-
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 170– சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...0puthalvan.jpg
முக்தா பிலிம்ஸ் தயாரித்த படம் ‘தவப்புதல்வன்’! சென்னை பைலட் தியேட்டரில் இந்த படம் வெளியானது. இந்த படத்தின் கதை, வசனத்தை தூயவன் எழுதியிருந்தார்.
தூயவன் ஒரு காலத்தில் தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் இருந்தவர். தூயவன் ஒரு இஸ்லாமியர்! அவர் மிகவும் பிரபலமடைந்தது மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவிற்காக அவர் எழுதிய ‘தீர்ப்பு’ நாடகத்தின் மூலமாகத்தான். அந்த நாட்களில் இந்த நாடகம் மிகப்பிரபலம்!
அடுத்து ஏவி.எம். ராஜனுக்காக ‘பால்குடம்’ என்கிற நாடகத்தை எழுதினார். இளையராஜாவை பஞ்சு அருணாசலத்திற்கு அறிமுகம் செய்து வைத்து, அதன் மூலமாகத்தான் இளையராஜா இசையமைப்பாளரானார்.
அவர் மகன் இக்பால் இன்றைக்கு திரையுலகில் பிரபல இயக்குநர். அவர் மனைவி ஒரு பிரபல எழுத்தாளர். இயக்குநர் – நடிகர் பாக்யராஜ், பாரதிராஜாவிடம் சேருவதற்கு முன்பாக முதலில் தூயவனிடம்தான் உதவியாளராக இருந்தார்.
‘கேள்வியும் நானே பதிலும் நானே’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ ஆகிய படங்களை தயாரித்தவர் தூயவன். மாலைக்கண் நோய் வரும் ஒரு கதாநாயகனின் கதைதான் ‘தவப்புதல்வன்’!
கதாநாயகனின் குடும்பத்தில் பரம்பரையாக மாலைக்கண் நோய் இருக்கும். தனக்கு மாலைக்கண் இருப்பது தன் தாய்க்கு தெரியக்கூடாது என்று நினைத்து தடுமாறுவார் கதாநாயகன் சிவாஜி. அடிப்படையில் அந்த கதாபாத்திரம் ஒரு பாடகன். ஓட்டல்களில் பாடுவார்.
அந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு ஆங்கில பாடல் இருக்கும். LOVE IS FINE DARLING WHEN YOU ARE MINE என்பது ஆங்கில வரிகள். இந்த ஆங்கில பாட்டுக்கு சிவாஜிக்காக அஜித் சிங் என்ற பாடகர் குரல் கொடுத்திருப்பார். இந்த படத்தில் அத்தனை பாடல்களுமே பிரபலம். ‘இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்’ ‘அது இறைவன் அருளாகும்’ என்ற பாடல் ஒலிக்காத இடமே இல்லை. அத்தனை பிரபலம் அந்த பாடல். ‘வசந்த மாளிகை’. இந்த படம் தெலுங்கில் முதலில் எடுக்கப்பட்டது. அதற்கு பெயர் ‘பிரேம்நகர்’. அதை தமிழில் டி. ராமாநாயுடு எடுத்தார். சிவாஜியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று ‘வசந்த மாளிகை’. இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருப்பார். அத்தனை பாடல்களும் மிகப்பிரபலம். இன்றைக்கு எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாட்டும் `மயக்கமென்ன இந்த மவுனமென்ன’ பாடல்தான். இந்த படத்தின் சாயல் கமல்ஹாசன் நடித்த `வாழ்வே மாயம்’ படத்தில் தென்படும்.
1973ம் வருடம் சிவாஜி 7 படங்களில் நடித்தார். பாரதவிலாஸ், ராஜராஜசோழன், பொன்னூஞ்சல் எங்கள் தங்க ராஜா, கவுரவம், மனிதருள் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை. பாரத விலாஸ் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம். ஏ.சி. திருலோகசந்தரின் நிறுவனமான சினிபாரத் இந்தப் படத்தை தயாரித்தது. திருலோகசந்தரே இயக்கியிருந்தார். இன்றைக்கும் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் இந்த படத்தில் வரும் `இந்திய நாடு என் வீடு! இந்தியன் என்பது என் பேரு! என்பதை எல்லா சேனல்களுமே ஒளிபரப்பிக்கொண்டிருக்கும். எல்லா பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருப்பார் படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன். இந்திய நாடு என் வீடு பாட்டில், அந்த வீட்டில் வசிக்கும் பல மொழி மதக்காரர்களும் சேர்ந்து இந்த பாட்டை பாடுவார்கள். தெலுங்கு குடும்பத் தலைவன் தெலுங்கில் பாடுவார். அவர் மனைவி கன்னடத்தில் பாடுவார். பஞ்சாபி குடும்பம் இந்தியில் பாடும். கேரள முஸ்லீம் குடும்பம் மலையாளத்தில் பாடும். அப்போது இந்தி பாடலுக்காக இந்தி பிரபல கதாநாயகர் சஞ்சீவ் குமாரை அந்த காட்சியில் இருக்க வைத்திருப்பார்கள். மலையாளத்திற்கு மது, தெலுங்கிற்கு நாகேஸ்வர ராவ் இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் சிவாஜி கேட்டு கொண்டதற்காக வந்து தோன்றி விட்டு போனார்கள். சென்னை ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி. உமாபதி இந்தபடத்தை எடுத்தார். இந்த படத்தின் கதையை உருவாக்கியவர் அரு. ராமனாதன். இவர் ஒரு பிரபல எழுத்தாளர். பிரசுரகர்த்தா. இவர் நிறைய சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறார். அந்த நாட்களில் அதாவது 60களில் காதல் என்று ஒரு மாதப் பத்திரிகையை நடத்தினார். பிரேமா பிரசுரம் என்பது அவருடைய மிகப்பிரபலமான பதிப்பகம். இவர் கதை எழுத, ஏ.பி. நாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி ‘ராஜ ராஜ சோழன்’ படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். தமிழில் வந்த முதல் சினிமாஸ்கோப் படம் இதுதான். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவாஜி இந்தப் படத்தில் ராஜராஜ சோழனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.
சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாததால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. `பொன்னூஞ்சல்’ இந்த படத்தை கோமதி சங்கர் பிக்சர்ஸ் சார்பில் கே.ஸ். குற்றாலிங்கம் தயாரித்தார். இந்தப் படத்தை சி.வி ராஜேந்திரன் இயக்கியிருந்தார். கட்டபொம்மன் படத்திற்கு வசனமெழுதிய சக்தி கிருஷ்ணசாமி இந்த படத்திற்கு வசனமெழுதியிருந்தார். ஆனால் இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படத்திற்கு ஆரம்ப நாள் வசூலை தேடிக்கொடுத்தது எம்.எஸ். விஸ்வநாதனின் பாடல்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்போதெல்லாம் ஒரு படம் ரீலிசாவதற்கு முன் பாடல்கள் வானொலியில் வந்துவிடும். இலங்கை வானொலியைப் போலவே சென்னை வானொலி நிலையமும், விவித் பாரதி என்று ஆரம்பித்து பாடல்களை முன்கூட்டியே ஒலிபரப்பத் தொடங்கியது. ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்ற பாட்டு அப்படி ஒரு பிரபலம் அடைந்தது.
அப்போதெல்லாம் விவித் பாரதியின் மக்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களுக்கு வாக்களிக்க வேண்டும். அந்த வருடத்தில் இந்த பாடல் தொடர்ந்து ஏராளமான வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தது. இந்த படம் சென்னை பிளாசா தியேட்டரில் வெளியானது. சிவாஜிக்கு ஜோடியாக உஷா நந்தினி நடித்திருந்தார். ‘எங்கள் தங்க ராஜா’ இந்த படத்தை தெலுங்கு படத்தயாரிப்பாளர் ராஜேந்திரபிரசாத் தயாரித்து இயக்கியிருந்தார். தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தின் தமிழாக்கம் இது!
படத்திற்கு சின்னப்ப ரெட்டி என்பவர் கதை எழுதியிருந்தார். திரைக்கதை வசனத்தை எழுதியவர் பாலமுருகன். இசை – கே.வி. மகாதேவன். அவரது நிறுவனத்திற்கு பெயர் கஜபதி ஆர்ட் பிக்சர்ஸ். இதில் சிவாஜிக்கு மிகவும் மாறுபட்ட வேடம். படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து வந்த படம் ‘கவுரவம்’. இந்த படம் முதலில் யு.ஏ.ஏ. குழுவினரின் நாடகம்! இந்த நாடகத்திற்கு பெயர் ‘கண்ணன்’ வந்தான். யு.ஏ.ஏ. என்பது ஒய்.ஜி மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி. பார்த்தசாரதி நடத்தி வந்த நாடகக்குழு.
(தொடரும்)
-
-
-
அனைவருக்கும் வணக்கம்!
நீண்ட இடைவெளிக்கு பின் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இணையதள இணைப்பில் ஏற்பட்ட பழுதின் காரணமாக திரியை பார்க்கவோ அல்லது பங்களிப்பு செய்யவோ இயலாமல் இருந்தது. இப்போது சரி செய்யப்பட்டு விட்டதால் தொடர்ந்து பயணிக்கலாம் என நம்புகிறேன். திரியை முன்னெடுத்து சென்ற அனைத்து நல்லிதயங்களுக்கும் மனங்கனிந்த நன்றி.
அன்புடன்
-
-
நண்பர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் நமது மய்யம் இணையதளத்தில் இப்போது நேரிடையாக பதிவு செய்ய முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. இனி நண்பர்கள் அனைவரும் வழக்கம் போல் பங்கேற்கலாம் என எண்ணுகிறேன்.
-
-
உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரவி. இறையருளாலும் நம் தலைவரின் ஆசியாலும் தாங்கள் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் ரவி சார்
-
செய்தி
மயிலை கபாலீஸ்வரர் கோவில் அறுபத்துமூவர் விழாவையொட்டி 09-04-2017, ஞாயிறு நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் "நீர்மோர்ப் பந்தல்" நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாஜி சமூகநலப்பேரவை மாநில துணைத்தலைவர் திரு.சீனிவாசன் தலைமையில் தொடர்ந்து 15வது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மாநிலத் தலைவர் திரு.K.சந்திரசேகரன் தொடங்கிவைத்தார். திரு.அம்பத்தூர் வெங்கடேசன், திரு.சங்குராஜன், திரு.பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் ஆகியவை வழங்கப்பட்டன.
அறுபத்துமூவர் விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள், நடிகர்திலகம் திருநாவுக்கரசராக திரையில் உலாவந்ததை நினைவு கூர்ந்து, அவர் பெயரால் சிவாஜி பேரவை செய்த சேவையையும் போற்றிச் சென்றனர்.
http://i1234.photobucket.com/albums/...sc7xqksoj.jpeg
http://i1234.photobucket.com/albums/...sjg3u2cna.jpeg
http://i1234.photobucket.com/albums/...sqkoxk7do.jpeg
-
-
From ONE INDIA :
சென்னை: திரைப்படங்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். ஆனால் அடுத்தவர் மனசு நோகாமல் விமர்சனம் செய்யுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.
விக்ரம் பிரபு முதல் முறையாக தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம் நெருப்புடா.
இந்தத் தலைப்பு ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பஞ்ச் என்பதால், ரஜினியையே படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.
சிவாஜி கணேசனின் வீடான அன்னை இல்லத்தில் நடந்த இந்த விழாவில் படப் பாடலை வெளியிட்டு ரஜினி பேசுகையில், "இந்த அன்னை இல்லம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இந்த வீட்டுக்கு வந்த உடனே நான் நினைச்சேன்... சிவாஜி சார் மட்டும் இப்போ என்னைப் பாத்திருந்தா, 'என்னடா போட்டிக்கு தாடி வச்சிட்டியா'ன்னு கேட்டிருப்பார். அவருக்கு போட்டியே இல்ல. இனிமேலும் கிடையாது.
நான் முதன் முதலில் 1978-ல் என்று நினைக்கிறேன்.. அப்போதுதான் நான் வாழ வைப்பேன் படத்தில் அவருடன் நடித்தேன். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். 'ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வா.. பிரியாணி போடறேன்...' என்றார். நானும் சென்றேன். முதன் முதலாக அந்த வீட்டு வாயிலில் நுழைந்தபோது, அந்த பிரமாண்டத்தைப் பார்த்து வியந்தேன்.
உள்ளே போய் பார்த்தேன். ஏதோ என்னை மட்டும்தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கோ வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த 200 பேர் வந்திருந்தார்கள். பிரியாணி என்றால்.. அப்படி ஒரு பிரியாணி.. இது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அங்கு நடக்கும்.
இரண்டாவது நிகழ்வு, அண்ணாமலை படம். நான் சிவாஜி சாரின் ரசிகன் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் படத்தில் ஒரு பகுதியில் என் கேரக்டரை சிவாஜி சாரை மனதில் வைத்து உருவாக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. படம் முடித்து சிவாஜிக்கு தியேட்டரில் போட்டுக் காட்டினோம். அவர் தியேட்டரில் பார்த்தது ஒன்று அண்ணாமலை. அடுத்து படையப்பா. அவர் நடிச்ச படம்.
அண்ணாமலை பார்த்துவிட்டு, என்னை வீட்டுக்கு அழைத்து சிவாஜி சார் பாராட்டியது வாழ்க்கையில் மறக்க முடியாதது.
-
-
Today happens to be the 10th anniversary of our www.nadigarthilagam.com. Started in the year 2007, when there was not much limelight thrown on the electronic media's role, particularly websites, particularly on old Tamil film history. While searching through websites, found many mistakes in the filmography of NTin various websites and a thought arose why not a website exclusively for NT be launched and thus born the www.nadigarthilagam. It has now past 10 years all with the support of fellow Sivaji fans the world over and connoisseurs of Tamil classics. Thank you all.https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...4d&oe=5955AACDஇன்றோடு நமது நடிகர் திலகம் இணைய தளம் www.nadigarthilagam.com 10 ஆண்டுகளை நிறைவு செய்து 11வது ஆண்டில் நுழைகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் மின்னணு ஊடகம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத கால கட்டத்தில் இணைய தளங்களும் பெரிய அளவில் மக்களிடம் சென்றடையாத கால கட்டத்தில், அப்போது இருந்த சில இணைய தளங்களில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்கள் சரிவர இல்லாத காரணத்தால் ஏன் நடிகர் திலகத்திற்கென தனி இணைய தளம் துவங்கக் கூடாது என்ற எண்ணம் உதிக்க, அதனுடைய எதிரொலியாக நமது இணைய தளம் www.nadigarthilagam.com துவக்கப்பட்டு, இன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கு காரணமான அனைத்து சிவாஜி ரசிக நல்லிதயங்களுக்கும் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும் உளமார்ந்த நன்றி.https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d0&oe=5991CEBB
-
Quote:
Originally Posted by
RAGHAVENDRA
Today happens to be the 10th anniversary of our
www.nadigarthilagam.com. Started in the year 2007, when there was not much limelight thrown on the electronic media's role, particularly websites, particularly on old Tamil film history. While searching through websites, found many mistakes in the filmography of NTin various websites and a thought arose why not a website exclusively for NT be launched and thus born the
www.nadigarthilagam. It has now past 10 years all with the support of fellow Sivaji fans the world over and connoisseurs of Tamil classics. Thank you all.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...4d&oe=5955AACDஇன்றோடு நமது நடிகர் திலகம் இணைய தளம்
www.nadigarthilagam.com 10 ஆண்டுகளை நிறைவு செய்து 11வது ஆண்டில் நுழைகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் மின்னணு ஊடகம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத கால கட்டத்தில் இணைய தளங்களும் பெரிய அளவில் மக்களிடம் சென்றடையாத கால கட்டத்தில், அப்போது இருந்த சில இணைய தளங்களில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்கள் சரிவர இல்லாத காரணத்தால் ஏன் நடிகர் திலகத்திற்கென தனி இணைய தளம் துவங்கக் கூடாது என்ற எண்ணம் உதிக்க, அதனுடைய எதிரொலியாக நமது இணைய தளம்
www.nadigarthilagam.com துவக்கப்பட்டு, இன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கு காரணமான அனைத்து சிவாஜி ரசிக நல்லிதயங்களுக்கும் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d0&oe=5991CEBB
Hi Raghavendra,
Congratulations for this splendid work. Completing 10 years in an individual capacity is a milestone and you are doing a magnificent work in running a successful website for our one and only Nadigar Thilagam. Big Thank you for this from Tamil Speaking world.
Great work. I sincerely believe this web treasure will turn into a wonderful NT dictionary, which will benefit tamils for many generations to come. Long live NT fame.
--A NT fan
-
Thank you TAC for your kind words sof appreciation and encouragement.
-
-
டியர் ராகவேந்தர் சார்,
பத்தாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பதினோராவது ஆண்டில் வெற்றிகரமாக தடம் பதிக்கும் "நடிகர்திலகம்.காம்" இணையதளத்துக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
இந்த இணையதளம் மூலம் தமிழ் நல்லுலகுக்கு நடிகர்திலகத்தைப் பற்றிய சாதனை சிறப்புகள் மிக சீரிய வகையில் சென்றடைந்தன என்றால் அது மிகையல்ல.
இந்த சிறப்பான வெற்றிக்கு தங்களின் ஓய்வறியா உழைப்பும், சோர்வறியா பங்களிப்பும், நடிகர்திலகத்தின் அன்பு பிள்ளைகளின் ஆதரவுமே முழுமுதற்காரணம் என்பது உண்மை.
நடிகர்திலகம் இணையதளம் இன்னும் பற்பல சாதனைகளை தனதாக்கி வெற்றிநடை போடவும், அதற்காக நீங்கள் பூரண ஆரோக்கியத்துடன் நீண்ட நெடிய காலங்கள் வாழவும் பிரார்த்திக்கிறேன்.
-
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 171– சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...16gauravam.jpg
யு.ஏ.ஏ. குழுவினர் வெற்றிகரமாக நடத்தி வந்த நாடகம் 'கண்ணன் வந்தான்'. இந்த நாடகத்தை 'வியட்நாம் வீடுசுந்தரம் எழுதியிருந்தார்! நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாடகத்தை சிவாஜி பார்த்தார்.அவருக்கு அந்த நாடகம் மிகவும் பிடித்து விட்டது. நாடகத்தில் அப்பா,- பிள்ளை இரண்டு கதாபாத்திரங்களின் மோதல்தான் கதை. நாடகத்தில், அப்பா வேடத்தில் மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி. பார்த்தசாரதியும், மகன் வேடத்தில் ஏ.ஆர். எஸ்ஸும் நடித்திருப்பார்கள்.
சிவாஜி இந்த நாடகத்தை படமாக்கி அதில் தான் நடிக்க வேண்டுமென்று நினைத்தார். அப்போது `இந்து’ நாளிதழின் இயக்குநர்களில் ஒருவரான ரங்கராஜன் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் சிவாஜியிடம் கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் சிவாஜி இந்த நாடகத்தைப் பார்க்கச் சொன்னார்.
அவருக்கும் நாடகம் பிடித்துப் போனது. நாடகத்திற்கு கதை எழுதிய 'வியட்நாம் வீடு' சுந்தரமே இந்த படத்தை இயக்குவது என்று முடிவானது. கேமரா – இயக்குநர் ஸ்ரீதருடன் பல படங்களில் பணிபுரிந்த வின்சென்ட். நாடகத்தில் இரண்டு கதாபாத்திரங்கள்.
இப்போது படமாக எடுக்கும்போது அதில் அப்பா வேடத்தில் சிவாஜி என்று முடிவானது. அப்படியானால் பிள்ளை கதாபாத்திரத்தில் யார் நடிப்பது?
`அப்பா-, பிள்ளை இரண்டு வேடங்களிலும் நானே நடிக்கிறேன்’ என்றார் சிவாஜி! படத்திற்கு தலைப்பு `கவுரவம்’ என்று முடிவானது. ஏன் அவர் அப்படிச் சொன்னார்? அதற்கு சிவாஜியே விளக்கமளித்திருக்கிறார்.
`கவுரவம்’நல்ல படம். அதில் இரண்டு வேடங்களில் நான் நடித்தேன். இரண்டு வேடங்களிலும் நான் நடித்ததற்கு ஒரு காரணமுண்டு.
இயக்குநர் எல்.வி.பிரசாத் இயக்கிய படம் `இருவர் உள்ளம்’ அந்தப் படத்திற்காக நானும் சரோஜாதேவியும் ஒரு காட்சியில் நடித்துக்கொண்டிருந்தோம். அந்தக் காட்சியில் சரோஜாதேவிக்குத்தான் முக்கியத்துவம். அவர்தான் அந்தக் காட்சியை டாமினேட் செய்வார். அந்த காட்சியில் நானும் நடித்துக் கொண்டிருந்தேன்.சரோஜாதேவி பெண். நான் நடித்து, எப்படியும் அவரை ஜெயித்துவிடுவேன் என்று நினைத்து நடித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது இயக்குநர் பிரசாத் ` கட்’ `கட்’ என்று சொல்லி நிறுத்தினார்.
என்னை வெளியே அழைத்துக் கொண்டு போனார்.
`சிவாஜி, நீ நல்ல நடிகன். நீ நன்றாக நடிக்கிறாய். எனக்குத் தெரியும். நீ நன்றாக நடித்தால் காட்சியும் நன்றாக இருக்கும். அதுவும் எனக்குத் தெரியும். ஆனால், நீ இந்த காட்சியில் நன்றாக நடித்தால், நாம் எடுக்கும் காட்சி வீணாகி, கதையின் போக்கே மாறிவிடும். காரணம், கதைப்படி இந்த காட்சியில் சரோஜாதேவிதான் டாமினேட் செய்ய வேண்டும். நீ பேசாமல் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் படமே கெட்டுவிடும்' என்றார்.
இந்த அனுபவம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. படத்தில் நான் நடிப்பது முக்கியமல்ல. கதைப்படி எந்தக் காட்சியில் நாம் நடிக்காமல் இருக்க வேண்டுமென்பதும் மிகவும் முக்கியம்.
இதற்கு இன்னொரு உதாரணம் `எங்கிருந்தோ வந்தாள்’ படம்.
அதன் கிளைமாக்ஸ் காட்சியில் ஜெயலலிதாதான் நடிப்பார். நான் சும்மா கையைக் கட்டிக்கொண்டும், இடது கையை கன்னத்தில் வைத்தபடி சிரித்தபடியும்தான் அவர் அழைக்கும் இடத்திற்கெல்லாம் போவேன். நான் நடித்திருக்க மாட்டேன். ஜெயலலிதாதான் நடித்திருப்பார்.
அந்தக் காட்சியில் நான் நடித்திருந்தால் கதையே கெட்டு போயிருக்கும். படத்தின் தலைப்பும் வீணாகியிருக்கும். படத்தின் தலைப்பு என்ன? 'எங்கிருந்தோ வந்தாள்', 'எங்கிருந்தோ வந்தான்' இல்லையே ?
அதுதான் நடிப்பு. அதாவது நாம் நடிக்கக்கூடாத காட்சியில் நாம் கதாநாயகன், நானே எல்லாக் காட்சிகளிலும் நடிக்க வேண்டுமென்றால் கதை பாழாகிவிடும்.
`பாசமலர்’ படத்தில் பல காட்சிகளில் என்னைவிட சாவித்திரி நன்றாக நடித்திருப்பார். அவர் அப்படி நடித்து, நான் அடக்கி வாசித்ததால்தான் அந்தப் படத்தைப் பற்றி இன்றும் மக்கள் பேசுகிறார்கள்.
சரி! இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு காட்சியில் நான் நடிக்கிறேன். ஆனால் பாராட்டும், ரசிப்பும் என் சக நடிகருக்குத்தான் கிடைக்கிறது. இதற்கு என்ன சொல்லப்போகிறோம்?
அந்த காட்சிதான் `திருவிளையாடல்’ படத்தில் வந்த சிவன் – தருமி நடித்த காட்சி! இதில் சிவனாக நான் நடித்துக்கொண்டிருப்பேன். என் பின்னால் தருமியான நாகேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அவரது நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்து, அந்தக் காட்சியே படத்தின் முக்கிய அம்சமாக இன்றும் மக்களால் ரசிக்கப்படுகிறது. அந்த காட்சி எடுத்தவுடன் அதை நான் பார்த்தேன்.
படத்தின் இயக்குநர் ஏ.பி. நாகராஜனிடம் நாகேஷ் நடித்ததில் ஒரு துளி அளவு கூட குறைக்கக்கூடாது என்றேன்.
எனக்குத் தெரியும். அந்த காட்சிதான் படத்தின் பேசப்படும் என்பது.
சரி! காட்சியின் தன்மையை புரிந்து கொண்டு நாம் நடிக்காமல் இருக்கலாம். ஆனால் மற்ற நடிகர்கள் இதை புரிந்து கொள்வார்களா? அதுவும் நான் ஒரு காட்சியில் நடிக்கும்போது அந்த சக நடிகரை 'நடிக்காதே' என்று சொன்னால் அவர் என்ன நினைப்பார்? ` சிவாஜி என்னை நடிக்க அனுமதிக்கவில்லை’ என்று நினைக்கமாட்டாரா ?
இப்போது `கவுரவம்’ விஷயத்திற்கு வருவோம். அப்பா,- பிள்ளை இரண்டும்தான் படத்தின் இரண்டு முக்கிய பாத்திரங்கள். அப்பா, பிள்ளை மோதல்தான் படத்தின் கருவே. இதில் அப்பா வேடத்தில் நான் நடிப்பதாக முடிவாகிவிட்டது. இப்போது பிள்ளை வேடத்தில் நடிக்கும் நடிகர் தானும் சிறப்பாக நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரா? மாட்டாரா?
அவர் நன்றாக நடித்தால் என்னுடைய பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேடம் அடிபட்டுப் போகும். நான் நன்றாக நடித்து அவரை டம்மியாக்கினால், அந்த கதாபாத்திரம் கெட்டுப் போகும்.
மற்றவர்களை நடிக்க வைத்து, `ஏம்பா! இந்த காட்சியில் நீ நடிக்காமல் சும்மா இரு’ என்றால் கோபமோ, மனவருத்தமோ வராதா?
இயக்குநர் பிரசாத் சொன்னதாலும், அந்தக் காட்சியின் தன்மையை புரிந்து கொண்டதாலும் `இருவர் உள்ளம்’ படத்தில் அந்தக் காட்சியில் நான் நடிக்காமல் இருந்தேன்.
அதே போல் எத்தனை நடிகர்கள் புரிந்து கொள்வார்கள்?
`சிவாஜி மட்டும் பெயர் எடுத்துக் கொள்ள நினைக்கிறார்’ என்று நினைக்கமாட்டார்களா?
இதையெல்லாம் யோசித்துத்தான் `கவுரவம்’ படத்தில் நானே அப்பா-, பிள்ளை இரு வேடங்களிலும் நடிக்க தீர்மானித்தேன். அப்பா பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதாபாத்திரம்தான் மனதில் நின்றது.
அதற்குக் காரணம் கண்ணன் என்கிற அந்த பிள்ளை கதாபாத்திரம் குறைவாக நடித்ததுதான்'.
(தொடரும்)
-
-
உளமார்ந்த நன்றி ஆதிராம். தங்களைப் போன்ற நல்லிதயங்களின் ஆதரவோடும் அன்போடும் மக்கள் தலைவரின் ஆசியோடும் நம் இணையதளம் மென்மேலும் வளரும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. தொடர்ந்து தங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்நோக்கி, மீண்டும் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
-
-
Quote:
Originally Posted by
RAGHAVENDRA
Today happens to be the 10th anniversary of our
www.nadigarthilagam.com. Started in the year 2007, when there was not much limelight thrown on the electronic media's role, particularly websites, particularly on old Tamil film history. While searching through websites, found many mistakes in the filmography of NTin various websites and a thought arose why not a website exclusively for NT be launched and thus born the
www.nadigarthilagam. It has now past 10 years all with the support of fellow Sivaji fans the world over and connoisseurs of Tamil classics. Thank you all.
10 ஆண்டுகளைக் கடக்கும் nadigarthilagam.com இணையதளம் மென்மேலும் பல்லாண்டுகள் கடந்து, நடிகர்திலகம் புகழ் பரப்ப இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
-
நடிகர் திலகத்துக்கு பெருமை சேர்க்கும்
nadigarthilagam.com
இணையத்துக்கும் திரு ராகவேந்திரா அவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
Sent from my Micromax A120 using Tapatalk
-
ஒரு வித்தியாசமான வீடீயோ பதிவு
நடிகர்திலகத்தின் பிரமிக்க வைக்கும் நடிப்பு
https://youtu.be/Lg9BxVCzHkc
-
-
உளமார்ந்த நன்றி சந்திரசேகர் மற்றும் செந்தில்வேல்
-
-
NT movies advertisement 1
-
NT movies advertisement 2
-
NT movies advertisement 3
-
NT movies advertisement 4
-
NT movies advertisement 5
-
NT movies advertisement 6
-
NT movies advertisement 7
-
NT movies advertisement 8
-
NT movies advertisement 9
-
NT movies advertisement 10
-
NT movies advertisement 11
-
Karnan re-release 50 days in more theatres for a re-release movie