-
வாசு சார்
பறக்கும் பந்து பறக்கும் பாட்டைப் பற்றி நீங்கள் எழுதியவுடன் ஏனோ எனக்கு தேவன் கோயில் மணியோசை படப்பாடல் நினைவுக்கு வந்து விட்டது.
அந்தப் படத்தின் துவக்க விழாவன்று ரணணா ஸ்ரீதர் இசையில் இரு பாடல்கள் பதியப்பட்டது என நினைக்கிறேன். ஒரு பாடலின் பல்லவி புதிய உலகம் பிறக்கும் என்று துவங்கும். இரண்டாம் வரி கூட ... கதவு திறக்கும்... என்று வரும். இரண்டாம் வரியின் முதல் வார்த்தை ஞாபகத்திற்கு வரவில்லை. அருமையான ட்யூன். டி.எம்.எஸ். பி.சுசீலா பாடியது. அந்தப் பாடலையாவது அவர்கள் வெளியிட்டிருக்கலாம். அந்தக் காலத்தில் அது புதுமையான ட்யூன். நமது நண்பர் ஒருவர் அந்தப் படப் பூஜையன்று அங்கிருந்தார். சில தினங்களுக்கு முன் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் அந்த ட்யூனைப் பாடிக்காட்டினார். அது மட்டும் வந்திருந்தால் டி.எம்.எஸ். பி.சுசீலா இணையின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் வைரமாய் மின்னியிருக்கும். காரணம் நண்பர் பாடிக்காட்டும் போதே அது அவ்வளவு ரம்மியமாக இருந்தது.
-
//ராமண்ணா படங்களின் டுயட்டுகளுக்கான லொக்கேஷன் நமக்கு தெரிந்ததுதான். பார்க், பீச், வெளிநாடு... ஊஹும்.
பறக்கும்பாவையில் பாத்ரூமுக்குள் டூயட்.
குமரிப்பெண்ணில் ரயில்பெட்டியில் டீசிங் பாடல்
நான் படத்தில் சின்ன பியட் காருக்குள் டூயட்
மூன்றெழுத்தில் சின்ன பெட்டிக்குள் டூயட்
தங்கசுரங்கத்தில் கிணற்றுக்குள் டூயட்
இந்தப்படத்தில் அவருக்கு கிடைத்தது வீராணம் குழாய்கள்.
அதையே அட்டகாசமாக பயன்படுத்தி நம்மையும் அசத்திவிட்டார். // சூப்பர் லிஸ்ட் ஆதிராம் சார்..
காஜல் போல கூகுள் கூகுள் ஸாரி வாசு வாசு பண்ணிப்பார்த்ததில்
ராமண்ணா படத்தில்மிகப் பிடித்த பாடல்கள் என லிஸ்ட் போட்டேன்
அன்று வந்ததும் அதே நிலாவை விட கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பிடிக்கும்
மெளனம் கலைகிறது மயக்கம் வருகிறது.. ஓஹ்
இன்னும் நிறையச் சொல்லலாம்.. ஆனால் முடியாத்.. ஏனாம்.. கான்செப்ட் கிடைச்சுடுத்தே..
எனில் இன்று விஜயதசமியை முன்னிட்டு...
விஜய என ஆரம்பிக்கும்ஹீரோயின்களின் பாடல்கள்..
முதலாவதாக (ரொம்ப நாளாச்சு) வி.கு பாட் :)
நான்பாடும் பாட்டிலே வான் மீனும் தூங்குமே
https://youtu.be/v17bclS-eyc
-
விஜயதசமி ஸ்பெஷல்..
வி.கு பாட் டூ :) போனஸாக அசோகன்..
வஞ்சி என்றால் வஞ்சிப்பதோ
வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ..
https://youtu.be/ngFgQlu7KC0
-
-
வி. ஸ்பெஷல் – 3
லேடி சேம்ஸ் பாண்ட் (சி.செ..எங்கே எங்கே.. யாரச் சொல்றீங்க.. சி.க.. இங்க்லீஷ் படத்தப் பத்தி உமக்குத்தான் தெரியும்.. ஒரு கட்டுரை தருவீங்க தானே) தமிழ் விசய லலிதா..
நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம்
பூமேடை நீ போட வா
ஆ..
நான் தரும் தேன்சுவை போதையில்
பொன்னூஞ்சல் நீ ஆடவா.. ( நல்லாத் தாம்மா சொல்றே)
யூ..டோண்ட் டச் மீ யூ.. (சரிம்மா. கத்தில்லாம் வச்சுருக்கயே..யாரும் தொடமாட்டாங்க!)
https://youtu.be/pLYyfyIS_0Y
-
சின்னா!
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். குறிப்பாக 'புன்னகையில் ஒரு பொருள் வந்தது'. மிகவும் நன்றி!
-
போட்டாச் ஆர் இல்லியா :)
வேதாள உலகத்தைப் பத்தி ஒரு வியாசமே எழுதலாம் வர்றேன்..
-
சின்னா!
'நான் நால்வகை நாடகம்' பாடல் போட்டிருப்பதைப் பார்த்தால் ரொம்ப ரேர் சாங்க்லாம் பார்த்து பார்த்து தேடறா மாதிரி இருக்கு.:) கமான்.
-
Quote:
Originally Posted by
chinnakkannan
போட்டாச் ஆர் இல்லியா :)
'இன்றைய ஸ்பெஷல்'ல:)
-
விஜய சந்திரிகா என்ன படமாக்கும்
விஜய ஸ்ரீ
எல். விஜயலட்சுமி
விஜயலட்சுமி (விஷால் புகழ்!)
விஜயலலிதா
இன்னும் எத்தனை விஜய உண்டு.?