தெலுங்கில் என் டி ராமாராவ் அவர்கள் ஆனால் நம் புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள் போல் அந்த ஸ்டைல் இல்லை....... Thanks...
Printable View
தெலுங்கில் என் டி ராமாராவ் அவர்கள் ஆனால் நம் புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள் போல் அந்த ஸ்டைல் இல்லை....... Thanks...
இந்த படம் தெலுங்கில் எடுத்து கொண்டு இருக்கும் போது ராம்லு பீமலு சில காட்சிகள் தலைவர் பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்க போது திரு.சாணக்கிய இப்போது பார்க்கலாம் என்றார் நாகிரெட்டி என்டிஆர் நடிகை ரத்னா தலைவர் உடனே நான் ரெடி என்று கூறி விட்டார் ரெட்டியார் கலரில் எடுக்க வேண்டும் என்றார் தலைவர்க்கு நல்ல மகிழ்ச்சியாக நடித்துள்ளனர் தெலுங்கு கருப்பு வெள்ளை படம் தெலுங்கில் அக்கா கணவர் வீட்டைவிட்டு வெளியே போய் விடுவார்கள் ஆனால்.. நம்பியார் திருத்திக் கொள்ள இருவரும்க்கு திருமண . எல்லாம் மறப்போம் மன்னிப்போம் அண்ணா வின் கொள்கை விளக்கக் முடிவுகள் தான் படம் சுபம் .. தெலுங்கு.. மலையாள.இந்தி.மூன்று மொழி களில் நான் படத்தை தியேட்டரில் படம் கோயம்புத்தூரில் பார்த்து தேன்........ Thanks to BMV
திலீப் குமாரும் சரி என்டி ராமாராவும் சரி,
இருவருமே ஒப்புக்கொண்டார்கள் அண்ணனை போல் எங்களால் நடிக்க முடியாது என்று!.
அது மட்டுமல்ல வேறு எவராலுமே அந்த இரண்டு கதாப்பாத்திரங்களையுமே எவராலுமே நடிக்க முடியாதாம்......உண்மையிலேயே முடியாதுதான்....... Thanks Manavalan Sir....
கைகளை எப்படி அசைத்தாலும் அதிலே... கம்பீரம் கலந்த அழகு.. எழுச்சிமிகு ஏற்றம் என்பதெல்லாம்... எம்ஜிஆர் என்கிற ஒருவருக்கு மட்டுமே பொருந்தி வரக்கூடிய ஒன்று.. அப்படி ஒருவர் அவருக்கு முன்னும் இல்லை.. பின்னும் இல்லை.. எம்ஜிஆர் ஒரு அவதாரம்........ Thanks Suruli subbu...
காரை நிறுத்தச்சொல்லி நடைபாதை கடையை நோக்கி வேகமாக சொன்ற புரட்சித்தலைவர்... திகைத்துப் போன கடைக்கார்..
ஒரு நாள் காலை பொழுது..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கோட்டைக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார்.
அப்பொழுது தலைவருக்கு அறிமுகமான ஒருவர் தன்னுடன் முருகேசன் (பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவரையும் அழைத்துகொண்டு தலைவரை காண வருகிறார்.
அவர்களை பார்த்த மக்கள் திலகம், "முதலில் சாப்பிடுங்கள். பின்னர் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம்" என்கிறார்.
அவர்கள் உணவருந்தி முடித்தபின் "சரி இப்ப சொல்லுங்கள். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீர்கள். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா?" என வினவுகிறார்.
வந்தவர் "அண்ணே இவர் பெயர் முருகேசன். தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை வச்சிருக்காரு. அதில் ஒரு சிக்கல், கடை சற்று நடை பாதையை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது.
இதை காரணமாக வைத்துக்கொண்டு, இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது. வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன்" என்கிறார் தயங்கியபடி.
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு புன்னகையுடன் "என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார். இந்த பதிலை கேட்டு வந்தவர்களின் முகம் வாடிப்போகிறது.
அதன் பின் மூன்று நாட்கள் கோட்டையில் இருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து கோட்டைக்கும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார். போகும் போழுதும், வரும் போதும் அந்த பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார்.
ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம், முதல்வராக இருந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தவர்தானே அவர்.
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார்.
பீடா கடை அருகே வந்ததும், பத்து மீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார்.
அதிகாரிகளுக்கோ குழப்பம். திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு, பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
தலைவர் நம்ம கடையை நோக்கி வருகிறாரே என்று முருகேசனுக்கு பதற்றம், குழப்பம், பயம். செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
பீடா கடையை அடைந்த தலைவர், "என்ன முருகேசா இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணோம். தொழில் எப்படி போகுது?" என்று ரொம்ப நாள் பழகிய நண்பர் போல் முருகேசனுடன் உரையாடுகிறார். முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திருத்திருவென முழிக்கிறார்.
"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா" என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது.
"முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா?"
"அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா?"
"சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம்"
என்று ஆளாளுக்கு தாங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது. வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன், பின்னாளில் அவர் கிட்டேயே சிபாரிசுக்கு வந்த கதையெல்லாம் நடந்தது.
புரட்சித்தலைவர் நினைத்திருந்தால் தொல்லை கொடுத்தவர்களை போனில் அழைத்து சொல்லியிருக்கலாம், அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ, தலைவருக்கோ தகுதியான குணமல்ல.
வேறு யாராக இருந்திருந்தால், இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள். இல்லையெனில் போனில் மிரட்டியிருப்பார்கள்.
அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை இவரை தவிர யாருக்கு வரும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்... என்பதில் சிறிதும் அய்யமில்லை.
புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களின் புத்தி கூர்மையை பறைசாட்டும் சிறிய நிகழ்வு தான் இது. ஆனால் இதுதான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
#ஏழைகளின்தலைவர் எம் ஜி ஆர்...... Thanks...
[#பொழைக்கத்தெரியாத #எம்ஜிஆர்
லாயிட்ஸ் ரோடு தாய்வீட்டில் ஒரு நாள் எம்ஜிஆரை, பெரியவர் ஒருவர் காணவந்தார். எம்ஜிஆர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்... அப்பெரியவர் எம்ஜிஆருடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்து பிறகு கிளம்பிவிட்டார்...
அப்பெரியவர் தான் "#ஜெனோவா" திரைப்பட இயக்குனர் திரு.நாகூர்...
அன்றிரவு எம்ஜி.சக்ரபாணி, எம்ஜிஆரிடம் "ராமச்சந்திரா, நாகூர் உன்ன வந்து பாத்துட்டுப்போனாரா? எதுக்காக..? அவரு நேத்து என்னே பாத்தபோது 'ஜெனோவா' படத்துக்கு அவரு கேட்ட கால்ஷீட்டுக்கு மேலே ஒண்ணரை பங்கு கொடுத்தாச்சு. இப்ப இருக்கிற உன் மார்க்கெட் சம்பளத்தையும் கொடுக்க ஒத்துக்கிட்டார்...அதன் பிறகும் ஏன் உன்னை வந்து பார்த்தார்...? இப்படி கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினார்.
அதற்கு எம்ஜிஆரின் நெகிழ்ச்சியான பதில் :
அண்ணா...! அவங்களுக்குப் படம் எடுக்கத் தெரியும், பிஸினஸ் தெரியாது. வித்த விலையைவிட செலவு ஜாஸ்தி ஆயிடுச்சு...டெக்னீஷியன்ஸ் எல்லாம் பிஸினஸ்மேன் ஆகிடமுடியாது...போதாகுறைக்கு அவர் மகள் இறந்ததுல மனசு உடைஞ்சு போயிட்டார். பாவம் அந்தப் பெரியவர் அழுதுட்டாரரு, என்னால தாங்கமுடியல..."
அதற்கு சக்ரபாணி, "அப்ப அவர் கொடுக்குற பணத்தை வாங்கினாப் போதும்னு முடிவு பண்ணிட்ட, அப்படித்தானே ???? "
"இல்லண்ணா...#அவர் #கொடுக்கவேண்டிய #இருபதாயிரத்தையும் #வேண்டாம்னுட்டேன்...#படத்தை #முடிச்சுத்தரேன் கவலைப்படாதீங்கன்னுட்டேன்" என்றார் எம்ஜிஆர் கூலாக...
அதற்கு சக்ரபாணி, "நீ சொல்றது சரிதான், இருந்தாலும் சம்பாதிக்கிற நேரத்துல தானப்பா சம்பாதிக்க முடியும்...? இப்படியே போனா நம்ம குடும்ப நிலைமை என்னாவது? நம்ம குடும்பநிலை உனக்குத் தெரியாதா? "
அதற்கு எம்ஜிஆர்,
"போவுது அண்ணா, பணத்தை விட மனுஷங்க பெரிசு. அவங்க நம்ம மேல வெச்சுருக்கிற அன்புக்கும், மதிப்புக்கும், நா செஞ்சது ஒண்ணும் பெரிசில்ல...
மேலும் "நாளைங்கிறது நம்பளோடது கிடையாது...அது கடவுளோடது...விடுங்கண்ணா " ன்னு சொன்னார்.
என்ன செய்ய #பெரியவருக்கு #வீட்டுக்கவலை...#சின்னவருக்கு #ஊர்க்கவலை...
]...... Thanks...
[கோவை செழியன் இரண்டாவது படம் தயாரிப்பு கேசி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான உழைக்கும் கரங்கள் டைரக்ஷன் கே சங்கர் இசை மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் வசனம் நாஞ்சில் மனோகரன் பாடல்கள் கவிஞர் வாலி கவியரசு கண்ணதாசன் மக்கள் திலகம் முதல்முதலாக ஆந்திராவின் பாணியில் வேட்டி கட்டிய படம் உரிமைக்குரல் இரண்டாவது படம் உழைக்கும் கரங்கள் இந்த திரைப்படத்தில் நமது தலைவர் நடக்கும் நடை பார்க்கும் பார்வை அனைத்தும் புதுமையாக இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மான் கொம்பு சண்டை இன்றுவரை பேசப்படக்கூடிய சண்டையாக இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது தலைவருக்கு 55 வயது வயது எத்தனை வேகம் எத்தனை வேகம் எத்தனை சுழற்சி அப்பப்பா பார்க்க கண்களுக்குள் சந்தோஷம் பிறக்கும் இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு எத்தனையோ நடிகைகள் முயற்சி செய்து பார்த்தார்கள் ஆனால் முன்னிலை அடைய முடியவில்லைபொதுவாக கே சங்கர் அவர்கள் மீது எந்த ஒரு திரைப்படம் இயக்கினாலும் அந்த திரைப்படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பு மிக அருமையாக இருக்கும் ரொம்ப வேகமாகவும் விறுவிறுப்பாக இருக்கும் அதற்கு முதல் சான்று குடியிருந்த கோயில் கே சங்கர் அவர்கள் பின்னாளில் நமது புரட்சித்தலைவரின் சம்பந்தனார் காரணம் சக்கரபாணி அவருடைய மகளைசங்கர் அவர்கள் தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார் இந்த திரைப்படம் இப்போது வெளியிட்டாலும் அல்லது தொலைக்காட்சி பார்த்தாலும் அந்த எட்டு நிமிடங்கள் வேறு எந்த சிந்தனையும் தோன்றாது அவ்வளவு அருமையான ஒளிப்பதிவு..... Thanks...
வணக்கம் நண்பர்களே!!
"எம்ஜிஆர் சண்டை "என தமிழகத்தில் பிரபலமான வார்த்தை உண்டு... வெறும் பாடல்கள் அதை ஒட்டிய சிறு கதை என தமிழ்சினிமா சற்று போரடித்துக்கொண்டிருந்த காலத்தில் தன் சண்டைக்காட்சிகள் மூலம் வேறொரு ட்ரென்டை உருவாக்கிய பெருமை எம்ஜிஆர் அவர்களுக்கு உண்டு.... அதற்கெல்லாம் வித்திட்டது " மருதநாட்டு இளவரசி"
அதில் வரும் ஒரு அற்புதமான சண்டைக்காட்சி உங்கள் பார்வைக்கு...
இன்று வரை தொழில்நுட்பம் பல வளர்ந்தாலும் இந்த சண்டைக்காட்சியின் எதார்த்தத்தை வேறெதுவும் முறியடிக்க வில்லை.... கடைசியில் தலைவர் தடுக்கி விழுவார் அவ்வளவு இயல்பாக இருக்கும்...
(குறிப்பு:இதில் வரும் காட்சிகள் பாஸ்ட் பார்வர்டு இல்லை... ஆனால் பாருங்கள் எவ்வளவு வேகம் என...).... Thanks...
#எம்ஜிஆர் அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.
1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது..... Thanks...
புரட்சி நடிகர் MGR இரு வேடங்களில் நடிக்கும் - உத்தமபுத்திரன்,,,
தயாரிப்பு ; MGR PICTURES
காலை நேரம் தினதந்தியில் விளம்பரம்.
ஆனால் தமிழக திரையுலகம்
அதிர காரணம்
அதே நாளிதழில்
நடிகர்திலகம் சிவாஜிகணேஷன் இரு வேடங்களில் நடிக்கும் உத்தமபுத்திரன்
தயாரிப்பு: வீனஸ் பிக்சர்ஸ்( ஸ்ரீதர்)
விளம்பரம் தான்.
The man in the iron mask ஆங்கில
பட தழுவல் தான்
1940 ல் மாடர்ன் தியேட்டர்ஸ்
வெற்றிபடம் உத்தமபுத்திரன்.
MGR - அவர்களோ The man in the iron mask ஆங்கில படத்தை தன் பாணிக்கு ஏற்ப தழுவி எடுக்கலாம்
டைரக்டர்; K.ராம்நாத்
என முடிவு செய்தார்.
K.ராம்நாத் யை சந்தித்த ஸ்ரீதர்
இதை அறிந்து
உத்தமபுத்திரன் ரைட்ஸை மாடர்ன் தியேட்டரிடம் பெற்று சிவாஜியை வைத்து தயாரிக்க முடிவு செய்தார்.
இப் பிரச்சனை என்னாகுமோ என திரையுலகமே தவித்தது.
இச்சமயம்
N.S கிருஷ்ணன் MGR யை சந்தித்து ராமச்சந்திரா அவர்கள்
மாடர்ன் தியேட்டரிடம்
ரைட்ஸ் வாங்கி வைத்துள்ளார்கள்.
நீ வேறு கதையை தயார்
செய்து எடு என்றார்.
N.S கிருஷ்ணன் மீது மிகவும் மதிப்பு வைத்திருப்பவர் MGR. அவர் சொல்லை மதித்து அந்த படத்தை கைவிட்ட MGR,
இரு வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற
ஆசையை மட்டும் விடவேயில்லை.
அப்படி அவர் ஆசைபட்டு மிகுந்த பொருட் செலவில் ,தன் வாழ்கையையே பயணம் வைத்து, டைரக்ட் செய்து
இமாலய சாதனை
படைத்த வெள்ளி விழா படம் தான்
"" நாடோடி மன்னன் "
- சித்ரா லட்சுமணன் பேட்டியிலிருந்து,,
பின் குறிப்பு:
நடிகர் திலகம்
சிவாஜியின் உத்தம புத்திரன் 7.2 1958 வெளியாகி 100 நாட்கள் ஓடியது.
********
அதே ஆண்டு 22.8.1958
புரட்சி தலைவர் MGR நடித்த
நாடோடி மன்னன் வெளியாகி தமிழக முழுதும் " வெள்ளி விழா"- 175 நாள் கண்டது.
பல திரையரங்கில் 200- 250 நாட்கள் ஓடியது.
தயாரிப்பு செலவு : Rs 12, 50, 000
( 1.8 million) ரூ 12 .50 லட்சம்
Box office collection; Rs 76, 36, 000
( 11 million) கலெக்சன் ரு 76.36 லட்சம்
ஆதாரம் Google.com விக்கிபீடியா.
தொகுப்பு : OKR.ரமேஷ்
இதுதான் நம் தலைவரின் சாதனை..... Thanks...
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -24/04/2020 அன்று* வின்*டிவியில் வெளியான* தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் குழந்தைகளுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் நிறைந்த கருத்தான பாடல்கள் அமைப்பதில் முனைப்புடன் இருந்தார் .* குழந்தைகள்தான்* எதிர்காலத்தில் வளர்ந்த சக்திகள் , நாட்டை முற்போக்கு சிந்தனையுடன் வழிநடத்தும் தலைவர்களாக வரக்கூடியவர்கள்*பல உயர்ந்த பட்டம், பதவிகளை அடைந்து மத்தியிலும், மாநிலத்திலும் அரசுக்கட்டிலில் அமர்ந்து ஆட்சியை செவ்வனே நடத்தக் கூடியவர்கள்* அப்படிப்பட்ட குழந்தைகளின் கருத்தை கவரும் வண்ணம் ஏராளமான பாடல்கள் தன் படங்களில் அமையும்படி பார்த்துக் கொண்டார் .**
ஒருமுறை படப்பிடிப்பில் நடிகை கே.ஆர். விஜயாவுடன் நடித்து வந்தார். நடிகைக்கு காலையில் பெட் காபி குடிக்கும் பழக்கம் இருந்தது .* காபியில் உள்ள நச்சுத்தன்மைகளை விளக்கி நடிகை கே.ஆர். விஜயா அந்த பழக்கத்தை கைவிடும்படி செய்தார் .* இதுபோன்று படப்பிடிப்புகளில் பல கலைஞர்கள் உடன் நடிக்கும்போது அறிவுரைகள், போதனைகள் செய்ய தவறுவதில்லை .
எம்.ஜி.ஆர். தன் படங்களில் வரும் பாடல்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொண்டு பாடும்படி அமைய வேண்டும் ,அவர்கள்தான் நாளைய தலைவர்கள் ,என்று கூறியதோடு , குழந்தைகள் மீது அளவற்ற*அன்பு, பாசம் வைத்திருந்தார் .*நீதி போதனைகள், சமூக*சீர்திருத்த*கருத்துக்கள்*அடங்கிய*பாடல்கள ுக்கு முக்கியத்துவம் அளித்தார் .அந்த பாடல்கள்*சமூகத்தில் பெரிய தாக்கத்தை*ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அந்த வகையில்*கவிஞர்**பட்டுக்கோட்டை*கல்யாணசுந்தரம் எழுதிய*சின்ன*பயலே*, சின்னப்பயலே சேதி*கேளடா*,.......* ஆளும் வளரனும் , அறிவும்*வளரனும் அதுதாண்டா வளர்ச்சி. உன்னை*ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும்*மகிழ்ச்சி ..... மனிதனாக வாழ்ந்திட வேணும்*மனதில் வையடா*, தம்பி மனதில்*வையடா ....* வளர்ந்து வரும் உலகத்திற்கே நீ வலது கையடா*.. ... என்று காலம் கடந்து*நிற்கும்*வைர வரிகளை* அரசிளங்குமரி திரைப்படத்தில்*அறிமுகப்படுத்தினார்.**
சில*காலம்* சந்தர்ப்ப சூழ்நிலை, சமுதாய சீரழிவு*காரணமாக*திருடனாக வாழ்ந்தவன் ,நல்லவனாக திருந்தி வாழ்வதற்கு ஏற்ப ஒரு திரைக்கதை தயாரானது . அதற்கு*டைட்டில்**பெயர் வைப்பதற்கு* பல பேர் சொன்ன*தலைப்புகளை நிராகரித்து , அந்த சமயத்தில் வித்வான் லட்சுமணன் அவர்களின்*யோசனைப்படி திருடாதே*என்று தலைப்பை*தேர்வு செய்து , அதற்காக*அவருக்கு*ரூ.500/- பரிசளித்தார்* எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் படத்தின்*தலைப்புகளை தேர்வு செய்வதில் எம்.ஜி.ஆர். மிகவும் கவனமாக*இருந்தார்.எதிர்மறை கருத்துக்கள்*மக்களை சென்றடையக்கூடாது என்று* .*மக்களுக்கு*பாசிட்டிவ்*ஆன* தலைப்புகள், செய்திகள், கருத்துக்கள்*தன் படத்தில் புகுத்துவதில் ஆர்வம் செலுத்தினார் .இந்த படத்தில்*கவிஞர் பட்டுக்கோட்டை*கல்யாண சுந்தரத்தின் திருடாதே, பாப்பா திருடாதே,வறுமை நிலைக்கு*பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே .......சிந்தித்து*பார்த்து செய்கையை*மாத்து, சிறிசாய் இருக்கையில் திருத்திக்கோ,தெரிஞ்சும்*தெரியாம*நடந்திருந்தா திரும்பவும் வராமல்*பாத்துக்கோ*..........திருடனாய்*பார்த்த ு திருந்தாவிட்டால் திருட்டை*ஒழிக்க முடியாது*போன்ற*வரிகள்*எக்காலத்திற்கும் பொருந்தும்*.
கன்னித்தாய் என்கிற*படத்தில்*குழந்தைக்கு அறிவுரை சொல்லும்*பாடலில்*தவிதவிக்கிற ஏழைக்கெல்லாம் திட்டம் போடணும்*, அதை சரிசமமான*பங்கு போட சட்டம் போடணும், குவியக்குவிய விளைவதெல்லாம் கூறு போடணும்*ஏழை குடிசை*பகுதியில்*பாலும் தேனும்*ஆறா*ஓடணும்*. ... கேளம்மா*சின்ன*பொண்ணு கேளு*என்ற பாடலில் இந்த வரிகள்*இருக்கும்.*ஏழை எளியோரின் துயர் துடைக்கும் வகையில்*தன் எண்ணங்கள் இப்படித்தான் பிரதிபலிக்கும் என்பதை*இந்த பாடலில்*வடிவமைத்தார் எம்.ஜி.ஆர்.*
*வேட்டைக்காரன் படத்தில்*எம்.ஜி.ஆர். கௌபாய்*வேடத்தில்*நடித்தார்.எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான வேடம்.* அந்த படத்தில்*மிகவும் சுறுசுறுப்பாகவும், ஓடியாடி*நடித்தார். சில*காட்சிகளில் துள்ளல்கள் அதிகம்.* ஒரு இடத்தில உட்காராமல் படுவேகத்துடன், பம்பரம் போல சுழன்று சில காட்சிகளில் நடித்திருப்பார் படம் முழுவதும் மிகவும் உற்சாகமாக*நடித்திருப்பார் ..* இந்த படத்தில் வெள்ளி நிலா முற்றத்திலே என்ற பாடலில்*, தன் குழந்தைக்கு அறிவுரை சொல்லும்போது, நான்கு பேர்கள்*போற்றவும், நாடு உன்னை வாழ்த்தவும், மானத்தோடு வாழ்வதுதான் சுய மரியாதை ......என்கிற வரிகளில் சுய மரியாதை பற்றிய விளக்கத்தை மிகவும் எளிதாக*குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில்*இருந்தது*.
நான் ஏன் பிறந்தேன் என்கிற படத்தில்*குடும்ப*பாங்கான கதை.* அவரது குடும்பத்தில் குழந்தைகள் நால்வர் இருப்பர்.* எம்.ஜி.ஆர். நடித்த*குடும்ப*பாங்கான படங்களிலேயே மிகவும் வித்தியாசமானது . வறுமையில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற , திருமணம் ஆனவர்*என்ற உண்மையை*சொல்ல முடியாமல் , தன்னை காதலிப்பவரின் உடல்நலத்தையும், உயிரையும்*காப்பாற்ற வேண்டிய பொறுப்புகளை சுமந்து*பல துன்பங்களை கடந்து*இறுதியில் குடும்பத்துடன் ஐக்கியம் ஆவதுதான் கதை .இந்த படத்தில்*, தம்பிக்கு*ஒரு பாட்டு*அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு என்ற பாடலில்* உயர்ந்தவர் யாரும் சுயநலம் இருந்தால்*தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே, உழைப்பால் பிழைப்போர்*தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவராவார் குணத்தாலே என்கிற* வரிகளில் ஜனநாயக*நாட்டிற்கு*தேவையான பொது உடைமை கருத்துக்கள்*அடங்கி இருக்கும் . வளரும் குழந்தைகளுக்கான நீதி போதனைகள், அறிவுரைகள் இந்த பாடலில் அமைந்தன .
எம்.ஜி.ஆர். தான் நடித்த**தனக்கு*பிடித்த*ஒரு சில*படங்களில் பெற்றால்தான் பிள்ளையா முக்கியமானது .* அதில் வரும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்கிற பாடலில் , கருணை இருந்தால்*வள்ளலாகலாம்.* கடமை இருந்தால் வீரனாகலாம். பொறுமை இருந்தால் மனிதனாகலாம்,* இந்த மூன்றும் இருந்தால்*தலைவனாகலாம். என்ற வரிகள் அமைந்திருக்கும்.* வளரும் குழந்தைகள் நாளைய தலைவர்களாகவும், கடமை வீரனாகவும், பொறுப்பு மிகுந்த தேசியவாதியாகவும் உருவாக*இந்த பாடல் நல்ல படிப்பினையாக*இருக்கும் .இந்த பாடலில்*மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்று ஒரு வரி இருக்கும். எம்.ஜி.ஆரின் உச்சரிப்பு அப்படியே இருக்கும். ஆனால் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனபோது* , இந்த படம் மறு தணிக்கைக்கு*சென்ற போது பாடல் வரியில்*அறிஞர் அண்ணா*போல் என்பதற்கு பதிலாக திரு.வி.க . போல் என்று வரும்படி செய்தார்கள்.* அப்போதைய அரசியல் சூழலில் சில*எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு இப்படி சில*சோதனைகள்*கொடுத்து*அவரது*தேர்தல் வெற்றிக்கு*தடை ஏற்படுத்தினர். ஆனால் அதையெல்லாம் மீறி*அவற்றை*தவிடு பொடியாக்கி*எம்.ஜி.ஆர். ஆட்சி பீடத்தில்*அமர்ந்தார் என்பது வரலாறு .
ஆனந்த ஜோதி படத்தில்*எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்தார் .இந்த படத்தில்*வரும் ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம்,* தலைவன் ஒருவன்தான்*என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்*என்ற பாடலில் , தர்மத்தின்*சங்கொலி*முழங்கிடுவோம், தமிழ்த்தாயின் மலரடி*வணங்கிடுவோம்**என்கிற வரிகளில் மொழிப்பற்று, நாட்டுப்பற்று உணர்வுகள் அடங்கிய கருத்துக்கள்*இருக்கும்.* அந்த காலத்தில் , இந்த பாடல்*பல பள்ளிகளில், சுதந்திர*தினம், குடியரசு தின*விழாக்களில்*மாணவ மாணவிகள்*பாடும் பாடலாக*அமைந்தது .
நம் நாடு படத்தில்தனது அண்ணனின் குழந்தைகளுக்காக** நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, என்கிற பாடலில்* விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் . தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் . என்ற வரிகள்*குழந்தைகளுக்கு நீதி போதிக்கும்* *வாத்தியாராக இருந்து சொன்ன கருத்துக்கள்*, நிஜத்தில்*எம்.ஜி.ஆர். தனது அண்ணன் சக்கரபாணி அவர்களின் குழந்தைகளை* தன் குழந்தைகளாக பாவித்து அவர்களை*படிக்க வைப்பதில் இருந்து , திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தானே* முன்னின்று நடத்தி வைத்துள்ளார்*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல்**சினிமா , அரசியல் , பொது வாழ்க்கை என்று மூன்று உலகிலும்*உச்சத்தை*தொட்டவர் வேறு எவருமில்லை .ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஒரு மனக்குறை*இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில்*கவிஞர் வாலி எழுதிய பாடலில்*பணம் படைத்தவன் படத்தில்*தனக்கொரு குழந்தை பிறக்கும்*தருவாயில், எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னை போலவே இருப்பான், தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன்* (பேரறிஞர் அண்ணா*) வழியிலே*நடப்பான்*என்ற*பாடலில் நடித்தார் .பொதுவாக* எம்.ஜி.ஆர். குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார் . அதனால்தான் , வறுமை, பசிப்பிணி காரணமாக எந்த குழந்தையும் பாதிக்க கூடாது என்கிற வகையில்*பள்ளிகளில், குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார் .* ஆரம்பத்தில் நிதிநிலை நெருக்கடி, எதிர்க்கட்சிகள் விமர்சனம் , அமுல்படுத்துவதில் சிக்கல்*இவையெல்லாம் இருந்தும்*திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இன்று இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த திட்டத்தை*அமுல்படுத்தி வருகின்றன தமிழகத்தில் எம்.ஜி.ஆர். குழந்தைகள் சத்துணவு கூடம் என்ற பெயரில் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது . உலகமே இந்த திட்டத்தை வியந்து பாராட்டுகிறது . இதன் காரணமாக*பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .
எம்.ஜி.ஆர். சொந்தமாக இயக்கி தயாரித்த*நாடோடி மன்னன் படத்திற்கு வசனம் எழுதியவர்கள் இருவர். ஒருவர் கவிஞர் கண்ணதாசன், இன்னொருவர் எம்.ஜி.ஆர். கதை இலாகாவை சார்ந்த*ரவீந்தர். ரவீந்தருக்கு ஒரு சமயம்*திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது .எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மூலம் எம்.ஜி.ஆருக்கு*விஷயம் தெரிய வருகிறது .* எம்.ஜி.ஆர். ரவீந்தரை*திருமண பரிசாக*என்ன வேண்டும் கேள்,ஏதுவாகிலும் செய்கிறேன் என்று சொன்னபோது மாங்கல்யம் வாங்குவதற்கு ரூ.16/- வேண்டும் என்று கேட்டார் .அதை நீங்கள்தான்*தரவேண்டும் என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். மறுத்ததோடு*, நான் இருமுறை*திருமணமாகி* மனைவியரை இழந்தவன். எனக்கு குழந்தை இல்லை.* எனது அண்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். நீ வாழ வேண்டியவன். எனவேதான்*என் அண்ணனை*தரும்படி*கேட்டுக் கொண்டேன் என்று விளக்கினார் .**
ஊருக்கு உழைப்பவன் படத்தில்*கவிஞர் முத்துலிங்கத்தின் பிள்ளை தமிழ் பாடுகிறேன், ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் என்ற பாடல்* வரும்.,இந்த பாடலில்*எம்.ஜி.ஆருக்கு பிள்ளை இல்லை என்ற மனக்குறை, துயரம், சோர்வு*எல்லாம் தன்னுடைய முகபாவத்தில் தெரியும்படி***உணர்வுபூர்வமாக*நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார்*, எல்லா துறையிலும் சாதித்த*எம்.ஜி.ஆர். தனக்கு*வாரிசு இல்லை என்ற மனக்குறையை போக்க தவித்தது போல் இந்த பாடல் அமைந்தது .*
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே*, உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே*என்கிற தத்துவப்பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த பாடலின்*கருத்துக்கள் அமைந்தன . எம்.ஜி.ஆர். குழந்தைகளை நேசித்ததன்*பலனாக*, அவர்களது*ரசிப்பு தன்மைக்கு ஏற்றவாறு ,எந்தெந்த சொற்களை கேட்டால் குழந்தைகள் உற்சாகம் அடைவார்களோ ,அதற்கு தகுந்தபடி ,அவர்களின் சிரிக்கும் பாஷையில்* சிக்கு*மங்கு சாச்சா பாப்பா என்று குழந்தைகளே கோரஸாக பாடும்படி*பாடலில் முதல் வரியில் அமைத்திருந்தார் .
1972ல் தி.மு.க.வில் இருந்து கணக்கு கேட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால் அவர் கட்சி பதவி ஆசையினாலோ, அதிகார பதவி ஆசை யினாலோ அப்படி கேட்கவில்லை .* தவறு எங்கிருந்தாலும் தட்டி கேட்பது என்பது அவரது சிறிய வயதில் இருந்தே இருந்த வழக்கத்தில் ஒன்று .*** அவர் கும்பகோணம் ஆனையடி பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கும்போது கோடையில் மண்பானை வாங்க வேண்டி பள்ளி ஆசிரியர் சிறுவர்களிடம் தலா 3 பைசா, 5 பைசா என்று வசூல் செய்து ,திட்டமிட்டபடி, பெரிய பானை வாங்காமல் , சிறிய பானை வாங்கி , காசு மிச்சம் சேர்த்திருந்தார் . இதை அறிந்து சிறுவர்களிடம் கலந்து ஆலோசித்த அவர் அதை தட்டி கேட்க முற்பட்டார் என்று தான் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற நூலில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .
தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் தனது பாடல்கள்மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை ,பாட வகுப்பில் சொல்வது போல , ஒரு பல்கலை கழகமாக , வாத்தியார் எம்.ஜி.ஆர். திகழ்ந்திருப்பார் .* தனது ஒவ்வொரு செயலிலும் யாருக்காவது , எதையாவது நல்ல முறையில் செய்ய வேண்டும், எளிதாக சொல்ல வேண்டும்* தனது ஒவ்வொரு மூச்சிலும் , தன்னுடன் பழகுபவர்கள், தொடர்புடையவர்கள் வாழ்க்கைத்தரம் உயர தன்னாலான உதவிகள் தன் வாழ்நாள் முழுவதும்*செய்யவேண்டும் என்பதை, கொள்கையாக எந்தவித* பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்து வந்தார் ..**
மன்னாதி மன்னன் படத்தில் வரும் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடல் தி.மு.க. வின் கொள்கை பாடலாக இருந்தது எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பும் அவர்* காரில் பயணித்தபோது இந்த பாடல் ஒலிக்காத நாளில்லை என்று சொல்லலாம் .**
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் விவரம் :
1.சின்ன பயலே சின்ன பயலே - அரசிளங்குமரி*
2.திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே*
3.கேளம்மா சின்ன பொன்னு -* *கன்னித்தாய்*
4.வெள்ளி நிலா முற்றத்திலே -வேட்டைக்காரன்*
5.தம்பிக்கு ஒரு பாட்டு -நான் ஏன் பிறந்தேன்*
6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*
7.ஒருதாய் மக்கள் நாமென்போம் - ஆனந்த ஜோதி*
8. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே -நம் நாடு*
9.எனக்கொரு மகன் பிறப்பான் - பணம் படைத்தவன்*
10..பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் -* ஊருக்கு உழைப்பவன்*
11.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*
12.ஏன் என்ற கேள்வி* -ஆயிரத்தில் ஒருவன்*....... Thanks...
தன்னை சுட்டவனையே மன்னித்தவர் எம்ஜிஆர்
தன்னை ஏசிய கண்ணதாசனுக்கு பதவி கொடுத்து மகிழ்ந்தவர் எம்ஜிஆர்
தனக்கு இடைஞ்சல் கொடுத்த பானுமதியை இசைக்காக பதவி கொடுத்து மதித்தவர் எம்ஜிஆர்
எதிரியின் திறமையை ரசிப்பவர் எம்ஜிஆர்
எம்ஜிஆரின் சக்தியின் முன் எவராலும் எதிரியாக இருக்க முடியாது
அதனால் தான் அவர்களை மன்னித்தாரா எம்ஜிஆர்
வாழ்க எம்ஜிஆர் புகழ் ......... Thanks.........
******************************** "ராஜராஜன் / Rajarajan"
********************************
மக்கள் திலகம் எம்ஜிஆர் , பத்மினி , ராகிணி , எம்.ஜி.சக்ரபாணி , பி.எஸ்.வீரப்பா , எம்.என்.நம்பியார் , திருப்பதி சாமி மற்றும் பலரது நடிப்பி்ல் 26 / 04 / 1957 ல் வெளியான திரைப்படம் "ராஜராஜன்".
கதை - வசனம் இளங்கோவன் , இசை - மகாதேவன்.
திருவனந்தபுரம் மெரிலாண்ட் சுப்ரமணியம் , வீரப்பா , நம்பியார் இவர்களது கத்தி சண்டை அபாரம்.
சீர்காழி கோவிந்தராஜன் / ஏ.பி.கோமளா குரலில்...
"நிலவோடு வான்முகில் விளையாடுதே" எனும் அருமையான பாடலை கு. சா.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எழுதியிருந்தார்.
************
RAJA RAJAN is a Tamil Language film.
Starring : M.G.Ramachandran , Padmini and Lalitha in the lead role.
The film was released in the 26th April 1957 (1) Though it is a good entertainer with hit songs the film didn't do well at box office and ran for just above 50 days.
(it was screened at Raja theatre Vellore also.
Vananghamudi , Maya bazhaar andRaja Rajan came at the same time. Lalitha and Padmini look very pretty in this good entertainer.)
The film has exellent meaningful dialogues by Elangovan. The dialogues can be enjoyed even now (2)
RAJA RAJAN
Directed by :
T.V. Sundaram
Produced by :
S.G.A.Cars
Written by :
Saravanan .P
Story by :
Raja
Starring :
M.G.Ramachandran
Padmini
Lalitha
P.S.Veerappa
M.N.Nambhiyar
M.G.Chakrabhani
Music by :
K.V.Mahadevan
Cinematography :
N.S.Mani
P.B.Mani
Edited by :
K.D.George
Production company :
Neela Productions
Distributted by :
Merryland Productions
Release date
26 April 1957
Running time
170 mints
Country
India
Language
Tamil
********************
M.G.Ramachandran as Prince RAJA RAJAN
M.N.Nambhiyar as Udhayachandran
P.S.Veerappa asGeneral Nagavelan
M.G.Chakrapani as Uthselan kavirayar
Friend Ramasami as sargunam
T.N.Sivathanu
C.V.V. Panthulu
N.M.Muthu koothan
R.M.Somasundaram
Jose prakash
Female cast
Padmini as princess Rama
Lalitha as priya mohini
S.D.Subbu lakshmi as queen senbagavalli
G.Sakunthala
S.V.Vasantha
R.Balsubramaniam as king keerthivarman
Producer :
T.V.Sundaram
Production company :
Neela productions
Director :
T.V.Sundaram
Music :
K.V.Mahadevan
Lyrics :
Mahakavi bharathiyar /
Kavi Lakshmanadass / A.Marudakasi / Ku.Sa.Krishnamoorthy /Muthukoothan / Pugazhendhi
Story , Screenplay ,dialogues :
Elangovan
Art Direction :
M.V.Kochappu
Editing:
K.D.George
Choreography :
P.S.Gopalakrishnan / Balaram
Cinematography :
N.S.Mani & P.B.Mani
Stunt :
R.N.Nambhiyar
Dance :
None
Music Composed :
K.V.Mahadevan (3) (4)
playback singers :
Seergazhi Govindarajan , Thiruchi Loganadan , S.C.Krishnan , R.Balasaraswathi Devi , A.P.Komala , P.Leela , Soolamangalam Rajalakshmi ana Vadivambal.
No song singers :
1 - Aadum Azhage Azhagu :
P.Leela / Soolamangalam Rajalakshmi
Pugazhendi 05:06
2 - Aala piranda Rajapaadu
Tiruchi Loganadan /Muthukoothan & vadivaambhal Muthukoothan 01:35
3 - Haiyahoo jingadi jayya
Srinivasan & party
Kavi Lakshmana dass 02:27
4 - Idhayam Thannayye
Seerghazhi govindarajan & A.P.Komala / A.Marudhakasi 03:32
5 - Kalaiyaada Aasai kanave
R.BhalaSarashwathi Devi / A.Marudhakasi 02:19
6 - Kaththinaale Kaariyam Saadhik
S.C.Krishnan / Vadivaambhaal Muthukoothan 02:28
7 - Mahamaayi Anghaala deviye
S.C.Krishnan / Muthukoothan 04:32
8 - Nilavodu Vaanmughil
Seerghaazhi govindarajan / A.P.Komala and Ku.sa.krishnamurthy
9 - Senthamizh Naadennum
Udutha Sarojini & Chores
Mahakavi Bharathiyaar 03:47
10 - Vettaiyaada Vaarum Mannavaa
Tiruchi Loganathan / S.C.Krishnan & Vadivaambhaal Muthu koothan 02:16
11 - Kalaiyaadha Aasai Kanave (pathos)
R.Balasaraswathi Devi / A.Marudhakasi
(Thanks : Makkal Thilagam MGR .
நன்றி : மக்கள் திலகம் எம்ஜிஆர்)
Tipping & editting
Creative by :
MGR in Kaaladi Nizhal
Ka. PALANI
Admin :
"Uzhaikkum Kural"
(Whatsapp Group)
எழுத்தாக்கம் & தொகுப்பு
எம்ஜிஆரின் காலடி நிழல்
க. பழனி
அட்மீன் :
" உழைக்கும் குரல் " தளம்
உதவி :
ஆர்.ஜி. சுதர்சன்
அட்மீன் :
"ஆண்டவன் mgr குடும்பத்தளம்"
வெளியீடு :
"உழைக்கும் குரல் " மாத இதழ்......... Thanks...
தற்போது " கணவன்" மக்கள் திலகத்தின் அசால்ட்டாக நடிக்கும் துள்ளல் performance, "நான் உயிர் பிழைத்தேன்" பாடல் காட்சிக்கு முன்பாக வந்து ஒரு கலக்கு கலக்குவாரே... சான்சே இல்லை... என்ன மாதிரி ஸ்டைல்?! ரகளை... அப்புறம் பாட்டு scene லும் தலைவர் அட்டகாசம்... தூள் தான் போங்கள்......... Thanks...
https://youtu.be/x0nEIdpUAGE......... Thanks...
https://youtu.be/KSFTdt6I1n8... Thanks...
https://youtu.be/0jXad1bT4gg... Thanks...
https://youtu.be/K7uJ8Pq5ht8... Thanks...
https://youtu.be/19RKBdTh0kk... Thanks...
https://www.hindutamil.in/news/blogs...e-vaa-mgr.html.... Thanks...
********************************
கருணை உள்ள ,
இதயத்தில்...
கடவுள் எம்ஜிஆர்
குடி இருப்பார்.....!!!
********************************
அள்ளி கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு .....
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு -
என்று சொன்னார் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்.
அவரது வாக்கு தத்துவப்படி
மலேசியா நாட்டில் ,
"மலேசிய தமிழ் கலைஞர்கள் குரல் இயக்கம் " (Persatam Suara Artis Tamil Malaysia) சார்பில் , தலைவர் அப்பு என்கிற பாலசந்திரன் தலைமையில் , துணைத் தலைவர் திரு. ராமசந்திரன் மற்றும் ,கலைக் குடும்பத்தை சேர்ந்த திரு. மதன் (பொருளாளர்)உதவித் தலைவர்கள் மூர்த்தி , ரமேஷ் , சேகர் (ட்ரம்மர்) இணைந்து ,
கொரோனா (covid -19) வைரஸ் தாக்கத்தினால் , அரசின் ஆணைக்கிணங்க வீட்டை விட்டு வெளிவர முடியாமல் தவிக்கும் நலிந்த கலைஞர்களுக்காக நிதி திரட்டி ,,,,உதவிக்கரம் நீட்டி , கருணை வள்ளல் எம்ஜிஆர் அவர்களின் வழியில் மனிதநேயத்தை தமது உழைப்பின் மூலம் பதிவு செய்துள்ளார்கள்.
ஆம் , கலைத்தொழில் ஒன்றையே நம்பி முடங்கிய நிலையில் இருந்த சக கலைஞர்களின் வீடுகளை தேடிச்சென்று , தரம் உயர்ந்த மளிகை பொருட்களை கொடுத்து , ஆதரவு கரம் நீட்டியதில்...மலேசிய தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நமக்கு கிடைத்த தகவல்படி உதவிக்கரம் நீட்டியவர்களின் விவரம் மற்றும் உதவி பெற்றவர்களின் விவரம் , உங்களது பார்வைக்காக....
( உதவி கொடுத்தவர்கள் / பெற்றவர்கள் சிலரது பெயர் விடுபட்டதற்கு மன்னிக்கவும்)
SPONSORS DETAILS
*************************
1 - Balachandar - 5 pax
2 - Gurudevar - 5 pax
3 - Mathan. - 100 Rm
4 - Moorthy - 100 Rm
5 - Ramesh - 100 Rm
6 - Rama Dp - 100 Rm
7 - Gandi Dasan - 100 Rm
8 - Sai Lilli - 200 Rm
9 - John - 100 Rm
10 - Mgr Suresh - 100Rm
11 - Kalai @ boy - 100 Rm
12 - Elavarasu - 100 Rm
13 - Boy se'ban - 100 Rm
14 - Magin guitar - 100Rm
15 - Kalai singer -100 Rm
16 - Annapoorani - 100Rm
17 - Dato Kamalanadan - 100 Rm
18 - Kalaiyarasan kapar - 200 Rm
19 - Joseph - 100 Rm
20 - Gv Shan - 50 Rm
****************************
உதவி பெற்றவர்கள் விவரம்....
பாடகர்கள் :
1 - K.S. கதிரவன்
2 - Tms. பழனி
3 - ராஜ் ( ஈப்போ)
4 - தர்மென்
5 - பாலா - புவனேஷ்வரி
6 - மேகநாதன்
7 - ஜான்சன்
8 - சிவா சாகா
9 - பரம்
10 - விஷ்ணு
11 - லேட் ஜேசுதாஸ் family
பாடகிகள் :
****************
12 - ரோகிணி
13 - லட்சுமி
14 - மலர் கமல்சுகு
15 - நளினா
16 - விசால் குமுதா
17 - கிறிஸ்டினா fly
18 - சாலினி
19 - ப்ரஸிலியா fly
20 - காயத்ரி fly
21 - அருணா
22 - ப்ரியா
23 - சித்ரா
24 - சௌம்யா
25 - ரோஸிலின்
மேலும்.......
Drummer
***********,**
26 - Kutti
27 - Mahalingam
Bango player
*****************
28 - Anbu
29 - Late.Balakrishnan fly
30 - Arokya sami
31 - Shekar
Comedian
*************
32 - Late AMR.Perumal fly
Clarinetist
**************
33 - Balan
Keyboardist
****************
34 - Late. George fly
35 - Steven
Lyricist
************
36 - Shankar
Percussionist
******************
37 - Ramu
38 - M.C. Albert
Guitarist
***********
39 - Aaru
40 - Krishnadass @ Appu
Actor
********,
41 - Hari krishna fly
*******************************
இன்னும்...இன்னும்..
உதவிக்கரம் நீட்டிய கருணை உள்ளங்கள் மற்றும் ,
உதவிகள் பெற்ற நம் உறவுகளின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
(இது முதல் பாகம்)
*******************************
நல் மனதோடு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் ,
மலேசிய தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப் பட்டுள்ளது
Tittle & Edited by :
Amudha Surabhi Dr. MGR Charitable Trust - B' lore
அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை - பெங்களூர்
என்றும்....
உப்பிட்டவரை உள்ளலவு நினைக்கும் ,
நனறி மறவாத...
இதயதெய்வத்தின்
புனித வழியில் ,
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி
அட்மீன் ,
"உழைக்கும் குரல்" தளம்
&
ஆர்.ஜி.சுதர்சன்
அட்மீன் ,
ஆண்டவன் mgr குடும்பத் தளம்
தகவல் வெளியீடு :
"உழைக்கும் குரல்" மாத இதழ்
...... Thanks...
கருத்தாழமிக்க பாடல்கள் அனைத்தையும் ரசித்து கேட்டு மகிழ்ந்து கருத்துகளை உள்வாங்கி வியந்தேன்
பகிர்கிறேன் நண்பர்களுக்காக...
♦ *அனைத்தும் முத்தான பாடல் தொகுப்பு*
*காசிவிஸ்வநாதன் ராம்* 👍
*பாடல்கள்:*
1.நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா
♦2. தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
3. வாங்கய்யா வாத்தியா ரய்யா
♦4. விவசாயி விவசாயி
5. ஒரு தாய் மக்கள் நாமென்போம்
6. தர்மம் தலை காக்கும்
7. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
8. எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு
♦9. ஓடி ஓடி உழைக்கனும்
ஊருக்கெல்லாம் கொடுக்கனும்
10. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
♦11. உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே
12. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
♦13. கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
♦14. மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
15. போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே.
♦ 16. ஏய் மனுசன மனுசன சாப்பிடுறான்டா தம்பி பயலே
♦ 17. உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
18. சத்தியம் நீயே தர்மத்தாயே
19. ஆண்டவன் உலகத்தின் முதலாளி
https://youtu.be/DaskSr_6ruo... Thanks...
https://youtu.be/U0d5RZG0FXQ... Thanks...
மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...
இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.
01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.
02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.
03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம்....... Thanks...
திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் மருத்துவ கல்லூரி ஒன்று முதலமைச்சர் கோட்டாவாக 25 சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தது முதலமைச்சரின் பார்வைக்கும் வந்தது. அப்போது பலரும் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கோரிக்கை மனுக்களும் வந்தவண்ணம் இருந்தது அப்போது புரட்சித் தலைவரோடு இருந்த ஒரு அன்பர் திரு டாக்டர் புரட்சித் தலைவரிடம் நமக்கு வந்த 25 கோட்டாவை கட்சி நிதிக்காக செயல்படுத்தலாம் என்று கூறுகிறார் அதற்கு நம் புரட்சித்தலைவர் சிரித்துக் கொண்டு சரி பார்ப்போம் என்றார். பின்பு ஒரு அதிகாரியை அழைத்து நமக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வந்து இருக்கிறதல்லவா அந்த மனுக்களை எல்லாம் எடுத்து வாருங்கள் என்று கூறினார். அந்த அதிகாரியும் எடுத்து வந்தார் அந்த மனுக்களை பத்து நாட்கள் ஆராய வேண்டிய மனுவை பத்து நிமிடங்களில் 25 நபரையும் தேர்ந்தெடுத்தார். அப்போது அங்கிருந்த அன்பர் ஒருவர் புரட்சித்தலைவர் இடம் கேட்டார் என்ன தலைவரே இவ்வளவு சீக்கிரத்தில் தெரிந்தெடுத்து விட்டீர்கள் எப்படி என்று கேட்டார். அதற்கு திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் அவரிடம் கூறிய வார்த்தை என்னவென்றால் எரியாத விளக்கில் எண்ணெய் ஊற்றி ஒளியைக் கொடுக்கவேண்டும் அதைத்தான் செய்தேன் என்றார். அந்த அன்பருக்கு புரியாததால் மீண்டும் கேட்டார் புரியவில்லை தலைவரே 10 நிமிடங்களில் எவ்வாறு 25 கோட்டாவும் 25 நபர்களின் மனுக்களுக்கும் தேர்வு செய்தீர்கள் என்றார். அதற்கு புரட்சித் தலைவர் அவர்கள் என்ன செய்தார் என்றால் மனுக்களில் தகப்பனார் அல்லது காப்பாளரின் கையெழுத்து மனுவில் கட்டாயம் தேவை அதை வைத்து தேர்ந்தெடுத்தார் அதாவது ஆங்கில் இருக்கும் கையெழுத்து இட்டது தனியாகவும் தமிழில் கையொப்பமிட்ட மனுவை தனியாகவும் பிரித்து, அதில் எதுவும் தேர்ந்தெடுக்காமல் கைநாட்டு இட்ட மனுக்களை மட்டும் கையெழுத்திட்டு தேர்ந்தெடுத்தார். இப்போது உங்களுக்கு அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது இப்போது நமக்கும் புரிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு இறைவன் வாழ்ந்த மண்ணில் தான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ....!!
நன்றி அன்பர்களே... .......... Thanks...
https://youtu.be/bSZdl1O2MfI... Thanks...
நள்ளிரவு நேரம் திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் ராயப்பேட்டை அலுவலகத்திலிருந்து ராமாபுரம் வீடு செல்வதற்காக காரில் புறப்படுகிறார். வந்து கொண்டிருக்கும்போது ஒரு சாலையோரத்தில் ஒரு மனிதர் கந்தல் துணியுடன் காலில் செருப்பு இல்லாது ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். அதை நம் திரு தலைவர் காரிலிருந்து ஜன்னலோரமாக காண்கிறார் உடனே உத்தரவிடுகிறார் யாரோ ஒருவர் ஒரு குழந்தையை கடத்திக்கொண்டு போகிறார் போல் உள்ளது அவரை வலி மறையும் என்று உத்தரவிடுகிறார் அதேபோல் காவல் அதிகாரிகளும் அவரை தடுத்து கையில் உள்ள குழந்தையை பார்க்கிறார்கள் குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது அதைக்கண்ட வாத்தியார் குழந்தையை தூக்கிக்கொண்டு எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்கிறார் மேலும் இது யாருடைய குழந்தை? என்று கேட்கிறார் அதற்கு அந்த மனிதர் என்னுடைய குழந்தை ஐயா மிகவும் ஜுரத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆகையால் மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றார் அந்த மனிதர் அதற்கு நம் வாத்தியார் குழந்தையின் உடலை தொட்டு பார்க்கிறார் குழந்தைக்கு ஜுரம் வீசுகிறது என்று அறிகிறார் அறிந்த உடனே சரி வாருங்கள் காரிலே ஏருங்கள் என்று தமது காரில் ஏறச் சொல்கிறார் ஆனால் அந்த மனிதர் ஏற மறுக்கிறார் பரவாயில்லை ஏறுங்கள் என்று மீண்டும் வாத்தியார் கூறுகிறார் பின்பு அந்த மனிதர் காரில் ஏறி தலைவரோடு பயணம் செய்கிறார் வாத்தியாரின் கார் ஒரு டாக்டர் வீட்டின் அருகில் நிற்கிறது வாத்தியார் காரைவிட்டு இறங்கி அந்த வீட்டின் கதவை தட்டுகிறார் உடனே கதவு திறக்கப்படுகிறது திறந்ததும் அந்த டாக்டர் வாத்தியாரை பார்த்து வியப்படைந்தார் ஐயா நீங்கள் இந்த நேரத்தில் என்று கூற அதற்கு நம் வாத்தியார் இந்த குழந்தையின் உடல்நலம் சரியில்லை ஆகையால் இக்குழந்தைக்கு வைத்தியம் செய்ய வேண்டும் ஆகையால் தான் தங்களை நாடி வந்தோம் என்கிறார் வாத்தியார். அதைக்கேட்ட டாக்டர் குழந்தைக்கு சிகிச்சை செய்கிறார் சிகிச்சை செய்த டாக்டருக்கு ஊதியம் கொடுக்கிறார் நம் வாத்தியார் டாக்டர் வேண்டாம் என்கிறார் அதற்கு நம் வாத்தியார் நீங்கள் செய்த வேலைக்கு தகுந்த ஊதியத்தை நாம் கொடுத்தே ஆகவேண்டும் ஆகையால் இதை படியுங்கள் என்று வலுக்கட்டாயப்படுத்தி கொடுக்கிறார் வேறுவழியின்றி அந்த டாக்டரும் வாங்கிக் கொள்கிறார் பின்பு வாத்தியாருக்கு ஒரு யோசனை வருகிறது மருத்துவமனைக்கு மக்கள் தகுந்த நேரத்தில் செல்ல வேண்டுமென்றால் நாம் அரசு சார்பாக ஆம்புலன்ஸ் வசதியை செய்து தர வேண்டும் என்ற எண்ணம் வருகிறது அதேபோல் செயல்படுத்தியும் காண்பித்தார் இதை அறியாது வரலாறு தெரியாத திமுக தங்களால் தான் 108 என்னும் ஆம்புலன்ஸ் அமைக்கப்பெற்றது என்று இன்று பதிவிட்டு வருகிறார்கள் உண்மையிலே சொல்லப்போனால் நம் திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் கொண்டுவந்ததுதான் ஆம்புலன்ஸ் வசதி என்பதை நாம் அறிவோம் தற்போதும்... ............ Thanks...
https://youtu.be/PBsTTMVjKkQ... Thanks...
அன்பேவா அன்றும் இன்றும் என்றும் காலத்தால் அழியாத காதல் காவியம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இவர்களின் இனிமையான நடிப்பு வாலியின் அருமையான பாடல் எம் எஸ் வி யின் இனிமையான இசை ஆருர்தாஸ் அவர்களின் சுவை குன்றா வசனம் ஏ சிதிருலோக சந்தரின் இயக்கம் தயாரித்த avm மற்றும் ஒளிபரப்பிய சன் tv மற்றும் பங்குகொன்ட அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் இது போல ஒரு படம் எந்த ஜென்மத்திலும் வரபோவதுமில்லை இதற்கு ஈடுஇணை ஈதுமில்லை அன்புடன் எம் எஸ் மணியன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணிசங்கம்💐🙏🏽... Thanks...
கருணைமிகு கதிரவா!
காஞ்சித் தலைவா!
உமது
சுடரொளி பட்டு
சுபிட்சம் அடந்தவர்கள்
அகிலத்தில் ஆயிரம் ஆயிரம்!
அந்த!
ஆயிரத்தில் ஒருவர் - இன்றும்
உதய சூரியனோடு உலா வருகிறார்.
நல்லாண்மை நாயகர்,
இலக்கியக் காவலர்,
கலக்கம் காணாத காவிய நடிகர் எம்ஜிஆர்!
இவர்
கண்டியில் பிறந்தார்
கேரளத்தில் வளர்ந்தார்
தமிழகத்தில் வாழ்ந்தார்/ ஆண்டார்.
தன்னை வாழ வைத்த தமிழகத்தை,
தமிழக மக்களை...
வாழ வைத்தும் மகிழ்ந்தார்!
"இருந்தாலும் மறைந்தாலும்,
பேர் சொல்ல வேண்டும்!
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்"
போர்!!!
போற்றிப் பாடும்,
புறநானூற்று வீரர் / 'மதுரை வீரர்' எம்ஜிஆர்.
எப்பொழுதும் என்ன கொடுப்பார்?
ஏது கொடுப்பார்?
எதிர் பார்ப்பார் எங்கும் இருப்பார்!
ஆனால்?
எதையும் கொடுப்பார்! - தனது
இதயமும் கொடுப்பார்!
என்பதை ஏழை எளிய மக்களின்
உள்ளம் மட்டுமே சொல்லும்,
வாழையின் குணம் உடைய
வள்ளலின் அருமையை/ பெருமையை!..... Thanks...
https://g.co/kgs/mbmeuK... Thanks...
மக்களின் நேரடி தொடர்பாளர், மக்களின் நேசக்கரம், மக்களின் ஏழைப்பங்காளன், மக்களின் இதய தொடர்பாளர், மக்களின் பொறுப்பாளர், மக்களின் பற்றாளர், மக்களின் தேவையை புரிந்தவர், மக்களின் பசியைப் போக்க துடித்தவர், மக்களின் துன்பத்தை போக்க நினைத்தவர், மக்களின் கண்ணீர் துடைக்க வந்தவர், மக்களின் எண்ணத்தை புரிந்தவர், மக்களின் பொறுப்பாளர், மக்களின் தேவையை அரிந்தவர், மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர், மக்களுக்காக வருபவர், மக்களோடு மக்களாக வாழ துடிப்பவர், மக்களுக்காக சேவை செய்தவர், சதா மக்களை நினைப்பவர், மக்களோடு மக்களாக உறைந்துச் செல்பவர், மக்கள்திலகம் ஆனவர், மக்கள் என்ற சொல்லுக்குச் சொந்தமானவர், உலகையே காக்க துடிப்பவர், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர், புரட்சித் தலைவர் என்று போற்றப்பட்டவர்.... நம் குலதெய்வம் ஆனவர், முற்றுப்புள்ளி அற்றவர், நம்மோடு எப்போதும் பயணம் செய்பவர், நாம் வாழும் வாழ்க்கைக்கு அழகு சேர்த்தவர், நாம் வாழும் வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர், நம்மை புரிந்து கொண்டவர், நம்மை தெரிந்து கொண்டவர், நம்மில் கலந்தவர், இவையெல்லாம் தற்போது வரை நடந்தவை........... Thanks.........
"கண்ணதாசனை ஆச்சரியப்படுத்திய கதை... எம்ஜிஆர் கொடுத்த 5000 ரூபாய்" - 'சாரைப்பாம்பு' சுப்புராஜ் சொன்ன அடேங்கப்பா சம்பவங்கள்! | nakkheeran - https://www.nakkheeran.in/cinema/cin...eaks-about-mgr..... Thanks...
நன்றி மறவாத நல்ல மனம் சரோஜாதேவி இன்றும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் போட்ட சோறுதான் நான் சாப்பிடுவது என்று எல்லோர் முன்னிலையும் கூறுகின்றாரே இந்த மனம் யாருக்கு இருக்கிறது அவரால் உதவி பெற்றவர்கள் எத்தனை பேர் உண்மையை உலகிர்க்கு தெரிய படுத்துகிறார்கள் புரட்சி தலைவர் ஆரம்பித்த கட்சி இப்பொழுது அவர் படமே இல்லை இதர்க்கு யார் காரணம் என்பது புரட்சி தலைவரின் ரத்தத்தின் ரத்தமானா உடன்பிறப்புகளுக்கு தெரியும் இது யாரால் நன்றி மறந்த செயலால் அப்பொழுது இருந்தே ஓரம் கட்டப்பட்டது..... Thanks...
"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி"
தமது கடுமையான உழைப்பால்
வெற்றியின் எல்லையை எட்டியவர்
எழுச்சி ஏந்தல் எம்ஜிஆர்.
பாட்டால் புத்தி சொன்ன
பாட்டுடைத் தலைவருக்கு,
தமிழ் நாட்டை ஆண்ட,
தங்கத் தலைவருக்கு,
மிகவும் பிடித்த பாடலின் வரிகள்
எவை தெரியுமா?
"பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
"பாசவலை" படத்தில் எழுதிய....
"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்
குள்ள நரி தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடிதான் சொந்தம்"
உனக்கெது சொந்தம்?
எனக்கெது சொந்தம்?
உலகத்துக்கு எதுதான் சொந்தமடா?
-இந்த பளிங்கு வரிகளும்,
பவழ வார்த்தைகளும்தான்,
எம்ஜிஆர் மனதில்,
குடியிருந்த கோயிலில் பதிந்த கல்வெட்டு எனலாம்........ Thanks...
அகவை திருநாள்
வாழ்த்துக்கள்
******************************
மலேசியா நாட்டின் மேடைப் பாடகர் டி.எம்.எஸ். குரல்வழி பாடகர் பாசமிகு சகோதரர் திரு. டி.எம்.எஸ். சித்திரன் அவர்களுடைய பிறந்தநாள் இன்று.
புரட்சித்தலைவரின் பற்றுமிகு பக்தரான திரு. சித்திரன் அவர்கள் ஏராளமான மேடை நிகழ்வுகளில் அதாவது , மலேசியா , சிங்கப்பூர் , இந்தியா உட்பட பல மேடை நிகழ்ச்சிகளில்... சரித்திர நாயகர் , பொன்மனத் தங்கம் , ஏழைகளின் இதயத் தலைவன் , மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த பல திரைப்படத்தின் பாடல்களை , மேடையில் பாடி இதயத்தில் பதிந்தவர்.
மலேசியா நட்டில் 2019 ம் ஆண்டு மாத கடைசியில் நடந்த இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களின் புகழ்பாடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள , நானும் ஆண்டவன் mgr குடும்பத் தளத்தின் அட்மீன் சகோ.ஆர்.ஜி.சுதர்சன் அவர்களும் கலந்து கொள்ள சென்றபோது ...
நாங்கள் தங்கியிருந்த ரெஷ்ட்ராண்ட்டுக்கு நேரில் வந்து சந்தித்து ,
மரியாதை , கௌரவத்துடன் அருமையான விருந்தும் கொடுத்து எங்ஙளை மகிழ்வித்த திரு.டி.எம்.எஸ். சித்திரன் சகோதரர் அவர்களுடைய பிறந்த நாளுக்கு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" "உழைக்கும் குரல்" மாத இதழ் மற்றும் ஆண்டவன் mgr குடும்பத்தளத்தின் சார்பாகவும்...
பல்லாண்டு காலம் சந்தோஷம் பொங்க வாழ , மனிதக்கடவுள் இறைவன் எம்ஜிஆர் அவர்களை வேண்டுகிறோம்.
வாழ்க..வாழ்க ,
நோய்நொடியின்றி என்றும் சீறோடும்...சிறப்போடும்
வாழ்த்துக்களுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி (அட்மீன்)
&
ஆர்.ஜி.சுதர்சன்
(அட்மீன்)
ஆண்டவன் mgr குடும்பத் தளம்
...... Thanks...
1970ம் ஆண்டு சேலம் அலங்கார் தியேட்டரில் மக்கள் திலகம்நடித்த " என் அண்ணன்" படம் வெளியான போது திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்ட 110 அடி பிரம்மாண்டமான கட் அவுட் இது. இதை நிறுவ மொத்தம் 70கிலோ ஆணிகள் பயன்படுத்த பட்டன.இந்த கட் அவுட் கீழே நிற்கும் மனிதர்களை பார்க்கும் போது இதன் பிரம்மாண்டம் விளங்கும் . ........ Thanks...
காலங்களில் மாறினாலும் தலைவா என்றிட நீ இருக்கிறாய் எனது இதயக்கனியாய்..
புரட்சிமிகு கருத்துகளால் என் இதயம் கவர்ந்தவனே,
உன்னை எதிர்த்தவரும் இதயத்தால் வாழ்த்தி,
உன் பிரிவால் கலங்கிட உனக்குக்கிணையாய் எத்தலைவனும் தமிழக வரலாற்றில் நான் கண்டதில்லை.
அண்ணலின் வழிவந்த அன்பு சிகரமே,
உன்னை நேரில் காணாவிட்டாலும் எம் உள்ளங்களில் வாழ்கிறாய்..
மக்கள் திலகமாய் திகழ்ந்த உன் பெயரில் கயவர்களும் நீயாக முயற்சிக்கிறார்கள்.
காலம் தரும் அவர்களுக்கு பெரும்தோல்வி என்னும் பரிசு..
கட்சியும் வேண்டாம்.
பதவியும் வேண்டாம்.
உன் கருத்துகள் போதும்..
தமிழ் பற்று போதும்....... Thanks...
https://youtu.be/UDZssz_4t2Q... Thanks...
மலேசிய தமிழ்க்கலைஞர்கள் குரலியக்க அமைப்பிற்காக...
÷×÷÷÷×÷÷××××××××××××
மக்கள்திலகமெனில்
எம்.ஜி.ராமச்சந்திரன்!
மலேசியத்திலகமெனில்
பாலச்சந்திரன்!(எ)அப்பு!!
அய்யா உந்தன் பிறந்த நாள்...
மனிதநேய மாண்பில்
உயர்ந்தநாள்!
அளப்பரிய உந்தன் தொண்டு...
தமிழ்த்தாயே பாடும்
தகைமிகு சிந்து!
மணித்தமிழ் மணக்கும்
கலையினத்தை நாடி
கவலை போக்குகிறாய் தேடி!
உனது தருமதானம்
உலகுள்ளவரை!
யாருமில்லை உன்னால் வாடி!
உனை நன்றியோடு
தினம் போற்றும்
மனங்கள் கோடி!
பொருள்திரட்டி
நிதிதிரட்டி
துயர்படுவோர்
களிப்புறவே
புயலாக செயல்படுகிறாய்!
மற்றவர் வாழ்விலே
நிழலாக நீ இருக்கிறாய்!
கலைவளர்க்கும்
காலப்பெட்டகமே!
அலையொலிக்கும்
நுரையாழி...
உனக்குச்சொல்கிறது...நீ நீடு வாழி!
பொன்மனச்செம்மல்
புரட்சித்தலைவர்
இதயதெய்வம்
மனிதப்புனிதர்
இத்தரைச்செல்வம்
மெய்அவதாரம்
மக்கள்ஆதாரம் நமது எம்.ஜி.ஆர் வழியிலே
ஏற்றமுடன் தொண்டாற்று!
இன்றுபோல் என்றும் நீ
வாழிய பல்லாண்டு!
இந்தியாவில் இருந்து
மங்காத பாசமுடன் பாலச்சந்திரா(அப்பு)
சிந்தை குளிர
சிந்தனை வளர
வாழ்த்துகின்றோம்
வாழியநலம்!
சூழிய வளம்!!
என்றென்றும் நட்பிற்கினிய
அமுதசுரபிஎம்.ஜி.ஆர்.அறக்கட்டளை பெங்களூரு....... Thanks...