-
தாத்தாவுக்கு 60ம் கல்யாணம் அன்று...
பேரன்: "கல்யாணத்துக்கு நேரமாகுது. உடனே வாங்க தாத்தா, புதுவேட்டி புதுசட்டையெல்லாம் எடுத்திருக்கோம். வந்து போட்டுக்குங்க தாத்தா."
தாத்தா: "போங்கடா.. வேட்டி சட்டை மட்டும் புதுசா எடுத்திருக்கீங்க. பொண்ணு மட்டும் அதே பழசுதானா.!"
-
ஒருவரது தென்னந்தோப்பில் மரத்தில் ஏறி ஒரு சிறுவன் தேங்காய் திருடிக் கொண்டிருந்தான்...
“டேய், தேங்காயா திருடுறே? இரு. உன் அப்பாக்கிட்ட சொல்லி உதைக்க சொல்றேன்”
“போய் சொல்லு. எங்க அப்பா இங்க இருக்கிற பத்தாவது மரத்துலதான் தேங்காய் பறிச்சிக்கிட்டு இருக்காரு.”
-
"படத்துல பித்துப்பிடித்து ஒரே திசையில பார்த்திட்டு இருக்கற மாதிரி ஒரு கேரக்டர் வருது.. யாரைப் போடலாம் ?”
“ஏன் உங்களுக்கு முன்பு வாய்ப்பு கொடுத்த படத்தயாரிப்பாளரையே போடலாமே.”
-
என்ன சார்! காகிதப்பூ வாங்கிட்டு போறீங்க?
என் ஒயிஃப் ட்ரெஸ் பண்ணிட்டு கிளம்புறதுக்குள்ள நிஜப்பூ வாடிப் போயிடுமே அதான்!
-
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை
*********
"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது"
"வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது"
-
சுகிரி: முன் வைத்தகாலை பின் வைக்க கூடாது. ஏன்?
இடிபிஎஸ்:தெரியலை
சுகிரி:பின்னு குத்திடும்.
மாலதி: :bigsmile:
-
நானும் அவளும் ரொம்ப
நெருங்கின நண்பர்களும் இல்லை.
ஆனால் இதுவரைக்கும் எங்க ரெண்டு பேர் நடுவுல
இதுவரைக்கும் ஒரு சின்ன சண்டை
கூட வந்தது இல்லை.
கோவம் கூட வந்தது இல்லை.
அவ எனக்கு எந்த உறவு முறை என்று
இதுவரைக்கும் தெரியவில்லை.
ஆனால் அவள் ரொம்ப நல்லவள் !
ஏன் தெரியுமா ?
" நான் யார் கூடவும் பேசக் கூடாதுன்னும்,
நான் யார் கூடவும் போன்ல பேச
முயற்சி பண்ணினாலும் "
என்ன சொல்லுவா தெரியுமா ?
"Your Account Balance is too low to make a call...."
-
மிஸ்டர் பீன் ஒரு நேர்முக தேர்விற்கு செல்கிறார்.
கேள்வி : 'Ford' என்பது என்ன?
திரு பீன் : அது ஒரு வண்டி.
கேள்வி : 'Oxford' என்பது என்ன?
திரு பீன் : மாட்டு வண்டி.
நன்றி *: கௌஷ்
-
(விமான நிலயத்தில்...)
வடிவேலு:சென்னையில் இருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்??
Receptionist :Plz one minute sir...
வடிவேலு:அடங்க் கொக்கமக்கா..என்ன speed...
Receptionist : :cry2: ....
-