iyakkunar thilagam was k.s.gopalakrishnan of karpagam fame. K balachandar is iyakkunar sigaram.
Printable View
iyakkunar thilagam was k.s.gopalakrishnan of karpagam fame. K balachandar is iyakkunar sigaram.
In this film too Devika is so beautiful and goodlooking. Sparkling eyes. All her acting scenes with SivajiGanesan thruout the film will be more
enjoyable. Her solosong in " Kallamalar Sirippile" is so lovely to watch. She simply excels Sarojadevi in acting in this film. . .
As most of the people might have known, Thiruvilayadal has been released. To tide over a legal stalemate, APN's son had chosen the path of screening it so that the prayer of the other party for staying the release of the digital version becomes what they call in legal parlance as infructious [not sure about the spelling](ie) as inappropriate or not maintainable as the screening had already been done and continues.
Forgetting all these legal tangles and without taking sides of who is right and who is wrong our only concern is the film should not suffer as it has the potential to do wonders in theatres across TN and outside.
I had been to today's evening show and well I came back fully soaked with nostalgia. The digital version as for as I could see had not been screened and only the scope version done in the Qube format has been screened. The print quality is so nice and if one goes by the yard stick of Karnan restoration this is miles ahead. The Kailasam set, the Durbar and the Himalayan mountains simply glitter in all glory. The work that has gone into such things and that too some 47 years ago is amazing. Hats off to APN and art director Ganga.
The Songs that are immortal are a treat to watch and audience simply lapped it up. Listening to KBS, T.R.Mahalingam, Seerkazhi, Balamurali Krishna, PBS, SJ and of course the greatest musical pair of TMS and PS was heavenly. Especially the last episode where the top songs drop in one after another, the crescendo that started up with Oru Naal Podhumaa began to build up with Isai Thamizh (அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ), went on a rollicking pace with Paarthal PAsumaram and yes no prizes for guessing, it hit the roof during Paatum Naane.
What one can say about the one and only actor? Right from ஈசனடி போற்றி to ஆணாகி பெண்ணாகி நின்றானவன், it was a visual treat. Watching his body language more than anything else today, was reminded of the recent comment of Thilak on the other day [not verbatim] saying that no other actor on screen had ever made the audience so spell bound.
For me the அங்கம் கறை புரண்டு அருவாளில் நெய் பூசி and then the immortal Paatum Naane were goose bump stuff. The entire thing about this man can be surmised in two lines from this movie. If ஆடல் கலையின் நாயகன் நானே gives him the exalted place in the world of actors, the climax lines of KBS is the perfect icing on cake.
நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்.
Hope all issues get solved and the entire தமிழ் கூறும் நல்லுலகம் gets to watch the movie.
Dedicating this to the birthday boy of the day Rakesh and the person who would give her right hand for this movie - Prabha.
Regards
I really was amazed at the way Sivaji had adapted Yul Brynner's Gait from " The Magnificent Seven" , for his sivaperumAn's walk at the beach courting pArvathi, in thiruvilaiyaadal!
:ty: Murali for the instant report :D
can't wait to watch on the big screeen.... am very sure that given proper promotion, this would be a greater hit than Karnan, considering the palatability of the subject.
usual question to Murali: When will we be gifted in Malaysia? :D
உயர்ந்த மனிதன்-பகுதி-4
NT யின் நடிப்பு பரிமாணங்களை அலசும் போது ,இந்த படத்தில் மறக்க முடியாத இன்னொரு புது பரிமாணம், சத்யாவுடன் அவருக்கு develop ஆகும் உறவு. பல படங்களில் இந்த மாதிரி உறவுகள் வரும் போது pre -Emptive & Prevailing mood பாணியிலோ அல்லது விரோத அடிப்படையிலோ தான் பிளாட் development premise ஆக இருக்கும். இந்த படத்திலோ முற்றும் புது பரிமாணம். அதை சிவாஜி ஆண்டிருக்கும் விதம் ஒரு தனி சுவை. ஒரு வெகுளி தனமான ,rawness கொண்ட படிப்பறிவில்லா ஒரு பையன் மேல் ஒரு soft -corner என்பதற்கு மேல் செல்ல மாட்டார். முதல் முறை பார்க்கும் போது சாதா அறிமுகம், டாக்டர் சிபாரிசில் வேலை என்பதுடன் , மற்ற படி எந்த ஒரு கவனிப்பும் காட்ட மாட்டார். சத்யன் ஆங்கிலம் தெரியாமல் ,விமலாவுடன் மாட்டி கொண்டு முழிக்கும் காட்சியில் ஆகட்டும், பிறகு சம்பளத்தை கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் காட்சியில் ஆகட்டும்(முதலில் அம்மாவிடம் என்பார்) ,ஒரு செல்லமான தோரணையில் ஒரு நல்ல ரெண்டுங்கெட்டான் வேலை கார பையன் என்ற அளவிலேயே நிற்கும். அம்மா படத்திற்கு நேர்ந்த அவமானத்தை சகிக்காமல்,சத்யம் விலக விரும்பும் காட்சியில் கூட டாக்டரிடம் ,முதல்லே அவனுக்கு புத்தி சொல்லு என்று பொறுப்பை டாக்டரிடம் கொடுப்பார். டாக்டர் குடித்து விட்டு நிதானம் இழக்கும் காட்சியிலும் ,வேலையாளாய் தான் நடத்தி வெளியேற சொல்வார். ஆனால் டாக்டரின் மரணத்திற்கு பிறகான வெற்றிடத்தில்,சத்யனின் பிரத்யேக அக்கறை தன்மையிலும்,retire ஆன மாணிக்கம் என்ற முதிய வேலையாளின் வேண்டுகோள் படியும் துளி அக்கறையும் , நெருக்கமும் கூடும் வெகு இயல்பாக. அந்த சாப்பிடும் காட்சி ஒரு கவிதை. பிறகு கூட மனைவியின் தலையீட்டில் சத்யன் பாதிக்க படும் போது ஓவர்-ரியாக்ட் செய்யாமலே அன்பை விளக்குவார்.
விமலாவுடன் வரும் வெடிக்கும் காட்சியில்(வசனப்படியே கட்டுபடுத்தி வைத்திருந்த எரிமலை) கொஞ்சம் ஏமாற்றம்.வழக்கமான NT பாணி முத்திரைகளுடன் கூடிய சாதாரண சீற்றமாய் வெளிப்படும்.அது வரை படத்தில் வெளிப்பட்ட இயல்புத்தன்மை சிறிது தடம் புரளும். அந்த காட்சியில் நான் எதிர்பார்த்த நடிப்பு, நெருப்பில் தன மனைவியை காப்பாற்ற தவறி ,பொய் வாழ்கை வாழும் ஒருவனின் ,inhibition துறந்த சீற்றம்.Incoherent ஆய் துவங்கி,கோபமாய் வெடித்து,நிலை உணர்ந்து படி படி யை அடங்க வேண்டிய காட்சி. வசன கர்த்தா,இயக்குனர்,நடிகர் எல்லோருமே ஓரளவு இந்த சறுக்கலுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் follow thru காட்சியில் நடிப்பு தெய்வம் நிலைமையை சீர் செய்யும். கோபம் சிறிதே அடங்கி,சோபாவில் கால் போட்டிருக்கும் போது ,சமாதானமாய் shoe அவிழ்க்க வரும் வரும் மனைவியிடம் பிணக்கமுற்ற சமாதான கோடி காட்டும் அந்த சிறிய கால் மாற்றும் gesture கோடானு கோடி கதை பேசி விடும்.
(தொடரும்)
Great pick Gopal,S. :thumbsup:
:exactly: Well observed.
It's been a while since I saw this movie so I am not sure if one particular thing was dialogued or not.
The undercurrent in the doctor's grouse is about Rajalingam's privilege. A privileged man can do as he he pleases.
It's not like the doctor feels his love was true and deep and his friend's was a passing fancy, to which he had to bow. His annoyance is that his friend was not sufficiently awake to the reality that his father would not let him stoop below his social station. How can he just claim innocent ignorance? He never forgives him for being spineless at that moment.
One would imagine he is also filled with self-hatred for his own failures - first failure to stand by his love instead of yielding to his friend through some misplaced instincts of nobility. And next for failing to save her.
But strange are the ways of memory that finally entire rage channels itself on Rajalingam. After all self-pity is more desirable than self-hatred. What a nuanced character! No wonder Sivaji wanted to play this role.
உயர்ந்த மனிதன்-பகுதி-5
விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.
அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று
உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை
விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்
வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில்
வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.
நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம்
வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!
அடுத்த காட்சியில் அவர் வா க்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து
அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை
அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து
சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.
கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....
(தொடரும்)