http://i1065.photobucket.com/albums/...psstgxjywi.jpg
Printable View
செந்தில் வேல்,
தூள்!
சிவந்த மண், தர்த்தி, எங்க மாமா எல்லாம் பம்மலார் மூலமும், தங்கள் மூலமும் மீண்டும் எனக்குக் கிடைத்து விட்டன. விட்டதைப் பிடித்தாயிற்று. நன்றியோ நன்றி! அந்த 'தங்கச் சுரங்க' ஸ்டில் அப்படியே பசுமை மாறாமல் நெஞ்சில் உள்ளது.
ஆண்டவரின் அரிய நிழற்படம்
இதுவரை இணையத்தில் வராத தலைவரின் நிழற்படம்.
அன்னை ராஜாமணி அம்மையாருடன் அருந்'தவப்புதல்வர்' நிற்கும் இந்த போட்டோ மிக மிக அபூர்வமானது. என்னுடைய உயிர் நண்பர் ஒருவர் இந்தப் போட்டாவை எங்கெல்லாமோ தேடி என்னிடம் நேற்று தந்தார். மிகவும் பழைய போட்டோ ஆதலால் கொஞ்சம் மெருகேற்றி இங்கே தந்திருக்கிறேன்.
தலைவர் நேரு கோட் அணிந்து என்ன ஒரு ஸ்டைலாக நிற்கிறார்! ராஜாமணி அம்மையாரைப் பாருங்கள். என்ன ஒரு தெய்வீகத் தாய்! இந்த உலக மகா நடிகரைப் பெற்ற அன்னையா அது? எவ்வளவு எளிமை! அன்னை அருகே பின்னால் கைகட்டி முகத்தில் ஆனந்த சிரிப்பளித்து நிற்கும் இந்த இதய தெய்வத்தின் புகைப்படத்தை எனக்களித்த அந்த உயிர் நண்பருக்கு என் வாழ்நாள் நன்றிகள்.
http://oi62.tinypic.com/35a18vm.jpg
நினைப்போம்.மகிழ்வோம்-16
"ராஜபார்ட் ரங்கதுரை."
அன்புத் தங்கையை சிதையேற்றி அனுப்பி விட்டு
அழுதபடி வருபவரின் முன்,
அவளை மணந்து கொண்டவன்
எதிர்ப்பட..
அத்தனை நாள் தங்கையை
அவன் கொடுமை செய்த
கோபமும், வருத்தமும் ஒன்று
சேர..
அவனைப் பார்த்து "நீயெல்லாம்
ஒரு மனுஷன்" என்று சொல்ல...
மறுத்து ஏதோ சமாதானம்
சொல்ல வரும் தங்கை கணவனின் பேச்சை இடைமறித்து விரக்தியில்
சொல்வாரே..!?
"சீ.. போடா!"
அது!
நினைப்போம்.மகிழ்வோம்-17
"வாணி ராணி".
வாழ்வோடு ஒரு பிடிப்பில்லாத அனாதை இளைஞனாய்.. மிதமிஞ்சிக் குடித்து விட்டு
வாணிஸ்ரீயிடம் புலம்பும்
கட்டம்.
அப்போது, அவர் மிகக் கிண்டலாய்ச் சொல்லும்...
"எல்லோரும் இந்நாட்டு
மன்னர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ர்".
நினைப்போம்.மகிழ்வோம்-18
"சந்திப்பு".
சர்வதேச குற்றவாளியென்று
தன்னைத் தவறாக நினைத்துக்
கொண்டு வாங்கு,வாங்கென்று வாங்கும் மகனின் வார்த்தைகள் பொறுக்காமல்
வாய் விட்டு அழத் துவங்க..
அந்நேரம் பார்த்து வேலைக்காரன் வந்து விட..
சமாளிக்கும் பொருட்டு,
அழுகையை அப்படியே
சிரிப்பாக மாற்றி..
வேலைக்காரன் நகர்ந்ததும்,
மீண்டும் சிரிப்பை அழுகையாய்
மாற்றித் தொடருவாரே...
அது!
நினைப்போம்.மகிழ்வோம்-19
"நிறைகுடம்".
தவிர்க்கவியலாத சூழலில்
பார்வையற்ற மனைவிக்கு
கண் சிகிச்சை செய்ய மறுத்து
விடுகிறார் நடிகர் திலகம்.
அவரைச் சந்தேகிக்கும்
மாமனார் மேஜர், தனது சொத்துக்கு ஆசைப்பட்டுத்
தனது மகளை மணந்து
கொண்டிருக்கலாம்..
அவருக்கு வேறொரு பெண்ணுடன்
தொடர்பிலிருக்கலாம்..
என்றெல்லாம் கண்டபடி பேசி
விட ..
பின்னணி இசையெல்லாம்
நின்று விட்ட பேரமைதியில்..
வேறுபுறமாய் திரும்பி நிற்பவர்,
கோபம் கொப்பளிக்க..திரும்பி மேஜரைப் பார்ப்பாரே...
அந்தப் பார்வை.
நினைப்போம்.மகிழ்வோம்-20
"நவராத்திரி".
படத்தின் முடிவுக் காட்சி.
நடிகர் திலகம் ஏற்று நடித்த
ஒன்பது பாத்திரங்களில், எட்டு
பாத்திரங்கள் ஒரே இடத்தில்
இருப்பதாய்க் காட்டும் காட்சி.
அதில், மிகக் கம்பீரமாக
அமர்ந்திருக்கும் அந்த உயர் போலீஸ் அதிகாரியைப்
பார்த்து, அந்த தெருக்கூத்துக்
கலைஞர், பயமும்,மரியாதையுமாய் ஓரிரு முறைகள் வணக்கம் சொல்வது.
நினைப்போம்.மகிழ்வோம்-21
"பலே பாண்டியா".
நடிகவேள்,தன் வீட்டிற்குள்
நடிகர் திலகத்தை அழைத்துச்
செல்லும்போது, அவர் வீட்டுக்
குட்டிக் கதவொன்று முதுகுப்
பக்கமாய் மோத..
அவர், அப்பாவித்தனமாய்
நடிகவேளிடம் கேட்கும்
"என்னா சார்.. ஒங்க வீட்டுக்
கதவு,கோழை மாதிரி பின்னாலே தாக்குது..!?
[QUOTE=vasudevan31355;1263034]ஆண்டவரின் அரிய நிழற்படம்
இதுவரை இணையத்தில் வராத தலைவரின் நிழற்படம்.
வாசு சார்
இதுவரை பார்த்திராதது.
மிகவும் அருமை.
வாசு சார்
பாராட்ட வார்த்தைகளே வரவில்லை.
தாயும் மகனும் தரணியையே நம் நெஞ்சுக்குள் அடக்கி விட்டார்கள்.
தங்களுக்கு மிக்க நன்றி.
சோனியா வாய்ஸ்வெளியிட்ட
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் சிறப்பிதழ்
http://i1065.photobucket.com/albums/...psbjf7mttq.jpg
http://i1065.photobucket.com/albums/...psf1tug9dn.jpg
http://i1065.photobucket.com/albums/...pspg1n1pqg.jpg
http://i1065.photobucket.com/albums/...psw8ogeabz.jpg
டியர் முரளி சார்,
நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் பதிவுகள் கண்டதில் மகிழ்ச்சி. தொங்கலில் நிற்கும் உங்கள் மலரும் நினைவுகள் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டியர் செந்தில்வேல் சார்,
உங்கள் ஆவணப்பதிவுகள் அனைத்தும் அசத்துகின்றன. இவற்றையெல்லாம் மீண்டும் காண்போமா என்று ஏங்கியதுண்டு. ஏக்கத்தைப் போக்கிவரும் தங்களுக்கு மகத்தான நன்றிகள்.
டியர் சிவா சார்,
'சரித்திர நாயகனின் சாதனைத்திரி' அட்டகாசம். அருமையான கிடைத்தற்கரிய விளம்பரப்பதிவுகள், ஒரே இடத்தில் கிடைக்கச்செய்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறீர்கள். சிரமம் பாராமல் தாங்கள் பதித்து வரும் சாதனைக்குவியல் உண்மைகளை உலகுக்கு உணர்த்தி, பொய்களை தோற்றோடச்செய்யும். தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.
அன்பு நண்பர்களுக்கு,
நண்பர் சிவா அவர்களின் 'சாதனை ஆவணங்கள் திரியின்' பதிவுகளை பாராட்ட எண்ணுவோர் தயவு செய்து இந்த பொதுத்திரியிலேயே பாராட்டுங்கள். விளம்பரங்கள் திரியில் முழுக்க முழுக்க நடிகர்திலகத்தின் சாதனை ஆவண விளம்பரங்கள் மட்டுமே இடம்பெறட்டும். தயவு செய்து அதையும் உரையாடல் திரியாக மாற்றிவிட வேண்டாம். என்று கேட்டுக்கொள்கிறோம். ப்ளீஸ்.
வாசு சார்
சில தினங்களுக்கு முன்பு நண்பர் நடராஜன் சாருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு விஷயத்தை சொன்னார். அதைக் கேட்ட போது நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அவரை எப்படியெல்லாம் ரசித்து வருகிறார்கள் என்பது பிரமிக்கத் தக்கதாக நம்முள் தோன்றுகிறது. பதிபக்தி படத்தில் கொக்கரக்கொக்கரக்கோ சேவலே, பொம்மை கல்யாணம் படத்தில் இன்பமே பொங்குமே மற்றும் இன்னொரு பாடல் ... இந்த மூன்றிலும் நடிகர் திலகத்தின் உடையலங்காரத்தில், ஸ்லாக் ஷர்ட் எனப்படும் அந்தக் காலத்திய பிரபல ஃபேஷன் உடையை அணிந்திருப்பார் எனக் கூறினார். மிகவும் உன்னிப்பாக ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிகர்களின் கவனம் ஆழமாக ஊடுருவி தலைவரை ரசிக்க வைத்துள்ளது என்றால் இனியொரு கலைஞன் இவரைப் போல் பிறக்க மாட்டான் என்பது ஊர்ஜிதமாகிறது.
இதை சொல்லக் காரணம், இந்த உடையலங்காரத் தொடரை நீங்கள் தொடர வேண்டும். அதில் மேலே குறிப்பிட்ட உடையைப் பற்றி, குறிப்பாக அந்த ஸ்லாக் ஷர்ட்டைப் பற்றி நிழற்படத்தோடு எழுத வேண்டும் என வேண்டுகோள் வைக்கத்தான்..
தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதை எழதுங்கள்.
http://i1028.photobucket.com/albums/...psovahchda.jpg
வெறும் பாட்டல்ல.. இது!
அழகான வாழ்க்கைத் தத்துவம்
எளிதாக விளக்கப்படும்
இசைப் பாடம்.
கற்றுச் சிறந்த ஞானத்திற்கும்,
கர்வத்திற்கும் நடக்கும்
சங்கீதச் சண்டை.
-----------
கர்வம் பொல்லாதது.
'என்னால் முடியும்' என்கிற
நம்பிக்கை, "என்னால் மட்டுமே
முடியும்" என்கிற நிலைக்கு
மாறும் போது, அங்கே கர்வம்
என்பது வந்து விடுகிறது.
எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி, எப்போதும் தன்னையே
பெரிதெனச் சொல்லும் மனிதரின் குடுமி,கர்வத்தின்
கையிலிருக்கிறது என்று
பொருள்.
----------
மற்றவரை மட்டம் தட்டி
இன்பம் காணுவோரின் கர்வம்
அடக்கப்படும் என்பதற்கு
உதாரணமாய் ஒரு கதை
கேட்டதுண்டு.
ஒடுங்கிய பாலமொன்றில்
நல்லவனொருவன் நடந்து
வந்து கொண்டிருந்தான்.
எதிரே, கர்வம் பிடித்தவன்
ஒருவன் வந்து கொண்டிருந்தான்.வந்தவன்,நல்லவன் செல்ல வழியில்லாமல் பாதையை
அடைத்துக் கொண்டு நின்றான்.
நல்லவன் அமைதியாகக்
கேட்டான்.."எனக்கு வழி
விடுகிறாயா?"
கர்வி கொக்கரித்தான்.. "நான்
முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை.."
நல்லவன் அமைதியாக..
"ஆனால்,நான்
முட்டாள்களுக்கு வழி விடுவதுண்டு" என ஒதுங்கி
நின்றான்.
---------
கதையின் நல்லவனைப்
போலவே இந்தப் பாடலில்
நடிகர் திலகம், திறமையால்
கர்வம் அடக்கும் அழகை
சுவாரஸ்யமாக ரசிக்கலாம்.
மின்னும் ரோஸ் நிறச் சட்டையும், மீசை இல்லாத
உதடுகளில் திறமைப் புன்னகையும், அட்டகாசமான
அமர்வும், தோள்கள் உருட்டி,
திசைகள் அத்தனைக்கும் தன்
திருமுகத்தின் பாவனைகள்
காட்டும் பேரழகும்..
நடிகர் திலகம், வெகு சுலபமாய்
நம் நெஞ்சில் குடியேறுகிறார்.
உதடு பிதுக்கி, முகத்தைக்
கோணலாக்கிக் கொண்டு
"குப்பா.. முனியா" என்று
அடியாட்களை அழைக்கும்
வழக்கமான வில்லத்தனங்கள்
இல்லாத, வித்தியாசமான
வில்லன் பாத்திரங்கள்,அமரர்
நம்பியார் சாமிக்கு நடிகர்
திலகத்தின் படங்களில்தான்
கிட்டின என்றே சொல்லலாம்.
"இதில் தேவை என்ன பக்கமேளம்?" - ஆணவ த்வனியில் நம்பியார் பாட..
வாசிப்பை நிறுத்தி,
மிருதங்கத்தை நிமிர்த்தி
வைத்து விட்டு, வெற்றிலைச்
செல்லம் திறந்து சாவகாசமாய்
பாக்கு மெல்லும் அழகு..
வேறு யார் செய்தாலும் வராது..
நடிகர் திலகம் தவிர்த்து.
---------
கர்வங்கள் ஒடுங்கிய நாளைய
சுத்தமான காலவெளியில்
கேட்கத்தான் போகிறோம்..
அய்யாவின் நம்பிக்கை
வாசிப்பை..நிரந்தரமாய்.
https://youtu.be/grg1KgK0r8I
"நவராத்திரி" புகைப்படத்திற்கு நன்றி...
முத்தையன் அம்மு சார்.
பொன் தகட்டில் பொறிக்கப்பட வேண்டிய எழுத்துக்கள்.Quote:
உதடு பிதுக்கி, முகத்தைக்
கோணலாக்கிக் கொண்டு
"குப்பா.. முனியா" என்று
அடியாட்களை அழைக்கும்
வழக்கமான வில்லத்தனங்கள்
இல்லாத, வித்தியாசமான
வில்லன் பாத்திரங்கள்,அமரர்
நம்பியார் சாமிக்கு நடிகர்
திலகத்தின் படங்களில்தான்
கிட்டின என்றே சொல்லலாம்.
புதிய வேலைப் பளு மற்றும் பணி நிமித்தமான அலைச்சல்கள் காரணமாக முழு ஈடுபாட்டுடன் திரிப் பதிவுகளில் கவனம் செலுத்த இயலாமைக்கு வருந்துகிறேன்
எனினும் Time and Tide wait for none என்னும் கூற்றுக்கிணங்க எத்தனை வகையான கருத்துச்சுவை மிக்க நடிகர் திலக பதிவு விருந்துகள்....கண்களுக்கும் செவிகளுக்கும் மனதுக்கும் ....உலகின் எந்தவொரு கலைஞனுக்கும் கிட்டிடாத பக்தி பரவசம் ஈர்ப்பு மரியாதை அன்பு பாசம்....நடிகர்திலகத்தின் மேன்மை பறை சாற்றும் திரிப்பதிவுகள் வேறு எந்த திரை நடிப்புக் கலைஞருக்கும் அடைய முடியாத சாதனை சிகரங்களே ! aristocratic and technocratic postings.... புதுமையான நடிகர்திலக புகழ் பெருமை பெருமித வடிவமைப்பில் திரி நாளுக்குநாள் மிளிர்ந்து ஒளிர்ந்து 400 இலக்கினை வெகுவிரைவில் எட்டிவிடும் சூழலில் திரியினை ஆரம்பித்து வைத்த மனநிறைவுடன் அனைத்துப் பதிவர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகலந்த வணக்கங்களை சமர்ப்பித்து NT 17ல் மீண்டும் வந்து சங்கமித்திட விழைகிறேன். மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும் நடிகர்திலகத்தின் அடிப்படைப் புகழார்வலன் என்னும் பெருமையே!
செந்தில்