இந்த வார ஜூனியர் விகடன் - கேள்வி பதில்
-----------------------------------------------------------------------
http://i61.tinypic.com/30ww9ir.jpg
http://i60.tinypic.com/11tnzop.jpg
Printable View
இந்த வார ஜூனியர் விகடன் - கேள்வி பதில்
-----------------------------------------------------------------------
http://i61.tinypic.com/30ww9ir.jpg
http://i60.tinypic.com/11tnzop.jpg
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தின் திருப்பூர் மாவட்ட ஆலோசகர் திரு. சேமலையப்பன் அவர்களின் மகள்
திருமணம் வரும் திங்கள் அன்று (15/09/2014) திருப்பூர்
அம்மாபாளையத்தில் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மாலை (14/09/2014) நடைபெறுகிறது.
பெருந்திரளான எம்.ஜி.ஆர். பக்தர்கள் திருமண விழாவில்
கலந்து கொள்கின்றனர்.
திருமண அழைப்பிதழின் தோற்றம் நமது நண்பர்களின்
பார்வைக்கு.
http://i61.tinypic.com/e0iem8.jpg
புதுச்சேரி நியூ டோனில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாகவும்,இயல்பாகவும்
நடித்த , நாகிரெட்டியின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான
"எங்க வீட்டு பிள்ளை " ஒரு வருட இடைவெளியில் மீண்டும்
வெள்ளி திரைக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி.
கடந்த வெளியீட்டின்போது நானும், நண்பர்கள் சி.எஸ். குமார், சுந்தர், பாபு, ஹயாத் மற்றும் பல நண்பர்களுடன் மாலை காட்சி கண்டுகளித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது .
இந்த செய்தியை பதிவு செய்த திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி.
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
ஊஞ்சல் விளையாடும் கவின்மிகு காதல் கானங்கள்.
https://www.youtube.com/watch?v=5kcvzgXGD_Y
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளிவந்த செய்தி.
http://i61.tinypic.com/2ekrv3o.jpg
http://i58.tinypic.com/mb7hgw.jpg
http://i61.tinypic.com/a0vwus.jpg
நன்றி:தமிழ் இந்து .
15.9.1972
MAKKAL THILAGAM MGR IN ''ANNAMITTA KAI '' 43RD ANNIVERSARY
http://i62.tinypic.com/k12r8p.jpg
சென்னை - பிரபாத் திரை அரங்கின் உரிமையாளர் தயாரித்த படம் . 1966ல் துவங்கிய படம் . நீண்டநாள் தயாரிப்பில் இருந்து வெளி வந்த படம் . மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .திரை இசை திலகம் இசை அமைப்பில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகத்தின் பாசமிகு நடிப்பு - சண்டை காட்சிகள் - பாடல்கள் சிறப்பாக இருந்தன ,
டைட்டில் கார்டில் முதல் முறையாக ''பாரத் '' எம்ஜிஆர் என்ற பட்டத்துடன் காண்பிக்கப்பட்டது .
உழைப்பாளர்களின் உயர்வை பற்றி சித்தரித்த படம் .
http://i61.tinypic.com/11scupw.jpg
மக்கள்திலகம் காவியங்கள் மிக அதிக முறைகள் மறு வெளியீடு கண்ட ஊர்களில் டெல்டா பகுதிகளின் நாடு நாயகமாய் விளங்கும் மன்னார்குடி-யும் ஒன்று...ஒவ்வொரு காவியமும் சாதாரணமாக 10- 30 எனும் அளவில் திரையிடப்பட்டு திரைப்பட விநியோஹச்தர்களுக்கும், திரை அரங்கு உரிமையாளர்களுக்கும், படம் எடுத்து திரையிடும் mediator -களுக்கும் நல்ல லாபத்தை வழங்கினார் மக்கள்திலகம்...
கோவை இடைதேர்தல் நேரம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நானும், திரு கே.ஏ,கிருஷ்ணசாமி அவர்களும்...
http://i1170.photobucket.com/albums/...ps17f77273.jpg
Congratulation loganathan sir for valuable 3000 posts
congratulations thiru loganathan sir .
Super 3000 postings in short period.
1972இல் வெளியிடப்பட்டது. எம்ஜிஆர், நம்பியார், மனோகர், ஜெயலலிதா, பாரதி, வி.கே. ராமசாமி, நாகேஷ், மனோரமா நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசை. வாலி எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
பாடல்கள் மோசம் இல்லை.
“அன்னமிட்ட கை” எம்ஜிஆரின் தத்துவப் பாட்டுக்களில் ஒன்று. டிஎம்எஸ்ஸின் குரலில் நல்ல உற்சாகம் இருக்கும். பாட்டைக் கேட்டவுடன் வாலி எம்ஜிஆருக்காக எழுதியது என்று சொல்லிவிடலாம்.
“ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு” ஒரு சுமாரான பாட்டு. டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் கோட்டு சூட்டு டையுடன் பாடுவார். எம்ஜிஆர் தன் டூயட்டுக்களுக்கு ஒரு ஃபார்முலா வைத்திருந்தார். செட் போட்டு எடுத்தால் ஒன்று கோட்டு சூட்டு டை. இல்லாவிட்டால் ராஜ ராணி உடை. வெளிப்புற படப்பிடிப்பு என்றால் கோட்டு சூட்டு. அப்போதுதான் ரிச்சாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.
“மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு” பாரதியும் எம்ஜிஆரும் பாடும் டூயட். டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் தன் ரசிகர்களை கவர்வதற்காக ராஜா உடையில் வந்து பாடுவார். பாரதி ஒரு அழகான நடிகை. தமிழில் ஏன் பெரிய கதாநாயகியாக வரமுடியவில்லை என்று தெரியவில்லை. அவரது குரலில் வேற்று மாநில வாடை அடிப்பதாலோ என்னவோ?
“அழகுக்கு மறு பெயர் கண்ணா” நல்ல பாட்டு. இந்த ஒரு பாட்டு மட்டும் டிஎம்எஸ் எஸ். ஜானகி குரலில். ஜெ அப்போதெல்லாம் இன்று இருப்பது போல் குண்டாக இல்லை. அதற்காக அவருக்கு “நூலிடை” என்றெல்லாம் சொல்லக்கூடாது!
“பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா” என்றும் ஒரு பாட்டு உண்டு.
எம்ஜிஆர் நடித்த கடைசி கறுப்பு வெள்ளை படம் என்று ஞாபகம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்தது. சில காட்சிகள் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டவை. அவரது குரல் மாறுபாடு தெரிகிறது.
கதை வழக்கம் போல் முதல் காட்சியிலேயே யூகிக்கக்கூடிய ஒன்றுதான். எம்ஜிஆரும் நம்பியாரும் மாற்றாந்தாய் மக்கள். எம்ஜிஆர் உரிமை உள்ள (இளைய) வாரிசு. அப்பாவின் தவறான பழக்கங்களால் எம்ஜிஆர் அவரை பிரிந்து தாத்தா வீட்டில் வளர்வார். நம்பியார் எங்கோ ஓடிப்போய் வளர்வார். முதலாளியாக எப்போதுமே இருக்க விரும்பும் நம்பியாருக்கு தியாகியான எம்ஜிஆரிடம் கொஞ்சம் பயம் இருக்கும். கைவிடப்பட்ட நம்பியாரின் அம்மா பண்டரிபாய் குருடி. இறந்துபோனதாக கருதப்படும் அப்பா உயிரோடுதான் காடுகளில் சுற்றிக்கொண்டிருப்பார். மனோகரின் சூழ்ச்சி, பாரதியின் ஒரு தலை காதல், நம்பியாரின் பணத்தாசை எல்லாவற்றையும் சமாளித்து ஜெயை காதலித்து எஸ்டேட் தொழிலாளர்களின் தலைவனாகி, பெரியம்மா பண்டரிபாய்க்கு மீண்டும் கண் கொடுத்து, நம்பியாரை திருத்தி அப்பப்பா! புரட்சித் தலைவரால்தான் முடியும்!
பாரதி அழகாக இருக்கிறார். “அவளுக்கென்று ஒரு மனம்” படத்திலும் நன்றாக இருப்பார்.
நகைச்சுவை பகுதி சுமாராக இருந்தது. நாகேஷும் மனோரமாவும் வி. கே. ராமசாமியும் தமிழ் சினிமா பாட்டுக்களை பாடியே காதல், காதலுக்கு அப்பாவின் எதிர்ப்பு, அப்பாவுக்கு காதலர்கள் எதிர்ப்பு எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்கள். தமிழில் எல்லாத்துக்கும் பாட்டு இருக்கிறது!
படத்தில் சிம்பாலிக் டயலாக் ஜாஸ்தி. உதாரணத்துக்கு ஒன்று. எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக நினைக்கும் பாரதி அடுப்பங்கரையில் கன்னத்தில் கொஞ்சம் கரியோடு இருக்கும் ஜெயிடம் எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக சொல்வார். அதை கேட்டவுடன் ஜெ கையில் இருக்கும் பாத்திரத்தை தவறவிட்டுவிடுவார். அப்போது டயலாக்குகள்.
பாரதி: என்னாச்சு?
ஜெ: கை தவறிடுச்சு.
பாரதி: நீ ஜாக்கிரதையா வச்சிருந்திருக்கணும்
ஜெ: ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன், அப்படியும் தவறிடுச்சு.
பாரதி: பரவாயில்லே, நான் எடுத்துக்கிறேன்.
ஜெ: எனக்கு அடுப்பில் வேலை இருக்கு, அப்புறம் பேசலாம்.
பாரதி: முகத்திலே கரி, துடைச்சுக்கோ!
Courtesy - net
எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எவருக்கும் எங்கள் ஊரில் ரசிகர்கள் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. ஏக பிரநிதித்துவக் கொள்கை. 1979ல் யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சியும் டெக்கும் அறிமுகமாகி கிராமங்கள் தோறும் திருவிழாவாக அது கொண்டாடப்பட்டபோது ‘அண்ணன் ஒரு கோயில்’ என்ற சிவாஜியின் படமே முதன் முதலாக எல்லா இடங்களிலும் காண்பிக்கப்பட்டது. அப்போது வேறு படப் பிரதிகள் புழக்கத்திலில்லை. நாங்கள் காத்திருந்து ‘மீனவ நண்பன்’ என்ற எம்.ஜி.ஆரின் படத்துடன்தான் மாதா கோயில் பெருநாளில் எங்கள் ஊரில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தினோம். அப்போது காலையில் எழுந்ததும் உத்தரியமாதா, அந்தோனியார் இவர்களுடன் சேர்த்து எம்.ஜி.ஆரையும் வணங்கும் பழக்கம் எனக்கிருந்தது.
அப்போதெல்லாம் இந்தியாவில் படம் வெளியாகி நான்கு, அய்ந்து வருடங்களுக்குப் பிறகுதான் இலங்கையில் படம் வெளியாகும். அப்படியும் எம். ஜி. ஆரின் ‘சங்கே முழங்கு’, ‘பட்டிக்காட்டு பொன்னையா’ என்ற இருபடங்களும் கடைசிவரை இலங்கையில் வெளியாகவேயில்லை. படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்னமே தியேட்டரில் படத்தின் சுவரொட்டியும் படத்தின் நான்கைந்து ஸ்டில்களும் ஒட்டப்படடிருக்கும்; அந்த ஸ்டில்களையும் சுவரொட்டியையும் வைத்தே நான் எனக்குள் அந்தப் படத்தைக் கற்பனை செய்துகொள்வேன். அப்போது படக்கதை சொல்வது என்றொரு அருமையான பழக்கமிருந்தது. வெறும் நான்கு ஸ்டில்களைப் பார்த்ததை வைத்துக்கொண்டே நான் என் பள்ளிக்கூடச் சிநேகிதர்களுக்கு முழுநீளப் படக்கதையும் சொல்வேன். படம் வெளியாகும்போது பார்த்தால் நான் சொன்ன கதை கிடடத்தட்டச் சரியாகவேயிருக்கும். ‘ராமன் தேடிய சீதை’ மட்டும்தான் கொஞ்சம் மிஸ்ஸாகி விட்டது. சுவரொட்டியிலும் ஸ்டில்களிலும் எஸ்.ஏ.அசோகன் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்ததால் அசோகனுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது எம்.ஜி.ஆரும் சக்கரநாற்காலியில் அமர்ந்துதான் சண்டையிடுவார் என நான் நினைத்திருந்தேன். இதற்கு ஒரு முன்னுதாரணமும் இருந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு காலில்லாத அசோகனுடன் எம்.ஜி.ஆரும் ஒருகாலைக் கட்டிக்கொண்டுதான் சண்டையிடுவார். ஆனால் இந்தப்படத்தில் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்த அசோகன் கடைசிக் கட்டத்தில் சக்கர நாற்காலியிலிருந்து துள்ளியெழுந்து இருகால்களையும் ஊன்றி நின்று சண்டை போடுவார் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
‘ஒளிவிளக்கு’ இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். ‘நாளைநமதே’ ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே ‘கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து’ என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும்.
எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு ‘அண்ணா சனசமூக நியைம் ‘என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை நீக்கிவிட்டு ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் புதிதாகப் பெயரிட்டோம். அந்த வாசகசாலைக்கும் நாங்கள் நடத்திவந்த எம்.ஜி.ஆர் கலாமன்றத்துக்கும் பரிமளகாந்தன் தான் தலைவர்.
எம்.ஜி.ஆர் கலாமன்றத்திலிருந்த நாங்கள் எல்லோரும் விடலைகளாகவேயிருந்தோம். பரிமளகாந்தன் மட்டுமே எங்களில் வயதில் மூத்தவர். பரிமளகாந்தனுக்கு அப்போதே முப்பது வயதுக்கு மேலிருக்கும். எங்கள் ஊர் கிராமசபைக் கட்டடத்தில் அவர் இரவு நேரக் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். எம்.ஜி.ஆர் போலவே பரிமளகாந்தனுக்கும் குழந்தைகள் கிடையாது. பரிமளகாந்தன் எம்.ஜி. ஆருக்கு ரசிகர் என்றால் பரிமளகாந்தனின் மனைவி பரிமளகாந்தனுக்கு ரசிகை. மாலைநேரங்களில் இரண்டுபேருமாகச் சோடிபோட்டுக்கொண்டு கையில் தேநீர் குடுவையுடன் கடற்கரைக்குப் போய் மணலில் உட்கார்ந்திருப்பார்கள். கடற்கரைக்குப் போய்க் காற்று வாங்கும் பழக்கமெல்லாம் எங்கள் ஊரில் அப்போதும் கிடையாது, இப்போதும் கிடையாது. இவர்கள் ஏன் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று எங்கள் ஊர்ச் சனங்களுக்குக் கடைசிவரை விளங்கவேயில்லை. பரிமளகாந்தனின் வீட்டில் பக்கத்துக்குப் பக்கம் எம்.ஜி.ஆரின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். எல்லாப் படங்களுக்கும் நடுவாக அறிஞர் அண்ணாவின் படமும் மாட்டப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் படங்களின் பாடல் புத்தகங்கள் அழகாக பைன்ட் செய்யப்பட்டு அவரிடமிருந்தன.
எங்கள் எம்.ஜி.ஆர். கலாமன்றத்தால் ‘காதலா கடமையா’, ‘விமலாவின் வாழ்வு’, ‘பெண்ணின் பெருமை’, ‘இரு துருவங்கள் இணைந்தபோது’ போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. எல்லா நாடகங்களிற்கும் பரிமளகாந்தன்தான் கதை, வசனம், டைரக்சன். ‘பெண்ணின் பெருமை’ நாடகத்தில் நீதிதேவதை பாத்திரத்தில் பரிமளகாந்தன் தன் மனைவியை நடிக்க வைத்தார். எங்கள் கிராமத்திலெல்லாம் கல்யாணமான ஒரு பெண் மேடையில் ஏறி நடிப்பதைக் கற்பனை செய்யவே முடியாது. ஆனால் பரிமளகாந்தனின் மனைவி நடித்தார்.
நாடக விழா கேள்விப்பட்டிருப்பீர்கள். நாடகம் போடுவதையே விழாவாகக் கொண்டாடுவதை நீங்கள் எங்கள் ஊரில்தான் பார்க்க முடியும். பரிமளகாந்தன் நாடகம் எழுதும்போதே எங்கள் மன்றத்திலுள்ள எல்லோருக்கும் பாத்திரங்களை உருவாக்கித்தான் எழுதுவார். ஒத்திகை அவர் வீட்டில்தான் நடக்கும். அவரின் மனைவி கணவரின் முகத்தையே பூரிப்போடு பார்த்தவாறிருப்பார்.
அநேகமாக மாதா கோயில் பெருநாள் அல்லது அம்மன் கோயில் திருவிழா இரவில் நாடகம் மேடையேறும். நாடகத்தில் நடிப்பவர்களின் வீட்டில் அன்று பெருவிழாவே நடக்கும். “எங்கிட மகன் நாடகம் நடிக்கிறான், நீங்கள் கட்டாயம் வரவேணும்” என்று அயலூர்களிலுள்ள உறவினர்களுக்கெல்லாம் அழைப்புப் போகும். நாடகத்தின் ஒரு பாத்திரம் மேடையில் தோன்றும்போது அந்த நடிகனின் உறவினர்கள் பட்டாசு வெடிப்பார்கள். சரவெடி தூள் பறக்கும். மேடையில் மன்னாதி மன்னன் தோன்றும்போதும் வெடிதான், வில்லன் தோன்றும்போதும் வெடிதான், துறவி தோன்றும்போதும் வெடிதான். அநேகமாக நாடகத்தின் கடைசிக் காட்சியில் பொலிஸாக நடிக்கத்தான் எங்கள் பொடியன்கள் விருப்பப்படுவார்கள். பொலிஸ் யூனிபோர்மும் சப்பாத்துகளும் அணிந்து மிடுக்காக நடிப்பதில் அவர்களுக்கு ஒரு விருப்பம். ஒத்திகை தொடங்குவதற்கு முன்பே அவர்கள் சீருடைகளைத் தயார் செய்து விடுவார்கள். அநேகமாக எங்கள் ஊர் தபால்காரரின் மற்றும் நுளம்புக்கு மருந்தடிப்பவரின் காக்கிக் காற்சட்டைகளையும் மேற்சட்டைகளையுமே அவர்கள் இரவல் வாங்குவார்கள். ஒத்திகைக்கு வரும்போதே காக்கிச் சீருடை தரித்துக் கையில் பெற்றன் பொல்லுகளுடன் மிடுக்காக வருவார்கள். நாடகம் நடத்தும் நாள்வரை அவர்கள் அந்த உடைகளுடனேயே ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
Courtesy - ilankai shoba sakthi -net
ஒளிவிளக்கு’ இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். ‘நாளைநமதே’ ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே ‘கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து’ என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும்.
எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு ‘அண்ணா சனசமூக நியைம் ‘என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை நீக்கிவிட்டு ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் புதிதாகப் பெயரிட்டோம். அந்த வாசகசாலைக்கும் நாங்கள் நடத்திவந்த எம்.ஜி.ஆர் கலாமன்றத்துக்கும் பரிமளகாந்தன் தான் தலைவர்.
super posting vinodh sir
watch the clipping from 2.45 onwards my favourite scene in annamitta kai
http://www.youtube.com/watch?v=WEizTAy_BK8
மக்கள் திலகத்தின் பாசமிகு நடிப்பு - சண்டை காட்சிகள் - பாடல்கள் சிறப்பாக இருந்தன ,
டைட்டில் கார்டில் முதல் முறையாக ''பாரத் '' எம்ஜிஆர் என்ற பட்டத்துடன் காண்பிக்கப்பட்டது .
watch the clipping from beginning thalaivar title showing bharath mgr and puratchi nadigar
first 15 minutes short shooted before 1967
http://www.youtube.com/watch?v=CUsXEBL6Y5E
Today morning sunlife channel telecasted enthangai @ 1100 hrs
Anna - 106th birth day - 15-9-2014
காஞ்சீபுரம் நகரின் நாயகனின் 105வது பிறந்த நாள்
15-9-2014 நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின் ஆசான் அண்ணாவின் பிறந்த நாள் பதிவு .
உலக வரலாற்றில் புகழ் பெற்ற தலைவர்களின் நமது அண்ணாவும் ஒருவர் என்பதில் மிகவும் பெருமை . காஞ்சியிலே பிறந்த அண்ணா அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் - சீர் திருத்தங்கள் - சமுதாய மாற்றங்கள் -என்று ஒரு மாநிலத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்ற பெருமை அவருக்கு சேரும் .
அவர் உருவாக்கிய தம்பிமார்கள் தலைவர்களாக உயர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளார்கள் . தன்னுடைய பேச்சு திறமையாலும் , அன்பாலும் , சிறந்த ஆளுமையாலும்
திமுக என்ற இயக்கத்தை கட்டி காத்தார் . அண்ணா அவர்கள் திறமையானவர்களை மதித்து கட்சி பொறுப்புகளை தகுதியானவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்தார் .
எளிமையான வாழ்க்கை நடத்தி , தன்னுடை இனிய குடும்பத்திற்கு வறுமையை தந்து விண்ணுலகம் சென்ற மாமேதை .
1953ல் அண்ணாவின் கொள்கைகள் - அணுகுமுறை - தமிழ் பற்று மீது மக்கள் திலகமும் ஈடுபாடு கொண்டு அண்ணாவை தன்னுடைய தலைவராக ஏற்று கொண்டு திமுக இயக்கத்தின் பிரகடனங்களை தன்னுடைய படங்கள் மூலம் பாடல்கள் - காட்சிகள் - உரையாடல்கள் மூலம்
அண்ணாவின் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்த பெருமை எம்ஜிஆரை சேரும் .
1969 அண்ணா மறைவு வரை மக்கள் திலகம் அவர்கள் ''காஞ்சி தலைவனின் '' அன்புக்கும் பாசத்திற்கும் உரியவராக திகழ்ந்தார் .
WATCH THE CLIPPINGS FROM 15.32 TILL END WHAT A PERFORMANCE GIVEN BY OUR NATURAL ACTOR MAKKAL THILAGAM
http://www.youtube.com/watch?v=U5ze_jkbY-M
அமெரிக்க பல்கலைக்கழகத்திலே அறிஞர்களும் மாணவர்களும் கூடியிருந்து, ‘‘because (ஏனெனில்) என்ற வார்த்தை 3 முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்லுங்கள்’’ என்று கேட்டு நீண்ட வாக்கியத்தை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்க, ‘‘No word can begin with because, because, because is a conjunction’’ என்று பதிலளித்து 11 வார்த்தைகளில் அவர்கள் கேட்ட வார்த்தையை 3 முறை கொண்டு வந்து அறிஞர்களை வியப்பிலாழ்த்திய பேரறிவாளரும்...
அதைத் தொடர்ந்து a,b,c,d என்ற 4 எழுத்துக்களும் வராமல் 100 வார்த்தைகளை உங்களால் சொல்ல முடியுமா? என்று அடுத்த கேள்வியை அவர்கள் கேட்க, இதழிலே புன்னகை நெளிய சற்று சிந்தித்து சரியாக 7 வது விநாடியில் one, two, three...யில் ஆரம்பித்து ninety nine வரை சொல்லி நிறுத்தி, சிறிது இடைவெளி விட்டு stop என்று முடித்த நுண்மான் நுழைபுலம் மிக்கவரும்......
முதல்வராக இருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய பின், சட்டப் பேரவைக் கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் , கேட்போர் அதிர்ச்சியடையும் வகையில், ‘‘Your days are numbered’’ என்று ஆவேசமாக கூறியபோதும் புன்னகை மாறாமல், நிதானம் இழக்காமல் ‘‘My steps are measured’’ என்று பதிலிறுத்த பெருந்தகையாளரும்....
‘‘அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்’’ என்பதற்கேற்ப அன்பு, அறிவு, ஆற்றல், திறமை, எளிமை, நேர்மை, பொறுமை, அடக்கம் போன்றவற்றை தனது குறு உருவத்துக்குள்ளே அடக்கியவரும்....
பேராசிரியர் கல்கியால் தென்னாட்டு பெர்னாட் ஷா என்றும் பகுத்தறிவாளர்களால் இந்நாட்டு இங்கர்சால் என்று போற்றப்பட்டவரும்...
குடும்பத்தையே கட்சியாக்கி தன் மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் மத்தியில், கட்சியையே ஒரு குடும்பமாக்கி நாட்டு மக்களுக்கு உழைத்தவரும்....
அறிவுலக மேதையும், ஏழைகளின் ஏந்தலாம் நம் தெய்வத்தின் தெய்வமுமான பேரறிஞர் அண்ணா பிறந்த நன்னாளில் அவர் வழியில் அயராது பணியாற்ற உறுதியேற்போம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
3,000 முத்தான பதிவுகள் இட்ட திரு. லோகநாதன் சாருக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் பதிவு பதிவு 15.09.2014
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா -
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!