அன்பு முரளி சார்,
வணக்கம். தங்களது பெண்ணின் பெருமை பற்றிய ஆய்வுக் கட்டுரை அருமை.சுவாரஸ்யமான அலசல். நன்றி!
இந்தப் படம் வெளிவந்த போது சில விமர்சனங்கள் வெளியாயின என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நடிப்பில் நடிகர்திலகத்தை திருவாளர் ஜெமினி கணேசன் விஞ்சி விட்டார் என்பதே அது.
பொதுவாகவே ஒரு கதாநாயகன் பாத்திரம் அப்பாவியாகவோ அல்லது மனவளர்ச்சி குன்றிய குழந்தை போன்றோ அமைந்து விட்டால், வெகு சுலபமாக மக்கள் மனதில்[ நடிப்புத் திறமை ஓரளவு இருந்தால் கூட போதும் ]
நுழைந்து விட முடியும். அது அந்தக் கேரக்டரின் தன்மை. அதற்கு எதிர் மறையாக அந்த அப்பாவி கதாநாயகனை கொடுமைப் படுத்தும் வில்லன் ரோலில் ஒரு நடிகர் மக்கள் மனதில் கோலோச்சுவது மிக மிகக் கடினம். அதை இந்தப் படத்தின் மூலம் செய்து காட்டியவர் நடிகர் திலகம் அவர்கள்.
நடிகர் திலகத்தின் அசுர வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் செய்த பிரச்சாரம் தான் அது. தன் முதல் காவியமான பராசக்தியிலேயே நடிப்பின் சிகரங்களைத் தொட்டவர் அவர். ' இமேஜ் ' என்ற வளையத்துக்குள் சிக்காமல், முதல் படத்திலேயே ஹீரோ, உடனே 5- ஆவது படத்திலேயே முழு வில்லன் என்று ஆரம்ப கால கட்டங்களிலேயே அதை உடைத்தெறிந்தவர். சூரியனை ஒரு கை கொண்டு மறைக்க முடியுமா?
பின்னாட்களில் திரு.ஜெமினிகணேசன் அவர்கள் மாடர்ன் தியேட்டேர்ஸ் தயாரிப்பில்' வல்லவனுக்கு வல்லவன்' என்ற திரைப் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.