Originally Posted by RAGHAVENDRA
டியர் பம்மலார்,
இரண்டு சக்கரங்களும் சாலப் பொருந்தி ஒன்றுக்கொன்று கருத்தொருமித்துப் போகும் போது வண்டிக்கு அதை விட வேறென்ன வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சாதனைகள் என்ற வண்டியை முரளி சீனிவாஸ் என்ற சக்கரம் ஒரு புறமும் பம்மலார் என்ற சக்கரம் இன்னொரு புறமும் தாங்கிச் செல்லும் போது அதில் சவாரி செய்யும் பெருமையை நாங்கள் பெறுகிறோம், உவகை கொள்கிறோம், ஆனந்தம் அடைகிறோம்.... வண்டிக்காரன் பெருமை கொள்கிறார் ... நம்ம வண்டியை விட சிறந்த வண்டி இந்த உலகத்திலேயே கிடையாது ...
தங்களிருவரின் தொண்டு நடிகர் திலகத்திற்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. மேலும் மேலும் நடிகர் திலகத்தின் சாதனைகளை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொண்டு ....
ராகவேந்திரன்