http://i64.tinypic.com/orsfer.jpg
Printable View
THE HINDU - CINIMA PLUS -17/04/2016
http://i64.tinypic.com/34z0g8h.jpg
இன்று (19/04/2016) பிற்பகல் 1 மணிக்கு ராஜ் டிஜிட்டலில் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.
நடித்த "தாயை காத்த தனயன் " ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/e0j4ie.jpg
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் திரைப்படம் முதல் வெளியீட்டில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது உண்மை . ஆனால் மறு வெளியீடுகளில் நீரும் நெருப்பும் தொடர்ந்து பல ஊர்களில் பல முறை திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியது .
மக்கள் திலகத்தின் மாறு பட்ட வித்தியாசமான நடிப்பு ,விறுவிறுப்பான வாள் வீச்சு சண்டை காட்சிகள் , மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் சூப்பர் சண்டைகாட்சிகள் , கடவுள் வாழ்த்து பாடும் ....இனிமையான பாடல் . கன்னி ஒருத்தி மடியில் மற்றும் மாலை நேர தென்றல் பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்து . மெல்லிசை மன்னரின் அருமையான ரீ ரெக்கார்டிங் , ராமமூர்த்தியின் சிறப்பான ஒளிப்பதிவு , இயக்குனர் நீல கண்டனின் சிறப்பான
இயக்கம் .
ஆனந்தன் சண்டைகாட்சி , சற்று ஏமாற்றம் . ஜெயாவின் தனிப்பாடல்கள் ,ஜோதிலட்சுமி நடனம் தவிர்த்து பார்த்தால் படம் மிகவும் அருமை .
http://i66.tinypic.com/1fjp1t.jpg
மே மாதத்தில் பல வெற்றிகளை கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் மற்றும் அரசியல் வெற்றிகள் என்றுமே மறக்க முடியாதவை .
பெரிய இடத்து பெண் - 1963
அடிமைப்பெண் - 1969
என் அண்ணன் -1970
ரிக்ஷாக்காரன் - 1971
உலகம் சுற்றும் வாலிபன் - 1973
நினைத்ததை முடிப்பவன் - 1975
இன்று போல் என்றும் வாழ்க - 1977
திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தல் - 1973
1980 மே மாதம் நடந்த தமிழக சட்ட சபை தேர்தலில் மாபெரும் வெற்றி
மக்கள் திலகம் எம்ஜிஆர் நிறுவிய இயக்கம் தொடர்ந்து 44 ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வருகிறது . மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் அவர் கண்ட வெற்றி சின்னமும் இயக்கமும் இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று 2021ல் அதிமுக என்ற மாபெரும் இயக்கம் பொன்விழா கண்டு வரலாறு படைத்திட வேண்டும் என்பது அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவல் நிறைவேறும் என்று எதிர்பார்ப்போம் .
உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடந்து கொண்டிருந்த சமயம் அப்பொதைய முதல்வரான
மக்கள் திலகம் எம்ஜிஆர் .அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்க்காக மதுரை வந்து தொடர்ந்து
மூன்று நாட்கள் மதுரையில் மதுரை அசோகா ஹொட்டலில் தங்கி இருந்தார்.
இரண்டாம் நாள் மதியம் அவர் ஓய்வில் இருந்த போது சரியாக 12 மணியளவில் தன்னுடைய உதவியாளரிடம் நான் கொஞ்சம் நடந்து விட்டு வருகிறேன் .
என்று சொல்லி அரையை விட்டு வெளியே வந்தவர். யாரும் எதிர்பார்க்காதா விதமாக ரேஸ்கோர்ஸ் மைதாணத்தை ஒட்டி அமைந்த ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதிக்கு திடிரேன விஜயம் செய்ய முதலில் குழம்பிய மாணவர்கள்பிறகு சுதாரித்துக்கொண்டு தமிழக முதல்வரின் விடுதிவருகையை அனைத்து மானவர்களிடமும் தகவல் சொல்ல எல்லொருக்கும் அளவுகடந்த மகிழ்ச்சி வாடன் அவர்கள் அது விடுமுறை நாளானதால் வீட்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் . விடுதி சந்தோசம் கலந்த ஆச்சிர்யத்தில் திளைத்தது. முதல்வர் அவர்கள் அனைத்து அறைகளுக்கு நேரடியாக சென்று அனைத்து மாணவர்களிடமும் உரையாட அதற்க்குள் முதல்வர் அங்கு வந்த செய்தி கேட்டு அப்பொதைய மதுரை மாநகர போலீஸ் உயரதிகாரிகள் விடுதியின் முன் பாதுகாப்பு கொடுக்க முதல்வர் அவர்கள் உயரதிகாரியை வரவழைத்து கடிந்து கொண்டார்
இது குழந்தைகள் வசிக்கும் இடம் இங்கு போலீஸ் வண்டி நின்றால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் தயவு செய்து வண்டியை கொண்டு போங்கள் என்றவுடன் இரன்டு துணை ஆய்வாளரை அங்கு நிறுத்திவிட்டு மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட அன்று முழுவதும் சுமார் இரண்டு மணிநேரம் மாணவர்களுடம் போழுதை கழித்தவர் மதிய உணவை மாணவர்களுடனே அமர்ந்து சூடான அரிசிகஞ்சியும் , சுன்டைவத்தலும்சேர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட அப்பொழுது அவர் அருகில் அமர்ந்திருந்த ஒருமாணவனின் தாயார் அவனை பார்க்க தேனீமாவட்டத்திலிருந்து வருகைபுரிந்திருந்தார்,
அதை அறிந்த அந்த தாயாருக்கு தனக்காக வந்திருந்த அசோகா ஹோட்டல் உணவை தந்து விட்டு உண்ணச்சொன்னார். தனது மகனை கானவந்த தாய்க்கோ தன்காண்பது கனவா நினைவா என்று புரியாம சில நிமிடம் திகைத்து விட்டு பிறகு சுதாரித்துக்கொண்டு முதல்வரிடம் தன் மகன் நன்றாக படிக்க அறிவுறை சொல்லுங்கள் ஐயா என சொல்லி விடைபேற்றார்.
அவர் உணவின் போது ஒரு முதலாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவன்
கேட்ட கேள்விகளுக்கு உதவியாளர் யாருமின்றி , மதுரை மாவட்டத்தில் மட்டும் எத்தனை அரசு மாணவர் விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள்
அதில் எத்தனை மாணவர்கள் தங்கி பள்ளிகளுக்கு செல்கின்றனர், ஒவ்வொரு மாணவனுக்கும் அரசு செலவிடும் தொகை, மாணவர்களின் நலனுக்காக அரசு எடுத்திருக்கும் சட்டங்கள் , எதிர்கால சட்டங்கள், என அனைத்து விபரங்களையும் புள்ளிவிபரமாக சொல்லி அந்த விடுதி வார்டனே அறிந்திராத விடுதிபற்றிய புள்ளி விபரங்களை எடுத்துச்சொல்லிஅனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியவர்.
அவர் விடைபெற்றுச்செல்லும் சமயம் மாணவர்களே உங்கள் எதிர்காலத்திற்க்காக படியுங்கள் உங்களின் எந்த குறைகளையும் அரசுக்கு தெரிவித்தால் உடனே களைய முயற்ச்சிக்கிறேன். நான் உங்களின் வயதில் இருக்கும் போது இந்த சூடான சேற்றுக்கங்சும் சுன்டைக்காய் பொறியல் கூட எங்களுக்கு பாகியமில்லாமல்
இருந்தது. ஆகையால் அக்கறை கொண்டு படியுங்கள் என அனவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு விடைபேற்றார். அன்று அவரின் அறிவுரைகள் கேட்டு எத்தனை மாணவர்கள் , மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ மாறினார்கள் என்ற புள்ளி விபரம் எனக்கு தெரியாது ஆனால் தனிநபராக மாணவர்களின் மீது அக்கறைகொண்டு அவர்களுடன் உணவருந்தி அந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல தமிழக பள்ளி கல்லூரிகளில் படித்த அத்தனை மாணவர்கள் நெஞ்சிலும் ஒரு உற்ச்சாகத்தை ஏற்படுத்தி தந்து அவர் படப்பாடல்களில் மட்டும் சொல்லாமல் நேரிலும் தமிழக மக்களில் நலனில் அக்கறை காட்டிய அந்த மாமனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
courtesy - net
"Neerum Neruppum"----- Evergreen collection movie of any time cinefield Emperor of Emperors... Rerelese in all area Tamilnadu & Srilanka etc., Film Distributors & Theatre Excibitors delight--- paradise... neerum neruppum.......
எம்ஜிஆர்: மக்கள் போற்றும் மகோன்னத மனிதர்
எம்ஜிஆரின் 98ஆவது மறைந்த தினத்தை பற்றி சில நாட்களுக்கு முன்பு படித்தோம். ஜனவரி 17 அன்று அவரது 99 பிறந்த நாள் வருகிறது. விரைவிலேயே அவரது 100 நாள் பிறந்த தினமும் வருடம் முழுக்க தமிழகம் முழுக்க கொண்டாட அதிமுக கட்சியினர் முடிவு செய்திருக்கின்றனர். சென்ற கட்டுரையில் அவர் மக்களுக்கு சினிமா மற்றும் அரசியல் மூலம் செய்த நன்மைகள் சிலவற்றை படித்தோம். கதானாயகனாக, மற்றும், முதலமைச்சராக மக்கள் திலகம் மக்கள் எப்படி துணிவு, தெளிவு, நேர்மை, திறமை என்று பலவித குணாதிசயங்களோடு தனது ரசிகர்கள், மற்றும் தன்னை வெறுப்பவர்களும் வாழ வேண்டும் என்று அவர் கூரிய உபதேசங்கள் காலத்தால் அழிக்க முடியாது. சிலவற்றை பென்வருமாரு பார்போமா ?
\"பெற்றால் தான் பிள்ளையா\" என்று \'பெற்றால் தான் பிள்ளை\' என்ற படத்தில் ஒரு காட்சியில் எம்ஜிஆர் சீருவார். குழந்தை டெய்சி ராணியை அவள் பெற்றோர்கள் அசோகனும், சௌகார் ஜானகியும் உரிமை கொண்டாடும்போது \"இத்தனை நாட்கள் எங்கு இருந்தீர்கள்\" என புலம்புகிறார். குழந்தையும் பெற்றோர்களுடன் செல்ல மறுக்கிறது. தாய், தந்தையை விட, ஆன்னியர்கள் எவ்வாறு குழந்தைகளை அன்புடன் பாதுகாக்கிறார்கள் என்பதை நீதிபதி முன்பு அழகாக விளக்குகிறார். குழந்தையற்றவர்கள் எப்படி ஏங்குகிறார்கள் என்பதையும், நாட்டின் நலனையும் மனதில் கொண்டு \"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி\" என்று ப்ரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் வழியாக வாயசைக்கிறார்.
எம்ஜிஆர் தனது 100 ஆவது படமான \'ஓளிவிளக்கில்\' பணத்தின் மதிப்பை விளக்குகிறார். ஓரு காட்சியில் வில்லன் மனோகரிடம் கூருகிறார். \"இத்தனை நாட்கள் திருடி சம்பாதித்தேன், இன்று உழைத்து 50 காசு சம்பாதித்திருக்கிறேன். அந்த காசை மட்டும் கொடுத்து விடு என்று கெஞ்சுவார். \'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது\' என்று இன்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும், நீதிமன்றங்கள் உட்பட, உண்மையை 1958 ஆம் ஆண்டே, கவிஞை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்த்தின் வரிகளை, டி.எம். சௌந்தர்ராஜன் சிம்மக் குரலை வாயசைத்து சட்ட நிபூணர்களே வாய் பிளக்க வைத்தார். உழைப்புக்கு மாற்று இல்லை என்பதை \'அரசளங்குமரி படத்தில் வரும் \'வேலையற்ற வீணர்களின், மூளையற்ற வார்தைகளை வேடிகையாகக் கூட நம்பி விடாதே, மனம் வெம்பி விடாதே\' என்ற பாடலில் விளக்குவார்.
\"தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதை \' தர்மம் தலைகாக்கும்\' படத்தில் மற்றவர்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களக்கு உதவ வேண்டிய அவசியத்தை உணர்த்துவார். நாடோடி மன்னன் படத்தில் தூங்கி பொழுதை கழிப்பர்கள் பற்றி கூறுகையில், \"தூங்காதே, தம்பி தூங்காதே\' என்று பாடி, . \'எத்தனை பெரிய மனிதனுக்கு, எத்தனை சிரிய மனம், ஆனால் எத்தனை சிறிய பறவைக்கு, எத்தனை பெரிய மனமிருக்கு\" என்று மனிதர்களை விட விலங்குகள் எவ்வளாவோ மேல் என விளக்குவார் ஆசை முகம் என்ற படத்தில். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்\" என பாடுவார். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காலத்தை வென்ற மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டு வெற்றிகரமாக முடிய ரசிகர்களாகிய நாமும் வாழுத்தி வணங்குவோம்.
courtesy - கே வி வேணுகோபால் - net
நண்பர் திரு.முத்தையன் அவர்களே ,11000 பதிவுகள் கடந்து, தொடர்ந்து பல அட்டகாசமான, அற்புதமான ,அதிசயமிக்க பதிவுகளை அனாயாசமாக பதிவிட்டு வருவதற்கு நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.
http://i67.tinypic.com/262xif8.jpg
ஆர்.லோகநாதன்.