http://i60.tinypic.com/jfay9w.jpg
Printable View
இன்று காலை 6 மணி முதல் ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.நடித்த
"ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகி வருகிறது
http://i57.tinypic.com/2ns70uh.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிடல் பிளசில் புரட்சி நடிகர் / மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "மாட்டுக்கார வேலன் " ஒளிபரப்பாகிறது.
http://i60.tinypic.com/16a1b21.jpg
மக்கள் திலகத்தின் ''ஆசைமுகம் '' படம் வெளி வந்து 49 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் திரை அரங்கினில் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம் . தகவல் தந்த திரு ரவிச்சந்திரன்
அவர்களுக்கு நன்றி .
சென்னை - பாடி - சிவ சக்தியில் மக்கள் திலகத்தின் 100 வது காவியம் ஒளிவிளக்கு - தகவல் மற்றும் விளம்பரங்கள் பதிவிட்ட திரு சுந்தர் , திரு லோகநாதனுக்கு நன்றி .
NOW ON JAYA MOVIE - THALAIVAN
https://www.youtube.com/watch?v=ssC0vTtNKNo
Today onwards
at coimbatore
delite theatre
kumarikkottam
https://www.youtube.com/watch?v=s8XCUBoJ1jk
Please watch from 17:13 onwards.
http://i57.tinypic.com/10yf044.jpg
‘ஒத்தையா? மொத்தமா?
எத்தனை பேர் வாரீங்க?’
இந்தியா இலங்கை இடையே கடற்பகுதியில் அமைந்திருக்கும் பல தீவுகளில் ஒன்றுதான் புங்குடு தீவு. அந்த தீவைச் சேர்ந்த செல்லையா என்பவருக்கும் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி அவர்களது அன்பில் விளைந்தது ஒரு மழலை. கொஞ்சம் வளர்ந்து சிறுவனானதும் யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ராணி தியேட்டரில் தலைவர் நடித்த மலைக்கள்ளன் படத்தை பார்த்ததும் அன்று முதல் மனம் முழுவதும் தலைவரை அப்பிக் கொண்டு அவரது ரசிகனான் அந்தச் சிறுவன்.
பின்னர், தமிழகம் வந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்த இளைஞனுக்கு தலைவர் மீது பற்று வளர்ந்த வேகத்தைப் போலவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்தது. நாடகங்களை எழுதி அவற்றில் நடிக்கவும் செய்தார். கலங்கரை விளக்கம், பணமா பாசமா? உள்ளிட்ட படங்களின் கதாசிரியர் ஜி.பாலசுப்பிரமணியன் மூலம் தலைவரின் அறிமுகம் கிடைத்தது.
பச்சையப்பன் கல்லூரி விழாவில் தலைவர் ஒருமுறை கலந்து கொண்டபோது அந்த இளைஞனின் பேச்சு தலைவரை கவர்ந்தது. ஜி.பாலசுப்பிரமணியம் மூலமாக தலைவரை ஒரு படப்பிடிப்பில் அவரது மேக் அப் ரூமில் தனியாக சந்தித்தபோது, தானே முந்திக் கொண்டு அந்த இளைஞனுக்கு வணக்கம் சொன்ன தலைவரின் பண்பும் பணிவும் அடக்கமும் இளைஞனை அவருக்கு மேலும் அடிமைப்படுத்தின. பணிவோடு தலைவரின் கால்களைத் தொட்டு வணங்கி தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டான் அந்த இளைஞன்.
தங்க நிகர்த் தலைவரின் அழகும் நிறமும் ஒளிபொருந்திய அவரது முகமும் கட்டுடலையும் பார்த்ததும் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை குழிதோண்டிப் புதைத்தான்.
‘‘படித்து விட்டு என்ன செய்வதாய் உத்தேசம்?’’......... தலைவர்.
தலைவரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்த பின், நடிக்க விரும்புகிறேன் என்று எப்படி சொல்வது? வெட்கம் பிடுங்கித் தின்றது அந்த இளைஞனுக்கு. ஏற்கனவே நாடகங்களில் நடித்ததோடு, சில நாடகங்களையும் எழுதியிருந்ததால், ‘கதை எழுதுவேன்’ என்றான் இளைஞன்.
‘அப்படியா? ’ என்று கேட்டு மகிழ்ச்சியடைந்த தலைவர் ‘எனக்கு ஒரு கதை கொடுங்களேன்’ என்று அந்த இளைஞனிடம் கேட்க 3 நாட்களில் கதை தருகிறேன் என்று சொல்லி விடைபெற்ற இளைஞன். (விடைபெறுவதற்கு முன் தலைவரின் அன்பான உணவு உபசரிப்பு) 3 நாளில் கதையோடு வந்தான்.
கதை தலைவருக்கும் பிடித்துப் போனது. அந்தக் கதைதான் தலைவர் நடித்து 1966-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் தாமதமாகி பின்னர் 1968-ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரிக் குவித்த வெற்றிப் படமான ஜேயார் மூவிஸின் ‘புதிய பூமி’.
படத்துக்கான கதையைக் கொடுத்த தலைவரின் ரசிகனான, கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு அப்போது வயது 17.
பெயர் ..... வி.சி.குகநாதன்.
‘‘என் திரையுலக வாழ்க்கையில் திரைக்கதாசிரியனாக அங்கீகாரம் அளித்து என் திரையுலக வாழ்க்கைக்கு பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைத்தவர் நான் வணங்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர்’’ என்று பின்னாளில் வி.சி.குகநாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
புதியபூமி படத்தில் தலைவரின் பெயர் கதிரவன். கிராம மக்களுக்கு சேவை செய்யும் டாக்டராக வருவார். புதியபூமி படம் வெளியான நேரத்தில் 1968-ம் ஆண்டு தென்காசி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பெயர் கதிரவன். தேர்தலில் கதிரவன் வெற்றி பெற்றார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
*எல்லாரும் தலைவரை எங்க வீட்டுப் பிள்ளை எனக் கொண்டாடுவதை தலைவரே கூறுவதைப் போல அமைந்த , ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...’ பாடல், மற்றும்,
* சின்னவளை முகம் சிவந்தவளை..
* நான்தாண்டி காத்தி....
* நெத்தியிலே பொட்டு வெச்சு...
* விழியே விழியே உனக்கென்ன வேலை....
போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்ட நம் எல்லாருக்குமே மிகவும் பிடித்த படம் புதியபூமி. (எல்லாத்தையும் இப்பயே சொல்ல முடியாது. ஒவ்வொரு வருஷமும் கொஞ்சம்... கொஞ்சம்.... சரியா?)
அதிலும் விழியே விழியே... பாடலின் முடிவில் தலைவர் பெண் போலவும் செல்வி. ஜெயலலிதா அவர்கள் ஆண் போலவும் அபிநயங்கள் செய்வது அட்டகாசம். பாடல் முடியும்போது படிகளில் ஜெயலலிதாவை இடதுபுறமும் வலதுபுறமுமாக மாற்றியபடியே, zigzag ஆக அவரை விட வேகமாக ஓடும் தலைவரின் சுறுசுறுப்பு....... அவருக்குத்தான் வரும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: புதியபூமி படத்தின் பாடல்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். ‘நான்தாண்டி காத்தி..’ யும். அதனால்தான் அதில் வரும் அடுத்த வரிகளான ‘ஒத்தையா? மொத்தமா? எத்தனை பேர் வாரீங்க?’ என்பதையே இந்த கட்டுரைக்கு தலைப்பாக்கினேன். மற்றபடி, தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதா அவர்கள் போட்டியிடும், நாளை நடக்க இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கும் இந்த தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் படிப்பவர்கள் தாங்களாக அப்படி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
புதிய பூமி - வி.சி . குகநாதன் பற்றிய அறிமுகத்துடன் ,படத்தை பற்றியும் , இன்றைய அரசியல் பற்றியும் இணைத்து
தாங்கள் விளக்கிய விதம் சூப்பர் .
super title music
https://youtu.be/8JVTd0WkNnU
super fight scene ''THAIKKU THALAIMAGAN ''
https://youtu.be/GbRMw5bGMlM
இன்று முதல் (26/06/2015) சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " தினசரி பகல் காட்சி மட்டும் நடைபெறுகிறது.
http://i62.tinypic.com/1y90rd.jpg
தகவல் உதவி : திரு.நசீர் அகமது.
தினகரன் - வெள்ளி மலர் -26/06/2015
http://i57.tinypic.com/2i77ntw.jpg
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=PG9WI8xBM0E
வரும் ஞாயிறு (28/06/2015) அன்று ஜெயா தொலைக்காட்சியில்
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " பிற்பகல் 1.30 மணிக்கு
ஒளிபரப்பாகிறது. அடிக்கடி ட்ரைலர் காண்பிக்கப்படுகிறது.
http://i59.tinypic.com/307u7b9.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
28/06/2015- ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " ஒளிபரப்பாக உள்ளது. அடிக்கடி திரைப்பட முன்னோட்டம்
காண்பிக்கப்படுகிறது .
http://i61.tinypic.com/2uzyqgx.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
ஒரே வள்ளல் எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து .
எம்.ஜி.ஆருக்கே மரணமா?
எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.
காற்று – சமுத்திரம் – வானம் – எம்.ஜி.ஆர்
இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.
அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.
47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?
.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள். இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.
என்னால் அழ முடியவில்லை.அழுகை வரவில்லை.
மனிதல் மட்டும் சோகப் பனிமுட்டம்.
“நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?”என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.
அங்கே கூடியிருந்த அரசியல்வாதிகளில் பலர் நாளைகளைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்க- நானோ உங்கள் நேற்றுகளை நினைத்தே விக்கித்துக் கொண்டிருந்தேன்.
அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !
அயல் வீட்டுக்காரருக்கு அறிமுகமில்லாத ஒரு வாழ்க்கையோடு தொடக்கமானீர்கள்; அரசாங்க மரியாதையோடு அடக்கமானீர்கள்.
அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது – ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.
ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் …….
இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;
எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.
கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.
உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.
உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.
நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.
ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.
பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.
“மன்னனல்ல மார்த்தாண்டன”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.
பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.
நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.
என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.
உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.
காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.
பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.
இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சகதியில் சிக்கவைக்கப்பட்டான்.
அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.
அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.
இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.
வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்
என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.
நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.
மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.
நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள்.
உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.
ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.
நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.
தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.
பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.
தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.
வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.
தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;
நன்றி : வைரமுத்துவின் “இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்” நூலிலிருந்து.
NOW ON JAYA MOVIE - MAHADEVI:
https://www.youtube.com/watch?v=ThUwMFGxowc
FROM TO DAY
MADURAI - VANDIYOOR - PALANIMURUGAN
MAKKAL THILAGAM M.G.R. IN ENGA VEETTU PILLAI .
MESSAGE FROM THIRU K. SAMY- MADURAI
http://i59.tinypic.com/35c3d5d.jpg
1956ல் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய மக்கள் திலகம் எம்ஜிஆர்
1956ல் மாபெரும் சாதனைகள்
1. முதல் முழு நீள வண்ணப்படம் .அலிபாபாவும் 40 திருடர்களும் .மாபெரும் வெற்றி படம் .
2. மதுரை வீரன் - வெள்ளி விழா காவியம் .மிக அதிகமான அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம் 1980 வரை இந்த சாதனைகளை முறியடிக்கப்படவில்லை .
3. தேவரின் தாய்க்கு பின் தாரம் - சூப்பர் ஹிட் காவியம் .பல அரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம் .
கலைவேந்தன்
இயக்குனர் வி .சி .குகநாதன் என்றென்றும் மக்கள் திலகத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்தவர் . 1984ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவர் பூர்ண குணமடைய அண்ணா மற்றும் மக்கள் குரல் பேப்பரில் அரைப்பக்க விளம்பரம் ஒன்று தந்தார் .
அந்த விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பாற்றல் ,தனி ஆளுமைகள் , மனித நேயம் பற்றி மிக அழகாக வர்ணித்து இருந்தார் . நன்றி மறவாத நல்ல இயக்குனர் வி.சி. குகநாதன் .
தமிழ் திரை உலகில் மறக்க முடியாத தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று சென்னையில் நடை பெற உள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து 16 படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றிகளை கண்டவர் . தேவரின் எம்ஜிஆர் படங்கள் அனைத்திற்கும் கே வி மகாதேவன் அவர்கள் இசை அமைத்துள்ளார் .
தேவர் படங்கள் - ஒரு கண்ணோட்டம் .
கண்டிப்புக்கு பெயர் போனவர் தேவர் .தான் தயாரித்த 16 மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டு , மிக குறுகிய காலத்தில் தயாரித்து , வெளியிட்டு மாபெரும் வெற்றிகளை கண்டவர் .
தாய்க்கு பின் தாரம் - 1956 - மாபெரும் வெற்றி படம் .
தாய் சொல்லை தட்டாதே - 1961ல் வசூலில் கலக்கிய காவியம் .
தாயை காத்த தனயன் - 1962- மெகா ஹிட் .
குடும்ப தலைவன் - வெற்றி படம் .
தர்மம் தலைகாக்கும் - 1963- வெற்றி படம் .
நீதிக்கு பின் பாசம் - 1963 - வெற்றி படம் .
வேட்டைக்காரன் - 1964- தமிழ் திரை உலக வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்த காவியம் .
தொழிலாளி - 1964- வெற்றி படம் .
கன்னித்தாய் -1965- சுமாரான வெற்றி
முகராசி - 1966 - 100 நாட்கள் ஓடிய காவியம் .
தனிப்பிறவி - 1966 - வெற்றி
தாய்க்கு தலைமகன் -1967 வெற்றி படம் .
விவசாயி - 1967 - வெற்றி படம்
தேர்த்திருவிழா - 1968 - சுமாரான வெற்றி
காதல் வாகனம் - 1968 தேவரின் படங்களில் சுமாராக ஓடிய படம் .
நல்ல நேரம் -1972ல் பல சாதனைகள் புரிந்த மெகா ஹிட் காவியம்
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
ஒருமுறை அண்ணா அவர்கள் காரில் திமுக கொடியுடன் வெளியூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்தார்.
வழியிலே ஒரு பாட்டி இளநீர் விற்றுகொண்டிருந்தார்!
அண்ணா கார்டிரைவரிம் இளநீர் வாங்கி வர சொல்லி குடித்தபின் டிரைவர் பாட்டியிடம் நூறு ரூபாய் குடுத்து மிச்சம் சில்லரை கேட்டார்.
பாட்டியிடம் சில்லரை இல்லை
டிரைவர் அண்ணாவிடம் தகவல் சொல்ல அண்ணா மீதி பணத்தையும் பாட்டியையே வைத்துகொள்ள சொல்லி விட்டார்
இதை பாட்டியிடம் டிரைவர் கூறியபோது பாட்டி டிரைவரிடம்
"காருக்குள்ளே இருப்பது எம்ஜிஆரா? என கேட்டார்"
இதுதான் தலைவரின் சிறப்பு!
http://i1170.photobucket.com/albums/...psnluyt4ti.jpg
"சினிமாவில் டூயட் பாடுவது கேலிக்குரியது..”
– இப்படிச் சொன்னவர் ..நூற்றுக்கணக்கான டூயட்களை தனது படங்களில் பாடி நடித்த எம்.ஜி.ஆர்...!
இதை தனது பேட்டியில் வெளிச்சம் போட்டு வெளிப்படுத்தியவர் இயக்குனர் மகேந்திரன்..
மகேந்திரன் சொல்கிறார்..:
“ தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலையில், "தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது” என்று கடுமையாகப் பேசினேன்..”
பின்னர் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தபோது , இது பற்றி மகேந்திரன் இப்படிக் கேட்டாராம்...
"எங்கள் கல்லூரியில் உங்கள் முன்னாலேயே தமிழ் சினிமாவைக் கடுமையாக விமரிசனம் செய்தேனே... உண்மையிலே அது குறித்து நீங்கள் என்மீது கோபம் கொள்ளவில்லையா?"
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்னாராம் :
"நீங்கள் அன்று என் முன்னால், 'சினிமாவில் மட்டுமே காதலிப்பவர்கள் டூயட் பாடுகிறார்கள். அது அபத்தம்' என்றீர்கள். அது உண்மைதானே. வெளி நாட்டுப் படங்களில் யார் டூயட் பாடுகிறார்கள்? எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில் வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகிறோம்..”
அப்புறம் நடந்தது ..அதை மகேந்திரனே தொடர்கிறார் :
# "நெஞ்சத்தைக் கிள்ளாதே” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கே சென்று . எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்தேன்...
"காரைக்குடியில் இருந்த நான், டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்..." என்றேன்...
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமையால் வந்தது. ஆனால் ஒன்று நிச்சயம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமாவும் உங்களால் நிறைவேறி வருகிறது. இதற்கு மேலும் நீங்கள் சினிமாவில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் " என்று ஆசீர்வதித்தார்.
# எம்.ஜி.ஆர் .என்னவோ தன் ஆசியையும் , ஆசையையும் சொல்லி விட்டுப் போய் விட்டார்....
ஆனாலும் இன்றும் கூட ... மகேந்திரன் பார்முலாவை விட , எம்.ஜி.ஆரின் பார்முலாவைப் பின்பற்ற ஆசைப்படும் நடிகர்களும் , இயக்குனர்களும்தான் அதிகம்...!
# சரி..எம்.ஜி.ஆர். முன்னிலையிலேயே , அவரைக் கடுமையாக விமரிசித்தும் , எம்.ஜி.ஆர். ஏன் மகேந்திரன் மீது கோபம் கொள்ளவில்லை...?
# இதற்கு எம்.ஜி.ஆரின் “ நம் நாடு ” பாடல் நல்ல பதில் தருகிறது...
“மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்..”
ப்ளாஷ்பேக்: ஜவான்களின் ஹீரோவான மக்கள் திலகம் எம்ஜிஆர்!
1966-ம் ஆண்டு முதல் முதலாக ஏவிஎம் நிறுவனத்தில் படம் நடித்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர். அந்த பேனரில் அவர் நடித்தது ஒரே படம்தான். அந்தப் படமும் ப்ளாக்பஸ்டர். வெள்ளிவிழாவைத் தாண்டி ஓடியது. இந்தப் படத்துக்காக 5 நாட்கள் மட்டும் சிம்லாவில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்தது. போரில் காயம் பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இந்திய ஜவான்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் போயிருந்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆரைப் பார்த்ததுமே அங்கிருந்த தென்னக வீரர்கள் அடையாளம் கண்டு, நெகிழ்ந்து போனார்கள். நமது ராணுவ வீரர்களுக்காக அப்போது சிம்லாவில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசியிருக்கிறார்கள் எம்ஜிஆரும் சரோஜாதேவியும். அப்போது எம்ஜிஆர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்: "நண்பர்களே, இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நீங்கள் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ, அதற்குச் சமமான தொகையை நான் எனது தனிப்பட்ட நிதியாகத் தர விரும்புகிறேன்," என்றார்.
இப்படி ஒரு அறிவிப்பை யாருமே அங்கு எதிர்ப்பார்க்காததால் திகைத்துப் போய்விட்டார்கள். கைத்தட்டல்களால் அந்தப் பகுதி அதிர்ந்தது.
அன்றே, அங்கு திரண்ட நிதி எவ்வளவு என்று கேட்டுத் தெரிந்து கொண்ட எம்ஜிஆர், தன் சம்பளத்தில் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அங்கேயே பணத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று நிதிக்குக் கொடுத்துவிட்டார்.
அந்த ஒரே இரவில், வட இந்தியா முழுவதும் எம்ஜிஆரின் வள்ளல்தன்மை பரவி பெரிய செய்தியாகிவிட்டது. மக்களின் ஹீரோவாகிவிட்டார் மக்கள் திலகம். அதற்கடுத்த தினங்களில் சிம்லா பகுதியில் எம்ஜிஆர் எங்கே போனாலும் மக்கள் வெள்ளம்.. அந்த வெள்ளம் அவர் விமானமேறும் வரை தொடர்ந்து கொண்டே இருந்ததாம்!
Source : http://tamil.oneindia.com/…/mgr-beco...flashba…
சிவாஜியை வைத்து ஒரு படம் கூட ஏன் தயாரிக்கவில்லை?
எம்.ஜி.ஆர். மீது வைத்திருந்த அளப்பரிய பாசம்தான் காரணம். `துணைவன்’ படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, என் தம்பி சிவாஜிக்குப் பொருத்தமான கதை அவரை வைத்து இந்தப் படத்தை எடுங்கள் என்றார். எம்.ஜி.ஆர்., ஆனால் தேவர் அதற்கு மறுத்துவிட்டார். இத்தனைக்கும் தேவரின் மகளை எனக்குப் பேசி மணம் முடித்து வைத்தவர் நடிகர் திலகம் அவர்கள்.
அவர்மீது அபரிமிதமான அன்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் நட்புக்கு மரியாதை கொடுத்து கடைசிவரை எம்.ஜி.ஆரின் உடன்பிறவா அண்ணனாகவும் அவரது முதலாளியாகவும் முருக பக்தராகவும் வாழ்ந்து மறைந்தார்.
courtesy the hindu tamil interview given by R.Thiyagarajan devar son in law
வெற்றி வெற்றி முழக்கமிட்டு தர்மம் எனும் வாள்எடுத்து
சுற்றி சுற்றி பகைவிரட்டும் புரட்சி தலைவன் அல்லவா.
எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா.
எங்கள் திலகம் அல்லவா, மக்கள் திலகம் அல்லவா
எங்கள் வள்ளல் அல்லவா, கொடை வள்ளல் அல்லவா.
எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா
எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா.
எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா.
எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா.
எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா
எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா.
http://i58.tinypic.com/nwym47.jpghttp://i60.tinypic.com/fbdfls.jpg http://i58.tinypic.com/hvrzmd.jpg
http://i61.tinypic.com/t6vx9l.jpg
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=oK0rH2miGFA
இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும் என்று ஆசை துடிக்கிறது !!!
http://i61.tinypic.com/2wo9gud.jpg