http://i66.tinypic.com/103imj8.jpg
http://i63.tinypic.com/vs269h.jpg
http://i68.tinypic.com/2u8vzv4.jpg
http://i65.tinypic.com/s4qcmg.jpg
Printable View
1963ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''பெரிய இடத்து பெண் ''
100 வது நாள் விழா சென்னை அசோகா ஓட்டலில் நடை பெற்றது . மக்கள் திலகத்திற்கு 100 வது நாள் கேடயத்தை அன்றைய தமிழக காங் மந்திரி ஜோதி வெங்கடாசலம் வழங்கினார் .
http://i68.tinypic.com/2vx0qdv.jpg
மக்கள் திலகத்தின் மறக்க முடியாத சினிமா & அரசியல் தொகுதிகள் - 1
வேலூர்
http://i63.tinypic.com/fxxag7.jpg
மக்கள் திலகத்தின் பல திரைப்படங்கள் வேலூரில் சாதனைகள் படைத்துள்ளன . குறிப்பாக மதுரை வீரன் , நாடோடி மன்னன் , எங்க வீட்டு பிள்ளை , ஆயிரத்தில் ஒருவன் ,ஒளிவிளக்கு, குடியிருந்த கோயில் அடிமைப்பெண் , மாட்டுக்காரவேலன் , ரிக்ஷாக்காரன் நல்லநேரம் ,உலகம் சுற்றும்வாலிபன் , உரிமைக்குரல் , இதயக்கனி போன்ற படங்கள் உருவாக்கிய சாதனைகள் ஏராளம் .
http://i65.tinypic.com/hx2nmt.jpghttp://i65.tinypic.com/ru76sh.jpg
வேலூர் மற்றும் வட ஆற்காடு முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் மிகவும் சிறப்பாக செயல் பட்டது . மக்கள் திலகம் எம்ஜிஆரை 1972ல் திமுக விலிருந்து நீக்கியதும் மாவட்டம் முழுவதும் எம்ஜிஆர் மன்றங்கள் போராட்டத்தில் குதித்தார்கள் .அதிமுக உருவானதும் எம்ஜிஆர் மன்றங்கள் முழுமையாக தங்களை இணைத்து கொண்டர்கள் .
http://i66.tinypic.com/2je4vlv.jpg
1977ல் நடைபெற்ற தமிழக சட்ட சபை தேர்தலில் எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த திரு ஏ..கே அரங்கநாதன் அவர்கள் வேலூர் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் .
1977 தமிழக சட்ட சபையில் வட ஆற்காடு மாட்டத்தில் 21 தொகுதிகள் இருந்தது . புரட்சித்தலைவரின் அதிமுக 13 சட்ட மன்ற தொகுதிகளை வென்று சாதனை படைத்தது .
வென்ற தொகுதிகள் .
வேலூர்
அணைக்கட்டு
போளூர்
செங்கம்
நாட்ராம்பள்ளி
பேரணாம்பட்
காட்பாடி
ஆற்காடு
சோளிங்கர்
அரக்கோணம்
பெரணமல்லூர்
வந்தவாசி
ஆரணி .
மன்னர் காலத்தில் இருந்த அரச சபை .
http://i1273.photobucket.com/albums/...svee6/42-1.jpg
மன்னரின் தோற்றம்
.http://i1273.photobucket.com/albums/...6/59_2-2-1.jpg
மாறுபட்ட தளபதிகள்
http://i1273.photobucket.com/albums/...e6/112-2-1.jpg
அரசவை குரு
அரசவை புலவர்கள்
மன்னரை கவிழ்க்க சதி திட்டங்கள்
மன்னரின் அந்தபுரம்
அரசவையில் நடனங்கள்
http://i1273.photobucket.com/albums/...ee6/40_2-1.jpg
அரசவையில் போட்டிகள்
வீர தீர விளையாட்டுகள்
வாள் சண்டைகள்
http://i1273.photobucket.com/albums/...ee6/40-2-1.jpg
போர் காட்சிகள்
போர் வீரர்கள்
அரசியல் குற்றவாளிகளை விசாரிக்கும் மன்றம்
http://i1273.photobucket.com/albums/...e6/137-2-1.jpg
விபரீதமான தீர்ப்புகள்
இலக்கிய காதல்
செந்தமிழ் உரையாடல்கள்
உணர்சிகரமான கொள்கை பாடல்கள்
மதுரமான காதல் கீதங்கள்
மனதை மயக்கும் இசை
http://i1273.photobucket.com/albums/...svee6/33-1.jpg
மேற்கண்ட காட்சிகள் நிறைந்த படங்களாக தமிழில் அந்த காலத்தில் பல படங்கள் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி - சர்வதிகாரி - மர்மயோகி - மந்திரகுமாரி - மருத நாட்டு இளவரசி -குலேபகாவலி -அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரை வீரன் - சக்கரவர்த்தி திருமகள் - ராஜராஜன் - புதுமைபித்தன்
மகாதேவி - நாடோடி மன்னன் - பாக்தாத் திருடன் - ராஜாதேசிங்கு - மன்னாதி மன்னன் - அரசிளங்குமரி - ராணி சம்யுக்தா - விக்கிரமாதித்தன் - காஞ்சித்தலைவன் -ஆயிரத்தில் ஒருவன்- அரசகட்டளை - அடிமைப்பெண் - நீரும் நெருப்பும் -மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய படங்களில் மூலம் சரித்தர கால படங்களில் மக்கள் திலகத்தின் ஏற்றமிகு தோற்றம் - இளமை ததும்பும் மன்னராகவே தோன்றிய காட்சிகள் - வீர தீர சண்டைகாட்சிகள் மற்றும் எரிமலையாக தோன்றி அனல் பறக்கும் வசனங்கள் பேசிய காட்சிகள் நம் கண் முன் நிறுத்தும் என்பது உண்மை .
11000 பதிவுகளைக் கடந்து நமது திரியில் பயணிக்கும் அன்பு நண்பர்
திரு முத்தைய்யன் அம்மு அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
http://s31.postimg.org/5cjffxx5n/FB_...ed_Picture.jpg
Makkal Thilagam Devotee Mr.V.Krishnamurthy at Coimbatore
எதை எழுதுவது
எப்படி எழுதுவது
மற்றவர் கருத்தை
மறுக்கலாம்
திருத்தலாம்
அதை
சொல்லும் முறையில்
தான்
அதை சொல்பவரின்
பண்பு தெரியும்
அத்தைகைய
மேதைகை
மாண்பு மிகு
தலைமகன்
தமிழ் நாட்டுத்
தாய்மார்களின் தலைமகன்
மேடையில்
மேடை நாகரிகம்
காத்த பண்பாளன்
எதிரியைக் கூட
திருவாளர்
திருமதி
என்றழைத்த
பொன் மனச் செம்மல்
அத்தகை மேன்மகனை
யாராலும்
நெருங்க முடியா
உயரத்தில்
இன்றளவும் இருக்கும்
கோமகனை
தேர்தலுக்காக
தங்கள் நலனுக்காக
கொச்சைப் படுத்தும்
இன்றைய
அரசியல் வாதிகள்
தங்கள்
சுய நல த்திற்காக
கூட்டணி அமைத்து
மானம் இழந்து
கால் வருடும்
அரசியல் வாதிகள்
எங்கள் தலைவனை
தூற்றுவதை
எப்படித்
தாங்க முடியும்
உண்மைத் தலைவனின்
அன்புத் தொண்டர்களால்
நம்புங்கள்
தேர்தலில்
பதில் உண்டு
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...82&oe=57B569A7
எனக்குப் பிடித்த
மன்னவனின்
எழில் தோற்றம்
சத்தியாவின் கைவண்ணம்
கண்ணுக்கு விருந்து
நினைவலைகள்...ஜாதி பார்த்து வேட்பாளரை தேர்வு செய்யவில்லை!
எம்.ஜி.ஆர்
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்த போது எம்.ஜி.ஆர்., ஜாதிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை; பொதுமக்களும் ஜாதியை பார்த்து வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்கிறார் தேனி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான வி.ஆர். ஜெயராமன் (75).
தேனி மாவட்டம், தாடிச்சேரியைச் சேர்ந்தவர் இவர். தொகுதி மறுசீரமைப்புக்கு முந்தைய தேனி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 1977-இல் திமுக வேட்பாளரை எதிர்த்தும், 1980-இல் காங்கிரஸ், 1984-இல் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேனியில் வசித்து வரும் ஜெயராமன், அப்போதைய தேர்தல் அனுபவங்கள் குறித்து கூறியதாவது:
சட்டம் படித்த நான், மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனிடம் ஜூனியராக பணியாற்றினேன். கடந்த 1972-இல் எம்.ஜி.ஆர்.,அதிமுகவை தொடங்கிய போது நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற முதல் மாநாட்டில் கட்சியில் சேர்ந்தேன்.
கடந்த 1977-இல் அதிமுக முதன் முதலாக பொதுத் தேர்தலைச் சந்தித்த போது படித்தவர்கள், செல்வாக்கு உள்ள பிரமுகர்கள், இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாகக் கூறினார்கள்.
தேனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தேன். சட்டம் படிப்பு படித்தவன், இளைஞர் என்ற அடிப்படையில் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலைச் சந்திப்பதற்கான பொருளாதார உத்தரவாதத்திற்காக கட்சியில் ரூ.20 ஆயிரம் கட்டச் சொன்னார்கள். தேர்தல் முடிந்ததும் அந்தப் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிக்கு ஏற்ப வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் . ஜாதிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எம்ஜிஆர். பொதுமக்களும் ஜாதி பார்த்து வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை. வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கைவிட கட்சித் தலைவர்கள் மீதான அபிமானம்தான் தேர்தலில் மேலோங்கி நின்றது.
கடந்த 1977-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தேனியில் இருந்துதான் முதன் முதலாக எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தேனியில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு முன்னதாக திரைப்பட நடிகை லதாவின் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக் கூட்டம், நாட்டிய நாடக நிகழ்ச்சிக்கு மொத்தம் ரூ.20 ஆயிரம் வரை செலவானது.
தேர்தல் பிரசார செலவுக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் நன்கொடை அளித்தனர். பொதுவான தேர்தல் பிரசார சுவரொட்டி, வாக்காளர் அடையாளச் சீட்டு ஆகியவற்றை கட்சித் தலைமையில் இருந்து அனுப்பி வைப்பார்கள்.
வேட்பாளர் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் தனித் தனிக் குழுவாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தோம். தொண்டர்களுக்கு கட்சி தேர்தல் அலுவலகத்தில் காபி தயாரித்து கொடுப்போம். தேர்தல் பிரசார குழுவுக்கு கட்சிக்காரர்கள் வீட்டிலேயே உணவு அளிப்பார்கள்.
வாக்குச் சாவடிக்குச் செல்லும் முகவர் குழுவுக்கு உணவுச் செலவாக ரூ.50 கொடுத்து அனுப்புவோம். அதையும் சிலர் வாங்க மறுப்பார்கள். தேர்தல் பிரசாரத்திற்கும், பொதுக் கூட்டங்களுக்கும் தன்னெழுச்சியாக ஏராளமானோர் கூடுவர். தற்போது நடைமுறையில் உள்ளது போல பணம் கொடுத்து ஆள் பிடிக்க வேண்டியதில்லை.
அப்போது என்னால் எம்.ஜி.ஆரை எளிதில் சந்தித்து வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை விளக்கி ஒப்புதல் பெற முடிந்தது. 1977 முதல் 1989 வரை தேனி மாவட்டத்தில் ஏராளமான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக வேட்பாளர்களுடன் தற்போதும் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று வருகிறேன்.
கருணாநிதியைத் தவிர அனைவரும் நமது கட்சிக்காரர்கள்தான் என்று எம்.ஜி.ஆர். கூறுவார். அதேபோல, அனைத்துக் கட்சியினருடனும் இயல்பாகப் பேசி பழகும் சூழல் அப்போது இருந்தது என்றார் அவர்.
courtesy -ஜி. ராஜன்
தன்னை நாடி வந்தவர்கள் அனைவர்க்கும் அள்ளிக் கொடுத்தவன் கர்ணன் ! அதையும் தாண்டி, தன்னை நாடாதவற்கும் (பெருந்தலைவர் காமராஜ் அமைச்சரவையில் பணியாற்றிய கக்கன் முதலானோருக்கு), தேடிச்சென்று உதவியவர் தான் எம்.ஜி.ஆர் ! தன்னை நூறு முறை திட்டியவனின் தலையை சக்கராயுதத்தால் அறுத்தவர் அவதார கிருஷ்ணன் ! தன்னை தரக்குறைவாக பேசியவர்களுக்கும் எழுதியவர்களுக்கும் (நெடுஞ்செழியன், கண்ணதாசன் முதலானோர்) மதிப்பளித்தவர் எம்.ஜி.ஆர் !
courtesy net
1980 சட்ட சபை தேர்தல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிரச்சாரம்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களை மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை நகரம் முதல் கிராமம் வரை மக்களை நேரில் சந்தித்து ஒட்டு கேட்பார் .சில சமயங்களில் விடியற்காலை வரை பிரச்சாரம் செய்தார் . பல ஊர்களில் வேனில் நின்றவாறே மக்களிடம் பேசி ஒட்டு சேகரிப்பார்.
http://i65.tinypic.com/2zyzm6r.jpg
http://i66.tinypic.com/2vu0935.jpg
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த மாபெரும் வரலாற்றுக் காவியம் மதுரை வீரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 22.04.16 வெள்ளி முதல்...
படத்திற்கு தியேட்டர் நுழைவுவாயிலில் வைக்கபட்டுள்ள பேனர் உங்கள் பார்வைக்கு....
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...13&oe=57A3B10E
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த மாபெரும் வரலாற்றுக் காவியம் மதுரை வீரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 22.04.16 வெள்ளி முதல்... படத்திற்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.....
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...65&oe=577480C2
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த மாபெரும் வரலாற்றுக் காவியம் மதுரை வீரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 22.04.16 வெள்ளி முதல்... படத்திற்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.....
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...eb&oe=57B7108F
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மக்கள் திலகத்தின் மதுரை வீரன் போஸ்டர்கள் மிகவும் அருமை . மதுரை நகரில் வெள்ளி விழா கண்ட மக்கள் திலகத்தின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது .நன்றி திரு சுந்தராஜன் சார் .