அரசு பாடப்புத்தகங்களில் எம்ஜிஆர் வாழ்வில் நிகழ்ந்தவற்றை பாடமாக வைத்தால் எல்லா மாணவ மாணவிகளும் மனிதாபிமானம் , கஷ்டத்தில உதவுவது, தாய் மீது பாசம், நேர்மை , மக்கள் பணி ஆகியவற்றை கற்றாலே போதும், நல்ல மனிதனாக வாழ முடியும்...... Thanks...
Printable View
அரசு பாடப்புத்தகங்களில் எம்ஜிஆர் வாழ்வில் நிகழ்ந்தவற்றை பாடமாக வைத்தால் எல்லா மாணவ மாணவிகளும் மனிதாபிமானம் , கஷ்டத்தில உதவுவது, தாய் மீது பாசம், நேர்மை , மக்கள் பணி ஆகியவற்றை கற்றாலே போதும், நல்ல மனிதனாக வாழ முடியும்...... Thanks...
இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் 'தேவதாஸ்’ படத்தின் இசைக் கோர்ப்பை முடிக்கும் முன்னரே இறந்துவிட, மீதி இருந்த இரண்டு பாடல்களையும் அவருடைய பிரதான உதவியாளர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும்தான் முடித்துக்கொடுத்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கே., இவர்கள் இருவரையும் இணைத்து 'விஸ்வநாதன்- ராமமூர்த்தி’ எனப் பெயர் போட்டு தான் தயாரித்த 'பணம்’ படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு தந்தார். இசைக் குழு நண்பர்களான இருவரும் 'மெலடி பார்ட்னர்கள்’ ஆனது இப்படித்தான். ஒருகட்டத்துக்குப் பின்னர் ராமமூர்த்தி விலகிக்கொள்ள, அதன் பிறகு தமிழ்த் திரையிசையின் மன்னர், மந்திரி, தளபதி, பட்டாளம்... என அனைத்துமாக விஸ்வரூபம் எடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
எம்.எஸ்.வி-யுடன் இசைபடப் பயணித்த புலவர் புலமைப்பித்தன், அவரை 'குழந்தை’ என்றே சொல்கிறார்...
''உலக விஷயங்கள் எது பற்றியும் கவலைப்படாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர் அவர். 'காமராஜர் திரும்ப வந்துட்டார்’ என யாராவது சொன்னால், 'அப்படியா... எப்ப வந்தார்?’ என எட்டிப்பார்த்து விசாரிக்கும் அளவுக்கு வேட்டி கட்டிய வெள்ளந்திப் பிள்ளை. வீட்டில் இருந்து காலை 7 மணிக்கு ரிக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார்.வரும்போது பத்து, பன்னிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு, பஞ்சு பஞ்சாக அடுக்கிய இட்லிகளைக் கொண்டுவருவார். கூடவே குடத்தில் தண்ணீரும் வரும். 'வாத்தியார் அய்யா... சீக்கிரம் சாப்பிட வாங்க. இல்லைன்னா இட்லி எல்லாம் வித்துரும்’ என என்னிடம் சொல்லிவிட்டு, ரிக்கார்டிங் தியேட்டரே அதிரும்படி சிரிப்பார். அப்படி ஒரு பிள்ளை மனசு.
எம்.எஸ்.வி ஒரு பாடலுக்கு மெட்டு போட அமர்ந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் மெட்டுக்கள் சரம் சரமாகக் கொட்டும். 'நேற்று இன்று நாளை’ படத்துக்காக நான் எழுதிய 'நீ என்னென்ன சொன்னாலும் கவிதை...’ பாடலுக்கு கடகடவென, அடுத்தடுத்து 10 மெட்டுக்கள் போட்டு எல்லோரையும் திணறடித்தார்.
அந்தப் பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்த சமயம், சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்குச் சென்றிந்தார் எம்.எஸ்.வி. எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று
எம்.எஸ்.வி-யிடம், எம்.ஜி.ஆர் அண்ணனுக்கு நீ முத்து முத்தா பாட்டு போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ எனக் கேட்க, அது கிண்டல் எனக்கூடப் புரியாமல் பதறிவிட்டார்
எம்.எஸ்.வி. 'அண்ணே... எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டும்தான் நானு. பாட்டு எழுதினது எல்லாம் வாத்தியார் அய்யாதான். நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க’ எனச் சொல்ல, சிவாஜி வாய்விட்டுச் சிரித்து எம்.எஸ்.வி-யைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.
எம்.எஸ்.வி மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர்... என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த பண்பாளர். 'தமிழ்த் திரையுலகில் இப்படி ஒரு மனிதர் இருந்திருக்கிறாரா?!’ என வியக்கவைக்கும் அளவுக்கு நயமான பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார்.
அப்போது தேவர் ஃபிலிம்ஸுக்குப் பிரதான இசையமைப்பாளர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்தான். ஆனால், ஒரு புதுப் படத்துக்கு இசையமைப்பதற்காக, தேவர் தன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு எம்.எஸ்.வி வீட்டுக்கு வந்து, 'தம்பி... நம்ம கம்பெனியோட புதுப் படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க’ எனச் சொல்லி, பணத்தைக் கொடுத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி., 'மாமா (கே.வி.மகாதேவன்) இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது இல்லைனு முடிவுபண்ணியிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என மறுத்துவிட்டார். தேவர், எம்.எஸ்.வி-யின் அம்மா நாராயணி அம்மையாரிடம் சிபாரிசுக்குப் போக, அவரும் 'என் மகன் சொல்றதுதாங்கய்யா சரி. அவனை வற்புறுத்தாதீங்க’ எனச் சொல்லிவிட்டார். வளமான வாய்ப்பு கிடைக்கிறதே என வந்ததை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல், அதிலும் பண்பாடு காத்தவர் அவர்.
பாடல்களில் நல்ல வரிகள் எழுதிவிட்டால் சம்பந்தப்பட்ட கவிஞரைப் பாராட்டு மழையில் நனைத்துவிடுவார் எம்.எஸ்.வி. அதுவும் ஒருமுறை எனக்கு அவர் அளித்த பாராட்டு வாழ்நாளுக்கான வரம். 'வரம்’ படத்தில் ஒரு பாடலில் 'அட்சயப்பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா...’ என ஒரு வரி எழுதினேன். அதைப் படித்துவிட்டு நெகிழ்ந்துபோய், என் காலைத் தொட்டுப் பாராட்டினார். 'இப்படி நீங்க செஞ்சா, நான் இனி பாட்டு எழுத மாட்டேன்’ எனக் கடிந்துகொண்டேன். அதற்கு அவர், 'வாத்தியார் அய்யா.. இவ்வளவு நல்ல வரிக்கு இந்த மரியாதைகூட பண்ணலைன்னா, அப்புறம் நான் இசையமைச்சு என்ன பிரயோஜனம்?’ என்றார். அந்த அளவுக்கு வார்த்தைகள் மீது காதல்கொண்ட மகா கலைஞன் அவர். ஒரு பாடல் நன்கு வந்துவிட்டால் அதற்கான பெருமையை, 'வாத்தியார் அய்யா உங்களுக்கு 75 சதவிகிதம்; எனக்கு 25 சதவிகிதம்’ எனப் பிரிப்பார். அவ்வளவு குழந்தை மனசுக்காரர். ஆனால், அவர் பாட்டு போட்ட அளவுக்கு, துட்டு வாங்கியது கிடையாது.
10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்; 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்.
டி.எம்.எஸ் போல பிரமாதமான பாடகர் கிடையாது. ஆனால், அவருக்கு அவ்வளவு சுலபத்தில் பாடல் ட்யூன் பிக்கப் ஆகாது.
டி.எம்.எஸ்., ட்யூன் கற்றுக்கொள்ளும் வரை விட மாட்டார் எம்.எஸ்.வி. திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். எம்.எஸ்.வி போட்ட மெட்டில் 70 சதவிகிதம் மட்டுமே பாடகர்கள் பாடுவார்கள். அவர் மெட்டில் வைத்திருக்கும் முழு சங்கதிகளோடு எவரும் பாடியது கிடையாது. ஆனாலும், அவர்கள் பாடி முடித்ததும் உச்சி முகர்ந்து பாராட்டுவார் எம்.எஸ்.வி.
அது அண்ணா அவர்கள் இறந்த சமயம். 'மணிப்பயல்’ படத்தில் அண்ணாவுக்காக நான் எழுதிய 'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்... கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்...’ பாடலை அழுதுகொண்டே மெட்டு அமைத்துப் பாடினார் எம்.எஸ்.வி.
நாங்கள் இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உருவாக்கிய அ.தி.மு.க பிரசாரப் பாடல்களும், தொண்டர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 1977-ம் ஆண்டு அ.தி.மு.க முதன்முறையாகப் போட்டியிட்ட தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எம்.எஸ்.வி இசையமைக்க நான் எழுதிய, 'வாசலெங்கும் ரெட்டையிலை கோலமிடுங்கள்... காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுங்கள்...’ பாடல், ஒலிக்காத ஊரே கிடையாது. 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டே மணி நேரத்தில் ஒன்பது பாடல்களுக்கு மெட்டு அமைத்து, இரண்டு நாட்களில் பதிவுசெய்தும் அனுப்பிவைத்தவர் எம்.எஸ்.வி....... Thanks...
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!....... Thanks...
Varalaatru padhivu. Arumai. Ratham sindhi valarthaar. MGR pictures emblem DMK kodi. Chakravarthi Thirumahal padathil Thalaivar name was Udhaiya Suriyan. Thannudaiya padathil yaedho oru idathil Katchiyin kolhaiyai solliduvar. Basement of DMK was MGR only...... Thanks...
மக்கள் திலகத்தை தேடி பதவியும் புகழும் வந்தன.கருணாநிதி தேடி சென்று பெற்றவைதான் எல்லாம் இருக்கும் போதும், இறந்த பிறகும்.ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.?கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?...... Thanks...
Ulaka arasial varalaatril oru thanimanithan katchiyai vittu thookki eriyapattavar thanikatchi aarambitchu kurukiya kaalaththil oru byeelectionil panam aal palam ulla aalum katchiyai oru laksham vaaku viththiaasaththil thorkatiththathu sariththira saathanai purinthavar namathu mahonnatha vasool chakravarthi Makkal Thilakam M G R avarkal........ Thanks...
MGR-கவிஞர் வாலி
கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் பாடலாசிரியர்களாகக கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கவிஞர் வாலி பாடல் எழுத திரைப்படத்துறைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அதற்கு முன்பு பக்திப் பாடல்களை (கற்பனை என்றாலும்) எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல்களைப் பாட வந்த திரைப்பட புகழ் டி.எம். சௌந்தர்ராஜன் கவிஞர் வாலியை சென்னைக்கு வரச்சென்னார். அங்கு வந்து சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சி செய்யுங்கள் என்றார். அவர் அழைத்ததை திரையுலகமே அழைத்தாக எண்ணி சென்னைக்கு வந்தார் கவிஞர் வாலி.
சென்னையில் நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நட்பு கிடைத்தது. வி.கோபாலகிருஷ்ணன் மூலம் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கினார். எதுவும் பலன் தராததால் துவண்டு போய் மறுபடியும் தனது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கே பயணமாக முடிவு செய்தார். அப்பொழுதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலொன்று காற்றினிலே கலந்து வந்து கவிஞர் வாலியின் காதில் நுழைந்தது மனதில் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து மீண்டும் போராடுவதற்கான நம்பிக்கையை வாலிக்கு கொடுத்தது.
அந்தப் பாடல் ‘மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...'
சென்னையிலேயே நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் மூலம் போராடி 1959ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்' படத்தில் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்தது.
‘நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா' என்று பாடல் எழுதிக் கொடுத்தார். இந்தப்பாடலை ப.சுசிலா தனது இனிமையான குரலில் பாடி கொடுத்தார்.
எந்த கண்ணதாசன் பாடல் கேட்டு நம்பிக்கை பெற்று மறுபடியும் திரையுலகில் போராடி நுழைந்தாரோ அதே கண்ணதாசனுக்குப் போட்டியாக பாடல்கள் எழுத ஆரம்பித்தார் வாலி. அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது.
முக்தா சீனிவாசன் தனது ‘இதயத்தில் நீ' படத்தில் பாடல் எழுத அழைத்தார். கவிஞர் வாலியை எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பாடல் எழுதும் ஆற்றலைப் பார்த்துவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டார். ‘இத்தனை நாள் நீ எங்கிருந்தாய்' என்று.
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது ‘கற்பகம்' படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதச் சொன்னார். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படமும் வெற்றிப் பெற்றது. ‘கற்பகம்' பெயரிலேயே ஸ்டுடியோவை வாங்கி நடத்தத் தொடங்கினார் கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் பி.சுசிலாவே பாடினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்' படத்தில் பாடல் எழுத கவிஞர் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை டைரக்டர் ப.நீலகண்டன்தான் பெற்றுத் தந்தார். கவிஞர் வாலியை எம்.ஜி.ஆரிடம அறிமுகப்படுத்தியதும் ப.நீலகண்டன்தான்.
எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி' படத்திலும் அனைத்துப் பாடல்களையும் சரவண பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி எழுதச் சொன்னார். ‘படகோட்டி' படத்தின் முழு கதையை வாலி கேட்டதால் அவரையே அந்தப் படத்திற்கு ஒரு பெயரை சூட்டச் சொன்னார்கள். அவரும ‘படகோட்டி' என்று பெயர் வைத்தார்.
இப்படி எம்.ஜி.ஆருக்கு 61 படங்களில் தொடர்ந்து பாடல்களை எழுதி எம்.ஜி.ஆரின் பாராட்டுக்களை பெற்றார் கவிஞர் வாலி.
அதே போல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘அன்புக் கரங்கள்' படம் மூலம் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. சிவாஜிக்கு 60 படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி அவரின் பாராட்டுக்களைப் பெற்றார்.
கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் நிழற்படங்களிலும் ஒலித்தன. நிஜவாழ்க்கையிலும் அவை பிரதிபலித்தன.
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...' ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததை எதிரொலித்தது. அதன்பிறகு அவர் வெளியே வந்த பிறகும் அவரது மூன்றெழுத்து பெயரும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்...' இந்தப் பாடல் வரிகளும் நிஜமாகின. சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆரை முதலமைச்சராக மாற்றியது. அவரும் தனது ஆட்சியில் ஏழை எளியோரை வேதனைப்படாமல் பார்த்துக் கொண்டார்.
ஜெமினியின் ‘ஒளிவிளக்கு' படத்தில் கதைப்படி தீ விபத்துக்குள்ளான எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டி ஊர்மக்கள் பிரார்த்தனை செய்து பாடுவதுபோல் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார் வாலி.
‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'
இந்தப்பாடல் படத்தில் ஒலித்து பாராட்டுக்களை பெற்றது.
இதேப் போன்று எம்.ஜி.ஆர் நிஜமாகவே உடல்நலம் சரியில்லாத போது அவர் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் மக்கள் இந்தப்பாடலைப் பாடித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘தலைவன்' என்றொரு படம். நீண்ட காலமாகவே முடிக்கப்படாமல் கிடப்பிலிருந்த படம். எதனால் இந்தப்படம் எடுத்து முடிக்க தாமதமாகிறது என்று யோசித்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியை அழைத்து, 'இந்தப்படம் தாமதமாவதற்கு நீங்கள்தான் காரணம்,' என்று கூறினார். வாலியும் 'நான் எப்படி காரணமாவேன்?' என்று கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர். நீங்கள் எழுதி கொடுத்த பாடல் வரிகளை திரும்பவும் சொல்லிப்பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.
‘நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருக்க...' இப்படி பாடல்வரிகளை எழுதி கொடுத்தால் எப்படி படம் முடியும் வெளியே வரும் என்றார் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் கவிஞர் வாலியை அழைத்து ‘அடிமைப் பெண்' படத்தில் அம்முவை (ஜெயலலிதா) சொந்தக் குரலில் ஒரு பாடலை பாடச் சொல்லப் போகிறேன். அதற்கான ஒரு பாடலை எழுதுங்கள் என்றார். வாலியும் ‘அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார். அதை செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது சொந்தக் குரலில் பாடினார்.
ஒரு நாள் கவிஞர் வாலி எம்.ஜி.ஆரிடம், ‘அண்ணா நீங்கள் பின்னாளில் அவரைப் (ஜெயலலிதா) பாட வைக்கப் போறீங்க என்று தெரிந்ததான் அன்றே ஒரு பாடலை எழுதிவிட்டேன். அந்தப் பாடல்
‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன் தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் கோயில் இல்லாத இறைவன்''
இதை ‘அரசகட்டளை' படத்தில் செல்வி ஜெயலலிதாவே பாடி நடித்திருப்பார். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர் தன்னை மறந்து சிரித்துவிட்டார்.
அதே போன்று ‘அன்னமிட்டகை' படத்தில்
‘அன்னமிட்ட கை இது ஆக்கிவிட்ட கை'
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம்
வாழவைத்த அன்னமிட்ட கை'
என்று எழுதியிருந்தார் வாலி. இந்தப் பாடலின் கருத்துப்படி எம்.ஜி.ஆர். முதல்வரானதும் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டார். அவருடைய கை எத்தனையோ பேருக்கு அன்னமிட்ட கையாகத் திகழ்ந்தது.
‘பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' என்று ஒரு பாடலை எழுதினார் வாலி. எம்.ஜி.ஆர் புதிய கட்சி ஆரம்பித்ததும் நல்ல நல்ல பிள்ளைகள் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். அவரை நாடாள வைத்தார்கள். ‘காவல்காரன்' படத்தில் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது, கேட்டேன் தந்தாய் ஆசை மனது...' என்ற பாடலை எழுதியிருந்தார் கவிஞர் வாலி. அப்பொழுது எம்.ஜி.ஆர் குண்டடிப்படிருந்தார். அவர் உடல் நலம் பெற்று வந்து இந்தப் பாடல் காட்சியில் பாடி நடித்தார்.
இப்படி பதினாறாயிரம் பாடல்களுக்கு மேல் ஓய்வின்றி எழுதி சாதனைப் புரிந்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு மட்டும் நான்காயிரம் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி.
எல்லா தலைமுறையினருக்கும் பாடல்கள் எழுதிய ஒரே பாடலாசிரியர் கவிஞர் வாலி மட்டும்தான். இவர் ஒரு முருக பக்தர் அதனால் தான் இவர் எழுதிய பாடல் வரிகளிளெல்லாம் சக்திப்பெற்று நிஜங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
பாடலாசிரியராக மட்டுமல்ல.. ஒரு எழுத்தாளராக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவர்.
நடிகராக அவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். பொய்க்கால் குதிரையில் நடித்ததோடு, கதை வசனத்தையும் எழுதினார்.
1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் கவிஞர் வாலி. சொந்தப் பெயர் ரங்கராஜன். இவருக்கு வாலி என்று புனைப்பெயர் வைத்தவர் பாபு என்ற பள்ளி நண்பர்....... Thanks...
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்த நடிகை கண்ணம்மா அவர்கள் ஆரம்பத்தில் நாடங்கங்களில் நடிக்கும் போதே திருமணம் செய்து கொண்டு பின் அரிச்சந்திரா என்ற படத்தில் நடிகை ஆகி.
பின் பி.யு.சின்னப்பா அவர்கள் உடன் புகழ் பெற்ற ஜோடியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.. வயதான பின் அனைத்து தமிழ் முன்னணி நாயகர்களின் அம்மாவாக நடிக்க துவங்கி பெயர் பெற்றார்.
அந்த காலத்தில் 85000 ரூபாய் சம்பளம் வாங்கினார்... ஆந்திராவில் புகழ் பெற்ற வார நகைகள் என்று திங்கள் செவ்வாய் என்று தினம் தினம் போடும் நகைகளை வாங்கி குவித்தார்.
பின் தன் கணவர் நாகபூஷனம் உடன் இணைந்து 25 படங்களை தொடர் தோல்வி படங்களை தயாரித்து பொன் பொருட்களை இழந்தார்.
இழந்தவற்றை மீட்க தலைவர் சரோஜாதேவி நடித்த தாலி பாக்கியம் படத்தை எடுத்தார்.. அவர் கணவரே இயக்குனர்.
படப்பிடிப்பு கர்நாடகாவில் 150 பேர் கொண்டு நடந்து கொண்டு வரும் போது இவர் கொண்டு போன 5 லட்ச ரூபாய் பணம் களவு போக அங்கு உள்ளவர்களுக்கு பணம் கொடுக்க இல்லாமல் தவிக்க.
விஷயம் அறிந்த தலைவர் அங்கு இருந்து சென்னை மானேஜர் குஞ்சப்பன் மூலம் 5 லட்சம் வரவழைத்து கண்ணம்மா கையில் கொடுத்து அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றினார்.
ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி அடையாமல் பெரிய அளவில் லாபம் வராமல் நஷ்டம் இல்லாமல் ஓடினாலும் ,அவரின் கடன்களை அடைக்க போதவில்லை.
பின் சென்னையில் அவர் கணவர் மிச்சம் மீதி இருந்த சொத்து களையும் தொலைக்க அவர் வீடு மட்டும் மிஞ்ச
அதை ஏமாற்றி பிடுங்க பலர் தயார் ஆக ஒருவர் சொன்ன யோசனை படி அந்த வீட்டை எம்ஜியார் பெயருக்கு எழுதி கொடுங்கள் ஒரு பயல் கிட்ட வரமாட்டான் என்று சொல்ல.
அதன் படி தலைவருடன் அவர் பேச உங்கள் யோசனை சரி ஆனால் வீட்டு பத்திரம் உங்கள் கையில் இருக்கட்டும் என் பெயருக்கு எழுதி கொடுத்தது போல இருக்கட்டும் என்றார் பொன்மனம்.
அதன் படி கண்ணம்மா அவர்கள் 1964 மே மாதம் 7 ஆம் தேதி இறப்பதற்கு 4 நாட்கள் முன்னால் அந்த வீட்டு பத்திரத்தை தலைவர் இடம் கொடுக்கிறார்.
அவர் புதைக்க பட்ட போது அவரிடம் மீதி இருந்த கொஞ்சம் நகைகளை அவர் விருப்பப்படி அவரோடு சேர்த்து அடக்கம் செய்தார்களாம்..
பின் குறிப்பு...
நகைகள் உடன் கண்ணம்மா அவர்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்ட சேதி நெருப்பாய் பரவ அன்று முதல் அந்த இடுகாடு கண்ணம்மா பேட்டை என்று அழைக்க பட ஆரம்பித்ததாக ஒரு ஊர்ஜிதம் செய்ய படாத தகவலும் உண்டு.
அந்த அவரின் வீட்டை கஷ்டம் போக்க அந்த காலத்தில் யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு பெரும் தொகையை அவரிடம் கொடுத்து இருக்கிறார் நம் தலைவர்....
மற்ற புகழ் பெற்ற நடிகர்கள் அம்மாவாக அவர் நடித்து இருந்தாலும் தாயை காத்த தனயன் நம் தலைவர் மட்டுமே.
நன்றி....வாழ்க எம்ஜியார் புகழ்...தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி..
படத்தில் கே.பி. சுந்தராம்பாள் அவர்களிடம் ஆசி பெரும் தலைவர்....... Thanks...
நாகபூஷணம் தெலுங்கு நடிகர் ! 1974 புதுவை சட்டமன்ற பொது தேர்தல் ! புதுவையை சேர்ந்த ஒரு தொகுதி ஆந்திர அருகில் உள்ள ஏனம் தொகுதிக்கு அண்ணா தி மு க வேட்பாளரை நிறுத்த வேண்டும் ! அங்கு நம் கட்சி கிடையாது ,நிற்க்க வேட்பாளரும் கிடையாது ! கட்சி மானம் காப்பாற்ற புதுவையை சேர்ந்த அன்றய மகளிரணி செயலாளர் தெலுங்கு பேசும் ஜெயலட்சுமி என்ற அம்மையாரை ஏனம் வேட்பாளராக அறிவித்து அழைத்துச் சென்று தலைவர் செலவுலேயே தேர்தல் நடந்தது ! நடிகர் நாகபூழனம் அவர்களை இரட்டை இலைக்கு பிரச்சாரம் செய்ய வைத்தார் நம் தலைவர் ! வெற்றி வாய்ப்பை இழந்ததோம் ! பழைய நினைவுகள் ! நன்றி ! ...... Thanks...
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -24/04/2020 அன்று* வின்*டிவியில் வெளியான* தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் குழந்தைகளுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் நிறைந்த கருத்தான பாடல்கள் அமைப்பதில் முனைப்புடன் இருந்தார் .* குழந்தைகள்தான்* எதிர்காலத்தில் வளர்ந்த சக்திகள் , நாட்டை முற்போக்கு சிந்தனையுடன் வழிநடத்தும் தலைவர்களாக வரக்கூடியவர்கள்*பல உயர்ந்த பட்டம், பதவிகளை அடைந்து மத்தியிலும், மாநிலத்திலும் அரசுக்கட்டிலில் அமர்ந்து ஆட்சியை செவ்வனே நடத்தக் கூடியவர்கள்* அப்படிப்பட்ட குழந்தைகளின் கருத்தை கவரும் வண்ணம் ஏராளமான பாடல்கள் தன் படங்களில் அமையும்படி பார்த்துக் கொண்டார் .**
ஒருமுறை படப்பிடிப்பில் நடிகை கே.ஆர். விஜயாவுடன் நடித்து வந்தார். நடிகைக்கு காலையில் பெட் காபி குடிக்கும் பழக்கம் இருந்தது .* காபியில் உள்ள நச்சுத்தன்மைகளை விளக்கி நடிகை கே.ஆர். விஜயா அந்த பழக்கத்தை கைவிடும்படி செய்தார் .* இதுபோன்று படப்பிடிப்புகளில் பல கலைஞர்கள் உடன் நடிக்கும்போது அறிவுரைகள், போதனைகள் செய்ய தவறுவதில்லை .
எம்.ஜி.ஆர். தன் படங்களில் வரும் பாடல்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொண்டு பாடும்படி அமைய வேண்டும் ,அவர்கள்தான் நாளைய தலைவர்கள் ,என்று கூறியதோடு , குழந்தைகள் மீது அளவற்ற*அன்பு, பாசம் வைத்திருந்தார் .*நீதி போதனைகள், சமூக*சீர்திருத்த*கருத்துக்கள்*அடங்கிய*பாடல்கள ுக்கு முக்கியத்துவம் அளித்தார் .அந்த பாடல்கள்*சமூகத்தில் பெரிய தாக்கத்தை*ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அந்த வகையில்*கவிஞர்**பட்டுக்கோட்டை*கல்யாணசுந்தரம் எழுதிய*சின்ன*பயலே*, சின்னப்பயலே சேதி*கேளடா*,.......* ஆளும் வளரனும் , அறிவும்*வளரனும் அதுதாண்டா வளர்ச்சி. உன்னை*ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும்*மகிழ்ச்சி ..... மனிதனாக வாழ்ந்திட வேணும்*மனதில் வையடா*, தம்பி மனதில்*வையடா ....* வளர்ந்து வரும் உலகத்திற்கே நீ வலது கையடா*.. ... என்று காலம் கடந்து*நிற்கும்*வைர வரிகளை* அரசிளங்குமரி திரைப்படத்தில்*அறிமுகப்படுத்தினார்.**
சில*காலம்* சந்தர்ப்ப சூழ்நிலை, சமுதாய சீரழிவு*காரணமாக*திருடனாக வாழ்ந்தவன் ,நல்லவனாக திருந்தி வாழ்வதற்கு ஏற்ப ஒரு திரைக்கதை தயாரானது . அதற்கு*டைட்டில்**பெயர் வைப்பதற்கு* பல பேர் சொன்ன*தலைப்புகளை நிராகரித்து , அந்த சமயத்தில் வித்வான் லட்சுமணன் அவர்களின்*யோசனைப்படி திருடாதே*என்று தலைப்பை*தேர்வு செய்து , அதற்காக*அவருக்கு*ரூ.500/- பரிசளித்தார்* எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் படத்தின்*தலைப்புகளை தேர்வு செய்வதில் எம்.ஜி.ஆர். மிகவும் கவனமாக*இருந்தார்.எதிர்மறை கருத்துக்கள்*மக்களை சென்றடையக்கூடாது என்று* .*மக்களுக்கு*பாசிட்டிவ்*ஆன* தலைப்புகள், செய்திகள், கருத்துக்கள்*தன் படத்தில் புகுத்துவதில் ஆர்வம் செலுத்தினார் .இந்த படத்தில்*கவிஞர் பட்டுக்கோட்டை*கல்யாண சுந்தரத்தின் திருடாதே, பாப்பா திருடாதே,வறுமை நிலைக்கு*பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே .......சிந்தித்து*பார்த்து செய்கையை*மாத்து, சிறிசாய் இருக்கையில் திருத்திக்கோ,தெரிஞ்சும்*தெரியாம*நடந்திருந்தா திரும்பவும் வராமல்*பாத்துக்கோ*..........திருடனாய்*பார்த்த ு திருந்தாவிட்டால் திருட்டை*ஒழிக்க முடியாது*போன்ற*வரிகள்*எக்காலத்திற்கும் பொருந்தும்*.
கன்னித்தாய் என்கிற*படத்தில்*குழந்தைக்கு அறிவுரை சொல்லும்*பாடலில்*தவிதவிக்கிற ஏழைக்கெல்லாம் திட்டம் போடணும்*, அதை சரிசமமான*பங்கு போட சட்டம் போடணும், குவியக்குவிய விளைவதெல்லாம் கூறு போடணும்*ஏழை குடிசை*பகுதியில்*பாலும் தேனும்*ஆறா*ஓடணும்*. ... கேளம்மா*சின்ன*பொண்ணு கேளு*என்ற பாடலில் இந்த வரிகள்*இருக்கும்.*ஏழை எளியோரின் துயர் துடைக்கும் வகையில்*தன் எண்ணங்கள் இப்படித்தான் பிரதிபலிக்கும் என்பதை*இந்த பாடலில்*வடிவமைத்தார் எம்.ஜி.ஆர்.*
*வேட்டைக்காரன் படத்தில்*எம்.ஜி.ஆர். கௌபாய்*வேடத்தில்*நடித்தார்.எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான வேடம்.* அந்த படத்தில்*மிகவும் சுறுசுறுப்பாகவும், ஓடியாடி*நடித்தார். சில*காட்சிகளில் துள்ளல்கள் அதிகம்.* ஒரு இடத்தில உட்காராமல் படுவேகத்துடன், பம்பரம் போல சுழன்று சில காட்சிகளில் நடித்திருப்பார் படம் முழுவதும் மிகவும் உற்சாகமாக*நடித்திருப்பார் ..* இந்த படத்தில் வெள்ளி நிலா முற்றத்திலே என்ற பாடலில்*, தன் குழந்தைக்கு அறிவுரை சொல்லும்போது, நான்கு பேர்கள்*போற்றவும், நாடு உன்னை வாழ்த்தவும், மானத்தோடு வாழ்வதுதான் சுய மரியாதை ......என்கிற வரிகளில் சுய மரியாதை பற்றிய விளக்கத்தை மிகவும் எளிதாக*குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில்*இருந்தது*.
நான் ஏன் பிறந்தேன் என்கிற படத்தில்*குடும்ப*பாங்கான கதை.* அவரது குடும்பத்தில் குழந்தைகள் நால்வர் இருப்பர்.* எம்.ஜி.ஆர். நடித்த*குடும்ப*பாங்கான படங்களிலேயே மிகவும் வித்தியாசமானது . வறுமையில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற , திருமணம் ஆனவர்*என்ற உண்மையை*சொல்ல முடியாமல் , தன்னை காதலிப்பவரின் உடல்நலத்தையும், உயிரையும்*காப்பாற்ற வேண்டிய பொறுப்புகளை சுமந்து*பல துன்பங்களை கடந்து*இறுதியில் குடும்பத்துடன் ஐக்கியம் ஆவதுதான் கதை .இந்த படத்தில்*, தம்பிக்கு*ஒரு பாட்டு*அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு என்ற பாடலில்* உயர்ந்தவர் யாரும் சுயநலம் இருந்தால்*தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே, உழைப்பால் பிழைப்போர்*தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவராவார் குணத்தாலே என்கிற* வரிகளில் ஜனநாயக*நாட்டிற்கு*தேவையான பொது உடைமை கருத்துக்கள்*அடங்கி இருக்கும் . வளரும் குழந்தைகளுக்கான நீதி போதனைகள், அறிவுரைகள் இந்த பாடலில் அமைந்தன .
எம்.ஜி.ஆர். தான் நடித்த**தனக்கு*பிடித்த*ஒரு சில*படங்களில் பெற்றால்தான் பிள்ளையா முக்கியமானது .* அதில் வரும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்கிற பாடலில் , கருணை இருந்தால்*வள்ளலாகலாம்.* கடமை இருந்தால் வீரனாகலாம். பொறுமை இருந்தால் மனிதனாகலாம்,* இந்த மூன்றும் இருந்தால்*தலைவனாகலாம். என்ற வரிகள் அமைந்திருக்கும்.* வளரும் குழந்தைகள் நாளைய தலைவர்களாகவும், கடமை வீரனாகவும், பொறுப்பு மிகுந்த தேசியவாதியாகவும் உருவாக*இந்த பாடல் நல்ல படிப்பினையாக*இருக்கும் .இந்த பாடலில்*மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்று ஒரு வரி இருக்கும். எம்.ஜி.ஆரின் உச்சரிப்பு அப்படியே இருக்கும். ஆனால் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனபோது* , இந்த படம் மறு தணிக்கைக்கு*சென்ற போது பாடல் வரியில்*அறிஞர் அண்ணா*போல் என்பதற்கு பதிலாக திரு.வி.க . போல் என்று வரும்படி செய்தார்கள்.* அப்போதைய அரசியல் சூழலில் சில*எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு இப்படி சில*சோதனைகள்*கொடுத்து*அவரது*தேர்தல் வெற்றிக்கு*தடை ஏற்படுத்தினர். ஆனால் அதையெல்லாம் மீறி*அவற்றை*தவிடு பொடியாக்கி*எம்.ஜி.ஆர். ஆட்சி பீடத்தில்*அமர்ந்தார் என்பது வரலாறு .
ஆனந்த ஜோதி படத்தில்*எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்தார் .இந்த படத்தில்*வரும் ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம்,* தலைவன் ஒருவன்தான்*என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்*என்ற பாடலில் , தர்மத்தின்*சங்கொலி*முழங்கிடுவோம், தமிழ்த்தாயின் மலரடி*வணங்கிடுவோம்**என்கிற வரிகளில் மொழிப்பற்று, நாட்டுப்பற்று உணர்வுகள் அடங்கிய கருத்துக்கள்*இருக்கும்.* அந்த காலத்தில் , இந்த பாடல்*பல பள்ளிகளில், சுதந்திர*தினம், குடியரசு தின*விழாக்களில்*மாணவ மாணவிகள்*பாடும் பாடலாக*அமைந்தது .
நம் நாடு படத்தில்தனது அண்ணனின் குழந்தைகளுக்காக** நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, என்கிற பாடலில்* விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் . தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் . என்ற வரிகள்*குழந்தைகளுக்கு நீதி போதிக்கும்* *வாத்தியாராக இருந்து சொன்ன கருத்துக்கள்*, நிஜத்தில்*எம்.ஜி.ஆர். தனது அண்ணன் சக்கரபாணி அவர்களின் குழந்தைகளை* தன் குழந்தைகளாக பாவித்து அவர்களை*படிக்க வைப்பதில் இருந்து , திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தானே* முன்னின்று நடத்தி வைத்துள்ளார்*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல்**சினிமா , அரசியல் , பொது வாழ்க்கை என்று மூன்று உலகிலும்*உச்சத்தை*தொட்டவர் வேறு எவருமில்லை .ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஒரு மனக்குறை*இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில்*கவிஞர் வாலி எழுதிய பாடலில்*பணம் படைத்தவன் படத்தில்*தனக்கொரு குழந்தை பிறக்கும்*தருவாயில், எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னை போலவே இருப்பான், தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன்* (பேரறிஞர் அண்ணா*) வழியிலே*நடப்பான்*என்ற*பாடலில் நடித்தார் .பொதுவாக* எம்.ஜி.ஆர். குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார் . அதனால்தான் , வறுமை, பசிப்பிணி காரணமாக எந்த குழந்தையும் பாதிக்க கூடாது என்கிற வகையில்*பள்ளிகளில், குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார் .* ஆரம்பத்தில் நிதிநிலை நெருக்கடி, எதிர்க்கட்சிகள் விமர்சனம் , அமுல்படுத்துவதில் சிக்கல்*இவையெல்லாம் இருந்தும்*திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இன்று இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த திட்டத்தை*அமுல்படுத்தி வருகின்றன தமிழகத்தில் எம்.ஜி.ஆர். குழந்தைகள் சத்துணவு கூடம் என்ற பெயரில் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது . உலகமே இந்த திட்டத்தை வியந்து பாராட்டுகிறது . இதன் காரணமாக*பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .
எம்.ஜி.ஆர். சொந்தமாக இயக்கி தயாரித்த*நாடோடி மன்னன் படத்திற்கு வசனம் எழுதியவர்கள் இருவர். ஒருவர் கவிஞர் கண்ணதாசன், இன்னொருவர் எம்.ஜி.ஆர். கதை இலாகாவை சார்ந்த*ரவீந்தர். ரவீந்தருக்கு ஒரு சமயம்*திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது .எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மூலம் எம்.ஜி.ஆருக்கு*விஷயம் தெரிய வருகிறது .* எம்.ஜி.ஆர். ரவீந்தரை*திருமண பரிசாக*என்ன வேண்டும் கேள்,ஏதுவாகிலும் செய்கிறேன் என்று சொன்னபோது மாங்கல்யம் வாங்குவதற்கு ரூ.16/- வேண்டும் என்று கேட்டார் .அதை நீங்கள்தான்*தரவேண்டும் என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். மறுத்ததோடு*, நான் இருமுறை*திருமணமாகி* மனைவியரை இழந்தவன். எனக்கு குழந்தை இல்லை.* எனது அண்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். நீ வாழ வேண்டியவன். எனவேதான்*என் அண்ணனை*தரும்படி*கேட்டுக் கொண்டேன் என்று விளக்கினார் .**
ஊருக்கு உழைப்பவன் படத்தில்*கவிஞர் முத்துலிங்கத்தின் பிள்ளை தமிழ் பாடுகிறேன், ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் என்ற பாடல்* வரும்.,இந்த பாடலில்*எம்.ஜி.ஆருக்கு பிள்ளை இல்லை என்ற மனக்குறை, துயரம், சோர்வு*எல்லாம் தன்னுடைய முகபாவத்தில் தெரியும்படி***உணர்வுபூர்வமாக*நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார்*, எல்லா துறையிலும் சாதித்த*எம்.ஜி.ஆர். தனக்கு*வாரிசு இல்லை என்ற மனக்குறையை போக்க தவித்தது போல் இந்த பாடல் அமைந்தது .*
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே*, உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே*என்கிற தத்துவப்பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த பாடலின்*கருத்துக்கள் அமைந்தன . எம்.ஜி.ஆர். குழந்தைகளை நேசித்ததன்*பலனாக*, அவர்களது*ரசிப்பு தன்மைக்கு ஏற்றவாறு ,எந்தெந்த சொற்களை கேட்டால் குழந்தைகள் உற்சாகம் அடைவார்களோ ,அதற்கு தகுந்தபடி ,அவர்களின் சிரிக்கும் பாஷையில்* சிக்கு*மங்கு சாச்சா பாப்பா என்று குழந்தைகளே கோரஸாக பாடும்படி*பாடலில் முதல் வரியில் அமைத்திருந்தார் .
1972ல் தி.மு.க.வில் இருந்து கணக்கு கேட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால் அவர் கட்சி பதவி ஆசையினாலோ, அதிகார பதவி ஆசை யினாலோ அப்படி கேட்கவில்லை .* தவறு எங்கிருந்தாலும் தட்டி கேட்பது என்பது அவரது சிறிய வயதில் இருந்தே இருந்த வழக்கத்தில் ஒன்று .*** அவர் கும்பகோணம் ஆனையடி பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கும்போது கோடையில் மண்பானை வாங்க வேண்டி பள்ளி ஆசிரியர் சிறுவர்களிடம் தலா 3 பைசா, 5 பைசா என்று வசூல் செய்து ,திட்டமிட்டபடி, பெரிய பானை வாங்காமல் , சிறிய பானை வாங்கி , காசு மிச்சம் சேர்த்திருந்தார் . இதை அறிந்து சிறுவர்களிடம் கலந்து ஆலோசித்த அவர் அதை தட்டி கேட்க முற்பட்டார் என்று தான் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற நூலில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .
தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் தனது பாடல்கள்மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை ,பாட வகுப்பில் சொல்வது போல , ஒரு பல்கலை கழகமாக , வாத்தியார் எம்.ஜி.ஆர். திகழ்ந்திருப்பார் .* தனது ஒவ்வொரு செயலிலும் யாருக்காவது , எதையாவது நல்ல முறையில் செய்ய வேண்டும், எளிதாக சொல்ல வேண்டும்* தனது ஒவ்வொரு மூச்சிலும் , தன்னுடன் பழகுபவர்கள், தொடர்புடையவர்கள் வாழ்க்கைத்தரம் உயர தன்னாலான உதவிகள் தன் வாழ்நாள் முழுவதும்*செய்யவேண்டும் என்பதை, கொள்கையாக எந்தவித* பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்து வந்தார் ..**
மன்னாதி மன்னன் படத்தில் வரும் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடல் தி.மு.க. வின் கொள்கை பாடலாக இருந்தது எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பும் அவர்* காரில் பயணித்தபோது இந்த பாடல் ஒலிக்காத நாளில்லை என்று சொல்லலாம் .**
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் விவரம் :
1.சின்ன பயலே சின்ன பயலே - அரசிளங்குமரி*
2.திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே*
3.கேளம்மா சின்ன பொன்னு -* *கன்னித்தாய்*
4.வெள்ளி நிலா முற்றத்திலே -வேட்டைக்காரன்*
5.தம்பிக்கு ஒரு பாட்டு -நான் ஏன் பிறந்தேன்*
6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*
7.ஒருதாய் மக்கள் நாமென்போம் - ஆனந்த ஜோதி*
8. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே -நம் நாடு*
9.எனக்கொரு மகன் பிறப்பான் - பணம் படைத்தவன்*
10..பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் -* ஊருக்கு உழைப்பவன்*
11.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*
12.ஏன் என்ற கேள்வி* -ஆயிரத்தில் ஒருவன்*
கண்ணாம்பாள் அருமையான பழம் பெரும் நடிகை. பி.யு.சின்னப்பாவோடு கண்ணகி திரைப்பாடல் நடித்திருப்பார்கள். இப்படத்தில் இரு வேறு காட்சிகளில் சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். ஒரு காட்சியில் முருகனாக தலைவர் அமர்ந்து கொண்டு, பரமசிவன் பார்வதி நடனத்தை ரசித்தபடி "ஆஹா..ஓகோ...பேஸ் பேஸ்" என்பார். வசனமும், நடிப்பும் அவ்வளவுதான். அதே படத்தில்; பால் கோவலனாக எம்.ஜி.ஆர் , சிறு பெண்ணான கண்ணகியுடன் ஒரு பாடல். இந்த காட்டியே மெகா டிவியில், சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆர். என்று ஒரு புதிர் போட்டு, இவர் யார் என்று தெரிகிறதா? என்று கோர்வையாக காட்டி இப்போது இவர் யார் என்று நாங்களே விளக்குகிறோம் என்று. நமது எம்.ஜி.ஆர் பாடலை போட்டு என்றத் தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் நல்ல ரசிகன் என்னை தெரியுமா? விளக்கினார்கள். மெகா டி.வில் ஒளிபரப்பான அந்த காட்சியை நானும் வெளியிட ஆசை . முயற்சிகள் செய்கிறேன். நன்றி!..... Thanks...........
பல எண்ணற்ற நன்மைகளை பலருக்கு செய்து மறைந்த "எம்.ஜி.ஆர்" எனும் "மாமனிதனை" நினைக்கும் போது கண்களில் கண்ணீர் பெருக்கின்றது! அவர் வாழ்ந்த காலத்தில் அவரை பார்த்தும், வாழ்ந்தும் வந்ததிற்க்கு இறைவனுக்கு நன்றி!"..... Thanks...
100-ஐக் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆர்..!
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் ஆகிய சிறப்புப் பெயர்களால் சினிமா உலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் அழைக்கப்பட்டவர்.
எம்.ஜி.ஆரின் மக்கள் தொண்டு அரசியல் உணர்வால் துவங்கப்பட்ட அதிமுக., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. காமராசரால் கொண்டு வரப்பட்டு, எம்ஜிஆரால் நிறைவேற்றப்பட்ட சத்துணவுத் திட்டத்தால் மாணவ மாணவியர் பலர் பசி இன்றி, இன்று கல்வி பயின்று வருகின்றனர்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை வருடம்தோறும்... பலர் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் இன்று அவரது புகைப்படம் வைத்து, மைக் செட் கட்டி, அவர் நடித்த சினிமாப் பாடல்களைப் போட்டு, அவருடைய பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.
வறுமையில் பிறந்து, வள்ளலாக உயர்ந்து, நடிகர், அரசியல்வாதி, மூன்று முறை முதல்வர் என பல்வேறு பரிமாணங்களை எடுத்த இவரின் புகழ் என்றும் அழியாதது.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் தலைசிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். அவருடைய வாழ்க்கையில் நடிப்பும், அரசியலும் ஒரு முக்கியப் பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, நாடகக் குழுக்கள் பலவற்றில் பிரபலமாகத் திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகுந்த பற்றுடையவராக இருந்ததால், இளம்வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
எம்.ஜி.ராமச்சந்திரன், தனது சொந்தக் கட்சியாக, அ.தி.மு.கவை உருவாக்கினார். வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையை அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கியக் காரணம், அவர் ஏழைகளின் மீது வைத்த அன்பும் பரிவும்தான். அதனால்தான் அவர் ஏழைகளின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்த முதல் இந்தியத் திரையுலகப் பிரமுகர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் சிறுவனாக இருந்த போது, தந்தை காலமானார். அதனால், அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் காரணமாக நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., தமிழ்த் திரையுலகில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தினார்.
1960ல், எம்.ஜி.ஆருக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ விருது’ அறிவித்தது. ஆனால், அரசின் மீதான பற்றற்ற நடத்தையின் காரணமாக அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த விருதில் பாரம்பரிய ஹிந்தி சொற்களுக்குப் பதிலாக தமிழில் அவை இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
‘ரிக்சாக்காரன்’ படத்தில் அவரது தேர்ந்த நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல் பெற்றார் எம்.ஜி.ஆர்.
சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
தமிழகத்தில் சமுதாய நன்மைக்காக அவரின் பங்களிப்பை மரியாதை செய்யும் விதமாக அவர் மறைந்த பின்னர் 1988ல் ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது.
என்னதான் விருதுகள் பெற்றாலும், இன்றும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
அவர பி்றந்துநூற்றாண்டு கடந்தும் மறைந்து 33 ஆண்டுகள் ஆகியும் எம் ஜி ஆரின் பிறந்த நாட்கள்வெகு சிறப்புடன் கொண்டாடப் படுகிறது........ Thanks...
அபூர்வ மனிதர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எமஜிஆரின் புகழ் சாகாவரம் பெற்றது.
என்றுமே அழியாது..... Thanks...
வணக்கம்...
அவர் ஒரு அவதாரபுருஷர்.
அவரை என்னால் ஒரு சித்தராகத்தான் நினைக்கத் தோன்றுகிறது........ Thanks...
இறைவா எங்கள் புரட்சித்தலைவரை தி௫ம்ப தா ஏழைகள் தங்கள் தலைவனின் வி௫ந்தோம்பலை பொிதும் எதிா்பாா்கிறாா்கள் காரணம் அவரைப்போல் ஒ௫வா் இந்த பூமியில் இல்லை வாழ்க எம்மான் எம்ஜிஆா் எழுந்து வா தலைவா... Thanks...
அவனவன் வீட்டில் அவனுகளுக்கே சோறு பொங்கி போடரது கிடையாது.ஓட்டலில் இருந்து வாங்கி போட்டாங்க.இதல தொண்டர்களுக்கு வேரையா ? . யாரோடு யாரை ஒப்பிடுகிறீர்கள் (தலைவரோடு?!)அந்த தகுதியெல்லாம் இப்ப இருக்கிற எவனுக்கும் இல்லை......... Thanks...
இனிமேல் எந்த நடிகருக்கும் அமையாது ...தலைவர் க்கு நிகர் தலைவர் தான்... மற்ற எந்த கயவர்கள் இடம் கிடைக்காது... இப்போது தலைவர் புகழும் வளர்ந்து கொண்டிருக்கிறது அடுத்த தலைமுறை யில் புரட்சி தலைவர் புகழும் வளர்ந்து கொண்டிருக்கிறது ...நன்றி ...வணக்கம்... Thanks...
இனிமேல் எந்த நடிகர் தலைவர் அவர் போல வீட்டில் வருவோருக்கு பொங்கி போட்டு சாப்பிட வைப்பார் ...இந்த உலகில்
வாழ்க... அவர் புகழ்..நன்றி... Thanks...
பள்ளிகளில் மக்கள் திலகம் கருத்துக்களை பாடப் புத்தகங்களாக அச்சிட்டு அனைத்து வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் போதிக்கவேண்டும் நாடு முன்னேற சிறப்பான ஒரே வழி...... Thanks...
இது வேறு உலகம்!!
--------------------------------
பொதுவில் அனைவருக்குமே மகிழ்ச்சி தரும் பதிவுகளை இட்டாலும்--
அடியேன் டேஸ்ட்டுக்கும் அவ்வப்போது பதிவுகள் இடுவேன்.
அந்த வகையில் இன்று--
மரணம் தந்த மயான அதிர்ச்சியை எம்.ஜி.ஆருக்கு இணையாக என் இதயத்தில் அப்பியது கண்ணதாசன்!!
எந்தவிதமான பிற ஈடுபாடுகளும் அவனுக்கு இல்லாதிருந்தால் அவன் உலகின் ஒப்பற்றக் கவியாய் மிளிர்ந்திருப்பான் என்ற பலரின் வாதத்தை நான் பலமாக மறுப்பேன்!!
நண்பர்கள்,,கட்சி ,,ஜாமீன் கையெழுத்து இப்படி ஏதும் இல்லாதிருந்தால் இந்தக் கவியிடமிருந்து உன்னதக் கவிதைகளே உருவாகியிருக்காது என்பதே என உரத்துச் சொல்வேன்!
ஒருவேளை இவன் மேலை நாட்டில் பிறந்திருந்தால் உலகக் கவியாக உலா வந்திருக்கக் கூடும்!!
குறைந்த பட்சம் வட இந்தியாவில் மலர்ந்திருந்தாலாவது,,காளிதாசனை இவன் வடிவில் நாம் கண்டிருக்கலாம்!!
இவனது சிறப்பா--நமது விருந்தா என்னும் பட்டி மன்றத்தில் நம் ஆசையே வெல்வதால்-
சிறுகூடற்பட்டியில் இவன் சிரித்து எழுந்ததே நமக்குப் போதும்?
மக்கள் திலகம் என்ற அடைமொழி எம்.ஜி.ஆருக்கும்-
கவியரசு என்றக் கட்டளை இவனுக்கும் கொடுக்காத சிறப்பையா வேறு விருதுகள் இவர்களுக்குக் கொடுக்கப் போகிறது??
கண்ணதாசனைத் தம் கருத்தில்,,தம் கடைசிப் பயணம் வரை வைத்து மகிழ்ந்தவர்--
எனது எழுத்துலக பிரமிப்பு சோ!!!
சோ கண்ணதாசனை நேசித்த அளவு,,கவிஞரை அவர் குடுப்பத்தாரேக் கொண்டாடியிருப்பார்களா என்பது சந்தேகமே??
இத்தனைக்கும்---
இரண்டு பேரும் காட்டுத் தனமாக தாக்கிக் கொண்டவர்கள்!!
திராவிட அரசியலை கவிஞர் கொண்டிருந்தபோது-
திராவக அரசியல் அது என்று சொன்னவர் சோ?
தேசியக் கட்சியில் பயணித்தபோதோ--
கர்மவீரரைக் கருத்துல் கொண்டார் சோ என்றால்--
காமராஜர் காலத்திலேயே,,அவருடன் பயணித்த கவிஞர் இந்திராவை ஏற்றுக் கொண்டார்?
மாறுபட்ட கருத்துடைய இருவரையும்
கூறுபட்ட விரோதம் எந்த காலத்திலும் அணைத்ததே இல்லை!! சொல்லப் போனால்--
இக்கட்டான சமயங்களில் எல்லாம் சோவிடம் கருத்து கேட்டு,,அதன்படி நடப்பார் கவிஞர்?
தமிழ் நாடு அரசு,,கவிஞருக்குக் கலைமாமணி விருதை வழங்கியபோது-
சோவின் ஆலோசனையின் பேரில் அதை வாங்க மறுத்துவிட்டாராம் கண்ணதாசன்?
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கொடுக்க வேண்டியதை இப்போதுக் கொடுப்பது விருதுக்குப் பெருமை. ஆனால் உங்களுக்கு அவமானம் என்று தடுத்தாராம் சோ??
சோவும்,,கவிஞரும் குமுதம் வார இதழுக்காக சந்தித்துக் கொண்டபோது,,கவிஞரின் அரசியல் நையாண்டி சோவையே வியக்க வைத்திருக்கிறது?
சாம்பிளுக்கு ஒன்றிரண்டு--
சன்னியாசி,,சன்னியாசினியுடன் கூடியதால் பிறந்த குழந்தை---ஜன நாயகம்?
தனிப்பட்ட தகுதிகள் தேவையில்லாத துறைகள்--சினிமா,,அரசியல்!! காரணம் இந்த இரண்டிலும் நான் இருந்திருக்கிறேன் என்று கவிஞர் சொல்ல--
பத்திரிகையை விட்டுவிட்டீர்களே என்று தன்னையேக் குறிப்பிட்டு சோ கேட்க--
அதைக் குறிப்பிடுவாய் இருந்தால் அதிலும் உங்களுக்கு முன்னர் நான் இருந்திருக்கிறேனே என்றாராம் கவிஞர்!!
தங்கள் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் இருவருக்கும் இடையே எத்தனை போட்டி?
கவிஞர் சொன்னது--
திருடனை போலீஸ் பிடித்தால்--சட்டம்!
போலீசை திருடன் பிடித்தால்--ஜன நாயகம்???
எண்ணங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் துக்ளக்கில் கவிஞரை தொடர்ந்து எழுத வைத்த சோ--
கவிஞர் மீதான தம் அன்பை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்--
சோ எழுதிய அந்த நாலுவரிப் பாட்டு--
வீடு வரை விஸ்கி
வீதி வரை பஞ்சு!
காடு வரை அரசியல்-
கடைசி வரை சோ???
என் சிறப்புக்களை உங்களுக்கு வைப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. முதற்கண் சிறப்பான விஷயமே என்னிடம் இல்லை?
நான் எதில் அழிந்தேன் என்று சோ குறிப்பிட்டிருக்கும் இந்த நாலுவரியை உங்களுக்கு என் சொத்தாக நான் வைக்கிறேன் என்றாராம் கவிஞர்??
வெள்ளை9 அறிக்கையென வாழ்ந்த இரு மேதைகளின் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று நான் பெருமைப் படுவேன். நீங்கள்???... Thanks...
இன்றைய தினமலரில் 25/4/2020
உலகம் சுற்றும் வாலிபன் (1973) திரைப்பட விமர்சனம்......மறைந்தே 33 வருசமாச்சு...இன்னும் இவ்வளவு ஈர்ப்பா.....O god..... Thanks...
தினமலர் பத்திரிக்கை
பழையப்படத்திற்கு
விமர்சனம் போடும்
புதுமையும் புரட்சித்
தலைவர் செத்தும்
கொடுக்கும் சீதக்காதி யாக விளங்கும்
அதிசயமும் நான்
என் வாழ்நாளில்
எப்போதும் கண்டது
இல்லை. TRP ரேட்டுக்காக சன் டிவி
தலைவர் படத்தைப்
போட்டு தன்னை தக்க வைத்துகொள்ளும்ஆச்சரியமும்
இப்போது நடக்கின்றது.......... Thanks...
"உலகம் சுற்றும் வாலிபன்" சாதனை படைத்த திரைக் காவியம் ! கொழும்பில் இரண்டு தியேட்டரில் 225 நாள் கடந்து ஓடியது !...Zia Abdul Razak... Thanks...
பார்க்காதவர்கள் புதுமையாக பார்த்தவர்கள். பார்த்தவர்கள் மீண்டும் பார்த்து பரவசமடைந்தார்கள். புதிய தலைமுறைக்கு பார்க்கின்ற வாய்ப்பு வரப்பிரசாதம். Night Show பார்க்கின்ற அனுபவம்.... Thanks...
Unbelievable editing
Brilliant direction
With evergreen songs...
He utilised the actors properly.......... His directorial touch was great in this movie. Photography was too good. Especially in Thanga thoniyile song you will find an aeroplane will pass through thalivar's legs...... Thanks...
மிகவும் அற்புதமான பதிவு இதய தெய்வத்தை பற்றி. அவர் தொடர முடியாத கல்வியை அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்ற ஒரு உன்னதமான நோக்கோடு அவர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப் பட்டவை தான் தொழில் கல்விக் கல்லூரிகள் என்பதை சேர்த்திருந்தால் இக்கால தலைமுறைக்கும் சென்றடைந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அருமை. வாழ்த்துக்கள் சகோ...... Thanks....
MGR Filmography Film 47 (1961) Poster
1960ஆம் ஆண்டு வெளியான எம்ஜியாரின் மூன்று படங்களில் இரண்டு ஆவரேஜாகத்தான் போனது; மூன்றாவது படமான மன்னாதி மன்னன் பிக்அப் செய்து கொண்டது. ஆனால், அதை நூறு நாள் வெற்றிப்படமாக்காது விதி சதி செய்து விட்டது!
நெடுங்காலம் அண்டர் ப்ரொடக்ஷனில் இருந்த அரசிளங்குமரி 1961ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வருவது உறுதியானதும், 1960 தீபாவளியில் ரிலீஸாகி இன்னமும் ஓடிக்கொண்டிருந்த மன்னாதி மன்னன் இந்தப் புதுப்படத்திற்கு பலியாக்கப்பட்டு தூக்கப்பட்டது! ஆனால், விதியின் விளையாட்டுதான் என்னே!
ம.மன்னனையே தொடர்ந்து ஓட விட்டிருக்கலாம் என்பதைப் போல புதிதாக வெளியான அரசிளங்குமரி .எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை
கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் உருவான இந்தப் படத்தில் பத்மினி எம்ஜியாரின் சகோதரியாக நம்பியாருக்கு ஜோடியாகத் தோன்றியது பெரும்பாலாரோல் ரசிக்கப்படவில்லை.
இப்படத்தின் இசையை ஜி.ராமநாதன் அமைத்திருந்தார். மொத்தம் 11 பாடல்களில் ஐந்தினை எழுதியவர் இடதுசாரி கருத்துகளுக்குப் பெயர் பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பின்னாளில் இயக்குனர் திலகமாகிய கேஎஸ் கோபாலகிருஷ்ணன் ஒரு பாடல் வரைந்தார்.
ஸ்காராமுஷ் என்னும் ஆங்கிலப்படத்தின் தழுவலான இப்படத்தின் சேவிங் கிரேஸ் என்றால் பட்டுக்கோட்டையின் பாடலான டிஎம்எஸ் பாடிய எவர்க்ரீன் ஹிட்டான சின்னப்பயலே பாடலை மட்டுமேதான் கூற இயலும். ASA. சாமி இயக்கத்தில் தொடங்கபட்ட படம் காசிலிங்கம் பின்பு இயக்கினார்
கதை .
தளபதி நம்பியார் தான் ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி எம்ஜிஆரின் தங்கை பத்மினியை மணந்துகொள்கிறார். உழவர் மகனான எம்ஜிஆர் தன் பரம்பரை வாளை கொண்டுபோய்விட்ட நம்பியாரின் அப்பாவிடம் இருந்து அந்த வாளை மீட்டு வர செல்கிறார்.வழியில் ஆபத்தில் இருக்கும் இளவரசி ராஜசுலோசனாவையும் பிரமுகர் அசோகனையும் காப்பாற்றுகிறார். ராஜ சுலோ.வும் எம்ஜிஆரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். நம்பியார் ராஜாவாக ஆசைப்பட்டு பத்மினியை கழற்றிவிட்டுவிட்டு சுலோ பின்னால் ஸ்லோவாக போக ஆரம்பிக்கிறார். எம்ஜிஆர் ஒரு மல்லனை தோற்கடித்து தன் வீரத்தை நிரூபித்து நம்பியாரின் அப்பாவிடம் இருந்து தன் பரம்பரை வாளை மீட்கிறார். ஆனால் கிராமத்துக்கு போனால் பத்மினியும் நம்பியாரும் இல்லை. அவர்களை தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து நம்பியாரை கண்டு அதிர்ச்சி அடைகிறார். வீரம் இருந்தும் வாள் பயிற்சி இல்லாத எம்ஜிஆரை சுலோ முன்னால் சுலபமாக தோற்கடிக்கிறார். நடுவில் தன் தங்கை மகனை தூக்கிக்கொண்டு “சின்னப் பயலே சின்னப்பயலே” என்று புத்தி எல்லாம் சொல்கிறார். கணவன் சொல்லை தட்டாத பத்மினி நம்பியாரின் அப்பாவிடமே சேர்கிறார். எம்ஜிஆரும் நம்பியாரின் அப்பாவிடமே வாள்பயிற்சி பெறுகிறார். கடைசியில் நம்பியாரிடம் பெரிய சண்டை போட்டு, நம்பியார் திருந்தி, சுபம்!
எம்ஜிஆரும் நம்பியாரும் போடும் க்ளைமாக்ஸ் சண்டை பிரமாதம். எம்ஜிஆர் இரும்பு கையுறைகளோடு போடும் மல்யுத்தமும் அபாரம்.
ஆனால், எம்ஜியார் ரசிகர்கள் கலங்கத் தேவையின்றி அவரது நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் உறுதி செய்வதாக அடுத்த படம் அமைந்தது!..... Thanks...
எம் ஜி ஆரின் தனிப் பெரும் கொடை பண்பு.
அவர் கேட்டாலும் கொடுப்பார், கேட்காவிட்டாலும் கொடுப்பார், கேட்க விடாமலும் கொடுப்பார்.
கொடுப்பதில் எத்தனை வழி உண்டோ அத்தனை வழியிலும் கொடுப்பார். கொடுத்துக்கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருக்க மாட்டார்.
அவன் கொடுத்தது எத்தனை கோடி _அந்த
கோமகன் திருமுகம்
வாழி வாழி....... Thanks Prof. RC...
நாளை (26/04/2020) காலை 11 மணிக்கு சன் லைஃப் சானலில் எம்.ஜி.ஆர்.கதை எழுதிய "கணவன்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது... Thanks..........
1977-ம் ஆண்டு ஜூன் 30 அன்று, புரட்சித் தலைவர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது அரசியல் சட்ட ரீதியாகவும், சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு விழா!
ஆனால், அது முடிந்ததும் புரட்சித் தலைவர் அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார். அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல, அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.
பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும் 20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம்கூடி ஆர்ப்பரித்தது. அப்போது புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார். அந்தச் சரித்திர நாயகன். அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார். பின்னர் உரையாற்றினார்.
அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது, அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு, உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.
இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும்.
உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.
மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.
இதனை எங்கள் மனத்தில் இருத்தி, லஞ்சமற்ற, ஊழலற்ற நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.
உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.
இந்த உயர்ந்த லட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுதேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று உறுதியிட்டுக் கூறினார், புரட்சித் தலைவர்.
அப்பொழுதும், அதற்குப்பபின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!
அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.
இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார், புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை.!!!....... Thanks.........
#பட்டங்களுக்கு #நான் #தகுதியானவனா???
மக்கள்திலகம், புரட்சிநடிகர் என்று பட்டம் வாங்குவது அற்புதம் அல்லவா?
என்று ஒரு நிருபர் வார இதழுக்காக 1970ல் எடுத்த பேட்டியின் ஓர் முக்கிய கேள்வி இது.
இதற்கு வாத்தியாரின் பதில்...
அது அற்புதமே இல்லையே, என் மேல் அனுதாபம் கொண்டவர்கள், #பாவம் #பிழைத்துப்போகட்டும் என்று அந்த பட்டங்களைக் கட்டிவிட்டார்கள். அப்படிப்பட்ட தகுதி எனக்கு இல்லாவிடினும், முழுத்தன்மை வாய்ந்த ஒருவனாக என்னை ஆக்கிக்கொள்ள முடியாவிட்டலும், கொஞ்சமாவது அவைகளுக்குப் பொருத்தமாக நடந்து கொள்ள வேண்டும் என்று #நிரப்பந்தம் என் மீது சுமத்துப்பட்டு விட்டது என்பது தான் உண்மை...
அதேபோல் வேறு ஒரு பேட்டியில்...
நமது பாரத நாடு எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற எத்தனை தலைமுறை ஆகும் ? என்ற கேள்விக்கு...
#நமது #நாடு என்று சொல்லும் #நல்லுணர்வை எந்த தலைமுறை முழுமையாகப் பெறுகிறதோ, அந்த தலைமுறைதான் உங்கள் கேள்விக்கு நல்ல விடை கூறும்...!
என்ற பதிலே சொல்லும் எவ்வளவு நுட்பமான அரசியல் நோக்காளர் எம்ஜிஆர் என்று...
---------------------------------------------------------------------------
ரிக்ஷாகாரன் படத்திலிருந்து தான் வாத்தியார் என்ற பெயர் ஃபெமிலியர் ஆனதோ!!!...... Thanks...
#Part2
#உலகம்_சுற்றும்_வாலிபன்
#திரைக்கு_பின்_நடந்தது - #நம்_தலைவர் #கூறியது_உங்களுக்காக
டோக்கியோ விமான நிலையத்தை அடைந்ததும், நாகேஷ் தீடீரென்று மயங்கி விழுந்தார். அங்கு என்னைக் காண வந்திருந்த பத்திரிகையாளர் மணியன், எங்கோ விரைந்து சென்று, சிறிது நேரத்திற்கெல்லாம், ஒரு டாக்டரோடு வந்தார்.
அந்த டாக்டர் பரிசோதித்து, 'பலவீனம்; ஓய்வு எடுத்தா சரியா போகும்...' என்றார். வேண்டுமாயின், நர்சிங் ஹோமில் சேர்க்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். சிறிது விவாதத்திற்குப் பின், வேண்டாமென்று முடிவு செய்தோம்.
அதற்குள் நாகேஷுக்கு, கொஞ்சம் சரியானது.
மெல்ல எழச் செய்து, வேறு ஒரு இடத்தில் இருந்த சோபாவில் உட்கார வைத்து, விவரம் கேட்டேன். அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டோம்.
நாகேஷை, அந்த நிலையில் விட்டுவிட்டு, நான் மட்டும் எப்படி டோக்கியோவிற்குள் நுழைவது? நாகேஷ் ஓரளவிற்கு குணமாகும் வரை, காத்திருந்து, பின், ஓட்டலுக்குப் புறப்பட்டோம்.
அவரும், வேறொரு காரில் வந்தார். அவருக்கு துணையாக அசோகனை தங்க வைக்க, ஏற்பாடு செய்திருந்தேன்.
விமான நிலையத்தில், ஏர் பிரான்ஸ் கம்பெனி குழுவினர் படம் எடுத்தனர்.
பாங்க் ஆப் இந்தியாவில், பணிபுரியும் நண்பர் சந்தானம், அவரது மனைவி நிர்மலா மற்றும் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் ஜெயராமன் ஆகியோர் வந்திருந்தனர்.
சந்தானத்தின், இரு குழந்தைகளும் ஜப்பானிய உடை அணிந்திருந்தனர். சில ஜப்பானியப் பெண்கள் எனக்கு மாலை அணிவித்து, வரவேற்பு அளித்தனர்.
விமான நிலைய சடங்குகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட பின், டோக்கியோவின் மிகப் பெரிய ஓட்டல்களில் ஒன்றான, இம்பீரியல் ஓட்டலை அடைந்தோம்.
ஓட்டலை அடைந்தோமே தவிர, அறைகள் கிடைக்கவில்லை. எங்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை, மறுநாள் காலையிலிருந்து தான், 'புக்' செய்யப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்ல, இரவு, 12:00 மணிக்கு முன், அந்த அறைக்குச் சென்றோமானால், ஒரு நாள் வாடகை கொடுத்தாக வேண்டும்.
அதாவது, பதினோரு மணி, ஐம்பத்தொன்பது நிமிடத்தில், அந்த அறைக்குள் நுழைந்தால் கூட, முதல் நாள் வாடகையைச் செலுத்தியாக வேண்டும். எனக்குத் தரப்பட்டிருக்கும் பணத்தின் அளவோ மிகக் குறைவு. எனவே தான், என்னோடு வந்து, பயணத்தினால் சோர்ந்து போயிருந்த பெண்களைக் கூட, உடனே அறைகளுக்கு அனுப்ப முடியவில்லை.
அவர்களும் இதை உணர்ந்திருந்த காரணத்தால், எந்தவித மனக்கஷ்டமும் கொள்ளாது, ஒருவருக்கொருவர், சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
இரவு வெகு நேரமாகி விட்டதால், அவர்களுக்கு ரொட்டி, கேக் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாமென்று எண்ணிக் கேட்டேன்.
பன்னிரெண்டு மணிக்கு மேல், அறைக்குச் சென்ற பின் தான் கிடைக்கும்; அதுவும் முன்னமேயே குறிப்புக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டுமென்று தெரிவித்தனர். எனக்கு, இவைகௌல்லாம் புரியாத புதிராகவே இருந்தது.
இதைக் கேட்டு கொண்டிருந்த பெண்கள், தங்களை அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் கேக், ரொட்டி போன்ற பெயர்களைக் கேட்டதும், அதற்கு மேல் தங்களுக்கிருந்த பசியை மறைக்க சக்தியற்று, ஆவலோடு விசாரித்தனர்.
அங்கு, அந்த வேளையில் ஏதும் கிடைக்காதென்பதை அறிந்தபோது, என் மீதே, எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
என்னை நம்பி வந்த அந்த இளம் பெண்களுக்கு, முதல் நாளிலேயே பசிக்கு உணவு கொடுக்க இயலாதவனாகி விட்டேனே என்று, வேதனையாக இருந்தது. 'மோராவது கிடைக்குமா?' என்று கேட்டேன்.
என் உடன் வந்திருந்த சந்தானம், இதையெல்லாம் கவனித்து, 'அரை மணி நேரம் அவகாசம் தருவதாயின், உணவு தயார் செய்து விடுவேன். எல்லாரும் சாப்பிடலாம்...' என்றார்.
நான் மரியாதைக்கு, 'வீண் சிரமம் வேண்டாம்; ரொட்டி கிடைத்தாலே போதும்...' என்றேன்.
ஆனால், அவர், 'உங்கள் தகுதிக்குச் ஏற்ற முறையில், உணவு படைக்க எங்களால் இயலாது; ரசம் சாதம், அப்பளம் இவ்வளவுதான் செய்ய முடியும்...' என்று சொல்லியவாறே, எங்களுடைய அனுமதியைப் பெறாமலேயே, தன் மனைவியை வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
சாப்பாடு கிடைக்கும் என்று தெரிந்ததும், மூன்று பெண்களின் பேச்சும், சிரிப்பும் மீண்டும் தொடர்ந்தன.
சினிமா உலகத்தில், எத்தனையோ நடிக, நடிகையரை பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட வசதிக் குறைவுகள் நேரிடும் போது, எப்படியெல்லாம் ஆத்திரப்பட்டிருக்கின்றனர், கேவலமாய் பேசியிருக்கின்றனர், தங்களின் தகுதிக்கும் குறைவான செயலில் இறங்கியிருக்கின்றனர் என்பதை, கண்கூடாகக் கண்டறிந்தவன் நான்.
ஆனால், இந்தப் பெண்கள் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சந்தானம், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவில்லை. அறைகளின் சாவிகளைப் பெறவும், சாமான்களின் எண்ணிக்கையைச் சரி பார்க்கவும், தன் வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதுமாக, 'துருதுரு'வென்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
சிறிது நேரத்திற் கெல்லாம், 'உணவு தயார், போகலாம்...' என்று அழைத்தார். அவரே தன் காரில், எங்களை அழைத்துப் போனார். அவர் வீட்டிற்குப் போனோம். மாடியில் தான், அவரது குடியிருப்பு.
விசாலமான நடுத்தரமான, ஒரு அறையில், மேசை, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
சுவரில், கலையழகு நிரம்பிய படங்கள்; சிலை வடிவங்கள். அவைகளில் பெரும்பாலானவை, சந்தானத்தின் மனைவி நிர்மலா கை வண்ணத்தில் மிளிர்ந்தன.
குடும்பத்தின் சிறந்த தலைவி, கணவனுக்கு பண்புள்ள மனைவி, விருந்தினருக்குப் பாசமுள்ள உறவினர், குழந்தைகளுக்கு அன்புத் தாய், இப்படிப்பட்ட, ஒருவர் கையால், உணவு பரிமாறப்பட்டு, உண்டோம்.
வயிறு புடைக்க சாப்பிட்டோம். எங்களின் அதிர்ஷ்டம் அன்று, சந்தானத்தின் தாயார் இந்தியாவிலிருந்து ஜப்பான் வந்திருந்தார். அவர்கள், தின்பண்டங்களைச் செய்து கொண்டு வந்திருந்தார். அவைகளும் எங்களுக்குப் பரிமாறப்பட்டன.
ஜப்பான் நாட்டிற்குப் புதியவர்களாக அடியெடுத்து வைத்த எங்களுக்கு, இரவு, மிகப் பெரிய விருந்தே நடைபெறுகிறதென்றால், தமிழ்ப் பண்பின் தனித் தன்மைக்கு, நற்சான்று என்றுதானே கொள்ள முடியும்.
உணவு உண்டு மூச்சு விடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, சந்தானம் ஒரு சிறிய படம் பிடிக்கும் கருவியையும், படங்கள் ஒட்டப்பட்டிருந்த ஆல்பம் ஒன்றையும் கொண்டு வந்து, எங்களைப் படம் எடுக்க விரும்புவதாய் சொல்லி படமெடுத்தார்.
அதோடு, அவர் எடுத்த படங்கள் நிறைந்த, அந்த ஆல்பத்தை பிரித்துக் காண்பித்தார்.
அதில், ஒட்டப்பட்டிருந்த படத்தைப் பார்த்து, ஒரு கணம் திகைத்தேன். அது வேறு யாருடைய படமுமல்ல! இதயதெய்வம் அமரர் அண்ணாதுரையின் உருவம்தான். எங்கு சென்றாலும், என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும், அந்த அமரரின் உருவத்தை, திரும்பத் திரும்பப் பார்த்தேன்.
நான், என் வாழ்க்கைப் பாதையில், எங்கெங்கு காலடி எடுத்து வைக்கிறேனோ, வைக்க இருக்கிறேனோ அங்கெல்லாம், அமரர் அண்ணாதுரை முன்சென்று, நான் நடக்கும் பாதைகளை சீர் செய்து, அரசியலிலும், கலைத் துறையிலும் எனக்குத் தேவையான அத்தனையையும் நிறைவேற்றி வைத்திருப்பதை, இன்னமும் நிறைவேற்றி வைப்பதை எண்ணி, என் கைகள், அவர் இருக்கும் திசை நோக்கித் தானாக உயர்ந்தது.
ஜப்பானில் நாங்கள் சந்தித்த சில மணி நேரத்திற்குள்ளாகவே, எங்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்த சந்தானம், இப்போது ஒரு படி உயர்ந்து நின்றார்.
அவர், அண்ணாதுரை பற்றிச் சொன்ன கருத்து, என்னை மேலும் சிந்திக்க வைத்தது. அது...
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
-- எம்.ஜி.ஆர்.,........ Thanks...
#எம்ஜிஆர் அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.
1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது........ Thanks...
மக்கள் திலகம் என்ற மாமனிதர் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களிலும் தன்னை எவ்வாறு தன் ரசிகர்களிடம் கொண்டு சென்றார் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் எங்க வீட்டு பிள்ளை படம். இந்த படத்தில் நாம் ரசித்து ரசித்து பார்த்த காட்சிகள் எதையுமே இதன் இந்தி பதிப்பான ராம் ஔர் ஷ்யாமில் திலீப்குமாரிடம் பார்க்க முடியாது. ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வரும் மக்கள் திலகம் தான் செய்த தவறுக்கு தன்னையே நொந்து கொள்ளும் காட்சி மக்கள் திலகத்தின் குணத்தை பிரதிபலிக்கும்.இந்த காட்சியே இந்தியில் இருக்காது.மேலும் எ.வீபி.என்றவுடன் நம் நினைவிற்கு வரும் நான் ஆணையிட்டால் பாடலும் இந்தியில் கிடையாது.தெலுங்கிலும் கிடையாது. மக்கள் திலகத்திற்காகவே வைக்கப் பட்ட பாடல் அது.மலையாளத்தில் இந்த பாடல் உண்டு ஆனால் மக்கள் திலகத்தை பார்த்த கண்களுக்கு பிரேம்நசீர் காமெடியாக தெரிவார்.மொத்தத்தில் எல்லா மொழிகளிலும் முன்னணி கலைஞர்கள் நடித்திருந்தாலும் மக்கள் திலகத்தின் அழகும் கம்பீரமும் சுறுசுறுப்பும் வேறு யாரிடமும் பார்க்க முடியாது....... Thanks...
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 12 சனி
எம்ஜிஆர் பக்தர்களே
அருமை தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர் பெயர்
ப.உ. சண்முகம்
இவர் திமுக-வின் ஆரம்பகால மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர
++++++++++++++++++++++++++++++++++
எம்ஜிஆர் பக்தர்களே
மறைந்த அண்ணா அவர்களுக்கு பவள விழா கொண்டாடினார்கள்
அப்பொழுது பவளவிழா மலர் என்று ஒரு மிகப்பெரிய. புத்தகம் ஒன்றை வெளியிட்டார்கள்
அந்த புத்தகத்தில்
பா உ,சண்முகம்
அவர்கள் எழுதிய கட்டுரை இது
++++++++++++++++++++++++++++++++++
1959 ஆண்டு நடைபெற்ற திருவண்ணாமலை சட்டசபை இடைத்தேர்தலில் அண்ணா அவர்கள் என்னைதிமுக வேட்பாளராக அறிவித்து விட்டார்
என்னை எதிர்த்து நின்ற. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மிகப்பெரிய கோடீஸ்வரர்
,இதை அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டார்கள்
மிகப் பெரிய கோடீஸ்வரரிடம் ப.உ. சண்முகம் மாட்டிக்கொண்டார் என்று அனைத்து அரசியல் கட்சி தொண்டர்களும் பேசிக்கொண்டார்கள்
திமுக தலைமையிடமும் பணம் வசதி கிடையாது
திமுக தலைவர்களிடமும் பணம் வசதி கிடையாது
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பணத்தை நிறைய செலவு செய்கின்றார்கள்
அதில் நான்கில் ஒரு பகுதி பணம் கூட
தேர்தல் செலவிற்கு என்னிடம் கிடையாது
மிகவும் கவலையோடு நான் வீட்டில் அமர்ந்து இருந்தேன்
என் வீட்டிற்கு முன்பாக ஒரு பியட் கார் வந்து நின்றது
அந்தக் காரில் இருந்து எம்ஜிஆர் அவர்களின் மேனேஜர்
R.M.வீரப்பன்
இறங்கி என் வீட்டுக்குள்வந்தார்
என் முன்னால் பெரிய பை ஒன்றை வைத்தார்
இந்தப் பணத்தை எம்ஜிஆர் உங்களிடம் கொடுத்து வரச் சொன்னார்
உங்களை எதிர்த்து நிற்பவர் மிகப்பெரிய கோடீஸ்வரர்
ஆகவே இந்தப் பணத்தை தேர்தல் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்
தேர்தல் வேலை பார்க்கும் ஏழை தொண்டனுக்கு இந்தபணத்தில் டீ பலகாரம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று உங்களிடம் சொல்லச் சொன்னார் MGR
என்று கூறிவிட்டு R.M.வீரப்பன் புறப்பட்டார்
நானும் வீரப்பன் அவர்களோடு வீட்டுக்குள் இருந்து கார் வரைக்கும் வந்தேன்
காரில் ஏறி அமர்ந்தவீரப்பன்
காரை விட்டு கீழே இறங்கினார்
என்னை அழைத்து எம்ஜிஆர் அவர்கள் தேர்தல் வால்போஸ்டர் களை சென்னையில் ஸ்டுடியோவில் தயாரித்து அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்
,இந்தப் பணத்தை தாராளமாக செலவழியுங்கள்
அடுத்த சில நாட்களில் எம்ஜிஆர் மீண்டும் உங்களுக்கு பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று என்னிடம் கூறியுள்ளார்
என்று வீரப்பன் கூறிவிட்டு சென்னை சென்று விட்டார்
மீண்டும் எம்ஜிஆரிடம் இருந்து எனக்கு பணம் வந்தது
தேர்தல் தேர்தலில் நான் வெற்றி அடைந்தேன்
இவ்வாறு அண்ணா பவள விழா மலரில் பா,உசண்முகம் அவர்கள் கட்டுரை எழுதி உள்ளார்
++++++++++++++++++++++++++++++++++
1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார்
அப்பொழுது பா உ சண்முகம் அவர்கள்
கருணாநிதியின் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தார்
1976. ஆண்டு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு
பா உ சண்முகம் அண்ணா திமுகவில் சேர்ந்தார்
திருவண்ணாமலை தொகுதியில் அண்ணா திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்
எம்ஜிஆர் அமைச்சரவையில் 1984ல் இவர் அமைச்சராக பதவி வகித்தார்
எம்ஜிஆர் இறந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சர் ஆக்கியவர்களிள்இவரும் ஒருவர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதவர்
இப்படிப்பட்ட வள்ளல் எம்ஜிஆருக்கும்
ஒரு சனியன் கூட இருந்தே துரோகம் செய்துள்ளது......... Thanks...
'நான் ஆணையிட்டால்' பாடலை இந்தி வடிவத்தில் அதன் நாயகன் திலீப் குமார்
ஸ்டைல் காட்டுகிறார். அவர் எம்.ஜி.ஆர்.
போல் நடிக்க முயன்றார். ஆனால்...?
'ராம் அவுர் ஷ்யாம்' தமிழ் 'எங்க வீட்டுப் பிள்ளை'யின் இந்தி வடிவம். சரோஜாதேவி, ரத்னா வேடங்களில்
இந்தியில் வஹீதா ரஹ்மான், மும்தாஜ்
நடித்தனர்.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan..... Thanks...
ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் அவர் ஸ்டைல் யாருக்கும் வராது.....ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் அவர் ஸ்டைல் யாருக்கும் வராது...தலைவர் அளவுக்கு யாராலும் ஜொலித்து இருக்க முடியாது.... Thanks...
தலைவரின் gym body யும் , ஆளுமை மிக்க அதிகார நடிப்பும் இந்தி நடிகர் திலீப் குமாரிடம் Missing .........இயற்கையின் சீதனம் தலைவர்...... Thanks...
எம் ஜி ஆர், படம் நன்றாக வர வேண்டும், தயாரிப்பாளர், லாபம் அடைய வேண்டும் என்று நடித்தார் ,பிறகு தான் சம்பளம்-ஆனால் மற்றவர்கள் பணம் பெற்றுக் கொண்டு நடிக்கின்றனர் ,படம் ஒடினாலும் ஓடாவிட்டாலும் கவலை இல்லை அது எம்ஜிஆரின் தொழில் பக்தி....... Thanks...