Today happens to 54 Birthday Of All time Badass Antony...Mark Antony...
Printable View
Today happens to 54 Birthday Of All time Badass Antony...Mark Antony...
Happy Birthday Sir. Love you always.
http://getdesign.org/wp-content/uplo...y-greeting.gif
Birthday bash
Saying Happy Birthday to that unfathomable phenomenon called Rajni Saar
http://www.thehindu.com/arts/cinema/...?homepage=true
What makes Rajinikanth a superstar at 62?
From a bus conductor to one of the most admired and worshipped actors in the world, the story of Shivaji Rao Gaikwad, later rechristened Rajinikanth, could very well make a good script for a blockbuster movie. As Rajinikanth turns 62 Wednesday, members of the film fraternity look back at what still makes him a superstar.
http://timesofindia.indiatimes.com/e...w/17571519.cms
happy birthday thalaivaa...
vevaram therinja annikki irundhu innavaraikkum un rasiganaa irukkradhula perumai koodittae dhaan pOdhu...
vaazhga pallaandu... :notworthy:
Happy birthday to our style king also a simple personality...wishes BOSS.
manitha neya semmal annan rajini avargalukku ullam kanintha pirantha naal valtukkal!vaalga pallandu!
Thalaivaa, iniya pirantha naal vaazthukkal...
Happy Birthday Thalaiva! Vaazthi, vanangukirom.
Happy birthday to Super star
http://movies.ndtv.com/movie_story.a...DIA&nid=303788
Now, watching him recreate the magic in 3D, closer to hands-reach, is a once-in-a-lifetime experience. Released five years after its original release in 2007, Sivaji 3D, with shorter running time, cut down by half an hour, is highly entertaining and three times visually enthralling.
The impeccable conversion from 2D to 3D is truly amazing and at par with Hollywood standards. All those who've always cribbed about the poorly executed Indian 3D films should not miss Sivaji 3D at any cost. Had it not been for the successful collaboration between AVM productions, Prasad EFX and Real Image, this visual wonder wouldn't have been possible.
Kamal wishing Rajini with Viswaroopam.
http://kollytalk.com/posters/viswaro...nis-sivaji-3d/
@mammukka: Happy Birthday to Surya...by Deva
Happy Birthday to Rajni Sir!! Remba naal ArOgyatthOda Vazhanum !!
Thalaivar Superstar avargaLukku iniya piRanthanaaL nalvaazhthukkaL !!
தலைவா வாழ்க பல்லாண்டு.
Happy birthday Rajni sir!
Superstar Rajinikanth is turning 63 today, 12/12/12 a date that happens once in 100 years. Rajinikanth is truly a phenomenon and has a terrific reach worldwide. From mid-1980's he has remained the number one star at the Tamil box-office.
There is something in Rajinikanth which all sections of audiences from high end multiplexes in metro's to single screens in villages love, which has made him an universal star. He is the only actor whose film Endhiran features in Kollywood's Rs 100 Crore club (NBOC- Nett box-office collections after tax), based on theatrical collections alone.
Wish the Superstar here
12/12/12 has become an important day for Rajinikanth fans. Two books on Rajinikanth are being unveiled on his birthday. The Definitive Biographyby Naman Ramachandran which recounts Rajini's career in meticulous detail will be released. Another book titled My Days with Baasha written by director Suresh Krissna (Annamalai, Veera and Baasha) and co-authored by Malathi Rangarajan is being released.
A few days back Latha Rajnikanth unveiled a birthday- song album on Rajinikanth which is directed by Raghava Lawrence. The song is composed and sung by Vijay Anthony, and written by Annamalai and has been released on YouTube.
A host of television channels are running special programmes on Rajinikanth. The audio of Karthi's Alex Pandian is hitting the stores on Rajnikanth's birthday. Remember the title of the film is inspired from Rajinikanth's character name Alex Pandian from Moondru Mugam.
Meanwhile the biggest event of the day will be the re-release of Rajinikanth's AVM produced Shankar directed Sivaji in 3D format. Sivaji 3D is releasing in nearly 100 3D enabled screens in Tamil Nadu. The superstar himself in a message has said - "Sivaji 3D is a birthday gift to my fans!"
Happy Birthday to Rajnikanth sir. May you live long prosper.
Jaya, MK come together for Rajini - IndiaGlitz
Superstar Rajni in CBSE books!
Superstar Rajinikanth, celebrated his 62nd birthday yesterday and he received wishes from all quarters and corners of the world. His achivements in the cine field has been phenomenal and his life is a true rags to riches story that would inspire people to work hard and live life positively.
Citing this the latest is that a chapter on the Superstar titled 'From Bus Conductor to Superstar', has been included in the Learning to Communicate (Coursebook 6), for CBSE students! This chapter comes under the unit, 'Dignity of Work', and is from the perspective of Bahadur, Rajni's close friend, and the driver of the bus, Rajni was a conductor in!
This chapter is aimed at inspiring children across the country! The star's fans have another reason to celebrate! While the children are already a great fan of Rajinikanth and now they would be learning about him in schools as well.
It would be interesting to see if the teachers teach the students or the students would know more about the Superstar.
engayya sivaji thread???
did any hubber watch it?
Can't find The Boss Thread.
For those interested : Sivaji 3D releasing in France (to be precise in Paris) January 2013 -
Mega CGR Epinay sur Seine Paris
Friday 4 at 19h30
Saturday 5 & sunday 6 at 16h30 / 19h30
Monday 7 at 19h30
Mega CGR Evry Paris
Saturday 5 at 13h30 / 16h30
Mega CGR Torchy Paris
Saturday 5 at 13h30 / 16h30
22 ஆண்டுகள் ஏன் ரசிகர்களைச் சந்திக்கவில்லை? – சூப்பர் ஸ்டார் பேச்சு -1
சென்னை: ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் கடந்த 22 ஆண்டுகள் என் பிறந்த நாளன்று நான் ரசிகர்களைச் சந்திக்காமல் இருந்தேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
வியாழக்கிழமை மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் சென்னை மாவட்ட ரசிகர்கள் நடத்திய பிறந்தநாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் நடத்திய விழாவில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், கருணாஸ், கே ராஜன், நடிகை நமீதா உள்பட பலரும் பங்கேற்று சூப்பர் ஸ்டாரை வாழ்த்திப் பேசினர் (இவர்கள் பேச்சு தனி தொகுப்பாக தரப்படும்).
இந்த விழாவின் சிறப்பு சூப்பர் ஸ்டாரின் 35 நிமிட உரை. இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு அதிக நேரம் அவர் பேசியதும் இதுவே முதல் முறை.
ரசிகர்களை பிறந்த நாளன்று ஏன் சந்திப்பதில்லை? 1996-ல் ஏன் அரசியலுக்கு வந்தார்? பிறகு ஏன் அரசியல் பற்றி பேசுவதில்லை? பாமகவை எதிர்த்தது ஏன்? இனி அரசியலுக்கு வருவாரா? உடல் நிலை சரியில்லாமல் போனது ஏன்? இப்போது எப்படியிருக்கிறார்? என ரசிகர்கள் மனதிலிருந்த பல கேள்விகளுக்கு விடையாக அமைந்தது அவர் பேச்சு.
அவரது ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்தில் மூழ்கி வந்தது. உள்ளத்தின் தூய்மை அந்த வார்த்தைகளில் எதிரொலித்தது. ஒரு குடும்பத் தலைவனுக்கே உரிய பொறுப்போடும், கண்ணியமும் கண்டிப்பும் பரிவும் மிக்க தலைவனின் இலக்கணத்தோடும் அவர் ரசிகர்களிடம் பேசினார்.
வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், அவரது பேச்சை கண்களில் கண்ணீர் மின்ன கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
சூப்பர் ஸ்டார் பேச்சிலிருந்து…
இந்த விழாவுக்கு வந்திருக்கும் நண்பர்கள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், நமீதா, கருணாஸ், ராஜன் உள்ளிட்டவர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த என் ரசிகர்களுக்கும்- யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் தவறாக நினைக்காதீர்கள்- என் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வந்து.. எல்லாருக்கும் தெரியும் என் பிறந்த நாளன்று நான் ரசிகர்களைச் சந்திப்பதில்லை. 22 ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் என் பிறந்த நாளன்று எல்லோரையும் சந்தித்து வந்தேன். ஒருவாட்டி, என் பிறந்த நாளன்று என்னைப் பார்த்துவிட்டு திரும்பிப் போன ரசிகர்கள் கார் விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்துவிட்டார்கள். அவர்களின் பெற்றோர் என்னிடம் வந்து ஒரு கேள்வி கேட்டார்கள். அதுக்கு என்னால பதில் சொல்ல முடியல. அந்த கேள்வி என்னன்னு இந்த நேரத்துல நான் சொல்ல விரும்பல.
அதிலிருந்துதான் நான் ரசிகர்களைச் சந்திக்க வேணாம்னு முடிவு செஞ்சேன். அந்த நாள்ல சென்னையில் இருக்கக மாட்டேன். இது எனக்கு ஒரு வகையில் சாதகமாத்தான் முடிஞ்சது. அந்த நாளில் பேன்ஸ் இருந்தா கூட, எங்காவது தனிமையா இருந்து நான் இதுவரைக்கும் என்ன செஞ்சேன், என்ன செஞ்சிக்கிட்டிருக்கேன், என்ன செய்யப் போறேன்… அப்படீன்னு யோசிச்சு திட்டம் போடுவது என் வழக்கம். நினைச்சுப் பாத்துக்குவேன். மிச்செல்லாம் ஆண்டவன் கைல இருக்கு.. நம்ம கைல எதுவும் கிடையாது.
எல்லாமே அந்த ஆண்டவன் கையிலதான் இருக்குன்னு நெனச்சி அன்னிக்கு நான் டிக்கெட் வாங்காம, அதுகூட ஆண்டவன் கைலதான் இருக்குன்னு இருந்துட முடியாது. அதை நாமதான் செஞ்சிக்கணும். அதனால ஓரளவுக்குதான் நாம நினைக்கிறது நடக்கும்.
அதேநேரம் பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் திட்டம் போட்டா அது நடக்காது. ஒரு நாளைக்கு ஒருத்தன் 1000 ரூபாய் சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டான்னு சொன்னா… அவனால் அதை சம்பாதிக்க முடியாது. 90 ரூபா சம்பாதிக்கிறான், அல்லது 500 ரூபா சம்பாதிக்கிறான் அல்லது 2000 ரூபா சம்பாதிக்கிறான். 1200 சம்பாதிக்கிறான், ஆனா சரியா 1000 ரூபா சம்பாதிக்க மாட்டான்.
நாம எப்படி நினைக்கிறமோ அது அப்படியே நடந்திருக்குன்னு நடக்கும்னு இதிகாசம் புராணத்துல கூட கிடையாது.
நண்பன் காந்தியின் மரணம்…
நேத்து அன்று நான் உங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. 12.12.12 என்பதை அவாய்ட் பண்ணக்கூடாது, அது நல்லாருக்காது. அதுவும் நான் உடம்பு சரியில்லாம இருந்து வந்த பிறகு ரசிகர்கள்லாம் பார்க்க ஆவலா இருக்காங்க. அவர்களை சந்திக்காம இருந்தா நல்லாருக்காதுன்னு சொன்னாங்க. சரி இப்ப சந்திக்கலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தபோது, என்னுடைய அருமையான நண்பன், உயிர் நண்பன், எப்படி சொல்றதுன்னு தெரியல. அவனை வெளிய நெறய பேருக்கு தெரியாது. ரொம்ப சிலருக்குத்தான் தெரியும். அந்த நண்பன், எனக்கு அனுமான் மாதிரி இருந்த காந்தி… மாரடைப்பால் 10-ம் தேதி இறந்துபோனான். 11-ம் தேதி அடக்கம் பண்ணிட்டு வந்தேன். அந்த சோகத்தை மைன்ட்ல வச்சிருந்து வருத்தத்தோட இருந்தேன்.
என் அப்பா இறந்திருக்கார், அண்ணா இறந்திருக்கார், அம்மா இறந்திருக்காங்க… ஆனா அதைவிட எனக்கு அதிக வேதனையைத் தந்தது காந்தியின் மரணம்.
அப்பா இறந்த போது ரொம்ப வயசாகியிருந்தார். அண்ணன் இறந்ததுக்கு காரணமிருக்கு. அம்மா இறந்தபோது நான் சின்னப் பையன். இன்னும் சில நண்பர்களும் இறந்திருக்காங்க.
காந்தியின் இறந்து போனப்ப ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா… சில வியாதிகள் உடம்பிலிருக்கும்போது, அதை வெளிய யாரும் சொல்றதில்லை. வெளிய சொன்னா தொந்தரவா இருக்கும்னு நினைச்சி உள்ளயே வச்சிக்கிட்டு காந்தி அதை யார்கிட்டயும் சொல்லல. திடீர்னு சில தினங்களுக்கு முன் காந்தி மருத்துவமனையில சேர்த்திருக்கிறதா சொன்னாங்க. பத்தாம்தேதி கேட்டப்ப இப்போ பரவால்லன்னாங்க. ஆனா அன்னிக்கு நைட் இறந்து போயிட்டதா செய்தி வந்தது.
ஒருவேளை அங்கே உடனே போய் அவனைப் பார்த்து, வேற ஆஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணியிருந்தா காந்தி பொழச்சிருப்பானோ என்ற உறுத்தல் எனக்கு இருந்துகிட்டே இருந்தது.
அந்த பெய்ன்ல நான் நேத்து முழுக்க தூங்கவே இல்லை. அந்த சோகத்தை மறக்க முடியாம இருந்தேன். ரசிகர்கள் எத்தனை மணிக்கு வருவாங்கன்னு கேட்டேன். எட்டு ஒன்பது மணிக்கு வருவாங்கன்னு சொன்னாங்க.
என் வேதனையை மறக்கடித்த ரசிகர்கள்…
ஆனா காலைல 6 மணிக்கே முன்னூறு நானூறு பேர் வந்திட்டிருந்தாங்க. அதுக்கப்புறம் குளிச்சி பூஜை முடிச்சி வெளிய வந்து உங்களையெல்லாம் பாத்தேன். அப்போ என் மனம் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவில்லை.
உங்களையெல்லாம் பாத்தாதான் அந்த வலி தீரும்னு ஆண்டவன் முடிவு செஞ்சிருக்கான். அது ஆயிரம் கோடி கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி.. உங்களைப் பார்த்ததும் கிடைச்சது. அந்த காந்தி என்ற நண்பனின் மரணம் தந்த வலியை உங்களை பார்க்க வைத்து தீர்க்க வச்சது நிச்சயம் ஆண்டவன் செயல்தான்.
கூட்டம் சேர்க்க முயன்றதில்லை…
அதுக்கடுத்த நாள் வெளியில் போகலாம்னு நினைச்சேன். ஆனால் அன்னிக்கு இதுபோல நிகழ்ச்சி இருக்கு, ரசிகர்கள்லாம் உங்களைப் பார்க்க ஆர்வமா காத்துக்கிட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. அதனால இங்க வந்திருக்கேன்.
நான் பொதுவா எப்பவுமே கூட்டம் சேர்க்க முயற்சி பண்ணதில்லை. ஏன்னா அதுக்கு எனக்கு அவசியமே இல்லை. கூட்டம் சேர்த்தா மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும். என்னால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாதுன்னுதான் நான் கூட்டம் சேர்ப்பதில்லை.
அதனாலதான் 12-ம் தேதி சென்னையிலேயே இருக்கணும்னு பத்து நாளைக்கு முன்னயே முடிவு பண்ணிட்டாலும் அதை பதினொண்ணாம் தேதி ராத்திரிதான் எல்லோருக்கும் சொன்னேன்.
நான் முன்கூட்டியே சொன்னா நிறைய பேரு வெளியூர்கள்லருந்து பஸ், லாரி, வேன்னு கிளம்பி வருவாங்க. அப்படி வந்த பிறகு பாதுகாப்பா பத்திரமா திரும்பிப் போகணுமேன்னுதான், 11-ம் தேதி சொன்னேன்.
மற்றவங்களுக்கு தொந்தரவு கூடாது… ரசிகர்கள் பாதுகாப்பா இருக்கணும் என்பதால்தான் நான் முன்கூட்டி இதைச் சொல்லல.
என் ரசிகர்கள் பவர்புல்லாவங்க, வெறியங்க… 100 பேர் ஆயிரம் பேருக்கு சமம்!
யாருக்கும் சொல்லலியே… கூட்டம் வரலன்னா என்ன பண்றது, வெளிய மட்டமா பேசுவாங்களேன்னு சொன்னாங்க. பரவால்ல… நூறு பேர் இருந்தா கூட போதும். என் ரசிகர்கள் நூறு பேர் ஆயிரம் பேருக்கு சமம்… அவங்க பவர்புல்லானவங்க, பிரம்ம ராட்சசர்கள்.. வெறியங்க…
சரி, வர்றவங்களை எப்படி சமாளிக்கிறதுன்னு எல்லோரும் ஆளுக்கொரு யோசனை சொன்னாங்க. அதுபண்ணலாம், இது பண்ணலாம்னு சொன்னாங்க.. அப்பதான் நான் சொன்னேன்… நீங்க சத்தியநாராயணனை கூப்பிடுங்கன்னு. அவனுக்குதான் இவர்களைச் சமாளிக்க முடியும்னு சொல்லி, சத்திய கூப்பிட்டேன். சில பேரு சொன்னாங்க நான் சத்திய மன்றத்துலருந்து நீக்கிட்டேன்.. ஒதுக்கிட்டேன்னு. அதெல்லாம் இல்ல.. அவன் என் நண்பன். அவன் என்கூடதான் இருப்பான். காந்திக்கு ஆன மாதிரி சத்தியநாராயணாவுக்கும் ஆயிடக்கூடாது. அவனுக்கு உடம்பு சரியில்ல. அதனாலதான் அவனை ரெஸ்ட்ல வச்சிருக்கேன்.”
தப்பா நினைக்காதீங்க.. பிரம்ம ராட்சசர்கள்னு சொன்னேன்னு. பெரிய பெரிய ரிஷிகள், முனிகள், சித்தர்கள் தங்கள் வித்தைகளை யாருக்காவது சொல்லிக் கொடுத்துட்டுதான் இந்த உலகத்தைவிட்டுப் போவார்கள். அப்படி சொல்லிக்கொடுக்காமலேயே இறந்து போகிறவர்கள்தான் பிரம்ம ராட்சசர்களாக உருவெடுத்து குளங்களிலும் மரங்களிலும் வசிப்பதாக சொல்வார்கள். அவர்கள் தவறானவர்கள் அல்ல. சர்வசக்தி படைத்தவர்கள். யாராலும் ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு வலிமையானர்கள். அப்படி ஒரு சக்தி படைத்தவர்கள்தான் ஒவ்வொரு ரசிகனும்…”
‘நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்… கோழையாக வாழமாட்டேன்’ – சூப்பர் ஸ்டார் பேச்சு -2
நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று இங்கே சிலர் பேசினார்கள். நான் அரசியல் பேச விரும்பவில்லை. அது கடல் மாதிரி. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.
இங்கே ஏடிஎம்கேவும் இருக்கு, டிஎம்கேவும் இருக்கு. போயஸ் கார்டனும் இருக்கு, கோபாலபுரமும் இருக்கு.
நண்பர் கலைஞரிடம் இங்கே அமர்ந்துள்ள வாகை சந்திரசேகர் போய், ஐயா நான் ரஜினி நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்று கேட்டிருந்தால், போய் வா தம்பி என்று அனுப்பியிருப்பார்.
சரத்குமாரும் ராதாரவியும் புரட்சித் தலைவி ஜெயலலிதாவிடம் போய், நாங்கள் ரஜினி நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்று கேட்டிருந்தால் நிச்சயம் அனுப்பியிருப்பார். அந்த அளவுக்கு எல்லோரிடமும் நட்பாக இருப்பவன் நான்.
நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. தமிழ் மக்களை சார்ந்தவன். தமிழ் மக்கள், என்னை வாழ வைத்த தெய்வங்கள். அவர்கள் நலன்தான் எனக்கு முக்கியம்.
1996–ல் ஒரு சூழ்நிலை என்னை அரசியலில் ஈடுபட வைத்தது. இதை இப்போது சொல்லக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் இங்கே அரசியல் பேசினார்கள். அதிலும் கருணாஸின் விஸ்வரூபத்தைப் பார்க்க முடிந்தது. எனக்கு ஆச்சர்யம், கருணாஸ் இப்படி பேசுவாங்களான்னு… முத்துராமலிங்கத் தேவரையே பார்த்த மாதிரி இருந்தது அவர் பேச்சு.
ஆனால் இப்போது அரசியல் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. பொய்யான நம்பிக்கை கொடுக்க விரும்பவில்லை.
1996-ல் அன்றைக்கு அரசியல் எனக்கு சரியா தெரியாது. ஆனா நான் எதுக்கோ சொன்ன ஒரு விஷயம், எப்டியெப்டியோ தீ மாதிரி பரவிடுச்சி. பிஎம் வரைக்கும் என்னை அழைத்துப் போனார்கள். ஆனால் நான் அப்போது தயாராகவில்லை. நான் தயாராக இல்லாத நிலையில், அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைத்து, என் படம், பெயர், கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிச்சுட்டு அமெரிக்கா போனேன். ஆனா நான் திரும்பி வந்தபோது, நான் எதிர்ப்பார்க்காததெல்லாம் நடந்துடுச்சி.
உடனே, நீங்கள் பிரச்சாரத்துக்குக் கூட வரவேண்டாம். ஆனால் இப்போது நீங்கள் உங்கள் நிலையை தெரிவிக்கவில்லை என்றால், உங்களை கோழையாக நினைத்து விடுவார்கள் என்றார்கள். நான் கோழை அல்ல.. செத்தாலும் சாவேனே தவிர, பிச்சையெடுத்தாலும் கூட கோழையாக என்னிக்குமே வாழமாட்டேன்.
அதன் பிறகு ஆட்சியிலிருந்தவர்கள் நல்லது செய்தார்களா, கெட்டது செய்தார்களா என்றெல்லாம் பார்க்காமல், நான் முதலில் ஆதரித்து விட்டேன், கமிட்மென்ட் காரணமாக, 5 வருடங்கள் அவர்களை தொடர்ந்து ஆதரித்தேன். கூட்டணி தர்மத்தை மதித்தேன். அதன் பிறகு நான் யாரையும் ஆதரிக்கவில்லை.
என் அருமையான நண்பர் கலைஞர் – அவரை அருமை நண்பர் என்று கூப்பிட எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் அவர் என்னை நண்பர் என்று அழைப்பதால், நானும் அப்படியே குறிப்பிடுகிறேன்- நான் எப்போது சந்தித்தாலும் அரசியல் பேசமாட்டார். நானாக பேசினாலும் கூட, இல்லை தம்பி வேண்டாம் என்று மறுத்துவிடுவார். அதன் பிறகு அவரிடம் நான் அரசியல் பேசவே இல்லை.
அதன் பிறகு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது கூட நம்ம படம் தொடர்பாக, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. அவர்களை கீழே தள்ள வேண்டும் என்று எதிர்க்கவில்லை. நாம் கோழைகள் அல்ல என்பதைக் காட்ட. அவர்கள் சொன்ன விஷயம் சரி. ஆனால் சொன்ன விதம் தவறு. அதை எதிர்க்கவே களமிறங்கினேன். அவர்கள் ஒழுங்கா, கரெக்டா, நியாயமா சொல்லலேன்னுதான் எதிர்த்தேன். அன்றைக்கே நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன். படங்களில் அன்று விட்ட சிகரெட்டை இன்றுவரை தொடவில்லை. வீம்புக்காக அதை படங்களில் செய்திருக்கலாம். ஆனால் சொன்ன விஷயம் நல்லது. அதனால் அதை மதித்துவிட்டுவிட்டேன்.
பொய்யான வாக்குறுதி தரமாட்டேன்…
அரசியல் சாதாரண விஷயம் அல்ல. ரொம்ப ரொம்ப கஷ்டம். யாரையும் சந்தோஷப்படுத்துவதற்காக, பொய்யான வாக்குறுதியை அளிக்க நான் விரும்பவில்லை.
மாநில அரசியல் கட்சி தலைவர்கள் படும் கஷ்டங்களை அருகிலிருந்து பார்க்கிறேன். எந்த அரசியல் கட்சி தலைவரும் சந்தோஷமா.. நிம்மதியா இல்லீங்க. தொண்டர்கள் சந்தோஷமா இருக்கலாம்.. ஆனால் தலைவர்கள் இல்லே.
அரசியல் தலைவர்கள் நல்லவர்கள்தான்…
அரசியல் தலைவர்கள் யாரும் ஜனங்களுக்கு கெட்டது செய்ய வேண்டும் என்று மனசார ஆசைப்படுவதில்லை. நல்லது செய்யத்தான் விரும்பி வருகிறார்கள். ஆனால் அவர்களால் செய்ய முடியாது. ‘சிஸ்டம்’ அப்படி இருக்கு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது.
மத்தியிலோ மாநிலத்திலோ ஒருத்தர் ஆட்சிக்கு வந்து பதவியில ஒருவாட்டி உட்காந்த பிறகு, அதைத் தக்க வச்சுக்க படும் பாடு இருக்கே… அதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
தயவு செய்து அரசியல் தலைவர்களைக் குற்றம் சொல்லாதீர்கள். ஒரு கட்சியின் பலமே, அஸ்திவாரமே அதன் தொண்டர்கள்தான். தொண்டர்கள் சரியாக இருக்க வேண்டும். தங்கள் தலைவர்கள் மனநிம்மதியோடு இருந்து, நல்லது செய்ய பாடுபட வேண்டும்.
நேரம் காலம் கனிஞ்சா…
என்னுடைய குரு சச்சிதானந்த சுவாமி சொன்னார், ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு தலையெழுத்து இருக்கிற மாதிரி, ஒவ்வொரு நாட்டுக்கும் யார் தலைவரா வரணும்னு ஒரு விதி இருக்கு. அது அப்படித்தான் நடக்கும். அதற்கான கால சந்தர்ப்பங்கள் வரும்போது நடக்கும்.
நேரமும் சூழலும் சந்தர்ப்பங்களும் சரியாக அமைந்தால்தான் அரசியலில் எல்லாம் நடக்கும். ஒருத்தர் வந்து தன்னுடைய அருமை பெருமைகளாலோ, பேச்சாலோ, உழைப்பாலோ ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது நடக்காது. நேரம்தான் அரசியல் மிக முக்கியமான விஷயம். இல்லேன்னு சொன்னா.. காமராஜர் மாதிரி ஒரு தலைவர் தோற்றிருப்பாரா? யாராவது நினைச்சிப் பாத்திருப்பாங்களா?
நேரம்தான் காலம்தான் அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கிறது…”
புகைப் பழக்கம் வேண்டவே வேண்டாம்.. அடியோடு விட்டொழியுங்கள்! – சூப்பர் ஸ்டார் வேண்டுகோள் -3
ஒரு விழாவில் நான் சொன்னேன்… ரசிகர்களைப் பார்க்க எனக்கு கூச்சமா, வெட்கமா இருக்குன்னு. ஏன்னா உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, நிறைய விஷயங்களை, டாக்டர்களின் ஆலோசனைப்படி என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.
டாக்டர்கள் சொல்லியிருக்காங்க, எனக்கு பிபி ஜாஸ்தியா இருக்கு, என்ன விஷயமாக இருந்தாலும் என் கவனத்துக்கு கொண்டு போகக்கூடாதுன்னு.
நான் மெட்ராசுக்கு வந்த பிறகுதான் நியூஸ்பேப்பர்ஸ், மேகஸின்ஸ் எல்லாமே நான் பார்த்தேன். என் ரசிகர்கள் எனக்காக நடத்திய பிரேயர்ஸ்… நான் நலம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை பண்றது, நடந்து போறது, ஆயிரம் பேர் மொட்டை போட்டுக்கிட்டது, மண்சோறு சாப்பிட்டது, விரதமிருக்கிறது, கோயில்ல, சர்ச்ல, மசூதில பிரார்த்தனை செய்ததையும் படிச்சி தெரிந்துகொண்டேன்.
ஒருத்தர் சொன்னாங்க, மலைமேல உள்ள கோயிலுக்கு முட்டி போட்டுக்கிட்டே படியேறி பிரார்த்தனை செய்தேன். அதனால இரண்டு மாசம் ஆஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். ஆனா அதுக்காக எங்க அப்பா அம்மா கூட ஏண்டா இப்டி செஞ்சேன்னு கேக்கலன்னு சொன்னாரு.
இதை அவர் என்கிட்டே சொன்னபோது, அவருக்கு நான் நன்றின்னு சொன்னா.. அது எவ்ளோ சின்ன வார்த்தை… அவருக்கு நான் பணம் கொடுக்க முடியுமா… ஏம்பா இப்டி பண்ணேன்னு கேக்க முடியுமா? அவனுக்கு நான் என்ன திருப்பிக் கொடுபேன்… ரொம்ப வெக்கமா இருக்கு. ராதாரவி சொன்னாரு, ஒரு வாரம் விரதம் இருந்ததா… அதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல… உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணுது.
ஏன்னா… நான் ரொம்ப கொடுத்தேன்னு சொல்ல முடியாது. ஆனா டெபனட்டா யார்கிட்டயும் வாங்கியும் பழக்கமில்லே. எப்டி சொல்றது… என்னோட நன்றி!
ராணா பண்ணும்போது உடம்பு சரியில்லாம போச்சு (தலைவர் ராணா பத்தி சொன்னதை தனியா எழுதினாதான் நல்லாருக்கும்… அதனால இங்கே அதை தரவில்லை!) ராணா என்கிற கேரக்டரை ரொம்ப பெரிசா பர்பார்ம் பண்ணனும்னு முயற்சி பண்றப்பதான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு.
அது சீரியஸா போனதுல என் தப்பும் இருக்கு. உடனே மருத்துவமனையில் சேர்ந்தால், தேவையில்லாத வதந்திகள் வரும்னு உடனே டிஸ்சார்ஜ் ஆகி வந்துட்டேன். டாக்டர்கள் சொன்னாங்க, ரெண்டு நாள்ஆஸ்பிடல்ல இருந்து புல் செக்கப் பண்ணிக்கிட்டு சரி பண்ணிட்டு போங்கன்னு சொன்னாங்க. ஆனா நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன். காரணம், ரெண்டு நாள் ஆஸ்பிட்டல்ல இருந்தா தேவையில்லாம வதந்திகள் வரும் என்பதால், வீட்லே இருந்து பண்ணிக்கலாம்னு வந்துட்டேன். அதனால என் உடல்நிலையை நானே கொஞ்சம் ஜாஸ்தி பண்ணிக்கிட்டேன்.
பிகாஸ்… நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியதுண்டு. அப்போது சில கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் இது நடந்தது. வாழ்க்கைல அப்பா அம்மா, கடவுளை விட, மனைவியை விட நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம். அப்பதான் வாழ்க்கை நல்லாருக்கும். நான் சில கெட்ட நண்பர்களால குடிப்பழக்கத்துக்கு ஆளானேன். அதன் பிறகு நடிக்க வந்த பிறகு குடி இன்னும் அதிகமாகிடுச்சி. நல்ல சரக்கு, சரக்குன்னு தேடி குடிக்க ஆரம்பிச்சு, வேலை வேலைன்னு பிஸியாகி, தூக்கமில்லாம நெர்வ்ஸ் பிரேக் ஆன விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியும்.
குடியை குறைச்சிக்கிட்டேன்…
அதன் பிறகு திருமணத்துக்குப் பிறகு, என் அருமை மனைவி லதாவின் அன்பாஸலும் ஆதரவினாலும் குடிப் பழக்கத்திலிருந்து மெல்ல மீண்டேன். அதுக்காக நான் ஒரேயடியாக விட்டுட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனால் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி பண்ணிக்கிட்டேன். மது இல்லாம தூங்க முடியும், இருக்க முடியும்ங்கிற நிலைக்கு கொண்டு வந்துட்டேன். யோகா, உடற்பயிற்சி என பண்ணிக்கிட்டிருந்தாலும், சிகரெட் பழக்கத்தை மட்டும் விட முடியல.
என் உடம்பு இவ்வளவு மோசமானதுக்கு காரணமே அந்த சிகரெட் பழக்கம்தான். நான் அனுபவிச்சி சொல்றேன், ரொம்ப அடிபட்டு சொல்றேன்… அந்த சிகரெட் பழக்கத்தை மட்டும் உடனே விட்டுடுங்க. தயவு செஞ்சி விட்டுடுங்க.
எனக்கு இஸபெல்லா ஆஸ்பிட்டல்ல இருந்தப்ப நுரையீரல் பாதிப்பை தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான், தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள்.
எனக்கு உடம்பு மோசமா போனதும், ராமச்சந்திரா ஆஸ்பிடலுக்கு கொண்டு போனாங்க. அங்கு டாக்டர்கள் என்னை அருமையா கவனிச்சிக்கிட்டாங்க. டாக்டர் தணிகாசலம் உள்ளிட்டவர்கள் அப்படி பாத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் நடந்ததையெல்லாம் பின்னாலதான் நான் கேள்விப்பட்டேன். அங்க இருந்தப்போ பெரும்பாலும் என்னை மயக்க நிலையில்தான் வச்சிருந்தாங்க. அதுக்கப்புறம் சிங்கப்பூர் போனேன். சிங்கப்பூர் ஆஸ்பிட்டல்ல இருந்தப்போ என்னோட கிட்னில பாதிப்பு ஏற்பட்டுச்சி. உடம்புல உள்பாகங்கள்ல பாதிப்பு ஏற்பட்டா, ஸ்டெராய்ட் குடுத்துதான் சரிபண்ணுவாங்க. ஸ்டெராய்ட் கொடுக்கும்போது, முதலில் சரியானா கூட, ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் ரொம்ப மோசமா இருக்கும். எனக்கு நிறைய மெடிசன்ஸ் கொடுத்தாங்க. விவிஐபியா இருக்கிறதுல ப்ளஸ்ஸும் இருக்கு மைனஸும் இருக்கு. எனக்கு மெடிசன்ஸ் அதிகமாயிட்டதால, அதனோட எஃபெக்ட்ஸே ஆறேழு மாசத்துக்கு இருந்தது. இதை நான் இதுவரைக்கும் யாருக்கும் சொல்லல.. ஏன்னா என்னை வாழ வச்ச தெய்வங்களான உங்ககிட்ட இதை முதல்முதலா சொல்றேன்.
இந்த ஸ்டீராய்டு மெடிசன்களால உடம்பு சரியான பிறகுகூட, அந்த பவர் போனதும் அப்படியே உடம்பும் மனசும் வீக்காயிடும். இந்த எஃபெக்ட்லருந்து முழுசா மீண்டு, கடந்த மூணு நாலு மாசமாவே 100 சதவீதம் நான் சரியாகிட்டேன்.
அதுக்கு முக்கிய காரணம், எந்த மெடிசனா இருந்தாலும் அதுக்கு உடம்பு உடனடியா ரியாக்ட் பண்ணனும். உடம்பு ரியாக்ட் பண்ணலன்னா, எந்த மெடிசனும் வேலை செய்யாது. என் உடம்பு வேகமா ரியாக்ட் பண்ண விதத்தைப் பார்த்து டாக்டர்களே அதிசயப்பட்டாங்க. அதைப் பார்த்தபிறகுதான் மருந்தின் அளவை படிப்படியா குறைச்சாங்க.
100 சதவீதம் ஆரோக்கியமா இருக்கேன்…
இப்போ முழுமையாக ஆரோக்கியமா இருக்கேன்னு சொன்னா, அதுக்கு உங்க, அன்பு பிரார்த்தனைகள்தான் காரணம்.
இந்த அன்புக்கு என்ன பண்ணப்போறேன்… எப்படி செய்யப் போறேன்னு தெரியல. ஏன்னா எதுவும் என் கையில இல்லே. ஆனால் பொய்யான நம்பிக்கை கொடுக்க நான் தயாரா இல்லே. ஆனா நிச்சயமா சொல்றேன், நீங்க முதல்ல உங்க குடும்பத்தை பாத்துக்கங்க, அப்பா அம்மா குழந்தைகளைக் கவனிங்க. உங்கள் அனைவருக்குமே என் மனமார்ந்த நன்றிய தெரிவிச்சிக்கிறேன்,” என்றார்.
தங்கைக்காக ஒரு சாம்ராஜ்யத்தையே அழிக்கும் அல்டிமேட் வில்லன் ராணா! – ரஜினி -4
அவர் கூறுகையில், “‘சந்திரமுகி’க்கு பிறகு ‘சிவாஜி’. அதற்குப் பிறகு ‘ரோபோ’ படத்தில் நடித்தேன். ரோபோவுக்கு அடுத்து, அதை விட பிரமாண்டமா ஒரு படம் பண்ணனும்னு யோசிச்சப்ப, ஒரு வரலாற்றுப் படம், ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் படம் எடுக்க முடிவு பண்ணோம். அதான் ராணா. சிவாஜி, ரோபோ, ஷங்கர், புரொடியூசர்ஸ் காரணமாக வியாபாரம் பெருசாகிடுச்சி. 100 கோடி, 150 கோடி, 200 கோடி செலவழிச்சி படம் பண்ண, ஈராஸ் மாதிரி தயாரிப்பாளர்கள் வந்தாங்க. 250 கோடி செலவழிச்சு படம் பண்ணவும் தயார் என்றபோது, அதற்கு ஏத்தமாதிரி ராணா படத்தை உருவாக்க முயற்சி பண்ணேம். மிக அருமையான கதை அது.
இதுக்கு முன்ன சந்திரமுகியில நான் பண்ண வேட்டையன் கேரக்டர் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அப்புறம் சிவாஜில மொட்ட பாஸ் ரொம்ப புடிச்சது. அது வில்லனுக்கு வில்லன் மாதிரி வச்சிக்கங்களேன். ரோபோல அந்த பேட் ரோபோதான் ரொம்ப புடிச்சது. அதுக்கப்பறம் இதெல்லாம் சேர்ந்த மாதிரி ராணா கேக்டர்…
அவன் வந்து துரியோதனன், ராவணன் மாதிரி பலசாலி, சகுனி மாதிரி புத்திசாலி.. அவ்வளவு மூளை.. தங்கச்சின்னா அவ்வளவு பாசம். அந்த தங்கச்சியோட லட்சியத்துக்காக ஒரு தனி ஆளு, ஒரு சாம்ராஜ்யத்தையே அழிக்கிறான். மிக மிக அரசியல்.. மிக மிக அதிக விஷயங்கள் அடங்கிய கதை.. ஒரு வரலாற்றுப் படத்துல இதையெல்லாம் சொல்லும்போது, இப்ப இருக்கிற சூழ்நிலையில நல்லா ஒத்துப் போகும்.
ஸோ… அந்த ராணா கேரக்டரை உள்வாங்கி, ரொம்ப பெரிசா.. பர்பார்ம் பண்ணனும்னு நினைச்சிருந்தேன்… அதை சரியா சொல்லணும்னா.. த அலடிமேட் வில்லன் கேரக்டர். அந்த கேரக்டர் அறிமுகமாவதே இடைவேளைலதான். அதுக்கப்புறம் ராணாவின் அட்டகாசங்கள் ஆரம்பம். இடைவேளைக்குப் பிறகு அந்தக் கேரக்டருக்கு ஜஸ்டிபிகேஷன்… அருமையான கதையமைப்பு. அதை எடுக்க முயற்சிக்கும்போதுதான், மருத்துவமனையில் சேர வேண்டியதாயிடுச்சி!” என்றார்.
உண்மையில் இதை அவர் சொல்லி முடித்தபோதே, நமது மனதுக்குள் ரஜினி ராணாவாக திரையில் அதகளம் பண்ணுவதை விஷுவலைஸ் பண்ண முடிந்தது. அதான் சூப்பர் ஸ்டார் வார்த்தைக்குள்ள அபார ஆற்றல்!
http://www.envazhi.com/rana-is-the-u...n-says-rajini/
Thalaivar's speech video
http://www.youtube.com/watch?v=Dp100...layer_embedded
Part 2 http://www.youtube.com/watch?feature...&v=fUr2JBkfiww
Part 3 http://www.youtube.com/watch?feature...&v=GKqhfsf2AxU
Rana storyline sounds awesome....
ராணா வந்து துரியோதனன், ராவணன் மாதிரி பலசாலி, சகுனி மாதிரி புத்திசாலி.. அவ்வளவு மூளை.. தங்கச்சின்னா அவ்வளவு பாசம். அந்த தங்கச்சியோட லட்சியத்துக்காக ஒரு தனி ஆளு, ஒரு சாம்ராஜ்யத்தையே அழிக்கிறான். மிக மிக அரசியல்.. மிக மிக அதிக விஷயங்கள் அடங்கிய கதை.. ஒரு வரலாற்றுப் படத்துல இதையெல்லாம் சொல்லும்போது, இப்ப இருக்கிற சூழ்நிலையில நல்லா ஒத்துப் போகும்.
Now Thalaiavar is completely fine and healthy... Hope he would make this movie someday..
Chandramukhi was the last 100 days picture @ Vettri, chrompetand more than 1 lac ppl watched it here ... This record will remain unbeatable 4ever ... Hail King Rajinikanth
Shivaji the boss (3D) being shown in UK (Cineworld) from 4th of Jan !
Thalaivar's speech at chidambaram's book launch
If I come to politics,my way will be different...
https://www.youtube.com/watch?featur...&v=GzqM32axGlg