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் சார்,
நானும் இதை V.K ராமசாமி அவர்களின் பேட்டியில் படித்திருக்கிறேன் S.V சுப்பையா காவல் தெய்வம் படம் முடித்தவுடன் NT அவர்கள் வேறு ஷூட்டிங்கில் இருக்கும் போது ஒரு டிபன் பாக்சை கொடுத்து உங்களுக்கு பிடித்த டிபன் வைத்திருக்கிறேன் என்று கொடுத்தாராம். NT அவர்கள் பிரித்து பார்த்தால் அதில் பணம் இருந்தது. அதை அவர் வாங்க மறுத்தார் என்று படித்திருக்கிறேன்
-
-deleted due to a hubber's request-
-
-
DEAR KUMARESAN SIR,
HEARTY WELCOME TO OUR THREAD.Even I stay in bangalore in RTnagar area.I have seen you in newspapers in NT and prabhu related functions.Infact I have attended many functions including the one in townhall in 2003 and NT birthday functions which will be held every year in sivanchetty garden area ,prakashnagar area and cottonpet area.I feel very happy to meet you thro' this thread.Expecting many details about NT movies bangalore records.
-
இன்று முதல் புரசைவாக்கம் சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் 125-வது திரைக்காவியமான உயர்ந்த மனிதன் தினசரி மூன்று காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை அனுப்பி வைத்த நண்பர் மோகன்[ரங்கன்] அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
-
சகோதரி சாரதா, திரு.ஜேயார்,
அசத்தல் தகவல்களுக்கு அன்பான நன்றிகள்!
திரு.குமரேசன் பிரபு அவர்களே, "வருக!, வருக!". தங்களது பாராட்டுக்கும், தகவலுக்கும் நன்றி!
அன்புடன்,
பம்மலார்.