சத்தியதாயின் புதல்வர்...
சாகாவரம் பெற்றவர்...
சரித்திரத்தின் நாயகர்...
சாதிக்க மட்டுமே பிறந்தவர்...
Printable View
சத்தியதாயின் புதல்வர்...
சாகாவரம் பெற்றவர்...
சரித்திரத்தின் நாயகர்...
சாதிக்க மட்டுமே பிறந்தவர்...
உலகெங்கும் உள்ள உன்னதர்களை உற்று நோக்கினால்.....
அவர்களுக்குள்......
எங்கள் உலகமகான் மக்கள் திலகத்தின் பாதிப்பு இருக்கும்....
மறுக்க முடியாத உண்மை இது......
மக்கள் திலகத்தின் ஆசியுடன்.....
மழை போதும் என்று வேண்டுவோம்..... இது சென்னை மற்றும் வெள்ள வாசிகளுக்கு மட்டுமே.....
தென்னகத்தில் இன்னும் மழை போதவில்லை.....
அதற்கும் மக்கள் திலகம் ஆசி வழங்கட்டும்.....
மக்கள்திலகம் பக்தர்கள் திருவாளர்கள் வினோத், செல்வகுமார், ஷாரியர் அக்பர் உட்பட அனைவரின் பதிவுகளும் மிக நன்றாக இருக்கின்றன...நம் தோழர்கள் எந்த கருத்துக்கள், பதில்கள் இருந்தாலும் இங்கேயே பதிவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...
மதுரை - சென்ட்ரல் அரங்கில் "ஒளி விளக்கு" காவியம் கடந்த 29-11-2015 மாலை காட்சி உட்பட ரூபாய் ஏறத்தாழ 30000.00 என தகவல், அதுவும் அன்று பெய்த நல்ல மழையிலும் ... அதுதான் மக்கள்திலகம் அவர்தம் வசீகரிப்பு...
தாய்ப்பாசம் என்றால் எம்.ஜி.ஆர் – நடிகர் சிவக்குமார்
தமிழக திரைத்துறையில் நன் மதிப்புடன் இருப்பவர் சிவக்குமார். சூர்யா, கார்த்திக் என்ற இரண்டு நடிகர்களை வீட்டிலேயே வைத்திருப்பவர். சிறந்த பேச்சாளாரான அவர் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பேச்சு.
உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.
தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.
என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழுதாங்க. நாங்க அழுதோம், அவங்க அழுதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.
அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.
“ஊருக்கு போயிருந்தியா? அம்மா… அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.
chennaionline
சரியா...? தவறா...?
அகில உலக அற்புத மனிதர்...
ஆச்சரிய ஆதர்ஸ சிற்பி...
இந்தியாவின் இன்னொரு அடையாளம்...
ஈகையின் மற்றொரு பெயர்...
உன்னதர்களின் ஒரே வடிவம்...
ஊருக்கு வாழ்ந்த உண்மை மனிதர்...
என்றும் எங்கள் இதயக்கனி...
ஏய்ப்போரின் எதிரி...
RARE STILLS
http://i65.tinypic.com/1zd85u0.jpg
ஜாதி மத இன மொழி எல்லைகளை கடந்த ஒரே பிரம்மாண்டமான ஜோதி.....
எங்கள் ஆனந்த ஜோதி.... மக்கள் திலகம்...
கடந்த ஞாயிறு அன்று
கோவை டிலைட் திரை அரங்கு சென்று
எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு.
மக்கள் திலகத்தின் பட்டிக்காட்டு பொன்னையா
சில மாதங்களுக்கு முன்பு இங்கு திரையிடப்பட்டு
10 நாட்கள் ஓடியது. தற்போது மறுபடியும்
திரையிடப்பட்டு ஓடி வருகின்றது.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s10.postimg.org/qdzeqk8zd/WP_20151129_001.jpg
வருகின்ற 24.12.2015 (மக்கள் திலகத்தின் நினைவு நாள்) முதல்
கோவை டிலைட் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின் 100 வது வெற்றிக்காவியம்
ஒளிவிளக்கு
http://s22.postimg.org/ms6tonb75/WP_20151129_008.jpg
மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்க பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் நமது மக்கள்திலகம் mgr., திரி உறுப்பினர்கள், பார்வையாளர்கள் சார்பாக துன்ப சூழ்நிலைகளிருந்து, மீண்டு வந்து நலம் காண பிரார்திபோம்...
Thank you Vinod sir & Prof Selvakumar sir for posting the rare stills of our beloved god.
Regds
S.Ravichandran