http://i1170.photobucket.com/albums/...psnluyt4ti.jpg
"சினிமாவில் டூயட் பாடுவது கேலிக்குரியது..”
– இப்படிச் சொன்னவர் ..நூற்றுக்கணக்கான டூயட்களை தனது படங்களில் பாடி நடித்த எம்.ஜி.ஆர்...!
இதை தனது பேட்டியில் வெளிச்சம் போட்டு வெளிப்படுத்தியவர் இயக்குனர் மகேந்திரன்..
மகேந்திரன் சொல்கிறார்..:
“ தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலையில், "தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது” என்று கடுமையாகப் பேசினேன்..”
பின்னர் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தபோது , இது பற்றி மகேந்திரன் இப்படிக் கேட்டாராம்...
"எங்கள் கல்லூரியில் உங்கள் முன்னாலேயே தமிழ் சினிமாவைக் கடுமையாக விமரிசனம் செய்தேனே... உண்மையிலே அது குறித்து நீங்கள் என்மீது கோபம் கொள்ளவில்லையா?"
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்னாராம் :
"நீங்கள் அன்று என் முன்னால், 'சினிமாவில் மட்டுமே காதலிப்பவர்கள் டூயட் பாடுகிறார்கள். அது அபத்தம்' என்றீர்கள். அது உண்மைதானே. வெளி நாட்டுப் படங்களில் யார் டூயட் பாடுகிறார்கள்? எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில் வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகிறோம்..”
அப்புறம் நடந்தது ..அதை மகேந்திரனே தொடர்கிறார் :
# "நெஞ்சத்தைக் கிள்ளாதே” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கே சென்று . எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்தேன்...
"காரைக்குடியில் இருந்த நான், டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்..." என்றேன்...
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமையால் வந்தது. ஆனால் ஒன்று நிச்சயம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமாவும் உங்களால் நிறைவேறி வருகிறது. இதற்கு மேலும் நீங்கள் சினிமாவில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் " என்று ஆசீர்வதித்தார்.
# எம்.ஜி.ஆர் .என்னவோ தன் ஆசியையும் , ஆசையையும் சொல்லி விட்டுப் போய் விட்டார்....
ஆனாலும் இன்றும் கூட ... மகேந்திரன் பார்முலாவை விட , எம்.ஜி.ஆரின் பார்முலாவைப் பின்பற்ற ஆசைப்படும் நடிகர்களும் , இயக்குனர்களும்தான் அதிகம்...!
# சரி..எம்.ஜி.ஆர். முன்னிலையிலேயே , அவரைக் கடுமையாக விமரிசித்தும் , எம்.ஜி.ஆர். ஏன் மகேந்திரன் மீது கோபம் கொள்ளவில்லை...?
# இதற்கு எம்.ஜி.ஆரின் “ நம் நாடு ” பாடல் நல்ல பதில் தருகிறது...
“மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்..”