Thanks, Satish!
Printable View
Thanks, Satish!
Ragavendran and Murali sir,
How was first day and first show of "Naan Vazha Vaippen", Was there any issues between NT and SS fans?
When this movie re-released around 1990/91 at Madurai Sivam theatre we had lots of clashes inside the theatre and also clash with posters.
Murali sir, how was first show in Madurai, did you watch first show? Also I think this movie released in Madurai Central or Cine Priya, not sure.
Pammalar sir, could you please give us Madurai and other cities records of this movie?
Cheers,
Sathish
நான் வாழ வைப்பேன், மிகவும் அருமையான சித்திரம். சில குறைகளை மீறி [குறிப்பாக ஜீரணிக்க முடியாத காஸ்ட்யூம்களில் கே.ஆர்.விஜயா! ], நல்ல வெற்றியைத் தந்த படம். அதிலும் ரஜனிகாந்த் அவர்களுக்கு முழு சுதந்திரம் தந்து பெயர் தட்டிக்கொண்டு போக வைத்த படம். இளைய ராஜா அவர்களின் பங்கு இப்படத்தின் வெற்றியில் முக்கியமானது. என்னோடு பாடுங்கள் பாடல் முதலில் டி.எம்.சௌநதர்ராஜன் அவர்கள் பாடி பதிவு செய்யப் பட்டு பின்னர் என்ன காரணத்தாலோ அதனை பயன் படுத்தாமல், மீண்டும் எஸ.பி.பாலாவை பாட வைத்து அப் பாடல் பதிவு செய்யப் பட்டது. டி.எம்.எஸ் குரலில் ஒலித்த பாடலைத் தர முயல்கிறேன்.
தற்போது என்னோடு பாடுங்கள் எஸ்.பி.பாலாவின் குரலில் திரையில்,ஜெய்கணேஷ் பற்றிய சந்தேகம் இப்பாடலின் மூலம் நீக்கப் படும்.
http://www.youtube.com/watch?v=-puyMT1lb94
அன்புடன்
Murali sir, thanks a lot for "Pennin Perumai" review, it was excellent you made me to watch it again. But I don't have this movie DVD and will buy when I visit Madurai this time.
77 days in Madurai Thangam, you could say its equal to 200 days in other theatres, particularly Madurai Mini Priya, Suga Priya...
Pammalar sir, after you started giving our NT records every one understood that who is ONLY and REAL collections king of Tamil movies... Thanks again to wakeup many people.
Cheers,
Sathish
சென்னை சித்ரா திரையரங்கு நடிகர் திலகத்தின் ஏராளமான திரைப்படங்களை முதல் வெளியீடாகவும் மறு வெளியீடாகவும் திரையி்ட்டுள்ளது. அத் திரையரங்க ஊழியர்கள் மிகவும் பெருமையுடன் சிலாகித்த காலமும் உண்டு. நான் வாழ வைப்பேன் 100 வது நாள் விழாவில் கலந்து கொண்ட ஓர் ஊழியர் இதனை மிகவும் பெருமையுடன் கூறினார். கீழே காணும் நிழற்படத்தில் சித்ரா திரையரங்கம் சார்பாக 100வது நாள் விழாக் கேடயத்தை நடிகர் திலகம் அவர்களிடமிருந்து திரையரங்க நிர்வாகி பெறும் காட்சி.
http://i872.photobucket.com/albums/a...thdayfw01A.jpg
அன்புடன்
-Quote:
எங்கே இருந்தாலும் உன்னை மறவாத உள்ளம் இதுவல்லவோ
இந்த வரிகள் ஒரு தங்கை அண்ணனிடம் சொல்வதாக இருந்தாலும் நம் அனைவருக்கும் பொருந்துகின்றதல்லவோ.
1971ம் ஆண்டில் தேர்தலுக்கு சில காலம் முன் வெளிவந்த படம் தங்கைக்காக. அத்தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருந்த நேரத்தில் கவியரசர் கண்ணதாசன் காமராஜரை மனதில் வைத்து எழுதிய வரிகள் இந்த டூயட் பாடலில் இடம் பெற்றன. பாடலின் துவக்கமே நம்பிக்கையூட்டுவதாக அமைந்து பெரும் வரவேற்பினைப் பெற்றது. படம் வெளியான மறுநாள் கிரௌன் திரையரங்கில் தங்கைக்காக படத்தைப் பார்த்த போது, இந்த வரிகளுக்கு அரங்கமே அதிர்ந்தது. இந்த டூயட் பாடலைப் பாடியவர் டி.எம்.எஸ். மற்றும் எஸ்.ஜானகி. இதில் ஒரு சிறப்பம்சம் நடிகர் திலகத்துடன் வெண்ணிற ஆடை நிர்மலா டூயட் பாடிய ஒரே படம், ஒரே பாடல் இதுதான்.Quote:
உனைத் தேடி வரும் எதிர்காலம் அதைத் தெரிவிப்பதே இந்த நேரம், புது வாழ்வு சுகமாக மனம் தானே காரணம்
இந்த தங்கைக்காக திரைக்காவியம் வெகு நீண்ட நாட்களாக மறு வெளியீடும் காணவில்லை, இன்னும் ஒளித்தகடுகளும் வெளியிடப் படவில்லை. அதனால் புதிய தலைமுறையினர் இப்படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நமக்கெல்லாம் மகிழ்வூட்டும் விதமாக தற்போது அத்திரைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது.
தங்கைக்காக
http://www.dailymotion.com/video/xkfgh1_thangai-1_shortfilms#from=embed
இதுவரை இப்படத்தைப் பார்க்காதவர்கள், பார்த்து தங்கள் கருத்துக்களைப் பகிரந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்களின் ' தங்கைக்காக ' அன்பளிப்பு ஆயிரக்கணக்கான கலைக்குரிசில் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்
என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
திரு வாசுதேவன் சார் மற்றும் திரு ராமஜெயம் சார்,
இந்த திரிக்கு தங்கள் இருவரையும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.தங்களின் வரவு இத்திரிக்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் என்பது உறுதி.
திரு முரளி சார்,
பெண்ணின் பெருமை படத்தை இதுவரை பார்த்திராத என்னை போன்றவர்களை தங்களின் பட ஆய்வு மூலமாக பார்க்க வைத்ததற்கு நன்றி.
திரு ராகவேந்திரா சார்,
திருச்சி ரசிகர் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிவிடி முகப்பு அருமை.அதை பதிவேற்றிய தங்களுக்கு நன்றி.
திரு குமரேசன் சார்,
புதிய பறவை ரிலீஸ் ஆகிறது என்று சொன்னாலும் சொன்னீர்கள் ,அன்று முதல் தினமும் என் கனவில் ஞாயிறு மாலை அமர்க்களங்களை தியேட்டர் முன்பு நின்று பார்ப்பது போலவும்,படத்தை தியேட்டரின் உள்ளே ஆரவாரத்துடன் பார்ப்பது போலவும் காட்சிகள் தவறாமல் வருகிறது .தயவு செய்து ரிலீஸ் தேதியை தெரிவிக்கவும் .
பெங்களூரில் நடிகர்திலகத்தின் தரமான டிவிடிக்கள் எங்கு கிடைக்கும் ?
திரு பம்மல் சார்,
பொன்விழா கொண்டாட்ட பொக்கிஷம் மிகவும் அருமை,நடிகர்திலகத்தின் ரசிகர்களின் பொக்கிஷம் நீங்கள்,நன்றி.