http://i63.tinypic.com/2i0c7lk.jpg
Printable View
நேற்று பிற்பகல் (ஞாயிறு -19/05/19) 3.30 மணியளவில் சென்னை தி.நகர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i64.tinypic.com/o5b2ht.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அரச கட்டளை " வெளியான தேதி 19/05/1967
வெளியாகி 52 ஆண்டுகள் நிறைவு.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் எழிலான தோற்றம், விறுவிறுப்பான காட்சிகள்,
சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகள், இனிமையான பாடல்கள் , கருத்தான வசனங்கள் நிறைந்த படம். பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி இயக்கிய படம் .
அனைத்து அம்சங்கள் இருந்தும் அந்த காலத்தில் , முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறாதது ஏமாற்றம் . ஆனால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த
பிறகு மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டது . பல அரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது , அதன்பின் எப்போது வெளியிட்டாலும் எந்த திரை அரங்கிலும் அமோக வசூலுடன் நல்ல வரவேற்பை பெற்றது . திரைப்படத்தின் புகைப்படங்கள் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/2lbddt3.jpg
http://i68.tinypic.com/2a7wop2.jpg
http://i65.tinypic.com/2zsmgki.jpg
http://i65.tinypic.com/289h09g.jpg
மறுவெளியீடுகளில் அரச கட்டளையின் வெற்றிகள், சாதனைகள் கணித்து டிஜிட்டல் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக விநியோகஸ்தர் திரு.குணசேகரன்
சில ஆண்டுகள் முன்பு அறிவிப்பு வெளியிட்டார், மறுபடியும் விசாரித்ததில்
கொஞ்சம் காலதாமதம் ஆகலாம் என்று தெரிவித்தார் .
http://i64.tinypic.com/21al7rb.jpg
அட்டகாசமான வாள் வீச்சு காட்சிகள் நிறைந்த படம். கட்டான உடற்கட்டுடன் இந்த ஸ்டைல் எந்த நடிகருக்கு வரும் .நிச்சயமாக முடியாது .
சந்திரதோயம்
________________
ஒரளவு அறிவு நூல்கள் ,
ஆன்மீக நூல்கள் படித்துள்ளேன் சொற்பொழிவுகளும் கேட்டுள்ளேன் இதை உள் வாங்கி உண்மை உணர்வது கடினம்
இந்த பாடல் காட்சியை பாருங்கள் படம் தான் . என்ன சுலபாக உள்ளத்தை நெகிழவைக்கிறது வாழ்நாள் முழவதும் புத்தகங்கள் படித்தாலும் இந்த பாதிப்பு ஏற்படாது
மனம் என்னும் கோவில் திறக்ககின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
இந்த வரிகளை கவனியுங்கள் கோபுரத்தின் மீது மழை
மக்கள் திலகத்தின் முகத்தில் தெய்விக களை ஆம்மார்த்தமாக உச்சரிப்பதால் தான் இந்நிலை !
இதை உங்கள் பிள்ளைகளுக்கு காட்டுங்கள் மனிதநேயம் வளர மணித்துளிகள் மிச்சம்
மனம் தூய்மை நிச்சயம் !
ஹயாத்................ Thanks wa.,
நினைவுகளை சுமந்து வருந்துகிறோம் 😭
====================
இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களை, இதயத்தில் வைத்து பூஜித்தவர்.... இறைவ (எம்ஜிஆர்) னடி கலந்த ,கோவை பொறியாளர் ஐயா துரைசாமி அவர்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை உண்மையாக, நேர்மையாக நேசித்தவர்.... கடைசி மூச்சு நின்று ஆன்மா எம்ஜிஆர் நிழலில் கலந்த அந்த தருணத்திலும் தான் வணங்கிய.... வங்கக் கடலின் வற்றாத ஜீவநதி, வரலாற்றின் வைர ஜோதி தருமதேவன் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்தை இதய ஆலயத்தில் வைத்தவாரே உயிர் நீத்தார்.
பொன்மனச்செம்மலுக்கு தமிழகம் , கர்நாடகம் என எங்கு.... யார் விழா எடுத்து அழைத்தாலும், உடல் உழைக்காத நேரத்திலும் கூட , உடன் துணையாக நண்பர் கணபதி தாஸை அழைத்துக் கொண்டு....விழாவிற்கு வருகை தந்து , விழா முடியும் கடைசி நேரம் வரை இருந்து , மாலை மரியாதை, விருதுகளுக்கு ஆசை படாமல், விழாவிற்கு அழைத்தவர்களை விமர்சனம் செய்து , சுயநல விரும்பி என பேரெடுக்காமல் வாழ்ந்து..... புரட்சித்தலைவரின் புகழ் பாடிய உன்னதமான தொண்டர் திரு. கோவை துரைசாமி ஐயா அவர்கள்.
அது மட்டுமல்ல ,
தமது இல்ல வளாகத்திலேயே சகாப்த நாயகர்... வள்ளல் மகானுக்கு திருவுருவச் சிலை நிறுவி கோலாகலமாக திறப்பு விழா நடத்தி வருகை தந்த அனைவருக்கும் வயிறார உணவளித்து அகம் மகிழ்ந்தவர் ஐயா அவர்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா அழைப்பிதழில் கூட .... தமிழகம் முழுக்க எத்தனையோ மூத்த தொண்டர்கள் , பக்தர்கள் இருந்தப்போதும் , கர்நாடக மாநிலம் பெங்களூரில்.... புரட்சித்தலைவரின் புகழ் காத்து.....
புரட்சித்தலைவரே எனது உயிர் .... அவரே எனது உயிரின் மூச்சுக்காத்து என்று வாழ்ந்து, அவரது திருவடிப் பாதமே தஞ்சம் என்று , அவரது மலரடிப் பாதத்தில் நிழலாக மின்னிக்கொண்டிருக்கும், கர்நாடகம் பெங்களூர் காந்திநகர் தொகுதி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த, B.முனியப்பா அண்ணன் அவர்களது பெயரும், அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை நிறுவனரான எனது (கானா க. பழனி) பெயருக்கும் முக்கியத்துவம் தந்து....அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர் என பெயர் சேர்த்து.... அழைத்து உரிய மரியாதையோடு விழா மேடையில் கௌரவித்தார் ஐயா அவர்கள்.
சுயநலம்... பொறாமை... பேராசை... விளம்பரவெறி... அகங்கார சாயம் என தம்பட்டமடித்து , பித்து பிடித்து அலையும் சிலருக்கு எங்கே தெரியப் போகிறது.... உண்மையான எம்ஜிஆர் விசுவாசிகளைப் பற்றி (காலம் பதில் சொல்லும்) இப்படியாக, உண்மையாக.... உணர்வு பூர்வமாக இதயதெய்வத்தை நேசித்து பூஜித்த 79 வயதை கடந்த துடிப்பான வாலிபர்... எம்ஜிஆரின் மாணவர்...மூத்தத் தொண்டர் கோவை NGGO காலணியில் வசித்து காலம்சென்ற ஐயா பொறியாளர் துரைசாமி அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாளில், கண்ணீரோடு...அண்ணாரது நினைவுகளை சுமந்து வாடுகிறோம் .... பிரிவை என்னி வருந்துகிறோம்.
--- என்றும் நினைவில் நிழலாடும் தங்களின் நினைவுகளோடு.....
எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி
நிறுவனர் :
அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை (பெங்களூர்)
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்சா
நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம்
(திருவண்ணாமலை)
மு. தமிழ்நேசன்
(மதுரை)
ஆர். லோகநாதன்
(சென்னை)
கணபதி தாஸ்
கொடுவாய் கோபால கிருஷ்ணன்
மோகன்தாஸ்
கனக சுப்ரமணியம்
மீனாட்சி சுந்தரம்
கதிர்வேலு
MS. சேகர்
(கோவை)............... Thanks wa.,
வாழ்த்துக்கள்...💐💐💐வாழ்த்துங்கள்..💐💐💐
***************************
மனிதநேய மகான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் காக்கும் புனித தொண்டர்களுக்கு அன்பு வணக்கம்.
நாள்தோறும் ஏதோ ஒரு தேவைக்காக ஒவ்வொருவரும் போராடிக் கொண்டிருக்கும் இவ்வுலகில்... விடியற்காலை முதல் விழி உறங்கும் நேரம் வரை, ஒவ்வொரு நொடியும் , நம் இதயத்தை ஆண்டு கொண்டிருக்கும் இதயதெய்வம், பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின், காலத்தால் அழியா பல அற்புத தகவல்களை தேடிப்பிடித்து, இணையத்தளம் (திரியில்) மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிட்டு வருபவர்... "பாங்க் ஆப் பரோடா "வில் பணி ஓய்வு பெற்றவரும் , சைதை பகுதி "ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு" வின் முக்கிய பொறுப்பாளரும், பொன்மனச்செம்மல்... பரங்கிமலை பாரி புரட்சித்தலைவரின் புகழ் பாடும் வானம்பாடி, சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த திரு. ஆர். லோகநாதன் அவர்கள்... இணையதளத்தில் யாருமே எட்டாத... தொடாத சாதனையை, குறுகிய காலத்தில்... நமது வள்ளல் செம்மலின் பதிவுகளை பதிவிட்டமைக்கு கடந்த ஆண்டு "போர்ட் ப்ளேர் "(அந்தமான்) மார்கெட் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழாவில்... அதாவது, "அந்தமான் தமிழ்ச் சங்கம் " சென்னை "நக்கீரர் தமிழ்ச் சங்கம் " மற்றும் எஸ். விஜயன் அவர்களின் "இதயக்கனி மாத இதழ் " நடத்திய விழா மேடையில் 22.000 (இருபத்தியிரண்டாயிரம்)பதிவுகளை பதிவிட்டதற்கு பாராட்டு சான்றிதழ் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து... கடந்த மார்ச் மாதம் 2019 ஞாயிற்றுக்கிழமை 10 ம் தேதியன்று, பெங்களூரில் தொடர்ந்து 27 ஆண்டு காலமாய் கண்கண்ட கடவுள் எம்ஜிஆர் அவர்களின் புகழ் காக்க தன்னல தம்பட்டம் அடிக்காமல்... சுயநல விளம்பரம் தேடாமல்... தரங்கெட்ட தற்குறியென்று பேரெடுக்காமல்... பேச்சும், மூச்சும் எம்ஜிஆர்... எம்ஜிஆர் என்று, முழங்கி வரும் மக்கள் ஆதரவு பெற்ற... மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும்... அந்தமான் மற்றும் தமிழக மாவட்டங்கள் தோறும் புரட்சித்தலைவரின் புனித தொண்டர்களால் புகழாரம் சூட்டப்பட்ட "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " கம்பீரமாக எடுத்த இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களின் அரும்பெரும் விழாவாம், "முப்பெரும்விழா 2019"ன் 102 வது பிறந்தநாள் விழா மேடையில்... மலேசியா நாட்டின் பிரபல தொழிலதிபரும், மகான் எம்ஜிஆர் அவர்களின் தூய பக்தருமான திரு. டாக்டர் நெல்சன் முருகன் ஐயா மற்றும், நாடிவரும் ஏழை எளியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி துயர் துடைத்து, புரட்சித்தலைவரின் புனித வழியில் பயணிக்கும், அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப் பெற்ற அமுதத்தாய் ... தருமத்தாய் அம்மா "கீதம்மா நாயக் " இவர்களுடன் கர்நாடக அ. இ. அ. தி. மு. க. நிறுவனரும், கர்நாடக முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. KR. கிருஷ்ணராஜ் அண்ணன் முன்னிலையில் 25.000 (இருபத்தி ஐந்தாயிரம்) பதிவுகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் (இணையதளத்தில்) பதிவிட்டதற்கு பாராட்டு சான்றிதழ் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
இத்தனை... இத்தனை பாராட்டுகளும், "பாராட்டு சான்றிதழ் " களும் பெற்ற , திரு. ஆர். லோகநாதன் அவர்கள்... தற்போது இரண்டு மாத இடைவெளியில் மேலும் 1000 (ஆயிரம்) பதிவுகளை சேர்த்து... பலரும் வியக்கும் "அபார சாதனை " பதிவாக 26.000 (இருபத்தி ஆறாயிரம்) அசத்தலான , "நமதுதெய்வம் எம்ஜிஆர் " அவர்களின் சரித்திரப் பதிவுகளை... மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் (இணையதளத்தில்) பதிவிட்டு, நம் இதயக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் ... ஒட்டுமொத்த ரசிகர்கள்... பக்தர்கள்... விசுவாசிகளின் பாராட்டையும் பெற்றுள்ள சகோதரர் திரு. ஆர். லோகநாதன் (வில்லிவாக்கம்) அவர்கள்... தொடர்ந்து 50.000 , 1.00.000 பதிவுகளையும் கடந்து... " கின்னஸ் சாதனை " புரிய "எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆர் " அவர்களின் "மலர் பாதம் " தொட்டு வணங்குகிறேன்... அதேநேரம் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " (பெங்களூர் ) சார்பில் அனைத்து பொருப்பாளர்கள் மற்றும் நிர்வாக பெருமக்கள் சார்பில் வாழ்த்துகிறோம் 💐💐💐
வாழ்த்துக்களுடன்...
எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி
நிறுவனர் :
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " பெங்களூர் = 560027
ஆலோசகர் :
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்சா
(திருவண்ணாமலை)
து. தலைவர் (1) :
எம்ஜிஆர் பக்தன்
மு. தமிழ்நேசன்
(மதுரை)
து. தலைவர் (2)
சம்பங்கி GSR (ஆனந்தபுரம் -பெங்களூர்)
செயல்வீரர் :
பிரகாஷ் @ முருகன் ( நாராயணபுரம் - பெங்களூர்)
து. செயல் வீரர் (1) :
சார்லஸ் மூர்த்தி
(திலக்நகர் - பெங்களூர்)
து. செயலாளர் (2) :
க. ராஜசேகர் (காக்ஸ்டவுன் - பெங்களூர் )
பொருளாளர் :
என். பாஸ்கரன் (கே. எஸ். கார்டன் - பெங்களூர்)
🙏............... Thanks wa.,
தற்போது வெற்றிநடை போடுகிறது .சென்னை அகஸ்தியாவில் தினசரி மாலை காட்சி மட்டும்.
http://i67.tinypic.com/bjhkz5.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரியில் 26000 பதிவுகள் முடித்து பயணிப்பதற்கு கைபேசி, அலைபேசி, வாட்ஸ் அப் , மற்றும் நேரிலும் வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்
தெரிவித்த அனைத்து நல்ல இதயங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
http://i63.tinypic.com/23utzbm.jpg
முன்னாள் பாரத பிரதமர் திரு.ராஜீவ் காந்தி நினைவு நாள் (21/05/19 )
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரு.ராஜீவ் காந்தி சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு .
http://i67.tinypic.com/2q8wl7r.jpg
http://i66.tinypic.com/2i114pj.jpg
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் " என் அண்ணன் " வெளியான நாள் -21/05/1970.
49ஆண்டுகள் நிறைவு .சேலம் அலங்காரில் 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டது .குதிரை வண்டிக்காரர் பாத்திரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நன்கு சோபித்து நடித்திருந்தார் .டைட்டில் முடிந்ததும்,ஆரம்பமே அட்டகாசம். அறிமுக பாடலாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடல் காட்சி அசத்தல். சமூக சீர்திருத்த பாடலில்
கருத்து செரிவான வரிகள். ஏனைய பாடல்களாக, நீல நிறம்,கனவுப்பாடல் ,
சலக்கு சலக்கு சிங்காரி பாடல் (மிக நேர்த்தியான , வித்தியாசமான , புதுமையான
நடன அசைவுகள் அபாரமாக ஆடியிருப்பார் புரட்சி தலைவர் ),
கடவுள் ஏன் கல்லானான் (தத்துவப்பாடல் ), ஆயிரம் எண்ணம் கொண்ட மானிட
( இந்த பாடலிலும் வித்தியாசமான , புதுமையான நடன அசைவுகள் )
ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு (இனிமையான காதல் பாடல் )
முத்துராமன் , விஜயநிர்மலா காதல் பாடலாக (கண்ணுக்கு தெரியாத அந்த சுகம் )
பாடல்கள் அனைத்தும் தேன்சொட்டு .மக்கள் திலகத்தின் தங்கையாக விஜயநிர்மலா அருமையாக நடித்திருந்தார். அண்ணன் பாத்திரத்தில் சில காட்சிகளில் புரட்சி நடிகர் குணச்சித்திர வேடத்திலும் நடித்து முத்திரை பதித்தார் .
ஜஸ்டினுடன் மோதும் எலுமிச்சைப்பழ சண்டை காட்சி மிக பிரபலம்
கிளைமாக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டம் மட்டுமின்றி வித்தியாசமாக இருந்தது .
முதல் நாள் ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் காலை காட்சி பார்த்து மகிழ்ந்தது
பசுமையான நினைவு .
சென்னை மதுரை, திருச்சி, சேலம் அரங்குகளில் 100 நாள் ஓடி மகத்தான வெற்றி.
வீனஸ் பிக்ச்சர்சின் பிரம்மாண்ட தயாரிப்பு . மிட்லண்ட் 105 நாள், ஸ்ரீகிருஷ்ணா 86 நாள் ,மேகலா 70 நாள் நூர்ஜஹான் 57 நாள் .மற்றும் 50 நாள் அதிக அரங்குகளில்
ஓடி சாதனை புரிந்தது
சேலம் அலங்காரில் அமைக்கப்பட்ட கட் அவுட்
http://i67.tinypic.com/2dbwftg.jpg