ரவி
நவராத்திரி அற்புதராஜ் பற்றிய பதிவிற்குத் தாங்கள் அளித்துள்ள ஆதரவான உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்த பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
Printable View
ரவி
நவராத்திரி அற்புதராஜ் பற்றிய பதிவிற்குத் தாங்கள் அளித்துள்ள ஆதரவான உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்த பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
http://i61.tinypic.com/1z3vzg9.jpg
சிவாஜிக்கு நண்பர்கள் என்றால் உயிர். அரரைப்போல் தன் நண்பர்களிடம்
பழகுபவர்களை காண்பதே அரிது. அவ்வளவு அன்யோன்யமாய் பழகுவார்.
யாருக்காவது பணக்கஷ்ட்டம் என்றால் அவர் வெளிக்கு பரிதாபப்படுவதுபோல்
காட்டமாட்டார்.ஆனால் ஆச்சரியப்படும் அளவில் உதவி செய்வார்.
இந்தமாதிரியாக எனக்கே நேர்ந்திருக்கிறது.
கணேசனிடம் உள்ள குறைகள்பற்றி நான் நேரிடையாக
அவரிடம் அடிக்கடி கூறுவேன்.
"இதோ பாருங்கள் உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் போதாது
இல்லாவிட்டால் இப்படியாகுமா...?" என்று அவரது
உதவியை பெற்றுக்கொண்டு அவரையே தாக்கும்படி
அமையும் சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்.
"அப்படி சொல்லாதே பாய் நான் நினைத்தபோது அவங்க சரியாத்தான் இருந்தாங்க.
அதனால் நான் அன்புகாட்டினேன்.அவங்க மாறிட்டா அது என் தப்பா?" என்று சமாதானம் சொல்வார் அவர் .
குறிப்பாக தன் நண்பர் ஒருவருக்கு உதவிகள் செய்து அவரை முன்னுக்கு கொண்டுவந்த பிறகு
அவரே இவரிடம் கொஞ்சமும் நன்றியில்லாதவராக நடந்துகொண்டபோது புழுங்கிக் கொண்டாரே தவிர
அதை தனக்கு தெரிந்ததாகவே வெளிஙில் காட்டிக்கொள்ளவில்லை.
அதை அப்படியே ஜீரணித்துக்கொண்டுவிட்டார். இத்தகைய பொறுமை உணர்ச்சியை
வேறு யாரிடமும் நான் கண்டதில்லை
( திரு பீம்சிங்)
http://i1065.photobucket.com/albums/...psvkdzbuwc.jpg
பாதிரியார் ஜேம்ஸ்.,போலீஸ் அதிகாரி அருள்என்று இரண்டு வேடங்களில் நடிகர் திலகம் நடிப்பில் பிரமிப்பை ஏற்படுத்திய படம்.வருடம் போனால் என்ன?நல்ல வயசும் ஆனால் என்ன?உருவத்தை பாரடி மெல்ல என்ற வைர வரிகள் இந்த படத்தைப் பார்க்கும் போது நினைவுக்கு வராமல் இருக்காது.நடிகர்திலகத்தின் மென்மையான கண்ணியமான பாதிரியார் நடிப்பு சமுகத்தில் உண்மையான பாதிரியார்களுக்கே பாடமாக அமைந்திருந்தன.
கம்பீரமானகாவல்துறை அதிகாரியாக தங்கப்பதக்கத்தில் நடித்திருந்த போதிலும்இதிலும் கம்பீரமான நடிப்பை வேறு ஒரு கோணத்தில்நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.ஆரம்பமாகும் முதல் காட்சியிலேயே அட்டகாசப்படுத்தியிருப்பார்.
கைதிகளை விசாரிக்கும் காட்சி அவரின் விழி அசைவுகள் அதிசயங்கள் காட்டும்.
http://i1065.photobucket.com/albums/...pssx556lp0.jpg
தேவனின் கோவிலிலே பாடலில் ஆரம்பிக்கும் படம்.அதுவே முழு படம் பார்த்த நிறைவை தந்திருக்கும்.அப்படி ஒரு அருமையான பாடல்.
அந்த பாடலுக்கு பின்வரும் காட்சிகள் விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கும்.பிரபுவின் குடும்பம்,
ராதாவின் காதல்,பின் ராதாவின் மரணம்,பாதிரியார் (நடிகர்திலகம்)மீது சந்தேகம்..பிரபுவின் கோபம்...
நடிகர்திலகத்தை பிரபு அடிக்கும் காட்சி,.,
இந்தப்பட சூட்டிங் ஊட்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அந்தக் காட்சியின் அமைப்பை மட்டும் ஜெமினிசினிமா வார இதழ் வெளியிட்டது.அதைப் படித்தவர்கள் மற்றவர்களிடம் சொல்ல அதுவே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
அந்தப்படம் எப்போது வரும் என்ற ஆவலை உண்டாக்கி,.,
வெள்ளை ரோஜா
தீபாவளி அன்று வெளியாகி மேற் குறிப்பிட்ட காட்சிக்காக சொந்த மகன் என்றும் பாராமல் பிரபு தீபாவளியன்றேதீவிர சிவாஜி ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டது தனிக்கதை.
ராதாவின் சந்தேக மரணத்துக்காக, அண்ணன் போலீஸ் அதிகாரியை பாதிரியார் சந்திக்கும் சந்திக்கும் காட்சி.
ஒரே பிரேமில் இரண்டு சிவாஜிகள் தோன்றும்எந்தப்படமும் உலகின் அதிசயங்களை கண்டது போல் இருக்கும்.
பிரேமின் ஒரு பாதி மென்மையையும்
மறு பாதி கம்பீரத்தையும் காட்டும்.இது நம் உடம்பின் உணர்வுகளிலும் எதிரொலிக்கும்.
பிரேத பரிசோதனைக்காக J.Jஅருள் வருகை தரும் காட்சி. அதன் பின் சவப்பெட்டி வெளியே எடுத்தல்.சவப்பெட்டி திறக்கப்படுதல்.திறக்ககப்பட்டதும்...
[emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298]
போஸ்ட்மார்ட்டம் என்ற மலையாள படத்தின் தழுவல் தான் இந்த வெள்ளை ரோஜா.அந்தப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு கூட அந்தக்காட்சி இடி விழுந்தது போல்தான் இருந்திருக்கும்.
பிணமாக அவரைக் காட்டும் காட்சி
ஒரு பொக்ரான் அணுகுண்டு,6.8ரிக்டர் அளவு பூகம்பம் போன்று அதிர்வுகளை ஏற்படுத்தும்காட்சி.அந்தக்காட்சியில்
இரண்டு வேடங்களுக்கும்நடிகர்திலகம் காட்டும் முகபாவங்கள் அற்புதங்களின் கலவை என்று கூறலாம்.
பாதிரியாரின் சாந்தமான முகம் நம்மைஅழ வைக்கும் என்றால் போலீஸ் அதிகாரி யின் முகம் நம்மை வெறி கொள்ள வைக்கும்.
படம் வெளியான சமயத்தில் கோவை அர்ச்சனாவில் படம் பார்த்த ஒரு பெண் அதிர்ச்சியில் இறந்து விட்டதாக வேகமான தகவல் பரவியது இன்றும் வந்து போகும் ஒரு நினைவு.
பின்னர்,நடிகர்திலகம, பிரபு சந்திக்கும் காட்சி வெகு சுவராஸ்யம்.அவரின் விழிவீச்சும் அங்க மொழிகளும் அலட்டல் இல்லாத நடிப்பும்,அந்த உடையும், நடையும் ரசனையை மேமம்படுத்தும் காட்சியமைப்பு.
அதன்பின் நடக்கும் விசாரணைகள்
ஆவியாக நடித்தல் பாட்டுக்கச்சேரி என்று பல விதமான விறுவிறுப்பான காட்சிகளில்
துடிப்பான நடிப்புகள் நம்மை
இமை மூட மறக்கச் செய்யும்.
க்ளைமாக்ஸ்
தூங்காதே தம்பி தூங்காதே,தங்கமகன்,தங்கைக்கோர் கீதம் போன்ற படங்களும் ஒன்றாக ரிலீஸாகி வெற்றிபெற்றும்அதையும் மீறி சென்னையில் ஆறு தியேட்டர்களில்100 நாட்களும்,கோவை அர்ச்சனாவில்100 நாட்களுக்கு மேலும் நகராட்சியான பொள்ளாச்சியில் 55 நாட்களுக்கு மேலும் ஓடி வசூலில் மாபெரும் சாதனை புரிந்த படம்.கோவை அர்ச்சனாவில் வசூலான தொகை 13 லட்சத்திற்கும் மேல்.ஆண்டு 1983 தீபாவளி.
http://i1065.photobucket.com/albums/...psdnjn8qji.jpg
https://upload.wikimedia.org/wikiped...20px-M.s.v.JPG
இசை இன்று அதிகாலை 5 மணிக்கு நம்மையெல்லாம் விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டது.
மெல்லிசை மன்னர் நம் இதயத்தில் இசையாய் குடியிருந்த அந்த தெய்வம் தெய்வத்தோடு சேர்ந்து விட்டது.
http://thefunstons.com/wp-content/up...4/03/tears.jpg
வார்த்தைகள் வரவில்லை. எழுத்தும் அழுகிறது.
அமரத்துவம் வாய்ந்த மனதிற்கினிய நடிகர்திலகத்தின் மதுர கான மெல்லிசையால் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நமது இதயங்களை ஆண்ட மன்னருக்கு கண்ணீர் அஞ்சலி
Our Heartfelt condolences on the sudden demise of the Mind and Soul Vibrator MSV. May his soul rest in peace keeping our souls filled with his ever lasting melodies as part and parcel of our NT's saga!
அஞ்ஞாத வாசத்திற்கு பிறகு என் முதல் பதிவே , என் இசை தெய்வத்துக்கு அஞ்சலியா? கடவுளே, என் இசை ஞானத்தின் ஆரம்ப புள்ளி, குடும்ப நண்பர், ஒரு வருட மொட்டை மாடி உலாவல் தோழர், நான் இந்தியாவிலேயே முதல்வராக நினைக்கும் இசை மேதை , எனக்கு மிக வேதனையான கருப்பு தினம். அந்த மேதையை இழந்து வாடும் திரி உறவினர்களுக்கு, என் நண்பர்களான அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். (எனக்கே தேவை)
எம்.எஸ்.வி
எம்.எஸ்.வி - சிவாஜி இந்த இரண்டு மூன்றெழுத்துக்காரர்களையும் பிரிக்க முடியாது. மொத்தம் 120 திரைப்படங்கள் மெல்லிசை மன்னரும், நடிகர்திலகமும் இணைந்து பனியாற்றியிருக்கிறார்கள். (T .K .ராமமூர்த்தியுடன் இணைந்து 25, தனியாக 95) .
உயரம் குள்ளம், உயர்ந்த உள்ளம். எல்லோரிடமும் எளிமையாகப் பழகுபவர். நடிகர்திலகத்திற்காக நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் அந்த மேதையோடு கலந்துகொள்ளக்கூடிய, உரையாடக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நடிகர்திலகத்தைப் பற்றி என்றுமே உயர்வாக, பெருமையாகப் பேசுவார்.
அன்னாருடைய மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு, இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாகும். திரையுலகம் உள்ளளவும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் பெயர் நிலைத்து நிற்கும். மறைந்த அன்னாருக்கு, நடிகர்திலகம் ரசிகர்கள் சார்பில் அஞ்சலியை செலுத்துவோம்
http://i1234.photobucket.com/albums/...ps588111f8.jpg
http://i1234.photobucket.com/albums/...ps8c21968a.jpg
M.S.V. My heartfelt condolences. May His Soul Rest In Peace
மெல்லிசை மன்னரும் நடிகர் திலகமும் இணைந்து நமக்கு இரு கண்களாகவே திகழ்ந்தனர். இன்னும் சொல்லப் போனால் கண்களுக்கு நடிகர் திலகமும் செவிகளுக்கு மெல்லிசை மன்னரும் என இறைவன் நமக்களித்த கொடையாகவே நாம் பாவிக்கிறோம்.
மெல்லிசை மன்னரின் பூவுடல் மட்டுமே பிரிந்துள்ளதே தவிர அவரல்ல. நம் வாழ்நாள் முழுதும் அவருடைய இசை நமக்குத் துணையாக இருந்து நமக்கு துயரமும் சோகமும் தெரியாமல் ஆறுதலாக அரவணைத்துச் செல்லும்.
அவருக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://moviegalleri.net/wp-content/g...os_4f7eae0.jpg
மெல்லிசை மன்னரின் மானசீக குருவான இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களுக்கும், உலக நடிகர்களுக்கெல்லாம் தலையாய நடிகர் திலகம் அவர்களுக்கும் காலத்தால் அழியாத புகழ் தேடித்தந்த வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியீட்டிற்கான அரசாங்க துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டு விட்டன. அநேகமாக நாளை நாளிதழில் விளம்பரம் வெளிவரலாம் எனத் தெரிகிறது.
OUR HEARTFELT CONDOLENCE ON THE SUDDEN DEMISE OF THE DEMIGOD OF ENTERTAINMENT MUSIC LATE SRI.MSV -
DEFINITION OF A SONG -
MSV TO MUSIC
KANNADASAN TO PEN
TMS TO SING
NADIGAR THILAGAM TO ACT !!!!
TODAY, ALL THE FOUR ARE NOT WITH US IN PHYSICAL FORM !!! YET THEIR PERFORMANCE WILL EXIST TILL THIS WORLD EXIST.
https://www.youtube.com/watch?v=Pkywv_mRuTI
மெல்லிசை மன்னர் காலமாகவில்லை, காலாகாலத்துக்கும் நம் இதயங்களில் நிறைந்து வாழும் இசை வடிவமாகி விட்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு கைத்தாங்கலாக அழைத்து வரப் பட்டபோதே நம் இதயம் நெகிழ்ந்தது. மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வந்தார்.
சில நாட்களுக்கு முன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்பதை அறிந்து மனம் பதைபதைத்தது.
இன்று அதிகாலை இசை ரசிகர்கள் மீது பேரிடி விழுந்து விட்டது.
அவர் உடலால் நம்மை விட்டு பிரிந்தாலும் தன அழியாத பாடல்களால் நம்மிடையே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அவர் புகழைப் போற்றுவதே அவருக்கான சிறந்த அஞ்சலி.
இசையை மெல்லிசையை எனக்கு, என்னை போன்ற பலருக்கு அறிமுகம் செய்து வைத்த திரை இசை சக்ரவர்த்தி மறைந்து விட்டார். அவரது வீட்டின் பெயர் விஸ்வ கீர்த்தி அவர் இசை அவருக்கு உண்மையிலே விஸ்வ கீர்த்தியை தேடிக் கொடுத்தது.
அவருடன் அமர்ந்து அவரின் பாடல்களைப் பற்றிய தகவல்களை கேட்டுப் பெற்று சில மணி துளிகள் அவருடன் உரையாடியது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம். அதற்கு இறைவனுக்கு நன்றி!
மெல்லிசை மன்னர் எந்நாளும் வாழ்வார்!
அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்!
http://i1065.photobucket.com/albums/...pssfexypxg.jpg
உலகம் இதிலே அடங்குதுஉண்மையும் பொய்யும் விளங்குதுகலகம் வருது தீருது - அச்சுக்கலையால் நிலைமை மாறுது!...
http://i1065.photobucket.com/albums/...psw46ehsrc.jpg
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்வாயால் சொல்லிப் பலனில்லே! -
http://i1065.photobucket.com/albums/...psjea8buzt.jpg
அதைமையிலே நனைச்சுப் பேப்பரில அடிச்சாமறுத்துப் பேச ஆளில்லே!...
http://i1065.photobucket.com/albums/...ps9mv3ugd0.jpg
சினிமா ஸ்டாருங்க படங்களைப் போட்டாதெருவில் பேப்பர் கிடைக்கல்லே -
http://i1065.photobucket.com/albums/...psljdomt3e.jpg
அதில்சிரிப்பு கார்ட்டூன் காதல் கேசுகள்சேர்ந்தால் பிசினசு மொடையில்லே!..
http://i1065.photobucket.com/albums/...pssfexypxg.jpg
.காதல் கதைகள் படிப்பதற் கென்றேவாலிபர் கூட்டம் வாங்குது
http://i1065.photobucket.com/albums/...psm7iwlsty.jpg
- அந்தக்கதையிலே வருவதை மனசிலே நினைச்சுராத்திரி பகலா ஏங்குது!...
MSV A GREAT LOSS . HEARTFELT CONDOLENCES. R.I.P
http://tamil.filmibeat.com/news/msv-...ts-035679.html
What a great loss to the music lovers!
As a music lover since my childhood days, I have always been maintaining to my family that "when it comes tune (which is the heart of song), it is MSV who is the Master). Two songs instantly come to my mind - one "Chittukkuruvi mutham koduthu (Pudhiya Paravai) and "Anbu nadamaadum kalaikkoodamae (Avandhaan Manidhan), which is adequate to substantiate this statement.
Tamil, even the entire South Indian music can be classified as "Pre-MSV/TKR era" and Post-MSV/TKR era" and in particular, "Pava Mannippu" is the film which transformed the pattern of "CINE MUSIC". From this movie only, movie songs were tuned / orchestrated in a new pattern which is neither classical nor folk, which later got termed as "Light Music / Mellisai". For this also, our great Nadigar Thilagam is the pivot.
In a recent interview to Doordarshan, Director R. Sundararajan was mentioning that for "Mellathirandhadhu Kadhavu", for which MSV and IR were the MDs, Ilayaraja insisted to MSV that he should only tune songs for which, IR would orchestrate. In particular, IR wanted MSV to repeat the tune of "Vaan meedhilae inbathaen maaripaeyudhae from Chandirani (1953)" and instantaneously gave a tune which was orchestrated as "Vaa vennillaa", which was the chartbuster and continues to be remembered even now.
Our heartfelt condolences to the great musician MSV and we pray to God that the departed soul may rest in peace.
Regards,
R. Parthasarathy
எம்எஸ்விக்கு மெல்லிசைமன்னர் பட்டம் தந்தது சிவாஜிகணேசன் - இரங்கல் குறிப்பில் தயாரிப்பாளர் தாணு தகவல்மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இரங்கல் தெரிவித்து திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தாணு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முறையாக டி.கே.இராமமூர்த்தி அவர்களுடன் இணைந்து பணம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். 1963ம் ஆண்டு மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசன் அவர்களால் விசுவநாதன் - இராமமூர்த்திக்கு “மெல்லிசை மன்னர்கள்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. திரைத் துறையில் மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மறக்க முடியாத எத்தனையோ காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகிற்கே பெரிய இழப்பாகும். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கும், ரசிகப் பெருமக்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது. அவர் பிரிந்தாலும் அவரின் இசை இவ்வுலகம் உள்ளவரை ரசிகர்களால் ரீங்காரமிடும் என்று தெரிவித்துள்ளார்.
சினிமா விகடன்
திரை இசை சக்ரவர்த்தி மறைந்து விட்டார்
ஆழ்ந்த இரங்கல்கள்
மீண்டும் வருகிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்'Advertisementமீண்டும் வருகிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்'
https://scontent-lga1-1.xx.fbcdn.net...ad&oe=564FE71D
http://img.dinamalar.com/data/largen...0321003333.jpg
சென்னை: கடந்த 1959ல், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் வெளியானது. இப்படத்தின் இயக்குனர், பி.ஆர். பந்துலு; கதை வசனம், சக்தி கிருஷ்ணசாமி; பாடல்கள் கு.மா.பாலசுப்ரமணியம்; படமும், பாடல்களும், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. 'வீரபாண்டிய கட்டபொம்மன்' கதை திரைபடமாக்கப்படுவதற்கு முன், 116 முறை நாடக மாக நடத்தப்பட்டு உள்ளது. 1959ல், தமிழகத்தில் வெளியிடுவதற்கு, ஆறு நாட்கள் முன், லண்ட னில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. எகிப்து தலைநகர் கெய்ரோவில், 1960ல் நடந்த, ஆசிய ஆப்ரிக்க திரைப்பட விழாவில், ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை, சிவாஜி கணேசன் பெற்றார். இப்படம், 56 ஆண்டுகளுக்கு பின், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு, 'சினிமாஸ்கோப்'பில், மீண்டும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின், 'டிரெய்லர்' வெளியீட்டு விழா, நேற்று சென்னை யில் நடந்தது. விழாவில், கவிஞர் வைரமுத்து, சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் பிரபு, நடிகர் பார்த்திபன், ராஜ் 'டிவி' நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், இயக்குனர்கள் ராஜரத்னம், ரகுநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இப்படத்தை ராஜ் 'டிவி' சார்பில், சாய் கணேஷ் நிறுவனம் வெளியிடுகிறது.
https://youtu.be/51_ZzwxHvZ0
தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார் சரித்திரத்தைச் சான்று சொல்வார் தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத் தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார் கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார் கடவுள்மேல் குற்றமென்பார்................... கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார் கடவுள்மேல் குற்றமென்பார்......... இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில் அனேக வித்தியாசம் புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம் புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப் பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு; கையாலே முன்னேற்றம் கண்டாகணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா; நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் நம்ம வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
http://i62.tinypic.com/2vl2wpy.jpg
Courtesy Mr. Sudhangan Facebook
செலுலாய்ட் சோழன் – 83
`சாந்தி’ படத்தின் `யாரந்த நிலவு’ பாடலை கேட்டுக்கொண்டேயிருந்தார் சிவாஜி!
ஆனால் படப்பிடிப்புக்கான தேதியை மட்டும் ஒத்திப் போட்டுக்கொண்டே வந்தார்!
யாருக்கும் காரணம் புரியவில்லை
சிவாஜியால் எந்த காலத்திலும் படப்பிடிப்பு தாமதப்பட்டதேயில்லை!
இப்படி ஒரு பதினைந்து நாள் தள்ளிப்போன பின்பு ஒரு நாள் வந்து நடித்துக்கொடுத்தார்!
நடித்து முடித்ததுதான் காரணத்தைச் சொன்னார்!
`பாட்டை பலமுறை கேட்டேன். கவிஞர் அற்புதமா எழுதிட்டாரு!
விசு அபாரமா ட்யூன் போட்டுட்டான்!
டி.எம்.எஸ் கலக்கிட்டாரு!
இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் கிடையாது!
இயக்குனராலயும் தீர்மானிக்க முடியாது!
இந்த மூணு பேரையும் தாண்டி நான் பேர் வாங்கியாகணும்! ட்யூம் போட விசு பத்து நாள் எடுத்துக்கிட்டான்! கவிஞர் பத்து நாள் எடுத்துக்கிட்டார்!
எனக்கு நேரம் வேணாமா ! அதனால்தான் மண்டையை உடைச்சிக்கிட்டிருந்தேன்!
அதான் அந்த பாட்டுக்கு ஸ்டைல்ல நடிக்கணும்னு முடிவு பண்றவரை ஷுட்டிங்கை தள்ளிப் போட்டேன்!
வியப்பால் அனைவருமே வாயடைத்து நின்றார்கள். ஒரு பாடலாசிரியரையும், இசையமைப்பாளரையும் மிஞ்சிக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு மாபெரும் கலைஞன் அதைப் பற்றியே சில நாட்கள் சிந்தித்தது என்பது அன்று நிலவிய ஆரோக்கியமான போட்டிக்கு அடையாளம்!
இந்தப் படம் வெளியானது!
படம் வெற்றி பெறவில்லை!
ஆனால் கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு ஆர்வம்!
சிவாஜி என்னதான் இந்தப் பாடலில் செய்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆசை!
முதல் நாள் தியேட்டரில் போய் படம் பார்த்திருக்கிறார்!
படம் பார்த்து விட்டு விஸ்வநாதனுக்கு போன் செய்து ` விசு நம்ம இரண்டு பேரையும் மிஞ்சிட்டார்! தியேட்டரில் அவருக்குதான் அப்ளாஸ்!
ஆமாம் படம் தோல்வியடைந்தாலும் இந்த பாடலில் சிவாஜிக்குத்தான் வெற்றி!
இந்தப் படப்பிடிப்பு பற்றி இன்னொரு தகவலுமுண்டு!
இந்தப் பாடல் முழுவது சிவாஜி சிகரெட் பிடித்துக்கொண்டே தான் நடப்பார்!
அதனால் பல சைஸ்களில் சிகரெட்டை கட் பண்ணி வைத்திருந்தார்களாம்! தொடர்ச்சி அதாவது கண்டினியுட்டி போய்விடக்கூடாது என்பதற்காக!
சிவாஜி எந்த தயாரிப்பாளரையும் சந்தித்ததில்லை!
அவருடைய பேச்செல்லாம் இயக்குனர்கள், கதாசிரியர்களிடம் தான்!
கதாசிரியர்களை பார்த்தால் `என்ன ஆசிரியரே நமக்கு ஒரு கதை சொல்ல மாட்டிங்களா?’’ என்பதுதான்!
எப்போதும் தனக்கு தீனி போடக்கூடிய கதாபாத்திரங்களையே தெடிக்கொண்டிருந்த சிவாஜிக்கு அமைந்த ஒரு அற்புதமான பாத்திர படைப்பு ` ஆண்டவன் கட்டளை’ படத்தில் சிக்கியது!
இது பி.எஸ். வீரப்பாவின் பிஎஸ்வி பிக்சர்ஸ் தயாரித்த படம்!
இதில் அருமையான கூட்டணி அவருக்கு அமைந்தது!
பாசமலர் படத்திற்கு கதை எழுதிய கே.பி. கொட்டரக்கரா தான்! திரைக்கதை மேதை என்று தமிழ்த் திரையுலகில் புகழப்பட்ட ஜாவர் சீதாராமன் திரைக்கதையமைத்து வசனம் எழுதியிருந்தார்!
வழக்கம்போல் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் தான் இசை!
இந்த படத்தில் ஒரு வித்யாசமான சிவாஜி!
பிரம்மசர்யத்தை கடை பிடிக்கும் ஒரு கல்லூரி பேராசிரிய கிருஷ்ணன் கதாபாத்திரம் இவருடையது!
அவரை அவரது மாணவி தேவிகாவே காதலித்து கவர்ந்திழுப்பதுதான் கதை!
கதை கொஞ்சம் க்ரைம் கலந்தது!
ஆனால் இந்த படத்திற்கு இன்று முகவரி சொல்லிக்கொண்டிருப்பது இன்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத பாடல்கள் தான்!
`அமைதியான நதியினிலே ஒடும்!
ஒடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்!
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
அருகினிலே ஒருத்தி வந்தால்
ஆடும்!
இந்தப் பாட்டின் இசையை இன்று பலரின் செல்போன்களில் அந்த ஆரம்ப புல்லாங்குழல் இசையின் தேவ கானத்தை கேட்கலாம்!
இந்தப் படத்தில் சிவாஜி ஒரு பிரம்மச்சர்யம் கடை பிடிக்கும் பேராசிரியர்!
முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம்!
எப்படி சிவாஜி இந்த கதாபாத்திரத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறார்!
அந்த காலங்களில் ஒரு படத்தில் சிவாஜி மெலிதாக இருப்பார்!
அடுத்த படத்தில் குண்டாக தெரிவார்!
கமல்ஹாசன் இவரைப் பின்பற்றியதன் உண்மை இப்போதுதான் புரிகிறது!
சிவாஜி சொல்வார், ` நடிக்கின்ற பாத்திரத்திற்கேற்ப மனித உடலில் ஒவ்வொரு அங்கத்திலும் ஏற்படும் அசைவும், முகபாவமும் மொத்தமாகச் சேர்ந்ததுதானே நடிப்பு!
அதில் கால்கள் நடிக்க வேண்டும்.
கைகள் நடிக்க வேண்டும்!
கண்கள் நடிக்க வேண்டும்!
உடலின் தசைகள் நடிக்க வேண்டும்!
அப்பொழுதுதான் ஏற்றுக்கொண்ட நடிப்பைக் காண முடியும். அந்த நிலையில்தான் அந்தப் பாத்திரத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த முடியும்.
உதாரணமாக ஒரு டென்னிஸ் விளையாட்டுக்காரனைப் பார்த்தால், அவன் கைகள் மட்டுமல்ல, அவன் கால்களும் விளையாடும். அதுப்போல்தான் கிரிக்கெட்! ஃபுட்பால் என்று எந்த விளையாட்டை எடுத்துக்கொண்டாலும், விளையாடுபவனின் ஒவ்வொரு அங்கமும் ஒத்துழைத்தால்தான் ஆட்டத்தில் வெற்றி காண முடியும்.
அது போல்தானே நடிப்பும்!
மேடையில் வரும்போதே கம்பீரமாக வரவேண்டும்!
அங்கே கால்களும், கைகளுமே நடிக்க வேண்டும். நவரசங்களைக் காட்டும்போது, கண்விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் அந்த மாற்றங்களை காட்ட வேண்டும்.
பேசுகின்ற வசனங்கள் நாம் போடுகின்ற பாத்திரத்திற்கேற்ப ஏற்றத் தாழ்வுகளுடனும் நல்ல உச்சரிப்புடனும் பேச வேண்டும். அதுதான் நல்ல நடிப்பு!’ இதை அவர் தன் சரிதையில் சொல்லியிருக்கிறார்!
இதற்கு உதாரணம் ` ஆண்டவன் கட்டளை’ படம்!
அந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு கோவில் எழும்பும்!
அங்கிருந்து பி.எஸ். வி பிக்சர்ஸின் அடையாள சின்னம்
`அங்கெங்கெனாத பரம்பொருள் வெடியைப் படைத்தான்!
அதில் ஒளியைப் படைத்தான்!
பல கோடி உயிர்களைப் படைத்தான்!
மனிதனையும் படைத்தான்!
எல்லா உயிர்களும் இப்படித்தான் வாழவேண்டுமென்கிற சட்டம் வகுத்தான்!
ஆனால் மனிதன் மட்டும் தன்னிச்சைப்படி வாழ விரும்புகிறான்!
முடிவில் நடப்பதென்னவோ ` ஆண்டவன் கட்டளை’ படியே!
இது ஜாவர் சீதாராமன் குரலில் ஒலிக்கும்!
மறுபடியும் ஜாவர் சீதாராமனை நினைவு படுத்த நினைக்கிறேன்!
இவர்தான் `பட்டணத்தில் பூதம்’ படத்தில் பூதமாக நடித்த ` ஜீபூம்பா’
இவர் பேசி முடிந்தவுடம் ஒரு பெயர்ப் பலகை!
ஆங்கிலத்தில், PROF R. KRISHNAN, M.A., M.LITT,D.LITT,ECON (DIP} LONDON என்றிருக்கும்.
அடுத்து ஒரு ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் உள்ளே வரும்!
அப்படியே காமிரா நகர்ந்தால் ` கடமையே வெற்றிக்கு வழி’ என்கிற பெயர்ப் பலகை மேஜையில் இருக்கும்!
அப்படியே காமிரா நகர்ந்தால சிவாஜி படுத்திருப்பார்!
காலை அலாரம் அடிக்கும்!
எழுந்து உட்கார்ந்து தன் கைகளைப் பார்த்துக் கொள்வார் சிவாஜி!
`ஆண்டவா! என்றும் என் தெய்வமே! என்றும் என் தாய்நாட்டில் கல்வி பெருக வேண்டும்!
கலை வளரவேண்டும்
இப்படித்தான் துவங்குவார்!
(தொடரும்)
1965 ல் வெளிவந்த சாந்தி திரைப்படம் 100 நாட்களுக்குமேல் ஓடி
வெற்றிபெற்ற படம் கட'டுரை எழுதுபவர்கள்
விபரங்களை தெரிந்துகொண்டு எழுதுவதில்லையா?
பெரியார் தந்த
சிவாஜி
பட்டமும்
சிவாஜி தந்த
மெல்லிசை மன்னர்
பட்டமும்
கலையுலகில் கல்வெட்டுக்கள்
MSV - A legend is gone. As YGM said, TN today is ashamed of not bestowing any major awards on him. TN and its people owe a lot to him. with tears. RIP sir.
From today's daily thanthi epaper online:
http://www.dinathanthiepaper.in/1572...SB163164-M.jpg
இன்றைய தினத்தந்தி
http://i1065.photobucket.com/albums/...psm9uerjqg.jpg
http://i1094.photobucket.com/albums/...Kamarajar6.jpg
[புகைப்படத்திற்கு நன்றி ராகவேந்தர் சார்!]
இன்றைக்கு 112 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் உதித்த துருவ நட்சத்திரமே!
விருதுபட்டி ஈன்றெடுத்த கர்ம வீரரே!
சுதந்திர பாரதத்தின் சோஷலிச சிற்பியே!
விடுதலை இந்தியாவில் தமிழகத்தின் விடிவெள்ளியே!
1947-க்கு பின் இந்த
அறுபத்தெட்டு ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரே ஒரு பொற்கால ஆட்சி வழங்கிய அற்புத முதல்வனே!
தொழிற் புரட்சி ஏற்படுத்திய தொழிலாளர் தோழனே!
பல்வேறு அணைகளை கட்டி பாசன வசதியை மேம்படுத்தி
பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்த ஏழை பங்காளனே!
பள்ளி சிறார்களுக்கு மதிய உணவு அள்ளி தந்த படிக்காத மேதையே!
எண்ணிக்கையில் வெறும் 9 அமைச்சர்களை வைத்துக்கொண்டு [அதிலும் முதல் இரண்டு அமைச்சரவைகளில் எட்டே பேர்] ஊழலற்ற அரசாங்கமாய் வெளிப்படையான நிர்வாகமாய் எண்ணிலடங்கா மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றிய செயல் வீரனே!
அகில இந்தியாவையும் ஆர் ஆள வேண்டும் என்பதை
அகிலத்திற்கே அறிவித்த பாரத ரத்தினமே!
ஆட்சியிலிருந்தவரை ஆராலும் தோற்கடிக்கப்பட முடியாத சாதனை சரித்திரமே!
1947-க்கு பின் இந்த
அறுபத்தெட்டு ஆண்டு தமிழக வரலாற்றில்
ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று
ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து மீண்டும்
ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று
வெற்றி பெற்ற ஒரே தமிழக தலைவனே!
என்றென்றும் எங்கள் பெருந்தலைவனே!
ஏங்கி கிடக்கிறோம் பல்லாயிரம்
எப்போது வரப்போகிறது உன் மறு அவதாரம்
அன்றுதான் ஆரம்பமாகும்
தாழ்ந்து கிடக்கும் தமிழகம்
தலை நிமிரப் போகும் பொற்காலம்!
அன்புடன்
பொதுவாகவே மீள் பதிவு என்பது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாத ஒன்று. ஆனால் இந்த மீள் பதிவு நானே விரும்பி செய்த ஒன்று.
Courtesy: Tamil Hindu
காமராஜர் காலம் ஏன் பொற்காலம்?
ஆ.கோபண்ணா
1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்.
1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்.
காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.
இன்றைக்கு தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 1.27 லட்சம் கோடி. ஆனால், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962-63-ல் ரூ.121.81 கோடி. அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் மகத்தான காரியங்களை காமராஜர் தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.
முதல் திருத்தத்தின் மூலவர்
தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.
சமூக நீதிக்கான ஆட்சி
தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.
கல்விப் புரட்சி
காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.
காட்பாடி பள்ளிக்கூட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறுகிறார் காமராஜர்.
அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.
எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.
தொழில் வளர்ச்சி
ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL) அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன.
1958-ல் கிண்டி தொழிற்பேட்டையைப் பார்வையிட வந்த பிரதமர் நேருவுடன்...
இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொழிற்பேட்டைகள்
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப் பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.
பாசனத் திட்டங்கள்
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.
கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறையில் இறவைப் பாசனத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத் திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அம்மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.
மின்உற்பத்தி
காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.
மின் உற்பத்திக் கருவியைப் பார்வையிடும் காமராஜர்…
சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.
நிலச் சீர்திருத்தம்
காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.
பஞ்சாயத்து ராஜ்
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.
தமிழ் வளர்ச்சி
சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.
காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
எளிமை நேர்மை - தூய்மை
எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.
பெரியாரின் வார்த்தைகள்
காமராஜர் ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப் பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.
1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.
தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”
காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?